நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அதிரையில் பள்ளிகளுக்கிடையே வினாடி-வினா போட்டி! 22

அதிரைநிருபர் பதிப்பகம் | வெள்ளி, நவம்பர் 23, 2012 | , , ,அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,

அதிரைநிருபர் வலைத்தளம் அதன் வெற்றிப் பாதையின் தொடர்ச்சியாக மற்றுமொரு வழிகாட்டும் நிகழ்வுடன் அதிரை மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளுக்கிடையேயான பொது அறிவு வினாடி-வினா போட்டியை, இன்ஷா அல்லாஹ் நடத்த இருக்கிறது.

வரும் 26-11-2012 மற்றும் 27-11-2012 ஆகிய தேதிகளில் அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி (ரஹ்) மெட்ரிக் பள்ளி புதிய கட்டிட வளாகத்தில் மாணவர்கள் மற்றும் மாணவிகள் என்று தனித் தனியாக இப்போட்டி நடக்க இருக்கிறது.

கலந்து கொள்ளும் பள்ளிகள்:-

1.            கா.மு.மே.பள்ளி (ஆண்கள்)
2.            கா.மு.மே.பள்ளி (பெண்கள்)
3.            இமாம் ஷாஃபி (ரஹ்) மெட்ரிக் பள்ளி
4.            ஆக்ஸ்ஃபோட் மெட்ரிக் பள்ளி
5.            அரசு பெண்கள் உயர் நிலை பள்ளி

26-11-2012 அன்று மாணவிகளுக்கான வினாடி வினா போட்டியை காதிர் முகைதீன் கல்லூரி பேராசிரியை ஆயிஷா மரியம் MSc., Mphil.BEd., மற்றும் பேராசிரியை தஸ்லீமா M.A., Mphil.,  நடத்த இருக்கிறார்கள். 

27-11-2012 அன்று மாணவர்களுக்கான வினாடி வினா போட்டியை கா.மு.மே.பள்ளி (ஆண்கள்) முன்னால் தலைமை ஆசிரியர்  S.K.M.ஹாஜா முகைதீன்  M.A.BSc., B.T. அவர்கள் நடத்த இருக்கிறார்கள்.

மேலும் கல்லூரி பேராசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள், கல்வியாளர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கிறார்கள்.

போட்டியில் கலந்து கொள்ளும் மாணவமணிகளுக்கு தனித்தனியாக முதல் மூன்று பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்க இருக்கிறது.

மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு தனித் தனியாக:-

முதல் பரிசு தலா            :     ரூ 5,000/=
இரண்டாம் பரிசு தலா  :     ரூ 3,000/=
மூன்றாம் பரிசு தலா     :     ரூ 2,000/=

கலந்து கொள்ளும் அனைத்து மாணவமணிகளுக்கும் பங்களிப்பிற்கான சான்றிதழ்களும் வழங்க இருக்கிறது.

இதுமட்டுமன்றி, மேலும் சிறப்பு பரிசுகளும் வழங்கி கவுரவிக்க இருக்கிறது.

மாணவமணிகளின் பொது அறிவுத் திறனையும் அவர்களின் திறமைகளையும் வெளிக் கொணர்ந்து அவர்களை ஆர்வமூட்டவும், எதிர்காலம் சிறக்கவும் அதிரைநிருபர் வலைத்தளம் இந்த அரிய முயற்சியை துவங்கியிருக்கிறது.

இனிவரும் காலங்களிலும் இவ்வாறான சிறப்பு நிகழ்வுகள் தொடர்ந்து நடத்த இருக்கிறது இன்ஷா அல்லாஹ் !.

அதிரைநிருபர் குழு

22 Responses So Far:

sabeer.abushahruk சொன்னது…

May Allah bless AN for it's contineous efforts in bringing awareness among our students in Adirai.

I wish the proposed moment a great success!

Unknown சொன்னது…

Best wishes for Adirai Nirubar's initiatives for enriching General Knowledge in students community of Adirampattinam.

KALAM SHAICK ABDUL KADER சொன்னது…

wow! great!! Al hamdulillah!!!

Best wishes for Adirai Nirubar's initiatives for enriching General Knowledge in students community of Adirampattinam.

பெயரில்லா சொன்னது…

valzha nalla muyarchi

KALAM SHAICK ABDUL KADER சொன்னது…

நாவலர் நூர்முஹம்மத் எனும் அதிரைக் களஞ்சியம் ஊரில் இருந்தால் அவரைப் பயன்படுத்திக் கொண்டால் நலம்.

sabeer.abushahruk சொன்னது…

இந்த விநாடி வினா நிகழ்ச்சியில் இந்திய/தமிழ் வரலாற்றில் இஸ்லாமியருக்கு எதிராக திரித்திப் பதிந்திருக்கும் பல உண்மைகளையும் கேள்விகளில் புகுத்தி இளையோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்க்றேன்.

Unknown சொன்னது…

கல்விக்கு பல வழிகளில் ஊக்கம் அளிப்பது சமூக ஆர்வலர்கள் மற்றும் சமூக தளங்களின் மிக முக்கிய கடமை..

அதை அதிரை நிருபர் தளம் செவ்வனே செய்து வருவது பாராட்டுக்குறியது.

கல்வி விழிப்புணர்வு மாநாடு தொட்டு இந்த வினாடி-வினா போட்டி என்று மெலும் பல ஊக்கங்கள் தொடரட்டும்

வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்

Unknown சொன்னது…

என் பின்னூட்டத்தில் சிறு பிழை

//மெலும்// மேலும் பல ஊக்கங்கள் தொடரட்டும்

வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்

Unknown சொன்னது…

,,,,,,,,,,,,,,,,,
இந்த விநாடி வினா நிகழ்ச்சியில் இந்திய/தமிழ் வரலாற்றில் இஸ்லாமியருக்கு எதிராக திரித்திப் பதிந்திருக்கும் பல உண்மைகளையும் கேள்விகளில் புகுத்தி இளையோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்க்றேன்.
சபீர் காக்காவின் கருத்தை நான் வழிமொழிகிறேன். இஸ்லாமிய வரலாறு செய்திகளை நம் இளைய தலைமுறையினர் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும். அதிரை நிருபரின் ஆக்கபூர்வமான பணி தொடரவும் விநாடி வினாவில் பங்கு பெரும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

இம்ரான்.M.யூஸுப்

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) சொன்னது…

உன்னதமான முயற்சிக்கு வாழ்த்தும் துஆவும்.

சபீர் காக்காவின் வேண்டுகோள் மிகமிக முக்கியமானது.

இப்னு அப்துல் ரஜாக் சொன்னது…

உன்னதமான முயற்சிக்கு வாழ்த்தும் துஆவும்.

சபீர் காக்காவின் வேண்டுகோள் மிகமிக முக்கியமானது.

ZAKIR HUSSAIN சொன்னது…

May Allah bless this effort a great success

அதிரை சித்திக் சொன்னது…

இந்த விநாடி வினா நிகழ்ச்சியில் இந்திய/தமிழ் வரலாற்றில் இஸ்லாமியருக்கு எதிராக திரித்திப் பதிந்திருக்கும் பல உண்மைகளையும் கேள்விகளில் புகுத்தி இளையோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்க்றேன்.
sabeer kaakka great ..

Unknown சொன்னது…

கிபி 629-ஆம் ஆண்டு இன்றைய ஓமன் நாட்டில் சலாலாஹ் நகரில் அடங்கபட்டுள்ள கேரளாவை ஆண்ட மாமன்னர் சேரமான் பெருமாள் என்கிற அப்துர் ரஹ்மான் அவர்கள் பெருமானார் அவர்களை சந்தித்து துய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார் மற்றும் இன்றைய மாவட்ட ஆட்சித் தலைவர் எனும் பதவியை உருவாக்கி நாட்டின் நிர்வாக கட்டமைப்பை பலபடுத்தி நாட்டின் வளர்ச்சியின் முன்னோடியாக திகழ்ந்த ஆப்கானிய மாமன்னர் நிர்வாக இயலின் தந்தை ஷேர்ஷா (1540-1545) அவர்களைப்பற்றிவும் அவசியம் அறிந்து கொள்ள வேண்டும்

அப்துல்மாலிக் சொன்னது…

Masha Allah Excellent job step into, All the students who participates are the winners, Best Wishes and Thanks to AN for explore a wonderful competition

Yasir சொன்னது…

சிறப்பான முயற்ச்சி-இதன் முலம் சமுகவிழிப்புணர்வும் ஏற்ப்பட்டு..சீரும் சிறப்புமாக நடக்க அல்லாஹ் துணைப்புரியட்டும்

Unknown சொன்னது…

May Allah (swt)make us and our young generation among the most beloved to Him in this life and the next thro this effort.

Meerashah Rafia சொன்னது…

சகோ. sabeer.abushahruk said,
//இந்த விநாடி வினா நிகழ்ச்சியில் இந்திய/தமிழ் வரலாற்றில் இஸ்லாமியருக்கு எதிராக திரித்திப் பதிந்திருக்கும் பல உண்மைகளையும் கேள்விகளில் புகுத்தி இளையோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்க்றேன்.//

அருமையான யோசனை..

வெற்றியடைய வாழ்த்துக்கள்..

அறிஞர். அ சொன்னது…

Congrats! GK Quiz in Tamil for android can be download from here
https://play.google.com/store/apps/details?id=com.tamil.quiz.GK

Shameed சொன்னது…

சிறந்த முயற்சி இதுபோல் கல்விக்காக இன்னும் பல தொண்டு ஆற்றிட ஆண்டவன் அருள் புரிவானாக

ajmal hussain சொன்னது…

IT IS A GOOD SIGN AND INITIATION FOR THE STUDENTS COMMUNITY OF ADIRAMPATTINAM WHO CAN LOOK FORWARD TO THE FUTURE ENDEAVOURS TO COME. SUCH PROGRAMMES ARE REQUIRED FOR THE STUDENTS TO DEVELOP THEIR PERSONALITY AND COMMUNICATION SKILLS AND TO ALLEVIATE STAGE FEAR. ALL THE BEST ADIRAI NIRUBAR AND THE STUDENTS COMMUNITY.

இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்...

பின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்
அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு