Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அது? 23

அதிரைநிருபர் பதிப்பகம் | June 09, 2015 | , , , , ,

அது
எது?

அது
ஒரு திரவக் கத்தி
குரல்வளை துவங்கி
குதம்வரை இயங்கி
கூராகக் கீறி வைக்கும்

அது
உஷ்ணம் உரைந்தத் தீ
உள்ளே சுட்டெரித்து
உடற்செல்களின் கட்டழித்து
உட்காயங்களை உருவாக்கும்

எல்லாவித
தடுப்புகளையும் தகர்த்து
பாதுகாப்புகளைப் பிய்த்துப்போட்டு
புற்றுப்புற்றாய்ப்
புண்களைத் திணிக்கும்

அது
உடுக்கை நழுவினாலும்
உணர விடாது
படுக்கை நாடாமல்
பாதையில் கிடத்தும்
பார்வையைப் பிடுங்கி – வாழ்க்கைப்
பயணத்தையே முடக்கும்

நடை தடுமாற
உடை இடம் மாற
சாலைகளில் தள்ளாடவிட்டு
சாக்கடையில் வீழ்த்தும்

அது
சுயமரியாதைக்குச்
சாவு மணி அடிக்கும்
பயமில்லா பாவணையில்
நேருக்கு நேராக
வாகனத்தில் மோதும்

அது
கால்களைப் பலப்படுத்தும்
கட்டிய மனைவியை
எட்டி உதைக்க மட்டும்

கைகளை வலுவாக்கும்
பெற்ற பிள்ளையின்
பிடறியில் அடிக்க

அது
அகால மரணத்திற்கான
அழைப்பிதழ்

முதிர்வதற்குள்
மூச்சை நிறுத்த வேண்டி செலுத்தும்
முன்பணம் அதன் விலை

அது
உழைப்பை உறிஞ்சும்
உண்மை தெரிந்தும்
உடலை உருக்க்கி
உயிரை மாய்க்கும் வரை
உணரவிடாது

அது
மூடிவைத்துப்
பூட்டியிருக்கும் புட்டி
திறக்கும் வரைக் காத்திருக்கும்
பூதம்

அது
அருந்தும்போது ஆட்டம் – எண்ணி
வருந்தும்போது அடக்கம்

அது
மது!

சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்

23 Responses So Far:

sheikdawoodmohamedfarook said...

//அதுமுதிர்வதற்குள் மூச்சை நிறுத்தும் முன்பணம்// !டாஸ்மாக்.வியாபாரிகளுக்குபிடிக்காதவரிஇந்தவரி! ஆள்வோரின்வருவாய்க்கும்ஆப்புவைக்கும்வரி!

Muhammad abubacker ( LMS ) said...

குடிகார அட்டத்திற்க்கு நேர்த்தியான முறையில் போடப்பட்ட டாஸ்

Ebrahim Ansari said...

அது பற்றிய இது அருமை

crown said...

அஸ்ஸலாமுஅலைக்கும். தள்ளாட்டமில்லாது, நீரோட்டமாய் ஓடும் கவிதை இது!தீமைகளின் தாய் மது என நமது கண்மணி நபி(ஸல்லலாஹு அலைஹிவஸ்ஸல்லம்) நவின்று சென்றுள்ளார்கள்!

crown said...

ஒரு திரவக் கத்தி
குரல்வளை துவங்கி
குதம்வரை இயங்கி
கூராகக் கீறி வைக்கும்
------------------------------------------------
"முதல்" அழிக்கும் குரல்வளை முதல் குதம் வரை கீறிக்கிழிக்வைக்கும் இது மூலம்!ஆதி மூலம் இது அது மது!சத்தமில்லா இறங்கும் திரவ கத்தி!இது குத்தி புத்தியும் கிழிந்து போகும் ,போக்கும் வேண்டா சக்தி!
----------------------------------------------

crown said...

அது
உஷ்ணம் உரைந்தத் தீ
உள்ளே சுட்டெரித்து
உடற்செல்களின் கட்டழித்து
உட்காயங்களை உருவாக்கும்
-----------------------------------------------------
அது
உஷ்ணம் உரைந்தத் தீ,ஆஹா! ஒரு கொடூரத்தின் கோரத்தை சொல்லும் சொல்லிலும் குளிர்காய வைக்கும் தீயாய் கவிதை தீ வார்த்த வார்த்த கவிஞரின் வார்த்த!உட்காயம் அதுவே உயிருக்கு உலை வைக்கும் அபாயம்!

crown said...

எல்லாவித
தடுப்புகளையும் தகர்த்து
பாதுகாப்புகளைப் பிய்த்துப்போட்டு
புற்றுப்புற்றாய்ப்
புண்களைத் திணிக்கும்
-------------------------------------------
இது வரம்பு மீறும் நோய்! வீட்டில் உள்ள பொண் அணிகலன்களை விற்று புண் வாங்குதல் முறையா? வைரமாய் ஜொலிக்கும் மனைவி மக்களை மண் மூடி அவர்கள் வாழ்வையும் சேர்த்து அழிக்கும் அரக்கன்! இதற்கு பார்வை குறைவு முழுக்கண் இல்லாததால்!அகக்கண் கூட விழித்து விடாமல் குப்பறவிழவைக்கும் மஞ்சள் காமாலை கண்!

crown said...

நடை தடுமாற
உடை இடம் மாற
சாலைகளில் தள்ளாடவிட்டு
சாக்கடையில் வீழ்த்தும்
-------------------------------------------------
வாழ்கை பாதையை சிதைக்கும்! நன் நடத்தையை அழிக்கும்!பிறகு சாக்காடை வெகுவில் அழைக்கும்!

crown said...

அது
கால்களைப் பலப்படுத்தும்
கட்டிய மனைவியை
எட்டி உதைக்க மட்டும்

கைகளை வலுவாக்கும்
பெற்ற பிள்ளையின்
பிடறியில் அடிக்க
----------------------------------------------------
இது தரும் தற்காலிக சுகம் உறவுமுறையை கைகால் புரியாமல் செய்துவிடும்!தன் சுய நலத்திற்கு அவர்களை துன்புறுத்தும்!

crown said...

அது
உழைப்பை உறிஞ்சும்
உண்மை தெரிந்தும்
உடலை உருக்க்கி
உயிரை மாய்க்கும் வரை
உணரவிடாது
------------------------------------------------
இது உழைப்பை உறிஞ்சும் அட்ட(டைப்பூச்சி) இத தொட்ட ,கெட்ட!உயிர விட்டுவிடும் வரை விடாது!

crown said...

அது
மூடிவைத்துப்
பூட்டியிருக்கும் புட்டி
திறக்கும் வரைக் காத்திருக்கும்
பூதம்
-------------------------------------------------
இந்த பூதத்தின் பாதம் உன் மேல் பட்டால் பின் போதும்,போதும் என்றாலும் விடாது அதனால்தான் போதை எனும் தீமைக்குள் தள்ளி உதைக்கிறது இந்த பூதத்தின் பாதம்! இதற்கு ஓரே வழி இறைவேதம் சொன்னபடி வாழ முற்படுவது!

crown said...

அது
அருந்தும்போது ஆட்டம் – எண்ணி
வருந்தும்போது அடக்கம்
---------------------------------------------------
நம் வாழ்வை முடக்கும் இந்த ஈன செயல் செய்யாமல் எல்லாரையும் அல்லாஹ் காப்பாற்றுவானாக! ஆமீன்.வழக்கம் போல் வார்தையில் மயக்கும் கவிதை மூலம், வாழ்வின் சிலரின் மது மயக்கம் தெளிய செய்யும் போ(தை)தனை!இந்த நீதி போதனையின் நல்ல போதை வரும் சமுதாயத்துக்கும் தேவைதானே? கவிஞரின் சமூக அக்கறைக்கு மீண்டும்,மீண்டும் நன்றியும் துஆவும்,அல்லாஹ் எல்லா நலன்களையும் தருவானாக ஆமீன்.

sabeer.abushahruk said...

//வீட்டில் உள்ள
பொண் அணிகலன்களை விற்று
புண் வாங்குதல் முறையா? //

Wonderful!

ZAKIR HUSSAIN said...

உனது சிறந்த கவிதைகளில் இதுவும் ஒன்று....புத்தகமாக வெளியிடும்போது அதில் இந்த கவிதை இடம்பெறவேண்டும்.

Unknown said...

Assalamu Alaikkum

Dear brother Mr. Sabeer AbuSharuk

Poem and wordings are like firing with machine gun towards the drunkards. Do they have sense(they lost their rational and senses) to realize this all and correct themselves?

Thanks and best regards

B. Ahamed Ameen from Dubai.

sabeer.abushahruk said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

மது அருந்துதல் பல வசதி படைத்தோர் மத்தியில் ஒரு கவுரவமாகவும் நாகரிகமாகவும் ஆகிப்போய்விட்ட காலகட்டத்தில் இப்படி ஒரு எச்சரிக்கை அவசியம் என்று தோன்றியதால் எழுதினேன்.

வாசித்து கருத்திட்ட ஃபாரூக் மாமா, எல் எம் எஸ், இபுறாகீம் அன்சாரி காக்கா, தம்பி அஹமது அமீன், தம்பி இப்னு அப்துர்ரஸாக் ஆகியோருக்கு நன்றி.

sabeer.abushahruk said...

க்ரவுன்,

அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்...

கருத்துப்பெட்டிக்குள் தமிழ் நிரப்பி, என் பதிவுகளை விமர்சனம் என்ற பெயரில் அலங்கரிக்கும் தங்கள் அன்பிற்கு என்றென்றும் என் நன்றியும் கடப்பாடும்.

ஜாகிர்,

உனக்குப் பிடிக்கிறது எனில் இது உரம் போன்ற தரம்தான்.

Unknown said...

இது (அது)

குடிகாரர்களின் குரல்வளையை
நெரிக்கின்றது

Shameed said...

திரவக்கத்தி நல்ல கத்தி கத்தி சொல்லுது புத்தி

Yasir said...

இது திரவக்கத்தி இல்லை இக்கவிதை-ஆசிட் கத்தி...மொடக்குடியர்களுக்கும்,கவுரவக்குடிகாரர்களுக்கும்...சமுக நலன் பயக்கும் இது போன்ற கவிதை அப்பபப்ப உங்களிடமிருந்து மின்ன வேண்டும்...விழாவில் ரொம்ப இளமையாக இருக்கின்றீர்கள் காக்கா...அகத்தின் அழகு முகத்திலும்...வாழ்த்துக்களும் துவாக்களும்

sabeer.abushahruk said...

காதர், ஹமீது, யாசிர்:

ஜஸாக்கல்லாஹ் க்ஹைர்!

//விழாவில் ரொம்ப இளமையாக இருக்கின்றீர்கள் காக்கா..//

யாசிர்,

இன்னும் கொஞ்சம் சப்தமாக, கோலாலம்பூர் வரை(ஜாகிர்), ரியாத் வரை(காதர்), தமாம் வரை(ஹமீது), சிங்கப்பூர் வரை(ரியாஸ்), நியூயார்க் வரை(ஜலால்), கலிஃபோர்னியா வரை(பாட்சா), கேட்குமளவிற்கு சொல்லுங்களேன்.

அதிரை.மெய்சா said...

அது என்ற தலைப்பில்
மதுத் தீமையை
அடுக்கடுக்காய்
பட்டியலிட்டுக்
காட்டியுள்ளாய்

மது அடிமைகள்
பார்வையில் பட்டால்
அது
மனம் திருந்த வாய்ப்பாக
இருக்கும்..

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு