நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

ஆங்கில அறிவாற்றல் காலத்தின் கட்டாயம் 1

தாஜுதீன் (THAJUDEEN ) | செவ்வாய், ஜூன் 22, 2010 | , , , ,

கல்வி சம்பந்தமான செய்திகள், வழிகாட்டல்கள், நல்ல கட்டுரைகளை எழுத வேண்டுகோள் விடுத்த அதிரை எக்ஸ்பிரஸ் சகோதரர்களுக்கு முதலில் மிக்க நன்றி. இத்தருனத்தில் எனக்கு LKG முதல் முதுகலை பட்டப்படிப்பு வரை கல்வியை கற்றுத்தந்த அனைத்து ஆசான்களுக்கும் நன்றி.


பல எதிர்பார்பார்ப்புகளுடன் இருக்கும் நம்முடைய இளையோருக்கு சரியான கல்வி மற்றும் வேலை சம்பந்தமான ஆலோசனைகள் மிக மிக அவசியம். இது குறிகிய நேரத்தில் என்னால் முடிந்த சில ஆலோசனைகளை எழுதி இருக்கிறேன். ஏற்கனவே எல்லோரும் அறிந்தது தான் என்றாலும், கொஞ்சம் ஞாபகப்படுத்தலாம் என்ற நோக்கத்தில் அறியத்தருகிறேன்.

10ம் வகுப்பு ரிசல்ட் தான் ஒவ்வொரு மாணவர்களின் எதிர்காலத்தை நிர்னயிக்கிறது என்றால் மிகையில்லை. எடுக்கும் மதிப்பெண்களை வைத்து தான் +1 வகுப்பில் என்ன பாடம் எடுக்க முடியும் என்ற நிலை தான் அனைத்து பள்ளிகளிலும் உள்ளது. நாம் +1 வகுப்பில் எடுக்கும் பாடத்தை பொருத்தே கல்லூரிகளில் இளங்கலை பட்ட பாடங்களும், முதுகலை பட்ட பாடங்களும், அதன் பிறகு வேலை வாய்புகளும் அமைகிறது. ஆகவே +1 வகுப்பில் எடுக்கும் பாடத்தை தேர்வு செய்வதில் மிக கவனமாக இருப்பது அவசியம்.

நம் பள்ளிகளில் உள்ள 1) அறிவியல், 2) கணிதம் 3) கலை 4) மற்றவைகள், இந்த அனைத்து பிரிவுகளும் ஒவ்வொரு வகையில் பல துறைகளில் சிறந்தது. எது எடுத்தால் நல்லது, எது சிறந்தது என்பதெல்லாம் அவரவர் தாங்கள் என்ன துறையில் செல்ல வேண்டும் என்ற குறிக்கோளை பொருத்தது. சாதிக்க வேண்டிய துறைகள் நிறைய இருக்கிறது. இன்ஷாஅல்லாஹ் வரும் நாட்களில் என்னன்ன துறைகள் மிகச் சிறந்தது என்பதை அறியத்தருகிறேன். மற்ற சகோதரர்களும் விளக்கமாக அறியத்தந்தால் மிக நன்றாக இருக்கும். ஊரிலும் வெளிநாடுகளிலும் இருக்கும் நம்மூரைச் சேர்ந்த நிறைய அறிவாற்றலுடைய பட்டதாரி சகோதரர்கள் அறியத்தருவார்கள் என்று நம்புகிறேன்.

12 வகுப்பு முடித்தவர்கள், கல்லூரிக்கு செல்வதற்கு முன்னர் தங்களின் ஆங்கில அறிவை (குறிப்பாக ஆங்கில பேச்சுத்திறமை) சற்று வளத்துக் கொள்வதில் அக்கறை செலுத்துவது மிக மிக மிக மிக அவசியம். இன்றும் அதிரை போன்ற ஊர் பள்ளிகூடங்களில் நம்மால் ஆங்கில பேச்சுத்திறமை வளர்த்துகொள்வதில் சிரமங்கள் இருக்கத்தான் செய்கிறது. (இதற்கு பள்ளிகூடங்களில் நிறைய மாற்றங்கள் செய்யவேண்டும், இதை பிறகு எழுதலாம்). தற்போது English Coaching வகுப்புகள் அதிரையில் இருக்கிறதா என்று தெரியவில்லை. பட்டுக்கோட்டையில் நிறைய இருக்கிறது. சென்னை போன்ற நகரங்களுக்கு சென்று கற்றுக் கொள்ளலாம். மீண்டும் சொல்கிறேன் ஆங்கில அறிவு மிக மிக மிக மிக அவசியம். ஆங்கில அறிவு இல்லாமல் கல்லூரிகளில் படித்து படங்கள் வாங்கிவிடலாம் ஒரு பெரிய விசையமில்லை. படிப்பு முடித்து, வேலை என்று வரும் போது தான் தெரியும் ஆங்கில அறிவின் அருமையை. ஆங்கில அறிவில் கவணம் செலுத்தாத காரணத்தால் நாமும், நம் மற்ற சகோதரர்களும் வேலைகளில் ஆரம்ப நாட்களில் நிறைய கஷ்டங்களை எதிக்கொள்வதை யாரும் மறுக்க முடியாது. இது சிலருடைய உத்யோக முன்னேற்றத்திற்கு தடையாகவும் அமைந்து விடுகிறது.

மாணவர்கள் English Coaching வகுப்புக்கு பந்தாவாக எனோதனோ என்று போகாமல் ஆங்கில பேச கற்றுக் கொள்ளவேண்டும் என்ற ஒரு வெறியுடன் செல்ல வேண்டும். தயவு செய்து இதில் மாணவர்கள் குறிப்பாக +2 எழுதியவர்கள் மிக அக்கரையுடன் கவணம் செலுத்த வேண்டுகிறேன். தன் பிள்ளைகள் கல்வியிலும், தொழில்துறையிலும் நிறைய சாதிக்க வேண்டும் என்று கனவுகானும் பெற்றோர்களும் இதற்கு முக்கியதுவம் கொடுக்குமாறு வேண்டுகிறேன். இதில் அக்கரை செலுத்தினால் இன்ஷா அல்லாஹ் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு துறைகளில் நல்ல வெற்றி கிடைக்கும் என்பது என்னை போன்றவர்களின் ஆணித்தரமான நம்பிக்கை.

இவை அனைத்திற்கும் மேல், வாழ்க்கையில் நிறைய சாதிக்க வேண்டும், நம் பெற்றோருக்கு நல்ல பெயர் வாங்கித்தரவேண்டும், சமுதாயத்திற்கு பல நன்மைகள் செய்யவேண்டும் என்ற ஆரோக்கியமான நீண்ட கால குறிக்கோள் (வெறி) ஒவ்வொரு மாணவர்களிடம் இருக்க வேண்டும், இதற்கு அனைத்து தாய் தந்தையர்கள் ஒத்துழைக்க வேண்டும். எல்லாவற்றிக்கு நம்மை படைத்த அல்லாஹ் அருள் புரிவானாக. பரீச்சைகள் எழுதிய, எழுதிக்கொண்டிருக்கும் நம்மூர் மாணவ, மாணவிகள் அனைவருக்கும் வெற்றியடைய என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளும், துஆக்களும். அல்லாஹ் உங்களுடைய நல்ல எண்ணங்களை நிறைவேற்றி வெற்றியைத் தருவானாக.

இறைவன் நாடினால் இன்னும் கல்வி சம்பந்தப்பட்ட செய்திகளை அறியத் தருகிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.

தாஜூதீன்

1 Responses So Far:

mohamedali jinnah சொன்னது…

நல்ல வழி காட்டி

இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்...

பின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்
அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு