Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

Silence please ! - (ஆங்கில) புத்தாண்டு சிறப்பு பேட்டி 21

அதிரைநிருபர் பதிப்பகம் | January 01, 2015 | , , ,

கேள்விகள் கேட்பது கேணைக்கிறுக்கன்; பதில்கள் பா ஜ க (பாவிகள் ஜனரஞ்சக கட்சி)

"ரூபாயின் மதிப்பை உயர்த்துவோம் என்றீர்களே?"

"கர் வாபஸ்" என்னும் மூளைச் சலவை மூலம் வேலையில்லாமல் ஓய்வில் இருக்கும் கரசேவகர்களைக் கொண்டு ஏற்கனவே பல வருடங்களுக்குமுன் இந்துவாக இருந்த முஸ்லீம் மற்றும் கிறித்துவர்களைக் கட்டாய மதமாற்றம் செய்து இந்து மதத்திற்குள் கொண்டு வருகிறோம். ஆயினும், இந்து என்பது ஒரு மதமல்ல. இப்படியாக இந்துக்கள் எண்ணிக்கைக் கூடக்கூட ரூபாயின் மதிப்பும் கூடும்.

"மதச்சார்பின்மைக்கு பங்கம் வராது. யாரும் எந்த மதத்தையும் பின்பற்றலாம் என்றீர்களே?"

"ஆமாம், இப்பவும் அதைத்தானே செய்து கொண்டிருக்கிறோம்! முஸ்லிம்கள் பக்ரீத் கொண்டாடவும் கிறித்துவர்கள் சர்ச்சுக்குப்போகவும் அனுமதிக்கவில்லையா? என்ன குருட்டுத்தனமான கேள்வி இது? எல்லா இந்து ஆலயங்களையும் புணரமைக்க கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கீடு செய்திருப்பது எதற்காக என்று நினைக்கிறீர்கள்? 2025ல் இந்தியா இந்துக்கள் நாடாகும்போது மதச்சார்பின்மை முற்றிலும் அமலுக்கு வந்திருக்கும். 10 ஆண்டுகளில் நிரந்ரதர பா ஜ க ஆட்சி இதைச் சாதிக்கும்!"

"நதிநீர் இணைப்பைச் சாத்தியப்படுத்துவோம் என்றீர்களே?"

"நதியில் தண்ணீருக்குப் பதிலாக சாக்கடை ஓடினால் எப்படி இணைக்க முடியும்? கர்நாடகக் கலாச்சாரச் சாக்கடையோ கேரளத்து சக்கப்பழ அசுத்தங்களோ காவிரி வழியாகவோ முல்லைப்பெரியாறு வழியாகவோ தமிழ்நாட்டிற்குள் வந்து நோய் பரப்பினால் விடுவீர்களா? அதனால்தான் முதலில் கங்கையைச் சுத்தப்படுத்துகிறோம். 
அதுபோக காசு மிச்சமிருந்தால் எல்லா நதிகளையும் இணைத்து உபரி நீர் கடலுக்குள் செல்லாமல் நாட்டுக்குள்ளேயே உபயோகப் படுத்த ஒரு லட்சம் கோடி ரூபாய் செலவில் திட்டம் வகுக்கிறோம். ரஜினி காந்த் தருவதாகச் சொன்ன ஒரு கோடியை வைத்துதான் பிள்ளையார் சுழி போடுவோம். "

"காந்தியைக் கொன்ற கோட்ஸேவைத் தேசபக்தன் என்கிறீர்களே, இதை ஏன் தேர்தலுக்கு முன் சொல்ல தைரியம் இல்லை?"

"யார் சொன்னது தேர்தலுக்கு முன்பதாகச் சொல்லவில்லை என்று? நாங்கள் ரகசியக் கூட்டங்களிலும் உயர்மட்ட கலந்தாய்வுகளிலும் எங்களுக்குள் சொல்லிக்கொண்டுதான் வருகிறோம். ஊடகங்கள்தான் அதை மக்களுக்கு எடுத்துச்செல்லத் தவறி விட்டன. நாங்கள் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறோம். கோட்ஸே செய்த கொலை குற்றத்திற்காக அவருக்குத்தான் மரண தண்டனை நிறைவேற்றியாகிவிட்டதே! அதற்கு மேலும் கோட்ஸேவுக்கு அவர் தொண்டர்கள் சிலை வைப்பதை ஏன் தடுக்க வேண்டும்? ரெட்டை வேடம் போட்ட காந்தியைச் சுட்டதும் கரசேவைக்கு ஒப்பான ஒரு தேசத் தொண்டுதான் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்."

"காணாமல் போய்விட்ட சமஸ்கிருதத்தைப் பள்ளிப்பாடங்களில் புகுத்தி இந்துத்துவாவை எல்லா மதத்தின் மாணவர்களும் படிக்க வேண்டும் என்று..."

" நிறுத்துங்கள். சமஸ்கிருதத்தில் அதிகமதிகம் தாய்குலத்திற்குத் தேவையான சமையல் குறிப்புகளும் பள்ளிச் செல்லும் பாப்பாக்களுக்கு அம்புலிமாமா கதைகளும் மட்டும்தான் இருக்கின்றன. இந்துத்வா மலிந்து கிடப்பதாகச் சொல்வதெல்லாம் காங்ரஸ்காரன் கிளப்பிவிட்ட புரளி.

சமஸ்கிருதம் ஒரு புனிதமான மொழி என்பதை ஏன் புரிந்து கொள்ள மறுக்கிறீர்கள்?"

"வெளிநாட்டு வங்கிகளில் கருப்புப்பணத்தைப் பதுக்கி வைத்திருக்கும் இந்திய அரசியல்வாதிகள் மற்றும் செல்வந்தர்களின் பெயர் பட்டியலை வெளியிடுவோம் என்றும் பதுக்கிய பணத்தை மீட்போம் என்றும் சூளுரைத்தீர்களே?"

"இப்போதும் அதையேதான் சொல்லிக்கொண்டிருக்கிறோம். காங்ரஸைப் போல பேச்சை மாற்றி பேசமாட்டோம். பட்டியல் தயாராக இருக்கிறது. பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. படிஞ்சதும்... ஐ மீன், முடிஞ்சதும் வெளியிடுவோம்"

சீஸன்சுக்கு ஏற்ற மாதிரி கேள்விகள் தொடரும்

(இந்த நிகழ்ச்சியில் கேட்கப்பட்டவை யாவும் கற்பனையே அல்ல. இந்த பதில்கள் யாரையும் புண் படுத்தியிருந்தால் "ரோஷக்காரன்"தான் என்று மெச்சிக்கொள்ளவும்.)
தொடரும்...
சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்

21 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

சிறப்பு பேட்டி... சிரிப்பு பேட்டியாகி நிற்கிறது...

இந்திய மக்களின், தேர்தல் முடிவுகளால் ஏற்பட்ட நிர்ணய விதி... நடந்தேறுவதோ அனைத்தும் சதி...

sabeer.abushahruk said...

2015 புத்தாண்டில் இந்தப் பேட்டி வந்திருப்பதால் கீழ்க்கண்ட கேள்வியும் trend setterஆக இருக்கும் என்று நினைக்கிறேன்:

"பெண்கள் புத்தாண்டுக் கொண்டாட்டங்களில் பங்கு பெறுவது குறித்து?"

"கூடாது, கூடவே கூடாது. கர்நாடக நைட் க்ளப்களில் போய் ஆடிப்பாடக் கூடாது. எங்கள் கட்சியின் மூத்த பழுத்த தலைவர்கள் தலைவிகள் முன்னிலையில் அரை நிர்வான ஆட்டம் மட்டுமே போட்டு நம் பண்பாட்டைக் காக்க வேண்டும். இந்தப் புத்தாண்டு கிறித்துவர்களால் நம்மீது திணிக்கப்பட்டதாகும். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாளை ஆண்டின் முதல் தேதியாக வைத்து ஒரு நவீண காலண்டர் வடிவமைக்கப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை."

Muhammad abubacker ( LMS ) said...

இந்தியா வல்லரசாக ஆகுதோ இல்லையோ கிருக்குத்தனமான பதில்கள் சொல்வதில் [உலர்வதில்] வல்லவர்கள்.

Ebrahim Ansari said...

உத்திரப் பிரதேசத்தின் அரிமா அசாம் கான் சொல்லி இருக்கும் ஒரு கருத்து கவனிக்கத் தக்கது.

தாய் மதத்துக்கு மாற்றுகிறோம் என்று சொல்லி வறுமைக் கோட்டுக்குக் கீழே இருக்கும் முஸ்லிம்களைத் தேடிப்பிடித்து மிரட்டி மதம் மாற்றுவோர் முதலில் முக்தர் அப்பாஸ் நக்வி , மற்றும் ஷா நவாஸ் கானை மாற்றிக் காட்டட்டும் என்று சொலி இருக்கிறார்.

செய்யட்டுமே! சமுதாயமாவது எட்டப்பர்கள் இல்லாமல் தூய்மை பெறும்.

Ebrahim Ansari said...

ஒருகேள்வி விடுபட்டுப் போயிருக்கிறது.

மாட்டு மூத்திரத்தை தேசிய பானமாக அறிவிக்கப் போகிறீர்களாமே!

Unknown said...

மாட்டு மூத்திரம் பற்றிய நினைவூட்டல், ஜோக்கோ ஜோக்கு. வருகின்ற சிரிப்பை அடக்க முடியவில்லை.

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். கிருக்கு பயலுவல பத்தி நல்ல காமடியா எழுதியிருக்கீங்க ! தாய் மதத்துக்கு வரனும்னா இவனுவோ எல்லோரும் புத்தமதத்துக்கு அல்லவா செல்லனும்?அனால் மத்த மதத்திலிருந்து செத்த(செத்துகொண்டிருக்கிற)மதத்துக்கு வர சொல்றது வேடிக்கையிலும் வேடிக்கை!

crown said...

தோத்திரம் சொல்வான்,கோத்திரம் "பார்ப்பான்",பாத்திரம் நிரம்ப மாட்டு மூத்திரம் குடிப்பான்!புத்தி தடுமாறத்தானே செய்யும்????

sabeer.abushahruk said...

இன்றைய விஜய் ட்டிவி "நீயா நானா?" நிகழ்ச்சியில் பகுத்தறிவு சார்ந்த விஷயங்களைப் பேசி வந்த கோட் கோபிநாத், விதவிதமான ஜோஸியக்காரர்களை வைத்து, கூத்தாடி பிரபலங்களை விட்டு ராசி சொல்லி அதற்கான பலன்களைக் கேட்கச் சொல்லிக்கொண்டிருக்கிறார்.

எனக்கு சடப்படமா வருது. ஏன்னா, ஆங்கிலப் புத்தாண்டில் என்ன நடக்கும் என்று மகரம், மீனம் என்று தமிழ் ராசிகளை வைத்து பலன்களைச் சொல்றாங்களே, இது எப்டியாம்?

ஒரு சாம்ப்பிள் காமெடி:

பலன்: மகர ராசிக் காரர்கள் நரம்பு தொடர்பான வியாதிகளில் மட்டும் கவனமாக இருந்தால் போதும் ஆரோக்கியமாக இருக்கலாம்.

கேள்வி: நெஞ்சு இடது பக்கம் வலிச்சு, கை கடுத்து, உடல் வேர்த்து வந்தாலும் ஆஸ்பத்ரிக்குப் போகாமல் , என் ராசிக்கு நரம்பு சம்பந்தமான பிரச்னைக்குத்தான் ஆஸ்பத்ரி போவேன் என்று இருந்துவிட்டால் ஆயாளுக்கு சங்கு இல்லையாமா?

போடாங்...

sabeer.abushahruk said...

கோமாளி கோபிநாத்:

இந்த வருடம் எந்த ராசிக்காரர்கள் தங்கம் வாங்குவார்கள்?

ஜோதிடன் 1 : துலாம் ராசிக்காரர்கள்

ஜோதிடன்2: மகர ராசிக்காரர்கள்

ஜோதிடன்3: கன்னி ராசிக்காரர்கள்

ஜோதிடன்4: விருட்சஹ ராசிக்காரர்கள்

அடங்கொக்க மக்கா, ஒருத்தன்கூட காசு ராசிக்காரன் என்று சொல்லவில்லையே!!!

sabeer.abushahruk said...

//மாட்டு மூத்திரத்தை தேசிய பானமாக அறிவிக்கப் போகிறீர்களாமே!//

காக்கா, எனக்கு என் சின்ன வயசு சேட்டை ஒன்று நினைவுக்கு வருது. பள்ளிக்கூடம் போற வழியிலே (அப்ப ஆட்டோ வேன்லாம் லேது?) தண்ணி தவிக்கும். குவளைலாம் இருக்காது அதனால பைப்ல கையை வச்சி எந்தி குடிப்போம். கோமியத்தையும் இப்டித்தான் குடிப்பாய்ங்களோ என்று தோன்றியது.

நெனப்பு அதோடு நின்றால் பரவாயில்ல.

ஆனா, பெரும்பாலும் குடங்கள் க்யுவில் இருக்கும் பைப்படி குழாய்ல தண்ணி வராது. அந்த சமயங்களில் குழாய்ல வாயை வச்சி தண்ணியை உறிஞ்சிக் குடிப்போம். "கோமியம் வரலேன்னா?"ன்னு யோசிச்சுத் தொலைச்சிட்டேன்.

அதிரை.மெய்சா said...

வந்து மறையுது வருசங்கள்
வெந்து மடியுது மனித நேயங்கள்

ஆண்டுகள் யாவும் புதிதி புதிதாய்
அகிலத்தில் அவலங்கள் அணியணியாய்

சோதிக்கும் இறைவனின் சூட்சமங்கள்
சுகத்திற்க்கே நீயறிவாய் ஓ மனிதா !

மாற்றத்தைக் காண்பாய் நீ வெகுவிரைவில்
மனம் மகிழ்விற்க்கே அனைத்துமென
நம்புவீராக

Yasir said...

அய்யோ அய்யோ.....கிறுக்கு பசங்க....பிள்ளையாருக்கு தலைமாற்றிய பிளாஸ்டிக் சர்ஜன்கள் வாழ்ந்த நாட்டில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம்...பெருமையாக இருக்கின்றது..இப்படிப்பட்ட பிரதமரை பெற்றதற்க்கு......கர் வாப்சி சரி....பைசா வாப்சி எப்ப என்று கேட்கின்றது நம்ம தெலுங்கான சிங்கம்..........இந்திய இறையாண்மைக்கு காவி நிறம் பூச முயலும் இந்த ஒநாய்கள் முகத்தில் கரியை பூசும் காலம் வெகுவிரைவில் இல்லை...இந்திய இஸ்லாமியனாக வாழ்வோம் இந்திய இஸ்லாமியனாக ஈமானுடன் மடிவோம் இன்ஷா அல்லாஹ்

Ebrahim Ansari said...

மாட்டு மூத்திரத்துக்கான கேள்வி கேள்வியோடு நிற்கிறதே பதில் என்ன?

இப்படி இருக்கலாம். .

ஆமாம்! என்ன தவறு? நதிகளில் நீர் இல்லை. உபரியாக நீர் உள்ள மாநிலம் மற்ற மாநிலத்துக்குத் தருவதில்லை. இந்த நதி நீர் வழக்குகளெல்லாம் எப்போது முடிவது? மக்கள் தாகம் தீர்க்க என்ன செய்வார்கள்? கடைசியில் காங்கிரஸ் காரர்கள் மோடி ஆட்சியில் குடிநீர்ப் பஞ்சம் என்று புரளி கிளப்பி அரசியல் செய்வார்கள். இதைத் தீர்க்க ஒரே வழி நமது வீட்டுக் கொல்லைப் புறத்தில் கட்டி இருக்கும் மாடுகளின் கோமியத்தை சேகரித்து குளிரூட்டி "கோவின் " அல்லது " பசு பானம்" ( ஆவின் போல) என்று பெயர்சூட்டி விற்று மக்களின் தாகம் தீர்ப்போம். குடிக்கும் முன்பு தலையில் தெளித்துக் கொள்வோருக்கு சலுகை விலையிலும் கொடுக்கப்படும். இதுவே வளர்ச்சிக்கு வழி.

Ebrahim Ansari said...

இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

மாட்டின் பாலைக் குடிக்கலாம் . கோமியம் குடிக்கக் கூடாதா? இரண்டுமே லிக்விட் பார்மட்டில்தானே இருக்கின்றன?

M.S.முஹம்மது தவ்பிக். #9790282378 said...

இவ்வளவு comedy இருக்கும்போது எப்படி ங்க SILENCE PLEASE ?
ஜோரா ஈஈக்கீது.

Muhammad abubacker ( LMS ) said...

//மாடுகளின் கோமியத்தை சேகரித்து குளிரூட்டி "கோவின் " அல்லது " பசு பானம்" ( ஆவின் போல) என்று பெயர்சூட்டி விற்று மக்களின் தாகம் தீர்ப்போம்//

மாட்டில் பால் கறப்பது தேசத் துரோகம் என்றும் மீறி கறந்தால் ஆயுல் தன்டனை என்று சட்டத்தை போடலையா ?

sabeer.abushahruk said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

இந்த பேட்டியை வாசித்து 'நன்னாருக்கு' என்று கருத்து சொன்ன எல்லோருக்கும் "நெம்ப நன்றிங்ணா"!

அதுக்காக, கருத்து சொல்லாதவங்களுக்கெல்லாம் ஏர் ஆசியா விமான டிக்கட் பரிசாக அனுப்பி வைக்கப் படும் என்று வைய்ய மாட்டோம்.

ஈனா ஆனா காக்கா சொன்ன "கோமியக் கேள்வி பதிலும்' சீஸன்ஸ் காமெடியில் செம்ம கலாய்ப்பாய் இருந்திச்சிப்பா.

மெய்சாவோட கவிதைல நெசமான சமுதாயக் கவலை இருக்குதுப்பா. (மெய்சா, எங்களைப்போல கல்சரா வெரட்டாம சீரியஸா ஒரு கபிதை சொன்னதுக்கு தேங்க்ஸ்பா)

தொடர் எழுத வக்கு இல்லாததாலே இந்த அஜால்குஜால் பேட்டிக்கே நானு தொடரும் போட்டத யாரும் கவனிக்கலையோ! வாணாம்ண்டு எச்சரிக்கை செய்யலையே!!!

(அப்ப அ.நி., தொடர்ந்துடுவோமா?)

sabeer.abushahruk said...

பின் குறிப்பு (பின்னூட்டத்துக்கே பின் குறிப்பா!);

அட, இத விட காமெடியா இந்திந்த மேட்டர் இன்னும் இருக்கேன்னுதோன்றினா செகெண்ட் தாட்டுக்கு இடம் கொடுக்காமல் தேவையான அளவு பினாத்தி எங்களுக்கு அனுப்பினா இதே தொடரில் பதிய உறுதியளிக்கிறோம். காமெடி நெடி செய்தியைவிட சாஸ்தியா இருக்க வோணும்...அம்புட்டுதேன்.!

sabeer.abushahruk said...

அல்லாஹ் அல்லாஹ்,

கேட்க மறந்துட்டேனே,

சீரியஸானப் பதிவுகளுக்கே நக்கலா கருத்திடும் ஃபாரூக் மாமாவுக்கு இது அல்வா ஆச்சே, எங்கே எங்கள் "கிண்டல் கிங்" ஃபாரூக் மாமா? (அப்புறம் "கிண்டல் ப்ரின்ஸ்" ஹமீது?)

நட்சத்திர நகைச்சுவையாளர் ஜாகிர் அம்பியையும் எதிர்பார்த்தேனே... எங்கேடா போய் தொலைஞ்சே?

பதிவுல மேட்டர் இல்லேனாலும் எழுதியவனையாவது கலாய்க்கலாம்ல?

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு