Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

வரலாறுகள்! வழக்குகள்! வல்லரசுகள்! வடிக்கப்படும் இரத்தம்!

பாலஸ்தீனம்...

11

அதிரைநிருபர் பதிப்பகம் | January 17, 2015 | , , ,

தொடர் பகுதி - இருபத்து மூன்று

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் யூதர்களுக்கு இனிப்புப் பொட்டலங்களை வழங்கி ஆசீர்வதித்து - பிரிட்டனுக்கு முதல் உலகப் போரில் வெற்றியைக் கொடுத்து- பால்போர் பிரகடனம் மூலம் ‘கடைத் தேங்காயை எடுத்து வழிப்போக்கருக்கு வழங்கிய’ கதையாக  பாலஸ்தீனை பங்கு வைத்துக் கொள்ளும் உரிமையையும் வழங்கியது. ஆனால் அவர்களின் கரங்களில் இருந்த அந்த மகிழ்ச்சியின் மலர்க் கொத்து வாடும் முன்பே 

“ஆடிய ஆட்டமென்ன ? கூடிய கூட்டமென்ன? தேடிய செல்வமென்ன? திரண்டதோர் சுற்றமென்ன? கூடு விட்டு ஆவி போனால் கூடவே வருவதென்ன?” 

என்றும் 

“இறந்தவனை சுமந்தவனும் இறந்துட்டான் அதை இருப்பவனும் எண்ணிப் பார்க்க மறந்துட்டான்”

 என்றும்

தலையில் அடித்துக் கொண்டு தத்துவப் பாடல்களை பாடவேண்டிய நிலைக்கு யூதர்கள் தள்ளப்பட்டார்கள். அவர்களை அந்தத் தத்துவப்        பாடல்களின் படுகுழியில் தள்ளியவரின் பெயர் அல்டாப் ஹிட்லர். காரணம் யூதர்களுக்கெதிரான இனப் படுகொலை. இதைப் போல ஒரு இனப்படுகொலையை உலகம் அதற்கு முன்பும் அதன் பின்பும் சந்தித்தது இல்லை. 

"ஹோலோகாஸ்ட்" என்று உலக வரலாறு குறிப்பிடும் இந்த இனப் படுகொலை , இரண்டாம் உலகப் போர் தொடங்கும் முன்பே ஹிட்லராலும் ஹிட்லரின் விரல் அசைவுக்கும் கண்ணிமை அசைவுக்கும் காத்திருந்த அவரது நாஜிப் படையினராலும் பல்வேறு பகுதிகளில் படுபாதகமாக அரங்கேற்றப்பட்டது. கிரேக்க மொழியிலிருந்து உருவாகிய ‘ஹோலோகோஸ்ட்’ என்ற சொல்லின் அடிப்படைப் பொருள் ‘தீயில் பலிகொடுத்தல்’ என்பதாகும். இதற்கு யூதர்கள் வைத்த பெயர் ‘ஷோவா’(Shoah). யூத மொழியான ஹீப்ருவில் இதற்குப் ‘பேரழிவு’ என்று பொருள்.

உலகவரலாறு இதற்கு முன் எத்தனையோ இனப்படுகொலைகளை சந்தித்து இருக்கிறது. ஆனால் நிகழ்வுகளைக் கேட்டாலும் படித்தாலும் குலைநடுங்கும் கொலைகள் யூதர்களுக்கெதிராக ஹிட்லரால் நடத்தப்பட்டதே. 

யூதர்களை குடும்பம் குடும்பமாக, கொத்துக் கொத்தாக கொன்று குவிப்பதற்காகவே ஒரு தனி அரசுத் துறையை இராணுவத்தின் பின்னணியில் அமைத்தார் ஹிட்லர். அண்மைக்கால அரசியலில் விஞ்ஞான ரீதியான ஊழல் என்ற ஒரு சொற்றோடரைக் கண்டு வியக்கிறோமல்லவா? அதே போல்  ஒரு இனத்தையே அழிக்கும் செயலை வித்தியாசமாகவும் நவீனமாகவும் இதுவரை யாருமே கையாளாத முறைகளிலும் செய்தான் ஹிட்லர். காரணம் யூதர்கள் மேல் அவ்வளவு வெறுப்பு! அவ்வளவு குரோதம்! அவ்வளவு பழிவாங்கும் உணர்வு! 

‘ஹோலோகோஸ்ட்’டின்போது யூதர்களை மட்டும்தான் ஹிட்லர் கொன்றான் என்பதல்ல. சில வரைமுறையற்ற வாழ்க்கை வாழ்ந்த நாடோடி இனத்தவர்கள், ஓரின சேர்க்கையாளர்கள் என்று அறியப்பட்ட ஆண்பெண்கள் , யெஹோவாவின் சாட்சிகள், உடல் குறைபாடுடையவர்கள், மனநலம் குன்றியவர்கள், நாஜிக்களை எதிர்த்தவர்கள், கம்யூனிஸ்டுகள், சோஷலிஸ்டுகள், தூய்மைக் குறைவானவர்களாகக் கருதப்பட்ட மற்ற இனத்தவர்கள் என்று பலரும் அழித்தொழிக்கப்பட்டனர். ஆனால் மற்றவர்கள் எல்லாம் கண்டதும் கொல்லப்பட்டார்கள். ஆனால் யூதர்கள்தான் சாகும் முன்பு பலவகைகளிலும் சித்திரவதை செய்யப்பட்டு செத்துவிட்டால் கூட பரவாயில்லை என்ற மனநிலைக்குத் தள்ளப்பட்டுக் கொல்லப்பட்டார்கள். 

யூதர்களைத் தனிமைப்படுத்தி, சித்திரவதைப் படுத்தி அதன்பின் அவர்களை அழிப்பதற்கு வசதியாக பல நகரங்களுக்கு வெளியே நூற்றுக் கணக்கான யூதச்சேரிகள் (கெட்டோ) உருவாக்கப்பட்டன. எந்த அடிப்படை வசதியும் இல்லாத நிலையில், விலங்குகளைப் போல யூதர்கள் அங்கே வசிக்கும்படி தள்ளப்பட்டனர். வார்ஸாவில் இருந்த ஒரு யூதச்சேரியில் மட்டும் அதிகபட்சமாக 4,45,000 யூதர்கள் இருந்தார்கள். யூதச்சேரிகளிலிருந்து தினமும் ஆயிரக் கணக்கான யூதர்கள் வதை முகாம்களுக்கும் கொலை முகாம்களுக்கும் அனுப்பப்பட்டனர். அதிகபட்சம் 100 பேர் இருக்கக்கூடிய ரயில் பெட்டியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை ஏற்றி அனுப்பினார்கள். இதனால், பெரும்பாலானோர் கொலை முகாம்களை அடையும் முன்னரே இரயில் பேட்டியின் நெருக்கடியில் சிக்கி இறந்துபோனார்கள்.

மொத்தம் ஆறு இடங்களில் கொலை முகாம்கள் நிறுவப்பட்டன. யூதர்களை அழித்தொழிப்பதற்காக எத்தனையோ கொலை முறைகள் நவீனமாகக் கண்டுபிடிக்கப்பட்டன. நம்பவே முடியாத அளவுக்கு மனித குலத்தின் ஒரு இனத்தை அழிப்பாதற்கு கருவிகளைக் கண்டுபிடித்தது ஹிட்லரின் இராஜ்ஜியம். அந்தக் கருவிகளின் சோதனைக்கூடங்கள்தான் கொலை முகாம்கள். போலந்து பகுதியில் இருந்த ஆஷ்விட்ஸ் கொலை முகாம்தான் மிகப் பெரியதாம். இங்கே மட்டும் 11 லட்சம் யூதர்கள் படுகொலை செய்யப்பட்டனர் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

வதை முகாம்கள் என்று பெயரிட்டு அழைக்கப்பட்டாலும் அவற்றில் உடலுழைப்பு முகாம்கள், படுகொலை முகாம்கள், போர்க் கைதிகளுக்கான முகாம்கள், இடைத்தங்கல் முகாம்கள் என்று பல வகைகள் இருந்தன. உடலுழைப்பு முகாம்களுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களைக் கொண்டு மிகமிகக் கடினமான பணிகள் செய்விக்கப்பட்டன.

தங்களின் கண் முன்னே வதைக்கப்படும் யூதர்களைப் பார்த்துக் கொண்டிருந்த வதை முகாம்களில் வைக்கபட்டிருந்த யூதர்கள் சாவதற்கு தங்களின் வரிசை எண் எப்போது வருமென்று தவமிருந்தார்கள் என்று சொல்ல வேண்டும். சாவதை ஒரு வரமாக வேண்டிக் கொண்டிருந்த சமுதாயம் உலக சரித்திரத்தில் யூத சமுதாயமாகத்தான் இருக்க இயலும். 

பொழுதுபோக்குபோல யூதர்களை நாஜிக்கள் கொன்றனர். எலிகள், கரப்பான்பூச்சிகள் போன்றவற்றை அறுத்து ஆய்வகங்களில் அறிவியல் சோதனை நடத்துவதைப் போல யூதர்களை, குறிப்பாக யூதக் கர்ப்பிணிகளையும் குழந்தைகளையும் வைத்து ஜெர்மனி மருத்துவர்கள் நடத்திய மருத்துவ ஆய்வுகள்தான் கொடூரத்தின் உச்சம். மயக்க மருந்தே கொடுக்காமல் யூதர்கள் கோழியை அறுப்பது போல் விதவிதமாக அறுத்துப் பரிசோதிக்கப்பட்டனர். ஜெர்மானிய இனத்தின் மக்கள்தொகையை அதிகப்படுத்தும் வழிமுறையைக் கண்டறிய யூத இரட்டைக் குழந்தைகளை வைத்து டாக்டர் ஜோசஃப் மெங்கெலே நடத்திய பரிசோதனைகள்தான் மிகவும் கொடூரம். அது மட்டுமன்றி, யூதர்களுடைய உடல்நிலை, மனநலம் போன்றவற்றின் அடிப்படையில் அவர்களை இனம் பிரித்து உடலுழைப்பு முகாமுக்கும், விஷவாயு அறைக்கும் அனுப்பும் மருத்துவர்கள் குழுவைச் சேர்ந்தவர் அவர். 

நாஜிக்களின் கொலை முகாம்களுக்குக் கொண்டுசெல்லப்படுபவர்களுக்குத் தாங்கள் எங்கே கொண்டுசெல்லப்படுகிறோம் என்றே தெரியாது. ஷவரில் குளிப்பாட்டப்போகிறோம், எல்லோரும் ஆடைகளை அவிழ்த்துப் போடுங்கள் என்று சொல்லிவிட்டு, அவர்களை நாஜிப் படையினர் ஒரு அறைக்கு நிர்வாணமாக அழைத்துச்செல்வார்கள். அது குளியலறையல்ல. நச்சு வாயு அறை. இன்றைக்கும் வரலாற்றுச் சின்னமாக அந்த அறையின் சுவர்கள் ஆஷ்விட்ஸ் என்ற ஜெர்மனியின் ஒரு ஊரில்  சாட்சி பகர்ந்து கொண்டிருக்கின்றன. நினைத்தாலே இதயம் நடுங்குகிறது. தங்கள் மீது ஷவர்க் குழாய்களிருந்து திறந்து விடப்பட்ட கார்பன் மோனோ ஆக்சைடு என்கிற விஷக்காற்றின்  துன்பம் தாங்க இயலாமல் தாங்கள் அடைக்கப்பட்ட அறையின் சுவர்களை ஒட்டிக் கொண்டு, தங்களின் நகங்களால் சுரண்டிய அந்த கீறல்கள் இன்றும் அங்கே கோடுகளாக காட்சியளித்து நமது இரத்தத்தை உறைய வைக்கின்றன. நச்சுவாயு செலுத்தப்பட்டு மூச்சுத் திணறியபோது உயிருக்குப் போராடிய யூதர்களின் பிறாண்டல்களைத்தான் பேரழிவின் சாட்சியமாக அந்தச் சுவர் சுமந்திருக்கிறது. குழந்தைகள், முதியவர்கள், பெண்கள், ஆண்கள், என்று சிறிய, பெரிய, மத்திய, தளர்ந்த விரல்களின் பிராண்டல் ரேகைகள் அந்த சுவற்றில் உள்ளன. இதை ஹிட்லரின் T4 Action என்று குறிப்பிடுகிறார்கள். 

ஹிட்லர் மேற்கொண்ட யூத இன அழித்தொழிப்பை எத்தகைய மொழியில் எழுதினாலும் அந்த நிகழ்வை வர்ணிக்க இயலாது. மீன் தொட்டிகளில் ஓடி விளையாடும் மீன் குஞ்சுகளுக்கு இரைபோட்டு வேடிக்கை பார்ப்பது போல் யூதர்களை கொன்று குவித்த நிகழ்வுகளை விளையாட்டைப் போல் பார்த்து ரசித்த வக்கிரத்தின் வெளிப்பாடு அது. நாய்க்குட்டிகளுக்கு கடற்கரைகளில் கால்பந்துகளை தூக்கிப் போட்டு அவற்றை அது ஓடிப்போய் எடுத்து வருவதை ரசிப்பது போல் உயிர்வதைகளை கைதட்டி ரசித்த கொடூரத்தின் உச்ச நிலை அது.

ஆணா ,பெண்ணா, குழந்தையா, வயோதிகரா , அறிஞரா, வித்தகரா, விஞ்ஞானியா என்ற எவ்விதப் பாகுபாடும் பார்க்காமல் யூதர் என்ற ஒரே ஒரு பிறப்புத் தகுதி இருந்தால் அவர்கள் அழித்தொழிக்கப்பட்டனர். அழிக்கபட்டவர்களின் கதறல் ஓசையும் அழித்தவர்களின் சிரிப்பொலியும் வானில் முட்டி மோதி எதிரொலித்தது.

கொன்று குவிப்பதில்தான் எத்தனை வகை? கைகால்களை வெட்டுவது, மதுரைவீரன் ஸ்டைலில் மாறுகால் மாறுகை வாங்குவது, குடலை உருவிக் கீழே சரியவிடுவது, விழுந்த குடலைப் பிரித்து அளந்து வேடிக்கை பார்ப்பது, விரல்களை வெட்டுவது, விழியைத் தோண்டுவது, நகக்கண்களில் நச்சு ஊசி போடுவது, தலையை முண்டமாக்கி உடல்மட்டும் துடிப்பதை அருகில் அடைபட்டுக் கிடக்கும் அடுத்து வரிசையில் நிற்போருக்கு அதைக் காட்சியாகக் காட்டி மகிழ்வது, விஷவாயு செலுத்தி மூச்சுத்திணற வைப்பது , ரம்பம், கோடாலி, சிறுகத்தி ஆகியவைகளைக் கொண்டு உடலின் உணர்வுமிக்க பாகங்களை அறுப்பது, தோலை உரிப்பது, நிர்வாணப்படுத்தி கொதிக்கும் வெந்நீர்த்தொட்டியில் குப்புறக் குதிக்கச் செய்வது, எரிபொருள் கொண்டு எரித்து விடுவது என்று கொடுமைகளை குரூரமாக ஏவி விட்ட பிறகே யூதர்கள் கொல்லபட்டார்கள் என்று எல்லா வரலாற்று ஆசிரியர்களும் குறிப்பிடுகிறார்கள். 

குழந்தைகளை வானத்தில் தூக்கிப் போட்டு அவர்கள் கீழ் நோக்கி வருவதற்குள் ஏழெட்டு குண்டுகள் அவர்களது உடலைப் பதம் பார்த்து இருக்கும் என்கிற ஒரு செயலே நாஜிக்களின் குரூரத்தின் கோர முகம். இதற்கு மேல் இதற்கு உதாரணம் சொல்ல வேண்டியதே இல்லை. இப்படி கொல்லப்பட்டவர்கள் காணாமல் போனவர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டது இன்னுமொரு அநியாயம்.  

நாஜிப் படையினர் ஊரை சுற்றிப் பார்க்கும்போது கண்ணில் படும் எவரையும் நிறுத்தி நீ யார் என்று கேட்டு அவன் ஒரு யூதன் என்று கூறிவிட்டால் போதும் அவனுக்கு உடனே வழங்கப்பட்டது துப்பாக்கி குண்டுகளால் துளைக்கப்படும் மரணப்பரிசுதான். என்னை ஏன் சுடப் போகிறீர்கள்? என்று எவராவது கேட்டால் போதும் நீ யூதனாக, ‘ ஏன் பிறந்தாய் மகனே! ஏன்பிறந்தாயோ! ‘ என்று நாஜி இராணுவம் முகாரி ராகம் இசைத்துக் கொண்டே யூதர்களின் மூச்சை நிறுத்தியது.  

உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு யூதர்கள் ஓடினார்கள் ஓடினார்கள் வாழ்க்கையின் ஓரத்துக்கே ஓடினார்கள். . அந்த ஓரத்திலும் அவர்களை வரவேற்றது நாஜிப் படையின் துப்பாக்கி முனைகளே. அதையும் மீறி , அவர்கள் ஓடிய பாதையெங்கும் இருந்த கட்டிடங்களின் மாடிகளில் காத்திருந்த நாஜிப்படை, யூதர்கள் கிட்டே நெருங்கும்போது அவர்களை சுட்டு வீழ்த்தினார்கள். அதிகபட்சமாக போலந்தின் சாலைகள் ரத்தக் கண்மாய்கள் ஆக மாறின . சாலைகளில் வேகத்தடைகள் போல ஆங்காங்கே எடுத்துப் புதைப்பாரின்றி யூத உடல்கள் சிதறிக்கிடந்தன. இந்தப் படுகொலைகளைப் பார்த்து அந்த பிணங்களை நெருங்கிக் கொத்தித் தின்பதற்குக் கூட பயந்துகொண்டு நாய்களும் நரிகளும் வல்லூறுகளும்கூட அந்தப் பகுதிகளுக்குள் நுழைய அஞ்சின என்று எழுதுகிறார்கள் வரலாற்றாசிரியர்கள். 

இவ்வளவு கொடுமைகளும் ஹிட்லர்தான் இனி ஐரோப்பாவின் அரசன் என்கிற மத மதப்பில் அவரது நாஜிப் படைகள் நடத்திய அட்டூழியங்களின் அடையாளங்கள் ஆகும். இரண்டாம் உலகப் போர் தொடங்கும் முன்பே யூதர்களின் மீது கட்டவிழ்த்து விடப்பட இந்தக் காட்டாட்சி தர்பார் இரண்டாம் உலகப் போரின் தொடக்கம் முதல் நிறைவு வரை ஹிட்லர் வென்ற நாடுகள் அனைத்திலும் இருந்த யூதர்களின் மீதும் பாய்ந்து பாய்ந்து அவர்களை படுகொலை செய்தது. 

முதல் உலகப் போரில் ஜெர்மன் பெற்ற தோல்விக்கு பழி தீர்க்கவும் உலகில் தனது சர்வாதிகார ஆட்சியை உருவாக்க வேண்டுமென்ற ஹிட்லரின் பேராசையே இரண்டாம் உலகப் போருக்கு அடிப்படையான காரணம். இந்த நோக்கத்துக்கு உலகெங்கும் இடையூறாக இருந்தவர்கள் யூதர்கள் என்ற கோபத்தில்தான் யூதர்கள் இரக்கமின்றி கொல்லப்பட்டார்கள். இவ்வளவு யூதர்களைக் கொன்ற பிறகும் ஹிட்லர் சொன்னது , “ யூதர்கள் எப்படிப் பட்டவர்கள் என்பதை உலகம் உணர்ந்து கொள்ளவே சில யூதர்களை விட்டு வைத்து இருக்கிறேன் . நான் இவர்களைக் கொன்றது நியாயம்தான் என்பதை எதிர்கால உலகம் ஏற்றுக் கொள்ளும் “ என்று கூறினார். அண்மைக்கால உலக சரித்திரம் ஹிட்லரின் வார்த்தைகளை மெய்ப்பிக்கின்றன. இறைவன் நாடினால், அவற்றைப் பின்னர் பார்க்கலாம்.  

செப்டம்பர் 1, 1939ல் ஜெர்மனியின் நாஜிப் படைகள் போலந்து மீது எடுத்த படையெடுப்புடன்  இரண்டாம் உலகப்போர் துவங்கியது. 

ஒரு அணியில் பிரிட்டனும் அதன் பேரரசில் இடம் பெற்றிருந்த நாடுகளும் பிரான்சு ஆகியவை நேச நாடுகள் என்ற பெயருடனும் . மறு அணியில்ஜெர்மனியின் நாசி மற்றும் பாசிசத்தின் பயிரை வளர்த்த இத்தாலி ஆகியவை சேர்ந்து அச்சு நாடுகள் என்ற பெயருடனும் முட்டி மோதி நின்றன. 

1942 வரை அச்சு நாடுகளுக்குச் சாதகமாக இருந்த போரின் நிலவரம், பின்னர் நேரெதிராக மாறியது.  மே 1945ல் ஜெர்மனியின் சரணடைவுடன் ஐரோப்பாவில் இரண்டாம் உலகப்போர் முடிவடைந்தது. ஹிட்லர் தற்கொலை செய்துகொண்டார். 1943-45 காலகட்டத்தில் பசிபிக் பெருங்கடலின் தீவுக்கூட்டங்களைக் கைப்பற்றி, ஜப்பானியத் தீவுகளை நோக்கி முன்னேறிய அமெரிக்கா, ஆகஸ்ட் 1945ல் ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி நகரங்கள்மீது கொடிய அணுகுண்டுகளை வீசியது. மீண்டும் மனிதகுலத்தின்  மறக்கமுடியாத  பேரழிவு. இதன் விளைவாக ஜப்பானும் சரணடைந்து இரண்டாம் உலகப் போர் எல்லா இடங்களிலும் முடிவடைந்தது.

போர் முடிவுக்கு வரும்போது மொத்தம் 60 லட்சம் யூதர்கள் கொல்லப்பட்டிருந்தனர். அதாவது, ஐரோப்பாவில் இருந்த யூதர்கள் மூன்றில் இரண்டு என்ற வீதத்தில் கொல்லப்பட்டிருந்தனர். இதில் குழந்தைகளின் எண்ணிக்கை மட்டும் 11 லட்சம். யூதர்களைத் தவிர, நாஜிக்களால் கொல்லப்பட்ட பிறரின் எண்ணிக்கை 50 லட்சம். போர் முடிவுக்கு வருவதற்குள் ஒட்டுமொத்த உலகையே கொலை முகாமாக்கிவிட்டிருந்தனர் நாஜிக்கள். இவ்வளவு பேரழிவை நாஜிக்கள் நிகழ்த்தியபோது பாராமுகமாக இருந்ததன் குற்றவுணர்விலிருந்து ஜெர்மானிய மக்களால் இன்றுவரை விடுபட முடியவில்லை. 

அதுபோலவே பெரும் துயரம் எதுவென்றால், மனித குலத்தின் மோசமான அழிவை சந்தித்த யூதர்கள், தாங்களும் இன்னொரு இனத்தை அழிக்கும் ஒரு பேரழிவில் ஈடுபட்டு வருவதுதான்.

இப்போரின் விளைவாக உலக அரசியலில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டன. ஐரோப்பிய காலனிய பேரரசுகள் தங்கள் வல்லமையை இழந்தன; அமெரிக்காவும், சோவியத் ஒன்றியமும் பிரிட்டனைப் பின்தள்ளிவிட்டு உலகின் புதிய வல்லரசுகளாயின உலக அமைதிக்காகச் செயல்பட ஐக்கிய நாடுகள் அமைப்பு ( United Nations ) உருவாக்கப்பட்டது.

1947ஆம் ஆண்டு நவம்பர் 29 அன்று இரண்டாம் உலகப்போர் ஈன்றெடுத்த ஐ.நா. பொதுச்சபையில் வல்லரசுகளின் வற்புறுத்தலால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி இரு தற்காலிக, யூத, அரபு அரசுகள் உருவாக்கப்பட்டன. 

1948 ஆம் ஆண்டு மே 14 ஆம் தேதி அன்று இஸ்ரேல் என்ற ஒரு தனிநாடு அமையப்பெற்று தனது தனிநாடு சுதந்திரப் பிரகடனத்தை வெளியிட்டது. பல ஆண்டுகள் போராடி இறுதியில் இரத்தச் சகதிகளுக்கிடையில் இஸ்ரேல் உருவானது. அரபு வம்சாவழியினர் சொந்த பூமியில் தங்களின் கண்களைக் கசக்கிக் கொண்டு நின்றார்கள். அவர்களின் காலடி மண் அவர்கள் கண்டுகொண்டிருக்கும்போதே களவாடப்பட்டது. 

இஸ்ரேல் உருவானாலும் வடிக்கப்படும் இரத்தம் இன்றும் அந்த பூமியில் வடிந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் இப்போது இரத்தம் வடிப்பவர்கள் பாலஸ்தீனர்கள். 

இன்ஷா அல்லாஹ் இனி அந்தப் போர்களையும் போராட்டங்களையும் காணலாம்.

இபுராஹீம் அன்சாரி

11 Responses So Far:

Muhammad abubacker ( LMS ) said...

பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கம் அதன் நிழலில் பாலஸ்தின நம் இஸ்லாமிய மக்கள்.மனித உயிரை வேட்டையாடும் மிருக ஜாதி யூத வந்தேரிகளால் அவதிப்படுகிறார்கள்

Ebrahim Ansari said...

தம்பி எல் எம் எஸ்
தங்களின் முதல் கருத்துக்கு நன்றி

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

ஒரு இனம் அவர்கள் செய்த காரியங்களால் இன்றளவும் சபிக்கப்பட்ட வர்களாகவே இருக்கிரார்கள்.

பயங்கரவாத எதிர்ப்பு பேரணியில் இஸ்ரேல் நாட்டு மொதலாளி தேர்தல் பிரச்சாரம் செய்ய வந்தது போன்று இருந்ததாக பிரான்ஸ் அதிருப்தியை காட்டியிருக்கிறது.

யார் செய்த திட்டமோ அந்த தாக்குதல், அதன் பின்னர் அல்லாஹ்வின் நாட்டப்படி மனமாற்றங்கள் நிகழ்வதை கண்டு மேற்குலகம் புருவம் மட்டும் உயர்த்தவில்லை தங்களை இருண்ட அறிவையும் வெளிச்சத்துக்கு கொண்டு வர தயாராகின்றனர்.

இந்த தொடர்... காலத்திற்கு ஏற்ற சுடர் !

sabeer.abushahruk said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அன்பிற்குரிய காக்கா,

ஆஹா! என்ன ஒரு விறுவிறுப்பு என்ன ஒரு வேகம் ! திரைப்படங்களின் ட்ரைலர்களைப் போல ஒரு வரியைக் கூட 'ஜஸ்ட் லைக் தட்' கடக்கவிடாமல் கட்டிப்போட்டு விடுகிறது எழுத்து!

மாஷா அல்லாஹ்!

உலகப்போர்களைப் பற்றிய ட்ரைலரே இப்படி என்றால், நீங்கள் எழுதப்போகும் மெய்ன் பிக்ச்சர் எப்படி இருக்கும்! (ஞாபகம் இருக்குல்ல காக்கா? எனக்காக எழுதுகிறேன் என்று சொல்லி இருக்கிறீர்கள்)

அதிரையர்களின் அறிவை உலகளவில் விருத்தி செய்ய உதவும் தங்கள் கட்டுரைகள் வாழ்க!

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, காக்கா!

sabeer.abushahruk said...

ஹிட்லரைக் கொடுங்கோலன் என்று வர்ணிக்கிறார்களே. கொடியவர்களை/காட்டிக் கொடுத்தவர்களை/துரோகிகளை அழித்தவர் எப்படி கொடுங்கோலர் ஆவார்?

//இவ்வளவு யூதர்களைக் கொன்ற பிறகும் ஹிட்லர் சொன்னது , “ யூதர்கள் எப்படிப் பட்டவர்கள் என்பதை உலகம் உணர்ந்து கொள்ளவே சில யூதர்களை விட்டு வைத்து இருக்கிறேன் . நான் இவர்களைக் கொன்றது நியாயம்தான் என்பதை எதிர்கால உலகம் ஏற்றுக் கொள்ளும் “ என்று கூறினார். அண்மைக்கால உலக சரித்திரம் ஹிட்லரின் வார்த்தைகளை மெய்ப்பிக்கின்றன. இறைவன் நாடினால், அவற்றைப் பின்னர் பார்க்கலாம். //

இன்ஷா அல்லாஹ், பார்க்கலாம்.

ஹிட்லரின் அனுமானம் 100க்கு 100 சதவிகிதம் உண்மைதான். இந்த யூதர்கள் அவர்கள் இனத்தை அழித்த நாட்டுடன் அல்லவா போரிட வேண்டும்? அதற்கு ஆண்மையில்லாமல் நிராயுதபாணியாக நிற்கும் பாலஸ்தீனருடன் போரிடுவது அநியாயம். இவர்களுக்காக இன்னொரு ஹிட்லரை இறைவன் படைக்க வேண்டும்.

sabeer.abushahruk said...

//பால்போர் பிரகடனம் மூலம் ‘கடைத் தேங்காயை எடுத்து வழிப்போக்கருக்கு வழங்கிய’ கதையாக//

ஹாஹா... காக்கா கண்டு பிடிச்சிட்டேன். பழமொழி புதுமொழியாகியிருப்பதன் காரணத்தை. எனக்கு பழையதைவிட இந்த புதுமொழிதான் பிடித்திருக்கிறது. இதுதான் யாவருக்கும் பொருந்தும். நானும் இனி இப்படித்தான் எழுதப்போகிறேன்.

இந்த புதுமொழியைக் கண்டறிய மறைமுகமாக உதவிய தம்பி இப்னு அப்துர்ரஸாக்குக்கும் நன்றி.

Yasir said...

கருவருக்கப்பட்ட ஒரு இனம் இன்னொரு இனத்தை கருவருக்க நினைப்பது அவர்களின் கொடுரத்தன்மையைக் காட்டுகின்றது....குழந்தைகள் பெண்கள் பாரமல் பாஸ்பரஸ் குண்டு போட்டு அழிக்கும் ஆணவத்தனம் மிக்க இந்த இஸ்ரேல் அழியும் காலம் விரைவில் வரும்....உங்களின் உழைப்பை இந்தக் கட்டுரை பிரதிபலிக்கின்றது

Ebrahim Ansari said...

Thambi Sabeer!

Wa Alaikkumussalam.

Hahhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhha

There you are. Exactly. I agree with you. - Coconut matter.

Ebrahim Ansari said...

Thanks for every one for their encouraging comments

இப்னு அப்துல் ரஜாக் said...

ஷிர்க்கான பொய்யான போலி தெய்வ பழ மொழிகளை நீக்கி விட்டு,அதை புது மொழியாக்கி தந்த விதம் மிக அருமை.எல்லாம் வல்ல அல்லாஹ் உங்கள் பாவங்கள் போக்கி ,மேன் மேலும் பறக்கத் செய்வானாக,ஜன்னத்துள் பிர்த்தௌஸ் தருவானாக.இதே போன்று,இன்னும் நீங்கள் தர வேண்டும்.

காக்கா,உங்கள் கட்டுரை மூலம் நிறைய விஷயங்களை அறிய முடிகிறது.மூக்கில் விரல் வைக்க வைக்கிறது.இப்படியெல்லாம் நடந்துள்ளதே என்று மலைக்க வைக்கிறது.அதே சமயம்,அந்த யூதர்கள் நம் முஸ்லிம்களின் நிலங்களைப் பறித்துக் கொண்டு,தினம் தினம் நம் சொந்த பந்தங்களை கொன்று குவித்து வருவது கடும் வேதனையும்,உலக நாடுகள் அதைக் கண்டு கொள்ளாமல் இருப்பதும் தொடர்ந்து கொண்டு உள்ளது.அல்லாஹ் அதற்கு ஒரு நல்ல முடிவு வைத்தே இருப்பான்.இறுதி வெற்றி முஸ்லிம்களுக்கே என்பது நமக்கு குர்ஆன் மற்றும் ஹதீஸ் சுட்டும் உண்மையாகும்.

காக்கா,இன்னொன்று கேள்விப்பட்டேன்,சில வரலாறுகளிலும் உள்ளதாக அறிகின்றேன்.

அதாவது,"ஹிட்லரால் யூதர்கள் கொல்லப்பட்டாலும்,இப்படி 60 லட்சம் 50 லட்சம் பேர்கள் கொல்லப்பட்டார்கள் என்று சொல்வது,யூதர்கள் கட்டி விட்ட கதை என்றும்,ஏனெனில் உலக நாடுகளிடம் அனுதாபம் பெறவே என்பதும் ஒரு தியரி.மேலும்,உண்மையில் கொல்லப்பது 3 லட்சத்துக்குள் தான் என்பதும் அதன் சாரம்.

இது பற்றிய செய்தி அறிந்து கொள்ள விரும்புகிறேன்.

மேலும்,உங்கள் இத் தொடர்,இன்ஷா அல்லாஹ் தமிழிலும்,ஆங்கிலத்திலும் மொழி பெயர்க் கப்பட்டு,எல்லா புத்தக நிறுவனங்கள் மூலமும்,சென்னை புத்தக கண்காட்சி,பிரகதி மைதான் டெல்லி புத்தக கண் காட்சியிலும் உலக புத்தக கண் காட்சி ஹாங்காங் கிழும் விற்பனைக்கு வர வேண்டும்.இது அவா மட்டுமல்ல,என் துவாவும் கூட.

உங்கள் இந்த புத்தகம் மூலம் யூதர்களின் உண்மை முகம் உலகம் எல்லாம் தெரிய வேண்டும் இன்ஷா அல்லாஹ்.

அல்லாஹ் உங்களுக்கு அருள் புரியட்டும்,காக்கா

Ebrahim Ansari said...

அன்பின் தம்பி இப்னு அப்துல் ரெஜாக் அவர்களுக்கு,

தங்களின் அன்பான கருத்துகளுக்கும் துஆவுக்கும் ஜசாக் அல்லாஹ் ஹைரன்.

நீங்கள் குறிப்பிட்டு இருப்பது போல் யூதர்கள் கொல்லப்பட்டதன் எண்ணிக்கை மிகைப் படுத்தப்பட்டு இருக்கலாம். ஆனால் இவ்வளவு வித்தியாசமாக இருக்க வாய்ப்பில்லை என்பது ஹிட்லர் எழுதிய சுய சரிதை மூலமும் யூதர்கள் கொல்லப்பட்ட இரயில் பெட்டி மற்றும் வதை முகாம்களில் குவிந்து கிடந்த அவர்களின் உடல்களின் ஆதாரங்கள் மூலமும் பல்வேறு நாட்டு வரலாற்று ஆசிரியர்களாலும் குறிப்பிட்டு உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. வரலாற்றுச் செய்திகள் ஆதாரங்களின் அடிப்படையிலேயே பதியபடுகின்றன. அனுதாப அலை அடிப்பதற்காக யூதர்கள் இதை பெரிதுபடுத்தி பூதாகரமாக்கியதும் உண்மைதான் என்று கருத்து நிலவக் காரணம் இவர்கள் எதையும் தங்களுக்கு சாதகமாகத் திருப்பிவிட முயற்சிப்பார்கள் என்ற பொதுவான அனுமான அடிப்படையிலேயே . அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

நீங்கள் குறிப்பிட்டு இருப்பது போல் இறுதி வெற்றி முஸ்லிம்களுக்கே என்பதை நான் ஏற்கனவே குறிப்பிட்டு இருக்கிறேன். இன்ஷா அல்லாஹ் அடுத்த அத்தியாயம் அது பற்றிய ஒரு சிறு முன்னோட்ட விளக்கமாகவும் இருக்கும்.

அடுத்த அத்தியாயத்தை தாங்கள் படித்து கருத்திட வேண்டுகிறேன்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு