வாழ்கைப் பயணத்தில் உறவுகள் - 9


தாய் வழி சொந்தம் (தாய் மாமா மற்றும் சித்தி) அறிவுசார் உலகில் சொர்பொழி வாகட்டும் அல்லது எழுத்து வடிவாகட்டும் மானிடவியலை பற்றி விமர்சிக்கும் போது இது ஆணாதிக்க உலகம் பெண்ணை அடிமை படுத்தும் உலகம் என்று ஆவேசமாக பேசி கரவோசைகளை பெறும் நிகழ்வுகளை அன்றாடம் காண்கிறோம் ஆனால் உறவின் அடிப்படையில் காண்கின்ற போது (பெண்ணின் ஆதிக்கமே ) தாய் வழி சொந்தங்களின் பற்றுதலே அதிகம் காண முடிகிறது.

தாய் மாமா

அதிகமான உரிமை கோரும் உறவு தாய் மாமா என்கிற உறவுதான். தந்தையிடம் கூட மரியாதையாக பேச வேண்டிய நிர்பந்தம் உண்டு. ஆனால் குழந்தைகள் மாமாவிடம் பேசும் போது ஒறுமையில் வா... போ.. என்று செல்லமாக பேசும் உரிமை கொண்ட உறவு தாயின் அரவணைப்பு வீட்டிற்குள் என்றால் ...வீட்டிற்கு வெளியே சென்று வேடிக்கை காட்டி சந்தோசப்படுத்தி அரவனைக்கும் உறவு ...

அந்த கால முதியோர்கள் மாமாவின் உறவை பற்றி கூறும் போது .பழமொழி போல் ஒன்றை கூறுவார்கள்... பிறந்த குழந்தை தாய் மாமன் முகம் தேடும்.. என்பதாக ஆனால் பிறந்த குழந்தைக்கு வெளி உலகு காண முடியாமல் கண் கூசும் என்பதே உண்மை ... 

* ஐந்து வயது வரை மாமாவின் பாசத்தில் லயித்து போகும் குழந்தைகள் பத்து வயது முதல் பதினைந்து வயது வரை. பாசத்தின் வெளிப்பாடான பரிசுகளை மாமாவிடம் குழந்தைகள் எதிர்பார்க்கும் ..இதனை நடைமுறை படுத்தும் மாமா. வயதான காலத்தில் மருமக்களால் போற்றப்படும் மாமாவாக திகழ்வார் .

* மாமாவின் பாசம் எவ்வளவு அதிகம் கானபடுகிறதோ .அந்த அளவிற்கு மாமாவிற்கு மருமக்களின் உதவி கிடைக்கும் என்பதில் ஐயமில்லை .

* சில சமயங்களில் மாமாவின் மகளை மணமுடிக்க எந்த நிபந்தனை யுமின்றி முன் வரும் மருமக்களை பார்த்திருக்கிறேன் ...சில குறைகள் இருந்தாலும் அதனை பொருட்படுத்தாத மருமக்களை இங்கு நினைவு கூற விரும்புகிறேன்.

"வாழ்க்கையெனும் ஆற்றை கடக்க துணையாக வரும் மனைவி தோணியாக இருக்க வேண்டும். சில சமயங்களில் சுமையாக மாறும்போது .. ஆற்றை தானே நீந்தி கடக்க நேரிடும் போது ..சுமையை இறக்கி வைத்து விட்டு செல்ல வேண்டிய சூழல்... அது மாமா மகளாக இருந்தாலும் நடந்தேறும் .

அந்த சமயங்களில் தாய் மாமாவின் உறவு பழுது படாமல் பகையாளியாக மாறாமல் சற்று உறவு தளர்ந்திருந்தாலும் முறிவதில்லை அந்த அளவிற்கு தாய் மாமா உறவு வலிமை வாய்ந்தது

*பிற மத சகோதரர்கள் தமிழகத்தில் உறவு விட்டு போகக் கூடாது என்பதற்காக தாய் மாமாவை மணமுடித்து வாழ்க்கை கடைசி வரை மாமாவே என்று இருப்பதை நாம் பார்கிறோம் .

"ஒரு அதிர்ச்சியான தகவலை பதிவு செய்ய விரும்புகிறேன் திருச்சி மாவட்டத்தில் இஸ்லாம் பற்றி அறியாத கிராமத்து முஸ்லிம்கள் தாய் மாமாவை மணமுடித்து வைக்கும் பழக்கம் இருந்து வந்ததாக ஒரு நண்பர் கூற கேட்டு அதிர்ச்சியுற்றேன் வளைகுடா நாடுகளுக்கு வேலைக்கு வந்த பிறகு இஸ்லாம் பற்றி அறிய முடிந்தது என்று அந்த நண்பர் கூறினார். இஸ்லாம் பற்றிய பல தகவல்கள் தௌஹீது பிரசாரங்களும் கிராம முஸ்லீம்களுக்கும் சென்றடைந்து விட்டது என்பதே சரி .

எத்தனையோ கிராமங்களில் முஸ்லீம்கள் பள்ளிவாசல்களை பஞ்சாயத்து கூடவும் பயன்படுத்துவது காண முடிகிறது .வெள்ளிக்கிழமை மட்டும் ஜும் ஆ தொழுகை வெளியூர் இமாம் நடத்திவிட்டு செல்வது போன்ற நடவடிக்கை களால் இஸலாம் பற்றிய தெளிவு மிக குறைவு என்பதே உண்மை.

நான் சொல்ல வந்த கருத்து தாய் வழி சொந்தம் பற்றி கருத்து தடம் மாறுவதை தவிர்க்க விரும்புகிறேன். தாய் வழி சொந்தங்களை பற்றி சொல்லும் போது சிறிய தாய் முக்கிய இடம் வகிக்கிறார்.

தாயாரும் சித்தியும் பல சமயங்களில் பிள்ளைகளுக்கு பணிவிடை செய்ய பாகுபாடு பார்ப்பதில்லை இதன் காரணமாக பிள்ளைகள் சிறிய தாயிடமும் தனது தேவையை உரிமையாய் கோரும் அதன் காரணமாக பாச பிணைப்புகள் கூடும் என்பதே தின்னம் சிறிய தாய் பற்றிய கருத்துக்கள் அதிகமாக எழுத இன்னும் ஒரு அத்தியாயம் எழுத வேண்டும். பல பாத்திரங்களின் உறவின் அடிப்படையில் எழுத வேண்டி உள்ளதால் தாய் வழி சொந்தம் பற்றி இத்துடன் முடித்து கொள்கிறேன் ..

தாய் இல்லாதவர்கள் சிறிய தாய்க்கு பணிவிடை செய்து நன்மையை பெற்று கொள்ளட்டும் என்ற நபி மொழியை வைத்து நாம் சிறிய தாயின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளலாம். நமதூரில் சாச்சி மக்கள் ராத்தம்மா மக்கள் இருவருக்கும் வித்தியாசம் காண முடியாத அளவிற்கு ஒற்றுமை காணப்படுவதை இங்கு பதிய விரும்புகிறேன் 
உறவுகள் தொடரும் 
அதிரை சித்தீக்


16 கருத்துகள்

இப்னு அப்துல் ரஜாக் சொன்னது…

மாமா சித்தி உறவு
குடும்ப நெருக்கம்
ஊர் நிலைமை
சகோ சித்திக் காக்கா
செஞ்சுரி அடிச்சிட்டீங்க

Ebrahim Ansari சொன்னது…

இன்னொரு விஷயம் கேள்விப்பட்டேன். பகிர விரும்புகிறேன்.

அதாவது மருமகன் அல்லது மருமகளுக்கு பெண் அல்லது மாப்பிள்ளை பார்க்கும்போது பெண்ணோ அல்லது மாப்பிள்ளையோ பரஸ்பரம் மனதுக்குப் பிடித்து இருக்கிறதா என்று அவர்களிடம் தனிப்பட்ட முறையில் அந்தரங்கமாக மனம்விட்டு அவர்களிடம் பேசி திருமணங்களுக்கு ஏற்பாடு செய்வதும்,

மருமக்களான கணவன் மனைவி இருவருக்கிடையில் கருத்து வேற்றுமைகள் ஏற்பட்டால் இருவரிடமும் பேசி சமாதானம் செய்து வைப்பதும்,

அதைவிட முக்கியமாக திருமணத்தன்று மருமகனாகிய கணவனை மணமகளின் அறைக்கு அழைத்துச்சென்று விடுவது ஆகியவை தாய் மாமன்களின் தலையாய பணிகளாக இருக்குமாம்.

இவைகளை வைத்துத்தான் மாமாவை பெருமைப் படுத்துவதற்காக சொல்லப்பட்ட "மாமாவின் வேலை" எனபது பின்னாட்களில் சிறுமைப்படுத்துவதற்காகவும், இழிவு படுத்தும் விதமாகவும், கொச்சையாகவும் சொல்லப்பட்டது என்று அறிகிறேன். உண்மையா?

Unknown சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
sabeer.abushahruk சொன்னது…

சகோ அதிரை சித்திக்கின் உறவுகள் குறித்த இந்தத் தொடர் நாளுக்குநாள் மெருகேறி வருகிறது.

தாய்மாமன் உறவு மிகவும் உன்னதமானது. என்னை அறிந்தவர்களுக்கு என் வாழ்க்கையில் என் உம்மாவின் அண்ணன், என் தாய்மாமா செய்த உதவிகள் தெரியும். என் மாமான்னா எனக்கு உயிர். தான் பெற்றப் பிள்ளைகளைவிட என்மேல் பாசம் மிக்கவர்கள்.

தற்போது இவ்வுலகில் இல்லாத என் மாமாவுக்கு அல்லாஹ் நிரந்தர சொர்க்கத்தைத் தருவானாக.

நினைவூட்டிய அதிரை சித்திக் அவர்களுக்கு மிக்க நன்றி.

ஈனா ஆனா காக்கா பகிர்ந்த நடப்புகளை என் பிள்ளைகளும் அவர்கள்தம் தாய்மாமனும் பழகும்போதினில் கண்டுவருகிறேன்.

இந்தத் தொடரில் இந்த உறவு ஆத்மார்த்தமாகப் பதிவு செய்யப்பட்டிருப்பதாக உணர்கிறேன். இதே செறிவோடு மேற்கொண்டு தொடர வாழ்த்துகள்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது சொன்னது…மேலே சகோ. சித்தீக் அவர்கள் வாழ்க்கைப்பயணத்தில் உறவு முறை என்ற தலைப்பில் குடும்ப உறவு முறை பற்றி அழகுற விளக்கிவருகிறார். பாராட்டுக்கள். இவை அனைத்தும் மார்க்க‌ அறிவுட‌ன் முறையாக‌ பேண‌ப்ப‌டும் உற‌வுக‌ளுக்கு மட்டும் உக‌ந்ததாக உள்ளது.

ந‌ம்மூரில் சில‌ இட‌ங்க‌ளில் ந‌ம் மார்க்க‌த்தை ஒழ‌ப்பி போட்டு விட்டு (த‌ன்ன‌டிச்ச‌ மூப்பில்) தான்தோன்றித்த‌ன‌மாக‌, அதிகார‌ அட‌க்குமுறையில் த‌ன் சொந்த‌ விருப்பு, வெறுப்புக‌ளுக்காக‌ திரும‌ண‌ங்க‌ளை ம‌க்க‌ள் முடித்துக்கொள்கின்ற‌ன‌ர்.

மன‌ம் பிடித்த‌வ‌ளை ம‌ண‌ம் முடித்து பிற‌கு ஏதேனும் கார‌ண‌ங்க‌ளுக்காக‌வோ அல்ல‌து உட‌ல்ந‌ல‌க்குறைவாலோ அவளிடமிருந்து தலாக் மூலம் திருமண விவாகரத்து பெற்று வேறொரு (மறு)ம‌ண‌ம் முடிக்க எந்த‌ ஆட‌வ‌னுக்கும் குடும்ப‌ உற‌வுக‌ள் சிதைந்து போனாலும், வீட்டில் குழ‌ப்பமே த‌லைதூக்கினாலும் அதையெல்லாம் புற‌ம்த‌ள்ளி விட்டு அவ‌னுக்குறிய‌ உரிமையான‌ ம‌றும‌ண‌த்தை மார்க்க‌ம் ஒருபோதும் ம‌றுக்க‌வில்லை/தடுக்கவில்லை. அதே ச‌ம‌ய‌ம் ம‌றும‌ண‌ம் செய்ய‌க்கூடிய‌ நிலையில் உள்ள‌வ‌ன் ம‌றும‌ண‌ம் செய்ய‌ இருக்கின்ற‌ பெண்ணின் நிலையை முன்பே நன்கு தெள்ளத்தெளிவாக‌ அறிய‌க்க‌ட‌மைப்ப‌ட்டுள்ளான். எடுத்தோம், க‌விழ்த்தோம் என‌ முடிவெடுக்க‌ இது ஒன்றும் ம‌னித‌னால் இய‌ற்ற‌ப்ப‌ட்ட‌ மார்க்க‌ம‌ல்ல‌.

ம‌றும‌ண‌ம் முடிக்க‌ இருக்கும் அந்த‌ப்பெண்ணுக்கு முன்பே ஏதேனும் திரும‌ண‌ ஒப்ப‌ந்தம் (நிக்காஹ்) யாருட‌னேனும் ந‌ட‌ந்தேறி இருக்கிற‌தா? அப்ப‌டி ஏதேனும் ந‌ட‌ந்தேறி இருந்தால் அதிலிருந்து அவ‌ள் முன்பே விடுப‌ட்டு இருக்கிறாளா? ம‌றும‌ண‌த்திற்கு அவ‌ள் ஆளாக்க‌ப்ப‌டுவ‌த‌ன் கார‌ண‌ம் என்ன‌? ஏதேனும் குடும்ப‌த்தின‌ரின் அழுத்த‌மா? இல்லை ஆளுமையா? இல்லை வ‌றுமையா? என்ப‌தை எல்லாம் மார்க்க‌ அறிவுட‌ன் ந‌ன்கு க‌ல‌ந்தாலோசிக்காமல் போதிய‌ மார்க்க‌ அறிவ‌ற்ற‌ மூடாத்து ஆண்க‌ளையும், பெண்க‌ளையும் வைத்து எதையோ சொல்லி நியாய‌ப்ப‌டுத்தி (சரிகட்டி) யாருக்கும் தெரியாமல் எங்கோ அழைத்தோ அல்லது கடத்திக்கொண்டு போயோ அவ‌ளுக்கு ம‌றும‌ண‌த்தை நிறைவேற்றி விட்ட‌ன‌ர்.

இர‌ண்டு, மூன்று பிள்ளைக‌ள் பெற்ற‌ பின் அவ‌ளுக்கு முன்பே திரும‌ண‌ ஒப்ப‌ந்த‌ம் (நிக்காஹ்) செய்ய‌ப்ப‌ட்ட‌வ‌னிட‌ம் சென்று விவாக‌ர‌த்து பெற்றுக்கொள்கின்ற‌ன‌ர்.

மார்க்க‌ ரீதியாக‌வும், உல‌க‌விய‌ல் ரீதியாக‌வும் என‌ எந்த‌ வகையில் இது நியாய‌மென்று தெரிய‌வில்லை? ஏதேனும் குடும்ப‌த்தை ப‌ழிவாங்குவ‌த‌ற்கு இது ஒன்றும் பாழாய்ப்போன‌ கேடுகெட்ட‌ சினிமா ப‌ட‌ வாழ்க்கையும‌ல்ல‌. த‌ப்பு செய்து விட்டு பிற‌கு அத‌ற்கு ப‌ரிகார‌ம் தேடுவ‌தெல்லாம் பாதிக்க‌ப்ப‌ட்ட‌ குடும்ப‌ங்க‌ளுக்கு சாம‌ர‌மாய் வீசிவிட‌ப்போவ‌துமில்லை.

அல்லாஹ் தான் ஏதேதோ காரணங்களால் ப‌ல‌வ‌கையிலும் பாதிக்க‌ப்ப‌ட்டு ப‌ரித‌விக்கும் குடும்ப‌ங்க‌ளை காத்த‌ருள‌ வேண்டும்.....ஆமீன்..ஆமீன்...யார‌ப்ப‌ல் ஆல‌மீன்.....

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) சொன்னது…

உறவுகளின் உண்மைகளை உரசிச் செல்லும் நல்ல தொடர்.
தேங்ஸ் காக்கா.

மு.செ.மு. நெய்னா முஹம்மது சொன்னது…

அன்றைய உண்மையான பாசம் பொங்கும் வேசமில்லா உறவுகளெல்லாம் இன்று பணங்காசுகளுக்காகவும், பகட்டு வாழ்க்கைக்காகவும் பல்லிளித்து நிற்கிறது.

பண்ண வேண்டிய அநியாய, அக்கிரம,அட்டூழியங்களையும் செய்து விட்டு பள்ளியாசல்ல போயி தசுமணி உருட்டுவதெல்லாம் யாருக்காக? யாரை ஏமாற்ற?

உண்மையில் த‌சும‌ணிக்கெல்லாம் வாயிருந்தால் "தொடாதே என்னை" என்று ச‌ப்த‌ம் போட்டு சொல்லி விடும்.......

Abdul Razik சொன்னது…

In many views we feel the maternal path of relationship sophisticated than the paternal link. This won’t be affecting all folks; many of their love might be changed.
"There's one sad truth in life
I've found While journeying east and west
The only folks we really wound Are those we love the best"
Nice article to find the maternal way’s love. Congrats Sidheek kaka

Abdul Razik
Dubai

Yasir சொன்னது…

எங்களுக்கு மாமா இல்லாவிட்டாலும் நாங்கள் மாமா-வாக எங்கள் மருமகன்,மருமகள்களுக்கும் இருப்பது பெருமையாக உள்ளது...மாமா-மருமகன்(ள்) பாசம் அளவிடமுடியாதது...உறவுகள் தொடரின் மூலம் எங்கள் உணர்வுகளையும் தொட்டுச்செல்கின்றீகள் சித்திக் காக்கா..தொடர்ந்து எழுதுங்கள்....

ABU ISMAIL சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
ABU ISMAIL சொன்னது…

சகோ. சித்தீக் அவர்கள் உறவுகள் பற்றி சொன்னதில் மாமா உறவு பற்ரி அழகாய் சொல்லி இருக்கிறீர் வாழ்த்துக்கள்.

சகோ. மு.செ. மு. நெய்னா அவர்களின் கருத்து உறவுக்கு சம்பந்தமில்லாமல் இருக்குதே. கொஞ்சம் விளக்கினால் நல்லது. உங்கல் செய்தி பாதிக்கப்பட்டு எழுதுவது போல் உள்லதே.

அதிரை சித்திக் சொன்னது…

அன்பு தம்பி அர அல .....
மூத்த சகோ அன்சாரி காக்கா
அன்பு நண்பரின் இளவல் ஷேக் அலாவுதீன்
கவி சபீர் காக்கா ,சகோ ராஜிக் ,அன்பு தம்பி நெய்னா
தம்பி ஜகபர் சாதிக் .தம்பி யாசிர் .சகோ அபு சுலைமான்
வருகைக்கு நன்றி

உறவுகளை தொடர்வோம்

crown சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும்.அருமையான அலசல் தொடர்!எதார்த்தத்தின் பிரதிபலிப்பு. ஆழ்ந்த நூல் அனுபவம்.தொடருங்கள் இன்னும் உறவுகளின் உணர்வுகளையும், உறசல் மற்றும் உதவி ஆகியவற்றை நல்ல அலசலுடன்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது சொன்னது…

அபுசுலைமான் சொன்னது…

//சகோ. மு.செ. மு. நெய்னா அவர்களின் கருத்து உறவுக்கு சம்பந்தமில்லாமல் இருக்குதே. கொஞ்சம் விளக்கினால் நல்லது. உங்கல் செய்தி பாதிக்கப்பட்டு எழுதுவது போல் உள்லதே.//

சகோ. அபுசுலைமான் அவர்களே, சொந்த பந்த உறவுகளை நல்ல முறையில் பேணி வந்த ஒரு குடும்பத்தில் சில அரைவேக்காட்டு ஆண்களாலும், பெண்களாலும் அவர்கள் ஆசை தீர நாசமாக்கப்பட்டு இன்று நிராயுதபாணியாக நிற்கும் அந்தக்குடும்பத்தின் சோகத்தை இங்கு கொஞ்சம் பகிர்ந்து கொண்டேன்.

பேரு,விலாசமெல்லாம் போட்டு எழுத நாம் ஒன்றும் இங்கு கலியாண கூப்பாட்டிற்கு வரவில்லை. புரிபவர்களுக்கு நன்கு புரியும். புரியாவிட்டால் அத‌ற்கு நாம் பொறுப்ப‌ல்ல‌......

ந‌ல்லா நீங்க‌ளே செத்த‌ நேர‌ம் யோசிச்சி பாத்தீங்க‌ன்னா, இது போன்ற‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் உங்க‌ள் குடும்ப‌ங்க‌ளிலேயே நிச்ச‌ய‌ம் ந‌ட‌ந்திருக்க வாய்ப்புண்டு........

மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) சொன்னது…

நன்றிவுள்ள நல்ல மருமகனாய் சகோ கவிஞர் சபீர் அவர்கள் தனது மாமாவிப்பற்றி நினைவுகூர்ந்தும் நன்றி பாராட்டியும் எழுதி இருக்கிறீர்கள். சில நாதாரிகள் தன் மாமாக்களிடம் நன்றாக அனுபவித்துவிட்டு மறந்து விட்டு திரிகிறர்கள் அவர்கள் இந்த தொடரை படிக்கவேனும் பாராட்டுக்கள் சித்தீக்

மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) சொன்னது…

நல்ல சகோதரன் தான் அருமையான மாமன் ஆகிரான் பிடிவாதம் பிடித்த சகோதரிக்கு அருமை குறையாத சகோதரன்கள் கிடைக்கப்பெற்ற ஒரு மூத்த தலைமுறையை நான் கண்டு இருக்கிறேன்.அதுபோல் சகோதரி சரியில்லை அதனால் நானும் சரியில்லாமல் தான் இருப்பேன் என்கிற இன்றய தலைமுறையையும் நான் காண்கிறேன்? இது காலத்தின் கோலமா வளர்ப்பில் குறையா?