Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

இதெல்லாம் யாரை திருப்தி படுத்த? எச்சரிக்கை ! 6

அதிரைநிருபர் | June 07, 2015 | , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்,
  
கடந்த சில வருடங்களாக யுனிகோட் ஃபாண்ட் எனும் ஒருங்குறி எழுத்துருக்களின் பேருதவியால் இணையத் தமிழில் பிரபலமடைய ஆரம்பித்த காலம் முதல் இன்று வரை தமிழ்கூறும் நம் சமூக மக்கள் ஊடகதுறையில் நுழைந்து அதன் தாக்கத்தால், மக்களுக்கு விழிப்புணர்வுகள் நிறைய ஏற்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக முஸ்லீம்களின் பங்களிப்பு ஒரு குறிப்பிட்ட இடத்தை பிடித்துள்ளதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் முஸ்லீம்கள் ஊடகத்துறையில் சாதிக்க வேண்டும் என்றால் பிற மதத்தவர்களோடு கருத்தாக்கங்களை கையாளும் முறைகள் சரியென்றே அதன் போக்கில் சென்று இஸ்லாத்திற்கு அவர்கள் அறியாமலே வேட்டு வைக்கிறார்கள் என்பதையும் உணராமல் இருக்க முடியாது.

நபி(ஸல்) அவர்களின் அடகஸ்தலம் பற்றிய சர்ச்சைகள் ஒரு சில முஸ்லீம் அமைப்புகளிடம் கருத்துமோதல் ஏற்பட்டு அதனைத் தொடர்ந்து ஆர்பாட்டம், போராட்டம் என்று நடத்திக் காட்டப்பட்ட்து. இந்தச் சூழலில் நம் முஸ்லீம் சகோதரர்கள் குர்ஆனின் போதனைகளையும், நபி(ஸல்) அவர்களின் வழிமுறைகளை மறந்து படுகேவலாமாக ஏசிப்பேசி தங்களிடமிருக்கும் மீடியாக்களின் மூலம் ஒருவருக்கு ஒருவர் தரம் தாழ்ந்து சாடிக் கொண்டார்கள். இவ்வாறான சர்ச்சைகள் அநேக முஸ்லீம்களை முகம் சுளிக்க வைத்தது என்னவோ உண்மை. இரு முஸ்லீம் அமைப்புகள் ஒருவரை ஒருவர் சாடிக்கொண்டது யாரை திருப்தி படுத்த இவ்வாறு செய்கிறார்கள் என்பது புரியவில்லை?


ஷிர்க்கிற்கு வழிவகுக்கும் தர்காவழிபாடு, மெளலுத் பாடல்கள் என்று அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கும் காரியங்களில் ஈடுபட்ட மக்களை மீட்டெடுத்து நேர்வழியின் பக்கம் அழைக்கும் பணியில் அயராது ஒரு சில ஆலிம்கள், ஒரிரு அமைப்புகள் அதிரை போன்ற ஊர்களில் மிகத்தீவிரமாக கடந்த 25 வருடத்திற்கும் மேலாக பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அலஹ்மதுலில்லாஹ்.  இதன் காரணமாக கடந்த 5 வருடங்களுக்கு முன்பு தர்காக்களை, மெளலிதுகளை இழுத்து மூடும் நிலை உருவாகி வந்த சூழலில், அதற்கு கேடுவிழைவிக்கக்கூடிய வகையில் தொழில் நுட்ப வளர்ச்சியால் வந்த வலைத்தளங்கள் அந்த கேடுகெட்ட தர்கா வழிபாடு மெளலிதுகளுக்கு உரம் போட்டு உசுப்பேற்ற ஆரம்பித்து இன்று அவைகள் “வேதாளம் முருங்க மரத்தில் ஏறுகிறது” என்ற நிலை மீண்டும் தலை தூக்க ஆரம்பித்துள்ளது. கந்தூரி திருவிழா, மெளலித் திருவிழா என்று இஸ்லாத்தில் இல்லாத இணைவைப்புகளை இறைவழிபாடு என்று சொல்லி ஒரு கூட்டம் அறியாமையில் இருக்கிறதே, அவைகளை எடுத்துச்சொல்லி, கந்தூரி, மெளலித் விழாக்களுக்கு முக்கித்துவம் கொடுக்காமல், அவைகளை நடத்துபவர்களை கண்டித்து பதிவு போடுவதவற்கு பதிலாக, கந்தூரி பல எதிர்ப்புக்கு மத்தியில் நடந்தது, மெளலித் நிகழ்ச்சி படு விமர்சியாக நடந்தது என்று செய்திகள் வெளியிடும் அதிரை வலைத்தளங்கள் யாரை திருப்தி படுத்த இவ்வாறு செய்கிறார்கள்.

இது போல் மார்க்கத்துக்கு விரோதமாக நடக்கும் நிகழ்ச்சிகள் குறிப்பாக இரவு கேளிக்கைகள், இரவு விளையாட்டுகள், தொழுகைக்கு நேரம் ஒதுக்காத நிகழ்ச்சிகள், குர்ஆன் ஹதீசுக்கு மாற்றுக் கொள்கையுடையவர்களின் நிகழ்ச்சிகள், ஷஹீஹான ஹதீஸ் மறுப்பாளர்களின் நிகழ்ச்சிகள் என்று கொள்கையற்றுப் போய் அவைகள் அனைத்திற்கும் இலவசமாக அதிமுக்கியத்துவம் கொடுக்கும் அதிரை வலைத்தளங்கள் யாரை திருப்தி படுத்த இவ்வாறு செய்கிறார்கள்?

அன்மையில் அதிரையில் நடைபெற்ற கோவில் திருவிழா என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டது ஒரு வலைத்தளம் அத்தகைய செயல் பெரும்பாலோரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இணை வைப்பை தூண்டும் கந்தூரிச் செய்தியை தவிர்ப்போம் என்று கொள்கை கொண்ட தளத்தில் இணைவைக்கும் வணக்க வழிபாடுகள் செய்யும் ஹிந்துக்களின் கோவில் திருவிழாச் செய்தி வெளியிட்டு யாரை திருப்தி படுத்த இவ்வாறு செய்கிறார்கள்?

மரண அறிவிப்புகள், சாலை விபத்து தகவல், விளையாட்டுச் செய்தி, மீன் மார்கெட்டில் உள்ள மீன்கள் பற்றிய செய்தி, பல கொள்கைகளை கெண்ட இயக்கங்களின் செய்திகள், அரசு சார்ந்த செய்திகள் என்று இவைகளோடு சேர்த்து, கூடுதலாக கந்தூரி, மெளலித் நிகழ்வுச் செய்திகளை பதிவது மட்டும் தான் ஊடகத்தின் வேலையா? இது ஓர் முஸ்லீம் ஊடகவியாளர் செய்யும் வேலை இது மட்டும் தானா?

வட்டிக் கொடுமை , வரதட்சனைக் கொடுமை, ரியல் எஸ்டேட் பேர்வழிகள் செய்யும் அட்டூழியம், அரசு ஊழியர்கள் வாங்கும் லஞ்சம், தர்கா வழிபாடு, மெளலித் பாடல், இளைய சமூகத்தை சீரழிக்கும் சினிமா, சீரியல், facebook, whatsup, youtube இவைகள் பற்றி வழிப்புணர்வு ஏற்படுத்தி தொடர்ச்சியாக இறை மார்க்க நெறிகளை நினைவூட்டும் பதிவுகளை வெளியிடலாமே.

இணைவைப்புக் கொள்கையில் இருக்கும் நம் தொப்புள் கொடி உறவுகளான பிற மதத்தவரை நாமிருக்கும் இந்த அழகிய தூய இஸ்லாத்தின் பக்கம் அழைக்கும் பதிவுகள் இட வேண்டாமா?

ஐபேடுக்கு, டேபுக்கு அடிமையாகி இருக்கும் சிறுவர்களை கவரும் விதமாக பதிவுகள் வெளியிடலாம்..

பெண்மக்களை சென்றடையும் சமையல் குறிப்பு பதிவுகள் வெளியிடலாம்..

மருத்துவக்குறிப்பு பதிவுகள் வெளியிடலாம்..

கல்வி வழிகாட்டி, பள்ளி வளாகம் பர்றிய பதிவுகள் வெளியிடலாம்,,,

இன்னும், நடுநிலை என்று சொல்லிக் கொள்வதைவிட இயல்பாகவே இஸ்லாமிய சார்பாக இருக்கவும், எவ்வாறு வாழ்வியலோடு கலந்து குர்ஆன் வசனங்கள், ஹதீஸ்கள் என்று மார்க்க நினைவூட்டல்கள் வெளியிடலாமே..

இவையல்லாமல் மெளலிதுகள், தர்கா வழிபாடு, போன்ற செய்திகளை வெளியிடுவதன் மூலம் முஸ்லீமகள் நடத்தும் வலைத்தளங்கள் யாரை திருப்தி படுத்த இவ்வாறு செய்கிறார்கள்?

அல்லாஹ்வும் அவன் தூதரும் காட்டித்தந்த மார்க்கம் இஸ்லாம், இதனை பிரச்சாரம் செய்ய அல்லாஹ் நமக்கு கொடுத்த பொக்கிஷமே, இந்த தகவல் தொழில்நுட்பம். இதன் வளர்ச்சியில் நமக்கு கிடைத்தவையே வலைத்தளங்கள். இதன் மூலம், எவ்வாறு மக்களுக்கு இவ்வுலகிலும் மறுவுலகிலும் பயன்பெறும் விதமாக தகவல் கொடுத்து அல்லாஹ்வின் திருப்தியை பெறவேண்டும் என்ற அந்த தூய நோக்கம் நம் ஒவ்வொருவரிடம் வர வேண்டும்.

ஊடகத்துறையில் இருக்கும் முஸ்லீமாக நீங்கள், பின் வரும் இரண்டில் எதை எடுப்பீர்கள் என்பதை நீங்களே முடிவு செய்துக்கொள்ளுங்கள்.

1.   அல்குர்ஆன் மற்றும் அல்ஹதீஸ் இவைகளின் வழிகாட்டுதலின்படி அல்லாஹ்வின் திருப்தியை பெற மட்டுமே தகவல்கள் பரிமாறி ஊடகத்துறையில் பணியாற்றுவது.

2.   ஷிர்க்கு போன்ற பல கொள்கையுடைய மக்களை அனைவரின் திருப்தியை பெற மட்டுமே தகவல்கள் பரிமாறி ஊடகத்துறையில் பணியாற்றுவது.

அல்லாஹ்வின் திருப்தி முக்கியமா? பல கொள்கை மனிதர்களின் திருப்தி முக்கியமா? என்பதை முஸ்லீம் ஊடகவியளார்கள் முடிவு எடுத்து அல்லாஹ்வின் பொருத்தத்தை பெற்றவர்களாக நாம் அனைவரும் மாற முயலவேண்டும்.

அதிரைநிருபர் பதிப்பகம்

6 Responses So Far:

Ibrahim said...

இது போல் மார்க்கத்துக்கு விரோதமாக நடக்கும் நிகழ்ச்சிகள் குறிப்பாக இரவு கேளிக்கைகள், இரவு விளையாட்டுகள், தொழுகைக்கு நேரம் ஒதுக்காத நிகழ்ச்சிகள், குர்ஆன் ஹதீசுக்கு மாற்றுக் கொள்கையுடையவர்களின் நிகழ்ச்சிகள், ஷஹீஹான ஹதீஸ் மறுப்பாளர்களின் நிகழ்ச்சிகள் என்று கொள்கையற்றுப் போய் அவைகள் அனைத்திற்கும் இலவசமாக அதிமுக்கியத்துவம் கொடுக்கும் அதிரை வலைத்தளங்கள் யாரை திருப்தி படுத்த இவ்வாறு செய்கிறார்கள்?

நன்றி -    அதிரைநிருபர் பதிப்பகம்.

Unknown said...

Assalalmu Alaikkum

Dear brothers and sisters,

It is almost impossible to satisfy everyone in the society. Muslims community is unique and distinct among other communities. This distinctive quality of muslims makes strange from the eyes of other community members. Even it creates negative views and bitterness and conflicts without common sense. We need to reflect on what we need to do to resolve these misunderstanding within our community and with other non muslim communities.

I would like to request to our muslim brothers and sisters to be having humanity to towards other fellow human beings, compassionate, and understanding each other, so that all should live peacefully. Don't compromise your own religious commitments, but you have responsibilities to make others understand why you do what you do.

If there is all white how do we undertand the white?
If there is no polythesim where is the uniqueness in monothesim.?
If everyone is perfect muslim(obeying God) then what is the purpose of Prophets and guidance from God Almighty.
If there is no Shaitan there there won't be necessity for Prophets.

Everywhere in every aspects, things are in variety between two extremes(good and bad, light and dark, white and black).

Its the plan of God Almighty to create all things in variety.

What is ultimate necessity is to have peace and harmony among the human beings and total environment.

Thanks and best regards,

B. Ahamed Ameen from Dubai.

aa said...

இதற்கெல்லாம் காரணம் குஃப்பார்கள் உருவாக்கிய ‘கருத்துச் சுதந்திரம்’, ‘பத்திரிக்கை தர்மம்’ போன்றவற்றை நம்மவர்கள் குஃப்பார்களின் வழியிலேயே புரிந்து கொண்டது தான். இந்த சித்தாந்தங்களை உலகிற்கு போதித்தவர்கள் கிறிஸ்தவ மதத்திலிருந்து நாத்திக கொள்கைக்கு மாறிய மேற்கத்தியர்களே அல்லாமல் தவ்ஹீதை கற்றுத்தந்த நபிமார்கள் (அலைஹிஸ்ஸலாம் அஜ்மயீன்) அல்ல.

’எல்லா தரப்புச் செய்திகளையும் கவர வேண்டும்’ என்பது மேற்கத்தியர்கள் போதித்த பத்திர்க்கை தர்மம் என்பதால், நம்மவர்கள் அவற்றை அச்சரம் பிசகாமல் பின்பற்றுவதற்கு போட்டியிடுகிறார்கள். எனக்கென்னவோ , இவர்கள் வரும் காலங்களில் டாஸ்மாக் பார் திறப்புவிழா பற்றியும் செய்தி வெளியிடுவார்களோ என்ற ஐயம் உள்ளது. ஏனெனில் அதுவும் ஒரு நிகழ்வு தான். முன்பொருமுறை பெண்கள் முக்காடு போடவேண்டியதில்லை என்று ஒரு ஹதீஸ் மறுப்பாளரின் கட்டுரையையும் நமதூர் வலைதளம் ஒன்று ’கருத்துரிமை, ஆண்-பெண் சம உரிமை’ என்ற அடிப்படையில் பிரசுரித்திருந்தது. கடும் கண்டனங்களுக்கு பின்னர் அவற்றை நீக்கினர்.


அல்லாஹ் இவர்களை இந்த வழிகேட்டிலிருந்து மீட்டு நேர்வழியில் செலுத்த வேண்டும்.


சகோதரர்களே, வழிகேடுகளும் ஷிர்கும் குஃப்ரும் ‘கருத்துரிமை’ என்ற பெயரில் நமதூரில் நுழைவதை நாம் எச்சரிக்கையாக கவனத்தில் கொள்ள வேண்டும். இதற்கு பின்னனியில் வேறு ஏதேனும் சதிகள் இருக்கின்றனவா என்பதையும் உரியவர்கள் உரக்கச் சொல்ல வேண்டும். முஸ்லிம்களை கருவறுக்கத் துடிக்கும் ஃபாசிஸ்டுகளை விட, முஸ்லிம்களின் ஈமானை பாழ்படுத்தி அவர்களை மேற்கத்திய குஃப்பார்களின் வழிமுறைகளின் மூலம் நரகிற்கு இழுத்துச் செல்பவர்கள் ஆபத்தானவர்களே.

அல்லாஹ் நம் அனைவரையும் நவீன சித்தாந்தங்களின் தாக்கத்திலிருந்து பாதுகாத்து, அவனை மட்டும் வணங்கும் நன்மக்களில் ஆக்குவானாக.

sheikdawoodmohamedfarook said...

//Its plan of God Almighty to create all things in variety//மருமகன் அஹமத்அமீனின்கருத்துக்களை வரவேற்கிறேன். ஒருநாட்டின்பண்பாடு பழக்க வழக்கங்களை மதிக்க தெரியாதவர்கள் ஏன் அந்தநாட்டில் இருக்கவேண்டும்தேசியதினத்தில்'ஜனகனமனஅதிநாயகஜெயகே'பாடமாட்டேன்!என்றுசொன்னால்என்னநடக்கும்.பத்துரூபாய்நோட்டில்காந்திபடம்போச்சு.பிள்ளையார்படம்வரலாம்.அப்படிவந்தால்என்னசெய்யப்போறோம்.இஸ்லாமியநாடானஇந்தோனேசியகரன்சியில்பிள்ளையார்படம்போட்டு முப்பதுவருசமாச்சு.ஹஜ்ஜுக்கு செல்வோர்களில் இந்தோனேசியர்களே அதிகம். அவர்களை காபிர் என்று சவூதி அரசு ஹஜுக்கு வராதே என்று விரட்டவில்லைஇறைமறுப்பாளர்களும்ஹதீஸ்மறுப்பாளர்களும்ஜூம்மா பள்ளிதிறப்புவிழாவில்கலந்துகொண்டார்கள்.மேலும்முஸ்லிம்கள்வீட்டு திருமணங்களில்அவர்களுக்குமுதல்மரியாதைகொடுக்கப்பட்டது.தொப்பிபோட்டமுஸ்லிம்கள்எல்லாம்'அடுத்தபந்திலேஉக்காந்தாங்க!மற்றும்அதிரைநிருபர்சார்பில்'மதநல்லிணக்கநோன்புபெருநாள்விருந்துஇறைமறுப்பாளர் களுக்கும்ஹதீஸ்மறுப்பாளர்களுக்கும்இரண்டுமுறை கொடுத்தாச்சு!The next get together is very soon.Please invite me! நோன்புகாலங்களில்இறை-ஹதிஸ்மறுப்பாளர்களுக்குஇஸ்லாமியஅரசியல்கட்சிகளும்தனியாள ர் களும்நோன்பு கஞ்சி கொடுத்து அதை போட்டோ எடுத்து பத்திரிக்கையிலும் போட்டுபுளகாங்கிதம் அடைந்தார்கள். இப்படியெல்லாம் இருக்க தேர் திருவிழா செய்திகளை வளைதளத்தில் போட்டதுமட்டும்தப்பா? மாமியாஒடச்சாமண்சட்டி!மருமவஒடச்சாபொன்சட்டி?

Aboobakkar, Can. said...

சகோதரர்களுக்கு ...ஊடகம் என்பது செய்திகளை மட்டும் தருவதே .. பிறமத செய்திகளை போடுவதால் தவறேதுமில்லை மாறாக அதுபோன்ற நிகழ்வுகளை அதிகபட்சம் கோலாகாலமாக ...விமர்சையாக கொண்டாடப்பட்டது ...அனைத்து பொது மக்களும் கண்டு கழித்தனர் என்ற இது போன்ற விமர்சனர்களை விமர்சித்து அதற்கு ஆதரவு தெரிவிப்பது மட்டுமே தவிர்க்கப்படவேண்டும் அவ்வரேனும் அந்த பதிவில் குறிப்பிட்டதாக எனக்கு தெரியவில்லை.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு