"ஆம் ஆத்மி கட்சியைப் பற்றி உங்கள் கருத்து என்ன?"
"ஆம் ஆத்மி கட்சி ஓர் ஆறிப்போன ஆனியன் பச்சி! சரக்குக்குத் தொட்டுக்கொள்ளும் சைட் டிஷ்ஷாகத்தான் நாட்டின் 'குடி'மக்கள் அதைப் பார்க்கிறார்கள். அர்விந்த் கெஜ்ரிவால் பெயரில்கூட வாலை ஆட்டாமல் இருக்க கெஜட்டில்கூட அவர் பெயரை 'அறுந்தவால் கெஜ்ரி' என்று மாற்றம் செய்யப் பரிந்துரைக்கப் போகிறோம். காமெடி ட்றாக்குக்குக் க்ளைமாக்ஸில் என்ன வேலை என்பதை அவர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.
ஒரு பெட்டிக்கடை வைக்கப் போதுமான முதலை மட்டும் போட்டு கட்சி ஆரம்பித்தால் இப்படித்தான் ஜாமீன் எடுக்கக்கூட காசில்லாமல் சிறைச்சாலையில் கிடந்து நொந்து நூடுல்ஸ் ஆகி அங்கு கொடுத்தத் தொப்பியைக்கூட விடாமல் லவட்டிக்கொண்டு வந்து கட்சிக்காரர்களிடம் கொடுக்க வேண்டி வரும். ஜனநாயகம் என்பது எவ்வளவு செல்வ செழிப்பான சித்தாந்தம் என்பது பா ஜ கவுக்கு மட்டுமே தெரிந்த மந்திரம்.
தலைநகரை குஜராத்துக்கு மாற்றும் வரைத்திட்டம் தயாரானதும் டெல்லியே 'ச்சப்'பென்று போய்விடும்; ஆம் ஆத்மி எம்மூத்திரம்...ஸாரி எம்மாத்திரம்?
ஃபயர் ப்ரூஃப் ரயில்கள் கோத்ராவில் ஓடும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பதை என் சொந்தக் கருத்தாகப் பதிகிறேன்.
ஜெய் மோடி!
"காங்க்ரஸ்?"
"அது ஒரு காலாவதியாகிப்போனக் கட்சி. 'கட்சியை சீர்படுத்த வேண்டிய தருணம் இது' என்று ப.சிதம்பரம் பேட்டி கொடுக்கிறார். அடிபட்டால் சீர் படுத்தலாம்; வயசாகிப்போனால்? சுயநல அரசியலால் செத்துவிட்டது காங்க்ரஸ். மக்களும் மறந்து விடுவார்கள். க.கெ.பி.சூ.ந.? கல்வெட்டுகளில் மட்டுமே இனி காங்ரஸைப் பார்க்க முடியும்.
அதிலும் தமிழக காங்ரஸ்ஸைப்பற்றிச் சொல்லவே வேண்டாம். ஈவிகேஎஸ் இளங்கோவன்...ஒரு நிமிஷம், அவர்தானே இந்த நிமிடம்வரைத் தலைவர்? ஏன் கேட்கிறேன் என்றால் கோஷ்டிச் சண்டைக்குப் பெயர்போன த.கா. எந்த நேரம் வேண்டுமானாலும் இவர் காலை வாரலாம். மேட்டருக்கு வாறேன். ஈவிகேஎஸ் ஒரு அப்பிராணி. காலைல எழுந்தமா கருத்துச் சொன்னமா கம்பி நீட்டினமா என்று அமைதி அரசியல் செய்பவர். காமராஜர் மந்திரக்கோல் இனி கதைக்காகாது; கருப்பு வெள்ளைப்படம் கலராகாது. தற்காலத்தில் உள்ள தலைவர்கள் பெயரை முன்வைத்து மக்களைச் சந்தித்தாக வேண்டிய கட்டாய தருணம் இது. ஆனால், ஐயகோ அந்த ஆள் வாசனுக்கு காங்ரஸ்மீது என்ன காண்டோ தெரியல, தன் தகப்பனார் வழியான மூப்பனார் வழியில் த.காவை டர்ரென்று கிழித்து த.மா.கவை விட்ட இடத்திலிருந்து மீண்டும் துவக்கி விட்டார். உடனே ஆச்சியைப் பிடிக்க காரைக்குடி போய்விட்டதாக எங்கள் தமிழகத்தின் தலைவி, தலையைச் சரியாக வாரிக்கொள்ளக்கூட நேரமில்லாத அம்மா நம்பர் 2 தமிழிசை சொல்லியிருக்கிறார்கள். டெல்லி ஆட்சிக்கும் காரைக்குடி ஆச்சிக்கும் வித்தியாசம் தெரியாமல் குழம்பும் காங்ரஸ்லாம் ஒரு கட்சியா?"
"பேச்சு பேச்சாக இருக்க சந்தடி சாக்கில் 'தலைநகரைக் குஜராத்துக்கு மாற்றப்போவதாகச் சொன்னீர்களே... என்ன திடீர்னு?"
"நான் அப்படிச் சொல்லவே இல்லை. நீங்கள்தான் தவறாகப் புரிந்து கொண்டீர்கள்.
"ஙே!"
அந்தர் பல்ட்டி பதில்களை அடுத்ததாக வேறு யாராவது தொடருங்களேன், பளீஸ்!
சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்
10 Responses So Far:
இந்த பேட்டியை விட உல்டா லக்கடி வேலைகள் ஒவ்வொரு காவிக் கூட்டம் செய்து வருவதை கண்டு அயர்ந்த மக்கள் இந்தப் பக்கம் வரவில்லை போலும்...
மோடி தமிழில் பொங்கல் வாழ்த்து டிவிட்டினார்னு செய்தி பரபரக்குது...
'கூகிலா'னந்தா தான் ஆசிரமத்தை தொரந்து விட்டிருக்காறே... எம்மொழியும் நம்மொழின்னு சொல்லிக்கலாம்னு !
//தன்தகப்பனார்வழியானமூப்பனார்வழியில்/'' தந்தைகாட்டியவழியம்மா''என்றுபாடிஓட்டுகேக்கலாம்.
பேட்டியாளர்:- காஷ்மீர் தேர்தல் பிரச்சாரத்தின் போது காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து தரும் அரசியல் சட்டத்தின் 370 ஆவது பிரிவை நீக்குவதைப் பற்றி ஒன்றும் பேசவில்லையே!
பதில் :- மறப்பது மனித இயல்பு. அதற்காக ஒரேயடியாக நாங்கள் மறந்துவிட மாட்டோம். தேர்தல் முடிந்து நாங்கள் ஆட்சியில் அமர்ந்தால் இந்தப் பிரச்னை எங்களுக்கு நினைவுக்கு வந்து விடும். ஏதோ நாங்கள் இதை மட்டும் மறந்து விட்டதைப் போல கேள்வி கேட்பதைக் கண்டிக்கிறோம்.
கறுப்புப் பணத்தைக் கண்டு பிடித்து ஆளுக்கு பதினைந்து லட்சம் தருவோம் என்று நாங்கள் கூறியதை மறந்தோமே அதை நீங்கள் நினைவூட்டிநீர்களா?
தமிழக மீனவர்களின் படகுகளை மோடி பதவி ஏற்ற ஐந்தாவது நாளில் கட்டி இழுத்துக் கொண்டு வருவோம் என்று சொன்னோமே அதை நினைவூட்டிநீர்களா?
சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை காங்கிரஸ் கொண்டுவரும்போது பாராளுமன்றத்தை ஸ்தம்பிக்க செய்துவிட்டு நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் அதே சட்டத்தை அவசர சட்டமாக கொண்டு வந்தோமே அதை நினைவூட்டிநீர்களா?
ஏதோ நிருபர் என்பதால் எதை வேண்டுமானாலும் கேட்பீர்களா? எங்களுக்கும் உடம்பில் 98.4 பாரன்ஹீட் சூடு இருப்பதை நீங்கள் உணரவேண்டும்.
இந்தப் பேட்டியை வாரம் ஒரு எழுத்தாளர் தொடரலாமே.
தொடர்வதில் தொடக்கமாக நான் சீட்டுக் குலுக்கிப் போட்டதில் தம்பி ஜாகிர் உடைய பெயர் வருகிறது. அதிலும் தம்பி சபீர் விட்டதை ஜாகிர் தொடர்வது இன்னும் பொருத்தம்.
இந்தப் பேட்டியை வாரம் ஒரு எழுத்தாளர் தொடரலாமே.
தொடர்வதில் தொடக்கமாக நான் சீட்டுக் குலுக்கிப் போட்டதில் தம்பி ஜாகிர் உடைய பெயர் வருகிறது. அதிலும் தம்பி சபீர் விட்டதை ஜாகிர் தொடர்வது இன்னும் பொருத்தம்.
I am ready...but my knowledge on Indian Current politics is very weak...I will try my level best.
நன்றி ஈனா ஆனா கக்கா! (ஜாயிர மாட்டி வுட்டதுக்கு)
"இதுகாறும் என் கேள்விகளுக்கு கச்சாமுச்சானு பதில் தந்தமைக்கு நன்றி. இனி என் சிஷ்யன் கேப்பான். அவன் என்ன மாதிரி அல்ல. மஹாதீர்ட்டயே கேள்வி கேட்டவன். இங்லீஷ்ல கேட்பான் போல தெரியுதே?"
"கேட்கட்டும் தமிழ் எங்களுக்கு தாளிச்ச சுண்டல்னா ஆங்கிலம் எங்களுக்கு அவிச்ச கடல. மலாய் எங்களுக்கு எங்களுக்கு மலாய் ட்டீ. காத்திருக்கிறோம்"
Welcome Arumai Thambi Asaththal Raja Zakir. Thanks for your acceptance .
தமபி ஜாகிர் இந்தியாைவைப் பற்றி தனக்கு தகவல்கள் ஒன்றும் ேவேண்டாம் ேகே ேஜே ேஜேசுதா ஸ் ெமெொழியி்ல் ெசெொல்வதானால் ேமேலும் கீழும் ேகேோடுகள் ேபேோடுஅதுதான் ஓவியம் நி ெசெொன்னால் காவியம்
மெொைபைல் ேபேோன் தமிழ் தட்டச்சு தடுமாறுது
Post a Comment