அரசியல் - ஆச்சர்யம், ஆனால் உண்மை‏

ஆச்சர்யம், ஆனால் உண்மை. அரசியலை பொறுத்தவரையில் நாம் பிரச்சனைகளை போர்வையாய் போட்டுக்கொண்டு முரட்டுத்தூக்கம் தூங்கிக்கொண்டேதான் இருக்கின்றோம், இன்னும் விழிக்காமலே. நாம் விழிப்பதற்குள் சூரியன் உச்சிக்கு வந்து நம் தலையை பிளக்கிறது.
தனிமரமாக வாய்ப்பின்றி, வருடும் இலைகளுக்கு அருகில் செங்காயாக இன்று இன்றிருக்கின்றோம். நாளை நம் சமூகம் பழுத்து, தனி மரமாக மிளிரும் என்ற நம்பிக்கையோடு.இன்ஷா அல்லாஹ்.

இந்த ஆ(தா)க்கம் ஏன் என்று தொடர்ந்து படியுங்கள் உங்களுக்கே புரியும்.

சகோ.மு.ஜபருல்லாஹ் அவர்களின் எண்ணத்தின் ஏக்கம் கீழே எழுத்துவடிவில்..

தமிழகத்தின் 1லட்சத்து 20 ஆயிரம் முஸ்லிம் வாக்குகளை கொண்ட நன்னிலம் சட்டமன்றத் தொகுதி தவிர, ஏறத்தாள 60க்கும் மேற்பட்டத் தொகுதிகள் 80ஆயிரம் முஸ்லிம் வாக்காளர்களை கொண்டவை. நன்னிலம் சட்டமன்றத் தொகுதியில் 1லட்சத்து 20 ஆயிரம் முஸ்லிம் வாக்காளர்கள் இருந்தாலும் இன்றுவரை அந்த தொகுதியில் எந்த ஒரு முஸ்லிம் வேட்பாளரோ அல்லது முஸ்லிம் அரசியல் கட்சியோ தமிழகத்திற்காக இதுவரை நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிடவேயில்லை என்பது ஆச்சரியகரமான, அதே சமயம் வருத்தத்திற்குரிய செய்தியாகும். தமிழகத்தில் 1 இலட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம் வாக்காளர்களைக் கொண்ட தொகுதிகள் முப்பதுக்கும் அதிகமாக இருக்கின்றது.

அவைகளில் சிலவற்றை இங்கே காணலாம்:

1. நன்னிலம்,2. கடலாடி,3. கேயம்புத்தூர் மேற்கு ,4. மதுரை மத்தி, 5. திருச்சி, 6. சேலம், 7. அரவக்குறிச்சி, 8. குடியாத்தம், 9. ராணிப்பேட்டை,10. ஆற்காடு,11. சென்னை துரைமுகம், 12. சேப்பாக்கம்,13. ஆயிரம் விளக்கு, 14. திருவல்லிக்கேணி, 15. எக்மோர், 16. சென்னை பூங்காநகர், 17. ராயபுரம், 18. திண்டுக்கல்,19. நத்தம்,20. பெரியகுளம்,21. பாளையங்கோட்டை,22. திருச்செந்தூர்.

இதுதவிர, தமிழகத்தில் 30 சட்டமன்றத் தொகுதிகள் என்பதாயிரத்திற்கும் அதிகமான முஸ்லிம் வாக்காளர்களைக் கொண்டவை. 23 சட்டமன்றத் தொகுதிகள் அறுபதாயிரத்திற்கும் அதிகமான முஸ்லிம் வாக்காளர்களைக் கொண்டவை. தமிழக முஸ்லிம்கள் அனவைரும் ஒரே குடையின் கீழ் ஒன்றினைந்து நமக்கு நாமே உருவாக்கும் அரசியல் அமைப்புக்கு வாக்களிப்போம் எனில் தமிழகத்தில் மாத்திரம் 45-55 சட்டமன்றத் தொகுதிகளிலும், 4-6 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் நமக்கு வெற்றி நிச்சயம் என்பதை உறுதியாகக் கூறமுடியும். அனைத்து அரசியல் கட்சிகளையும் நம் காலடியில் விழ வைப்பதுடன், தமிழக அரசியலைப் பொறுத்தவரை நாம் வகுத்ததுதான் சட்டம் என்கிற நிலையையும் உருவாக்க முடியும்.

தமிழகத்தின் 6 மாநகராட்சிகளில் முஸ்லிம்களே மேயர்கள் என்பதையும் உறுதியாகக் கொள்ளலாம். சென்னையைத் தவிர தமிழத்தில் மற்றுமுள்ள மாநகராட்சிகளில் ஒன்றரை இலட்சம் வாக்குகள் பெறுபவரே மேயர். மதுரை, திருச்சி மற்றும் கோவை மாநகராட்சிகள் 3 இலட்சம் முஸ்லிம் வாக்களர்களைக் கொண்டவை. சேலம் மற்றும் நெல்லை மாநகாராட்சிகள் இரண்டரை லட்சம் முஸ்லிம் வாக்காளர்களைக் கொண்டவை.

சட்டசபை தொகுதிகளில் உள்ள முஸ்லிம் வாக்காளர்கள் ஒருங்கிணைந்து தமது வாக்குகளையும் முஸ்லிம் வேட்பாளர்களுக்கே அளிப்பார்கள் எனில், தமிழக சட்சடசபையில் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் முஸ்லிம்களே என்கிற நிலை ஏற்படும். முஸ்லிம்களின் சம்மதம் இல்லாமல் எந்த ஒரு சட்டமும் நிறைவேற்றப்பட முடியாது என்கிற நிலையை தமிழக சட்டசபையிலும் உருவாக்கமுடியும். தமிழகத்தில் மட்டுமில்லாது, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மஹாராஷ்டிரா என இந்தியாவின் பெரும்பான்மையான மாநிலங்களில் உள்ள சட்டசபைகளிலும் இந்நிலையே உருவாகும். இதே நிலை தொடருமெனில் நாடாளுமன்றத்திலும் முஸ்லிம் உறுப்பினர்களின் எண்ணிக்கை பெரும்பான்மை நிலைக்கு உயரும்.

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் 400 முதல் 800 பள்ளிவாயில்களை ஒன்றிணைப்பது மிகவும் எளிதான காரியம். தமிழகத்தில் உள்ள 8000 பள்ளிவாயில்களைச் சார்ந்த 1ஒன்றரை கோடி முஸ்லிம்களும் ஒரு பொது நலனுக்காக ஒன்றிணைவார்கள் எனில், நாம் நினைக்கும் எதையும் சாதிப்பது எளிது என்பதை முஸ்லிம்கள் அனைவரும் உணர வேண்டும்.

இது நேர்த்தியான, அதேசமயம் யாருக்கும் எந்தவித ஆபத்தும் இல்லாத அமைதியான முடிவு என்பதையும் முஸ்லிம்கள் அனைவரும் உணர வேண்டும். தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் இஸ்லாமியர்கள் அரசியல் செல்வாக்கு மற்றும் ஆட்சி அதிகாரம் பெற வேண்டும் என்பதற்கு இதைத்தவிர ஒரு சரியான தீர்வு இல்லையென்றே சொல்ல வேண்டும். அரசியல் செல்வாக்கு மற்றும் ஆட்சி அதிகாரம் இன்றி இந்த பூமியில் நாம் எதையுமே சாதிக்க முடியாது என்பது உறுதி.

இதுபோன்ற பிற அரசியல் கட்சிகளுக்காக கொடி தூக்கி அவர்களை வெற்றிபெற செய்ய வேண்டுமா? அவர்கள் வெற்றி பெற்று ஆட்சிபீடம் ஏறிய பின்பு நம்முடைய அடிப்படை உரிமைகளுக்காக அவர்களிடம் கையேந்தி நிற்க வேண்டிய நிலை தேவைதானா?

தேர்தல் காலங்களில் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு முஸ்லிம்கள் வாக்களிக்க வேண்டும் என வேண்டுகோள் வைக்கிறோமே. ஏன்? முஸ்லிம்கள் முஸ்லிம் வேட்பாளருக்கே வாக்களிக்கட்டும். முஸ்லிம் வேட்பாளர்கள் வெற்றிபெற்று வந்த பின்புள்ள நிலைமையை ஆய்ந்தறிந்து, முஸ்லிம்களுக்கு நல்லது செய்யக்கூடியவர்களுக்கு நம்முடைய ஆதரவை வழங்கலாம். மானம் மற்றும் சுயமரியாதை ஈமானின் ஒரு பகுதி என்பதை முஸ்லிம்கள் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.

இக்கட்டுரையை மீண்டும் மீண்டும் படியுங்கள். முஸ்லிம்களுக்கு நன்மை செய்யாத எந்த ஒரு அரசியல் கட்சியையும் நம்பாதீர்கள். முஸ்லிம்களே! அனைவரும் ஒரே குடையின் கீழ் ஒன்றிணைவோம். நமது ஒற்றுமையின் மூலம் நாம் விரும்பியவைகளை உடனடியாகப் பெற முடியும். இந்த முடிவை சிந்தித்து செயல்படுத்துவது முஸ்லிம்களாகிய நம்மீது கடமையாக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்களாகிய நாம் அனைவரும் ஒன்றிணைவோம். நம் அன்றாட வாழ்க்கை எளிதாக அமையும். நாம் நமது அடிப்படை உரிமையான இறைவழிபாட்டு உரிமைகளை தங்கு தடையின்றி தொடரலாம். நம் வருங்கால தலைமுறையும் பாதுகாப்பான வாழ்வைத் தொடரும்.

தேர்தலில் நாம் வாக்களிக்காமல் புறக்கணிப்போம் எனில் நஷ்டம் நமக்குத்தான். ஒவ்வொரு வாக்கும் விலைமதிப்பற்றது. நாம் அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் ஏராளமான மாற்றங்களை கொண்டுவரும். அரசை எதிர்க்கிறோம் என்ற பெயரில் நம்மில் சிலர் வாக்களிக்காமல் தேர்தலைப் புறக்கணிக்கிறார்கள். அதனால் ஏற்படும் நஷ்டம் நமக்கே! மற்ற அரசியல் கட்சிகள் நம்மை எள்ளி நகையாடுவதுடன், அதிக பயனடைவது அவர்களே என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனதருமை முஸ்லிம் சொந்தங்களே! நமக்கென ஒரு தனி அரசியல் அமைப்பு காண்பதும், அந்த அமைப்பின் மூலம் நமக்காக பாடுபடக்கூடிய முஸ்லிம் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்து அனுப்புவதுமே இனி நம்முடைய தலையாய பணியாக இருக்க வேண்டும்.

நாளைய உலகம் நம் கையில் என்பதை தெளிவாக தெரிந்த நாம், மரணித்த பிணம் போல் நடமாட வேண்டுமா? நாம் நம்முடைய குறிக்கோளில் தெளிவாக இருப்போம். அனைத்து அரசியல் கட்சிகளையும் நம் பின்னால் கைகட்டி நிற்க வைப்போம். அமைதியாக நாம் நம்முடைய குறிக்கோளை எட்டுவோம். நமது உறுதிமொழி நம் வருங்கால தலைமுறையின் வாழ்வுரிமைக்கு அடிப்படையாக அமையட்டும். எந்த காரணம் கொண்டும் முஸ்லிம்களின் ஒற்றுமை என்னும் அடிப்படை குறிக்கோளை விட்டு நம் கவனம் சிதறாமல் இருக்கட்டும். எல்லாம் வல்ல அல்லாஹ் இதற்கு அருள் புரியட்டும்!

மு.செ.மு. மீரஷாஹ் ரஃபி அஹ்மத்

27 கருத்துகள்

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

மிகச் சரியாக தருனம் பொருந்தி எழுதப்பட்ட அருமைன ஆக்கம்... தொட்டெடுத்து தந்த தம்பி MSM(r).

Meerashah Rafia சொன்னது…

முதல் எட்டு வரிகள் மட்டுமே இந்த மு.செ.மு. விற்கு சொந்தம்.மற்றவை, பாராட்டுக்கு சொந்தக்காரர் சகோ.மு.ஜபருல்லாஹ்(இவர் எந்த ஊரு, குடும்பபேறு என்னன்லாம் தெரியல)..மொத்தத்தில் பயனுள்ள தகவல் தந்த அவருக்கு நன்றிகள்.

சர்ப் எக்சல் 'கறை நல்லது' மாதிரி, இந்த சர்பில்(INTERNET SURFING-வலை தேடல்) 'காபி பேஸ்டும் நல்லதுதானோ'!! அதான் இத நான் என் ஆக்கம்னு முழுசா சொல்லாம 'ஆ(தா)க்கம்'னு சொல்லிருக்கேன்..

மு.செ.மு. மீரஷாஹ் ரஃபி அஹ்மத்

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

அதனால்தான் (தம்பி) தொட்டெடுத்து (தந்)தரமான என்று சொல்லியும் வைத்தேன்... இருப்பினும் அரசியல் ஒரு சாக்கடைன்னு யாரோ சொன்னாங்களாம் அந்தக் கறைபடுவதும் நல்லதுதானே, விரல் நுனியிலும் ! (ஓட்டுப் போட்ட பின்னரும்)

அலாவுதீன்.S. சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) இதில் கூறப்பட்ட கருத்துக்கள் யாவும் பழனிபாபா அவர்கள் பலமேடைகளில் பேசிய கருத்துக்கள்தான். பழனிபாபா அவர்களின் கருத்தை சகோதரர் வெளியிட்டிருக்கலாம் என்று நினைக்கிறேன்.
மீண்டும் புதுப்பித்தது வரவேற்கத்தக்கதே.

Shameed சொன்னது…

அஸ்ஸலாமு அழைக்கும்

யார் சொல்லி இருந்தாலும் அவர்கள் சொன்னதில் நல்ல கருத்து உள்ளது என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

பெயரில்லா சொன்னது…

அபுஇபுறாஹீம் காக்கா எப்புடி இப்புடிலாம்!!

அலாவுதீன் காக்கா, பழனிபாபாவின் வரிகலான்னு தெரியல.ஆனா அவர் இறந்த நாள் மட்டும் எனக்கு நல்லா நியாபகம் இருக்கு.மன்னார்குடியில் ஆறாம் வகுப்பு படிச்சிகிட்டிருந்தேன். அப்பொழுது தமிழக முதல்வர் யார் என்றுகூட எனக்கு தெரியாது, ஆனால் பழனிபாபா இஸ்லாமிய சமுதாய தலைவர் என்று அவர் இறந்த அன்று மட்டும் எனக்கு தெரிந்தது. அதை தவிர இன்று வரை எத்துணையோ இசுலாமிய பெருந்தலைகள்உருண்டிருக்கிறது, ஆனால் அறியா வயசில், அவர் சிறந்த தலைவர் என்று என் மனம் சொன்னது, அறிந்த வயதில் இன்று வரை என் மனம் வேறு யாரையும் அவ்விடத்தில் கொண்டு சேர்க்கவில்லை.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) சொன்னது…

நல்ல உபயோகமுள்ள இஸ்லாமிய சென்சஸ்

crown சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும். நல்லதொரு அலசல். இஸ்லாம் காட்டித்தந்த முறைதான் மஷோரா.கூட்டு ஆலோசனை. இதில் வென்றுவிட்டால் எல்லாவற்றிலும் வென்றிடலாம். முதலில் ஒரே நேர்கோட்டில் நிற்கவேண்டியது நம் கடமை. பின் எல்லாம் வசப்படும் இறைவன் ரஹ்மத் கிடைக்கும். முதலில் சாமூகம் ஒன்று பட வேண்டும் இன்ஷாஅல்லாஹ் சின்னதாக நம்பிக்கை பிறை தெரிவது போல் உள்ளது அது முழு மதியாகி,முகமதியர் வென்றாளும் நாள் வரும் என்கிற நம்பிக்கையுடன் என் பங்கிற்கு நானும் அழைக்கிறேன். இணைவோம் சாதிப்போம்.

அப்துல்மாலிக் சொன்னது…

//பிற அரசியல் கட்சிகளுக்காக கொடி தூக்கி அவர்களை வெற்றிபெற செய்ய வேண்டுமா? அவர்கள் வெற்றி பெற்று ஆட்சிபீடம் ஏறிய பின்பு நம்முடைய அடிப்படை உரிமைகளுக்காக அவர்களிடம் கையேந்தி நிற்க வேண்டிய நிலை தேவைதானா?//

எப்படி வாய்கிழிய கத்தினாலும் கொடுக்கும் காசும், இலவசமும் கண்ணை மறைச்சிடுது, என்னத்த சொல்றது.. நிறையபேத்துக்கு இதே ஆதங்கம்தாம் முதலில் நாம் ஒத்துமையா இருக்கோமா. இணையத்திலேயும் அடிச்சிக்கிறாங்களே

அதிரை முஜீப் சொன்னது…

நன்னிலம் சட்டமன்றத் தொகுதியில் 1லட்சத்து 20 ஆயிரம் முஸ்லிம் வாக்காளர்கள்.....

தமிழகத்தில் 1 இலட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம் வாக்காளர்களைக் கொண்ட தொகுதிகள் முப்பதுக்கும் அதிகமாக இருக்கின்றது.....

1 ஒன்றரை கோடி முஸ்லிம்களும் ஒரு பொது நலனுக்காக ஒன்றிணைவார்கள் எனில்.....

இந்த கணக்கீடுகள் எல்லாம் மறு ஆய்விற்கு உட்பட்டவைகள்!. நாம் அதிகமாகவும் மிகை படுதக்கூடது! அரசாங்கம் கூறுவதுபோல் ஏற்றுக்கொள்ளவும் கூடாது! இவை இரண்டும் அதீத நம்பிக்கையையும், தாழ்வு மனப்பான்மையையும் நம்மிடத்தில் ஏற்பட்டு வைக்கும்.
நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதற்கு வழிவகுக்கும்!.

அரசாங்கம் கணக்கின்படி தமிழ் நாட்டின் மக்கள் தொகையில் 6-7 சதவிகிதம் தான் முஸ்லிம்கள். அதாவது சுமார் 40 இலட்சத்திற்குள் வந்துவிடும். நாம் 10 சதவிகிதம் என்று கூறுகின்றோம். அதிகபட்சமாக 10 என்றே வைத்துக்கொண்டாலும், சுமார் 7 முதல் 8 கோடி மக்கள் தொகையில் நம் பங்கு 70 முதல் 80 இலட்சம் வரையே!.

பின் எங்கிருந்து 1 ஒன்றரை கோடி முஸ்லிம்களும் ஒரு பொது நலனுக்காக ஒன்றிணைவார்கள்?.

நமக்கு நம்பிக்கையையும், உற்சாகத்தையும் தரும் கட்டுரை என்றாலும் இந்த கணக்கீடுகள் எல்லாம் மறு ஆய்விற்கு உட்பட்டவைகள்!. வேண்டுமென்றால் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் தொகுதிகளில் முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தவேண்டி அரசியல் கட்சிகளை நாம் வற்புறுத்தலாம்!

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

//நமக்கு நம்பிக்கையையும், உற்சாகத்தையும் தரும் கட்டுரை என்றாலும் இந்த கணக்கீடுகள் எல்லாம் மறு ஆய்விற்கு உட்பட்டவைகள்!. வேண்டுமென்றால் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் தொகுதிகளில் முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தவேண்டி அரசியல் கட்சிகளை நாம் வற்புறுத்தலாம்! //

இப்படியும் விழிப்புணர்வுகள் விழி திறக்குமோ !? ஊன்றி அவதானிக்கும் உங்களின் உள்ளார்ந்த விவாதமும் ஏற்றுக் கொள்ளக் கூடியதே !

தாஜுதீன் (THAJUDEEN ) சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும்

சகோதரர் முஜீப் அவர்கள் சொல்லுவது போல் இக்கட்டுரை நம்மிடையே தன்னமிக்கை ஏற்படுத்தும் கட்டுரையாக எடுத்துக்கொண்டாலும்,.. இந்த கணக்கெடுப்பு மறுஆய்வு செய்யப்படவேண்டியவையே...

சரியான நேரத்தில் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி

sabeer.abushahruk சொன்னது…

நன்றி மீராஷா, உபயோகமான தகவல். அரசயில் ஞானம் நமக்குக் குறைவு என்பதால் பின்னூட்டம் ஊட்டமாக இட முடியவில்லை!

அதிரை முஜீப் சொன்னது…

sabeer.abushahruk சொன்னது...

//அரசயில் ஞானம் நமக்குக் குறைவு என்பதால் பின்னூட்டம் ஊட்டமாக இட முடியவில்லை! //

அரசியலில் அனைத்தையும் தெரிந்திருந்தால் சும்மா புள்ளிவிவரன்களோடு கட்டுரைகள் மட்டுமே எழுதிகொண்டிருக்கலாம்!.

எதுவும் தெரியாதவர்களால் தான் அமைச்சர்களாகவும், முதலமைச்சராகவும் ஆக முடியும்!.

அந்த வகையில் நமக்கு ஒரு பழுத்த அரசியல் வாதி ஒருவர் கிடைத்து விட்டார். விடாதீர்கள்!.

தாஜுதீன் (THAJUDEEN ) சொன்னது…

// அதிரை முஜீப் சொன்னது…
அந்த வகையில் நமக்கு ஒரு பழுத்த அரசியல் வாதி ஒருவர் கிடைத்து விட்டார். விடாதீர்கள்!. //

என்ன சகோதரர் முஜீப், போறபோக்கைப் பார்த்தால், நம் அதிரைகவியை தேர்தலில நிக்க வைச்சுடுவீங்க போல தெரியுது?

ஐயா (ஹமீது காக்கா) எங்கே இருக்கீங்க?

Yasir சொன்னது…

எங்கள் ஓட்டு கவிகாக்காவிற்க்கே ..போடுங்கமா ஓட்டு..ஆ ..போடுங்கமா ஒட்டு....சின்னத்தை சீக்கிரம் அறிவியுங்கள்

Meerashah Rafia சொன்னது…

sabeer.abushahruk
காக்கா,
எமக்கும் அரசியல் ஞானம் அவ்ளோ இல்லாததால்தான் யாரோ இட்ட புள்ளி விவரத்தில் ஒரு சுழி விழுந்துடுச்சு. இருந்தாலும் இதை பாடமாக எடுத்துக்கொண்டு புள்ளியில் இனி கில்லியாக இருப்போம்.இன்ஷா அல்லாஹ். இது தெரிந்தால் போதும், நீங்களும் அரசியல் வாதியாகலாம்.  

அதிரை முஜீப் சொன்னது :
"இந்த கணக்கீடுகள் எல்லாம் மறு ஆய்விற்கு உட்பட்டவைகள்!."
தக்க சமயத்தில் சுட்டிக்காட்டியதற்கு நன்றி.

sabeer.abushahruk சொன்னது…

//அந்த வகையில் நமக்கு ஒரு பழுத்த//

சும்மாவாச்சும் "பழுத்த பழுத்த"ன்னு சொல்லி எனக்கு ஒரு நாளுக்கு ஒரு வயசு கூட்டுவது நியாயமில்லை என்பதை ஆணித்தரமாகவும் சுத்தியல்தரமாகவும் கூறிக்கொள்கிஏஎன்.

உணமையிலேயே முஜீப் டாட் காமிலிருந்துதான் கொஞ்சம் கொஞ்சமாக அரசியல் சூட்சமங்களைத் தெரிந்துகொள்ள ஆரம்பித்திருக்கிறேன். அதிரையின் புரட்சி எழுத்தாளர்தான் தொடர்ந்து சொல்லித்தரனும்.

யாசிர், போடுங்கம்மா ஓட்டுன்னு பொண்டுகளிடம் மட்டும் ஓட்டுக் கேட்டு இங்கே வல்லரசுவிடம் மாட்டி விடும் உள்நோக்கம் ஏதும் இல்லைத்தானே? (அப்புறம் நானும் உங்கள் ரஷியப்பயணங்களுக்கு ஆண் காரியதரிசியை ஏன் கூட்டிப்போகக்கூடாதுன்னு பீதியைக் கெளப்பி விட்டுடுவேன்.)

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

சூஃப்ப்ப்ப்ப்ப்.... தமிழகத்தில்தான் அரசியல் சூடு அதென்ன அப்படியே ஆஃபீஸுக்கு அரசியல் தாவுது ? அரசியல்னு வந்திட்டா என்னவெல்லாம் வெளியே வருது பார்த்தீங்களா ?

Yasir சொன்னது…

//அப்புறம் நானும் உங்கள் ரஷியப்பயணங்களுக்கு ஆண் காரியதரிசியை ஏன் கூட்டிப்போகக்கூடாதுன்/// உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் காக்கா....வல்லரசு ஒரு நாளைக்கு மூன்று தடவை அ.நி படிப்பதாக தகவல்...வியாழக்கிழமை வெற இன்னைக்கு எதாவது போட்டு வைக்காதீங்க காக்கா

அதிரை முஜீப் சொன்னது…

sabeer.abushahruk சொன்னது…

//சும்மாவாச்சும் "பழுத்த பழுத்த"ன்னு சொல்லி எனக்கு ஒரு நாளுக்கு ஒரு வயசு கூட்டுவது நியாயமில்லை என்பதை ஆணித்தரமாகவும் சுத்தியல்தரமாகவும் கூறிக்கொள்கிஏஎன். //

பின்ன என்ன!. அப்ப இளைஞர் அணி ரெடி!. அதோடு "ஆணித்தரமாகவும் சுத்தியல்தரமாகவும்",என்பதால் "ஆசாரி அணிக்கும்(?, எதுகை மோனை எல்லாம் கொடிகட்டி பறக்க ஆரம்பித்துள்ளதால், சிறந்த பேச்சாளரும் ரெடி.

//(அப்புறம் நானும் உங்கள் ரஷியப்பயணங்களுக்கு ஆண் காரியதரிசியை ஏன் கூட்டிப்போகக்கூடாதுன்னு பீதியைக் கெளப்பி விட்டுடுவேன்.) //

ஆகா இதுவல்லவோ சிறந்த அரசியல் வாதிக்கு எடுத்துக்காட்டு!.

sabeer.abushahruk சொன்னது…

//"ஆணித்தரமாகவும் சுத்தியல்தரமாகவும்",//

ஆணியே புடுங்க வேணாம். ஆளை விடுங்கப்பா. நம்ம ஆட்கள்லாம் பெஞ்சைத் தட்டுவதை நிறுத்திவிட்டு வாங்க வெளிநடப்பு செய்வோம்.

(என்னதான் சபாநாயகர் அபு இபுறாஹீம் சமாதானம் செய்தாலும் ஏற்பதிற்கில்லை. முதல்வர் முஜீப் அவர்கள் நான் அப்பமோ தோசையோ எதைச் சுட்டாலும் திருப்பிப் போட்டு விடுவதால், நீங்க உங்க செக்டெட்டரியையும் கூட்டிட்டு வாங்க யாசிர் வெளிநடப்பு செய்வோம்.)

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

தேர்தலுக்கு முன்னரே ஆட்சியும் அமைத்து வெளிநடப்பு வரைக்கும் போயாச்சா !?

அப்படின்னா நாம் மேட்டரு இங்கிட்டும் அங்கிட்டுமா ? (அரசியலில் இதெல்லாம் சகஜமாங்க ?)

அதிரை முஜீப் சொன்னது…

சட்டம் ஒழுங்கு சரியாக இருப்பதால் ஒரு நாள் முதல்வர் முஜீபை, 356 பிரிவை பயன் படுத்தி ஆட்சி கலைக்கப்படுகின்றது!.

இனி அடுத்த தேர்தல் நடக்கும் வரை தற்காலிக முதல்வராக சகோதரர் ஷபீர் அவர்கள் பொருப்பை ஏற்றுக்கொள்வார்கள்.

crown சொன்னது…

அதிரை முஜீப் சொன்னது…
சட்டம் ஒழுங்கு சரியாக இருப்பதால் ஒரு நாள் முதல்வர் முஜீபை, 356 பிரிவை பயன் படுத்தி ஆட்சி கலைக்கப்படுகின்றது!.

இனி அடுத்த தேர்தல் நடக்கும் வரை தற்காலிக முதல்வராக சகோதரர் ஷபீர் அவர்கள் பொருப்பை ஏற்றுக்கொள்வார்கள்.
------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். சட்டம் ஒழுங்கு சரியிருப்பதால் சகோ.முஜிபின் ஆட்சிக்கு திட்டம் போட்டு கட்டம் கட்டியவர் யாரக இருந்தாலும் நான் சொல்லிக்கொள்வது ஒன்றுதான். நன்றி. நன்றி. நன்றி.காரணம் சகோதரர் மறு தேர்தல் வரும் வரை சகோ.சபிர் முதல்வர் என்பதும் நல் செய்தியே. சகோ.முஜிப் ஆண்டாளும் சகோ.சபிர் ஆண்டாளும் ஒன்றுதான் ஆனாலும் நம் சமுதாயம் இருவருக்கும் ஆதரவு தரபோவதில்லை எப்படியும் மாற்றானுக்குத்தான் அவர்களின் ஆதரவு.சகோ.தாஜிதீன் சட்ட சபை "கொரடா" என்னை பார்த்து பேச்சை கொரடா(குறை)ன்னு சொல்வது என் காதுவலியை(வழியே)தாண்டியும் கேட்பதால் இந்த கருத்தை இத்துடன் முடித்து கொள்கிறேன்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

கலக்கல் சகோ.முஜீப் மற்றும் கிரவ்ன்(னு) மாதிரி சட்டசபையே நடக்குது இங்கே ! இப்படிச் சொல்லியே அங்கேயும் போயித்தான் விடுவோமா ?

crown சொன்னது…

Assalamualikum
http://adiraixpress.blogspot.com/2011/03/blog-post_19.html