Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

முன்னாள் மாணவர்களுக்கான வினாடி-வினா போட்டி ! 28

அதிரைநிருபர் பதிப்பகம் | December 19, 2012 | , , , ,


மரியாதைக்குரிய ஆசான் SKMH அவர்களின் வினாடி-வினா கேள்வித் தாள்களிருந்து சில துளிகள்...

மறக்காமல் சொல்ல நினைத்த ஒரு கண்டிஷன் : 
கூகிலானந்தாவிடமோ அல்லது பிங்கு மாஸ்டரிடமோ அல்லது யாஹூ-மாணவரிடமோ தட்டி தட்டி கேட்டுப் பார்க்க கூடாது !

மற்றொரு கண்டிஷன் :
பதில் தெரியவில்லை என்று அங்கே இங்கே சுற்றிக் கொண்டெல்லாம் இருக்கப்டாது, தெரியாத கேள்விகளுக்கு நீங்களே 'PASS'ன்னு சொல்லிக் கொண்டே அடுத்த கேள்விகளுக்குச் செல்லலாம்.

your time start... :)

1) 'இழுக்கு' என்ற சொல்லோடு முடியும் திருக்குறள் எது !?

2) குடிமக்கள் காப்பியம் என்று குறிக்கப்படும் தமிழ் இலக்கியது எது !?

3) 'I went to Agra' என்ற ஆங்கில வாக்கியத்தின் Present perfect வாக்கியத்தை கூறுக !?

4) 'Noun' ஆக உள்ள ஒரு அங்கிலச் சொல்லை இரண்டாக பிரித்து எழுதினால், ஒரு 'Noun'ம் ஒரு 'Verb'ம் கொண்ட ஆங்கில வாக்கியம் அமையும் அந்த ஆங்கிலச் சொல் என்ன ?

5) A, B என்பன இரண்டு கனங்கள் A U B = A எனில், B யைப் பற்றி நீ அறிவது என்ன ?

6) உன் அன்னை 14 பழங்கள் வாங்கி உனக்கு சில பழங்களை தந்தார், உனக்கு தந்ததைப் போல் இரண்டு மடங்கு உன் அண்ணனுக்கும் உனக்கு தந்ததில் பாதி உன் தங்கைக்கும் கிடைத்தன. உனக்கு கிடைத்த பழங்கள் எத்தனை?

7) ஒரு குதிரைத் திறன் ( H.P.) என்பது எத்தனை வாட்டுக்குச் சமம்

8) பாபா அணு ஆராய்ச்சி நிலையம் எங்குள்ளது ?

9) எலுமிச்சைப் பழத்தில் உள்ள அமிலம் எது ?

10) சாதாரண உப்பின் வேதிப் பெயர் யாது ?

11) வைட்டமின் B குறைவால் ஏற்படும் நோய் எது ?

12) மனித உறுப்புகளில் இரத்தம் அறியாத உறுப்பு எது ?

13) ஒரு செல் தாவரம் எது ?

14) வெங்காயத்தின் அறிவியல் பெயர் என்ன ?

15) உலகின் முதல் விண்வெளி வீரர் யார்?

16) இந்தியாவின் முதல் விண்வெளி வீரர் யார் ?

17) வரலாற்றில் இந்திய நெப்போலியன் எனக் குறிப்பிடப்படுபவர் யார் ?

சொல்ல மறந்த கண்டிஷன்:

பதில் வரும் வேகத்தை பொறுத்துதான் பரிசு வரும் வேகம் நிர்ணயிக்கப்படும் ! (ஸ்பான்சர்கள் தேவைன்னு போர்டு இன்னும் ரெடியாகவில்லை என்பதை அன்புடன் தெரிவித்து கொள்கிறோம்)

இப்படியே தொடரலாம்னு ஒரு ஐடியா இருக்கு...!.
அபூஇப்ராஹீம்

28 Responses So Far:

Unknown said...

1)------Studied but forget
2)Thirukural? (On doubt)
3)I've gone to Agra
4)Pass--->
5)------
6)------
7)50? (On Doubt, Studied but forget ;( )
8)Studied but forget...
9)Citric Acid
10)Sodium
11)studied but forget.
12)Hairs n Nails
13)Ameeba
14)------
15)........
16)Kalpana Roy??? ;-) (on doubt)
17)Thipu sultan? (on 99% doubt)


Unknown said...

சிலதுக்கு பதில் தொண்டை குழிக்குள் நிற்கின்றது. அனால் வெளியே வரவில்லை.
The above is my honest answers.
Seems interesting... pls continue doing this. Thumbs Up!!!

sabeer.abushahruk said...

01சொல்லிச் செய்வது கர்மம் செய்தபின்
சொல்லுவம் என்பது இழுக்கு (இப்படி ஏதோ ?)

02) சிலப்பதிகாரம் ?

03) I have been to Agraa ?

04) B = 0?

06) 2 - 4 - 8

09) citric acic
10) sodium bicarbonate

11) இரத்தச் சோகை

12) nail ?

13) ameba

14) Amstrong?

16) கல்பனா ராய் (ப்பூட்டாங்க)


பாசான்னு சார்ட்ட கேட்டு சொல்லவும்



Meerashah Rafia said...

1) 'இழுக்கு' என்ற சொல்லோடு முடியும் திருக்குறள் எது !?
Question Pass. But I am Fail

2) குடிமக்கள் காப்பியம் என்று குறிக்கப்படும் தமிழ் இலக்கியது எது !?
Question Pass. But I am Fail

3) 'I went to Agra' என்ற ஆங்கில வாக்கியத்தின் Present perfect வாக்கியத்தை கூறுக !?
I am going to Agra. Is it?

4) 'Noun' ஆக உள்ள ஒரு அங்கிலச் சொல்லை இரண்டாக பிரித்து எழுதினால், ஒரு 'Noun'ம் ஒரு 'Werb'ம் கொண்ட ஆங்கில வாக்கியம் அமையும் அந்த ஆங்கிலச் சொல் என்ன ?
Question Pass. But I am Fail. But Werb spelling wrong. So, I am genius.

5) A, B என்பன இரண்டு கனங்கள் A U B = A எனில், B யைப் பற்றி நீ அறிவது என்ன ?
B ரொம்ப நல்லவர்,வல்லவர்,நாளும் தெரிஞ்சவர்.But I don't know the answer.Just pass in maths.

6) உன் அன்னை 14 பழங்கள் வாங்கி உனக்கு சில பழங்களை தந்தார், உனக்கு தந்ததைப் போல் இரண்டு மடங்கு உன் அண்ணனுக்கும் உனக்கு தந்ததில் பாதி உன் தங்கைக்கும் கிடைத்தன. உனக்கு கிடைத்த பழங்கள் எத்தனை?
4

7) ஒரு குதிரைத் திறன் ( H.P.) என்பது எத்தனை வாட்டுக்குச் சமம்
What Volt?

8) பாபா அணு ஆராய்ச்சி நிலையம் எங்குள்ளது ?
Banglore?

9) எலுமிச்சைப் பழத்தில் உள்ள அமிலம் எது ?
Citric

10) சாதாரண உப்பின் வேதிப் பெயர் யாது ?
Sodium

11) வைட்டமின் B குறைவால் ஏற்படும் நோய் எது ?
Question Pass. But I am Fail. 1 Attempt in Chemistry.

12) மனித உறுப்புகளில் இரத்தம் அறியாத உறுப்பு எது ?
Nail

13) ஒரு செல் தாவரம் எது?
எங்கோ கேட்ட குரல்..Question Pass. But I am Fail.

14) வெங்காயத்தின் அறிவியல் பெயர் என்ன ?
பெருங்காயமான்னு தெரியவில்லை..

15) உலகின் முதல் விண்வெளி வீரர் யார்?
உண்மைய சொன்னா முஹம்மது நபி (ஸல்). உலகவாசிங்க சொன்னா நீள் ஆம்ஸ்ட்ராங்நு நினைக்கிறேன்.

16) இந்தியாவின் முதல் விண்வெளி வீரர் யார் ?
கல்பனா சாவ்லாதானே!?

17) வரலாற்றில் இந்திய நெப்போலியன் எனக் குறிப்பிடப்படுபவர் யார் ?
தமிழ்நாட்டு நெப்போலியனை தெரியும்.

sabeer.abushahruk said...

ஷஃபி, மீராஷா,

நம்மளத்தவிர மத்தவங்களுக்கெல்லாம் கொஸ்டின் பேப்பர் லீக்காவுதோ, நேரம் பிடிக்குதே!

மீராஷா பாஸோ ஃபெயிலோ, நான் நல்லா சிரிச்சேன்.

Abdul Razik said...

m pass few ...passed more, fantastic...please continue more gk contest....

Meerashah Rafia said...

sabeer.abushahruk சொன்னது…
//
ஷஃபி, மீராஷா,
நம்மளத்தவிர மத்தவங்களுக்கெல்லாம் கொஸ்டின் பேப்பர் லீக்காவுதோ, நேரம் பிடிக்குதே!//
இல்ல காக்கா, பின்னூட்டத்தை பார்த்து எழுதக்கூடாதுன்னு விதிகள்ள குறிப்பிடப்படாததால் முழு விடையும் கிடைத்ததும் எழுதலாம்னு விதி மீறல் இல்லாம நடக்க முயற்சி நடக்குது போல..

//மீராஷா பாஸோ ஃபெயிலோ, நான் நல்லா சிரிச்சேன்.//
தேர்வு கூடத்தில் கவிஞர்.sabeer.abushahruk அவர்கள் சிரித்ததற்காக அவருக்கு அரை மதிப்பெண் குறைத்து எமக்கு ஒரு மதிப்பெண் கூட்டித்தரும்.. அய்யா.

yours truly,
மீரஷாஹ் ரஃபியா(MSM)

Unknown said...

Hahah... Interesting to see Mr.Meera Shah's answers following to Sabeer Kaka's comment.

Well., seekram result announce pannunga. Parisu yenna? ithu vara Kalanthukitta 3 perukum parisu sure i think (1st, 2nd & 3rd)

Let the Judge announce the result!!! Waiting eagerly!

Shameed said...

போட்டி பற்றி எந்தவித முன் அறிவிப்பும் வராததால் நான் ஹால் டிக்கெட் வாங்கவில்லை!!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

இதுவரை ! அட்டெண்டஸ் போட்ட முன்னால் மாணவர்களின் சுறு சுறுப்பு பிரமிக்க வைக்கிறது !...

ரிஸல்ட் விரைவில் இன்ஷா அல்லாஹ் !

இதேபோன்று தொடரச் சொல்லி தனி மின்னஞ்சலிலும் வேண்டுகோளும் வந்த வண்ணமிருக்கிறது...

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//போட்டி பற்றி எந்தவித முன் அறிவிப்பும் வராததால் நான் ஹால் டிக்கெட் வாங்கவில்லை!!//

அதெல்லாம் சரி இன்னும் டி.சி. ஸ்கூல்லதான் இருக்கு சீக்கிரம் வந்து பதிலைச் சொல்லிடுங்க !

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அனைத்து Questionsஐயும் Pass செய்தவர்களால் (பாவம்) Failலிருந்து வெளிவர பெயில் கிடைக்கவில்லை !

Shameed said...
This comment has been removed by the author.
Shameed said...

7.வது கேள்வி நம்ம சப்ஜெட் என்பதால் அதற்க்கான விரிவான பதில் இதோ

ஒரு குதிரை திறன் என்பது 746 வாட்ஸ்

75 கிலோ கிராம் எடையை ஒரு வினாடி நேரத்தில் , ஒரு மீட்டர் இழுக்கவோ , உயர்த்தவோ தேவைப்படும் சக்தியை ஒரு குதிரைத் திறன் என்கிறோம்



(இப்போ T .C .கிடைக்குமா?)

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

முன்னோர்கள் முந்தி விட்டார்கள்
முன்னோர்களால் சொல்ல முடியாத பதிலை மட்டும் சொல்லி
முதல் பரிசை எனக்கே அறிவிக்குமாறு உரிமையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
வெங்காயத்தின் அறிவியல் பெயர்; அல்லிவம் சாத்திவம்

Shameed said...

8) பாபா அணு ஆராய்ச்சி நிலையம் எங்குள்ளது ?

மும்பை

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//Shameed சொன்னது…
8) பாபா அணு ஆராய்ச்சி நிலையம் எங்குள்ளது ?
மும்பை//

அடிக்கடி பாத்ரூம் பக்கமெல்லாம் போயிட்டு வந்து பதில் சொல்லக் கூடாது ! :)

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//But Werb spelling wrong. So, I am genius.//

MsM(mr) அது தட்டிக் கொடுக்கும்போது தட்டச்சு தப்பிச்சு போயி ! :)

Shameed said...

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

//Shameed சொன்னது…
8) பாபா அணு ஆராய்ச்சி நிலையம் எங்குள்ளது ?
மும்பை//

//அடிக்கடி பாத்ரூம் பக்கமெல்லாம் போயிட்டு வந்து பதில் சொல்லக் கூடாது ! :) //

குளிர் நேரமா கண்ரோல் பண்ண முடியலா அதான் அடிக்கடி பாத்ரூம்...

Meerashah Rafia said...

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…
//MsM(mr) அது தட்டிக் கொடுக்கும்போது தட்டச்சு தப்பிச்சு போயி ! :)//


அப்போ எனக்கு நூற்றுக்கு 10 மதிப்பெண் போடுவதற்கு பதில், ஜீரோ தட்டச்சு தப்பிச்சு 100 போட்டு ஹீரோ ஆக்கி என்னை அழகுபார்த்தாலும் பார்ப்பீர்கள் போல மாம்'ஸ்..நடக்கட்டும் நடக்கட்டும்..

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

1. "எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு."

விளக்கம் : (செய்யத் தகுந்த) செயலையும் வழிகளை எண்ணிய பிறகே துணிந்து தொடங்க வேண்டும், துணிந்த பின் எண்ணிப் பார்க்கலாம் என்பது குற்றமாகும்.


2. சிலப்பதிகாரம்

3. I have gone to Agra

4. Mangoes

5. B=O or B C A

6. 4 (நான்கு)

7. (746)

8. மும்பை

9. சிட்ரிக் அமிலம்

10. சோடியம் குளோரைடு

11. பெரி பெரி

12. கண்ணின் கருவிழிகள்

13. கிளோமிடோ மோனாஸ்

14. அல்லியம் சிபா Alium Cepa

15. யூரிகாகரின் - ரஷ்யா

16. ராகேஷ் சர்மா

17. சமுத்திரகுப்தர்

இதுவரை அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்த சகோதரர்களுக்கு ஜஸாக்கல்லாஹ் ஹைர்....

வினாடி வினா போட்டியில் கேட்ட கேள்விகள் அனைத்திற்கும் பதில் தெரிந்தும் தெரியாதது போல் இருந்த சைலண்ட் ரீடர்ஸ் (மைண்ட் வாசிச்சுட்டோம்ல)... அனைவருக்கும் நன்றிகள்... :)

பரிசு(கள்) அடுத்தடுத்து வரும் போட்டிகளின் முடிவையும் தெரிந்த பின்னர்.... இன்ஷா அல்லாஹ் !

ZAKIR HUSSAIN said...

சாரி சார்....ராத்திரி கூடு / கொடீர்களம் பார்த்துட்டு தூங்கிட்டேன்.!!!

Unknown said...

ஆஹா.... இவ்ளோ மோசமாவா பதில் சொல்லி இருக்கோம்? No problem. Better luck next time. ;)

Yasir said...

எனக்கு எல்லா கேள்விகளுக்கும் பதில் தெரியும்ண்டு இப்ப சொன்னா நம்பவா போறீங்க ஈயடிச்சான் காப்பி ண்டு சொல்லி தள்ளுபடி செய்துவிடுவீர்கள்
ஆனாலும் ராத்திரி ஆரம்பிச்சு ராத்திரியே முடிச்ச இந்த வினாடிவினா போட்டியை நான் இனிமையாக கண்டிக்கின்றேன்..பகல்ல வையுங்க ஒரு கை பார்த்துடுவோம்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//ஆனாலும் ராத்திரி ஆரம்பிச்சு ராத்திரியே முடிச்ச இந்த வினாடிவினா போட்டியை நான் இனிமையாக கண்டிக்கின்றேன்..பகல்ல வையுங்க ஒரு கை பார்த்துடுவோம்//

சொல்ல மறந்த கண்டிஷனை வாசிக்க வில்லையா ?

சரி, பரவாயில்லை லேட்டா வந்தாலும் அடுத்த போட்டிக்கு தயாராகுங்க !

அதிரை தென்றல் (Irfan Cmp) said...

\\வினாடி வினா போட்டியில் கேட்ட கேள்விகள் அனைத்திற்கும் பதில் தெரிந்தும் தெரியாதது போல் இருந்த சைலண்ட் ரீடர்ஸ் (மைண்ட் வாசிச்சுட்டோம்ல)... அனைவருக்கும் நன்றிகள்... :)//

நான் அனைத்து பதில்களும் சரியாகவுள்ளதா என்று பார்த்துவிட்டு நானும் என்னுடைய பதிலை இடலாமென்று இருக்கும் நேரத்தில் நான் நினைத்ததை அப்படியே சகோ அபூஇப்ராஹீம் காக்கா அவர்கள் சரியாக முந்திகொண்டார்கள் அவர் மேல் கோபமிருந்தாலும் யார் பதில் சொன்ன என்ன என்று அமைதியாக வகுப்பறையில் ஓரத்தில் அமர்ந்து கொண்டேன்

மிராஷாவின் பதிலை கண்டு சிரித்து பின்பு வெளிக்காட்டாமல் கோபமுற்றிருப்பார் ஆசிரியர் நான் சொல்வது சரிதானே?

அப்துல்மாலிக் said...

ஆஹா இவ்ளோ நடந்திருக்கா, நான் தூங்கிட்டேனே..

நெறியாளர் காக்காவுக்கு: இது மாதிரி வினாடிவினா நடக்கும்போது கமெண்ட் பொட்டிலே கமெண்ட் போட்டவுடன் 12 முதல் 24 மணி நேரம் கழித்து எல்லா கமெண்ட் ம் தெரிவது மாதிரி இருந்தால் யார் வெற்றியாளர் என்பது தெரிந்துவிடும். முந்தியவர் பதில் அளிப்பதால் எளிதில் விடை இதுதான் என்று தெரிந்தும்விடுது, அதற்காகதான் இப்படி ஒரு ஐடியா. எப்பூடி...

Shameed said...

அப்துல்மாலிக் சொன்னது…

//நெறியாளர் காக்காவுக்கு: இது மாதிரி வினாடிவினா நடக்கும்போது கமெண்ட் பொட்டிலே கமெண்ட் போட்டவுடன் 12 முதல் 24 மணி நேரம் கழித்து எல்லா கமெண்ட் ம் தெரிவது மாதிரி இருந்தால் யார் வெற்றியாளர் என்பது தெரிந்துவிடும். முந்தியவர் பதில் அளிப்பதால் எளிதில் விடை இதுதான் என்று தெரிந்தும்விடுது, அதற்காகதான் இப்படி ஒரு ஐடியா. எப்பூடி//


இதுவும் நல்லாத்தான் இருக்கு

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு