Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

வரலாறுகள்! வழக்குகள்! வல்லரசுகள்! வடிக்கப்படும் இரத்தம்!

பாலஸ்தீனம்...

28

அதிரைநிருபர் பதிப்பகம் | December 20, 2014 | , , ,

தொடர் : பகுதி  இருபத்தி ஒன்று

முதல் உலகப்போர் என்று வரலாறு சித்தரிக்கும்  போர், வெளிப்படையாகப் பார்க்கப் போனால், ஐரோப்பிய நாடுகளுக்கிடையே நடைபெற்ற போர்தான். விதிவிலக்காக, ஜப்பானும் அமெரிக்காவும் இந்தப் போரில் ஊறுகாய் அளவுக்கே கலந்து கொண்டன. இந்தப் போருக்குப் பிறகு நடந்த இரண்டாம் உலகப் போர்தான் உண்மையிலேயே உலகப் போர். இரண்டாம் உலகப் போர் பற்றி பிறகு பார்க்கலாம். இப்போது , முதல் உலகப் போர்க்கள சந்தையில் இந்தத் தொடரோடு தொடர்புடைய யூதர்களும் துருக்கியர்களும் விரித்து வைத்த கடைகளின் பக்கம்  ஒரு சுற்று சுற்றி வரலாம்.  

முதல் உலகப் போர் சந்தையில் பல நாடுகள் கடை விரித்து வைத்திருக்கின்றன. ஆனால் நமது தலைப்பின் பேசுபொருளை மையப்படுத்தும் சரக்குகளை மட்டுமே நாம் வாங்கி வரலாம்.

முதல் உலகப்போர், 1914 ஆம் ஆண்டு முதல்  1918 வரை நான்கு ஆண்டுகள் நடந்தது.

இந்தப் போர் பிரிட்டனின் தலைமையில் நேசநாடுகள் என்ற அணிப்பெயருடன்  பிரான்ஸ், ரஷ்யா, அமெரிக்கா, பெல்ஜியம் , செர்பியா, ஜப்பான்   ஆகிய நாடுகள் ஓரணியிலும்

அச்சுநாடுகள் அல்லது மைய நாடுகள் என்ற அணிப்பெயருடன் ஜெர்மனியின் தலைமையில் ஆஸ்திரியா, ஹங்கேரி, இத்தாலி துருக்கி, பல்கேரியா ஆகிய நாடுகள் மற்றோர் அணியிலும் களம் கண்டன.

உலக சரித்திரத்தில் , இந்தப் போரில்தான்   புதிய தொழில்  நுட்பங்கள் கொண்டு வந்து கொட்டிய இயந்திரத் துப்பாக்கிகள், கனரக பீரங்கிகள், வான்வழிப் போர் முறை, நீர் மூழ்கிப் போர் முறை போன்ற பல புதிய போர் முறைகள் முதன்முறையாக ஈடுபடுத்தப்பட்டன. போரின் முடிவு பிரிட்டனின் அணிக்கே சாதகமாக முடிந்தது.

இந்தப் போரில் யூதர்களின் பங்களிப்பு என்பது ஒரு வினோதமான பங்களிப்பாக இருக்கும். இரு தரப்பிலும் போரிட்ட அனைத்து நாட்டு போர்வீரர்களின் பட்டியல்களிலும் யூதர்கள் இருந்தார்கள். யூதர்களோடு யூதர்கள் போரிட்டார்கள். அனேகமாக உலக வரலாற்றில் ஒற்றுமைக்குப் பெயர் போன யூதர்களைப் பொறுத்த வரை இது ஒரு வினோதமான வெளிப்பாடு. . ஆனாலும் எந்த அணி  வெல்கிறதோ அந்த அணியின் ஒத்துழைப்புடன் யூதர்களுக்கான நாட்டை உருவாக்கிட இப்படி சொந்த சகோதரர்களுக்குள் வெட்டிக் கொள்ளவும் சுட்டுக் கொள்ளவும் கூட அவர்கள் தயாரானார்கள். எனவே எல்லா அணிகளிலும் யூதர்கள் இருந்தார்கள்.  

போரின் விளைவுகள் என்று பார்த்தால்,   பல ஆண்டுகாலம் கோலோச்சிய ஆஸ்திரிய ஹங்கேரிப் பேரரசு  , ரஷ்யப்பேரரசு ஆகிய பல  பல பேரரசுகள் வீழ்ச்சியடைந்து  விழுந்து நொறுங்கி சிதறி  துண்டு துண்டுகளாயின என்பது இந்தத் தொடருக்கு இரண்டாம்பட்சமாகத் தேவைப்பட்ட செய்தி. ஆனால் உஸ்மானிய துருக்கியப் பேரரசும் நொறுங்கித் துண்டுகளாயின என்பது பாலஸ்தீனத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதுதான்  நாம் கவனிக்க வேண்டிய  முக்கியச் செய்தி.

துருக்கியப் பேரரசு வலுவிழந்தது என்பதுடன் இந்த வலுவிழப்புக்குக் காரணமாக, எப்போதும் பிரிட்டனுடன் சேர்ந்து கொண்டு வெல்லும் அணியில் இருந்த துருக்கி, இம்முறை தோற்கும் அணியில் சேருவதென்று பிரிட்டனுக்கு எதிராக எடுத்த முடிவு, - துருக்கியின் அந்தத்  தவறான காய் நகர்த்தல் - யூதர்கள்  இத்தனை ஆண்டுகள் ஆடிவந்த சதுரங்க ஆட்டத்தில் அவர்கள் வெல்வதற்குத்  துணையானது. பாலஸ்தீனத்தை பொறுத்தவரை துருக்கியின் இந்தத் துயர முடிவும் தோல்வியும் மத்திய கிழக்கு நாடுகளின் அரசியல் நிலைகளையே மாற்றிவிட அஸ்திவாரம்  இட்டது.

இத்தனை வருடங்கள் தன்னுடன் நட்புநாடாக இருந்த  இருந்த துருக்கி , தனது எதிரி நாடுகளுடன் சேர்ந்து கொண்டு தன்னை எதிர்த்ததற்கு பாடம் படித்துக் கொடுக்க வேண்டுமென்பது , பிரிட்டனைப் பொறுத்தவரை ஒரு ஆணவக் காரணமாக இருந்தாலும் அதுவே வரலாறுகள் குறிப்பிடும் ஆவணக் காரணம்.  

அதுமட்டுமல்லாமல் ஐரோப்பாவில் இருந்த அனைத்து நாடுகளும் கிருத்துவ நாடுகள் ஆனால் துருக்கி மட்டும் இஸ்லாமிய நாடு . மேலும் துருக்கியின் ஆளுமையின் கீழ் அராபிய தீபகற்பத்தின் பல நாடுகள் இணைந்திருந்தன.  தன்னுடைய அரசின் எல்லைகளையும் ஆதிக்கத்தையும்  அரபு நாடுகள் மீதும் செலுத்த வேண்டுமென்ற பிரிட்டனின் ஆசை,  துருக்கியை அதன் தலையில் குட்டி வைக்க வேண்டுமென்று நினைத்தது.  

இருந்தபோதும்,  பிரிட்டனின் இந்தக்  கரணத்துக்குக்  இன்னொரு காரணமும் எல்லா வரலாற்றாசிரியர்களாலும் குறிப்பிடப்படுகிறது. அந்தக் காரணம், ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக் கோனே! காசு காரியத்தில் கண் வையடா தாண்டவக் கோனே! என்ற பணக்காரணம்தான். ஆம்! யூதர்களின் பணப்பெட்டிகள் பிரிட்டனுக்காக பலமுறை திறக்கப்பட்டது. போருக்குத் தேவையான தளவாடங்கள், ஆயுதங்கள் மற்றும் உணவுப் பொருட்களை ,  பிரிட்டன் உலகச் சந்தைகளில் வரவழைத்துக் கொண்டு அவற்றின் பில்லை  யூதர்களுக்கு அனுப்பிவிடும் – பணத்தை யூத நிறுவனங்கள் நல்ல பிள்ளையாக செலுத்திவிடும். எனவே பணத்தொல்லை இல்லை. தனக்கொரு நாடு - அதற்கொரு எல்லை வேண்டுமென்ற யூதர்களின் எல்லையற்ற ஆவல் பிரிட்டனின் எல்லையற்ற பணத்தேவைகளுக்குத் தீனி போட்டது.   

போர் நடைபெற்று வரும்போது வெற்றிக் காற்று பிரிட்டனின் பக்கம்தான் அடிக்கிறது  என்பதை யூகித்தறிந்த  யூதர்கள், ஜெர்மனியின் படையில் பணியாற்றிக் கொண்டே,  பிரிட்டனுக்கு வெற்றியை விரைவாக்க வேண்டுமென்று ஜெர்மனியின் போர் நடவடிக்கைகள், யுக்திகள், ஜெர்மானியப் படை போக எத்தனிக்கும் பாதைகள், போர்த்தந்திரங்கள் ஆகியவற்றை ராஜபாளையம் நாயாக மோப்பம் பிடித்து அந்தத் தகவல்களை இரகசியமாக பிரிட்டனுக்கு அனுப்பிக் கொண்டே இருந்தார்கள்.  பிரிட்டனின் வெற்றிக்கு , ஜெர்மனிக்கு எதிராக யூதர்கள் செய்த இந்த            “கில்லாடி -  உள்ளடி” நயவஞ்சகம் பேருதவியாக இருந்தது என்பதை மறுக்க இயலாது.  

காற்றடிக்கும் திசை பக்கம் சாய ஆரம்பித்த  யூதர்களின் பாய்மரப்படகுத் தன்மை உலகுக்கு ஒன்றும் புதிதல்ல. இத்தகைய துரோகம் யூதர்களின் இரத்த அணுக்களில் கலந்துள்ளது. ஆனால் அதே இரத்த அணுக்களில் அவர்களுடன் கூடவே குடி   இருந்தது இனப்பற்று மற்றும் யூதர்களுக்கென்று தனி நாடு - எவ்வாறாயினும்- என்ன விலை  கொடுத்தேனும் என்பதுதான்.

இதில் மானம் , அவமானம், நம்பிக்கை, நம்பிக்கை துரோகம் , கை கொடுத்து உதவுதல், கைகாட்டிவிட்டுப் பிரிதல், காலைப் பிடித்தல், பிடித்த காலையே வாரிவிடுதல், மூக்கை உடைத்தல் , முகஸ்துதி செய்தல், முட்டுக்கால் போடுதல், கண்ணைக் கசக்குதல், காது பிடித்துத் தோப்புக் கரணம் போடுதல், கன்னத்தில் போட்டுக் கொள்ளுதல், இப்படிக் காட்டிக் கொடுத்தல் முதல் அதன்   மோனைகளையும் கடைப்பிடித்தேனும்,  தனிநாடு அமைக்க  தாங்கள் போட்டிருந்த உள்ளாடைகளைக் கூட கழற்றிக் கொடுக்க யூதர்கள் தயாராக இருந்தார்கள். இப்படிப் பட்ட குணம் உள்ளவர்களிடம் போர் தர்மங்களை எப்படி எதிர்பார்க்க முடியும்?

முதல் உலகப்போர் 1914 ஆம் ஆண்டு முதல்  1918 வரை நடைபெற்றது என்று மேலே குறிப்பிட்டோம். 1917- ஆம் ஆண்டு பிரிட்டன் துருக்கியையும் அதன் ஆளுமைக்குட்பட்ட பகுதிகளையும் தாக்கியது. அதன்படி இன்றைய பாலஸ்தீனின் பல பகுதிகளும் ‘ராஜா மகள் - ரோஜாமலர்’ – அனைவரும் அணிந்து  கொள்ள விரும்பும் அலங்காரப் பதக்கம், எனது உடலில் ஒரு துண்டு தசை என்று துருக்கிய சுல்தானால் நேசிக்கப்பட்டாதாக நம்மால் வாசிக்கப்பட்ட ‘ஜெருசலம்’ துருக்கியிடமிருந்து பிரிட்டனால் கதறக் கதறக் கைப்பற்றப்பட்டது.

அத்துடன் Balfour Declaration என்று வரலாறு வர்ணிக்கும் பால்போர் பிரகடனம்  என்பது பத்திரிகைகளில்  வெளிவந்தன. இந்த பால்போர் பிரகடனம்  என்பது  117 ஆங்கில வார்த்தைகளைக் கொண்டதுதான் . ஆனால் அவை  உலக சரித்திரத்தின் போக்கையே மாற்றிவிட்டது.   பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேலிய நாடுகளின் சரித்திரத்தில் இந்தப் பிரகடனம்  ஒரு மைல் கல். இதை பிரகடனம்  என்று வரலாறு  வர்ணித்தாலும் உண்மையில் இது ஒரு கடிதம்தான். ஆனால் ஒரு பிரகடனத்தின் அந்தஸ்தைப் பற்றிப் பிடித்துக் கொண்ட கடிதம்.

இதைப் பற்றிக் குறிப்பிடும் உலக வரலாறு இப்படிச் சொல்கிறது.

“The Balfour Declaration (dated 2 November 1917) was a letter from the United Kingdom's Foreign Secretary Arthur James Balfour to Baron Rothschild, a leader of the British Jewish community, for transmission to the  Zionist Federation of Great Britain and Ireland.”

பிரிட்டனின் வெளியுறவுச் செயலாளர் ஆர்தர் ஜேம்ஸ் பால்போர் என்பவர் பிரிட்டனில் இருந்த யூத சமுதாயத்தின் தலைவரான பாரோன் ரோத்சில்ட்என்பவருக்கு அனுப்பி யூதர்களின் தனிநாடு அமைப்பதற்கான சியோன் அமைப்புக்கு தரச் செய்ததே பால்போர் பிரகடனம்  என்று குறிப்பிடப்படுகிறது.

பால்போர் பிரகடனம்  என்பது நாம் சொல்வதற்கும் எழுதுவதற்கும் இலகுவானதாகத் தோன்றலாம். ஆனால் அந்த அறிக்கையின்  வாசகங்கள் இரண்டு செய்திகளை உலகுக்குச் சொன்னது. இந்தப் பிரகடனம் வெளியான சமயத்தில் உலகின் ஆளும் தலைமகன் பிரிட்டன்தான் ; உலகின் குடும்பத்தலைவன் பிரிட்டன்தான் என்பதை நமது நினைவில் நிறுத்திக் கொள்ளவேண்டும். இன்று வேண்டுமானால் அமெரிக்கா அந்தத் தலைமகன்  பாத்திரத்தை ஏற்று உலகின் அமைதிப் பாத்திரத்தை இரவு நேரத்து எலிகள் போல உருட்டலாம்; புரட்டலாம். ஆனால் முதல் உலகப்போர் காலத்தில்  உலகத்துக்கு எல்லாமே பிரிட்டன்தான்; பிரிட்டன் சொல்வதே வேதவாக்கு என கருதப்பட்டது. அதே வகையில்தான் பால்போர்  பிரகடனமும் பிரிட்டனால் சொல்லப்பட்ட வேதவாக்கு. இதுவே பிரிட்டன் முன் மொழிந்த வேதவாக்கு. இஸ்ரேல் என்ற நாடு பின்னாளில் அமைய இருப்பதற்கு அச்சாரம் போட்டவை இந்த வார்த்தைகள்தான்.

“ His Majesty's government view with favour the establishment in Palestine of a national home for the Jewish people, and will use their best endeavours to facilitate the achievement of this object, it being clearly understood that nothing shall be done which may prejudice the civil and religious rights of existing non-Jewish communities in Palestine, or the rights and political status enjoyed by Jews in any other country.”  

இந்த பால்போர் பிரகடனம் உலகுக்குச் சொன்னவை நீதியை நிற்க வைத்து சுட்டுக் கொன்ற வார்த்தைகள்தான்.  பாலஸ்தீனத்தை பல நூற்றாண்டுகளாக தங்களுடைய தாயகமாகவும் எந்த நிலைமை ஏற்பட்டாலும் அந்த நாட்டைவிட்டு நீங்கி, விலகி, விட்டு, ஓடாதது மட்டுமல்ல அனைவரையும் அரவணைத்து அரசாட்சியும் நடத்திய  முஸ்லிம்களை இரண்டாம்தரக் குடிகளாக ஆக்குவதும் ஏதோ  ஒருகாலத்தில் அங்கு வாழ்ந்தாலும் உலகம் முழுதுக்கும் ஓடி ஒளிந்த யூதர்களை முதல் தரமாக்குவதும்தான் இந்தப் பிரகடனத்தின் நோக்கம்.

இந்தப் பிரகடனம் இரண்டு விஷயங்களை உலகுக்குச் சொன்னது.
ஒன்று பாலஸ்தீனம் , யூதர்களின் தனி நாடாக ஆகும் என்பது . இரண்டு பாலஸ்தீனத்தில் வாழும் யூதரல்லாத மற்ற இனத்தவர்களின் சிவில் மற்றும் மத வழிபாட்டு உரிமைகள் தொடர்ந்து கடைப் பிடிக்கப்படும் என்பதுதான்.

ஆனால், இந்தப் பிரகடனம் சொல்லாமல் சொன்னது.

யூதர்கள் அல்லாத மற்றவர்களுடைய அரசியல் உரிமைகள் பறிக்கப்படும் என்பதுதான். அதாவது யூதர்கள் அல்லாத மற்றவர்கள் ஆள இயலாது; ஆட்சியில் பங்கு பெற இயலாது; தேர்தல்களில் போட்டியிட இயலாது  என்பன போன்ற  சாக்கடையில் தோய்த்தெடுத்து அந்தந்த சமுதாயங்கள் மீது ஏவப்பட்ட  சவுக்கடிகள்தான்.

பிரிட்டனால் ஏவப்பட்ட சவுக்கடிகளுக்குப் பின், பாலஸ்தீனப் பாலைக் குடிக்க, பூனையுடன் எலியும்   கூட்டு சேர்ந்தது. ஆம்!   இன்னொரு வல்லரசான  பிரான்சுடன்  இணைந்து Anglo- French Declaration என்ற இன்னொரு இடியும் இறக்கப்பட்டது. இந்த ஆங்கிலோ- பிரெஞ்ச் பிரகடனம் சொன்னது:-

"the complete and final liberation of the peoples who have for so long been oppressed by the Turks, and the setting up of national governments and administrations deriving their authority from the free exercise of the initiative and choice of the indigenous populations.

ஆகவே, இஸ்ரேல் என்ற ஒரு நாடு எந்த அடிப்படையில் அமைக்கப்படும் என்பதற்கான  வெள்ளோட்டம்தான் இந்தப் பிரகடனங்கள் . இதே பிரகடனங்களின்   அடிப்படையில்தான் இரண்டாம் உலகப் போருக்குப் பின் இஸ்ரேல் என்ற நாடு,  ஏகாதிபத்திய வல்லரசுகளின் இரவு நேரக் கூடலின் காரணமாக பிரசவிக்கப்பட்டு பெயர் சூட்டப்பட்டது.  

இரண்டாம் உலகப் போரையும் அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் அந்தப் போர் ஈன்றெடுத்த இஸ்ரேலின் அமைப்பையும் இன்ஷா அல்லாஹ் தொடர்ந்து காணலாம்.
தொடரும்....
இபுராஹிம் அன்சாரி

28 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

இந்த தொடர் வரரலாறு மட்டுமல்ல, வாசிக்கும் ஆர்வமுள்ளவர்களோடு எப்படி எழுத்து நடையில் கைகோர்த்து அழைத்துச் சென்று ஆதாரங்களை காட்டுவது என்ற பயிற்சியாகவும் இருக்கிறது இந்த தொடர்....

sheikdawoodmohamedfarook said...

//இந்தப்போரில்யூதர்களின்பங்களிப்புஒருவினோதமானபங்களிப்பு!... இருதரப்பிலும்போரிட்டஅணைத்துநாட்டுபடைகளிலும்அவர்கள் இருந்தார்கள். யூதர் களுக்கான சொந்த நாட்டை உருவாக்கிட சொந்த சகோதரர்களையும் வெட்டிக் கொல்லவும் சுட்டுக் கொல்லவும் தயாரானார்கள்// ஒருவேளைஅவர்கள்மஹாபாரதம்படித்திருப்பார்களோ?' என்றுஎண்ணத்தோன்றுகிறதது!. அர்ஜுனன் சொன்னான்'' எனக்கு மரம் தெரியவில்லை! கிளை தெரியவில்லை!கொப்புதெரியவில்லை!புறாமட்டுமேதெரிகிறது!" என்றான்! துரோனர்கேட்டார்''பெரியமரமும்கொப்பும்தென்படாதஉன்கண்களுக்கு சிறியபுறாஎப்படிதென்பட்டது''? ''நான்அடிக்கவேண்டியதுஅந்தப்புறாவேதவிரகொப்பல்ல!கிளையல்ல!'' என்றான். இதில்அண்ணன்தம்பியைகொன்றாலும்தம்பிஅண்ணனைகொன்றாலும் அவர்களின்கடைசிஇலக்குஅவர்கள்நாடு!அதுதான்இஸ்ரேல்!

sheikdawoodmohamedfarook said...

மைத்துனர்இப்ராஹீம்அன்சாரிஅவர்களின்எழுத்துநடை வரலாற்றுநாயகியின்மீனொத்தகண்களுக்குஅஞ்சனம்தீட்டி முல்லைகொடியொத்தஇடைக்குமேகலைகட்டி வாழைதண்டோத்தகால்களுக்குபொற்சிலம்புபூட்டி 'சலக்- சலக்'யெனபாதச்சிலம்பொலிக்கநடக்கவிட்டிருகிறார். இந்தஅழகியவரலாற்றுவணிதையின்கண்கண்டோர்கயல்கண்டார்! முகம்கண்டோர்கமலம்கண்டார்!இடைகண்டோர்தன்னைக்கொல்லும்படைகண்டார்! நடைகண்டோர்அன்னப்பெடைகண்டார்! இத்தனையும்கண்டவர்தன்னையேகாணாமல்நின்றார்.''என்றுசொல்லும் அளவுக்குவரலாற்றைஒருஇலக்கியநாயகிபோல்செதுக்கிஇருக்கிறார். பாராட்டுக்கள்.

sabeer.abushahruk said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அன்பிற்குரிய காக்கா,

இந்த வரலாற்றுத் தொடர், ஒரு திரைப்படம் பார்க்கும் பிரம்மையை எனக்கு மட்டும்தான் ஏற்படுத்துகிறதா தெரியவில்லை.

திரைக்கதைபோல் வடிவமைக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு அத்தியாயமும் வித்தியாசமாகவும் மிகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கின்றது.

மாஷா அல்லாஹ்!

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, காக்கா!

sabeer.abushahruk said...

//அமெரிக்கா அந்தத் தலைமகன் பாத்திரத்தை ஏற்று உலகின் அமைதிப் பாத்திரத்தை இரவு நேரத்து எலிகள் போல உருட்டலாம்; //

ஒருபானை சோத்துக்கு ஒரு சோறு பதம் என்பதற்கேற்ப மேலே எடுத்துச் சொல்லப்பட்டிருப்பது இந்தத் தொடர் முழுதும் தங்களின் தமிழ் தலை நிமிர்ந்து நடைபோட்டிருப்பதற்கு சாட்சி.

வாசகர்களுக்கான விருந்து தொடரட்டும்

sabeer.abushahruk said...

காக்கா,

யூதர்களில் ஒரு பகுதி வெல்பவரோடும் மறுபகுதி வீழ்பவரோடும் சேர்ந்தது நம்பிக்கை துரோகமா ராஜதந்திரமா?

இப்ப நம்மடவங்களும் அண்ணன் அம்மாவோடுன்னா தம்பி அப்பாவோடும்தானே சேர்ந்து கொள்கிறோம்.

அப்ப அவனுக அப்ப செய்ததும் சரிதான்றமாதிரி..... தோனுதே... சரியா?

Ebrahim Ansari said...

தம்பி சபீர் !

வ அலைக்குமுஸ்ஸலாம்.

//இப்ப நம்மடவங்களும் அண்ணன் அம்மாவோடுன்னா தம்பி அப்பாவோடும்தானே சேர்ந்து கொள்கிறோம்.//

நம்மவர்களுடையது சந்தர்ப்பவாதம் . சுயநலவாதம்.
யூதர்கள் பிரிந்தது போல் நடித்தார்கள் அவர்களுக்காக ஒரு நாட்டை உருவாக்க. இருட்டில் கை குலுக்கினார்கள். வெளிச்சத்தில் வெட்டிக் கொண்டார்கள்.
நம்மடவர்கள் நீயா நானா போட்டியில் சமுதாயத்தைப் பிரிப்பதற்குப் போட்டியிட்டார்கள்- இருட்டிலும் வெளிச்சத்திலும்.
யூதர்களுக்குத் தங்களின் நாடு பிரதானமாகத் தெரிந்தது எந்த நிலையிலும் எதைப் பலி கொடுத்தேனும். நமக்கோ நம்மையே பலி கொடுப்போம் - நான்தான் பெரியவன் என்று காட்டுவதற்காக.
உலகின் எந்தப் பாகத்தில் இருந்தாலும் யூதன் யூதனால் யூதனாகவே பார்க்கப்பட்டான்; பராமரிக்கபட்டான்.
நம்மடவன் வேறு இயக்கத்தில் இருந்தால் நம்மடவனையே முஷ்ரிக் என்றும் முனாபிக் என்றும் முத்திரை குத்தினான்.

யூதன் பிரிந்தது போல் காட்டியது பிரியாமல் இருக்கவேண்டுமென்ற பிரியத்துக்காக.
நம்மடவன் பிரிவது பிரியாணிக்காக.

sheikdawoodmohamedfarook said...

இதுபோல்வரலாற்பாடத்தைஅன்றுசொல்லிஇருந்தால் பலமாணவர்கள் பள்ளியேவிட்டே போய் இருக்கமாட்டார்கள். எப்போபாத்தாலும்பரிச்சையில்' இரண்டாம் பானிப்பட்டு யுத்தம்எப்போநடந்தது?'' இதுஎட்டாம் வகுப்பில் கேட்டகேள்வி!//நம்மூர்கஸ்டம்ஸ்காட்டிடத்தின்அருகில்இருக்கும் மகிழ மரத்தடி கீழே பலதடவை இதைபடித்துபடித்துமனப்பாடம்செய்தேன். மறுநாள்காலைபரிச்சைஹாலில்கேள்வித்தாளில்இந்தகேள்வியும்வந்தது.போர்நடந்தஆண்டுநினைவுக்குவரவில்லை.எப்படியாவதுசமாளித்துவிடுவோம்யென''முதல்பாணிபட்டுயுத்தம்நடந்தபின் இரண்டாம்பாணிபட்டுயுத்தம்நடந்தது!''யெனபதில்போட்டேன் .இதுதப்பா?என்பதிலுக்குகிடைத்த மார்க்.0. போர்நடந்த வருஷம் போடணுமாம். நான் பிறந்த வருஷமே எனக்கு தெரியாது .கிராமமுன்சிப்மரைக்காதான்ஒருவருசத்தைஎழுதி கொடுத்து அஞ்சுரூவாகேட்டார்.வருசத்தைபார்த்தேன். கொஞ்சமாய் இருந்தது ''இந்த கொஞ்ச வருசத்துக்குஅஞ்சு ரூவாயா? கொஞ்சம் கொறச்சுகிடுங்கோ! மறைக்கா'' என்றேன் ''.உள்ளதைகொடுடா!''என்றார். மூனு ரூவா கொடுத்து வயசுவாங்கினேன். வாளும்குதிகுரையும்வைத்திருப்பவன் எல்லாம் அவனவன் இஸ்டத்திற்கு போரிடுவான்.அவன் போரிட்ட இடத்தையும் காலத்தையும்நான் நினைத்து கொண்டிருக்க வேண்டுமாம். இதுஎன்னய்யாநியாயம்?' என்றுயோசித்தேன். மற்றும்சொன்னதையேதிரும்பதிரும்பசொல்லும் கிளிப்பிள்ளைபோல் இல்லாமல்மாற்றியோசிக்கும் மனப்பாண்மைக்குதடை போடும் கல்வி திட்டத்தை எதிர்த்துமலாயாபோய்விட்டேன்! செய்தது சரிதானே?

sabeer.abushahruk said...

பதில் கேட்டாக்கா இப்டியா பளார் பளார்னு அறையிறது! :-)

sabeer.abushahruk said...

ஃபாரூக் மாமா,

ஹமீதுடன் பேசிக்கொண்டிருக்கும்போது நொடிக்கொரு தரம் என்று சிரித்துக் கொண்டே இருப்போம்.

இப்பதான் தெரியுது "அவர் மொத்த சரக்கும் உங்களோடது" என்று.

இதுபோன்ற சுவாரஸ்யமான பள்ளிப்பிராயத்து நடப்புகளை ஆங்காங்கே கருத்துகளாகப் பதிகிறீர்கள். தொகுத்துத் தாருங்களேன் "ஞாபகம் வருதே" என்கிற தலைப்பில் தொடர்ந்து பதிந்து விடலாம்.

sabeer.abushahruk said...

ஈனா ஆனா காக்கா,

பதிவுக்குத் தொடர்பில்லாத எனது மேற்கண்ட (ஃபாரூக் மாமாவுக்கான) கருத்திற்காக மாப்பு.

sheikdawoodmohamedfarook said...

அஸ்ஸலாமுஅலைக்கும்மருமகன்சபீர்!நீங்கள் முன்புஎழுதிய ''எங்கஊருமாப்பிளே!''என்றபதிவை மாடலாகவைத்து ''மாப்புளேக்கிஎந்தஊருசபுரு?' 'யென்றதலைப்பில்பாதி கம்பிபூபுட்ட்ரில் பதிவு செய்துவைத்திருக்கிறேன். இன்சா அல்லாஹ்அதைவிரைவில்அனுப்பிவைக்க முயற்சிக்கிறேன்.இன்னும்பலகாகிதத்தில்இருக்கிறது. அவற்றைஎல்லாம்கணிணியில்பதிவுசெய்யஇரண்டு குறைபாடுகள்என்னிடம்உண்டு.ஒன்றுடைபிங்கற்கவில்லை. இதுகாலத்தால்வந்தகுறை! மற்றொன்றுகண் .இதுவயதால்வந்தகுறை.காகிதத்தில்யுள்ளதைசரிசெய்து விரைவில்அனுப்புகிறேன்.வசதிபோல்பதிவுசெய்து போட்டுக்கொள்ளலாம்.

sheikdawoodmohamedfarook said...

இனா.அனா.மைத்துனரே!பதிவுக்குதொடர்பில்லாஇந்தபதிவைபோட்ட தற்கு'maaf'கரோஜி!

Ebrahim Ansari said...

அன்புத்தம்பி சபீர் ! உங்கள் மாப்பு எனது கைகளுக்கு காப்பு போட்டது போல் உணருகிறேன். ஏன் இந்த மாப்பு? உங்களுக்கு எல்லா உரிமைகளும் உண்டு.

அன்புள்ள மரியாதைக் குறிய மச்சான்,

கவிதை மூலம் கருத்துப் பகர்ந்து இருக்கிறீர்கள்.
நானோ எனது எட்டு வயதில் உங்களிடம் பட்ட அடிகளை இன்னும் எண்ணிப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். எல்லா வரலாறுகளையும் எழுகிறோம். நான் ஆறுமுகங் கிட்டங்கி அருகில் உங்களிடம் அடிவாங்கிய வரலாறை எழுதினால் எப்படி இருக்கும். ? பள்ளிக் கூடத்துக்கு ஒளிப்பம் ஒளிந்து ரேடியோ போடும் வீட்டில் போய் உட்கார்ந்து பாட்டுக் கேட்கப் போன குற்றத்துக்காக நீங்கள் விட்ட அறை இன்று நினைத்தாலும் வலிக்கிறது. அன்று வலித்த அந்த அடி இன்று இனிக்கிறது. அது போல் இன்னொரு அடி கிடைக்குமா என்று இதயம் ஏங்குகிறது.

Ebrahim Ansari said...

தம்பி அபு இப்ராஹீம்.

தொடரை வெற்றிகரமாக்குவது தங்களின் அன்பான ஒத்துழைப்பே.

ஜசாக் அல்லாஹ்.

crown said...

இத்தனை வருடங்கள் தன்னுடன் நட்புநாடாக இருந்த இருந்த துருக்கி , தனது எதிரி நாடுகளுடன் சேர்ந்து கொண்டு தன்னை எதிர்த்ததற்கு பாடம் படித்துக் கொடுக்க வேண்டுமென்பது , பிரிட்டனைப் பொறுத்தவரை ஒரு ஆணவக் காரணமாக இருந்தாலும் அதுவே வரலாறுகள் குறிப்பிடும் ஆவணக் காரணம்.
--------------------------------------------------------
அஸ்ஸலாமுஅலைகும். டச்! ஆணவம்,ஆவணம் நான் என்னியது போலவே இருந்த ஆச்சரிய ஓற்றுமை!

இப்னு அப்துல் ரஜாக் said...

உங்கள் அரும் பணியை
அல்லாஹ் ஏற்றுக் கொள்வானாக
உண்மை தொடர்

crown said...

தனிநாடு அமைக்க தாங்கள் போட்டிருந்த உள்ளாடைகளைக் கூட கழற்றிக் கொடுக்க யூதர்கள் தயாராக இருந்தார்கள். இப்படிப் பட்ட குணம் உள்ளவர்களிடம் போர் தர்மங்களை எப்படி எதிர்பார்க்க முடியும்?
------------------------------------------------------------
இப்படிப் பட்ட குணம் உள்ளவர்களிடம் போர் தர்மங்களை எதிர் பார்ப்"போர்"முட்டாள்கள்!

crown said...

எனது உடலில் ஒரு துண்டு தசை என்று துருக்கிய சுல்தானால் நேசிக்கப்பட்டாதாக நம்மால் வாசிக்கப்பட்ட ‘ஜெருசலம்’ துருக்கியிடமிருந்து பிரிட்டனால் கதறக் கதறக் கைப்பற்றப்பட்டது
----------------------------------------------------------------------------------------------------
தசையை விசை கொண்ட மட்டும் வெட்டி எடுத்தால் பின் சலம் தானே வரும் அதான் ஜெருசலம் இப்படி கைவிட்டு போச்சு!

crown said...

பால்போர் பிரகடனமும் பிரிட்டனால் சொல்லப்பட்ட வேதவாக்கு. இதுவே பிரிட்டன் முன் மொழிந்த வேதவாக்கு. இஸ்ரேல் என்ற நாடு பின்னாளில் அமைய இருப்பதற்கு அச்சாரம் போட்டவை இந்த வார்த்தைகள்தான்.
------------------------------------------------------------------------------------------------------------------
இதை படித்து பார்போர் புரியும் வண்ணம் காக்கா பால் போர் பற்றி இவ்வளவு விரிவா எழுதி இருக்கீங்க! நன்றி!

Ebrahim Ansari said...

இரு சகோதரர்கள் கிரவுன், இப்னு அப்துல் ரஜாக் எனக்கும் இரு சகோதரர்கள் தந்துள்ள அன்பான கருத்துக்கள் காண மகிழ்ச்சி.

வார்த்தைச் சித்தர் வலம்புரிஜான் மறைந்து இருக்கலாம். ஆனால் வார்த்தைகளின் வடிவமைப்பாளர் கிரவுன் நம்மோடு இருக்கிறார். என்னோடு இருக்கிறார்.- தளத்திலும் களத்திலும்.
ஜசாக் அல்லாஹ் ஹைரன் சகோதரர்களே!

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

விறுவிறுப்பு!

'History' போரடிக்கும். இந்த யதார்த்தத்திலிருந்து விடுபட்டு, சுவாரஸ்யமாகச் செல்கின்றது, இத்தொடர்.

யூதர்களின் வரலாறு, நயவஞ்சக நஞ்சில் தோய்த்து எழுதப்பட்டது! நபி வரலாற்றை விரிவாகப் படிப்போர்க்கும் நிறையத் தகவல்கள் கிடைக்கும். 'எழுத்தறிஞ'ரிடத்தில் நேரில் பேசுவேன், இன்ஷா அல்லாஹ்.

sheikdawoodmohamedfarook said...

//ஆறுமுகம்கிட்டங்கிதெருவில்அடித்தஅடிஇன்றும்எனக்குஇனிக்கிறது.//இன்றும்அந்தநினைவுகள்என்நெஞ்சைவிட்டுநீங்கவில்லை.தாம்எழுதும் கட்டுரைகளுக்குவரும்பாராட்டைஎல்லாம்எனக்குவரும்பாராட்டகவே கருதுகிறேன். //அதுபோல்இனிஒருஅடிகிடைக்குமா''என்றுஏங்குகிறேன்.//இப்பொழுதுதான்எல்லோரும்நிறையவேஅடிபோடுகிறார்களே!நானும்தான்அடிபோடுகிறேன்.தாம்எழுதும்வரலாற்றுவரிகளுக்குஅ.நி.வாசகர்கள் போடும்மனம்நிறைந்தபாராட்டுவரிகள்எல்லாம்'அடி'கள்தான்.இதுஇனிக்கும்''அடி'! கள். மனிதவாழ்க்கையில்இளமையின்வலிகள்முதுமையில்சுகம்:முதுமையில் வலிகள்இளமையின்சுகமே!

sabeer.abushahruk said...

ஆஹா,

மூத்தோர் சொல் முது நெல்லிக்கனி என்பர்.

இத்துணை அறிஞர்கள் புழங்கும் தளத்தில் எனக்கோர் இடம் என்பது மகிழ்வளிக்கிறது.

Unknown said...

Assalamu Alaikkum

Respected brother Mr. Ebrahim Ansari,

Clear and vivid picture is unfolding from your style of writing. The metaphoric quoting of the conceiving of bastard child is boldly resounding.

Writing style is much appreciated. Keep the great work up.

B. Ahamed Ameen from Dubai.

Ebrahim Ansari said...

மரியாதைக்குரிய அஹமது காக்கா அவர்களின் கருத்தையும் அன்புத் தம்பி அஹமது அமீன் அவர்களின் கருத்தையும் காணும் போது மிகவும் மகிழ்கிறேன். ஜசாக் அல்லாஹ் ஹைரன்.

அஹமது காக்கா! இன்ஷா அல்லாஹ்.

Yasir said...

மாஷா அல்லாஹ் - சான்ஸ்-ஸே இல்லை....அளப்பறிய பணி அனைத்து முஸ்லிம்களும் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய வரலாற்று தொடர் இது

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு