"இங்கு எதுவும் முடியும் -‍ என் இந்தியா"

We live in a nation, (நாம் ஒரு நாட்டில் வசிக்கிறோம்)


Where Pizza reaches home faster than Ambulance police, (அவசர கால ஊர்தி உரிய நேரத்திற்குள் வரும் முன், ஆர்டர் செய்த பிஜ்ஜாவோ உடனே வந்து சேர்கிறது)

Where you get car loan @ 5% and education loan @ 12%, (சொகுசு கார் வாங்க வங்கிகள் வரிந்து கட்டிக்கொண்டு மிகக்குறைந்த சதவிகிதத்தில் (5%) வட்டி கொடுத்து பணக்கார வறியவர்களுக்கு உதவுகின்றன. ஆனால் பாமரன் மேற்படிப்பு படிக்க ஆசைப்பட்டால் அதிக வட்டி (12%) விகிதத்தில் படிப்புக்கடன் கொடுத்துதவி தன் தலையாய பணி செய்து வருகின்றன)

Where rice is Rs 40/- per kg but sim card is free, (அத்தியாவசிய உணவு அரிசியின் விலையோ கிலோ 40 ரூபாய் மட்டும் தான். ஆனால் ஆடம்பர மொபைல் போனின் சிம்கார்டுகளோ இலவசமாய் வழங்கப்படுகிறது நம் தாய்த்திரு நாட்டில்)

Where a millionaire can buy a cricket team instead of donating the money to any charity, (பண வெள்ளத்தில் மூழ்கிக்கிடக்கும் பண முதலைகளோ கோடிகள் பல கொடுத்து ஒரு கிரிக்கெட் அணியை எளிதில் வாங்கி விட முடியும் எவ்வித அறக்கட்டளைகளுக்கும் தானமேதும் அளிக்காமல்)

Where the footwear, we wear, are sold in AC showrooms, but vegetables, that we eat, are sold on the footpath, (குளு,குளு அரையில் அன்பான அரவணைப்பில் விற்கப்படும் காலணிகள் பல விதம். அன்றாடம் உண்டு வாழ தேவையான காய்,கனிகளோ தெரு ஓர பாதசாரிகளின் இடத்தில் விற்கப்படும்)

Where everybody wants to be famous but nobody wants to follow the path to be famous, (எல்லோருக்கும் வாழ்வின் உச்சநிலையை எளிதில் அடைய வேண்டும். பத்திரிக்கைகளாலும், ஊடகங்களாலும் தன் பெயர் ஊடுருவிச்செல்ல வேண்டும் ஆனால் அதற்கு காரணமான வழிகளைப்பின்பற்றாமல்)

Where we make lemon juices with artificial flavors and dish wash liquids with real lemon. (எலுமிச்சை பழரசம் கூட செயற்கையில் தயாராகி விடும் எளிதில் அத்தனை பிஸி. ஆனால் பாத்திரம் தோய்க்கும் சோப்பில் கூட நிஜ எலுமிச்சை சேர்க்கப்படும் வாடிக்கையாளர்களைக் கவர)

Where people are standing at tea stalls reading an article about child labor from a newspaper and say, "yaar bachhonse kaam karvane wale ko to phansi par chadha dena chahiye" and then they shout "Oye chhotu 2 chaii laao....." (மக்கள் சாலையோர டீக்கடையில் கையில் செய்தித்தாளின் ஒரு கண்ணோட்டத்துடன் "சிறுவர்களை பணியில் அமர்த்துபவர்களை கடுமையாக தண்டித்து அவர்கள் தூக்கிலிடப்பட வேண்டும்" என்று கோபத்துடன் கூறியவனாய் "டேய் பொடியா சீக்கிரம் ரெண்டு டீக்கொண்டு வா இங்கு" என்று கட்டளை இடுபவர்கள் பல கோடி காண இயலும் என் தாய்த்திரு நாட்டில்).

வல்லரசுகள் என்று கூக்குரலிடும் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் எவ்வித்திலும் போட்டி போட முடியுமா எந்நாட்டுடன்?

Incredible !!!!!!!!

எனக்கு வந்த ஒரு ஆங்கில மின்னஞ்சலின் ஆங்கில மொழி பெயர்ப்புடன் இங்கு உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.

நெய்னா முஹம்மது ‍ சவுதியிலிருந்து

கருத்துகள் இல்லை