மாமியார் மருமகள் உறவு...
நம்மோடு வாழ்ந்து மறைந்த பெரியவர் சித்தீக் ஆலிம் அவர்கள் வாழ்க்கையை பற்றி கூறும்போது ஒரு உதாரணத்தை கூறினார்கள். புளியம் பழம் போன்று நமது வாழ்க்கை இருக்க வேண்டும். புளியங்காயில் தோலும் அதன் ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொண்டு இருக்கும். அதன் முதிர்ச்சிக்கு ஏற்ப தோலின் பருமன் அதிகரிக்கும். நாளடைவில் தோலும் உட்புறம் உள்ள சதையும் தனி தனியே பிரிந்து விடும். பிறகு தோல் பகுதி ஓடாகவும் உட்பகுதி பழமாகவும் மாறிபோகும். புளியம்பழத்தை தனியாகவும் இலகுவாகவும் பிரித்து விடலாம்.
எந்த போராட்டமும் தேவையில்லை அதை போன்று நம் வாழ்வில் இளம் வயதில் வாழ்வில் பிடித்தமாக வாழவேண்டும் காலம் செல்லச் செல்ல வாழ்வின் பிடித்தங்களை குறைத்துக் கொள்ள வேண்டும் உலக நப்பாசைகளை குறைத்துக் கொள்ள வேண்டும். உறவுகளின் உரிமைகளை குறைத்து கொள்ள வேண்டும். அப்படி குறைத்துக் கொண்டால் எந்த பிரச்சனைகளும் வராது என்று அந்த நல்ல மனிதர் கூறிய கருத்து இந்த மாமியார் மருமகள் உறவு பற்றிய ஆக்கத்திற்கு பொருந்தும் என்பதால் இந்த கருத்தை கூறி துவங்குகிறேன்.
மாமியார் கொடுமை.
ஒரு பெண் பல பிள்ளை பெற்றடுத்த தாயாக இருந்தால் அனைத்து பிள்ளைகளிடமும் பாசம் கொடுத்து அன்பை பெறுவாள். அந்த தாய்க்கு பாசத்தின் ஏக்கம், அன்பின் குறைகள் இருக்காது. அதேபோன்று உடன் பிறந்தோர் கூடுதலாக இருக்கும் பெண்ணுக்கும் பாசம், அன்பின் ஏக்கம் இருக்காது. இதை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் நான் பார்த்த மாமியார் கொடுமைகளுக்கு முக்கிய காரணம் தான் பெற்ற மகனிடம் முழு ஆதரவும் தன்னை சார்ந்தவர்களை கவனிக்க வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பு மகனின் மனைவியால் (மருமகளால்) தடைபட்டு போகுமோ என்ற எண்ணத்தால் மருமகள் மீது கோபம் கொள்ளத் தோன்றும்.
ஒரே மகனை பெற்ற தாய் மகன் மீது கொண்ட பாசத்தால் கல்யாணம் முடித்து கொடுத்த சில காலங்கள் கழித்தும் கூட மகன் தனது மனைவி மீது கொள்ளும் அன்பு ஈடுபாடுகளை மனைவிக்கு கொடுக்கும் அன்பளிப்பு. இவைகளெல்லாம் தனது கவனத்திற்கு வராமல் நேரடியாக செல்லும்போது அந்த தாய் தன் மகன் தன்னை விட்டு பிரிந்து விடுவானோ என்று கருதத் துவங்குகிறாள்.
சில சமயங்களில் மகனிடம் இந்த மணக் குறைகளை சொல்லி அழும் தாயை சமாதானம் செய்யாமல் மகன் உரிமையாய் தாயிடம் கோபம் கொள்ளும்போது தாயானவள் மகன் மீது வெறுப்பு கொள்ளாமல் மருமகள் மீது கோபம் அவர்களது வாழ்க்கையில் இடையூறு செய்யும் வில்லியாக மாமியார் மாறும் . சில சமயங்களில் மருமகள் என்ற உறவு அறுந்து போக தனது சூழ்ச்சியால் விவாகரத்து பெரும் அளவிற்கு சென்று விடுகிறது. இதற்கு இருவரும் நேசிக்க கற்றுக்கொள்ள வேண்டும் .அவர்களின் நலனில் பங்கு கொள்ளும் ஒருத்தியாக மாற வேண்டும். இரண்டாவதாக கணவன் என்ன வசதியாக இருந்தாலும் விலை மதிப்பு மிக்க பரிசுகள் அல்லது எதிர்பார்ப்புகளை தவிர்க்க வேண்டும் சகோதர உறவுகள் மீது காட்டும் பாசம் மாமியார் தரப்புகளை பாதிக்காத வண்ணமாக பார்த்துக்கொள்ள வேண்டும். இதற்கான காரணங்களை சம்பவங்கள் மூலம் விளக்க விரும்புகிறேன்.
பிரியமான மகனுக்கு உலகாசை சற்றும் குறையாத அம்மா நல்ல குடும்பத்தில் மணமுடித்து கொடுக்கிறாள். தனது மகன் என்ற எண்ணமே மேலோங்கி நிற்க மணமாகி சில நாட்களிலேயே மகன் வெளிநாடு செல்ல ஏற்பாடாகி அங்கே சென்று விடுகிறான். பாசமிகு மகனிடமிருந்து பணமழை பணமழை பொழிகிறது. நாட்கள் வருடங்களாக கடக்க இரண்டு மூன்று விடுப்புகளில் மகன் ஊர் வந்து திரும்புகிறான். சண்டைகள் சச்சரவுகளுக்கு இடையே மூன்று பிள்ளைகள் பிறந்து விடுகிறது இன்னும் தாய்க்கு மகனாகவே இருக்கிறான். மனைவி இடத்தில் நடக்கும் பிணக்குகளை அன்றாடம் ஒப்புவிக்கிறான் விரிசல் ஏற்படுகிறது.
மனைவி தரப்பிலும் தனது தாய் வீட்டு பக்கமே ஆதரவு திரட்ட மூன்று பிள்ளை தாய் விவாகரத்து செய்யப்பட்டு நாடு வீதிக்கு வந்து விட்டாள். இன்னும் தாய்க்கு மகனாக இருக்கும் அவன் மறுமண முடித்து கொள்கிறான். பிள்ளைகளின் நிலை பாவகரமானது முதல் மனைவி செய்த குறை கணவன் தரப்பை நேசிக்காதது. தனது தாய் வழியே கடைசி வரை காப்பாற்றும் என்ற நம்பிக்கை தவறான முடிவுக்கு கொண்டு வந்து விட்டது. இந்த நிகழ்வுக்கு காரணம் யார் நீங்களே கூறுங்கள்.
விவாகரத்து நடக்கும் அளவிற்கு இரண்டு பெரும் காரணங்கள் உண்டு ஒன்று கல்யாணம் முடிந்த சில காலங்களிலேயே கணவன் தனக்கே என்ற வியூகம் அமைத்து செயல்படுவது அதனால் எதிர்தரப்பு எதிர்வியூகம் அமைப்பர். இரண்டாவது காரணம் தனது தரப்பு சொந்தங்களை உயர்வாக பேசி குலப்பெருமை பேசுவது இதன் மூலம் பகைமை கூடுதலாகும். எனவே, இதற்கு எதிர் மறையாக கணவன் தரப்பை நேசித்தல் கணவன் தரும் வெகுமதிகளை மாமியார் நாத்தனார்களுக்கு பகிர்ந்து அளிக்க முற்படுவது மூலம் மாமியார் தரப்பில் நல்ல மதிப்பை பெறலாம்.
அடுத்த அத்தியாயத்தில் மருமகள் கொடுமையை பற்றி கூறுகிறேன்…
அதிரை சித்தீக்
12 Responses So Far:
சகோதரர் சித்திக்,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
நீங்கள் குறிப்பிடும் சம்பவத்தில் ஒரு விதமான கணக்கிடப்பட்ட வாழ்க்கைமுறை (calculated lifestyle) மனத்தை உருத்துகிறது. இப்படியுமா இருக்கிறார்கள் மனிதர்கள்?
மூன்று குழந்தைகள் என்றான பின்னரும் விவாக ரத்துக்குப் போகும் அளவுக்கு என்றால் அவர்கள் வாழ்ந்தது வாழ்க்கையா? அவர்களுக்குப் புரிய வைக்க பெரிய மனிதர்கள், பஞ்சாயத்தார்கள் என்று யாரும் வரவில்லையா?
இரத்த்ச் சொந்தங்களே சுயநலக்கூட்டுக்குள் முடங்கி வாழும் இக்கால வாழ்க்கைமுறையில் வந்து சேரும் பந்தங்கள் செழிப்பது சந்தேகத்துக்குரியதே.
அன்பு என்னும் அஸ்திவாரத்தை உறுதியாகப் போடாதவரை இந்தத் தலைப்பிட்ட உறவு சுமுகமாகத் திகழ வாய்ப்புகள் குறைவு.
மேற்கொண்டு சம்பவங்களாலும் தீர்வாக சாத்தியக்கூறுகளாலும் இந்தத் தலைப்பை விரிவு படுத்தவும்.
அன்புடன் சபீர்.
வாழ்க்கை பயணத்தில் ! நாம் தொழிலில் எவ்வளவு புத்திசலித்தனத்தை காட்டுகிறோமோ, நம் குடும்ப வாழ்விலும் சமயோஜித புத்தியை பயன் படுத்தியே ஆகவேண்டும் மனைவிக்கு கொடுக்கும் அன்பிலும் சரி தாய்க்கு கொடுக்கும் மரியாதையிலும் சரி, அப்பழுக்கில்லாமல் நடந்தால் பிரச்சனைகள் பெரிதாகாது இருகண்களுக்கு நாம் தரும் கவனிப்பு இதற்கும் பொருந்தும் .
மு.செ.மு.சஃபீர் அஹ்மது
தொழிலதிபர் சஃபீர் அவரகளே,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
தொழிலில் ஜெயிக்க புத்திசாலித்தனம் வேண்டும், மாற்றுக்கருத்தில்லை. குடும்ப உறவுகள் செழிக்க புத்திசாலித்தனம் என்பது கூட்டிகழித்தால் சுயநலத்திலேயே கொண்டுபோய் சேர்க்கும்
// மனைவிக்கு கொடுக்கும் அன்பிலும் சரி தாய்க்கு கொடுக்கும் மரியாதையிலும் சரி, அப்பழுக்கில்லாமல் நடந்தால் பிரச்சனைகள் பெரிதாகாது//
மேற்சொன்ன கருத்தில் துளியளவும் எனக்கு உடன்பாடில்லை. அதென்ன? மனைவிக்கு அன்பு; தாய்க்கு மட்டும் மரியாதை?
மனைவியைவிட தாய்க்குத்தான் அன்பு செலுத்த வேண்டும். மகனிடமிருந்து ஒரு தாய்கூட மரியாதையை எதிர்பார்க்க மாட்டார்; அன்பை மட்டும்தான் அதுவும் தூய்மையான அன்பை மட்டும்தான் எதிர்பார்ப்பார்.
மனைவியையும் தாயையும் அன்பால் கட்டிப்போட்டு அரவணைப்பால் புரிய வைத்து கவனமாகக் கையாண்டால் பிரச்னை ஏற்படாது. இது நான் அனுபவித்து வருவது என்பதால் ஆணித்தரமாக அடித்துச் சொல்ல இயலும்.
உறவுகள் பற்றிய தொடர்
முழுமை பெறும்போது
இன்ஷா அல்லாஹ் தீர்வுகலுடன்
நிறைவு பெரும் ..சகோ .,கவி சபீர் காக்காவின்
ஆதங்கம் .தங்களின் நல்ல மனதை
காட்டுகிறது ....
அன்பு நண்பன் சபீர் ..,உனது பார்வை
தற்கால தலைமுறைகளின் எதிர்பார்ப்புக்கு
ஏற்ற வழி மீனுக்கு வாலையும் பாம்புக்கு
தலையையும் காட்டும் விலாங்கு மீனை போல
இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டால் வாழ்கையை
நடத்த கையால் வேண்டி வரும் ..
முடிவுரையில் ..தனி தனி உறவுகளின்
பங்கு என்று விரிக்கும் போது எழுதுகிறேன்
வருகைக்கு நன்றி
//மனைவியையும் தாயையும் அன்பால் கட்டிப்போட்டு அரவணைப்பால் புரிய வைத்து கவனமாகக் கையாண்டால் பிரச்னை ஏற்படாது. இது நான் அனுபவித்து வருவது என்பதால் ஆணித்தரமாக அடித்துச் சொல்ல இயலும்.\
கவிவேந்தரின் பாதையே என் பாதையும்.
உறவுகளில் இது உயிர்!
மூத்தோர்களின் அனுபவங்கள் உன்னிப்பாக கவனிக்க தக்கவை.
உங்கள்களின் மகிழ்வே, எனது மகிழ்வும் நிம்மதியும் என வெளிப்படையான எண்ணமும் துளியும் சந்தேகமில்லாத நல்லெண்ணமுள்ள உம்மாவை அடைந்தவர்களிடத்தில் உம்மா-மருமகள் உறவு நிச்சயம் பிரகாசமாயிருக்கும்.
இரண்டு கவிஞர்களும் எனது கருத்திற்க்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்
எனது கருத்தை தெளிவு படுத்த விரும்புகிறேன் புதிதாக கல்யாணமான மாப்பிள்ளைக்குச்சொன்னவிஷயமது காரணம் தன் தாயை அன்பென்ற பெயரால் வா போ என்ற ஓர்மை வார்த்தைகளை மகன் உபயோகித்துக்கொண்டிருப்பான்.
கல்யானமான சமயம் தன் மனைவியின் கருத்தை ஏற்று தாயிடம் நீயெல்லாம் அந்தக்காளத்து பெண் உனக்கெல்லாம் ஒன்றும் தெரியாது அந்தக்காளம் வேரு இந்த கல்ச்சர் உனக்குப்புரியாது என்று தன் மனைவி எதிரிலேயே தாய் பார்த்துக்கேட்பவர்கள் இருக்கிரார்கள் அப்படிப்பட்டவர்களுக்கு(அந்த வயதினருக்கு)தாயிடம் மரியாதை வேண்டும் என சொன்னேன் அன்பை விட மரியாதை எந்த விதத்திலும் குறைந்ததல்ல
//மகன் மீது கொண்ட பாசத்தால் கல்யாணம் முடித்து கொடுத்த சில காலங்கள் கழித்தும் கூட மகன் தனது மனைவி மீது கொள்ளும் அன்பு ஈடுபாடுகளை மனைவிக்கு கொடுக்கும் அன்பளிப்பு. இவைகளெல்லாம் தனது கவனத்திற்கு வராமல் நேரடியாக செல்லும்போது அந்த தாய் தன் மகன் தன்னை விட்டு பிரிந்து விடுவானோ என்று கருதத் துவங்குகிறாள்.//
இது உலகம் முழுதும் எந்த நாட்டு தாயும் (எனக்கு தெரிந்து பரவலாக பலநாட்டுக்காரர்களிடம் பேசியவகையில்)இதே மனநிலையில் மருமகள்/மாமியர்ர்/மகன் இடையே பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கிறது. இதுலே நம்மூர் மட்டும் விதிவிலக்கா என்னா?
உள்ளதை உள்ளபடியே சொல்லி உள்ளத்தை உரசிப்பார்க்கும் தொடர்...சித்திக் காக்கா தங்கள் கூறி இருக்கும் பெரும்பான்மையாக சம்பவங்கள் நடந்தெறிக்கொண்டுதான் உள்ளன....எதையோ தவறவிடுகின்றோம் அது 100% அன்பின்மைதான்...தொடர்ந்து எழுதுங்கள்
மாமியார் தன் மருமகளைத் தன் விருப்பப்படியே நடக்க வேண்டும் என்று இன்னும் பழங்காலப் போக்கில் அடக்கி ஆள நினைத்தால், இக்காலத்தில் படித்துப் பட்டம் பெற்றுள்ள மருமகள் இப்படிப்பட்ட மாமியாரின் அடக்குமுறைகளை எப்படி ஏற்றுக் கொள்வாள்? இன்னமும் இந்த மாமியார்கள் வீம்புப் பிடித்தால் அன்பு எப்படி உருவாகும்? நமதூரில் பெண்பிள்ளைகளைத் தன் உம்மாவின் கண்காணிப்பில் இருக்கவே விரும்பித்தான் மாமியார் வீட்டிற்கு நிரந்தரமாக அனுப்புவதில்லை;அதன் காரணமாகவே வீடு கொடுக்கும் பழக்கம் ஏற்பட்டது. மாமியார்களின் அடக்குமுறைகளைக் கண்டு மனம் நொந்து, அதனால் உடல் மற்றும் மனரீதியான நோய்க்கு ஆளான மருமகள் பற்றி உங்களின் அடுத்த ஆக்கத்தில் எழுத வேண்டுகிறேன்.
அன்பு தம்பி ஜாபர் சாதிக்
கவியன்பன் கலாம் காக்கா
சகோ மாலிக் .மற்றும் தம்பி யாசிர்
ஆகியோர் வருகைக்கும் கருத்திற்கும்
நன்றி ..
Post a Comment