Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

Silence please ! - (ஆங்கில) புத்தாண்டு சிறப்பு பேட்டி - தொடர்கிறது (2) 7

அதிரைநிருபர் பதிப்பகம் | January 03, 2015 | , , ,

அல்ட்டிமேட் கேள்வி பதில் நிகழ்ச்சி தேமே என்று தொடர்கிறது... (2)

நாட்டில் விலை வாசியைக் குறைப்போம், கட்டுக்குள் வைப்போம் என்றீர்களே?”

சொன்னோம், இல்லை என்று சொல்லவில்லையே.  ஆனால், அதற்கான துவக்கம் யாரிடமிருந்து வரவேண்டும் என்று சிந்தித்தீர்களா? பொறுப்பான வாக்காளப் பெருமக்களிடம் இருந்தல்லவா வரவேண்டும்.  வந்ததா? இல்லையே!  வரலாற்றின் ஏடுகளைப் புரட்டிப் பாருங்கள். 20 வருடங்களுக்கு முன் ஒரு பிரியாணி பொட்டலத்திற்கும் குவாட்டருக்கும் விற்ற வாக்குகளை 10 வருடங்களுக்கு முன் 100க்கும் 200க்கும் விற்றார்கள்.  ஆனால், கடந்த தேர்தலில் நடந்ததென்ன? ஒரு வாக்கு 1,000 ரூபாய் வரை விலை போனதை வரலாறு, சரித்திரம், பூகோலம், புள்ளியியல், பெளதிகம், மெஞ்ஞானம் என்று எல்லா துறைகளும் பதிவு செய்து வைத்துள்ளன.  நாட்டில் விலைவாசி கூடினாலும் அதை லஞ்சம் வாங்கியோ கொள்ளை லாபம் சம்பாதித்தோ ஊரை அடித்து உலையில் போட்டோ கந்து வட்டியில் சம்பாதித்தோ பொதுமக்கள் சமாளிக்கவே செய்கிறார்கள்.  ஆனால், விலை கூடிப்போன வாக்குச்சீட்டை வாங்கி ஜெயிப்பதற்குள் நாங்கள் பணப்பெட்டிகளோடு லோல்பட்டதையும் அதை விநியோகிக்க பட்ட அவதிகளையும் யார் அறிவர்? இலைக்கு ஓட்டுப்போடச்சொல்லி காசு கொடுத்தக் காட்சிகளை கலைஞர் தொலைக்காட்சியும்; சூரியனுக்கு ஓட்டுப் போடச்சொல்லி காசு கொடுத்தக் காட்சிகளை ஜெயா தொலைக்காட்சியும் மாறிமாறி காட்டிக்கொண்டிருந்த சந்தடி சாக்கில்தான் எங்களால் தேர்தல் கமிஷனுக்கு டிமிக்கிக் கொடுத்து வாக்குச்சீட்டுகளை வாங்க முடிந்தது.  

அது மட்டுமா? விலைவாசி ஏறிப்போனாலும் ‘ஒன்று வாங்கினால் மற்றொன்று இலவசம், இரண்டு வாங்குங்கள் மூன்றைப் பெருங்கள், 25%, 50% தள்ளுபடி, ஆடித் தள்ளுபடி, பரிசுக் கூப்பன்கள் போன்ற சலுகைகளை பொதுமக்கள் அனுபவிக்கிறார்கள். ஆனால், ஓர் அப்பா ஓர் அம்மா வாக்குகளுக்கு ஒரு மாமியார் வாக்கு இலவசம் என்றோ, ஐந்து வாக்குகளுக்கு மேல் ஒரு குடும்பத்தில் இருந்தால் நான்கு வாக்குகளுக்கு மட்டும் பணம் கொடுத்தால் போதும் என்றோ ஏதாவது சலுகைகளை வாக்காளர்கள் கொடுத்தார்களா? உண்மை இப்படி இருக்க விலைவாசி உயர்வைப் பற்றிப் பேச இவர்களுக்கு என்ன அறுகதை இருக்கிறது?”

கட்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்கப் படும் என்று வாக்குறுதி கொடுத்தது?”

அதைப் பற்றிப் பேசத்தான் மகிலா ராஜபக்ஷேவை விருந்துக்கு அழைத்தோம். ஆனால், நீங்கள் தாம்  தூம் என்று குதித்து அவருக்கு எதிராகக் கருப்புக்கொடி காட்டினீர்கள். ராஜபக்ஷேவின் கோரைப்பல் வழியாக தமிழ் ரத்தம் வழிவதும்போலவும் தமிழர்களைக் கண்டால் அவர் நாக்கைச் சப்புக் கொட்டுவதுபோலவும் கேலிச்சித்திரம் வரைந்து கேவலப்படுத்துகிறீர்கள. அதனால், ராஜபக்ஷே கோபித்துக் கொண்டு ஒரு கட்டன் ச்சாயாகூட குடிக்காமல் போய்விட்டார்.  ஒன்றையாவது ஒழுங்காகச் செய்ய விடுகிறீர்களா? சைக்கிளோ பைக்கோ இல்லாமல் நடந்தே போராடும் வைக்கோ, கோபக்கார சீமான் போன்றோர் “ராஜபக்ஷேவிடம் எந்த பேச்சு வார்த்தையும் வைத்துக்கொள்ளக்கூடாது, பச்சத்தண்ணிகூட புழங்கக்கூடாது, பெண் எடுக்கவோ கொடுக்கவோ கூடாது, நாட்டைவிட்டு தள்ளி வைக்கனும்” என்று மீடியா மைக்குகளில் நாட்டாமை பண்ணிக்கொண்டே இருந்தால் நாங்கள் எப்படி கட்சத்தீவை மீட்பது? ராஜபக்ஷேவை ஐஸ் வைத்துத்தான் மீட்க முடியும். அதில் நாங்கள் கில்லாடிகள். பொறுத்திருந்து பாருங்கள். இலங்கைத் தேர்தலுக்குப் பிறகு ராஜபக்ஷேவின் ஆதரவுக் கூடிப்போய், “முல்லிவாய்க்கால் மோடி” என்கிற புனைப்பெயரோடு “குஜராத்தின் ராஜபக்ஷே”வாகிய எங்கள் தலைவருடன் ஒத்துழைப்பார்.”

பொருளாதார வளர்ச்சி எவ்வாறு உள்ளது?”

சொல்லிக்கொள்கிற மாதிரி ஒன்றும் கூடுதலாக இல்லை என்றாலும் அவ்வளவு மோசமென்றும் சொல்ல முடியாது. சொந்த கிராமத்தில் 45 ஏக்கர் நஞ்சை 78 ஏக்கர் புஞ்சை வாங்கிப்போட்டிருக்கிறேன். எங்கள் மாவட்டத்தின் முக்கிய இடத்தில் ஹைப்பர் மார்க்கெட்டுடன் கூடிய ஒரு வணிக வளாகம் கட்டி மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்கிறேன். கல்விப்பணியாற்றும் பரம்பரையில் வந்த நான் இரண்டு எஞ்ஜினியரிங் காலேஜ் மற்றும் ஒரு மருத்துவக்கல்லூரியும் கட்டி கல்வித் தொண்டாற்றுகிறேன். தாய்க்குலங்களின் கனவை நனவாக்க ஒரு பிரமாண்ட நகைக்கடை கட்டிக்கொண்டிருக்கிறேன். காங்க்ரஸ்காரர்களைப் போல ஸ்விஸ் வங்கிகளில் கொண்டுபோய் நம் நாட்டுப் பணத்தைப் பதுக்காமல் இங்கேயே  7 வங்கிகளில் கணக்கு வைத்து கணிசமானத் தொகையை நாட்டு நலனுக்கு அரசு உபயோகப்படுத்த ஏதுவாக நிலையான கணக்கில் போட்டு வைத்துள்ளேன், இன்னும்….”

(குறுக்கிட்டு) “மன்னிக்கவும், நான் நாட்டின் பொருளாதார வளர்ச்சி பற்றியல்லவா கேட்டேன்?”

(அப்ப நானாத்தான் உளறிட்டேனா?) கேள்விகளைத் தெளிவாகக் கேளுங்கள். நாட்டின் பொருளாதார வளர்ச்சி எங்கள் ஆட்சியில் அமோகமாக் இருக்கிறது. முந்தைய ஆட்சியில் அதளபாதாளத்தில் வீழ்ந்து கிடந்த நாட்டின் பொருளாதாரம் எங்கள் ஆட்சியில் அசுர வளர்ச்சி கண்டு வருகிறது. 8.134689423 சதவிகிதம் வளர்ச்சி கண்டுள்ளது. மக்களின் வாங்கும் திறன் கூடியுள்ளது. அரசியல்வாதிகளின் ‘வாங்கும்’ திறனும் கூடியுள்ளது. அதற்கு ஏதுவாக, மக்களின் ‘கொடுக்கும்’திறனும் கூடியுள்ளது. வங்கிகள் குறைவான வட்டிக்கு கடன் தருகின்றன. கொடுத்தக் கடனைத் திருப்பி கேட்பதற்கான வழிமுறைகளில் மாற்றங்கள் செய்து, குண்டர்களை நீக்கிவிட்டு நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட கராத்தே வீர்ர்களை பணி அமர்த்தியுள்ளோம்.  கரசேவகர்களையும் இந்த வேலையில் இணைக்க திட்டங்கள் தீட்டி வருகிறோம்.  அவர்களால்தான் கடனை வசூலிக்க சுவர்களை உடைத்து உள்ளே இறங்க முடியும்.  கடப்பாரை, மண்வெட்டி, சுத்தியல் போன்ற உபகரணங்களும் கத்தி, வாள் போன்ற ஆயுதங்களும் உபயோகிப்பதில் அவர்கள்தான் கைதேர்ந்தவர்கள் என்பது பாபர் முதல் ராமர் வரை நாடே அறியும். நாட்டின் அபரித பொருளாதார வளர்ச்சியைக் கண்ட மேலை நாடுகள் அவர்கள் தொழிற்சாலைகளை நம் நாட்டில் அமைக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.  அந்நிய முதலீடு கூடி வருகிறது. இனி எக்காலத்திலும் காங்க்ரஸ் ஆட்சிக்கு வரவே வராது என்னும் பட்சத்தில் பொருளாதாரம் பூரண வளர்ச்சிப் பெற்று நாட்டில் சுபிட்சம் நிலவும்.”

தமிழ்நாட்டில் 2016ல் உங்கள் ஆட்சிதான் அமையும் என்று முழங்கி வருகிறீர்களே. என்ன வியூகம் வைத்திருக்கிறீர்கள்?”

அசத்தல் பதில்கள் தொடரும். (ஹிஹி)

சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்

7 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

விலைவாசி உயர்வுக்கு.... இன்னொன்றையும் விட்டுவிட்டீரே தலீவரே !

அனைத்து மீடியாக்களையும் விலைக்கு வாங்கிய தொகையை எவன் தலையில் கட்டுவது.... வாயைப் பிளந்து புருவம் உயர்த்தி, அடிவயிறு குடல் வெளியேறும் வரை கத்திக் கூச்சல் போடும் மீடியா புரோகிதர்களின் சன்மானம் எங்கேயிருந்து மீட்டெடுப்பது ?

Muhammad abubacker ( LMS ) said...

கேஸ் மானியம் பெற அ நம்பர் கேட்ப்பது போல். ஓட்டுக்கு காசு தர அ நம்பர் கேட்ப்பாங்கலோ ?

sabeer.abushahruk said...

இலவச வேட்டி சேலை கொடுக்க ஆரம்பிச்சாச்சு.

இலவச திருமணம், இலவச வேட்டி சேலை..

இலவசமாக பிள்ளைகுட்டியும் கொடுத்துட்டா நாட்டு மக்கள் சுகமாக சீவிப்பர்.

அதிரை.மெய்சா said...

எல்லா வற்றிற்கும் காரணம் சுயநலமே. அவரவர் தேவைக்காகவும் பெயர் புகழுக்காகவும்தான் பொதுநலனில் அக்கரை செலுத்துவது போல வாய் கிழிய பேசுகிறார்கள். வாக்குறுதிகளை அல்லி வழங்குகிறார்கள். மக்கள் ஏமாளியாக இருக்கும் வரை போதிய விழிப்புணர்வு பெரும்வரை எல்லாமே தலைவிரித்தோ ஆடிக்கொண்டுதான் இருக்கும்

sheikdawoodmohamedfarook said...
This comment has been removed by the author.
sheikdawoodmohamedfarook said...

//இலவசமாகபிள்ளைகுட்டியும்கொடுத்துட்டா.......//மருமகன்சபீர்அபுசாருக்சொன்னது. அதோடுஒருசின்னவீடும்கொடுத்துட்டா வாழ்க்கையை'மஜா'வாஓட்டலாம்!

sabeer.abushahruk said...

ஃபாரூக் மாமா,

பெரிய வீடுன்னாத்தான் கல்யாணமோ கட்டுமானமோ "கட்டி"க்கொடுக்கலாம்.

ச்சின்ன வீடெல்லாம்...

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு