கடந்த கல்வியாண்டின் பத்தாம் வகுப்பில் முதல் மாணவன் அப்துல் சுக்கூர் ஆசிரியர் தின நிகழ்வை துவக்கி வைத்ததிலும் முதல் மாணவன் அழகுற இறைமறை வசனங்களை ஓதி இனிதே துவங்கியது அல்ஹம்துலில்லாஹ்!
அன்று ! கணிதம் கடினம் என்ற கல்மணம் கொண்ட மாணவனையும் கரைத்தெடுக்கும் பாங்கும், இருபால் மாணாக்களுக்கும் இனிமை போற்றும் ஆசான், காதிர் முகைதீன் மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் தலைமையாசிரியர் S.K.M.ஹாஜா முகைதீன் அவர்களின் வாழ்த்துரையோடு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான அறிவுரையும் !
இன்று ! இணையத்தில் எட்டுதிசைக்கும் எட்டும் எழுத்தை எல்லோரும் பயனுரும் வகையில் ஆய்வுகளுடன் அதிரை மற்றும் பிற ஊர்களின் வலைத்தளங்களில் தனது எழுத்துக்களால் தட்டி எழுப்பும் சிந்தனையாளர் அதிரைநிருபரின் மூத்த பங்களிப்பாளர், எங்களால் இ.அ.காக்கா என்று அன்போடு அழைக்கப்படும் அ.இபுராஹீம் அன்சாரி அவர்களின் வாழ்த்துரையும் !
காணொளிப் பகுதி - 1
சிறப்பு பேச்சாளார் பட்டிமன்ற புகழ் அண்ணா சிங்காரவேலு அவர்களின் உரை மற்றும் ஆசிரியர்களை கவுரவித்து வழங்கிய பரிசளிப்பு நிகழ்வின் காணொளி விரைவில் தொடரும் இன்ஷா அல்லாஹ் !
அதிரைநிருபர் பதிப்பகம்
62 Responses So Far:
முதல் பெஞ்சிலிருக்கும் தமியேனின் வாழ்த்து முதலாவதாக!
முதல்மாணவனையே முதன்முதலாய் விழாவைத் துவக்கி வைக்க முடிவு செய்த முயற்சிக்கு, வகுப்பில் என்றும் முதல்மாணவனாய் விளங்கி அப்பள்ளியின் முன்னாள் மாணவர்த்தலைவனாய் இருந்த அடியேனின் அன்பான வாழ்த்துகள்!
அன்றும்;இன்றும்; என்றும் கம்பீரம் அதுவே எம் கணிதமேதையின் பேச்சின் வீரம்!
எதிர்ப்பார்ப்புடன் ஆவலாக காத்திருந்த இந்த காணொளியின் ஒலி தெளிவாக இல்லை. ஸ்ஸ்ஸ் என இரைச்சலிடும் குழவிகளின் ரீங்காரம் போல் இருக்கிறது. எல்லோருக்கும் இப்படித்தானா? இல்லை என் கணிப்பொறி மட்டும் தான் இப்படி மக்கர் பண்ணுகிறதா? விளங்கவில்லை. இருக்கட்டும், இதில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்களுக்கும், அன்பிற்கும், மதிப்பிற்கும் உரிய ஜனாப் ஹாஜா முஹைதீன் சார், ஜனாப் இபுறாஹிம் அன்சாரி காக்காவிற்கும், ஆசிரிய பெருந்தகைகளுக்கும், மாணவச்செல்வங்களுக்கும் என் பொன்னான ஆசிரியர் தின நல்வாழ்த்துக்களும், இறை பிரார்த்தனையும் சென்றடையட்டுமாக!!!
அலியார் சாரின் கண்டிப்பும், ஹாஜி முஹம்மது சாரின் மிரட்டலில் பாடம் படிக்க வேண்டும் என வரும் மிரட்சியும், ஃபிராண்ஸிஸ் சாரின் மிடுக்கான மீசையுடன் சேர்ந்தே வரும் ஆங்கில பாடத்தின் பயம் கலந்த அக்கறையும், அறிவியல் தர்மலிங்கம் ஐய்யா சாரின் கண்டிப்பான பாடம் நடத்தும் விதமும், ஜான் சாரின் நகைச்சுவை கலந்த பாடமும், மர்ஹூம் தாஜுத்தீன் சாரின் சாட்டையுடன் கூடிய விசில் சப்தமும், ராமச்சந்திரம் சாரின் அடக்குமுறை போல் தெரியும் அன்பான விளையாட்டு மாணவர்கள் மேல் அக்கறையும், சண்முகம், ராமதாஸ் சார்கள் கூறும் தமிழ் கூறும் நல்லுலகமும், சீனிவாசன் சாரின் எளிதில் சிரிக்காத பாடம் கற்பிக்கும் சீரியசான முறையும், நக்கல் செய்து கொண்டே எவ்வித விக்கல் இல்லாமல் வரலாறு பாடத்தை மனதில் பதிய வைக்கும் அகமது தம்பி சாரையும், மீசைக்கார தைலத்தை ஞாபகப்படுத்தும் மர்ஹூம் சேத்தாவுது சாரின் விறுவிறுப்பான பாடம் நடத்தும் முறையும், பொடி போட்டு நொடிப்பொழுதில் எமக்கு கணிதம் புரியவைக்கும் ஆற்றல் கொண்ட உலோகநாதன் சாரையும், அவர்களின் அன்பு சகோதரியும், தன் இனிய கம்பீர குரலால் பள்ளி விழாக்களை சிறப்பிக்கும் மேகலா டீச்சரையும், மாணவிகளுக்கு ஆதரவு, அரவணைப்பாய் திகழ்ந்த ரோசம்மா டீச்சரையும், "சனியன் முட்டிப்போடு" என சொல்ல வைத்து விடுவார்களோ என்ற பயத்தில் பாடம் படிக்க வைத்த மும்தாஜ் டீச்சரும், நூர்ஜஹான் டீச்சரும், எவனோ செல்லும் சிறு குசும்பிற்கு ஒட்டு மொத்த வகுப்பையும் உசார் படுத்தும் நெசவு சாரையும், மார்க்கப்பற்றுடன் கணிதவியலை எமக்கு கச்சிதமாக போதிக்கும் சேக்தாவூது சாரையும், இஸ்லாமிய வரலாற்று சம்பவங்களை எதோ நேற்று தான் நடந்து முடிந்தது போல் தன் சிறப்பு பேச்சாற்றலில் நம் அகக்கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தும் ஜமால் பாயையும், கணித பாடத்தை தனக்கேயுரிய பாணியில் நடத்தும் ஹனீஃபா சாரையும், அஞ்சு பீரியட் அறிவிப்பு சுற்றறிக்கையை வகுப்பு தோறும் கொண்டு வந்து மாணவர்களின் உள்ளங்களில் பால் வார்க்கும் நேன்னா பாய் மற்றும் திடீர் சிரிப்பை வரவழைக்கும் காதராக்காவையும் இப்படி இன்னும் விட்டுப்போன, நான் பயில முடியாமல் போன நல்ல பல ஆசிரியப்பெருந்தகைகளையும், கூட பயின்ற மாணவச்செல்வங்களையும் கடல் கடந்தும், கரை சேர்ந்தும் இன்னும் மறக்க முடியவில்லை.....மறக்க விரும்ப வில்லை.......
மலரும் நல் நினைவுகளுடன்
மு.செ.மு. நெய்னா முஹம்மது.
(மாணவன் வருடம் 1986 லிருந்து 1992 வரை)
அரங்கராஜனாக எங்களின்
ரெங்கராஜன் சார்!
இப்றாஹின் அன்சாரி காக்கா
இருவிழி நீரில் அன்பின் சாறு!
ஏணிப்படியாய் இருக்கும் ஆசிரியர்
ஏனிப்படி அதே நிலையில்
ஏணிப்படியில் ஏறியவரின்
தோணியில் கரைசேர்ந்தவரின்
ஞானிகட்குண்டான பக்குவம்!
இப்றாஹிம் அன்சாரி காக்கா அவர்களின் உரையைக் கேட்ட மாணவர்கள் “இந்த இ.அ.காக்கா அவர்கள் நமக்கு ஆசிரியராக வரவில்லையே” என்று ஏக்கத்தில் இருப்பதை அறிய முடிகின்றது!
என்.எஸ்.எம்.(n): கொஞ்சம் பெஞ்சு மாறி உட்கார்ந்து கேளுங்களேன்.. !
இன்னும் ஜன்னல் கதவு சாத்தாமத்தான் நம்ம பள்ளிகூடம் இருக்கு... அதே அழகுடன் !
அப்பள்ளியால் விதைக்கப்பட்டு, உருவாக்கப்பட்ட “நாவலர்” அதிரைக் களஞ்சியம் நூர்முஹம்மத் அவர்களின் சொற்பொழிவில்லாமல் போனது ஒரு குறையே! இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் விழாக்களில் அவர்களை அழைத்து மேடையேற்றுங்கள்; அவர்களின் பேச்சின் ஒலியை உளவாங்கி வீசிக்கொண்டிருக்கும் அப்பள்ளியின் சுவரும், செடிகளும் இன்னும் நினைவுகளால் மகிழும்; அப்பள்ளியின் ஒவ்வொரு கல்லும் அவர்களின் பேச்சைச் சொல்லும்!
என்னால் கவிதைதான் எழுத முடிந்ததே தவிர அவரைப் போல் நாவலராய் வர இயலவில்லை; ஒவ்வொரு பேச்சுப்போட்டியிலும் அவரிடம் தோற்றிருக்கிறேன் எனபதும் எனக்குள்ள ஒரு பெருமிதம்!
அன்னார் தற்பொழுது ஊரில் இருப்பதால், இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் விழாக்களில் அவர்களின் சொற்பொழிவை இடம்பெறச் செய்க!
ஏற்பாட்ட்டாளர்கள், தலைமை ஆசிரியர்கள், நிகழ்ச்சித் தொகுப்பாளர், பேச்சாள்ரகள், ஆசிரிய ஆசிரியைகள், மாணவமணிகள் யாவர்க்கும் முன்னாள் மாணவனின் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்!
குறிப்பாக “அதிரை நிருபர் பதிப்பகம்” செய்த ஏற்பாட்டில் விழியம் கண்டு கேட்டு வியந்தேன்; நேரில்- ஊரில் இருப்பது போன்றும், எம்மை வளர்த்தெடுத்தத் தாய்ப்பள்ளியின் மடியில் அமர்ந்திருந்ததைப் போன்றதொரு அரியதொரு சூழலில் இருந்தேன்; மிக்க நனறி!
நினைவெல்லாம் இனிக்கும் நினைவுகளுடன்,
//அப்பள்ளியால் விதைக்கப்பட்டு, உருவாக்கப்பட்ட “நாவலர்” அதிரைக் களஞ்சியம் நூர்முஹம்மத் அவர்களின் சொற்பொழிவில்லாமல் போனது ஒரு குறையே! //
இதை நானும் ஏற்றுக்கொள்கின்றேன். உணமையிலேயே நூர் முஹம்மது அவர்கள் நாவன்மை மிக்க அழகிய பேச்சாளர். நான் காதிர் முஹைதீன் பள்ளியில் படிக்கும் காலங்களில் எனக்கு பாட்டுப்போட்டி எப்படியோ அவர்கள் பேச்சுப்போட்டியில் முதலிடம் பிடிப்பவர்கள்.
இன்ஷா அல்லாஹ் வரும் காலம் அவர்களை பயன்படுத்திக்கொள்ளட்டும் என்று நினைவு படுத்தியவனாக !
அபு ஆசிப்.
//என்.எஸ்.எம்.(n): கொஞ்சம் பெஞ்சு மாறி உட்கார்ந்து கேளுங்களேன்.. !\\
அதற்குத்தான் அடியேன் முதல்பெஞ்சில் தான் அமருவேன்; அன்றும்; இன்றும்; என்றும்!
இன்று அலுவலகம் பணியில்லை ஆதலால் பள்ளியில் முதலில் முதலிருக்கையில் அமர்ந்து விட்டேன். நிற்க. இரைச்சல் என்பது பொதுவெளி மைதானத்தில் ஒலி உள்வாங்கியினுள் காற்று உட்செல்வதால் தான் என்பதை “பௌதீக” ஆசான் ஹமிட் அவர்கள் விளக்குவார்களாக!
எல்லா மாணவர்களும் வருகைப் பதிவேட்டில் இருக்க “உள்ளேன் ஐயா” சொல்லி விட்டு அமருக!
வருகைப் பதிவேட்டில் இல்லாதவர்களை :உடற்பயிற்சி ஆசிரியரின்” உன்னதமான கவனிப்புக்கு ஆளாக்கப்படுவர்!
-முன்னாள் மாணவர்த்தலைவனின் அன்புக் கட்டளை”
வ்
//-முன்னாள் மாணவர்த்தலைவனின் அன்புக் கட்டளை”//
தலைவா,
எனக்கு இன்னிக்கும் வேலைநாளே. அதனால கடைசி பென்ஞ்சுக்கு அனுப்பி விடாமல் உங்கள் பக்கத்திலேயே ஒரு இடம் பிடித்து வையுங்கள்.
என்னா இன்னக்கி ரெண்டு, மூணு பேரைத்தவிர கிளாஸுக்கு ஒருத்தரையும் காணோம்??? ஃபிரான்ஸிஸ் சாரு எஸ்ஸே ஏதும் படிச்சிட்டு வரச்சொன்னாரா? இல்லை ஹாஜி முஹம்மது சாரு டெஸ்ட் இருக்குண்டு சொன்னாரா? இல்லை தமிழ் இலக்கண வகுப்பு எதுவும் உண்டா??? அதானே???
சகோதரர் மு சே மு 82 டு 96 என்பதால் அதற்க்கு முன் சிலர் மும்மூர்த்திகள் நாடிமுத்து சார் ,ரெங்கராஜன் சார் , நாகரதீனம் சார். தமிழ் தாமஸ் சார் ..எம்.எல்.ஏ லியாகத் அலி தலைமை ஆசிரியர் இப்ராகிம் சார் .முத்துபேட் சாஜகான் சார் ,வேதியல் கரீம் சார் பிறகு ஜகாங்கீர் சர்குலர் நேனாபாய் மட்டும் அல்ல பாசீன் காக்காவும் கூட ராமதாஸ் சாரின் மனைவி வடிவழகி டீச்சர் இன்னும் பட்டியல் நீளும் கிளார்க் நாகரத்தினம்
ஆஹா...
மேடையில்
வீற்றிருப்போரோடு
காற்றுமிருக்கிறது!
கூரை நுணியும்
மேசைத் துணியும்
தொடர்ந்து
கைதட்டிக்கொண்டேயிருக்கின்றன
படபடவென்று!
எனதூரில் மட்டும்தான்
உப்புக்காற்றும் இனிக்கும்
உள்நாக்குவரை!
இந்தப்
பள்ளி வலாகத்தில்
நான் அதிகம் விளையாடியது
அயராமல் அடிக்கும் காற்றோடுதான்!
பேச்சோடு பேச்சாக
அந்தக்
காற்றையும் பதிந்து தந்த
மீடியா மேஜிக் நிஜாமுக்கு
கோடியாய் பிரத்யேக நன்றி!
எழிலாடும் சேடைப் பேச்சும்
எங்களூர் வாடைப் பேச்சும்
போட்டி போடும் மூச்சும் !
அற்புதமான மேடைப் பேச்சு !
வியக்க வைக்கிறது
மைக் முன்னின்று
மயக்கும் காற்றோடும்
சுவை கூட்டும்
மேடைப் பேச்சோடும்
காசீம் காக்கா பள்ளியில் காவலாளியாக இருக்கும்போது உள்ள பாட்டு , அப்பொழுது பள்ளிக்கட்டிடத்திர்க்கு கதவுகள் கிடையாது.
"காதர் முஹைதீன் பள்ளியிலே கதவுகள் இல்லை.
அதை காவல் காக்க காசிமை தவிர
ஒருவருமில்லை.
ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ............................................
அலியார் சார் காதில் விழுந்து செம டோஸ் விழும்.
அபு ஆசிப்.
அஸ்ஸலாமு அலைக்கும்,
இது போன்று ஆசிரியர்களை கவுரவப்படுத்தும் நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும்.
காதிர் முகைதீன் பள்ளியோடு இந்த நிகழ்ச்சியை சிறப்பாக நடத்த உதவிய நம் மூத்த சகோதரர் இபுறாஹீம் அன்சாரி காக்கா அவர்களுக்கு ஜஸக்கல்லாஹ் ஹைரா... அவர்கள் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் மென் மேலும் மாணவர்களை உற்சாகப்படுத்தி அறிய பல தகவல்களை பகிர்ந்து தான் படித்த பள்ளி மாணவர்கள் உங்களைப் போன்று அறிவாற்றல் உள்ளவர்களாக உருவாக்க உதவி செய்ய வேண்டும்.
பல தடைகளுக்கு மத்தியில் காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியை முன்னேற்ற பாதையில் எடுத்துச்செல்ல ஆர்வத்துடன் அயராது பாடுபடும் பள்ளி தலைமை ஆசிரியர் மஃபூல் அலி அவர்கள் இருக்கும் போது, பள்ளியில் படித்து உயர்ந்த நிலையில் உள்ள பழைய மாணவர்கள் ஒத்துழைப்பு கொடுத்தால், மேலும் இந்த பள்ளியை மாநில அளவில் கல்வியில் சாதிக்கும் பள்ளியாக உருவாக்க முடியும்.
தற்போது இந்த பள்ளிக்கு தேவை இது போன்ற ஊக்கமும் உற்சாகமூட்டும் நிகழ்ச்சிகளே..
ABULKALAM BIN SHAICK ABDUL KADER சொன்னது…
//இப்றாஹிம் அன்சாரி காக்கா அவர்களின் உரையைக் கேட்ட மாணவர்கள் “இந்த இ.அ.காக்கா அவர்கள் நமக்கு ஆசிரியராக வரவில்லையே” என்று ஏக்கத்தில் இருப்பதை அறிய முடிகின்றது!//
அதை நிவர்த்தி செய்யத்தான் அவரின் உடன் பிறந்த தம்பி மகபூப் அலி பள்ளியின் தலைமை ஆசிரியராய் வீற்றிக்கின்றாரே
கரும்பலகை பின்னணியோ
திரைச் சீலை பின்னணியோ
எதிலும் எங்கள்
எஸ் கே எம் ஸாரே முன்னணி!
படிப்போ நடிப்போ
எங்கள்
கணித ஆசான் கற்றுத்தர
தொண்டைக்குள் வெண்ணெயென
இலகுவாக
மண்டைக்குள் இறங்கும்
சமன்பாடுகள்
மொட்டவிழ்தல்போல்
மென்மையாய் விளங்கும்
சொல்லித்தரும் ஆசான்களுக்கிடையே
அள்ளித்தந்தவர் எங்கள் ஸார்
விளையாட்டு யுக்திகளும்
வெற்றிக்கான வியூகங்களும்
இவர்கள் வகுக்கக்கேட்டு
தலையாட்டும் தலைமை
ஆசிரியர்கள்மீதான
மரியாதையைக் கூட்டி
மிரட்சியைக் கழித்து
அன்பைப் பெருக்கி
அறிவால் வகுத்து
ஈவையும் மீதியையும்
நமக்கே தந்தவர்கள்
நடப்பை வைத்து
நல் மாணாக்கர் கணிப்பர்
வகுப்பாசிரியர்கள்,
இவர்களோ
என்
எதிர்காலம் கணித்து
"சிறந்த மாணவன்" என
எனக்குப்
பரிசு தந்த மேதை
வாழ்க என் வாத்தியார் எஸ் கே எம் ஸார்
//கரும்பலகை பின்னணியோ
திரைச் சீலை பின்னணியோ
எதிலும் எங்கள்
எஸ் கே எம் ஸாரே முன்னணி!
படிப்போ நடிப்போ
எங்கள்
கணித ஆசான் கற்றுத்தர
தொண்டைக்குள் வெண்ணெயென
இலகுவாக
மண்டைக்குள் இறங்கும்//
உண்மையை கவி நயத்தோடு சொல்வதில் சபீருக்கு நிகர் சபீரே.
சபீரின் அனுபவத்தின் வெளிப்பாடே இவை அணைத்தும் ஒவ்வொன்றையும் எப்படி சொல்கின்றார்
மஷா அல்லாஹ்
சபீர் சொன்னதையே நானும் வழி மொழிகின்றேன்
Assalamu Alaikkum
Thanks for publishing the video of teachers' day in our school.
My beloved and respected teacher Mr. SKM Haja Mohideen's energetic speech is great motivation for students and teachers of current generation.
Brother Mr. Ebrahim Ansari's enthusiastic speech reflecting with proud of being old student of our school. And his advice for students are excellent.
Jazakkallah khairan,
B. Ahamed Ameen from Dubai,
www.dubaibuyer.blogspot.com
ஆசிரியர் தினத்தின் வெற்றிக்கு பாடுபட்ட அனைவருக்கும் நன்றி. சகோதரர் இப்ராஹிம் அன்சாரி அவர்களுக்கும், வீடியோ பதிவு செய்த தம்பி நிஜாம் அவர்களுக்கும் பாராட்டுகள்.
SKMH சார் அவர்கள் சொன்னது ' யாரையும் நான் அடித்ததில்லை"....ஆம் நானும் இதுவரை அவர் யாரையும் அடித்து பார்த்ததில்லை. கோபம் வந்தால் கூட கடிந்து பேசாதவர். அவரின் அன்புதான் நம்மை படிப்பின் மீது ஆர்வத்தை தூண்ட வைத்தது.
மற்ற முன்னால் ஆசிரியர்கள் பேசினார்களா?.
சகோதரர் சிங்கார வேலு அவர்கள் என்னை விட ஒருவருடம் சீனியர்...அவரது பேச்சை கேட்க ஆவலாக காத்திருக்கிறோம். படிக்கும்போதே நகைச்சுவையாகவும் சிந்திக்கூடிய விசயங்களாகவும் பேசுபவர்.
ஜனாப் ஹாஜா முஹைதீன் சார் அவர்கள்,
அதிரையின் பாலசந்தர் என்று எல்லோராலும் அன்பாக பேசப்பட்ட ஒரு ஆசான் .
படிப்பு மட்டுமல்ல . நடிப்பையும் தத்ரூபமாக சொல்லி தரக்கூடியவர்கள்.
அவர்கள் இயக்கிய " தலை கேட்டான் தம்பி" என்னும் வரலாற்று நாடகத்தில் நான் நடித்துமிருக்கின்றேன்.
அலெக்சாண்டரின் தளபதியாக நடித்த ஞாபகம்.
அபு ஆசிப்.
ஆசிரியர் தினத்தை சிறப்பிக்கும் வண்ணம்மாக கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்களுக்கும், அன்பிற்கும், மதிப்பிற்கும் உரிய ஜனாப் ஹாஜா முஹைதீன் சார், ஜனாப் இபுறாஹிம் அன்சாரி காக்காவிற்கும், தாங்கள் ஆற்றிய சிறப்பு சொற்பொழிவிற்கும் ஆசிரிய பெருந்தகைகளுக்கும், மாணவச்செல்வங்களுக்கும் என் பொன்னான ஆசிரியர் தின நல்வாழ்த்துக்களும், இறை பிரார்த்தனையும் சென்றடையட்டுமாக!!!
//ஆஹா...
மேடையில்
வீற்றிருப்போரோடு
காற்றுமிருக்கிறது!
கூரை நுணியும்
மேசைத் துணியும்
தொடர்ந்து
கைதட்டிக்கொண்டேயிருக்கின்றன
படபடவென்று!
எனதூரில் மட்டும்தான்
உப்புக்காற்றும் இனிக்கும்
உள்நாக்குவரை!//
எத்தனை கற்பனை வளம் மிக்க ரசனையுடன் சபீரின் "கண்கள் இரண்டின்" வழியாக பதிவுற்ற ஆசிரியர் தினத்தின் அழகிய விழாக் காட்சியினை அற்புதமாக கவிதையில் வடித்திருப்பது ஆசிரியர் தினத்தின் நினைவை மறக்கவிடாதபடி கவிதையாக வடித்திருப்பது மிகவும் அருமை
அபூஇபு சொல்வது போன்று
//எழிலாடும் சேடைப் பேச்சும்
எங்களூர் வாடைப் பேச்சும்//
இபுராஹிம் அன்சாரி காக்கவின் தனி பானியாக உள்ளதையும், அவர்களின்
நினவாற்றலையும் கண்டு வியந்து போனேன்
வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் மேடை பேச்சு
//அதை நிவர்த்தி செய்யத்தான் அவரின் உடன் பிறந்த தம்பி மகபூப் அலி பள்ளியின் தலைமை ஆசிரியராய் வீற்றிக்கின்றாரே//
சரியாக சொன்னீர் ஹமீது அண்ணன் அவர்களே
இருந்தாலும் ஒருகை மட்டுமே பாடசலையில் அசைந்து கொன்டிருக்கின்றன. இன்னொருகையும் சேர்ந்து அசைத்தால் க்லாப்ஸ் சத்தம் வரும்
கவியன்பன் சொல்வதுபோன்று
“இந்த இ.அ.காக்கா அவர்கள் நமக்கு ஆசிரியராக வரவில்லையே” என்று ஏக்கத்தில் இருப்பதை அறிய முடிகின்றது!
இ.அ.காக்கா பள்ளி தலைமை ஆசிரியராக பனியாற்றியிருந்தால் க்லாப்ஸ் சத்தம் மிக துள்ளியமாக கேட்கும்
கவியன்பன் அவர்கள் சொன்னது
//அப்பள்ளியால் விதைக்கப்பட்டு, உருவாக்கப்பட்ட “நாவலர்” அதிரைக் களஞ்சியம் நூர்முஹம்மத் அவர்களின் சொற்பொழிவில்லாமல் போனது ஒரு குறையே! //
தம்பி அப்துல் காதர் சொன்னது.
//இதை நானும் ஏற்றுக்கொள்கின்றேன். உணமையிலேயே நூர் முஹம்மது அவர்கள் நாவன்மை மிக்க அழகிய பேச்சாளர். நான் காதிர் முஹைதீன் பள்ளியில் படிக்கும் காலங்களில் எனக்கு பாட்டுப்போட்டி எப்படியோ அவர்கள் பேச்சுப்போட்டியில் முதலிடம் பிடிப்பவர்கள்.
இன்ஷா அல்லாஹ் வரும் காலம் அவர்களை பயன்படுத்திக்கொள்ளட்டும் என்று நினைவு படுத்தியவனாக !//
தம்பி நூர் முகமது அவர்களை ஒரு கலைக் களஞ்சியம் என்றே நான் அழைப்பேன். அவர்களை விழாவுக்கு அழைத்த போது அவர் போட்ட முதல் கண்டிஷன் " நான் வருவேன்- ஆனால் என்னை மேடைக்கும் அழைக்கக் கூடாது பேசவும் சொல்லக் கூடாது " என்பதே.
ஆகவே அவருடைய விருப்பத்துக்கு மதிப்பளித்து அவரை பேசும்படி அழைக்கவில்லை. தவிரவும் நேரம் மிகவும் குறுகியது. நானும் எனது பேச்சில் குறிப்பிட வேண்டிய சில செய்திகளை பேச இயலவில்ல.
இன்ஷா அல்லாஹ் தம்பி ஜாகிர் அவர்கள் கேட்டுக் கொண்டது போல் விரைவில் ஒரு பட்டி மன்றம் நடத்த வேண்டுமென்று ஆலோசனை செய்துள்ளோம். தலைப்பு: இன்றைய இளைஞர்களின் எதிர்காலம் திட்டமிடப் பட்டதா- திசை மாற்றப் பட்டதா ? என்பதாகும். இதற்கு ஒரு அணித தலைவராக தம்பி நூர் முகமது அவர்களை கேட்க இருக்கிறோம். உங்கள் அனைவரின் ஆசையும் நிறைவேறும். காணொளியில் அவற்றைக் காணலாம். இன்ஷா அல்லாஹ்.
/ அவர்களை விழாவுக்கு அழைத்த போது அவர் போட்ட முதல் கண்டிஷன் " நான் வருவேன்- ஆனால் என்னை மேடைக்கும் அழைக்கக் கூடாது பேசவும் சொல்லக் கூடாது " என்பதே. //
இது அவர்களின் பெருந்தன்மையை காட்டுகின்றது என்றுதான் சொல்வேன்.
இன்னும் அழைப்பில் கொஞ்சம் அழுத்தம் கொடுத்திருந்தால் மேடை ஏறி இருப்பார்களோ என்னவோ.
அபு ஆசிப்.
சாகுல் ஹமீது சொன்னது
//அதை நிவர்த்தி செய்யத்தான் அவரின் உடன் பிறந்த தம்பி மகபூப் அலி பள்ளியின் தலைமை ஆசிரியராய் வீற்றிக்கின்றாரே//
இதை நாங்கள் விழாவிலோ அல்லது விருந்தினர்களிடையோ பரிமாறிக் கொள்ளவில்லை . விழா நிறைவுர்றுப் போகும்போது திர். ரங்கராஜன் சார் அவர்களிடம் மட்டும் சொனேன். மிகவும் மகிழ்ந்தார்கள். வாழ்த்தினார்.
உண்மையில் எனது உரையின் முடிவில்
" உங்களின் தலைமை ஆசிரியர் வேறு யாரும் அல்ல . நான் எந்த தாயின் வயிற்றில் பத்து மாதம் குடி இருந்து வெளி வந்தேனோ அதே தாயின் வயிற்றில் எனக்கு இருபத்தியொரு வருடத்துக்குப் பிறகு குடியிருந்தவர்தான்" என்று முடிக்க நினைத்து இருந்தேன். ஆனால் நேரம் இல்லாமையால் சொல்ல விட்டுப் போன சில விஷயங்களில் இதுவும் ஒன்று.
மேலும் நினைவுப் பரிசுகளை வழங்க வேண்டுமென்று மதிப்பிற்குரிய அஹமது காக்கா அவர்களைக் கேட்டிருந்தேன். பரிசுகளை மேடையில் குவித்து வைத்துக் கொண்டு அழைத்த போதும் அவர்கள் வர இயலாமையை சொல்லிவிட்டார்கள். வற்புறுத்த நேரமில்லை. ஆகவே , நானும் பேராசிரியர் அப்துல் காதர் அவர்களும் வழங்கினோம்.
//இன்னும் அழைப்பில் கொஞ்சம் அழுத்தம் கொடுத்திருந்தால் மேடை ஏறி இருப்பார்களோ என்னவோ.//
தம்பி அப்துல் காதர் மற்றும் கவியன்பனின் குறைகள் இன்ஷா அல்லாஹ் விரைவில் நிவர்த்தி செய்யப் படும். நூர் முகமது அவர்கள் வருவார் வண்ணத் தமிழ் தருவார்.
இன்றைய இளைஞர்களின் எதிர்காலம் திட்டமிடப்பட்டதா? திசை மாற்றப்பட்டதா? என்ற கேள்விக்கு என்னுடைய சிறிய கருத்து:
இன்றைய நவீன சீரழிவு சினிமாவின் கதாநாயகன்களாலும், அதில் விழுந்து விட்டால் சேரும், சகதியும் தான் என்றிருக்கும் அநாகரிக அரசியல் தலைவர்களாலும், அதற்கு ஒரு படி மேலே போய் இளைஞர்களை மூட நம்பிக்கையின் பக்கம் திசைதிருப்பி அதன் மூலம் தன் அரசியல் காய் நகர்த்தும் மதவாத கட்சிகளின் தலைவர்களாலும், நாட்டின் வீரதீர பாரம்பரிய விளையாட்டுக்களையெல்லாம் ஓரம் கட்டச்செய்து ஆட்சிப்பீடத்தில் அமர்ந்து கோடிகளை தன் காலடியில் கொண்டு வந்து கொட்டும் கிரிக்கெட் விளையாட்டு வீரர்களாலும், இன்றைய இளைஞர்கள் புது செருப்பு வாங்கினாலும் அதற்கும் போதை தரும் குடி பான பார்ட்டி வைக்கும் கலாச்சாரமும் பரவி இருப்பதாலும் "இன்றைய இளைஞர்களின் எதிர்காலம் மேற்கண்ட கபோதிகள் மூலம் திட்டமிட்டே திசை திருப்பப்பட்டுள்ளது" நடுவர் அவர்களே அதை நன்கு விளங்கி விழிப்புணர்வுடன் வெளியேறி விட்டால் அவர்களின் எதிர்காலம் வசந்த காலமே....இல்லையேல் என்றும் கசந்த காலம் தான்...கசந்த காலம் தான்...என்று கூறி எனக்கு வாய்ப்பு அளிக்காத அனைவருக்கும் நன்றி கூறி விடை பெறுகின்றேன்......
தம்பி ஜாகீர் கேட்டது,
//மற்ற முன்னால் ஆசிரியர்கள் பேசினார்களா?.// இல்லை. எனக்கு பள்ளியின் மூலம் தரப்பட்ட நினைவுப் பர்சை திரு. ரங்கராஜன் சார் அவர்களுக்கு தரும்போது மட்டும் மேடை ஏறினார்கள்.
அன்பான சகோதரர்களே! சில குறைகள் இந்த நிகழ்ச்சியில் இருந்து இருக்கலாம். இனி வரும் வருடங்களில் இவைகள் முன் கூட்டிய மஷூரா செய்யப் பட்டு தீர்க்கமான திட்டங்களுடன் நிறைவேற வல்ல அல்லாஹ் துணை நிற்பானாக!
பட்டிமன்றத் தலைப்பைப் பற்றி பேச்சு அடிபடுவதால் எனக்கு இப்ப கிடைத்த சில தலைப்புகள்:
01) இபுறாகீம் அன்சாரி காக்கா அவர்கள் எழுத்தாளரா பேச்சாளரா
02) அவர்கள் பேசும்போது நிகழ்ந்தது மடை திறப்பா அடை மழையா
03) அவர்கள் பேச்சால் விதைத்தது உற்சாகமா உத்வேகமா
ஒவ்வொரு வார்த்தை உச்சரிக்கவும் ஒன்பது நொடிகள் எடுத்துக்கொள்பவர்கள் எல்லாம் பேச்சாளரகள் என்று சொல்லிக்கொண்டு அரசியல் நடத்துபவர்கள் கேட்டிருக்க வேண்டும் காக்காவின் சரவெடி பேச்சை. கொத்திக்கொண்டு போய்விடுவார்கள்.
எனக்காக உடனடியாக யாராவது இன்னுமொறு விழா எடுத்து காக்காவைப் பேசச்சொல்லுங்களேன்; என் கேள்வித் தாகம் சற்று தீரட்டும்.
சொற்பொழிவென்னும் பெயரில் பாலைவனக்காரன் என்னில் பனிப்பொழிந்து அமர்ந்திருக்கும் காக்கா நீடூழி வாழ்க.
(அ.நி.: அப்பப்ப, காக்காவின் ஆடியோ பதிவுகள் தர மியற்சி செய்யுங்களேன்.
//அலெக்சாண்டரின் தளபதியாக நடித்த ஞாபகம். //
நல்லவேளை நான் அலெக்ஸாண்டராக நடிக்கவில்லை. அப்படி நடித்திருந்தால் மக்கள் அன்றைக்கே கவுண்டமணியையும் செந்திலையும் கண்டுகளித்திருப்பார்கள்.
sabeer.abushahruk சொன்னது…
பட்டிமன்றத் தலைப்பைப் பற்றி பேச்சு அடிபடுவதால் எனக்கு இப்ப கிடைத்த சில தலைப்புகள்:
01) இபுறாகீம் அன்சாரி காக்கா அவர்கள் எழுத்தாளரா பேச்சாளரா
02) அவர்கள் பேசும்போது நிகழ்ந்தது மடை திறப்பா அடை மழையா
03) அவர்கள் பேச்சால் விதைத்தது உற்சாகமா உத்வேகமா
---------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். கவியரசே! மேற்சொன்ன யாவுமே பொருந்தும். குறிப்பாக அந்த அடைமழை அ. நி இல்லாமல் இருந்திருந்தால் அது நம்மை அடையா"மழையாகி இருக்கும். மேலும் நம்மை இப்படி நனைத்திருக்காது.மேனி சிலிர்த்ததும், இதயம் குளிர்ந்ததும் இதனால் நடந்தது. அல்ஹம்துலில்லாஹ்!
ஹாஜாமொகைதீன் சாரை(பழச்சாரை பிழிந்துதரும் சு(ளை)சுவை)இன்னும் பேச சொல்லியிருக்கலாம் என்பது என் கருத்து. இனி நேர திட்டம் நீடித்து வைத்தால் நலம்.
கிரவுன்,
அடைமழைக்கு அடையா மழை என்று அழகுற கேட்கள் நீங்கள்
"தமிழ்க் கடை ஏதும் வைத்திருக்கிறீர்களா?"
சொல்லுங்கள், முதற்கஸ்டமராக நான் நிற்பேன் கையில் டாலர் அல்லது பையில் ரூபாயோடு.
கிரவுன்,
அடைமழைக்கு அடையா மழை என்று அழகுற கேட்கள் நீங்கள்
"தமிழ்க் கடை ஏதும் வைத்திருக்கிறீர்களா?"
சொல்லுங்கள், முதற்கஸ்டமராக நான் நிற்பேன் கையில் டாலர் அல்லது பையில் ரூபாயோடு.
-------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். முதல், இடை, கடை தமிழ் சங்கங்கள் தானே? இதில் தமிழை முதல் போட்டு, இடையில் உங்களைப்போலவர்களின் பழக்கம் மற்றும் உதவியினால் சின்னதாய் கடைப்போட்டு இருக்கிறேன். ஆனாலும் டாலருக்கு காலர் தூக்கும் ஆள் நான் இல்லை என்பதால் எனக்காக இதை கருவாக்கி, கவிதை ஒன்று உருவாக்கித்தரனும் என்பது என் அவா!செய்வீர்கள் தானே?
கிரீடம்
(கரு: கிரவுன் /உரு: சபீர்)
என்ற தலைப்பில் ஏற்கனவே ஒன்று எழுதி வைத்திருக்கிறேன். அந்த கடைசி முடிச்சு பலமானதாக அமைந்ததும் வெளியிட்டு விடலாம்.
Va alaikkumussalam
(Sorry)
abeer.abushahruk சொன்னது…
கிரீடம்
(கரு: கிரவுன் /உரு: சபீர்)
என்ற தலைப்பில் ஏற்கனவே ஒன்று எழுதி வைத்திருக்கிறேன். அந்த கடைசி முடிச்சு பலமானதாக அமைந்ததும் வெளியிட்டு விடலாம்.
------------------------------------------------------------
சந்தோசம்!! முடிச்சை லாவகமாய் அவிழ்கவும், முடிச்சை பலமாய் போடவும் உங்களால் முடியும். நீங்கள் எழுதியது அந்த தொப்புள் கொடி முடிச்சிதானே?அதை சீக்கிரம் முடிச்சி எங்களுக்கு கவிதைக்குழந்தையை சீராட்ட சீக்கிரம் தாங்கள் என தாங்களை கேட்டுக்கொ(ல்)ள்கிறேன்.
அன்புக் கட்டளைக்கு இணங்கி வருகைப் பதிவேட்டில் இருந்தமைக்கு அன்பான நன்றிகள்!
நினைவு நாடாவிலிருந்து மேலும் சில.....
உயர்திரு.ரெங்கராஜன் சார் அவர்கள் பாடம் நடத்தும் பொழுது, உன்னிப்பாகக் கவனித்தாலே போதும்; அதனை அப்படியே தேர்வு அன்று மனக்கண்ணில் கொண்டு வந்து விடைத்தாளில் பிரதி எடுத்து விட்டாலே போதும். அப்படியொரு திறமையும், வகுப்பைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஆற்றலும் அவர்களிடம் கண்டுள்ளேன். இடையில் நீதி போதனைகள்/ சமய நல்லிணக்க அறிவுரைகள் என்று பன்முகமாகக் காட்சிதரும் அவர்களின் கற்பித்தல் இன்னும் மனத்தினில் பசுமரத்தாணி போல் அசையாமல் இருப்பதை, இத்தனை ஆண்டுகள் கழித்தும் அவைகளை அன்னாரிடம் சென்ற மாதம் விடுப்பில் இருந்த வேளையில் சொல்லிக் காண்பித்தேன்.
ஜனாப். அலியார் சார் அவர்களைக் கண்டால் சிங்கத்தின் கம்பீரமும் அதனால் எனக்கு நடுக்கமும் ஏற்பட்டதுண்டு. அன்னாரின் வகுப்பையும் நாம் உன்னிப்பாகக் கவனித்து விட்டால் போதும். “நாளைக்கு இதே பாடத்தில் கேள்வி கேட்பேன்” என்பார்கள். ஆனால், இரவு 9 மணிவரை வீடு வராமல் ஊர் சுற்றிக் கொண்டும், விளையாடிக் கொண்டுமிருப்போம். அடுத்த நாள் முந்தைய நாளின் பாடத்தில் கேள்விகள் கேட்கப்படும்; அன்றிரவு படிக்காமலே உடனுக்குடன் பதில்கள் சொல்ல முடியும்; அவர்கள் நடத்திய பாடங்களை வகுப்பில் உன்னிப்பாகக் கவனித்ததால், “பின் ட்ராப் ஸைலன்ஸ்” என்பது அவர்கள் வகுப்பில் மட்டும் தான்! அப்படியொரு கட்டுப்பாடு.
மாணவர்த்தலைவனாக இருந்த காலத்தில் ஜாவியா முடிந்து தாமதமாக வந்தவர்களை உடற்கல்வி ஆசிரியர் தாஜூதீன் சார் அவர்கள் பிரார்த்தனக் கூட்டத்திற்கு வெளியே நிறுத்தியும், தாமதமாக வந்தவர்களை இடைநீக்கம் செய்ய தலைமை ஆசிரியர் இப்ராஹிம் சார் அவர்களிடம் பரிந்துரைத்தார்கள்; இதனால், அடியேனின் உத்தரவால், “ஸ்டிரைக்” என்னும் வகுப்புப் புறக்கணிப்பை மேற்கொண்டோம், நீக்கப்பட்ட மாணவர்களை மீண்டும் சேர்க்கும் வரை!
பின்னர் மாணவர்கள் பக்கம் வெற்றியாகி விட்டாலும் , அலியார் சார் அவர்கள் என்னைக் கூப்பிட்டுச் சொன்ன வார்த்தைகள் இன்றும் மறக்கவே இயலாது, “ நீ பார்த்தால் நுழைஞ்சான் (அப்பொழுது ஒல்லியாக இருப்பேன்) மாதிரி இருந்து கொண்டு இப்படிப்பெரிய வேலை எல்லாம் செய்து விட்டாய்; அதிலும் வகுப்பில்முதல் மாணவனாய் (6 ஆம் வகுப்பு முதல் இறுதி வகுப்பு வரை) தொடர்ந்து தக்க வைத்திருப்பதால் உன்னை தேர்தல் இன்றி நியமனமாக மாணவர்த் தலைவனாக்கினோம்; ஆனால் நீயோ உன் மீது நான் வைத்துள்ள மதிப்பில் ஒரு கறுப்புக் கோட்டைக் கிழித்து விட்டாய்” என்றார்கள்.
அன்றிலிருந்து அவர்களுடன் முகம் பார்த்து பேச கூட எனக்கு பயமாகி விட்டது. இப்பொழுது அவர்களைச் சந்தித்து உரையாடும் பொழுதும் இந்நிகழ்ச்சி மற்றும் அவர்கள் என்னிடம் சொன்னவைகளை நினைவு படுத்தியிருக்கிறேன். அப்பொழுது வியந்தார்கள்:இன்னும் அவற்றை எல்லாம் நினைவில் வைத்துள்ளாயா?” என்றார்கள்.
ஆம். என்னை வளர்த்தெடுத்த அப்பள்ளியில் 6 ஆம் வகுப்பு முதல் 11 ஆம் வகுப்பு வரைக்கும் எல்லா நடவடிக்கைகளும் ஒன்று விடாமல் என் மனத்தினில் ஆழமாய்ப் பதிந்து விட்டன. இன்று அ.நி.யில் என் நினைவு நாடாக்கள் மீள்சுழற்சி யாகின்றன.
ஜனாப் ஹாஜா முஹைதீன் சார் அவர்கள் எனக்கு “எலக்டிவ் சப்ஜக்ட்” விருப்பப்பாடத்தில் அல்ஜிப்ரா பாடம் நடத்தும் பொழுது தான் தமிழிலக்கணத்துடன் செய்முறை குறிப்புகள் தருவார்கள்; அவர்கள் மூலம் கற்றுக்கொண்ட அந்த இலக்கணக் குறிப்புகள் இன்றும் எனக்கு மனத்தினில் ஆழமாய்ப் பதிந்துள்ளன. ஆயினும், பள்ளி இறுதித் தேர்வில் அடியேன் முதல் மாணவனாய் வர வேண்டும் என்று விழைந்தார்கள். தமியேனுக்கு இரண்டாம் மாணவன் என்ற அளவுக்கு முதல் மாணவனுக்கும் எனக்கும் 20 மதிப்பெண்கள் வித்தியாசத்தில் அந்த வாய்ப்புத் தவறிவிட்டது; அதுவும் அவர்களின் கணிதச் சிறப்பு விருப்பப் பாடத்தில் குறைவான மதிப்பெண் கிடைத்ததால்; அந்த வருத்தம் இன்னும் என் மனத்தினில் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கின்றது. உண்மையில் தவறு என்னுடையது தான். அடுத்த ஆண்டு புகுமுக வகுப்பில் கணீதம் எடுக்கப் போவதில்லை; உறுதியாக வணிகவியல் தான் என்று முற்கூட்டியே முடிவு செய்து கொண்ட எண்ணத்தால் கணிதச் சிறப்புப் பாடமான அல்ஜிப்ராவில் சரியாக அந்த இருபது மதிப்பெண் வித்தியாசம் ஏற்பட்டு இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டேன்!
ஆசிரியர் தினத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவம் பெற்றோர்கள் தினத்திற்கும் கொடுக்கப்பட வேண்டும் தந்தையர் தினம்,மங்கையர் தினம் ஏதோ வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதாக கருதக்கூடாது .மதிற்குரிய ஆசான் ஜனாப் .ஹாஜா முஹயுதீன் சார் அவர்கள் படைப்பில் எங்கே இளவரசன் நாடகம் அரங்கேறிய காலத்தில் அதில் நான் நாகநாதன் என்ற வில்லன் வேடத்தில் நடித்தவனே .......நடிப்பை கற்றுத்தருவதில் அவர் வித்தகர் ......
தம்பிகள் சபீர் & கிரவுன் உங்களின் அன்பு அடை மழையில் நனையும் பெரும் பேறு கிடைக்கச் செய்த இறைவனுக்கே எல்லாப் புகழும்.
கிரவுன் தமிழ்க் கடை வைத்து இருந்தால் சபீர் வைத்து இருப்பதோ தமிழ்க் கிடை . இந்தக் கிடைக் கடையில் வார்த்தைக் குட்டிகள் பல்கிப் பெருகுகின்றன.
இயக்குநர் இமயம் கணித மேதை ஹாஜாமுஹைதீன் சார் அவர்கள் எழுதி இயக்கிய “ எழுத்தாளர் ஏகாம்பரம்” நாடகத்தில் அரசு தரப்பு வழக்குரைஞராக நடித்ததும். வழக்கம் போல் (பேச்சுப் போட்டியில் எனக்குப் போட்டியாக இருக்கும்) நாவலர் நூர்முஹமத் அவர்கள் குற்றஞ் சாட்டப்பட்டவர்க்காக வாதாடும் வழக்குரைஞராக நடித்தார்கள்.
இந்தியாவின் 25 ஆம் ஆண்டு (வெள்ளிவிழா)க் கொண்டாட்டத்தின் நினைவாகப் பேச்சுப்போட்டியில் கலந்து கொள்ள பட்டுக்கோட்டை ஆண்கள் பள்ளிக்குச் சென்று பேசி முதற்பரிசை வென்றதும், முன்னாள் குடியரசுத் தலைவர் வெங்கட்ராமன் அவர்களால் அப்பரிசினைப் பெற்றதும் என் நினைவில் நி|ற்பவைகள்.
rahim Ansari சொன்னது…
தம்பிகள் சபீர் & கிரவுன் உங்களின் அன்பு அடை மழையில் நனையும் பெரும் பேறு கிடைக்கச் செய்த இறைவனுக்கே எல்லாப் புகழும்.
கிரவுன் தமிழ்க் கடை வைத்து இருந்தால் சபீர் வைத்து இருப்பதோ தமிழ்க் கிடை . இந்தக் கிடைக் கடையில் வார்த்தைக் குட்டிகள் பல்கிப் பெருகுகின்றன.
----------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். இங்கே அறிஞர் அன்சாரி காக்கா அவர்கள் தான் ஆடா"விட்டாலும் தன் சதை(தசை?????)ஆடு'ம் என்பதை நிரூபித்துவிட்டார்கள்.
சபீர் வைத்து இருப்பதோ தமிழ்க் கிடை . இந்தக் கிடைக் கடையில் வார்த்தைக் குட்டிகள் பல்கிப் பெருகுகின்றன.
----------------------------------------------------------------
சிலருக்கு வார்தை "முட்டிமோதி" வரும் இவர் கிடையில் வரும் குட்டி பாய்ந்துவரும் வேங்கையாய்!
ஆசிரியர் தின காணொளிப் பதிவு ஒரே கருப்பு!
மைத்துனர் இனா.அனா. பேச்சு பந்தல் கால் கூட காற்றுக்கு அசையாமல் நின்று காது கொடுத்து கேட்டது!.
நானும் காது கொடுத்துதான் கேட்டேன். திரும்பி வரும் போது கொடுத்த காதை கேட்டு வாங்கி வந்து விட்டேன். என்னதான் தாயா பிள்ளையா
இருந்தாலும் காதும் கண்ணும் வேறே! வேறே தானே!
முன்னாள் தலைமை ஆசிரியர் ஜனாப் S.K.M. ஹாஜா மைதீன் அவர்கள் இந்நாள் தலைமை ஆசிரியார் போல் பொறுப்புடன் பேசிய பேச்சு 'மாதா-பிதா-குருதெய்வம்' என்றமுன்னோர் வாக்கை மெய்ப்பித்தது.
அவர் கணக்கு பாடத்தை காவியம் போல் நடத்துவாறாம்!. நான் படிக்கும்
போது நாகரெத்தினம் ஸார் கணக்கில் மீது ஒரு கண்ணும் என் காது மீது ஒரு கண்ணுமாக இருப்பார்!
என் காதை காப்பாற்றவே கப்பல் ஏறினேன்!
அடுத்து அண்ணா சிங்காரவேலு குளுங்க-குளுங்க சிரிக்க வைத்ததில் வந்தது வவுத்துவலி! மொத்தத்தில் அது ஒரு 'பொன்மாலைப் பொழுது!' மீண்டும் வந்திடுமோ!
S.முஹம்மதுபாரூக், அதிராம்பட்டினம்
சொற்பொழிவும், கருத்துப் பொழிவும் படுஜோர்!
இரண்டும் இணைந்த இன்ப வெள்ளம் ஆசிரியர் தினம்!!
முன்னாள் ஹெட்மாஸ்டர், இந்நாள் ஹெட்மாஸ்டரின் காக்கா பேச்சு ரொம்ப பிடிச்சுருச்சு!!!
கவியன்பனின் (ப்லாஷ் பேக்) நினவுகள்
என்னையும் 32 வருடம் பின்னே இழுத்துச்சென்று அசைபோடவைத்து உள்ளம் மகிழவைத்தது
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே
நண்பனே! நண்பனே! கவியன்பனே!
இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே
அது ஏன்? ஏன்? ஏன்? நண்பனே!
பாடம் படிப்பு ஆட்டம் பாட்டம்
இதைத் தவிர வேறெதைக் கண்டோம்
புத்தகம் பையிலே
புத்தியோ விளையாட்டிலே
பள்ளியைப் பார்த்ததும்
ஒதுங்குவோம் மழையிலே
நித்தமும் நாடகம்
நினைவெல்லாம் காவியம்
உயர்ந்தவன் தாழ்ந்தவன்
இல்லையே நம்மிடம் அப்போது
பள்ளியை விட்டதும் பாதைகள் மாறினோம்
கடமையும் வந்தது கவலையும் வந்தது
பாசமென்றும் நேசமென்றும்
வீடு என்றும் மனைவி என்றும்
நூறு சொந்தம் வந்த பின்பும்
தேடுகின்ற அமைதியெங்கே?
நூறு சொந்தம் வந்த பின்பும்
தேடுகின்ற அமைதியெங்கே?
அமைதி எங்கே?
அவனவன் நெஞ்சிலே ஆயிரம் ஆசைகள்
அழுவதும் சிரிப்பதும் ஆசையின் விளைவுகள்
பெரியவன் சிறியவன்
நல்லவன் கெட்டவன்
உள்ளவன் போனவன்
உலகிலே பார்க்கிறோம்
எண்ணமே சுமைகளாய்
இதயமே பாரமாய்
எண்ணமே சுமைகளாய்
இதயமே பாரமாய்
தவறுகள் செய்தவன் எவனுமே
தவிக்கிறான் அழுகிறான்
நண்பனே! நண்பனே! கவியன்பனே!
ஹா!....ஹ்ஹா!....ஹ்ஹ்ஹா!.........
//மைத்துனர் இனா.அனா. பேச்சு பந்தல் கால் கூட காற்றுக்கு அசையாமல் நின்று காது கொடுத்து கேட்டது!.
நானும் காது கொடுத்துதான் கேட்டேன். திரும்பி வரும் போது கொடுத்த காதை கேட்டு வாங்கி வந்து விட்டேன். என்னதான் தாயா பிள்ளையா
இருந்தாலும் காதும் கண்ணும் வேறே! வேறே தானே!//
ஒவ்வொருத்தருக்கும் இறைவன் கொடுத்திருக்கும் கற்பனை திறனில் ஒப்பனை செய்து சொல்வதில் பாரூக் காக்காவின் பானியே தனி
//01) இபுறாகீம் அன்சாரி காக்கா அவர்கள் எழுத்தாளரா பேச்சாளரா
02) அவர்கள் பேசும்போது நிகழ்ந்தது மடை திறப்பா அடை மழையா
03) அவர்கள் பேச்சால் விதைத்தது உற்சாகமா உத்வேகமா//
1.இபுராஹீம் காக்கா அவர்களை பற்றி இது போன்று இன்னும் நிறைய கேள்விகளை முன்வைக்க முடியும்.
சுருக்கமாக சொல்லப்போனால் "ஆல் இன் ஆல் அழகு ராஜா" என்று சொல்வார்களே அந்த வார்த்தைக்கு சொந்தக்காரர்தான் இபுறாகீம் அன்சாரி காக்கா.
அவர்கள் வாய் திறந்தால் இடி இடித்து மின்னலடித்து, அடைமழை பொழிந்து, மடைதிறக்கும் வேலயும் நமக்கு வந்துவிடும் இபுறாகீம் அன்சாரி காக்கா அவ்ரகளின் பேச்சாற்றலால்.
வாழ்க இபுறாகீம் அன்சாரி காக்காவின் பேச்சாற்றல்
வளர்க நம் சமுதாயத்தின் பனி.
அவர்களின் இடிமுழக்கபேச்சால் நம்மில் புதைந்தது உற்சாகமும், உத்வேகமும் என்பதில் கிஞ்சிற்றும் சந்தேகமில்லை
//S.K.M.H சொன்னது ''யாரையும் நான் அடித்ததில்லை!''/
/ஆனால் கரும் பலகையில் எழுதிப் போட்ட கணக்கை அடித்தாரே!
பாவம்! அது என்ன தப்பு செய்தது?
S.முஹம்மதுபாரூக்,அதிராம்பட்டினம்.
கணொளிக் காணா ஆவல் இருந்தும்...பிள்ளைகளின் பள்ளி வேலைகள் பின்னால் வந்து இடித்து கொண்ருப்பதால் பிறகு பார்க்கணும்....நிச்சயம் திறமை வாய்ந்த அன்சாரி மாமாவின் உரை மாணவர்களுக்கு உதவியாக இருந்திருக்கும்
மருமகன் யாசிர் அவர்களின் கருத்திடல் இல்லாமல் ஏதோ ஒரு சீர் குறைவாக இருந்ததாகப் பட்டது. ஜசாக் அல்லாஹ் ஹைரா.
என் இனிய நண்பன் மன்சூர் பாடிய பாடலில் உண்மை நட்பையும் கடந்தகாலப் பள்ளிப்பருவத்தையும் சுட்டிக் காட்டியதில் கெட்டிக்காரனாய் மிளிர்கின்றான்!
உன்னுடைய ஞாபகங்களின் தீயில் வெந்த நினைவுச் சமையல் பாட்டினுக்கு மிக்க நன்றி= ஜஸாக்கல்லாஹ் கைரன்.
மரியாதைக்குறிய ஆசான் ஜனாப். SKM . ஹாஜா முஹைதீன் சார் அவர்கள் எந்த மாணவனையும் மனம் புண்படும்படி பேசியது கூட இல்லை. முன்னால் குடியரசு தலைவர் Dr . ராதா கிருஷ்ணன் அவர்களை பற்றிய தகவல் ஆச்சரியமானது. பல்லாண்டுகள் நலமாக வாழ வல்ல நாயனை வேண்டுகிறேன்.
அன்பிற்குரிய முன்னால் மாணவர் அன்சாரி மாமா அவர்கள் எழுத்தில் மட்டுமே புலி என்று எண்ணி இருந்தேன் . அனேகமாக முதல் மேடை என்று நினைக்கிறேன் , இருப்பினும் பசு - தென்னை மரம் பற்றிய கட்டுரை, மாமனார் - மருமகன் ஆஸ்பத்திரி உரையாடல் பற்றி பேசியதும் மாணவர்கள் தொடர் சிரிப்பொலி .... ஒரு பேச்சாளர் அதிரையில் உருவாகிறார் என்கிற மகிழ்ச்சியை தந்தது.
அரசியல் அவலம்,பொருளாதார சீர்கேடுகள் பற்றி இணையத்தில் படைப்பதை மேடையில் உரைத்து ... சமூக தொண்டு செய்தால் நல்லது .
அதிரை. B . ஷாஜஹான் . துபாய்.
Post a Comment