Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

வாழ்க்கைப் பயணத்தில் உறவுகள் - 5 18

அதிரைநிருபர் பதிப்பகம் | September 26, 2012 | , ,

அண்ணன் தம்பி உறவு…

தாய்-தந்தை உறவு போல ஒரே கண்ணோட்டத்துடன் அண்ணன் தம்பி உறவை ஒப்பிட முடியாது. ஐந்து வயதிலிருந்து பதினைந்து வயது வரை, உரிமைப் போராட்டம்..! எனக்கு வேண்டும்..! என்ற பிடிவாதம் பிடிக்கும் தம்பி. தன் சொல் கேட்க வேண்டும் என்று அண்ணனும் அவ்வப்போது போடும் சிறு-சிறு சண்டைகள் நிகழ்ந்தாலும், வீட்டிற்கு வெளியே வந்து விட்டால் தம்பியின் பாதுகாவலனாக மாறுவதுதான் வினோதம்.

செல்வசெழிப்புடன் வாழும் குடும்பத்தில் பிறந்த சகோதரர்களுக்குள் இளம் வயதில் அவ்வளவாக பிணக்குகள் வருவதில்லை ஏனெனில், இருவரின் தேவைகளும் தனி தனியே நிறைவேற்றப் படுவதால் என்றுமே சமாதானம்தான். ஆனால், அங்கே பாசப் பினைப்புகளில் குறைகள் ததும்பும். வசதிகள் குறைவான குடும்பத்தில் பிறந்து வளரும் அண்ணன் தம்பிகள் மத்தியில் பாசங்கள் என்றுமே கூடுதலாக இருக்கும். 

இவர்களில் மூத்த அண்ணன் வளர்ந்து ஆளாகி உழைத்து பொருளீட்ட ஆரம்பித்து விட்டால் அண்ணன் தான் ஹீரோ. அண்ணணின் சொல் அரசு உத்தரவு போல் உடனே அமுலாக்கும் தம்பிகள் வெளிநாடுகளில் வேலை பார்க்கும் அண்ணன்மார்கள் தம்பிகளின் உரிமைகளின் நாயகன். தனக்கு தேவையானதை பெற துடிக்கும் துடிப்பு தம்பிகளின் ஆர்வத் துடிப்பு அது உரிமைகளின் உயிர் துடிப்பு.

என் அண்ணன் என்று சொல்லி பெருமிதம்படும் தம்பிகளின் சந்தோசத்திற்கு அளவே கிடையாது. தம்பிகளின் அந்த உரிமையை தம்பிகளிடமிருந்து பிரிப்பது என்பது இயலாத காரியம். தம்பிகளின் மனதில் ஆழ பதிந்திருக்கும் அந்த உயிர் மூச்சு போன்ற உரிமையை பிரிக்க அண்ணனுக்கு திருமணம் என்ற பந்தத்தின் மூலம் ஏற்ப்படும் உறவு அண்ணனின் மனைவி அண்ணியால் மட்டுமே முடியும். 

உறவின் வலிமை யாருக்கு அதிகம் யார் உரிமை அதிகம் பங்கு உள்ளவர்  என்று பார்க்கும்போது அண்ணனின் மனைவிக்குத்தான். என்றாலும், உயிரோடு ஒட்டிய உறவான தம்பிகளை பிரிக்க நினைக்கும் அண்ணி கொஞ்சம் கொஞ்சமாக வெண்ணெய்யில் மயிலிறகை போல மிக நளினமாக தன் வயப்படுத்திக்கொள்ளல் வேண்டும். இதன்  கால அளவு குறைந்தது பத்து வருடங்கள் எனலாம். ஆனால், மணந்த மறு நிமிடமே தன வசம் வரவேண்டும் என்பதன் விளைவுதான் குடும்பத்தில் தேவையில்லாத சச்சரவுகள்.

ஒரு தாய் மக்கள், என் அண்ணன் எனக்கு சொந்தம் என்ற உணர்வு பதினைந்து வயது பாலகனிடம் இருக்கும். தம்பியும் பாச உணர்வை அறுத்தெறிய வேண்டும் என்று முனையும் புது உறவான அண்ணனின் மனைவியின் முயற்சி சில சமயங்களில் மிகவும் மோசமாக செயல்பட்டு தம்பியின் உணர்வின் உயிரை பிரிக்க காரணமாக இருப்பார்.  தந்தை காட்டும் பாசத்தின் இரண்டாம் பகுதியாக அண்ணன் காட்டும் பாசம் அமைந்திருக்கும். 

கல்யாணமாகி சில வருடங்களில் திசை திரும்பிய ஏவுகணைபோல் அதி வேகமாக தம்பி மீது கொண்ட பாசம் மறைந்து போகும். இது ஒரு வகையில் அண்ணனுக்கு பாதகமாக கூட அமையும் கல்யாணமாகி மனைவி வகையில் கிடைத்த உறவு பலமாக இருக்கும்பச்சத்தில் தம்பியின் உறவு இல்லை என்று போகும். அண்ணன் மனைவி பாதகியாய் அமைந்து அண்ணனுக்கு துர்சம்பவங்கள் நிகழ நேரிட்டால் தம்பியின் உறவு கைகொடுக்கும் அண்ணன் தம்பி உறவு நீடிப்பது பெற்றோர்களுக்கு கடைசி காலத்தில் மன நிறைவை கொடுக்கும். 

தாய் தந்தையர் தமது தாம்பத்யம் வெற்றி பெற்றதாக எண்ணுவர். தாய் தந்தையரின் தாம்பத்யத்தை புனிதமாக கருதும் ஒவொருவரும் தன் உடன் பிறந்தோரை அன்புடன் பேணுவர். நூற்றாண்டு காலம் கடந்து வெற்றி நடை போடும் நிறுவனகளின் பின்னணி அண்ணன் தம்பி உறவின் வலிமையே பாராம்பர்யமாக பேசப்படும் பல குடும்பங்களின் பின்னணியும் உடன்பிறப்புக்களின் ஒற்றுமையின் பின்னணிதான்.
தொடரும்...
அதிரை சித்தீக்

PLEASE VISIT OUR NEW WEBSITE https://adirainirubar.in/ 

18 Responses So Far:

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அண்ணந்தம்பி உறவு பற்றிய நிகழ்வுகள் நீங்கள் சொல்லியும் காதில் விழுந்தும் அறிய முடிகிறது. ஆனால் அனுபவத்திற்கு அப்படிப்பட்ட உறவு வாய்க்க வில்லை காக்கா.

Iqbal M. Salih said...

நன்று. சகோ.சித்தீக்,

உலக இயல்பையும் அதிரை நிகழ்வையும் நீங்கள் சுட்டிக்காட்டி உள்ளீர்கள்.

ஆனால், குர்ஆனையும் நபிவழியையும் அடிப்படையாகக்கொண்ட சகோதரர்களை எந்த அண்ணியாலும் பிரித்துவிட முடியாது! இஸ்லாத்தின் அடிப்படையில் இனிய இல்லறச்சோலையை அமைத்துக்கொண்ட தம்பதிகளை
எந்த மோசமான சகோதரனாலும் பிரித்துவிடவும் முடியாது!

மொத்தத்தில்,சிறுவயதிலேயே பாசத்தோடு சேர்த்து, தெளிவான மார்க்கத்தையும் போதிப்பதில் பெற்றோருக்குப் பெரும் பங்கு இருக்கிறது.
தெளிவான மார்க்க அறிவு பெற்றவன், எந்தப்பிரச்னை வந்தாலும் தன் இறைவன் அருளிய கிதாபையும் தன் தலைவரின் (ஸல்) வழிகாட்டலையுமே நோக்கி நிற்ப்பான்.வெற்றியையும் வென்றெடுப்பான் இன்ஷா அல்லாஹ்!

Ebrahim Ansari said...

// நூற்றாண்டு காலம் கடந்து வெற்றி நடை போடும் நிறுவனகளின் பின்னணி அண்ணன் தம்பி உறவின் வலிமையே பாராம்பர்யமாக பேசப்படும் பல குடும்பங்களின் பின்னணியும் உடன்பிறப்புக்களின் ஒற்றுமையின் பின்னணிதான்.//

உண்மைதான். நமக்குத்தெரிந்து பல உதாரணங்கள் உள்ளன.

ஐந்து வயதில் அண்ணன் , பத்து வயதில் பங்காளி என்று சொல்வார்கள். குடும்பத்தில் மூத்தவனாகப் பிறந்தவர்கள், தனக்கு இளையவர்கள் காலத்துக்கும் மாறாத அன்பையும் பொழிந்து அவர்களது உரிமைகளையும் மதித்தால் பிரச்னை எழாது.

அண்மைக்காலங்களில் நமதூரில் எனக்குத்தெரிந்து அண்ணன் தம்பிகளுக்குள் அடிதடி, காவல்துறை வழக்கு என்பவை கணிசமாக தென்படுகிறது. இதற்குக் காரணம் வாப்பா உம்மா சேர்த்துவைத்த சொத்து, அதை பங்கிடுவதில் அவரவர் காட்டும் பாகுபாடுகள், பங்காளி துரோகம் ஆகியவையே.

சமீபத்தில் என்னை ஒரு பால்ய நண்பர் , "நீங்கள் அண்ணன் தம்பி மூன்று பேராக இருந்தீர்களே.ஒற்றுமையாக இருக்கிறீர்களா என்று கேட்டார். நான் ஆமாம் அல்ஹம்துலில்லாஹ் காரணம் எங்களின் வாப்பா உம்மா எங்களுக்கு படிப்பைத்தவிர வேறு எதுவும் சொத்தை விட்டுப்போகவில்லை என்று கூறினேன்.
தம்பி இக்பால் அவர்கள் கூறுவதுபோல் தேவையான மார்க்க அறிவு இல்லாமை பெருங்குறைபாடு ஆகும்.

அண்ணன் என்னடா தம்பி என்னடா
அவசரமான உலகத்திலே
ஆசை கொள்வதில் அர்த்தம் என்னடா
காசில்லாதவன் குடும்பத்திலே .

தாயும் பிள்ளையும் ஆனபோதிலும்
வாயும் வயிறும் வேறடா
சந்தைக்கூட்டத்தில் வந்த மந்தையில்
சொந்தமென்பது ஏதடா - என்கிற விரகிதியான எண்ணங்களுக்கு இடையில்,

முத்துக்கு முத்தாக
சொத்துக்கு சொத்தாக
அண்ணன் தம்பி பிறந்து வந்தோம் கண்ணுக்கு கண்ணாக
அன்பாலே இணைந்து வந்தோம் ஒன்னுக்குள் ஒன்னாக

ராஜாக்கள் மாளிகையும் காணாத பந்தமடா
நாலுகால் மண்டபம் போல் நாங்கள் கொண்ட சொந்தமடா' என்று அண்ணன் தம்பிகள் உறவை மார்தட்டி சொல்வதும் இருக்கிறது.

நிலையற்ற வாழ்வுக்காகவும் , சொத்துக்காகவும் நிலையான பாசத்தை விட்டு விலகிப்போகும் நிலை மாறுமா?


Yasir said...

சகோ.சித்தீக் அவர்களின் தொடர் பல உண்மைகளை சொல்லி இருக்கின்றது...ஒரு சில குடும்பங்களில் இந்த மாதிரி வருந்ததக்க சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றது...ஆனாலும் சில அண்ணிகள் உம்மாவைப்போல மச்சினனை அன்புகொண்டு கவனிக்கின்றார்கள் ...வளர்ப்பு முறை சரியில்லாததாலும்,வனப்பு அதிகமாக இருப்பதாலும் இந்த மாதிரி சம்பவங்கள் நடக்கின்றன...இறை பயமும் பொறுமையும்,தான் ஒரு நாள் ஒண்ணும் இல்லாமலும் இறந்துதான் போகப்போகிறோம் என்று நினைப்பும் இருந்துவிட்டால் இந்த மாதிரி நிகழ்வுகள் நடந்தெறா

மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) said...

நன்பரின் கட்டுரை பல நபர்களுக்கு நல்ல அறிவுரை பல அன்னிமார்களுக்கு புத்திமதி தன் கனவர் தன்னுடைய தம்பிகளுக்கு உதவுவதால் மேலும் பரகத் தான் என்பதை அன்னிகல் உனரவேன்டும். மேலும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்

KALAM SHAICK ABDUL KADER said...

எல்லாப் உறவுகளிலும் “இக்லாஸ்” எனும் உளத்தூய்மை இல்லாமல் “ஈகோ” எனும் மனோயிச்சையின்படி நாம் பிறரிடம் பழகும் பொழுது தான், பிரச்சினைகள் உருவாகுகின்றன.

அன்புத் தம்பி இக்பால் பின் முஹம்மத் சாலிஹ் அவர்கள் கருத்துரை தான் எல்லாவற்றும்க்குன் அளவுகோல்; குர்-ஆன் மற்றும் ஹதீஸ் எல்லாப் பிரச்சினைகட்கும் தூய வழிகாட்டிக் கொண்டிருக்கும் பொழுது “இல்லாத இடத்தைத் தேடி எங்கெங்கோ அலைகின்றோம்”

ஒரு கையில் இறைவேதம்; மறுகையில் நபி(ஸல்) போதம் இருக்கையில் நமக்கென்ன தயக்கம்?

KALAM SHAICK ABDUL KADER said...

//எல்லாப் உறவுகளிலும்// எல்லா உறவுகளிலும்
//எல்லாவற்றும்க்குன் // எல்லாவற்றுக்கும்

தட்டச்சுப்பிழைத் திருத்திப் படிக்க வேண்டுகின்றேன்

sabeer.abushahruk said...

//குர்ஆனையும் நபிவழியையும் அடிப்படையாகக்கொண்ட சகோதரர்களை எந்த அண்ணியாலும் பிரித்துவிட முடியாது! இஸ்லாத்தின் அடிப்படையில் இனிய இல்லறச்சோலையை அமைத்துக்கொண்ட தம்பதிகளை
எந்த மோசமான சகோதரனாலும் பிரித்துவிடவும் முடியாது!

மொத்தத்தில்,சிறுவயதிலேயே பாசத்தோடு சேர்த்து, தெளிவான மார்க்கத்தையும் போதிப்பதில் பெற்றோருக்குப் பெரும் பங்கு இருக்கிறது.
தெளிவான மார்க்க அறிவு பெற்றவன், எந்தப்பிரச்னை வந்தாலும் தன் இறைவன் அருளிய கிதாபையும் தன் தலைவரின் (ஸல்) வழிகாட்டலையுமே நோக்கி நிற்ப்பான்.வெற்றியையும் வென்றெடுப்பான் இன்ஷா அல்லாஹ்!//

DITTO

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

இம்மையை மட்டும் இலக்காக கொண்டு வாழும் பிற மதங்களில்: அண்ணன் தம்பிகள் (இரண்டு, மூன்று, நான்கு என்று ) தொழில் கூட்டாளிகளாகவும் - கூட்டுக்குடும்பமாகவும் சேர்ந்து வாழ்வதை நான் நிறைய இடங்களில் பார்த்துள்ளேன்.

மறுமையை நம்பும் கூட்டம் பாசத்தை கேள்விக்குறியாக்கி - மன விருப்பப்படி வாழ்வது வேதனைதான்.

அதிரை சித்திக் said...

அன்பு சகோ இக்பால் அவர்களின்
விளக்கம் சரியானதே .ஆனால்
உலக சுக போகத்தில் மயங்கி
நபி வலி மறந்தவர்களை பற்றிய
சாதல்தான் நல்லவர்கள் இருக்கும்
குடும்பம் மனசாட்சி உள்ளவர்கள்
உள்ளவர்கள் பற்றி இத்தொடரின் முடிவில்
தனி நபர் உறவின் பங்கில் கூறுவேன் ..இன்ஷா அல்லாஹ்
முதல்லில் உறவின் ரணங்கள் ...
முடிவுரையில் மருந்து ...

அதிரை சித்திக் said...

அன்பு சகோ இபுறாகீம் அன்சாரி காக்கா
அவர்களின் விளக்கம் மூன்று சகோதரர்கள்
ஒற்றுமைக்கு நல்ல வளர்ப்பே காரணம்
என்றீர்கள் வளைப்பு மட்டுமல்ல ..
தங்களின் நல்ல துணைவியாரும்
நல்லவர்கள் அதுவும் காரணம் ..நாம் நல்லவர்களாக
இருந்தாலும் பின்னணி செய்யும்
பாடுதான் பெரும் பாடு ..இன்ஷா அல்லாஹ்
தொடர் முடிவில் தனி நபரின்
உறவின் பங்கு எழுதுவேன் தங்களின்
பின்னூட்டங்கள் எனக்கு உதவியாக
இருக்கும்

அதிரை சித்திக் said...

அன்பு தம்பி யாசீரின் கருத்து
என் கருத்தை சார்ந்துள்ளது ..
வனப்பும் ,கணவனை வளைத்து
விடுகிறது ...,உம்மாவை போல
கவனிக்கும் அண்ணி ..உதாரண அன்னை
நல்ல கருத்து சகோ ..

அதிரை சித்திக் said...

அன்பு சகோ ..,கவிஞர் சபீர் காக்கா
தங்களின் கருத்தும் இக்பால் காக்கா
கருத்தும் ஒத்த கதாக இருப்பதால்
நபி வழி நடப்பவர்கள் நிச்சயம்
மன சால்சியுடன் நடக்கும் நல்லவர்களே
நான் முதலில் உறவின் ரணங்களை
பற்றி எழுதுகிறேன் முடிவில்
மருந்துண்டு அதற்க்கு தங்களின்
பின்னூட்டங்கள் உதவும்

அதிரை சித்திக் said...

அன்பு சகோ அலாவுதீன் ...
இம்மையை மட்டும் இலக்காக கொண்டு
வாழும் பிற மதங்களில்: அண்ணன் தம்பிகள்
(இரண்டு, மூன்று, நான்கு என்று )
தொழில் கூட்டாளிகளாகவும் -
கூட்டுக்குடும்பமாகவும் சேர்ந்து
வாழ்வதை நான் நிறைய இடங்களில் பார்த்துள்ளேன்.
மறுமையை நம்பும் கூட்டம் பாசத்தை கேள்விக்குறியாக்கி -
மன விருப்பப்படி வாழ்வது வேதனைதான்//...
நல்ல கருத்து காக்கா..நான் புத்தகமாக வெளியிடுவதாக
இருந்தால் தங்களின் கருத்தையும் சேர்த்துக்கொள்வேன் .

அதிரை சித்திக் said...

தம்பி ஜாபரின் கருத்து ..
தங்களுக்கு ..உடன் பிறந்த
காக்காவாக சபீரை
நினைத்துக்கொள்ளுங்கள்.
நீங்கள் காக்கவாக் இருந்து
பாசத்தை பொழிகிறீர்கள் ..
நீங்கள் அன்பு காக்கா தான் ...!

சபீர் (மு .செ.மு ) நீ கூறுவது போல்
பல பேர் வாழ்வில் நடந்த
நிகழ்வுகள் தான் ...

அதிரை சித்திக் said...

அதிரை நிருபரின் ஒரு வாசகி ..!
தொலைபேசி மூலம் கேட்ட கேள்வி ...?
அண்ணி மட்டும் தான் பாதகியா ?
தம்பிமார்களின் மனைவிகள் இல்லையா ..?
சரியான கேள்வி ..!
உறவின் மறு பக்கம் உண்டு ..
சிறுவராக பாசத்திற்கு ஏங்கும்
சிறுவன் தாயாய் பார்க்கும்
அண்ணி ...நீ வேறு நாங்கள்
வேறு என கூறுவதால்
மன பாதிப்பு அதிகம் ஏற்படுகிறது ..!
ஆனால் ..அண்ணன் மன வாழ்வு
பெற்று மன முதிர்ச்சி
அடைந்த நிலையில் தம்பி
மனைவி பாதகியாக இருந்தாலும்
கண்டிக்கும் தகுதியில் அண்ணன்
இருப்பதால் அண்ணனுக்கு
மனதில் பாதிப்பு ஏற்படாது ..!
தம்பி மனைவி தவறு செய்தாலும்
தவறு தவறுதான்... ...

அதிரை சித்திக் said...

ஒருகையில் இறைவேதம் ...
மறுகையில் நபி (ஸல் ) போதனை ...!
மிக சரியானது கவியன்பன் காக்கா
இரண்டையும் மறந்தவர்களை பற்றிய பதிவு
நல்லவர்கள் ..பற்றி புகவதை விட
தவறினை சுட்டி காட்டுவதே
எழுத்தாளரின் கடமை ..!

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு