Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

இன்று அதிரையில் வெளியிடப்பட்ட நன்றி நோட்டீஸ் 3

தாஜுதீன் (THAJUDEEN ) | June 25, 2010 | , , , ,

அதிரை உமர் தம்பிக்கு உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் அங்கீகாரம் – நன்றி மடல்

தமிழ்கணிமைக் கொடையாளர் உமர்தம்பி அவர்களின் தன்னலமற்ற தமிழ்ச்சேவைய அங்கீகரிக்கும் வகையில் முதற்கட்டமாக கோவை உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுடன் இணைந்து நடைபெறும் தமிழ் இணைய மாநாட்டின் ஐந்து அரங்கங்களில் ஒன்றுக்கு உமர்தம்பி அரங்கு என்று பெயரிடப்பட்டுள்ளது.


நம் அதிரை உமர் தம்பி அவர்களுக்கு அங்கீகாரம் அளித்த தமிழக அரசுக்கும், தமிழக முதல் டாக்டர் கலைஞர் அவர்களுக்கும், துணை முதல்வர் தளபதி மு. க. ஸ்டாலின் அவர்களுக்கும் எங்களுடைய மனமார்ந்த நன்றி.


தமிழ் இணைய மாநாட்டை நடத்தும் உத்தமம் அமைப்புக்கும், தலைவர், நிர்வாகிகள் மற்றும் அனைத்து உறுப்பினர்களுக்கும் மிக்க நன்றி.


இம்முயற்சியில் முழு முயற்சி எடுத்து முதல்வருக்கு கடிதம் எழுதி, துணை முதல்வர் அவர்களின் கவணத்துக்கு எடுத்துச் சென்ற நமதூரைந் சேர்ந்த அன்பு சகோதரி கவிஞர் மலிக்கா பாருக் அவர்களுக்கும், அவர்களின் முயற்சிக்கு உறுதுணையாக இருந்த சகோதரர். காஞ்சி முரளி அவர்களுக்கும் மிக்க நன்றி.


இம்முயற்சியில் தனிப்பட்ட முறையில் கவணம் செலுத்தி தமிழக முதல்வர்கள் அவர்களுக்கு கடிதம் எழுதி கோரிக்கை வைத்த தமுமுக தலைவர் பேராசிரியர். ஜாவாகிருள்ளாஹ் அவர்களுக்கும், தமுமுக அனைத்து சகோதரர்களுக்கும் மிக்க நன்றி


இம்முயற்சியை முதன் முதலில் ஆரம்பித்துவைத்த அதிரைக்காரன் என்ற அதிரை சகோதரருக்கும், மற்றும் கோரிக்கை செய்திகளை இணையக் கடலில் நீந்தவிட்டு தமிழ் இணைய உலக கவணத்தை உமர்தம்பி பக்கம் திரும்ப வைத்த அனைத்து வலைப்பூ சகோதர சகோதரிகளுக்கும் மிக்க நன்றி.


உமர்தம்பி அவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்க செய்ய தன்னாலான அனைத்து முயற்சிகளையும் திருக்குர்ஆன் மாநாட்டில் மூலமாக தமிழக அரசின் கவணத்திற்கு எடுத்துசென்ற அதிரை பைத்துல்மால் நிறுவனத்துக்கு மிக்க நன்றி.


உமர்தம்பிக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்று தங்கள் தளங்களில் செய்திகள் வெளியிட்ட தமிழ்மணம், விகடன் இணையத்தளங்களுக்கும் மிக்க நன்றி.


இத்தருணத்தில் இம்முயற்சியில் முக்கிய பங்களித்த நன்றி மறவாத உமர்தம்பி அவர்களின் இணைய நண்பர் ஐயா. ஆல்பர்ட் அவர்களுக்கு மிக்க நன்றி.


இறுதியாக


அதிரை உமர்தம்பி அவர்கள் எவ்வித சாதனைகள் செய்தார்கள், எவ்வகையில் கணினி தமிழுக்காக சேவை செய்தார்கள் என்பதை அழகான செந்தமிழ் நடையில் மிகத் தெளிவாக ஒலியாக்கம் செய்து உலகத்தமிழர்களுக்கு இக்கோரிக்கையை எடுத்துச் சொன்ன சகோதரர் K.H.M.ஸதகத்துல்லாஹ்வுக்கு மிக்க நன்றி. இம்முயற்சிக்கு உறுதுனையாக இருந்த நம் அதிரைவாசிகள் அனைவருக்கும் மிக்க நன்றி.


அன்புடன்


தாஜூதீன் மற்றும் உமர் தம்பி அவர்களின் குடும்பம்
அதிரைமணம் வலைப்பூ திரட்டி http://adiraimanam.blogspot.com


Thanks to

FUTURE NOW கம்ப்யூட்டர் கல்வி நிலையம்
ABM பில்டிங், ஆஸ்பத்திரி ரோடு, அதிராம்பட்டினம்.
போன்; 04373 – 241300, 9942739282, 9842466800
ஈமெயில்; info@futurenow.in

3 Responses So Far:

அறிஞர். அ said...
This comment has been removed by the author.
தாஜுதீன் (THAJUDEEN ) said...

//இந்த இடுகையை வலைப்பதிவு நிர்வாகி அகற்றிவிட்டார்//

எந்த இடுக்கை? எந்த வலைப்பதிவு நிர்வாகி? புரியும்படி சொன்னால் நன்றாக இருக்கும் சகோதரரே

Shameed said...

ஆட்டை கழுதை (கழுவி ) ஆக்கிய ஊர் என்ற அவபேரை மாற்றி இன்று உலகதிற்கு இணைய தமிழை கொடையளித்த மர்ஹும் உமர் தம்பி அவர்களுக்கு அதிரை வாசிகள் என்றென்றும் நன்றி செலுத்த கடமைபட்டுள்ளோம்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு