Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

"மனுநீதி மனித குலத்துக்கு நீதியா?" நூல் விமர்சனம் 17

அதிரைநிருபர் பதிப்பகம் | December 22, 2012 | , ,


'மனுநீதி மனித குலத்துக்கு நீதியா?' என்ற வினாவைத் தலைப்பாகக் கொண்ட ஆய்வு நூலைப் படிக்கக் கூடிய அரிய வாய்ப்பைத் தந்துள்ளார்கள் அதிரைநிருபர் பதிப்பகத்தார். அந்நூலில் இடம் பெற்றுள்ள 12 கட்டுரைகளும் நூல் வடிவம் பெறுவதற்கு முன்னரே அதிரைநிருபர் வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதை அறிந்திருந்தேன். அவற்றைக் கண்ணுறும் வாய்ப்பு கிட்டாத என்போன்றோருக்கு இந்நூல் பேருதவியாக அமைந்துள்ளது. நூலாசிரியருக்கும் நூல் பதிப்பகத்தாருக்கும் நன்றிகள் பல..

'மனுநீதி மனித குலத்துக்கு நீதியா?' நூலைப் படித்து முடித்த நான் அந்நூலைப் பற்றிய சில கருத்தோட்டங்களை அதிரைநிருபர் வலைத்தள வாசக சகோதரர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அதற்கு முன் நூலாசிரியர் தம்பி இப்ராஹீம் அன்சாரி பற்றி சில வார்த்தைகள். 40 ஆண்டுகளுக்கு முன் காதிர் முகைதீன் உயர்நிலைப் பள்ளியில் (அப்போது அதுதான் பெயர்) பட்டதாரி ஆசிரியராகப் பணியேற்ற புதிதில் நான் கண்ட நன்மாணாக்கர்கள் சிலருள் அன்சாரியும் (அப்போது அப்படித்தான் அவர் பெயரை அறிந்திருந்தேன்) ஒருவர். அன்றைய அன்சாரி படிப்பு, நடிப்பு, பேச்சு இவற்றில் சிறந்து விளங்கினார். பள்ளி ஆண்டு விழாவுக்காக நான் இயற்றிய 'ஒட்டக் கூத்தார்' இலக்கிய நாடகத்தில் சோழ மன்னன் வேடமேற்று நடித்தது என் நினைவில் நிற்கிறது.

40 ஆண்டுகளுக்குப் பிறகு ஓராண்டுக்கு முன் இப்ராஹீம் அன்சாரி என்ற பெயரில் மீண்டும் எனக்கு அறிமுகமானார். அப்போதுதான் அறிந்தேன் இப்ராஹீம் அன்சாரி என்ற பெயரில் வலைத்தளங்களில் சமூக சிந்தனை மற்றும் பொருளாதாரச் சிந்தனனகள் சார்ந்த சிறந்த கட்டுரைகளைப் பதிவு செய்து வருபவர் நமது முன்னாள் மாணவர் அன்சாரிதான் என்று மகிழ்ந்தேன், வியந்தேன்.

'மனுநீதி மனித குலத்துக்கு நீதியா?' போன்ற ஒரு படைப்பைத் தருவதற்கு அறிவும் திறமையும் இருந்தால் மட்டும் போதாது; துணிவும் மிகத்தேவை. அது இப்ராஹீம் அன்சாரியிடம் நிரம்ப இருக்கிறது எனத் தெரிகிறது. "உண்மைகளை வெளிக் கொண்டு வரும்போது விதண்டாவாதிகளுக்கும் பிற்போக்கு வாதிகளுக்கும் கோபம் வரலாம். உண்மையைச் சொல்ல ஓடி ஒளிய வேண்டியதில்லை" என்று நூலின் முன்னுரையில் குறிப்பிடும் போதே தெரிந்து விடுகிறது அவர் தம் கைவசம் நிறைய ஆதாரங்களை வைத்திருக்கிறார் என்று. தேடியெடுத்து தக்க தகவல்களைத் திரட்டிய பின்னர்தான் இத்தகைய தலைப்பைத் துணிவோடு தொட்டிருக்கிறார், பாராட்டுக்கள்.

தாம் மேற்கொண்ட முயற்சிக்கு வலுசேர்க்கும் வகையில் வால்மீகி, வள்ளுவர், திரூநீலகண்டர், பட்டினத்தார், பாரதியார், மகாத்மா காந்தி, டாக்டர் அம்பேத்கர் போன்றோர் பற்றியெல்லாம் குறிப்பிட்டுக் காட்டியுள்ளார். அதே நேரத்தில் மனுநிதீயால் மறுமலர்ச்சி கண்ட சிலரை நோக்கி 'சண்டாளச் சாமியார்கள்' என்ற தலைப்பின் வாயிலாக சாட்டையைச் சுழற்றியிருக்கிறார். அவர்களில் சிலர் நாம் வாழுகின்ற காலத்திலேயே வாழ்ந்து கொண்டிருக்கும் சந்திராசாமி, ஜெயேர்ந்திர சரஸ்வதி சாமி, நித்யானந்தா சாமி போன்றோர்.

சில வருடங்களுக்கு முன் 'பெண்களின் நிலை - அன்றும் இன்றும்' என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். அதில் அன்றைய பெண்களின் நிலைபற்றி குறிப்பிடும்போது பால்ய விவாகம், உடன்கட்டையேறுதல், தேவதாசி அமைப்பு முறைகள் பற்றிச் சாடியிருந்தேன். இந்த மூன்று பாதகங்களை பற்றி 'மனுநீதியால் மாதர் நிலை' என்ற தலைப்பிலானன் கட்டுரையில் விரிவாகவே விளக்கியுள்ளார் இப்ராஹீம் அன்சாரி.

இவற்றுடன் தேவதாசி முறை என்பது வெட்கக் கேடான அமைப்பாகும் எனக் கூறவரும் நூலாசிரியர் 10-11-1987 TIMES OF INDIA வில் வெளிவந்துள்ள ரிப்போர்ட்டை ஆதாரமாகக் கொண்டு "தேவதாசி அமைப்பு முறை என்பது உயர்சாதியினரும், பிராமண குருக்கள் அல்லது சாமியார்களும் சேர்ந்து செய்த சதியின் விளைவாகும்" எனக் கோடிட்டு காட்டுகிறார். ஈ.வெ.ரா பெரியார் போன்ற சில சமூக சீர்திருத்தவாதிகளின் தொடர் போராட்டம் காராணமாக தேவதாசி முறை தமிழ்நாட்டில் ஒழிக்கப்பட்டது. அவ்வாறு போராடியவர்களில் முக்கியமானவர் டாக்டர் முத்துலக்ஷ்மி ரெட்டி ஆவார். பல சிறப்புகளுக்கும் 'முதல்'களுக்கும் சொந்தக்காரரான டாக்டர் முத்துலக்ஷ்மி ரெட்டி 1929-ம் ஆண்டிலேயே சென்னை சட்ட மன்ற மேலவையில் தேவதாசி ஒழிப்பு மசோதாவைக் கொண்டு வந்தவர் என இப்ராஹீம் அன்சாரி தெரிவித்துள்ள தகவல் பலர் அறியாதது. டாடக்டர் முத்துலக்ஷ்மி ரெட்டி சுயமாக எழுதிய My Experience as a Legislature' என்ற நூலைப்பற்றியும் தகவல் தந்துள்ளார்.

பெண்களுக் கெதிரான மற்ற இரு கொடுமைகளாக பால்ய விவாகம், சதி எனப்படும் உடன்கட்டையேறுதலைச் சொல்லலாம். "பால்ய விவாகம் என்ற பெயரில் சிறு வயதுப் பெண் மொட்டுகளை மலரும் முன்பே மண வாழ்வுக்குப் பலியிடுவதை இந்த நீதி நூல்களும், சாஸ்திர தர்மங்களும் தடுக்கவில்லை; திருத்தவில்லை; கண்டிக்க வில்லை; கடிந்துரைக்கவில்லை, மாறாக இறைவனின் பெயரால் இவை தப்பில்லை என்று தம்பட்டம் அடிக்கின்றன" என்று ஆதங்கப்படுகிறார் ஆசிரியர். "பெண்களுக்கு எதிராக மட்டுமல்ல, உலக நாகரிகத்துக்கும் எதிராக, கணவன் இறந்தால் அவன் உடலை எரிப்பதற்கு மூட்டப்படும் தீயில் உயிருடன் இருக்கும் மனைவியும் விழுந்து சாக வேண்டும் என்ற நியதியை வைத்திருந்தது இந்த சாஸ்திரங்கள்" எனச் சாடுகிறார்.

மனுநீதியின் கைங்கரியத்தால்தானே 'தீண்டாமை' எனும் தீமை அரசு சட்டங்களையும் ஆன்றோர்களின் அறவுரைகளையும் மீறித் தாண்டவமாடிக் கொண்டிருக்கிறது. அண்மைக்கால எடுத்துக் காட்டாக தர்மபுரிச் சம்பவத்தைச் சொல்லலாம்.

தர்மபுரியில் மூன்று கிராமங்களில் தலித் மக்களின் வீடுகள் தாக்கித் தகர்க்கப்பட்டன; வாசல்களில் நின்ற வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன; அவ்வீடுகளிலுள்ள பணம், விலை மதிப்புள்ள நகைகள், பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இச்சம்பவம் தீண்டாமைக் கொடுமையின் ஒரு கோரமான வெளிப்பாடேயாகும். இவற்றையெல்லாம் பார்க்கும்போது வன்கொடுமை தடுப்புச் சட்டம் சரியாக அமல்படுத்தப்படுகிறதா ? என்ற ஐயம் நமக்கு எழுகிறது.

தமிழகத்தில் வன்கொடுமைச் சட்டம் சரியாக அமலாகாதது பற்றி நீதியரசர் மோகன் அவர்களின் தலைப்யிலான குழுவின் விசாரணை அறிக்கை கீழ்கண்டவாறு கூறுகிறது:

"குறைவான எண்ணிக்கையில் வழக்குகள் பதிவாகி இருப்பதைக் கணக்கில் கொண்டு முடிவுக்கு வரவேண்டுமென்றால், தமிழகத்தில் தீண்டாமை கொடுமை இல்லை; தலித் மக்கள் மீது எந்த கொடுமையும் இழைக்கப்படவில்லை என்றுதன் முடிவு செய்ய வேண்டும். ஆனால் இது உண்மையல்ல என்பதை நாம் அனைவரும் அறிவோம். என்வே வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை சரியான முறையில் அமலாக்கிட வேண்டும் என்றே எங்கள் விசாரணைக் குழு கருதுகிறது" இதைத்தானே 'அரச நீதீ அலங்கோலம்' என்ற தலைப்பிலான கட்டுரையில் அன்சாரி சொல்லிக் காட்டுகிறார்.

முதல் 10 கட்டுரைகளின் வழியாக மனுநீதி மனித குலத்துக்கு நீதியல்ல என்பதை நிறுவி விட்டு 'சாக்கடையை விடுத்து சந்தனப் பொய்கைக்கு' என்ற கட்டுரை வாயிலாக அழைப்புப் பணியைச் செய்துத் தன் கடமையை நிறைவேற்றியுள்ளார் நூலாசிரியர். அழைப்புப் பணியைச் செய்திட ஒவ்வொரு முஸ்லீமும் தன்னைத் தகுதியாக்கிக் கொள்ள வேண்டும் என்றும், தீன் வழி நின்று மற்றவர்களையும் தீனின் பக்கம் அழைக்க வேண்டும் என்றும், ஒன்றுபட்ட சமுதாயமாக இஸ்லாமிய சமுதாயம் திகழ வேண்டும் என்ற கருத்துகளையெல்லாம் 'எமது கடமை' என்ற தனது கடைசிக் கட்டுரையில் பதிவு செய்துள்ளது பாராட்டத்தக்கது. என்ன குறிக்கோளோடு கட்டுரைகளைப் பதிவு செய்தாரோ அந்தக் குறிக்கோள் குறையின்றி நிறைவேறிட எல்லாம் வல்ல அல்லாஹ்வை இறைஞ்சுகிறேன்.

S.K.M.ஹாஜா முகைதீன் M.A., B.Sc., B.T. 
[முன்னாள் தலைமை ஆசிரியர், கா.மு.மே.பள்ளி]

17 Responses So Far:

Meerashah Rafia said...

"மனுநீதி மனித குலத்துக்கு நீதியா?" என்ற தொடரை முழுவதுமாக படிக்கமுடியாமல் போய்விட்டது.. ஆனால் இந்த அ(ல)சல் விமர்சனத்தின்மூலம் நூலை வாங்கி படிக்கவேண்டும் என்ற எண்ணம் மனதில் ஏற்பட்டதென்பதே உண்மை.

இந்த நூல் எங்கு?யாரை?எப்போது? தொடர்புகொண்டால் கிடைக்கும் என்று வலைப்பூவின் வலப்பக்கம் இட்டால் சிறப்பு.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

// என்ன குறிக்கோளோடு கட்டுரைகளைப் பதிவு செய்தாரோ அந்தக் குறிக்கோள் குறையின்றி நிறைவேறிட எல்லாம் வல்ல அல்லாஹ்வை இறைஞ்சுகிறேன்.//

ஆமீன்.

அதிரைநிருபர் பதிப்பகம் said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,

அன்புச் சகோதரர் மீராஷாஹ்:

சவுதியில் நூல் கிடைப்பதற்கு ஏற்பாடாகி வருகிறது இன்ஷா அல்லாஹ், விரைவில் தகவல் தருகிறோம்.

மேலும் விபரங்களுடன் தாங்கள் குறிப்பிட்டிருந்தபடி பதியவும் ஏற்பாடு செய்கிறோம் இன்ஷா அல்லாஹ்...

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அமீரகத்தில் "மனுநீதி மனிதகுலத்துக்கு நீதியா?" நூல் பெற்றுக் கொள்ள கீழ் கண்ட அலைபேசி எண்களில் ஏதாவது ஒன்றில் தொடர்பு கொள்ள வேண்டுகிறோம்...

055-8243167 / 055-4627330 / 050-3839358 / 050-8858480

sabeer.abushahruk said...

எங்க ஸாரின் இந்த விமரிசனத்தை இப்புத்தகத்தின் இரண்டாம் பதிப்பின்போது இணைத்துக்கொள்ளவும் இன்ஷா அல்லாஹ்!

Unknown said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
மனு நீதி மனிதக்குலத்துக்கு நீதியா ? சாதியத்திற்கும் மனிதத்தன்மையற்ற சாமியார்களுக்கும் எதிராக சாட்டையை சுழற்றியிருக்கிறார் நூலாசிரியர் இப்ராகிம் அன்சாரி காக்க,,,, வாழ்த்துக்கள். அறிவு கலைஞ்சியம் SKM ஹாஜா முஹைதீன் சார் அவர்களின் நூல் விமர்சனம் மூலம் நூலை வாங்கி இப்பொழுதே படிக்க வேண்டும் பேராவல் ஏற்படுகிறது அல்ஹம்துலில்லாஹ்.அதிரையர்களின் அரும்பணி தொடர வல்ல ரஹ்மான் அருள் புரியட்டும்.இதுபோன்ற மேலும் சமூக விழிப்புணர்வு தந்து இளைய தலைமுறை பயன்பெற அதிரை நிருபர் பதிப்பகத்தார் மற்றும் அதிரை நிருபரில் ஆக்கம் தந்துக்கொண்டியிருக்கும் அறிஞர்கள்,கட்டுரையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆவண செய்ய வேண்டும்
-------------------
இம்ரான்.M.யூஸுப்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//sabeer.abushahruk சொன்னது…
எங்க ஸாரின் இந்த விமரிசனத்தை இப்புத்தகத்தின் இரண்டாம் பதிப்பின்போது இணைத்துக்கொள்ளவும் இன்ஷா அல்லாஹ்!//

இன்ஷா அல்லாஹ் !

KALAM SHAICK ABDUL KADER said...

முன்னாள் மாணவரின் முன்னேற்றத்துக்கு ,”ப்ராக்ரெஸ் ரிப்போர்ட்” வழங்கியுள்ள முன்னாள் தலைமையாசிரியர் அவர்கட்கு ஜஸாக்கல்லாஹ் கைரன் என்னும் துஆவுடன் நன்றியினை நவில்கின்றேன். தங்களின் துஆவில் நாங்களும் பங்குக் கொள்கின்றோம், இந்நூலாசிரியர் டாக்டர் இப்றாஹிம் அன்சாரி காக்கா அவர்களின் உடல்நிலையில் நற்சுகம் காணவும் , நீண்ட ஆயுளுடன் மேன்மேலும் நூல்கள் வெளியிடவும் அல்லாஹ் அருள் பொழிவானாக (ஆமீன்)

அன்புநெறியாளர் அவர்கட்கு: அபுதபியில் கிடைக்க அன்புச் சகோதரர் அலாவுதீன் அவர்களை அணுகலாமா? தற்பொழுது எனக்கு உடல்நிலைச் சரியில்லாமலிருப்பதால், துபைக்கு வருவதைத் தவிர்த்து விட்டேன்.மேலும், ஆக்கங்கள் எழுதுவதையும் குறைத்துக் கொண்டேன். மருத்துவரின் ஆலோசனையின்படி ஓய்வு அவசியமாகின்றது.

sabeer.abushahruk said...

GETWELL SOON,KAVIYANBAN.

with dhua - sabeer

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அன்பு கவியன்பன் காக்கா அவர்களுக்கு,

அலாவுதீன் காக்கா விடுப்பில் ஊரில் இருக்கிறார்கள், விரைவில் தங்களுக்கு நேரிலே நூல் கிடைக்க ஏற்பாடு செய்கிறோம் இன்ஷா அல்லாஹ் !

தங்களது ஆரோக்கியத்தை பேணிக் கொள்ளவும், நாங்களும் துஆச் செய்கிறோம் இன்ஷா அல்லாஹ் !

Iqbal M. Salih said...


as'alullahal aleem,
rabbal arshil aleem ainyeshfiyaka!

yaah akhee abulkalam bin shaik abdulkadher.

Yasir said...

தகுதியான நூலுக்கு தரமிக்க ஆசிரியர் அவர்களின் தரச்சான்று..புக்கர் பரிசையை விட பெரிது இவ்வணிந்துரை...

தாஜுதீன் (THAJUDEEN ) said...

தகுதியான நூலுக்கு தரமிக்க ஆசிரியர் அவர்களின் தரச்சான்று..புக்கர் பரிசையை விட பெரிது இவ்வணிந்துரை...

KALAM SHAICK ABDUL KADER said...

என் உடல்நலத்திற்காக “துஆ” செய்தக் கவிவேந்தர் சபீர், அன்புநெறியாளர் அபூ இப்றாஹிம் மற்றும் அன்புச் சகோதரர் இக்பால் பின் முஹம்மத்ஸாலிஹ் ஆகியோர்க்கு நன்றி= ஜஸாக்கல்லாஹ் கைரன்

KALAM SHAICK ABDUL KADER said...

எல்லா மதச் சட்டங்களும் கொசுக்களை விரட்டுகின்றன; இஸ்லாமியச் சட்டங்கள் மட்டும் தான் சாய்க்கடையைக் கழுவுகின்றன” - வார்தைச்சித்தர் வலம்புரி ஜான்

இப்னு அப்துல் ரஜாக் said...


தகுதியான நூலுக்கு தரமிக்க ஆசிரியர் அவர்களின் தரச்சான்று..புக்கர் பரிசையை விட பெரிது இவ்வணிந்துரை...

Ebrahim Ansari said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

எனது மதிப்பிற்குரிய ஆசிரியர் திலகம் அவர்கள் தந்து இருக்கிற இந்த மதிப்புரையும் பாராட்டும் மிகவும் உணர்ச்சிவசப்படவைத்துவிட்டது. உடல் நலம் தேறிய பிறகு இன்றுதான் இதைப் படிக்க முடிந்தது.

சார் அவர்களுக்கும் பின்னுட்டம் இட்ட அன்புச் சகோதரர்களுக்கும் நன்றி . ஜசக்கல்லாஹ் ஹைரன்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு