Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

Silence please ! - (ஆங்கில) புத்தாண்டு சிறப்பு பேட்டி - தொடர்கிறது (3) 13

அதிரைநிருபர் பதிப்பகம் | January 08, 2015 | , , , ,

கேப்பையில் நெய் வடியும் பதில்கள் தொடர்கின்றன….

“தமிழ்நாட்டில் 2016ல் உங்கள் ஆட்சிதான் அமையும் என்று முழங்கி வருகிறீர்களே. என்ன வியூகம் வைத்திருக்கிறீர்கள்?”

“கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மோடி அலை அடியோ அடியென்று நாடு முழுக்க அடித்தாலும் தமிழ்நாட்டில் மட்டும் அம்மா புயலால் மோடி அலைக்கு மவுசு இல்லாமல் போய்விட்டது.  இந்தக் கசப்பான உண்மைக்குத் தேன் தருவதுபோல் அமைந்து விட்டது அம்மாவின் சொத்துக் குவிப்பு வழக்கிற்கான தீர்ப்பு.  அது தீர்ப்பல்ல, தீர்த்துக்கட்டிய ஆப்பு.  அதனால், தற்போது தமிழக அரசியலில் ஒரு வெற்றிடம் உருவாகியுள்ளது. அதை நிறப்ப எங்களைப்போன்ற தேசியக் கட்சியால்தான் முடியும்.  கடந்தத் தேர்தலில் ஒரு சாம்ப்பிளுக்காகக் கூட்டணி சேர்த்துக்கொண்ட அல்லக்கைக் கட்சிகளுக்கு ‘கொட்டி அழுதது’ போதும் என்ற முடிவுக்கு வந்து, தமிழ்நாட்டில் தேர்தல் தோல்விக்குத் தார்மீக பொறுப்பேற்றுக் கொள்ளச் சொல்லி கொடுத்த நிதியைத் திருப்பிக் கேட்டோம். ஆனால், அவர்கள் என்ன சூப்பர் ஸ்டாரா, படம் ஓடலேன்னா காசை திருப்பித் தர? மறுத்தது மட்டுமல்லாமல் எங்களைக் கேள்விகள் கேட்டு தர்மசங்கடத்துக்கு உள்ளாக்கி  அவர்களுக்கும் எங்களுக்கும் இனி எந்த காலத்திலும் கூட்டணி கொண்டாட்டம் ஏற்படாத வகையில் கொட்டகையைத் தகர்த்து விட்டார்கள்.

எனவே, எதிர்வரும் 2016 சட்டமன்றத் தேர்தலில் நாங்கள் தனித்தே நின்று, தாய் இல்லாமல் தளர்ந்து போய் நிற்கும் இலைக் கட்சியையும் தகப்பனார் தனயன்கள் சண்டையால் தகர்ந்து மண்ணோடு மண்ணாகக் கல்ந்து விட்ட அஸ்தமன சூரியன் கட்சியையும் இலகுவாகத் தோற்கடிப்போம்.  காங்கிரஸ் என்றொரு புராதனக் கட்சி இருந்ததை மக்களும் மறந்து விட்டிருப்பார்கள்.  மோடி உள்ளிட்ட கட்சித் தலைவர்களை வரவழைத்து நிறைய பொதுக்கூட்டங்கள் நடத்துவோம். சினிமா நடிகைகளை விட்டு ஓட்டு சேகரிப்போம். சு.சாமியை மட்டும் இங்கு அனுப்ப மாட்டோம். ஏனெனில், அவருக்கு ஏர்ப்போர்ட்டில் வைத்து துணியைத் தூக்கிக் காட்டிய மகளிர் அணியை இதுவரை மறக்க முடியவில்லை.  நடு ராத்திரியில் எழுந்து அலங்கமலங்க முழிக்கும் வியாதி இன்னும் அவரை விடவில்லை.  எனவே, அவர் இம்முறை தமிழகத்திற்கு வந்தால் அரவாணிகளைக் கொண்டு திரும்பி நின்று வரவேற்கும் திட்டம் ஆளும் கட்சியிடம் இருப்பதாக உளவுத்துறை செய்திகள் தெரிவிக்கின்றன. அப்படி ஏதும் நடந்தால் அதைத் தாங்கும் சக்தி சு.சாமிக்கு இல்லை. 

இன்னும், வாக்குச்சீட்டின் விலையை இம்முறை ரகசிய ஏல முறையில் தீர்மாணிப்பது என்று உள்கட்சி பேச்சுவார்த்தையில் முடிவெடுத்து இருக்கிறோம். இந்த வியூகங்களைக் கொண்டு வெற்றியை உறுதி செய்து ஆட்சியைக் கைப்பற்றுவோம்.”

"எலெக்ஷனுக்காக மட்டுமே கறிவேப்பிலையைப் போல தமிழக பிராந்தியக் கட்சிகளை உபயோகித்து விட்டுத் தேர்தல் முடிந்ததும் தூக்கிக் கடாசி விட்டதாக ஒரு குற்றச்சாட்டு எழுகிறதே?"

"பிரதான பிராந்திக் கட்சியான... மன்னிக்கவும், சான்ஸ்கிரிட்னா சரளமா பேசிடுவேன், டமிள் பேசும்போதுதான் சற்று டங் ஸ்லிப்பாயிடுது... பிரதான பிராந்தியக் கட்சியான தேதிமுக-வுடனான கூட்டணி தள்ளாடியது உண்மைதான்.  ஆனால், அதற்கு முழுக் காரணமும் அக்கட்சியின் தலைவர் விஜய்காந்த்தான். அவர் பழக்க தோஷத்தில் எங்கள் கட்சி ஆட்களையும் ஆதரவாகப் பேசுவதாகச் சொல்லி படார்னு அடிச்சிடறார். எங்காட்கள் டெல்லிக்கு வந்து அழறாங்க. குவாட்டரும் கோழி பிரியாணியும் குத்தாட்ட நிகழ்ச்சி ஒன்றும் லைவ்வா காட்டி அவர்களைக் கூல் பண்ணி அனுப்பிவிட்டு, "ஏன் அடிச்சீங்க?"ன்னு கேட்டா, "நானா? அடிச்சேனா? மீடியா கிராஃபிக்ஸ்ல காட்றதையெல்லாம் நம்பாதீங்க"ன்றார். கிராஃபிக்ஸ்னா "இவர்களுக்கு முதுகு எப்படி வீங்கியது?" என்னும் கேள்வி, பதில் அளிக்கப்படாமல் இன்னும் நிலுவையில் நிற்கிறது.

இது இப்படி இருக்க, ம.தி.மு.க.க்காரர் 'ஆன்னா ஊன்னா' சென்னைலேர்ந்து கெளம்பி மோடி எங்கிருந்தாலும் தேடி நடையா நடந்தே வந்துட்றார். நாட்டு நலனுக்காக எந்தத் திட்டத்தைச் சொன்னாலும் உடனே எதிர்த்துக் கருப்புக்கொடி காட்டிடறார். அதுக்குத் தோதா எப்போது பார்த்தாலும் தோளில் ஒரு கருப்புத் துண்டை போட்டுக்கிட்டே அலைகிறார். இலங்கையில் நடத்த வேண்டிய கட்சியை இந்தியாவில் நடத்துகிறார். என்னெத்தச் சொல்ல?

அப்புறம் அந்த பா ம க. பணப்பெட்டியைக் கொடுத்ததும் பழக்க தோஷத்தில் படப்பெட்டியைத் தூக்கிட்டு ஓடின மாதிரி ஓடிப்போனவங்கதான். அப்புறம் காணவே இல்லை.

இந்த ‘அண்ட் சோ ஆன்’ புள்ளிகள் மாதிரியான கட்சிகளோடு கூட்டணி வைத்தது நங்கள் செய்த வரலாற்றுப் பிழை.

இனி, நாங்கள் தனித்தே போட்டியிட்டு தமிழகத்தைக் கைப்பற்றுவோம்.

உங்கள் கட்சி மற்றும் உங்களை ரிமோட்டில் இயக்கும் தீவிரவாத் இயக்கங்கள் எதற்கும் தமிழில் பெயர் இல்லாதபோது உங்கள எப்படி தமிழகம் ஆதரிக்கும் என்கிறீர்கள்?”

“குதர்க்கமாகவும் உள்நோக்கோடும் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை என்பதை முதலில் தெளிவு படுத்தி விடுகிறேன்.  எங்களை எந்தத் தீவிரவாத இயக்கமும் இயக்கவில்லை என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவர்.  பாரத்ய ஜனதா பார்ட்டி, ராஷ்ட்ரிய சுயசேவக் சங், பஜ்ரங் தள், விஷ்வ ஹிந்து பரிக்ஷத் போன்றவை மிக சாதுவான இயக்கங்கள்.  இந்த அனைத்து கட்சிகளிலும் தமிழை உயிர் மூச்சாய்க் கொண்ட தமிழர்களே இருக்கும்போது தமிழகம் ஏன் ஏற்காது?  தமிழகத்தின் மகா பிரபலங்கள் கங்கை அமரன், நெப்போலியன் போன்றோர் பாஜகவில் இணைந்ததற்கான காரணம் என்ன என்று நினைக்கிறீர்கள்?  திராவிடக் கட்சிகளில் பல ஒருத்தரை ஒருத்தர் வெட்டிக் கொள்வதாலும், சில டாலர் மற்றும் ஈரோவுக்கு ஆசைப்பட்டு இலங்கையில் அரசியல் நடத்துவதாலும், தமிழ காங்க்ரஸில் இருந்த உருப்படியான ஒரே தலைவர்கூட தன்னோடு சேர்த்து எஞ்சியிருந்த 20,30 காங்க்ரஸ்காரர்களையும் இழுத்துக் கொண்டு தனிக் கட்சி துவங்கிவிட்ட படியாலும் இனி, பாஜக மட்டுமே தமிழர்களுக்கான ஒரே ஆபத்பாந்தவன் என்பதை உணர்ந்துதான் இந்த இரண்டு மெகா ஸ்டார்களும் பாஜகவில் இணைந்தனர் என்பது உல்லங்கை நெல்லிக்கனி.”

“ஆம் ஆத்மி கட்சியைப் பற்றி உங்கள் கருத்து என்ன?”
தொடரும் *ஹிஹி*
சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்

13 Responses So Far:

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

அஸஸுதீன் ஒவய்சி அவர்கள் . தாய் மதமான இஸ்லாத்திற்க்கு வாருங்கள் என மதவாதிகளுக்கு அழைப்பு விடுத்து இருக்கிறாரே இதற்க்கு அவர்களின் கே கேப்பையில் ெநய் வடியும் பதில் என்னவாம்?

sabeer.abushahruk said...

எல் எம் எஸ்,

அஸ்ஸலாமு அலைக்கும்!

"இப்படி ஆளாளுக்குத் தாய் மதம் திரும்பும் கோட்பாட்டைக் கொச்சைப் படுத்துவதால் நாங்கள் அதிலிருந்து மாறுபட்டு மேலும் அடிவேர் வரைச் சென்று எங்கள் கோஷத்தை "அப்பத்தா மதம் திரும்பும்" இயக்கம் என்றோ "அம்மத்தா மதம் திரும்பும்" இயக்கம் என்றோ தீவிரப்படுத்துவோம்.

அதற்கும் போட்டி வந்தால் கற்கால கடவுள் வரை சென்று "ஆதி மதம் திரும்பும்" இயக்கம் என்று அழைத்து அம்மணப் புரட்சி செய்வோம்.

இதன்மூலம் இந்து மதம்தான் இருண்ட பாரதத்தின் மதம் என்பதை ஸ்தாபித்து நாட்டை அறியாமை இருட்டில் மூழ்கடிப்போம்.

sheikdawoodmohamedfarook said...

//சிலடாலர்ஈரோவுக்குஆசைப்பட்டு.....//நாங்கள்ஈரோட்டுபாசறையில்பயிற்சிபெற்றவர்கள் .சிலடாலரானானும்பலடாலர்ஆனாலும் ஈரோwayதான்எங்கள்இலக்கு.

Muhammad abubacker ( LMS ) said...

// அப்பத்தா மதம் திரும்பும்" இயக்கம் என்றோ "அம்மத்தா மதம் திரும்பும்" இயக்கம் //

ஹா ஹா ஹா

இயக்கத்தின் பெயர் நன்னாதான் இருக்கு.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

எப்படிகாக்கா இவ்வ்வ்வ்ளோ நேரம் பொறுமையா பேட்டியெடுத்தீங்க ?

அதிரை.மெய்சா said...

பதவியை தக்க வைத்துக்கொள்ள செய்யும் பகட்டு நாடகம். இதெல்லாம் அரசியல் தந்திரம். மக்களின் மனநிலை சீராக. செம்மையாக இருந்தால்
இத்தகையோர் விலாசம் தெரியால் போய் விடுவர

sabeer.abushahruk said...

அபு இபு,

எனக்குக் காமெடி ரொம்பப் பிடிக்கும்!

Ebrahim Ansari said...

பேட்டியாளர் இன்னும் சில கேள்விகளைக் கேட்பார் என எதிர் பார்க்கிறேன்.

குறிப்பாக

மாட்டுக் கறி சாப்பிடுபவர்களுக்கு மரண தண்டனை
இலங்கை ராஜபக்சேக்கு வாழ்த்துக்கூறி - இப்போ அது ஊத்திக் கொண்டது
இந்துப் பெண்கள் கட்டாயம் ஆளுக்கு நான்கு குழந்தைகள் பெற்றுக் கொள்ளவேண்டும் .
கோட்சே தேச பக்தர்
கல்வி அமைச்சர் இரண்டே நாட்களில் ஏல் பலகலைக் கழகத்தில் பெற்ற பட்டம்
கல்வி அமைச்சரை எதிர்காலப் புரட்சித்தலைவி என்கிறார்களே என்பது பற்றி...
இத்யாதி. இத்யாதி.

பதிவு தூக்கலாக இருக்கிறது.

தம்பி அண்ணனுக்கு ஒரு ஊத்தப்பம். !

Ebrahim Ansari said...

ஆகம விதிகளின் படி- மனு தர்ம விதியின்படி பெண்கள் சாமியார்களாக அக இயலாது.

ஆனால் உமா பாரதி ஒரு பெண் துறவி- ஆனாலும் அமைச்சர்.
நிரஞ்சன் ஜோதி - ஒரு எம்பி

இதுபற்றியும் கேளுங்கள்.

Ebrahim Ansari said...

போகிற போக்கைப் பார்த்தால் இந்தப் பேட்டி தொடர்ந்து கொண்டே போகும். அவ்வளவு கேள்விகள் இருக்கின்றன.

sabeer.abushahruk said...

ஜஸாக்கல்லாஹ் க்ஹைர் காக்கா,

சரி காக்கா. தாங்கள் குறித்துத்தந்துள்ள கேள்விகளையெல்லாம் கேட்போம், இன்ஷா அல்லாஹ்.

ஆனால், அவற்றைப்பற்றி எனக்கு எவ்வளவு தெரியும் என்று தெரியவில்லை.

நீங்கள், ஜாகிர், ஃபாரூக் மாமா, அபு இபு, யாசிர், ஹமீது ஆகியோர் ஆளாளுக்கு ஒரு போர்ஷன் பண்ணித்தந்தால் நான் நன்றியுடையவனாக இருப்பேன். இப்டி தனியா உட்றாதீங்க. பயமா இருக்குல்ல?

(உடல் நலத்தைப் பேணிக் கொள்ளுங்கள்)

sabeer.abushahruk said...

ஆங், சொல்ல மறந்துட்டேன்.

ஊத்தப்பத்திற்கு நன்றி. அப்டியே கொஞ்சம் ஆனியன் தூவச் சொன்னால் இன்னும் தெம்பாயிடுவேன்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு