ஹெச். ராஜாவுடன் பேட்டி...
ஹெச். ராஜா ‘என்ன விசயமா என்னை
பேட்டி எடுக்க வந்திருக்கீங்க" You Tube -ல் அதிகம் விரும்பி
பார்க்கப்பட்ட காமெடியில் H.Raja Comedy இருக்கிறதே
சார்..அது ஒன்னு போதாதா?
ஹெச். ராஜா: அது முஸ்லீம் ஆட்களின்
வேலை... இதற்கெல்லாம் முஸ்லீம்கள் பதில் சொல்லியே
ஆக வேண்டும்."
'சார் இதற்க்கு பதில் சொல்ல வேண்டியதே நீங்க
தான் சார்.'
ஹெச். ராஜா' இந்த பாரதம் ரத்தம்
சிந்தி / உதிரம் சிந்தி / குருதி
சிந்தி சுதந்திரம் அடைந்த நாடு. அதில்
மற்ற மதத்தினர் உரிமை கொண்டாடுவது தவறு.
அது முழுக்க
முழுக்க அண்ணல் காந்தியின் தியாகம்.
காந்தி ஒரு ஹிந்து."
'சரி சார்...காந்தி சுதந்திரம்
வாங்கி தந்தார்...அதற்கு ஏன் சார்
உங்க ஆட்கள் அவரை ஒரு
மிருகத்தை சுடுவது மாதிரி சுட்டுத்தள்ளிய
கோட்சேவுக்கு சிலை வைக்கிறீங்க?...அதையும்
நீங்கள் எல்லாம் ஆதரிக்கிறீர்கள்.? கோட்சே...ஒரு ஆர் எஸ்
ஏஸ் மெம்பர் என்பதால்
கோட்சேவுக்கு இவ்வளவு மரியாதையா?
அடுத்து
ஜாலியன்
வாலாபாக் படுகொலையை
நிகழ்த்திய ஜெனரல் டையருக்கு சிலை
வைப்பீர்களா?..
ஹெச். ராஜா: எங்கள் ஆட்சியில் ஜெனரல்
டையருக்கும் சிலை வைப்போம்.
'சார்... அவன் ஒரு வெள்ளைக்கார
நாய்... நம் நாட்டு சீக்கிய
சகோதரர்களையும் சகோதரிகளையும் ஏறக்குறைய 2000 பேர் [அதில்
ஹிந்து / முஸ்லீம் மக்களும் சேர்ந்திருந்தனர்] ..கொஞ்சம் கூட ஈவு இரக்கமின்றி சுட்டுத்தள்ளப்பட்டனர்.
அத்தனை உயிர்களும் தப்பிக்க நினைத்தும், சுவற்றில் ஏற முயற்சித்த போதும் அனைவரும் பிணமாக
விழுந்தனர்..பிரிட்டீஸ் நாய்களின் துப்பாக்கிக்கு...அந்த கொடுமையை செய்த ஜெனரல் டையருக்கு
சிலை வைப்பீர்களா?...
ஹெச். ராஜா: எங்கள் ஆட்சியில் சிலை வைப்போம்... உங்களுக்கு
என்ன பிரச்சினை... போய் பாருங்கள்...பென்னி குயிக் என்ற வெள்ளைக்காரனுக்கு சிலை வைக்கும்போது
ஜெனரல் டையருக்கு வைத்தால் என்ன...??
பென்னி குயிக்
தனது சொத்து அனைத்தையும் விற்று இந்தியர்கள்... குறிப்பாக தமிழர்கள் விவசாயம் செய்யவும்,
குடிதண்ணீருக்கு கஷ்டப்படாமல் இருக்கவும் அணை கட்டியவர்... அவரைப் போய் ஜெனரல் டையருக்கு
ஒப்பிடுவது எப்படி உங்களால் முடிகிறது..?
ஹெச். ராஜா: நான் எது செய்தாலும் முஸ்லீம்கள் / கிறிஸ்தவர்களுக்கு
பிடிக்காதே..
ஜாலியன் வாலாபாக்
படுகொலையில் நிறைய சீக்கியர்கள் மரணம் அடைந்திருக்கினர்.
ஹெச். ராஜா: ஜாலியன் வாலாபாக்கில் இறந்தது சீக்கியர்கள்
அல்ல.. சீக்கியர்கள் இந்திய விடுதலைக்கு பாடுபடவில்லை.
அப்டீனா... பகத்
சிங் [பஞ்சாப் சிங்கம்] போன்ற விடுதலை வீரர்கள்...??
ஹெச். ராஜா': யோவ் அவன் சீக்கியர் அல்ல... அவன் பெயர் “பகவதி
S/O சிங்காரம்”... எங்க ஊர் பக்கம்தான் அவன்…… சீக்கியர்கள் தனக்கு விளம்பரம் தேடி அப்படி
பெயரை மாற்றிவிட்டனர்.
சரி இதற்கு மேல்
எங்களை கோபாலபுரம் அழைப்பதால் ....கோபாலபுரம் நோக்கி பயணம்.
முன்னால் முதல்வர்
கலைஞர் தனது உடன் பிறப்புக்கு கடிதம் எழுத
பேப்பர் தேடிய நேரம்... நாங்கள் போவதற்கும் சரியாக இருந்தது.
ஐயா... சமீபத்தில்
இலங்கையில் ஆட்சி மாறிய போது தமிழர்கள் இனிமேல் சந்தோசமாக வாழ புதிய ஆட்சி வழிவகுக்க
வேண்டும் என்று சொல்லி இருக்கீங்களே..?
கலைஞர் :நான் சொன்னேன்...என் தமிழ் என்னை சொல்ல
வைத்தது...எங்களுக்கும் இலங்கை தமிழர்களுக்கும் இருக்கும் உறவு...துணிக்கும் / கொடிக்கும்
இருக்கும் உறவு. நரம்புக்கும் சதைக்கும் இருக்கும் உறவு...ஒன்றோடு ஒன்று எப்போதும்
ஒட்டியே இருக்கும்.
அவர்களுக்கு குரல்
கொடுக்க நானும் கழகமும் எப்போதும் முன்னால் நிற்கும்...புறமுதுகு காட்டி ஒடாது.
அப்டீனா முல்லிவாய்க்காலில்
சிங்கள ராணுவம் அப்பாவி இளைஞர்களை சுடும்போது உங்களுக்கு / உங்கள் கழகத்துக்கும் குரல்
கட்டியிருந்துச்சா?
கலைஞர் 'இல்லை...இது சில புல்லுருவிகளின் கூற்று.
நான் அலுவல் காரணமாக தலைநகரம் டெல்லியில் இருந்தேன். அப்போது கழக்கண்மனிகள் கணிமொழிக்கும்
/ அழகிரிக்கும் அமைச்சர் பதவி கிடைக்க வேண்டிய தருணம். அதை தவற விட்டால் தமிழ்நாட்டுத்தமிழர்கள்
சோற்றுக்கு வழியில்லாமல் சோம்பி விடுவார்களே என்ற ஆதங்கம் கழகத்தை இதுவரை காப்பாற்றும்
எனக்கு இருக்காதா?.
சரி ஐயா...இனிமேல்
உங்களின் பணி ஒய்வில் யார் உங்கள் கழகத்தை நடத்தி செல்வார்கள்...?
கலைஞர் :அது நிச்சயம் என் குடும்பத்தில் உள்ளவர்கள்
இருக்க மாட்டார்கள். செயலாளர் ஸ்டாலின் இருக்களாம். முன்னால் அமைச்சர் அழகிரி இருக்களாம்.
முன்னாள் அமைச்சர் தயாநிதி இருக்களாம். ஏன் மகளிருக்கும் ஆட்சி அதிகாரம் உண்டு என்று
குரல் கொடுக்க கனிமொழியே வரலாம். இதில் என் குடும்பம் இல்லை ..பெரியாரும் அண்ணாவும்
கட்டிக்காத்த கொள்கை பிடிப்புள்ள இந்த இளைஞர்களே இனிமேல் தமிழ்நாட்டின் தலைவிதியை மாற்றும்
தன்னிரகரில்லா தலைவர்கள்.
ஸ்ஸப்பா முடியலே...என்று
ஒட்டம் எடுத்தோம்.
விஜய்காந்த் வீட்டுக்கு...
அங்கு போனவுடன்
அவரது மனைவி 'அவர் இப்போது வீட்டில் இல்லை... எதாவது கேள்வி கேட்பதாக இருந்தால் என்னிடமே
கேளுங்கள்...பொதுக்கூட்டங்களில் கூட அதிகம் பாயின்ட் எடுத்துச்சொல்லி நான் தான் பேசுகிறேன்.
என்று சொல்லிக்கொண்டிருக்கும் போது ஒருவர் தடியான உருவத்துடன் கருப்பாக / தலை முடியில்
கலர் "டை"அடித்து கண் சிவக்க
..."டேய் ..எனக்கு தமிழிலில் பிடிக்காத வார்த்தை "கேள்வி"...ஓடிப்போய்டு...இங்கே
ஏன் வந்தே...உனக்கு சம்பளம் தர்ரவன்ட்ட போய் கேள்வி கேளுடா' என்று நாக்கை துறுத்திக்கொண்டு
அடிக்க கையை ஓங்கினார்...
எங்களுக்கு சந்தேகம் தான் விஜய்காந்த் வீட்டில் இல்லை என்று
சொன்னார்களே... இவர் இப்படி விஜய்காந்த் மாதிரி பேசுராறே...ச்சே இருக்காது... உங்களுக்கு
ஏதாவது வெளங்குதா ???
விட்டோம் ஜூட்...
ZAKIR HUSSAIN
7 Responses So Far:
நாங்கள்எப்போதும்முன்னால்நிற்க்கும்புறமுதுகுகாட்டாத புறநானூற்று வரிகளுக்குசொந்தக்காரர்கள்' -இதுமுனா.கானா.சொன்னது
எனது வேண்டுகோளை ஏற்று இந்தப் பேட்டியைத் தொடர்ந்த தம்பி ஜாகிருக்கு நன்றி.
அடுத்த வாரம் யார்? இது கேள்வி!
பதில் : தம்பி அபு இபு ( தானும் எழுதலாம் யாரையும் எழுதவும் சொல்லலாம். )
அதுசரி! தம்பி மன்சூர் எங்கே????????????????????????
//உங்களுக்குஏதாவதுவெளங்குதா?''//மருமகன்ஜாஹிர்கேட்டது. வெளங்குதே!விஜயகாந்தில்ரெண்டுவிஜயகாந்த்உண்டு! போட்ட விஜயகாந்த்.'போடாத'விஜயகாந்த். போட்டவிஜயகாந்திடம் எக்குத்தப்பாகேள்விகேட்டா போட்டுஅனுப்புவார். போடாதவரிடம்கேட்டால்? பதிலைஎன்னால்யூகம்செய்யமுடியவில்லை. மகனைடாக்டராக்கியவர்கள் மட்டுமே விஜயகாந்தை பேட்டிகாணதைரியமாகபோகலாம்.
பேட்டி வெகு ஜோர்!
கிடுக்கிப் பிடி போடும் கேள்விகள்; இடுக்கில் நழுவும் பதில்கள்!
புத்திசாலித்தனமான கேள்விகள்; வித்தியாசமான (விபரீதமான?) பதில்கள்!
ராஜாவிடம் பதில்களை ஸ்டாம்ப் பேப்பரில் எழுதி கையெழுத்து வாங்கி விடுவது நல்லது; இரண்டு சாட்சிகள் அவசியம். இல்லாவிடில் "எப்ப சொன்னேன்" என்று பார்ட்டி எஸ்ஸாயிடும்.
ஆஹா அருமை . எச்ச ராஜா முதல் டும் டும் விசயகாந் வரையிளும் இடையில் குடும்ப அரசியல் தலை கலைக் கட்டுகிறது அ நி தளம்
விஜயகாந்த் 'தட்டுவதற்கு' முன் சாதுர்யமாக வெளியேறிய பேட்டி எடுத்தவருக்குப் பாராட்டுகள். அவரோட லேட்டஸ்ட் அதிரடி அறிவிப்பு:
"நான் குடிப்பதில்லை ஆனால் குடிகாரனைப்போலவே சித்தரிக்கிறது ஊடகம். பப்ளிக்கின் முன்னிலையில் என் லிவரை ட்டெஸ்ட் செய்து பார்க்கட்டும் அப்போது தெரியும் உண்மை. கண்கள் சிவப்பாக இருப்பதற்குக் காரணம் குடியல்ல; உளறல்களுக்குக் காரணம் போதையல்ல; கட்சிக்காரர்களை அடிப்பதற்குக் காரணம் கிக்கல்ல. இது மகளிர்த் திலகம் பிராமலதாவுக்குத் தெரியும்."
Post a Comment