தந்தை மகன் உறவு
தந்தை மகன் உறவு மிகவும் அபூர்வமானது, பலகீனமானதும் கூட தந்தை மகன் உறவு பலமாக இருக்குமானால் குடும்பம் சிறந்து விளங்கும் .தந்தை மகன் உறவு மேலோங்க மகன் மனதில் தந்தை ஒரு உதாரண புருஷராக, ஹீரோவாக பதிந்திருக்க வேண்டும். வெளிநாடுகளில் வேலை பார்க்கும் நம்மவர்களின் பிள்ளைகள் மனதில் தந்தையை பற்றிய கணிப்பு. அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம் சுரந்து கொண்டே இருக்கும் அமுதசுரபி என்ற எண்ணம் மட்டுமே இருக்கும். பிள்ளைகள் வளரும் முறை கல்லூரிக்கு செல்லும் பருவத்தில் தந்தைக்கு மகன் வைக்கும் கோரிக்கை பெரிதாகும் பட்சம். அதனை தந்தை நிறைவேற்றாத சூழல் ஏற்பட்டால் மகனின் எண்ணம் சுக்கு நூறாக உடைந்து போய் 18 -20 வருட உழைப்பு தியாகம் எல்லாம் காணாமல் போய் விடும் - இது ஒரு விதம் !
தந்தையை ஹீரோவாகவோ வில்லனாகவோ சித்தரிக்கும் பொறுப்பு தாயிடம் உள்ளது. "உனது தந்தை உழைப்பாளி எப்படியும் சாதித்து காட்டுவார், பாவம் அவரின் போதாத காலம் சகல முயற்சியும் கை கூடவில்லை. உங்களை ஆளாக்கியது, உன் வாப்பாவின் உழைப்புதான் என்ன இருந்தாலும் உன் வாப்பா சிறந்த மனிதர்தான் – மகனே” என கூறும் தாய் மகனின் மனதில் தந்தை பற்றிய உணர்வை உயர்வான இடத்தில் வைப்பதன் மூலம் மகன் தந்தை மீது நல்ல மதிப்பை ஏற்ப்படுத்தும் உறவு மேம்படும்.
அதே தாய் “உன் தந்தைக்கு வாக்கப்பட்டு என்ன சுகத்த கண்டேன் ஒரு பட்டு உண்டா? நகை நட்டு உண்டா? என் புள்ள தலையெடுத்து தான் எனக்கு எல்லாம் செய்து போடுவான்” என்று சொல்லும் போது பிள்ளையின் மனதில் அது முள்ளாய் தைத்து விடும். மகனுக்கு தந்தை ஒரு கோழையாக, ஒன்றுக்கும் உதவாத ஒரு ஜந்தாக தெரிவார். தந்தை மகன் உறவு, இங்கே கேள்வி குறிதான்.
மற்றொரு காட்சி - சிறு வியாபாரம் .தந்தையின் உழைப்பு குடும்பம் நடத்தும் நயம் மனைவி மக்களின் தேவையறிந்து நடந்து கொள்ளும் விதம் மனைவி குடும்ப தலைவனின் உழைப்பிற்கு ஒத்தாசையாக மகனை அனுப்பி வைப்பது "தம்பி பள்ளிக்கூடம் விட்டு வந்ததும் .வாப்பாவுக்கு டீ(தேநீர்) கொடுத்து விட்டு அப்படியே வாப்பாவை ஓய்வெடுக்க செய். சிறிது நேரம் நீ வியாபாரம் செய்து வா மகனே” என்று சொல்லும் தாய் அதற்கு இசையும் மகன் இந்நிலை அழகான உதாரணம்.
மகனுக்கு இளமையில் பயிற்சி கிடைக்கும் தந்தையின் சுமைக்கு தனயன் தோல் கொடுக்கும் போது தந்தையின் வாஞ்சையான பார்வை ஆயிரம் துஆக்களுக்கு சமம். களைப்பு நீங்கிய தந்தை மகனிடம் “தம்பி நீயும் பள்ளி கூடம் விட்டு கலைத்து இருப்பாய் விளையாடுவதாக இருந்தால் நீ விளையாடி வா” என்று வாஞ்சையோடு மகனிடம் கூறும் தந்தையின் பதில் மகனின் மனதில் தந்தைக்கு கோட்டை கட்டி சிம்மாசனம் அமைத்து அரசனாக மதிப்பான். நாம் பெரிய ஆளாக போய் வாப்பாவுக்கு ஒய்வு கொடுக்க வேண்டு நாம் இன்னும் பலமாக கால் ஊன்ற வேண்டும் படிப்பிலும் உழைப்பிலும் உயர வேண்டும், என்ற நிலை வர தாய் முக்கிய காரணம் இது ஒரு வகையான ததை மகன் உறவு.
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை, என்ற தமிழ் பழமொழி
தந்தையின் துஆ அல்லாஹ்வினால் ஏற்கப்படும் என்ற நபி மொழியினையும் இங்கு பதிய விரும்புகிறேன் தந்தையை மதிக்க தெரிந்தவன் வாழ்வில் முன்னேறுவான்.
*உள்ளத்தால், அரிவால், உடலால் பலகீனமான தந்தை.
*குடிப்பழக்கம் மார்க்க விரோதமான தந்தை.
*ஊதாரி, உழைக்காத, தந்தை மகன் உறவு பற்றி அலச தேவை இல்லை என்றே நம்புகிறேன்.
விறகு வெட்டி உழைத்து கலைத்து வரும் தந்தையின் கோடாரியை வாங்கி வைத்து ஒரு சொம்பு தண்ணீர் வாஞ்சையாய் கொடுக்கும் மகன்; நெற்றி வேர்வை துடைத்து கனிவான பார்வை ஒன்றை மகன் மீது வீசும் தந்தையின் அன்பு ஆயிரம் நன்றிகளுக்கு சமம்.
ஏர் பூட்டி உழைத்த தந்தையின் ஏர்கலப்பையை வாங்கி வைத்து சேர் படிந்த பாதத்தினை கழுவிட உதவிடும் மைந்தன் வலுவிழந்த தந்தைக்கு மன வலிமையை சேர்க்கும் செயல் தந்தை மகன் உறவு.
ஆனால் நம்மவர் கண் காணா இடத்தில் பாலை மணலில் செந்நீரை வியர்வையாய் ஆக்கி. வியர்வை வெயிலால் உலர்ந்து உப்பாய் மாறி கரிக்க களைப்பாற நிழலில்லா உழைப்பு உழைத்த பணம் காசோலையாய் ஊர் வந்து சேர வீட்டில் குதூகலம். வதங்கிய தந்தையின் உள்ளத்திற்கு மைந்தனின் கடிதம் உரம் சேர்க்குமா என்றால் உதவாது, அடுத்த வீட்டு அப்சல் லாப் டாப் வைத்துள்ளான் நீங்க ஊர் வரும்போது அவசியம் மறவாது எனக்கு வாங்கி வரவும் என்ற கடிதம் இயலாமையால் நெஞ்சை கீறி விடும். அந்த கடிதம் உறவுக்கு கை கொடுக்குமா?
ஊர் வரும்போது பாலையில் உழைத்து வதங்கிய உடலுக்கு புத்தாடை உடுத்தி சோகத்தில் சுருங்கிய கண்கள் குடும்பத்தை கண்ட மகிழ்ச்சியால் மலர்ந்திட தந்தையின் புத்தாடையும், குளிர்ந்த கண்கள் மட்டுமே மகனுக்கு தெரியும். தந்தையிடம் கேட்பான் “லாப்-டாப் எங்கே?!” உழைத்து வந்த தந்தையிடம் கோடாரியை வங்கி வாய்த்த மகனின் உறவு மேம்படுமா? லாப்-டாப் கேட்கும் மகனிடமிருந்து அன்பு கிடைக்குமா? தந்தை மகன் உறவு மேம்படுமா ? நீங்களே கூறுங்கள். கண் காணா உழைப்பு நீரில் எழுதும் வரலாறு வெளிநாடுகளிலிருந்து வாங்கி வரும் அன்பளிப்பு காலப்போக்கில், அன்பை அழிப்பதாகவே அமையும். பணம் சேருங்கள் பின்பு எப்படி உறவு மேம்படும் என்று பாருங்கள்.
நன்றியுள்ள மகன் உழைத்த தந்தைக்கு ஆற்றுவான் தொண்டு ..
(தொடரும் உறவுகள் )
அதிரை சித்தீக்
13 Responses So Far:
வாழ்க்கைப் பயணத்தில் இத்தகவல் மைல்கல்!
//தந்தையை ஹீரோவாகவோ வில்லனாகவோ சித்தரிக்கும் பொறுப்பு தாயிடம் உள்ளது//
இதனாலேயே இருவரின் பிரச்சனைக்குரிய நிகழ்வுகளை பிள்ளைகளுக்கு மத்தியில் வைத்துக் கொள்ள வேண்டாமெனெ அறிஞர் உளவியலார் தெரிவிக்கின்றனர்.
வாரேவா அருமையிலும் அருமை தந்தையின் பொருத்தத்தில் அல்லாஹ் வின் பொருத்தம் இருக்கிறது இதை இளையதலை முறையினர் உனரவேண்டும்
ஏழை தந்தையின் வருத்தம் கலந்த கவிதை வார்த்தை
கல்லூரி செல்லும் மகனுக்கு வாங்கியசெருப்பு அவன் காலை கடித்ததோடு என் கையையும் கடித்தது
சித்தீக் அவர்களின் சிந்தையில் உருவாகிய தந்தை மகன் உறவு பற்றிய இத்தொடரின் பகுதி அருமை. பாராட்டுக்கள்.
உறவுகள் பேணிக் காக்கவேண்டுமென இஸ்லாம் தெளிவாக கூறியுள்ளது. இஸ்லாமியர்கள் நிறைந்த நமதூரில் அன்று உறவுகள் பேணிக் காக்கப்பட்டன. ஆனால் இன்றோ ஊரில் ஆங்காங்கே இஸ்லாத்தைப் பற்றி பயான்கள் பல நடைபெறுகின்றன. மக்கள் அறிவைப் பெறுகிறார்கள். ஆக்கம் ஏதுமில்லையே? உறவுகள் பல விரிசல்களாகவே காட்சி தருகின்றனவே! பெற்றோரும் உடன் பிறந்தோரும் உறவை இழந்து குடும்பங்கள் சின்னா பின்னகமாக சீரழிந்து கிடக்கின்றனரே! பயான்கள் கேட்டதால் என்ன பயன்? உண்மையான இறையச்சத்தை மக்களுக்கு எத்திவைப்பதில்லை.
மாஷா அல்லாஹ் பெருமையாக இருக்கின்றது..இதுபோன்ற எழுத்தாளர்கள் நம்மூரில் இருக்கிறார்கள் என்று..மயிர் கூச்செரியும் ஆக்கம்...கண்டிப்பாக பெண்கள் மத்தியிலும் சென்றடைய வேண்டிய ஆக்கம்...தந்தை மகன் உறவு மேம்பட உண்மையான அன்பு பாசம் தழைக்க இதனைவிட ஒரு அறிவுரை,ஆக்கம் யாரும் தர முடியாது..அல்லாஹ் உங்கள் விசாலமான அறிவைக்கொடுத்து...இன்னும் பல கருத்துக்களையும் அறிவுரைகளையும் வரும் ஆக்கங்களின் தந்திட துவாச்செய்கின்றோம்..பள்ளியில் பாடமாக வைக்க வேண்டிய பொக்கிஷம் இத்தொடர்
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
வாழ்க்கை பயணத்தில் உறவுகள் என்கின்ற தெளிவான சிந்தனையை வளமான வார்த்தைகளால் தோய்த்து எடுத்து தரப்பட்ட விதம் உண்மையில் ஒரு அரிய சமர்ப்பனம் என்றே நான் கருதுகின்றேன். இதுபோன்ற நல்ல சிந்தனைகள் நம்மில் உலாவர வேண்டும் என்பது என்னுடைய அவா.
இன்றைய இளைய தலைமுறையின் வெற்று பேச்சுக்கள் ஒவ்வாத செயல்முறைகள்; உடன்படாத கோட்பாடுகள் இவை அனைத்தும் இஸ்லாத்துக்கு எதிரான வழிமுறைகள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. தாய் தந்தையை பேனுவது சகோதர உறவுகளை வளப்படுத்துதல் இரத்த பந்த பாசங்களை மேம்படுத்துதல் என்கின்ற சித்தாந்தங்களுக்கு எதிர்மறையான விளைவுகளை உருவாக்கி கொண்டு தன்னலத்திற்கு மட்டுமே முன்னுரிமை தந்து கொண்டிருக்கின்றனர் இக்கால இளைஞர் வர்க்கம்.
காலங்காலமாக கட்டி காத்துவந்த கூட்டு குடும்பம் என்கின்ற கோட்டைக்கு வேட்டு வைத்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பதை மறைத்துவிடவும் அல்லது மறந்துவிடவும் முடியாது. எல்லா நேரங்களிலும் மன நிலை ஒரே மாதரியாகத்தான் இருக்கும் என சொல்ல முடியாது ஆதலால் குடும்பத்தில் விட்டுக்கொடுத்து செல்வதனால் ஏற்படும் நன்மைகள் எத்தனை எத்தனையோ.
நம்மை பெற்றவர்களுக்காகவும் நம்முடன் பிறந்தவர்களுக்காகவும் நம்மை நாமே அர்ப்பனிப்பதே தியாகம் இதற்கு உரிய வெகுமதி அல்லாஹ்விடம் இருக்கின்றது. அருமை சகோதரர் நூர் முகம்மது அவர்களின் கூற்றையே இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன் என் மகன் உலகை வலம் வர வேண்டும் நாம் உய்வு அடைய வேண்டுமென்ற ஆவலோடு பாடுபட்ட பெற்றோரும் உடன்பிறந்த சகோதர சகோதரிகளின் உறவுகள் சின்னா பின்னமாக்கப்பட்டு குடும்பங்கள் வீதியிலே சீரழிந்து கிடக்கின்ற இந்நிலை மாறிட எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் இருகரமேந்தி துவா செய்வோமாக (ஆமீன்).
ஏ.எம்.முகம்மது மீராசா
சவுதி அரேபியா
சித்திக் அவர்களின் உறவுகள் சிந்தையை கவர்ந்தது
அடுத்த பேசும் படத்தில் சித்திக் சிந்தையை கவர்ந்த பேசும்படம் ஒன்று வர உள்ளது
அஸ்ஸலாமு அலைக்கும். இங்கே உறவின் வலிமையும், அதன் வலியும் எதன் வழி உறவு செல்கிறது என்பதையும் விழியில் ஆனந்த கண்ணீர் வழியும் படியும். அற்புதமாக சொல்லபட்ட தந்தையின் தியாகம் அதன் விளைவுகள் யாவும் அற்புதம்.
சரியாகச் சொன்னீர்கள் கிரவுன்.
இருப்பினும், சித்திக் பாய் ரொம்பத்தான் தந்தைக்குச் சாதகமாக எழுதியிருப்பதாக எனக்குப் படுகிறது. மகன் பார்வையில் இன்னும் அழுத்தமாக எழுத வேண்டும் என்பது வேண்டுகோள்.
sabeer.abushahruk சொன்னது…
சரியாகச் சொன்னீர்கள் கிரவுன்.
இருப்பினும், சித்திக் பாய் ரொம்பத்தான் தந்தைக்குச் சாதகமாக எழுதியிருப்பதாக எனக்குப் படுகிறது. மகன் பார்வையில் இன்னும் அழுத்தமாக எழுத வேண்டும் என்பது வேண்டுகோள்.
-------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும் கவிஞர் வேள்! நலமா? ஆமாம் சரிதான் சகோதரர் சித்திக் அவர் பார்த்த வழி முற்றிலும் ஓர் பார்வைதான். மகனின் வழியூடே சென்றும் பார்த்தால் இன்னும் நலம் பயக்கும். இனி வரும் சந்ததிக்கும் சிந்திக்கும் வழி பிறக்கும்.சித்தீக் காக்கா இதை சிந்தித்து மேலும் சில ஆக்கம் இதைப்பற்றி தருவார்களா?
அஸ்ஸலாமு அலைக்கும். சகோ. மீராசா அவர்களும் மிக அருமையான கருத்தை இங்கே பதிந்து இருக்கிறார்கள்.இக்கால இளைஞர்களுக்கு தியாகத்தின் மதிப்பு தடாகத்தில் எழுத்தாய் தெரிகிறது, அது இரத்தம் வரைந்த உயிர் ஓவியம் என்பதும்,வியர்வையால் எழுந்த காவியம் என்பதும் தெரியாமலே போய் விடுகிறது , கணினி படிப்பு தரும் பெரும் சம்பளம் எல்லாத்தையும் ஒரு விலைவைத்து எடைபோட்டுப்பார்க்கிறது.
ஒவ்வொருவரின் தனி பங்களிப்பை பற்றி
ஆய்வின் முடிவில் எழுத உள்ளேன் இன்ஷாஅல்லாஹ்
தங்கமான மகனும் ..இடம் பெறுவார் ..
Post a Comment