ஆம்.. இவ்வருடம் என் வாழ்வில் கிடைக்கப்பெற்ற விலை மதிக்கமுடியா பொக்கிசம் என்றுதான் கூறவேண்டும். என் முதல் ஹஜ் பயணம் வரலாற்றுமிக்க முதல் ஹஜ் ரயில் சேவையோடு தொடர்ந்தது. நூற்றிமுப்பது வயது மூதாட்டி இந்தியாவிலிருந்து ஹஜ்ஜிற்கு வருவதாக கேள்விப்பட்டவுடன், 'அட! நமக்கு இன்னும் முப்பது வயதுகூட ஆகவில்லை ஆனால் அல்லாஹ் நமக்கு அவன் அருளை அள்ளி கொடுத்துவிட்டானே!' என்ற பிரம்மிப்பு கலந்த சந்தோசம் .
முப்பது லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஹஜ்ஜிற்கு வந்திருந்தும் அரபு நாட்டவர்களுக்கும், அந்நாட்டில் வசிப்பவர்களுக்கும் மட்டுமே இந்த மோனோ ரயில் பயணம் அல்லாஹ்வின் கிருபையால் கிடைக்கப்பெற்றது.
இந்த அனுவபத்தை பற்றி பகிர்ந்து கொள்வதற்கு முன் இந்த ரயில் ப்ராஜெக்ட் வெற்றிகரமாக செயல்படுத்திக்கொடுத்த சஊதி அரசிற்கும், அசுர வேகத்தில் அசராமல் (24x7) நம்மை அசர வைத்த சீன நண்பர்களுக்கும் என் நன்றியை தெரிவிக்கிறேன். என்னடா இவன் அதிரம்பட்டினத்துல கம்பன் எக்ஸ்பிரசை நிப்பாடிடானுங்கங்குரத்துக்காக ரயில் வண்டியையே பார்க்காதமாதிரி! சொல்றானேன்னு பார்க்காதீங்கோ காக்காமார்களா.. நம் நாட்டில் இது நடந்தேற எனக்கு தெரிஞ்சு 6-8 வருடம் இழுப்பார்கள். இடையில் கொஞ்சம் "ராஜா.., ராணி.." ஆட்டம்லாம் வேற ஆடுவாங்க. 18 கிலோ மீட்டர் ரயில் பாதை இங்கு ஒரே ஆண்டில் முடிவுற்றது. இப்ப சொல்லுங்க நான் ஆச்சர்யப்படுவது சரிதான?
இதோ அரபியில் நாலு வரியில் எழுதக்கூடிய வார்த்தையை ஏழு கட்டத்திற்குள் கிளித்தட்டில் ஏத்தம் விட கோடு போட்டமாதிரி அடக்கிவைச்சிருக்கான்களே, இங்குதான் எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட சீனர்கள் இரவுபகல் வேலைபாற்குமிடம்.
சரி சரி விசயத்திற்கு வர்றேன். பயணம் ஆரம்பமாகபோகுது சீட் பெல்ட போட்டுக்கொள்ளுங்கள்..
முதல் நாள் (ஹஜ் 8):
சுபுஹுக்குப்பின் ஜித்தாவிலிருந்து மினா வரை பேருந்தில் பயணித்தோம். ஹஜ்ஜின் கடமைப்படி மினாவில் லுகரிலிருந்து ஐந்து வேலை தொழுகை நிறைவேற்றிவிட்டு சுபுஹுக்குப்பின் அரபாவிற்கு செல்ல வேண்டும். ஆனால் ரயில் அட்டவணையின்படி எங்கள் குழு விடியற்காலை 1 மணிக்கு ரயிலை பிடித்தாக வேண்டும் என்று சஊதி அரசாங்கதிடமிருந்து உத்தரவு வந்தது. எல்லாம் அல்லாஹ்வின் நாட்டம் என்று கட்டுப்பட்டு காத்திருந்தோம் . அப்போதுதான் கையில் கட்டப்பட்டது அந்த ரயில் பயணச்சீட்டு. இதை தண்ணீரில் ஊற வைத்தாலும் , வெயிலில் காய வைத்தாலும் கிழியாதாம். ஆகையால் ஒரு கரத்தில் பயண சீட்டும், மறுகரத்தில் காணாமல் போகாமல் இருக்க டென்ட் முகவரிகளும், எண்ணத்தால் சைத்தானுக்கு பூட்டும் போட்டவனாக இருந்தோம் .
பயணச்சீட்டு உங்கள் பார்வைக்காக..
இதில் நம் பயணத்தின் அனுமதிக்கப்பட்ட மொத்த நாட்கள், நாம் ஏற வேண்டிய ஸ்டேஷன் எண் மற்றும் பிரத்யேக பார்கோடு அச்சு செய்யபட்டிருந்தது.
ஸ்டேசன் எண் நம் டெண்டிற்கு அருகாமையில் இருப்பதைதான் குடுப்பார்கள்.
இரவு 12:30 மணிக்கெல்லாம் ரயிலை பிடிக்க சென்றுவிட்டோம். எனக்கு இது முதல் ஹஜ், முன்னால் ஹாஜிகளுக்கு இது முதல் ரயில் பயணம் என்று பலதரப்பட்ட மக்கள் பல்வேறு சந்தொஷங்களோடு ஒன்று, இரண்டு மணி நேரம் ரயில்வே கேட்டின் படியின் கீழ் படர்ந்திருந்தோம். படி ஏறலாம் என்று கொடி காண்பிக்கப்பட்ட அந்த நொடியில் மக்கள் திரளாக "லப்பை அல்லாஹும்ம லப்பைக்..." என்ற சத்தம் விண்ணைத்தொட்டவாரே வின்வெளிப்பயனம்போல் ரயில் பயணத்தை தொடர்ந்தோம் . படி ஏற முடியாதவர்கள் ஒரே நேரத்தில் 60 பேர் ஏறக்கூடிய லிப்டில் ஏறினார்கள்.
3000 மக்கள் பதினைந்தே நிமிடத்தில் மீனா - அரபா சென்றடைந்தோம். ஒரு மணிநேரத்தில் 30 ஆயிரம் மக்கள் பல்வேறு ரயில் வண்டிகள் மூலம் அரபா வந்தடைந்தார்கள். ஹஜ்ஜின் முக்கிய நாளான அன்று எங்களுக்கு எல்லா விதத்திலும் வல்ல ரஹ்மான் எளிமையாக்கிதந்தான்.
இரண்டாம் நாள் (ஹஜ் 9):
அரபாவிளிருந்து மக்ரிப் தொழுகையை முடித்துக்கொண்டு முஸ்தலிபா செல்வதற்காக வெளியில் காத்திருந்தோம். இந்த ரயிலில் பெர்த், அன்ரிசெர்வ்டு , வெயிட்டிங் லிஸ்ட் எதுவும் கிடையாது. ஆனால் ஒன்று, இரண்டு மணிநேரம் 'கொஞ்சம் வெயிட் பிளீஸ்' என்ற சத்தம் மட்டும் அரபு கலந்த ஆங்கிலத்தில் (மலையாளம் கலந்த ஆங்கிலத்தை ஒப்பிடுகையில் இது கொஞ்சம் ஸ்டைலாகத்தான் இருந்தது) கேட்டுக்கொண்டே இருந்தது. பிறகு அரபா-முஸ்தலிபாவிற்கு பத்து நிமிடத்தில் சென்றடைதோம்.
இஷாவை முடித்தவண்ணம் அங்கேயே உறங்கிவிட்டு மறுநாள் காலை ஸுபுஹ் தொழுகை முடிந்த பின் ஜமராத் கற்களை அங்கயே எடுத்துக்கொண்டு மீனாவிற்கு வந்து சேர்ந்தோம். ரயில் நிலையத்தைவிட மினா டென்ட் எங்களுக்கு மிக அருகாமை என்பதால் பத்து நிமிட நடை பயணத்தில் வந்தடைந்தோம்.
மூன்று,நான்கு மற்றும் ஐந்தாம் நாள் (ஹஜ் 10 ,11 ,12 ):
இறுதி மூன்று நாட்கள் ஜமராத் கல் எறிவதற்காக மினா-ஜமராத்திற்கு தினமும் பத்து நிமிட ரயில் பயணம் மேற்கொண்டோம்.முன்புபோல் எங்கே வழிதவரிவிடுவோமோ, வெயில் சுட்டெறிக்குமோ, நம் ஒரு வயது குழந்தை தாக்குபிடிக்குமோ என்ற அச்சமெல்லாம் தணிந்து இறையச்சத்தோடு இஷ்டப்பட்ட நேரத்தில் ரயில் பயணத்தை மேற்கொண்டோம். கொஞ்சம் சொகுசாகவே நிறைவேற்றிவந்த இந்த ஹஜ்ஜில் உடலையும், மனதையும் இறைவனின் சோதனை கூடர்திற்கு அழைத்துச்சென்றது ஜமராத்-மக்கா. ஆறு கிலோமீட்டரை நடந்து கடக்க 2 -3 மணிநேரம் எடுத்தது (இன்ஷா அல்லாஹ் இனி வரும் வருடங்களில் இதற்கும் ரயில் பாதை அமைத்துவிடுவார்கலாம்). உண்மையில் இந்த கணம்தான் நம் முன்னோர்கள், நபி(ஸல்) அவர்கள் , நபித்தோழர்கள் செய்த தியாகம் என் மூளைக்கு எட்டியது(சுடு பட்டால்தான் உறைக்கும் என்பார்களே அது இதுதானோ!) .
மனம் குளிர ஒரு மழைத்துளி:
சிக்னல் இல்லாத ரயிலிற்கும், சிக்னல் கொடுக்காமல் வந்த மழைக்கும் கடும் போட்டி நிலவியது . முதல் சுற்றில் புகை இல்லா புகை வண்டியோடு வெற்றிபெற்று இறைவனின் அருட்கொடையை (ரயில்) குடையாய் பயன்படுத்திக்கொண்டு எங்கள் டென்ட் வந்தடைந்தோம். . பிறகு கஅபா முதல் மினா வரை மக்கள் யாவரும் ஒரு சுற்றும், முற்றும் சுற்றமுடியாமல் மழை சுழற்றி எடுத்தது. ரயில் பயணமும் சிறிது நேரம் ரத்தானது.
ஐந்து கடமையையும் முடித்துவிட்டோம் எங்கள் பிழைகளை மன்னித்து ஏற்றுக்கொள்ள துஅ செய்தவனாக வீடு திரும்பினோம்.
காக்காமார்களே உஷார்! உங்களுக்காக ஒரு டிப்ஸ்:
ஒரு கம்பார்மெண்டில் கிட்டத்தட்ட இருபது பேர் உட்காரும் அளவிற்கு இருக்கை இருக்கும். முட்டி மோதிக்கிட்டு கர்சீப் போட்டு முதல் ஆளாக இருக்கையில் அமர்ந்தாலும் கடைசி நபராக பெண்கள் கூட்டம் வந்தே தீரும். ஆகையால் எல்லா(மூவ்/நகரு)!! என்ற வார்த்தை தங்கள் காதுகளை துளையிடுவதற்கு முன் 'எலே.. எந்திரிலே' என்று நமக்கு நாமே சொல்லிக்கொண்டு ஏறும்போதே ஏதாவது ஒரு மூலையில் ஒதிங்கி நிப்பது புத்திசாலித்தனம்.
ஹஜ் ரயில் பயணம் ஒரு பார்வை -
1) ரயில் பயணத்தால் தினமும் மூன்று முதல் நான்கு மணி நேரம் சேமிக்கபட்டது.
2) அதிக நேரம் தங்கும் இடத்திலேயே நன்மையை பெற்றுக்கொள்ள அறிய வாய்ப்பு (இது நாம் பயன்படுத்திக்கொள்வதை பொருத்தது).
3) இயலாதோற்கு இது இறைவன் கொடுத்த வரம்.
4) தினமும் 5000 வாகனங்கள் போக்குவரத்து நேரிசலோடு சேவை செய்யவேண்டியதை, இரு தண்டவாளங்கள் சீர் செய்தது.
5) நள்ளிரவு 11 - 3 ரயில் சேவை நிறுத்தப்படும். இது முன்னறிவிப்பு இல்லாமல் நடந்தமையால் கொஞ்சம் வாக்குவாதமும், சமாதானமும் நடந்தேறியது.
6) ஹாஜிகள் வசதிக்கேற்ப அதிக ரயில் நிறுத்தங்கள், அரபா 1- 2- 3, முஸ்தலிபா 1-2-3, மீனா 1-2-3
ஹஜ்ஜை முடித்து அலுவலகத்திற்கு வந்தபோது அரபு செய்திதாளில் படித்தேன் "சீனப்போருட்களில் தரமும் இருக்கின்றது" என்றதுபோல் ஒரு கட்டுரையை.
ஹும்ம்.. சீனர்களை கண்டாவது சின்சியாரிடியை கற்றுக்கொள் என்பது புது மொழியாக இருக்கக்கூடும் .
வல்ல ரஹ்மான் இந்த புனித ஹஜ்ஜை ஏற்றுக்கொள்வானாக என்று துஆ செய்தவண்ணம் , விடைபெறுகிறேன்
-- மு.செ.மு / M.S.M. மீராஷாஹ் ரஃபியா
ஜெத்தா, சஊதி அரேபியா.
30 Responses So Far:
அன்பு சகோதரர் மு.செ.மு மீராசா ராபியா அவர்கள் நம் அதிரைநிருபருக்காக மிக அருமையான ஆக்கத்தை தந்துள்ளார்கள்.
இளம் எழுத்தாளர்களை ஊக்கப்படுத்துவதில் நம் அதிரைநிருபர் குழு மிக ஆர்வமாக உள்ளது.
அதிரைநிருபர் குழு சார்பாக சகோதரரை வாழ்த்தி வரவேற்கிறோம்.
தொடர்ந்து இது போன்ற அருமையான சிந்தனையை தூண்டும் நல்ல ஆக்கங்களை தொடர்ந்து தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்
Excellent ! MSM(r)மீராசா !
அற்புதமான அனுபவம் சொல்லும் எழுத்து, எழுதிய விதம் அதன் கோர்வை !
எல்லாம் வல்ல அல்லாஹ் நீங்களும் மற்றும் நம் சகோதரர்கள் யாவரும் செய்து முடித்த ஏற்றுக் கொள்வானாக !
என் முதல் ஆக்கத்தை பதித்து ஊக்குவிக்கும் அதிரை நிருபருக்கும் அதன் வாசகர்களுக்கும் என் நன்றி கலந்த சலாம்.
MSM(r)மீரஷாஹ்.
அஸ்ஸலாமு அழைக்கும்
தங்களின் முதல் ஹஜ் பயண அனுபவம் மிக நேர்த்தியான தொகுப்பு
ஒரு விசயத்தை கூட விடாமல் அழகாக தொகுத்து தந்துள்ளீர்கள்.
வேலைப்பார்க்கும் நிறுவனத்தில் ஆண்டுத்தணிக்கை (2ஜி ஸ்பெக்டாம் போல் அல்ல) நடந்து வருவதால் என் இனிய கருத்துக்களை இங்கு அதிரை நிருபரில் அருமையான தன் ஆக்கங்களை எழுதி வரும் என் உறவின, நண்ப, சகோதர பெருங்குடி மக்களுக்கு உடனுக்குடன் தெரிவிக்க முடியவில்லை (யாரும் கோவிச்சிக்கிடாதியெ..நல்லாயீர்ர்ப்பியெ...)
இன்ஷா அல்லாஹ் விரைவில் தணிக்கையிலிருந்து மீண்டு வருவேன் உங்கள் ஆக்கங்களுக்கு என் கருத்தை அள்ளித்தருவேன்.
அதிரை கவிக்கோ அப்துல் ரஹ்மானுக்கும்,
கலிபோர்னியாவின் காட்டுத்தீ நம்ம தஸ்தகீருக்கும்,
புதிய இளைய வரவு MSM(r) மீராஷா ரஃபியாவிற்கும்,
என் இனிய சலாமும், குசல விசாரிப்புகளும் சென்றடையட்டுமாக...
(இவ்ளோ அருமையான கட்டுரை எழுத்தாளர்களெல்லாம் இவ்ளோ நாளா எங்கே ஒளிஞ்சிக்கிட்டு இருந்தியெ...._
மு.செ.மு. நெய்னா முஹம்மது...
ஹஜ் செய்யும் முனைப்பினூடே, கிரியைகளையும் செய்துகொண்டு சுற்றுமுற்றும் நடப்பவைகளயும் கிரகித்து பிறகு இப்படி தொகுப்பது சுலபமல்ல. எழுதுவதில் முதல் முயற்ச்சிபோல் தோன்றவில்லை.
இப்படி பலதரப்பட்ட ரசனையும் கொண்டவர்களிடம் உங்கள் படைப்பை தந்து கருத்துக்கேட்பதுதான் புத்திசாலித்தனம் தம்பி.
வாழ்த்துகள்.
அசலாமு அலைக்கும் மீராசா ....வாழ்த்துக்கள் ...
To Bro: மு.செ.மு / M.S.M. மீராஷாஹ் ரஃபியா,
வாழ்த்துக்கள்...உங்கள் ஹஜ் அனுபவம் எங்களையும் அந்த அமல் செய்ய ஊக்கம் தருகிறது.
ஹு ஜுன் தாவ் [ சீன அதிபர்] சவுதி வந்தபோது ஒப்பந்தம் கையெழுத்தானது 'மெக்கா மெட்ரோ ரயில்" ப்ராஜக்ட்.இவ்வளவு நேர்த்தியாக செய்வார்கள் என்று எதிர்பார்த்ததுதான்.
ஷங்க்காய் ஒருமுறை போய் வாருங்கள் ..ஷங்காய் ஐரோப்பாவை சேர்ந்தது என நிச்சயம் சொல்வீர்கள்
வஅலைக்கும் முஸ்ஸலாம்.
@சகோ. நெய்னா&சபீர்
இதுநாள் வரை நான் எங்கும் ஒளிந்தில்லை , என் எண்ணங்களை
மனதில் ஒளித்திருந்து , நாவில் ஒலித்திருந்தேன்..
உண்மையில் நான் ஒரு நிருபராய்(படித்தது) இருந்திருக்க,
(அ)நிருபரை கண்டபின் நிரூபிக்க முற்பட்டு
முதல் எழுத்துவடிவ பயனக்கட்டுரையோடு பயணிக்கிறேன்,
அன்பு நெஞ்சங்களின்(உங்களைத்தான் சொன்னேன்)கைக்கோர்தவாறு.
MSM(r)மீராஷாஹ்: அ(ட)திரைநிருபரா ! அப்படின்னா கலக்கல்தான்... வருக ! வருக ! வாழ்த்துக்கள் தொடர்வதற்கு !
@அபு இபுராஹீம்..
ஆம். திரை,திரைத்துறை போன்ற துறைகளை(மீடியா) படித்து(விசுவல் கம்யுனிகேசன்)
திரைக்கு திரையிட்டு, தீயிட்டு இறை(வனு)க்கு பிடித்த வழியில் நம் காலம் நகர்கிறது.
அத்திரைக்கு தீயிட்டாச்சு,
அதிரைக்கு தீபந்தம் ஏற்ற்றுவோம்.
வெளிச்சம்.. நம் பதிவுகளை கொண்டு.
வாழ்த்துக்களுக்கு நன்றி. ஜஜாகல்லாஹ் ஹைர்.
MSM (r) மீராஷாஹ்
இங்குள்ள சகோதரர்களின் எழுத்து நடைகளைப் பார்க்கும் போது வியப்பாக உள்ளது. இவ்வளவு திறமையை வைத்துக்கொண்டு எங்கே இருந்தீர்கள் சகோதரர் மீராசா.
நேரம் கிடைக்கும் போது visual communicationல் எளிய முறையில் நன்மை பயக்கும் விதமாக என்னன்ன செய்யலாம் என்பது பற்றி ஒரு ஆக்கம் எழுத முயற்சி செய்யுங்களேன். முழுக்க முழுக்க நன்மையை நாடி எல்லோருக்கும் பயனுல்லதாக இருக்குமே..
@தாஜுதீன் காக்கா
தாங்கள் கேட்டவாரே, நானும் நினைத்திருந்தேன், visual communication பற்றி ஒரு கட்டுரை எழுதணும் என்று.
அதில் நல்லவை எவை, தீயவை எவை, எப்படி கையாள்வது போன்ற பல கேள்விகளுக்கு ஏதோ கொஞ்சம் என் அனுபவத்தை வைத்து கூறலாம் என்று நினைகிறேன். இன்ஷா அல்லாஹ் என் அடுத்த கட்டுரை அதுவாக இருக்கலாம். மனதுக்குள் RND (Research and Development) முடித்துவிட்டு விரைவில் கேஸ் ஷ்டடியோடு வருகிறேன்.
இதேபோல் வாரம்/மாதம் ஒரு முறையேனும் அவரவர் கல்வி துறையை பற்றி விளக்கினால் படு ஜோராகவும்,வழிகாட்டுதலாகவும் இருக்கும் என நம்புகிறேன்.
என்ன நினைகிறீர்கள் நிருபர் சகோதரர்களே?
"சிக்னல் இல்லாத ரயிலிற்கும், சிக்னல் கொடுக்காமல் வந்த மழைக்கும் கடும் போட்டி நிலவியது."
'விளையும் பயிர் முளையிலே' என்பது தெரிகின்றது, இந்தப் பேரப்பிள்ளையின் எழுத்திலே!
// இதேபோல் வாரம்/மாதம் ஒரு முறையேனும் அவரவர் கல்வி துறையை பற்றி விளக்கினால் படு ஜோராகவும்,வழிகாட்டுதலாகவும் இருக்கும் என நம்புகிறேன்.///
MSM(r)M: இதனைத்தான் எதிர்பார்க்கிறது... இன்ஷா அல்லாஹ், ஏற்கனவே தொடரும் இதே பாணி இன்னும் சிறக்கச் செய்திடுவோம் !
அஸ்ஸலாமு அலைக்கும்.தந்தை வழியில் தனயனும் சிறந்த எழுத்தாளர் என்பது பார்க சந்தோசம். நல்ல எழுத்து நடை.புனித பயணத்தின் அனுபவத்தின் ஊடே சுவாரசியமான தகவலும் பகிர்ந்துகொண்டவிதம் தந்தையின் சாயல் தனயனிடம் தெரிகிறது.வாழ்துக்கள்.மேலும் எழுதுங்கள் மகனாரே.
சகோ.மீராசா..தங்களின் புனித பயணத்தை விவரித்த விதம்...எங்களையெல்லாம் கையைபிடித்துக்கொண்டு ஒவ்வொன்றாக விளக்கி கொண்டு சென்றது போன்ற உணர்வை ஏற்படுத்தியது....வாழ்த்துக்கள் நண்பரே...தொடருங்கள் உங்கள் ஆக்கங்களை அல்லாஹ் உங்கள் ஹஜ்ஜை கபூல் செய்து..எங்களுக்கும் அந்த பாக்கியதை தந்தருள்வானக!!!
Well done Meerasha. Wishing you for better future. M Seeni Ali
தம்பி மீராஷாஹ்...
உங்களுடன் சேர்ந்து ஹஜ் செய்த உணர்வை தந்து விட்டீர்கள்
வாழ்த்துக்கள்.
காணாமல் போன கம்பன் எக்ஸ்பிரஸ் ரயிலின் நினைவுகளை இந்த மோனோ ரயில் பயணம் மூலம் தன் கட்டுரையில் கொண்டு வந்து நிப்பாட்டிய மகன் மீராசாவிற்கு வாழ்த்துக்களும், இன்னும் இது போல் பல கட்டுரைகள் படைக்க எம் து'ஆவும் சென்றடையட்டுமாக. இன்னும் சில வருடங்களில் 'டீ டீ டீ, காப்பி, காப்பி போன்ற இனிய குரல்களும் இந்த மோனோ ரயில் வழித்தடத்தில் கேட்கலாம் எனத்தோன்றுகிறது.
மு.செ.மு. நெய்னா முஹம்மது.
Salaam,பயனுள்ள பயணக்கட்டுரை மூலம் உன் அழகிய தமிழை வெளிக்காட்டிய மீராசா,மேலும் மேலும் கட்டுரைப் பயணங்கள் தொடர வாழ்த்துக்கள் .......மு.செ.மு.ஜஹபர் சாதிக்
@ M.H. ஜஹபர் சாதிக்.
வஅலைக்கும் முஸ்ஸலாம்(வரஹ்). உங்கள் வாழ்த்துக்கு என் நன்றிகள்.
மு.செ.மு. மீ ரா
அஸ்ஸலாமு அழைக்கும் சகோ - M.S.M. மீராஷாஹ் ரஃபியா
அருமை பொருத்தமான தலைப்பிற்குறிய எல்லோருக்கும் ஆவலையும், கடைமையை நிறைவேற்ற வேண்டும் என்ற உள்ளுணர்வு தரக்கூடிய பதிவு
\\இவன் அதிராம்பட்டினத்துல கம்பன் எக்ஸ்பிரசை நிப்பாடிடானுங்கங்குரத்துக்காக ரயில் வண்டியையே பார்க்காதமாதிரி! சொல்றானேன்னு பார்க்காதீங்கோ காக்காமார்களா..//
கேலியும்/வருத்தமும் கலந்த நினைவூட்டல், நம் ஊரில் தொடர் வண்டி வரும் வரும் என்று வீணாக/கனவாக தான் போகிக்கொண்டு இருக்கிறது காலம் அதற்க்கு பழதறப்பில் முயற்சி நடந்து வருகிறது என்று காதோரம் விழுகிறதே தவிர நடவடிக்கை எடுக்க படுகிறதா என்பது இன்னும் கேள்வி குறியாகவே இருக்கிறது
இன்ஷா அல்லாஹ் நாம் அனைவருக்கும் இப்புனிதமான இடத்திற்கு செல்ல ஏக இறைவன் நசிபாக்கி வைப்பானாக....ஆமீன்!
இர்fபான்
jailani
mahane enakku oru mahan pirappan avan ennai polave iruppan enru ella petrorum asaipaduvargal atahi ninaivakkum vithamaga unnoduya ezuthu sinthanaigal valarattum adiraikum AYDA ukkum pirayojanamaga irrukkatum sachsvin vazthuhal
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...
என்னங்க ஜெய்லானி சாச்சா நான் நினைக்கும் நட்பாக நீங்கள் இருந்தால் பதில் தரவும்... ! இல்லேன்னா உரிமையா கேட்டதுக்கா யாருங்க நீன்னு கேட்டிட மாட்டிங்க தானே ! :))
@அதிரை தென்றல் (Irfan Cmp)
வஅலைக்கும் முஸ்ஸலாம்..
உண்மையை சொல்லப்போனால் இந்த கட்டுரை எழுதும்போது நம்மூரில் ஓடியது கம்பன் எக்ஸ்பிரஸ்தானா என்றே எனக்கு மறந்துவிட்டது. பிறகு என் வாப்பாவிடம் கேட்டு தெளிவுபடித்திக்கொண்டேன்.. அந்தளவிற்கு நமதூர் ரயில் ஒரு கனா காலம் ஆகிவிட்டது(கல்வெட்டு வரை செல்லாமல் இருந்தால் சரி).
இங்குள்ள வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள். நம்மில் சிலருக்கு நமதூர் ரயில் பயணத்தில் நெகிழ்ச்சியான, மறக்க முடியாத பயணங்கள் ஏதாவது இருந்தால் அதை ஒரு தனி கட்டுரையாகவோ, பின்னூட்டங்களாகவோ பதிந்து அசைபோட்டால் சுவாரஸ்யமாக இருக்கும் என நம்புகிறேன்..
@ abdulkhader Jailani Sacha
இன்ஷா அல்லாஹ் அதிரைக்கும் , அய்டாவிற்கும் (அதிரை யூத் டெவலப்மென்ட் அசோசியன் ) பிரயோஜனமான விதத்தில் என் சக்திகளை நிவர்த்தி செய்ய முயற்சிக்கிறேன்..
சகோ. மீராசாவுக்கு: அஸ்ஸலாமு அலைக்கும்( வரஹ்) ஹஜ் செய்த முறையை தெளிவாகவும், அழகாகவும் அழகிய எழுத்து நடையில் விளக்கியதற்கு வாழ்த்துக்கள்.
வாழ்துக்கள் மீராசா உம்முடைய ஹஜ் அனுபுவத்தை படித்ததும் மீண்டும் ஹஜ்செய்யனு என்றூ ஆசையாக உள்ளது நாங்கல்லாம் ஹஜ்செய்யும்போது அராபாவில் இருந்து இரவு.7,மனிக்குபஸ்சில் பிரப்பட்டோம் அதிகாலை,4,மனிக்குதான் முஸ்தலிபா,வந்து அடைந்தோம்
@அலாவுதீன்-வஅலைக்கும் முஸ்ஸலாம்
@கதீஜா-
அரபாவிளிருந்து மினா வருவதற்கு 9 (இரவு 7 -காலை 4 ) மணிநேரமா?? அல்லாஹ் அக்பர். 10 நிமிட என் பயணத்தையும் 9 மணிநேர உங்கள் பயணத்தையும் நினைத்து பார்த்தால் தலை சுற்றுகிறது.
Post a Comment