இன்றைய காலகட்டத்தில் கல்லூரி படிப்பு மட்டும் போதாது கூடவே நிறைய விசயங்களும் அறிந்திருப்பது காலத்தின் கட்டாயம். எனக்கு தெரிந்த சில விசயங்கள்
1) சில சகோதரர்கள் எந்த ஒரு வேலை அனுபவங்களே இல்லாமல் ஊரில் காலத்தை வெட்டியா கடத்திவிட்டு, வெறும் டிகிரியை மட்டும் வைத்துக்கொண்டு வெளிநாடுகளுக்கு வந்து தகுதியற்ற வேலைகளில் சேருவதும், வேலை கிடைக்காமல் ஊர் திரும்புவதும் வேதனையான செய்தி. கல்லூரி படிப்புக்கு பிறகு, காலதாமதம் செய்யாமல் குறைந்த பட்சம் ஒரு வருடமாவது சம்பளத்தை எதிர்பார்க்காமல் அனுபவம் பெறவேண்டும் என்ற நோக்கத்தில் நல்ல வேலையை தேர்வு செய்யவேண்டும். கண்டிப்பாக நம்முடைய அடுத்த வேலை மிக நல்ல வேலையாக அமையும். முதல் வருட வேலை நல்ல அனுபவங்கள் நம்முடைய படிப்பு போன்று ஒரு தகுதி (qualification) என்பதை யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை என்று நான் கருதுகிறேன்.
2) நான் ஏற்கனவே ஒரு கட்டுரையில் சொன்னது போல் ஆங்கில அறிவின் அவசியம். பள்ளி, கல்லூரி காலங்களின் ஆங்கில அறிவை வளர்த்துக்கொள்ள தவறியவர்கள், கண்டிப்பாக நல்ல spoken English course சென்று கற்றுக்கொள்வது மிக மிக அவசியம். ஜப்பான் போய் வந்த சகோதரர்கள் சிலர் ஜப்பானிய மொழியில் அதிரையில் பேசிக்கொள்வதை கேட்டிருக்கேன். படித்தவர்கள் யாராவது ஆங்கிலத்தில் பேசினால் கிண்டல் செய்யும் போக்கு இன்னும் நம் மக்களிடம் இருப்பது வேதனை. இந்த நிலையை மாற்ற வேண்டும். அதிரையில் படித்த ஒவ்வொருவரும் படித்துக் கொண்டிருக்கும் தன் வீட்டு பிள்ளைகளின் ஆங்கில அறிவை (பேச்சுதிறனை) அதிகப்படுத்த அடிக்கடி நல்ல ஊக்கம் (encouragement) தரவேண்டும்.
3) வெறும் ஆங்கில அறிவு மட்டும் இருந்தால் மட்டும் நல்ல வேலை கிடைத்துவிடாது. சில குறைகள் நம்மிடம் இருக்கிறதா என்பதை சுயபரிசோதனை செய்து அதை துக்கி எறிய வேண்டும். குறிப்பாக புதியவர்களிடம் பேசும்போது நம்மிடம் ஏற்படும் பயம், வெட்கம், கூட்சம் (nervousness, shyness etc.,) இது போன்ற குறைகளை நம்மிடமிருந்து தூக்கி எறிவதற்கு ஒவ்வொருவரும் personality development and public speaking course படிப்பது மிக அவசியம் என்று என்னுடைய தனிப்பட்ட கருத்து. சென்னை, தஞ்சை, திருச்சி போன்ற நகரங்களில் நிறைய பயிற்சி நிலையங்கள் உள்ளது. கல்லூரி படிக்கும் போதோ, வேலை செய்யும் போதோ இந்த பயிற்சியில் சேர்ந்து நம்முடைய personalityயை உயர்திக்கொள்ளலாம். இவைகள் நம்முடைய வேலைகளுக்கான நேர்முக தேர்வுகளுக்கு (JOB interviews) கண்டிப்பாக நல்ல உதவியாக இருக்கும் என்பது என்னுடை ஆணித்தரமான கருத்து.
என்னுடைய தனிப்பட்ட அனுபவம், 2001ஆம் ஆண்டு நான் இந்த பயிற்சியை சென்னையில் உள்ள Ramanathan public speaking and personality development Instituteல் முன்று மாதங்கள் பயிற்சி எடுத்துக் கொண்டேன். உண்மையில் நான் புதியவர்களிடம் பேசும் போது வரும் என்னுடைய பயம், கூச்சம் போன்றவைகள் எல்லாம் போய்விட்டது. Public speaking skills, group discussions skills, presentations skills, Stress management, time management etc போன்றவைகளில் நல்ல பயிற்சிகள் தருகிறார்கள். இந்த மாதிரியான பயிற்சிகள் பள்ளி, கல்லூரிகளில் அதிகம் கவணம் செலுத்தி தருவதில்லை. இவைகளை பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்கு பயிற்சி தந்தால் நல்ல பயனுள்ளதாக இருக்கும். அதிரையில் இது போன்ற ஒரு பயிற்சி நிலையம் அமைய வேண்டும். இன்ஷாஅல்லாஹ் முயற்சி செய்வோம்.
கல்லூரி தேர்வுகள் எழுதும் அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் என்னுடைய வாழ்த்துக்களும், துஆக்களும். அனைத்து மாணவர்களின் வெற்றிக்கு படைத்த அல்லாஹ்விடம் பிராத்தனை செய்தவனாக விடை பெருகிறேன்.
இன்ஷாஅல்லாஹ் மீண்டும் ஒரு நல்ல கல்வி சம்பந்தமான தலைப்புடன் சந்திப்போம். அஸ்ஸலாமு அலைக்கும்.
ஆக்கம்: தாஜுதீன்
1 Responses So Far:
அருமையான கட்டுரை
Post a Comment