Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

கா.மு.மே(ஆ).பள்ளி தலைமை ஆசிரியர் - காணொளி 21

அதிரைநிருபர் பதிப்பகம் | December 04, 2012 | , , , ,


அதிரை மக்களின் கல்விக் கண் திறந்த பாரம்பரிய மிக்க கல்வி நிலையங்களை கொடையாக வழங்கிய பெருந்தகை கல்வித் தந்தை மர்ஹூம்  ஹாஜி எஸ்.எம்.எஸ்.ஷேக் ஜலாலுதீன் அவர்களை நன்றியுடன் நினைவு கூர்ந்தவர்களாக !

நமது காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதிதாக தலையாசிரியர் பொறுப்பை ஏற்றிருக்கும் சகோதரர் A.மஹ்பூப் அலி MSc.,  MEd., Mphil., அவர்களின் நேர்காணல் காணொளியும் அதைத் தொடர்ந்து அதே பள்ளியில் தலையாசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்ற, ஏராளமான மாணவர்களின் மனம் வென்ற மரியாதைக்குரிய ஆசான் S.K.M.ஹாஜா முகைதீன் M.A., BSc., B.T. அவர்களின் நேர்காணல் காணொளியும் இங்கே பதிவதில் பெரும் மகிழ்வடைகிறோம்.



புதிதாக பதவி ஏற்றிருக்கும் தலைமையாசிரியருக்கு முன்னால் தலைமை ஆசிரியரின் ஆலோசனைகள் இந்தப் பதிவின் முத்தாய்ப்பாக அமைந்திருக்கிறது என்றால் அது மிகையில்லை.


அதிரைநிருபர் குழு

21 Responses So Far:

KALAM SHAICK ABDUL KADER said...

நான்படித்த பள்ளியின் ஞானச் சிறப்பினைத்
தேன்குடித்தால் நேரும் தெளிச்சுவை போலுணர்ந்தேன்
வான்வடித்த நீர்போல் மகிழ்வைத் தருவீரே
தான்படித்த பள்ளித் தலைமையா சானாக
நீரும் உயர்ந்தீர்; நினைவெலாம் ஆட்கொண்டு
பேரும் புகழுடன் பெற்று.


“கவியன்பன்” கலாம், அபுதபி

KALAM SHAICK ABDUL KADER said...

வினாத்தாள் உருவாக்கும் ஆசிரியரிடம் வினாக்களை அருமையாகத் தொகுத்து விடைகளைப் பக்குவமாகப் பெற்ற வெண்கலக் குரலோன் அன்புச் சகோதரன் தாஜீதினுக்கு நெஞ்சம் படர்ந்த நன்றி= ஜஸாக்கல்லாஹ் கைரன்.

முன்னாள் மாணவன் மற்றும் முன்னாள் மாணவர்த்தலைவன் (1973 ) என்ற முறையில் தற்பொழுதுப் பதவி ஏற்றுள்ள தலைமையாசிரியர் அவர்கள் கேட்கும் உதவிகளைச் செய்ய ஆயத்தமாக இருக்கிறேன்.

KALAM SHAICK ABDUL KADER said...

சாதனைகள் புரிந்த எங்கள் ஆசான் ஹாஜா முஹைதீன் அவர்களின் வழிகாட்டுதலின்படி நீங்களும் சாதனைகள் புரிவீர்கள் என்று நம்புகின்றோம்.

sabeer.abushahruk said...

அருமை ஆசான் ஹாஜா மொய்தீன் சார் அவர்களைக் காணொளியில் காணும்போதே பள்ளிப்பருவம் நிழலாடுகிறது. அவரகள் பேசப்பேச கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும்போல இருந்தது. அதிரை நிருபர் அந்த நேர்காணலை ஒரு ப்பீரியட் நடத்தும் நேரமாவது நீட்டித்திருக்கலாம். பள்ளிக்கூட நெனப்பைப்போல சுகமானது வேறென்ன?

மற்றும் லியாக்கத் அலி சார் பெயரை மஹ்பூப் அலி சார் சொல்லும்போது ஆமாம் ஆமாம் என்று மனசு ஆமோதிக்கிறது. எனக்கு பெளதிகத்தில் ஆர்வம் ஏற்பட முழுமுதற்காரணமே லியாக்கத் அலி சார் அவர்கள்தான். பிற்காலத்தில் புதுக்கல்லூரியில் குறிப்பிடத்தக்க மாணவனாக விளங்கியதற்கும் சாரின் போதனைதான் காரணம்.

மஹ்பூப் அலி சாருக்கு வாழ்த்துகள். அதிரை நிருபருக்கு நன்றி.

Unknown said...

பதிவுக்கு நன்றி ,,, மரியாதைக்குரிய ஆசிரியர் பெருந்தகை SKM ஹாஜா முஹைதீன் அவர்களை விட அதிகமான பங்களிப்பு செய்து மாணவ சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாய் இருக்க வேண்டும்.எனது மரியாதைக்குரிய ஆசான் மொஹபூப் அலி அவர்களின் முயற்சிக்கு வல்ல ரஹ்மான் துணை புரியட்டும்
,,,,,,,,,
இம்ரான்.M.யூஸுப்

Shameed said...

கா.மு.மே(ஆ).பள்ளி தலைமை ஆசிரியர் பதவி ஏற்று இருக்கும் என் மாமா மகபூப் அலி அவர்களுக்கு வாழ்த்துக்கள்

அதிரை சித்திக் said...

தம்பி தாஜூதீனின் காணொளி ஆக்கம்
அற்புதம் கருத்து சுரங்களான ஆசான் களிடம்
தேவையான கருத்தை வெளி கொணரும்
கேள்விகளை எடுத்துவைத்து பழுத்த செய்தியாளரை
போல கையாண்டு இருக்கிறார் ..சகோ மகபூப் அலி
அவர்களுக்கு வாழ்த்துக்கள் .

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...



புதிய தலைமையாசிரியருக்கு வாழ்த்துக்கள்!
முதலெழுத்து 'அ' வில் துவங்கும் ஊர் போல, உங்கள் பெருமுயற்சியால் நாளைய ரிசல்ட்டிலும் முதல் மார்க்குடன் வர எங்கள் துஆவும் அவாவும்.

படிப்பு என்ற ஒன்றிற்காக வெளியூர் குடிபெயர்வதை அதிரையர் தவிர்க்கும் விதமாய் காதிர் முகைதீன் பள்ளியை பிரகாசமாய் கொண்டுவருவீர்கள் என உங்கள் பிரகாச முகம் மூலம் நம்புகிறோம்.

ஹாஜாமி சார் அவர்களின் ஆலோசனைகள், அனைத்து துறையிலும் சிறப்பாய் மேலாண்மை செய்ய அனைவருக்கும் ஏற்ற உயர் கருத்துக்கள்!

சிறப்பான பேட்டி எடுத்து பதிவிட்ட நிருபருக்கும் நன்றி!

இப்னு அப்துல் ரஜாக் said...

மஹ்பூப் அலி சாருக்கு வாழ்த்துகள். அதிரை நிருபருக்கு நன்றி.
அருமை ஆசான் ஹாஜா மொய்தீன் சார் அவர்களைக் காணொளியில் காணும்போதே பள்ளிப்பருவம் நிழலாடுகிறது. அவரகள் பேசப்பேச கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும்போல இருந்தது. அதிரை நிருபர் அந்த நேர்காணலை ஒரு ப்பீரியட் நடத்தும் நேரமாவது நீட்டித்திருக்கலாம். பள்ளிக்கூட நெனப்பைப்போல சுகமானது வேறென்ன?

Ebrahim Ansari said...

மரியாதைக்குரிய ஹாஜா முகைதீன் சார் அவர்கள் சொல்லி இருக்கும் வழி காட்டும் குறிப்புகள் தம்பி மகபூப் அலிக்கு மட்டுமல்ல , தமிழகத்தில் இத்தகைய பதவிக்கு யார் வந்தாலும் அவர்களுக்குச் சொல்வதுபோல் இருக்கின்றன.

மகபூப் அலி சிறு வயது முதல் சுய முயற்சிகளுக்கு சொந்தக்காரர். கண்டிப்பதற்கோ, சொல்லிக்கொடுப்பதற்கோ, வழி காட்டுவதற்கோ தேவை இன்றி நல்ல வழிகளைத் தானே சொந்தமாகத் தேடித்தேடி வளர்ந்தவர்.

ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து என்ன படிக்கிறாய் எப்படிப் படிக்கிறாய் என்று பரிசோதிக்க ஆள் இல்லாமல் படித்து வளர்ந்து இன்று இந்த நிலை எட்டி இருக்கிறார். இதை மற்ற மாணவர்கள் ஒரு உதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

தம்பி மகபூப் அலியின் கருத்துக்களில் முன்னாள் மாணவர்களாகிய நாம் கவனிக்க வேண்டியது இனி இவரின் உதவியோடு நாம் படித்த பள்ளியின் வளர்ச்சிக்கு நமது பங்கைச்செய்ய முயல வேண்டும். சமுதாய மாணவர்களை புடம் போட நம்மால் இயன்றதைச் செய்ய வேண்டும். சில அடிப்படை வசதிகளை பள்ளியின் முன்னாள் மாணவர்களின் சார்பாக பள்ளிக்கு செய்து தர வேண்டும்.
இதுவரை பள்ளிக்கும் முன்னாள் மாணவர்களுக்கும் இடையில் ஒரு இரும்புத்திரை தொங்கிக் கொண்டு இருந்தது. நிர்வாகத்தின் அனுமதியுடன் இந்த இரும்புத்திரை தூக்கி எறியப்பட வேண்டும். நாம் படித்த பள்ளிக்கு நமது நன்றிக் கடனை நமது சமுதாயத்தினரையும், ஏழை எளிய மாணவர்களையும் உயர்த்தும் வண்ணம் எல்லா வகைகளிலும் ஆற்ற புதிய தலைமை ஆசிரியருடன் கை கோர்த்து செய்ய வேண்டும்.

அதிரை நிருபரின் அன்பான வாசகர்கள், பதிவர்கள் , மூத்த கல்வியாளர்கள் அடங்கியவர்களுடன் பள்ளி நிர்வாகமும், தலைமை ஆசிரியரும் கலந்துகொள்ளும் ஒரு கலந்துரையாடலுக்கு தலைமை ஆசிரியர் விரைவில் ஏற்பாடு செய்யவேண்டும். இத்தகைய கலந்துரையாடல் மாதம் ஒருமுறை நடந்தால் சில நற் பணிகளை கல்வி விழிப்புணர்வின் அடிப்படையில் நாம் வடிவமைக்க முடியும். பேரணாம்பட்டு, ஆம்பூர், வாணியம்பாடி, கடைய நல்லூர் ஆகிய முக்கிய முஸ்லிம் ஜமாத்துகள் இருக்கும் ஊர்களில் இப்படிச் செய்து ஏற்றம் கண்டிருக்கிறார்கள்.

எனது இந்த கருத்துக்கு ஆதரவு/ எதிர்ப்புக்கருத்துக்களை வேண்டுகிறேன்.

Iqbal M. Salih said...


மனம் நிறைந்த ஆதரவுதான்!

எதிர்ப்புக்கெல்லாம் இடமில்லை!

இன்ஷா அல்லாஹ், தம்பி மஹ்பூப் அலிக்கு

என் ஸலாம் உரித்தாக்கவும்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//Ebrahim Ansari சொன்னது…

அதிரை நிருபரின் அன்பான வாசகர்கள், பதிவர்கள் , மூத்த கல்வியாளர்கள் அடங்கியவர்களுடன் பள்ளி நிர்வாகமும், தலைமை ஆசிரியரும் கலந்துகொள்ளும் ஒரு கலந்துரையாடலுக்கு தலைமை ஆசிரியர் விரைவில் ஏற்பாடு செய்யவேண்டும். இத்தகைய கலந்துரையாடல் மாதம் ஒருமுறை நடந்தால் சில நற் பணிகளை கல்வி விழிப்புணர்வின் அடிப்படையில் நாம் வடிவமைக்க முடியும். பேரணாம்பட்டு, ஆம்பூர், வாணியம்பாடி, கடைய நல்லூர் ஆகிய முக்கிய முஸ்லிம் ஜமாத்துகள் இருக்கும் ஊர்களில் இப்படிச் செய்து ஏற்றம் கண்டிருக்கிறார்கள்.
....
எனது இந்த கருத்துக்கு ஆதரவு/ எதிர்ப்புக்கருத்துக்களை வேண்டுகிறேன். //

காக்கா, இதே கருத்தொட்டிய கருத்தாடல் அதிரையின் பிற வலைப்பூக்களிலும் ஏற்கனவே நடந்திருக்கிறது... இதே கருத்துடைய அனைத்து சகோதரர் சகோதரிகளையும் இதில் இணைத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும்...

என்னளவில் எல்லாவிதமான அனைத்து முயற்சிக்கும் ஒத்துழைக்கத்தயார், அதற்காக அதிரைநிருபர் குழுவும் முழுமூச்சில் இறங்கும் இன்ஷா அல்லாஹ் !

இனி களத்தில் இறங்குவதே அடுத்தடுத்த வேலைகள் !

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

மாணவர்களெல்லாம் கொலையாளிகளாக மாறி வரும் இக்காலத்தில், சமுதாய இயக்கங்களெல்லாம் தயங்காமல் ஒருவருக்கொருவர் தள்ளுமுள்ளுகளை கச்சலைக்கட்டிக்கொண்டு களத்தில் இறங்கி உண்டாக்கி வரும் இந்நாளில் ஒரு பக்குவப்பட்ட பாடசாலையாய் அதற்கு நற்பெயரும்,புகழும் இத்தரணியில் தேடித்தரும் ஒரு நல்ல மாணவ சமுதாயத்தை மார்க்க போதனைகளுடன் உண்டாக்குவது காலத்தின் கட்டாயம். இந்த இக்கட்டான, சிரமங்கள் நிறைந்த பொறுப்பு ஜனாப் மஹபூப் அலி சாரை மட்டும் சாராது. மாணவர்களின் பெற்றோர்களையும் சாரும்.

sabeer.abushahruk said...

ஈனா ஆனா காக்காவின் கருத்தை ஆமோதிக்கிறேன்.

முன்மொழிந்தமைக்காக நன்றியும் துஆவும்.

Yasir said...

கண்ணியத்தியற்க்கும்,மதிப்பிற்க்கும் உரிய மஹபூப் அலி சார் அவர்களுக்கு வாழ்த்துக்களும்,துவாக்களும்...பள்ளியை அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்க செய்ய அல்லாஹ் உங்களுக்கு துணை புரியட்டும்

அன்சாரி மாமாவின் கருத்தோடு நான் உடன் படுகின்றேன்

Yasir said...

சகோ.தாஜூதீனின் பத்திரிக்கை அனுபவ முதிர்ச்சி இப்பேட்டியில் ஜொலிக்கின்றது...வாழ்த்துக்கள் அமீரே

Ebrahim Ansari said...

அபூ இப்ராஹீம் அவர்கள் சொன்னது

//காக்கா, இதே கருத்தொட்டிய கருத்தாடல் அதிரையின் பிற வலைப்பூக்களிலும் ஏற்கனவே நடந்திருக்கிறது... இதே கருத்துடைய அனைத்து சகோதரர் சகோதரிகளையும் இதில் இணைத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும்..//
இன்ஷா அல்லாஹ். அனைத்து சக வலை பதிவர்களையும் சகோதர வ்லைதலங்களின் ஒத்துழைப்புகளையும் கோரிப் பெறுவோம். இன்ஷா அல்லாஹ் விரைவில் இது பற்றிய ஒரு அறிவிப்பு வரக்கூடும்.

abraarhussain said...
This comment has been removed by the author.
அப்துல்மாலிக் said...

மெஹ்பூப் அலி சாருக்கு எங்கள் 1992 கணிதப்பிரிவு வகுப்பு மாணவர்கள் சார்பாக எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்....

BaBa Atomic Research Center லே சேர்ந்து அனு ஆராய்ச்சியாளராக வரவேண்டும் என்ற தாங்களின் விருப்பம் ஏதோ ஒரு வகையில் தடைப்பட்டு ஆசிரியராக சேர்ந்து இன்று தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்று இருக்கிறீர்கள், எல்லாம் நன்மைக்கே. தாங்கள் ஆசைப்பட்டதை தன் மாணவர்களை அந்த லெவலுக்கு கொண்டு செல்ல நல்ல ஒரு வாய்ப்பு.

மேலும் ஒரு சின்ன வேண்டுதல், ஆறு மாதத்திற்கு ஒரு முறையேனும் OPEN HOUSE என்று சொல்லக்கூடிய பெற்றோர்-ஆசிரியர் (தனித்தனியே) சந்திக்கும் ஒரு வாய்ப்பை ஏற்படுத்தினால் மாணவர்-ஆசிரியர்-பெற்றோர் இடையே நல்ல புரிந்துணர்வு ஏற்பட வாய்ப்பிருக்கு.

KALAM SHAICK ABDUL KADER said...

\\இதுவரை பள்ளிக்கும் முன்னாள் மாணவர்களுக்கும் இடையில் ஒரு இரும்புத்திரை தொங்கிக் கொண்டு இருந்தது. நிர்வாகத்தின் அனுமதியுடன் இந்த இரும்புத்திரை தூக்கி எறியப்பட வேண்டும். நாம் படித்த பள்ளிக்கு நமது நன்றிக் கடனை நமது சமுதாயத்தினரையும், ஏழை எளிய மாணவர்களையும் உயர்த்தும் வண்ணம் எல்லா வகைகளிலும் ஆற்ற புதிய தலைமை ஆசிரியருடன் கை கோர்த்து செய்ய வேண்டும்.

அதிரை நிருபரின் அன்பான வாசகர்கள், பதிவர்கள் , மூத்த கல்வியாளர்கள் அடங்கியவர்களுடன் பள்ளி நிர்வாகமும், தலைமை ஆசிரியரும் கலந்துகொள்ளும் ஒரு கலந்துரையாடலுக்கு தலைமை ஆசிரியர் விரைவில் ஏற்பாடு செய்யவேண்டும். இத்தகைய கலந்துரையாடல் மாதம் ஒருமுறை நடந்தால் சில நற் பணிகளை கல்வி விழிப்புணர்வின் அடிப்படையில் நாம் வடிவமைக்க முடியும். பேரணாம்பட்டு, ஆம்பூர், வாணியம்பாடி, கடைய நல்லூர் ஆகிய முக்கிய முஸ்லிம் ஜமாத்துகள் இருக்கும் ஊர்களில் இப்படிச் செய்து ஏற்றம் கண்டிருக்கிறார்கள். //

இந்த கருத்துக்கு ஆதரவைத் தந்து விட்டேன்.

அதிரை சித்திக் said...

ஈனா ஆனா காக்காவின் கருத்தை ஆமோதிக்கிறேன்.

முன்மொழிந்தமைக்காக நன்றியும் துஆவும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு