நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அதிரை செய்தி ஊடகம் அறிமுகம் ADIRAI BBC 40

அதிரைநிருபர்-பதிப்பகம் அமைதியின் ஆளுமை | திங்கள், ஜூன் 27, 2011 | ,

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களே..

அதிரைக்கு என்று பல வலைப்பூக்கள் இருந்தாலும் அதிரையின் நிகழும் அன்றாட செய்திகளை மட்டும் உலகில் உள்ள அதிரை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் முயற்சியாக அதிரையில் வசிக்கும் ஒரு சில இளம் பதிவாளர்கள் இணைந்து புதிதாக அதிரைபிபிசி (Adirai BBC ) http://adiraibbc.blogspot.com  என்ற வலைப்பூவை இன்று முதல் அறிமுகம் செய்துள்ளார்கள் என்ற தகவல் நம் அதிரைநிருபருக்கு வந்தது.


பல்வேறு தளங்களில் செய்தி பங்களிப்பாளர்களாக பங்காற்றிய அனுபவத்துடனும், பல்வேறு நாடுகளில் வசிக்கும் நண்பர்கள், அபிமானிகள், உள்ளூர் பிரமுகர்கள், உள்ளூர் தொழில் அதிபர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள் ஆகியோரின் ஆலோசனை மற்றும் அறிவுறுத்தலின் பேரில் இந்த வலைத்தளம் உருவாக்கப்பட்டுள்ளதாக இந்த வலைத்தளத்தின் அறிமுக பதிவில் சொல்லப்பட்டுள்ளது. பொதுவாக அதிரை வலைத்தளங்கள் வைத்திருப்பவர்கள் அனைவருமே வெளிநாடுகளில் வசிப்பவர்கள் இவர்களால் உள்ளூர் நிகழ்வுகளை தங்களின் வலைத்தளங்களில் வெளியிடுவதில் காலதாமாகிறது என்பது அதிரை பிபிசி நண்பர்களின் வாதம். அதிரையில் உள்ள செய்திகளை அதிரையிலிருந்தே வெளிநாட்டுவாழ் மக்களுக்கு கொண்டு செல்வதில் முழுமுனைப்புடன் செயல்படுவோம் என்று உறுதியுடன் இந்த வலைத்தளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இதன் பங்களிப்பாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.

அதிரையில் உள்ள செய்திகளை உலகத்தில் உள்ள அதிரைவாசிகளுக்கு அறியத்தரும் விதமாக காணொளியாகவும், புகைப்படச் செய்திகளாகவும், நேரலையாகவும், விளம்பர செய்திகளாகவும் மற்றும் அதிரை சார்ந்த விழிப்புணர்வு பிரச்சார செய்திகளையும் முழுக்க முழுக்க அதிரையிலிருந்து அதிரைபிபிசி வலைத்தள நண்பர்கள் வெளியிட உள்ளார்கள். வலைப்பதிவுலகில் பிரகாசிக்க துடிக்கும் இந்த இளம் அதிரை பதிவாளர்களை வாழ்த்தி அறிமுக செய்துவைப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறோம்.

அதிரை சார்ந்த வலைப்பூக்கள் வைத்திருக்கும் சகோதரர்கள் நம் சகோதரர்கள் என்ற எண்ணத்தில் ஒவ்வொருவரின் செயல்பாடுகள் நகரீகமாகவும், தனிமனித தாக்குதல்கள் இல்லாமலும் இருக்க வேண்டும் என்பது நம் எல்லோருடைய விருப்பம். இவற்றை புதிதாக உதயமாகியுள்ள அதிரை பிபிசி வலைத்தளம் இவைகள் அனைத்தையும் பின்பற்றும் என்று எல்லோரும் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றோம்.

வாழ்த்துக்கள் அதிரைபிபிசி நண்பர்களுக்கு.

-- அதிரைநிருபர் குழு

40 Responses So Far:

அபுஇபுறாஹீம் சொன்னது…

என்னது !? அனுபவம் புதுசா இல்லை அனுபவங்களின் புதுமையா ? எது எப்படிய்ருந்தாலும் ! ஊர் நலன் பேனும் யாவராயினும் அநீதிக்கும் அவதூறுக்கும் எதிராக இருக்கும் பட்சத்தில் வரவேற்பதில் மகிழ்ச்சியே !

விழிப்புணர்வுகள் என்றில்லாமல், அதிரைக்கு அரணாகவும் இருந்திடவும் வாழ்த்துக்கள் !

M.H. ஜஹபர் சாதிக் சொன்னது…

BBC யா! நல்ல செய்தி தான் வாழ்த்துக்கள். அது ABC இல்லையா!

sabeer.abushahruk சொன்னது…

ABC - Adirai Broadcasting Corporation?

good thought MHJ

all the best adirai bbc

meerashah சொன்னது…

இதில் எனக்கு உடன்பாடில்லை என்றே கூற விரும்புகிறேன்..
ஏற்கனவே நாற்பத்தி இரண்டு தளங்கள் அதிரைக்காக செயல்படுகிறது. நமதூரில் இருக்கும் தெருக்களை விட தளங்கள் அதிகம்.

அதில் நேர்த்தியான நான்கு தளங்கலாவது ஓன்று சேராதா!?! எங்கிருந்தோ வந்திருக்கும் நம் தமிழ் மக்களை ஜித்தாவில் ஒன்றுசேர்கவெல்லாம் நாம் வலை தளம் அமைத்து கொடுத்திருக்கின்றோம்..ஆனால் நமதூர் மக்கள் ஒன்றாக பகிர்ந்து சந்தித்துக்கொள்ள ஓர் இணைய பிணைப்பு ஏற்படாதா?!, நம்மால் இயன்ற தொழில்நுட்ப ரீதியில் உதவி செய்யும் வாய்ப்பு கிட்டாதா?! என்று ஏங்கிக்கொண்டிருக்கும் வேளையில் இது என்னைப்பொருத்தவரையில் "வீட்டு வெளிச்சுவற்றிற்கு சுண்ணாம்பு அடிக்க ஆரம்பிக்கும்போது பெய்யும் மழையாகத்தான் நினைக்கின்றேன்.. மழை ரசிக்கக்கூடியது,ஆனால் சூழ்நிலை?!?

தளம் ஆரம்பிப்பது அவரர் விருப்பம்.. அதில் மாற்றுக்கருத்தே கிடையாது.
ஆனால்.... ஊர் மீதுள்ள,ஊர் மக்கள் மீதுள்ள அக்கரையில் என்ற வார்த்தை மட்டும் ஏற்றுக்கொள்ள மனம் இல்லை..

குறிப்பு :
இவை அனைத்தும் என் தனிப்பட்ட(என் நண்பர்கள் வட்டாரத்தில் பலர்) கருத்து..யாரையும்,எந்த தளத்தையும் புண்படுத்துவதற்காக இல்லவே இல்லை..

அபுஇபுறாஹீம் சொன்னது…

//அதில் நேர்த்தியான நான்கு தளங்கலாவது ஓன்று சேராதா!?! எங்கிருந்தோ வந்திருக்கும் நம் தமிழ் மக்களை ஜித்தாவில் ஒன்றுசேர்கவெல்லாம் நாம் வலை தளம் அமைத்து கொடுத்திருக்கின்றோம்..ஆனால் நமதூர் மக்கள் ஒன்றாக பகிர்ந்து சந்தித்துக்கொள்ள ஓர் இணைய பிணைப்பு ஏற்படாதா?!, நம்மால் இயன்ற தொழில்நுட்ப ரீதியில் உதவி செய்யும் வாய்ப்பு கிட்டாதா?!//

தம்பி மீராசாஹ்: உன் ஆவலும் ஏக்கமும் எனக்கிருப்பதும் ஒன்றே அதுவும் இன்றல்ல பல நாட்களாக, சரி அப்படி ஒரு வளைத்தளம் தலைமைக்கு தகுதியானது ஏதென்று ஒன்றை சுட்டிக் காட்டிடு அதனைப் பற்றி எவ்வாறு ஒத்தக் கருத்துக்களுக்கு அதன் நிர்வாகிகளே வருவார்களா என்று எதிர் பார்ப்போம் !? அதோடில்லாமல் ஒவ்வொருவரும் அவரவர்களின் உணர்வுகளுக்கு என்று இயக்கமாகவும் சங்கமாகவும் வலைத்தளமாகவும் வைத்திருக்கின்றனரே !!!

அவரவர்களுக்கு தான் / தாம் சொல்வதை ஏற்க வேண்டும் என்ற ஆவல் இருக்கும் அதற்கு உடண்படுபவர்களைதான் அவர்களும் நேசிப்பார்கள் அத்திப்பூர்த்தார்போல் அதில் சிலர் விதிவிலக்கு எவ்வித விமர்சனத்தையும் தாங்கிக் கொண்டு இன்னும் களம் காண்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அதற்கும் மனத் திடமும் சவாலை எதிர்கொண்டு முன்னிருக்கவும அதேநேரத்தில் தவறென்று ஏற்பட்டுவிட்டால் உணர்ந்து திருத்திடவும் பக்குவப்பட்டிருக்க வேண்டும். முக்காடு போட்டுக் கொண்டு கல்லெறிவோம் சொல்லெறிவோம் யாம் அறியோம் என்று இருப்பவர்களும் உண்டு வலைக்குப் பின்னால் !

மிக முக்கியமாக யாவரும் அறிந்த ஒன்று, முதலில் எழுத்தில் அல்லது ஆக்கங்களைல் அலல்து செய்திகளில் இருப்பதை விமர்சன் என்று கடந்து தனிப்பட்ட தனிமனித தாக்குதல் என்று எல்லையைத் தொடும் அப்போதுதான் விரும்பத் தகாத ஏச்சுக்களும் பேச்சுகளும் அவதூறுகளும் தலையெடுக்கும் அங்கேதான் பிரிவினைக்கு சாவி செய்யப்படும் !

இது நமதூருக்கு மட்டும் பொருந்தாது எல்லோருக்குமே...

இது(வும்) என் தனிப்பட்ட கருத்தே !

அதிரை எக்ஸ்பிரஸ் சொன்னது…

சகோ. மீராஷாவின் கவலையில் தனிப்பட்ட முறையில் நானும் பங்கு பெறுகிறேன். இதுதொடர்பாக அதிரை எக்ஸ்பிரஸ் குழுமத்தின் முடிவு பின்வருமாறு:

அதிரைத் தளங்கள் அனைத்தும் இணைந்து செயல்பட அதிரை எக்ஸ்பிரஸின் தற்போதைய நிர்வாகம் தயாராக உள்ளது. ஏதேனும் ஒரு தளத்தில் அதிரைப் பதிவர்கள் அனைவரும் இணைவோம். இதற்காக ஒரு குழுமத்தை ஏற்படுத்துவோம். ஊரின் அன்றாட நிகழ்வுகள் மற்றும் நடப்புகளை அப்படியே பதிவதில் பிரச்சனை இல்லை.

நமதூரின் பிரச்சனைகள், அவலங்கள் போன்றவற்றை பதிவர் குழுமத்தில் விவாதித்துவிட்டு, மெருகேற்றல் தேவை எனில் அதனையும் செய்து பதிவோம். குறிப்பிட்ட பதிவு, தனி நபர் அல்லது இயக்கங்களைக் குறை கூறுவதாக இருப்பின், அவர்களின் கருத்துகளையும் அறிந்து, அதனையும் அந்தப் பதிவில் இடம் பெறச் செய்ய வேண்டும்.

பொதுவாக ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் செய்யும் எந்தக் காரியத்துக்கும் அமீர் ஒருவர் தேவை என்பது இஸ்லாத்தின் வழிகாட்டல். எனவே, பதிவர் குழுமத்திற்கும் அமீர் ஒருவர் தேவை. நமது பதிவர்களில் எவரையேனும் நீக்க வேண்டும் அல்லது புதிதாக பதிவரைச் சேர்க்க வேண்டும், பிரச்சனைக்குரிய பதிவுகளைப் பதிய வேண்டும் என்பன போன்றவற்றை குழுமத்தில் வைத்து விவாதித்து, இறுதி முடிவில் அமீரின் உத்தரவுக்கு நாம் கட்டுப்பட வேண்டும்.

இவ்வாறு செயல்படுவதாக இருந்தால், அவர்களுடன் இணைந்து கொள்ள அதிரை எக்ஸ்பிரஸ் தயாராக உள்ளது. இதற்காக அதிரை எக்ஸ்பிரஸைக் கலைத்துவிட்டு அவர்களுடன் இணைந்து கொள்ள அதிரை எக்ஸ்பிரஸ் குழுமம் தயாராக உள்ளது.

அபூசுஹைமான
மட்டுறுத்துனர், அதிரை எக்ஸ்பிரஸ்

அதிரைநிருபர் குழு சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும்,

கருத்திட்ட அனைத்து சகோதரர்களுக்கும் மிக்க நன்றி.

சகோதரர் மீராசாவின் கவலையும் நம் எல்லோருடைய கவலையும் இதுவோ.

சகோதரர் அபூ சுஹைமா, தங்கள் பெயரிட்ட பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.

ஒன்று மட்டும் உண்மை நாம் எல்லோரும் அறிந்ததே, அநேக அதிரை வலைப்பூ நிர்வகிப்பவர்கள் அதிரையில் இல்லை. அனைத்து வலைப்பூக்களால் அதிரை செய்திகளை உடனுக்கு உடனே பதிய முடியவில்லை என்பது எல்லோருடைய குறைபாடும் கூட.

புதிதாக தொடங்கப்பட்டுள்ள அதிரைபிபிசி என்ற தளத்தை நிர்வகிப்பவர்கள் அதிரையில் உள்ளவர்கள், அதிரை சார்ந்த நடப்புகளை விரைந்து அதிரையிலிருந்து உடனுக்கு உடன் தர தங்களால் முடியும் என்ற நம்பிக்கையில் எங்களிடம் அனுகி அறிமுக பதிவை பதியச் சொன்னார்கள். இணையத்தில் அதிரை செய்திகளை உடனக்குடன் அதிரையில் உள்ள ஒரு சில வலைத்தளங்களுக்கு செய்திகளாக தந்து அனுபவம் இச்சகோதரர்கள் ஊர் செய்திகளை மட்டுமே அவர்களின் அதிரைபிபிசி தளத்தின் முக்கிய குறிக்கோள். கட்டுரைகள், கவிதை மற்றும் இன்னும் பிற செய்திகளை பகிர்ந்துக்கொள்ள அதிரை சார்ந்த் மற்ற வலைப்பூக்கள் உள்ளது என்ற கருத்தை முன் வைத்து இந்த வலைதளத்தை ஆரம்பித்துள்ளார்கள்.

எல்லாவற்றிற்கும் அமீர் தேவை என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம்.

அதிரைநிருபர் குழு தன் அமீரின் முடிவுகளின் அடிப்படையில் கடந்த ஒர் ஆண்டாக செயல்பட்டு வருகிறது. அதில் வெற்றிகள் பல கண்டு வருகிறது. மிகச் சிறப்பான வாசகர் வட்டத்தையும் உருவாக்கியுள்ளது. மேலும் இது தொடர்பாக தங்களின் தனிப்பட்ட கருத்துக்கள் ஏதும் இருக்கும் பட்சத்தில் மின்னஞ்சலில் பகிர்ந்துக்கொள்ளலாம். editor@adirainirubar.in adirainirubar@gmail.com

அல்லாஹ் போதுமானவன்.

ZAKIR HUSSAIN சொன்னது…

முதலில் இந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள். இப்படி நேரடி ஒலி&ஒளிபரப்பு என்பது அவ்வளவு ஈசி அல்ல. அதை செய்ய முனைந்திருப்பவர்களின் முயற்சியையும் நேரத்தையும் நான் மதிக்கிறேன்.

Direct Brodacsating ல் கவனிக்க வேண்டியது 'மற்றவர்களின் Privacy யை அடிக்கடி மீற வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும். இதில் மிக கவனம் தேவை.

Yasir சொன்னது…

ஓற்றுமையாக இருக்கவேண்டும் என்பது வரவேற்க்ககூடியதே...அதற்க்காக ஒரு காமன் பாலிஸியை உருவாக்கி அனைவரும் ஏற்றுக்கொள்ளவேண்டும்...முக்கியமாக சுய அறிமுகம் அவசியம்....மர்மமாக எதாவது நடந்தால் அது ஒற்றுமைக்கு வேட்டு வைப்பதுபோல் ஆகிவிடும்

JAFAR சொன்னது…

அதிரை எக்ஸ்ப்ரஸ் துவங்கப்பட்டு பெருத்த ஆதரவுடன் நம்தூருக்கான அதிகாரப்பூர்வமான மீடியா என இன்று வரை செயல்பட்டு வருகிறது, எதோ சில மன கசப்புகள் நடைபெறுவது இயற்கையே, ஏனென்றால் நாமெல்லாம் மனிதர்கள் ஆனால் அதெல்லாம் மறக்கக்கூடியது, தொடர்ந்து ஒன்றை இரண்டாகுவதும், இரண்டை நான்காகுவதும் நமக்கு வேண்டுமானால் இலகுவாக இருக்கலாம் ஆனால் பொதுவாக நம் எழுத்தின்மீதும் நம் செயல்பாடுகல்மீதும் நம்பிக்கைவைத்து தினம் இவ்வளைதலங்களை கண்டுகொண்டு இருப்பவர்கள் என்ன நினைப்பார்கள், கோபப்படாவிட்டாலும் கவலைப்படுவார்களே, இதெல்லாம் வேண்டாம் என்று திறந்த புத்தகமாக ஒரு குழுமம் அமைத்து விவாதித்து முடிவு செய்யலாம், மேலும் அமீர் வழி நடத்துதலின் பேரில்தான் நாம் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் நமக்கு கற்று தந்துள்ளனர், இதை தான் ஆரம்பத்தில் துவங்கப்பட்ட வலைப்பூ என்பதன் அடிப்படையில் அதிரை எக்ஸ்பிரசுடன் இணைந்து செயல்பட அதன் மட்டுறுத்துனர் அழைக்கிறார்.இணைந்து செயல்பட்டால் இன்ஷா அல்லாஹ் நிச்சயம் வெற்றி கிடைக்கும் வேற்றுமையால், விமர்சனத்தில் தள்ளாடும் நம் சமுதாயத்தை, இதுபோன்ற ஒற்றுமையின் மூலம் மாற்றம் ஏற்படுத்தலாமே.

அப்துல்மாலிக் சொன்னது…

யாராவது நல்லாதா, உண்மையா எல்லாவகையிலும் கவரும் வகையில் செய்தா சரிதான்

அதிரைக்காரன் சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும்.

//பொதுவாக அதிரை வலைத்தளங்கள் வைத்திருப்பவர்கள் அனைவருமே வெளிநாடுகளில் வசிப்பவர்கள் இவர்களால் உள்ளூர் நிகழ்வுகளை தங்களின் வலைத்தளங்களில் வெளியிடுவதில் காலதாமாகிறது என்பது அதிரை பிபிசி நண்பர்களின் வாதம்.//

வலைத்தள நடத்துனர்(கள்) உள்ளூரில்தான் இருக்க வேண்டும் என்ற வாதம் நவீன தொழில்நுட்பம் மலிந்துவிட்ட இக்காலத்தில் பொருந்தாது. இதுவரை
அதிரை எக்ஸ்ப்ரஸில் உள்ளூர் நிகழ்வுகளை நேரலைகளாகவும் பதிவாகவும் வெளியிட்டு வந்தவர்களே சொல்வது விநோதமாக இருக்கிறது.

உள்ளூர் நிகழ்வுகளுக்காக என்பது மட்டுமே நோக்கமென்றால் அதை புதிதாக தளம் தொடங்கித்தான் செயல்படுத்த வேண்டியதில்லை. ஏற்கனவே இருந்த எக்ஸ்ப்ரஸிலேயே செய்திருக்கலாம். 4-5 நாட்கள் முன்புவரை அதைச் செய்தவர்கள்தான் அவர்கள்!

//அதிரைநிருபர் குழு தன் அமீரின் முடிவுகளின் அடிப்படையில் கடந்த ஒர் ஆண்டாக செயல்பட்டு வருகிறது. அதில் வெற்றிகள் பல கண்டு வருகிறது. மிகச் சிறப்பான வாசகர் வட்டத்தையும் உருவாக்கியுள்ளது.//

அதிரைவாசிகளுடன் உரையாடும் தளம் எனில் adiraiwala@gmail.com என்ற முகவரியையும் இணைத்துக்கொள்ளவும்.

meerashah சொன்னது…

மாஷா அல்லாஹ்.. ஒன்று சேர்வதில் அநேகருக்கு ஒற்ற கருத்து இருப்பது பெருமையாக இருக்கின்றது.இதோ ஒரு தளமாக இயங்குவதற்கான வழிகள்1)அதிரை எக்ஸ்பிரஸ், அதிரை நிரூபர் இதில் எந்த தளத்தின்மூலம் நுழைந்தாலும் ஒரு பொது தளத்திற்கு கொண்டு செல்ல தொழில்நுட்பம் இருக்கின்றது..

2)மேலும் நாம் எதிர்பாற்பதைபோல் adiraixpress.org / adirainirubar.in இதில் எந்த தளத்தில் நுழைந்தாலும் Blogspot என்ற பெயர் தெரியாதவாறு செய்வதற்கு ஒரு புதிய முறை இருக்கின்றது..

3)அதிரை எக்ஸ்பிரஸ் ஊர் சார்ந்ததாக இருந்தாலும், நிருபர்- கவிதை, கல்வி போன்றதாக இருந்தாலும் எல்லாவற்றையும் ஒன்றாக இணைத்து அனைத்தையும் ஒரே தளத்தில் பல்வேறு இணைப்பாக(menu bar) கொடுத்து விரும்பியர் அந்தந்த இணைப்பை அழுத்தி செல்லலாம்..இது வரை நமதூரில் அனைத்து பதிப்புகளும் முகப்பில் மட்டுமே தெரியுமாறு இருக்கின்றது..பல இணைப்பாக உருவாக்கினால் ஒன்று சேர எளிதாகும். அதேநேரம் கவி,ஆக்கம், கட்டுரைகள்,etc., புதிய ஐந்து பதிவுகள் மட்டும் முகப்பிலேயே தெரியவைகலாம்,

4)அதிரை எக்ஸ்பிரஸ், அதிரை நிருபர் என்ற பெயர் ஊர் முழுதும் தெரிந்துவிட்டதே தற்போது எப்புடி மாற்றுவது என்று நினைத்தால் 'அதிராம்பட்டினம் என்பது பெரிதாகவும் அதன் கீழ் tag line ஆக nirubar express என்றுகூட எழுதலாம்..பலதலங்கள் இணைய முற்பட்டால் பங்களிப்பு என்று கீழே(footer) குறிப்பிட்டு இணைந்த தளங்களின் பெயரை இடலாம்.

5)பெண்கள்,குழந்தைகள் மற்றும் அணைத்து மக்களையும் கண்ட கண்ட தளங்களில் சென்று பொழுதுபோக்கை கழிக்க போய் கண்டதையும் கற்க,பார்க்க நேரிடுவதை தடுத்து நம் தளத்திலேயே பொழுதுபோக்கையும் வரம்பு மீறாமல் இயக்க முடியும்...

6)Time is precious than money..காலம் பொன் போன்றது..விளம்பரம் செய்து பொருளீட்டி அச்செலவை தல மேம்பாட்டிற்கே செலவு செய்யலாம்..மீதி பணத்தை பைதுல்மாளிற்கோ, ஜகாதிற்கோ கொடுப்பதா என்பதை பின்னால் யோசிக்கலாம்..

6)இது போன்று பல விசயங்கள் செய்ய இயலும்..மனம் இருந்தால்.. இணைக்க பல யோசனைகள் எழிதில் செய்ய முடியும்.மேலே கூறிய பல சிறப்புகளை freelance project ஆக ஒரு வெளிநாட்டு அமைப்பிற்கு தளம் செய்திருக்கின்றேன்..இன்ஷா அல்லாஹ் அந்த முகவரியை விரைவில் வெளியிடுகிறேன்..தொழில்நுட்பம் தெரியும் என்பதற்காக >நாற்பத்தி மூன்று அதிரை தளங்களை தாண்டி நாற்பத்தி நான்காவது தளம் உருவாக்க எனக்கு விருப்பம் இல்லை..அதன் மூலன் மக்களின் வெறுப்பையும்,சங்கடத்தையும்தான் சம்பாரிக்க முடியும்..

MSM(MR)

அதிரை எக்ஸ்பிரஸ் சொன்னது…

அன்புள்ள அதிரைநிருபர் குழு,

வஅலைக்குமுஸ் ஸலாம் வரஹ்மதுல்லாஹ்.

//சகோதரர் அபூ சுஹைமா, தங்கள் பெயரிட்ட பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.//

//அதிரைநிருபர் குழு தன் அமீரின் முடிவுகளின் அடிப்படையில் கடந்த ஒர் ஆண்டாக செயல்பட்டு வருகிறது. அதில் வெற்றிகள் பல கண்டு வருகிறது. மிகச் சிறப்பான வாசகர் வட்டத்தையும் உருவாக்கியுள்ளது. மேலும் இது தொடர்பாக தங்களின் தனிப்பட்ட கருத்துக்கள் ஏதும் இருக்கும் பட்சத்தில் மின்னஞ்சலில் பகிர்ந்துக்கொள்ளலாம். editor@adirainirubar.in adirainirubar@gmail.com//

சகோ. மீராஷாவின் ஆதங்கத்திற்குப் பதில் அளிக்கும் விதமாய் சகோ. அபுஇபுறாஹீம் பின்வருமாறு கேட்டிருந்தார்கள்.

//தம்பி மீராசாஹ்: உன் ஆவலும் ஏக்கமும் எனக்கிருப்பதும் ஒன்றே அதுவும் இன்றல்ல பல நாட்களாக, சரி அப்படி ஒரு வளைத்தளம் தலைமைக்கு தகுதியானது ஏதென்று ஒன்றை சுட்டிக் காட்டிடு அதனைப் பற்றி எவ்வாறு ஒத்தக் கருத்துக்களுக்கு அதன் நிர்வாகிகளே வருவார்களா என்று எதிர் பார்ப்போம் !? அதோடில்லாமல் ஒவ்வொருவரும் அவரவர்களின் உணர்வுகளுக்கு என்று இயக்கமாகவும் சங்கமாகவும் வலைத்தளமாகவும் வைத்திருக்கின்றனரே !!!

அவரவர்களுக்கு தான் / தாம் சொல்வதை ஏற்க வேண்டும் என்ற ஆவல் இருக்கும் அதற்கு உடண்படுபவர்களைதான் அவர்களும் நேசிப்பார்கள் அத்திப்பூர்த்தார்போல் அதில் சிலர் விதிவிலக்கு எவ்வித விமர்சனத்தையும் தாங்கிக் கொண்டு இன்னும் களம் காண்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அதற்கும் மனத் திடமும் சவாலை எதிர்கொண்டு முன்னிருக்கவும அதேநேரத்தில் தவறென்று ஏற்பட்டுவிட்டால் உணர்ந்து திருத்திடவும் பக்குவப்பட்டிருக்க வேண்டும். முக்காடு போட்டுக் கொண்டு கல்லெறிவோம் சொல்லெறிவோம் யாம் அறியோம் என்று இருப்பவர்களும் உண்டு வலைக்குப் பின்னால் !//

இதற்கு அதிரை எக்ஸ்பிரஸின் தற்போதைய மட்டுறுத்துனர் என்ற வகையில்தான் நான் பதில் அளித்திருந்தேன். சுய அறிமுகம் இன்றி வெறுமனே அதிரை எக்ஸ்பிரஸ் என்று போட்டால் சரியாக இருக்காது. தவிர, அதிரை எக்ஸ்பிரஸ் ஐடியை எவரேனும் தவறாக உபயோகித்துள்ளார்களோ என்ற சந்தேகமும் எழக்கூடும் என்பதற்காக "அபூசுஹைமா, மட்டுறுத்துனர், அதிரை எக்ஸ்பிரஸ்" என்றும் கொடுத்துள்ளேன்.

ஆனால் அதனை நீங்கள் என் தனிப்பட்ட பின்னூட்டமாகக் கருதி பதில் அளித்துள்ளது எனக்கு திருப்தியைத் தரவில்லை. ஒற்றுமையை விரும்புபவர்களுக்கும் அவ்வாறே இருக்கும் என்று நினைக்கிறேன்.

அல்லாஹ் நம் எண்ணங்களுக்கும் நம்முடைய நேர்மையான செயல்களுக்கும் கூலி தரப் போதுமானவன்.

அதிரை எக்ஸ்பிரஸ் சொன்னது…

சகோ. மீராஷா முத்தான யோசனையை மட்டுமின்றி செயல்முறையையே வைத்துள்ளார். அவருடைய எண்ணத்துக்கும் முயற்சிகளுக்கும் அல்லாஹ் கூலி தரட்டும்.

JAFAR சொன்னது…

ஆஹா நல்ல ஒரு ஐடியா தம்பி மீராசா வகுத்துள்ளார், அதேநேரத்தில் ஒரே தலைமயின்கீழ் செயல்படவேண்டும் இதையும் தம்பி மீராஷா சேர்த்துக்கொள்ளுங்கள் ஜஜாகுமுள்ளஹுமுள் க்ஹைர்

அதிரை-நிருபர்-குழு சொன்னது…

//அதிரைவாசிகளுடன் உரையாடும் தளம் எனில் adiraiwala@gmail.com என்ற முகவரியையும் இணைத்துக்கொள்ளவும். //

சகோதரர் அதிரைக்காரன் : அதிரைநிருபர்குழு(வுக்கு) என்று இருக்கும் அதன் அமீருக்கு கட்டுப்பட்டுதான் என்று செயல் படுகிறது என்று சொல்லிருக்கோம் அதிரைவாசிகளு உரையாடும் குழுவின் அமீர் என்று சொல்லவில்லை, அல்லாஹ் நன்கறிவான்.

அபுஇபுறாஹீம் சொன்னது…

ஏனுங்கப்பா புதுசா ஆரபிச்சிருக்கும் அதிரைபிபிசி நண்பர்கள் யாவரவது இங்கு வந்து கருத்தை சொல்லலாமே...

சகோதரர்களின் ஆதங்கம் யாவும் நன்மையை நாடியே என்ற கண்ணோட்டதிலே அனுகுவோம் !

தம்பி அபூசுமைஹா : என் பங்கு கருத்தாக பதிந்த ஆதங்கத்திற்கும் தாங்கள் அதிரை எக்பிரஸ் வலைத்தளம் சார்பு கருத்தாக பதிந்ததற்கும் நன்றி.

தம்பி மீராஷாஹ்: அருமையான ஆலோசனைகள் !

நிற்க !

பிரிந்த / இழந்த பின்னர் விவாதமும் தர்க்கமும் என்று தொடருவது வாடிக்கை அதன்பின்னர் தெளிவு / தனித்திருப்பது என்று சூழல் ஏற்படுவதும் தொடரத்தான் செய்கிறது.

ஒற்றுமைதான் ஊர்நலன் என்ற நல்லெண்ணமிருக்கும் யாரும் நல்ல நட்புகளை இழக்க மாட்டார்கள் / இழக்க விடவும் மாட்டார்கள் ! யாராக இருந்தாலும் தயவு செய்து அவதூறுகளிலிருந்து விலகியிருங்கள் அதனை மட்டும் துணைக்கு வைத்துக் கொள்ளாதீர்கள் !

நட்பு பாராட்டுவோம், சகோதரத்துவும் போற்றுவோம்... !

களம் காணத்தான் வேண்டும் !

meerashah சொன்னது…

//அபுஇபுறாஹீம் சொன்னது…

ஏனுங்கப்பா புதுசா ஆரபிச்சிருக்கும் அதிரைபிபிசி நண்பர்கள் யாவரவது இங்கு வந்து கருத்தை சொல்லலாமே...//


அதானே!! அதிரை வாசகர்களாகிய நம் கருத்தை நாம் தெரிவித்து விட்டோம்..அதிரை பி.பி.சி. அலைவரிசையிளிந்து மாலை நேர அவர்கள் பின்னூட்டச்செய்தி இன்னும் காணோமே!?!

அதிரைக்காரன் சொன்னது…

//அதிரைநிருபர்குழு(வுக்கு) என்று இருக்கும் அதன் அமீருக்கு கட்டுப்பட்டுதான் என்று செயல் படுகிறது என்று சொல்லிருக்கோம் அதிரைவாசிகளு உரையாடும் குழுவின் அமீர் என்று சொல்லவில்லை,//

அதிரைநிருபர் குழுவில் என்னைப்போன்ற அதிரைவாசிகளும் சேர முடியும் என்றால் குழுவில் இணைத்துக் கொள்ளுங்கள் என்றுதான் கேட்டேன். அதில் இணைப்பதில் ஏதும் பிரச்சினை உள்ளதா? தெரிவிக்கவும்.

அதிரைநிருபர் குழு சொன்னது…

//அதிரைநிருபர் குழுவில் என்னைப்போன்ற அதிரைவாசிகளும் சேர முடியும் என்றால் குழுவில் இணைத்துக் கொள்ளுங்கள் என்றுதான் கேட்டேன். அதில் இணைப்பதில் ஏதும் பிரச்சினை உள்ளதா? தெரிவிக்கவும்//

சகோதரர் அதிரைகாரன், அதிரைநிருபர் குழுவில் பங்களிப்பாளராக யாருக்கும் எந்த தடையுமில்லை. யார் வேண்டுமாலும் இணையளாம்.

தங்களின் ஆக்கங்களை editor@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும். மேலும் விபரங்கள் அறிந்துக்கொள்ள மேல் உள்ள மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.

crown சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும். என் நண்பன் அதி(ரடி)ரைக்காரன் பங்கேற்பதில் மித்த மகிழ்வில் திளைக்கிறேன். அந்த தருணம் விரைந்து வரணும், நல்ல பல விடயம் தரணும். வருக,வருகவே! மனம் உருகவே!. நண்பா! கின்டல் , கேலி, கவிதை, உரையாடல் எழுத்தில் இப்படி சகலமும் படைக்கும் திறமை படைத்தவனே ஆவலுடன் எதிர்பார்கிறேன்.

Naina Mohamed சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும்.

சகோதர,சகோதரிகளே.....

நீண்ட நாட்களாக என் மனதில் பிடிபடாமல் கபடி விளையாடிக்கொண்டிருக்கும் ஒரு கேள்வி என்னவெனில் " முஸ்லிம் சமுதாயம் பெருவாரியாக வசித்து வரும் கடல்கரையோரமான நம்மூருக்கென்று அனைவரும் பார்த்து, கருத்திட்டுச்செல்லும் மற்ற ஊர்களைப்போல் ஒரு தரமான, நடுநிலையான‌ இணைய தளத்தை ஒத்த கருத்தின் அடிப்படையில் ஒரே குடையின் கீழ் இன்னும் உருவாக்க இயலாத நாம் நாளை வரும் பெரும் சவால்களையும், சமூகப்பிரச்சினைகளையும் எதிர்கொண்டு எவ்வாறு சமாளிக்கப்போகிறோம்? என்னத்தெ சாதிக்கப்போகிறோம்?

ஒரு உதாரணத்திற்கு என் குடும்பத்தை வைத்து ஒன்றை இங்கு விளக்க விரும்புகிறேன்.

மு.செ.மு. என்ற பெயர் தாங்கிய என் குடும்பத்தில் ஆண்களும், பெண்களும் ஒவ்வொருவரும் தனித்தனி சிந்தனையும், கருத்துக்களும், கண்ணோட்டங்களும் உள்ளவர்களாக இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அதற்காக ஒத்த கருத்துள்ளவர்களை எல்லாம் ஒன்றிணைத்து மு.செ.மு.(வலது சாரி), மு.செ.மு.(இடது சாரி), மு.செ.மு. (மார்க்ஸிஸ்ட்), மறுமலர்ச்சி மு.செ.மு., இலட்சிய மு.செ.மு., முற்போக்கு மு.செ.மு., என்று தனித்தனி குழுக்களாக‌ பிரித்து மேய எவரேனும் முற்பட்டால் குடும்பத்தின் கதி என்னவாகும்? அப்படியே பிரிந்து போனால் நாளை நடக்க இருக்கும் ஒரு திருமணத்திற்கு அழைப்பிதழ் கொடுக்க வருபவரின் திண்டாட்டம் எப்படி இருக்கும்? இன்னும் சொல்லிமாளாத இன்னல்களை சந்திக்க நேரிடுமல்லவா? இதையெல்லாம் சிரிப்பதற்காக மட்டுமல்ல சிந்திப்பதற்காக மட்டுமே எழுதியுள்ளேன்.....நம்மை அல்லாஹ் பாதுகாப்பானாக....

எனவே எல்லோரும் இணைந்து கருத்து வேறுபாடுகள் எல்லாம் களைந்து நம்மூருக்காக ஒரு தரமான இணையதளத்தை உருவாக்கினால் இன்ஷா அல்லாஹ் அதன் முதல் கட்டுரை என்னுடையதாக இருக்க மிகுந்த ஆவல்...ஆமீன்...

மு.செ.மு. நெய்னா முஹம்மது.

a சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும்
அதிரைபிபிஸிக்கு மட்டும் ஏன் இந்த விளம்பரம், இந்த தளத்தை பத்தோடு பதினொன்றாகத்தான் என்ன முடிகிறது, இப்பொழுது ஊரோட செய்திக்காக மட்டும் சென்று சொல்லுவார்கள், பின்னர் ஓரிரு மாதங்கள் சரியாக போய் கொண்டிருக்கும், பின்னர் இவையும் பழைய குருடி கதவ தொரடி என்ற கதைத்தான்(மன்னிக்கவும் இதுவரை பார்த்த தளங்களை வைத்துத்தான் மேலேயுள்ள கருத்தை நான் சொல்ல முனைந்தேன்).

என்னுடைய கருத்து என்னவெனில் அதிரை எக்ஸ்பிரஸும், அதிரை நிருபரும் மிக சிறப்பாகத்தான் செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள், ஆகையால் ஒன்று சேர நினைத்தால் இந்த இரு தளத்தின் குழுவினர்களும் ஒத்து பேசி ஒரே தலைமையின் கீழ் கொண்டு வர முயற்சி செய்யவும், அதே நேரத்தில் இந்த இரு தளங்களும் அதே பெயரிலே செயல்பட்டு கொண்டு இந்த இரு தளங்களையும் வெவ்வேறு கேட்டகிரியாக பிரித்து கொள்ளுங்கள். உதாரனமாக, செய்திக்காக மட்டும் ஒரு தளமும், கதை,கட்டுரை,கவிதை மற்ற படைப்புக்காக ஒருத்தளத்தை பிரித்து கொண்டு ஒரே தலைமையின் கீழ் செயல் படலாம்.

Mansoor Amk

அதிரை-நிருபர்-குழு சொன்னது…

மின்னஞ்சல் வழி கருத்து
-----------------------------------
முகம்மது சொன்னது…

அதிரை-பிபிசி வலைத்தளத்தின் பங்களிப்பாளர் என்ற முறையில் சில விசயங்களை நான் இங்கு பதிவு செய்ய கடமைபட்டிருக்கிறேன்.

முதலில், இத்தனை நாட்களாக பல்வேறு தளங்கள் அதிரைக்கென்று இயங்குவதை நாம் அனைவரும் அறிவோம் அப்போதல்லாம் வாய் திறக்காத அதிரை எக்ஸ்பிரஸ் நிர்வாகிகள் இப்போது வந்து ஒற்றுமையை பற்றி போசும் மர்மம் என்ன?.

அதிரை எக்ஸ்பிரஸின் கடந்த கால சில கசப்பான அனுபவங்களை பற்றி பேச இதுவல்ல தருனம். ஊரில் இருக்கும் நாங்கள் எடுக்கும் சில ஆக்கபூர்வமான முடிவுகள் வெளிநாடுகளில் வசிக்கும் நம் சகோதர்களிடம் புரிய வைப்பது சிரமமான விசயம். நாங்கள் எடுக்கும் எந்த முடிவாக இருந்தாலும் ஊர் நலன் சார்ந்தே எல்லா முடிவுகளும் எடுக்கப்படுகிறது என்பதை எல்லோரும் புரிந்து கொள்ளவும்.

எங்களால் முடிந்தவரை ஊர் சார்ந்த நிகழ்வுகளை அறியத் தருகிறோம். யாரெல்லாம் நல்லது செய்தாலும் அதை பரட்டவும், தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டவும் செய்வோம்.

வஸ்ஸலாம்
முகம்மது

Adirai Nesan சொன்னது…

ஊரில் நடக்கும் செய்திகளை அங்கே உள்ளவர்களால் மட்டுமே சரியான செய்திகளாக உரிய முறையில் தர முடியும்.
அதனால் இப்படி ஒரு தளம் அவசியத்திலும் அவசியம். ஆனால் ஒருதலைபட்சமாக கொண்டு செல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

அதிரை-நிருபர்-குழு சொன்னது…

மின்னஞ்சல் வழி கருத்து
-----------------------------

அதிரைக்கார'ர்' சொன்னது...

//முதலில்,இத்தனை நாட்களாக பல்வேறு தளங்கள் அதிரைக்கென்று இயங்குவதை நாம் அனைவரும் அறிவோம் அப்போதல்லாம் வாய் திறக்காத அதிரை எக்ஸ்பிரஸ் நிர்வாகிகள் இப்போது வந்து ஒற்றுமையை பற்றி போசும் மர்மம் என்ன?. //

சகோ,முஹம்மத்,

உடைப்பெடுத்துள்ள ஆற்றுக்கரையில் ஏன் மேலும் உடைக்கிறாய்? என்று கேட்டால் ஏற்கனவே உடைந்துள்ளதை ஏன் கேட்கவில்லை என்பது போலுள்ளது உங்கள் கேள்வி! ஏற்கனவே இணையத்தில் பிளவுபட்டுள்ள நம்மிடம், மேலும் புதிய பிளவுகளும், பிரிவுகளும் வேண்டாமே என்பதில் முந்தைய பிளவுகளையும் சீராக்கும் அக்கரையை புரிந்து கொள்ளமுடியவில்லையா?

வேலியை பிரித்துக்கொண்டு தனிக்குடித்தனம் சென்றபோது, முழு வீட்டையும் எடுத்துக்கொண்டு தொடர்ந்து செயல்படுங்கள் என்று அதிரை எக்ஸ்ப்ரஸ் நிர்வாகிகளுள் ஒருவனான நான் வாய் திறந்தேனே! அதைமறைத்து மறுநாள் புதியதளம் கண்ட மர்மம் என்ன? என்பதை நீங்கள்தான் விளக்க வேண்டும். ஏனெனில் அதிரை நிருபர் பிரிந்ததற்காகவது தவறான தகவலின் அடிப்படையிலான முடிவு காரணமாக இருந்தது. ஆனால் நீங்கள் பிரிந்து தனிக்குடித்தனம் போனதற்கு எந்தக்காரணமும் இல்லையே!

உங்களால் நீக்கப்பட்ட தாஜுதீன், அதிரை புதியவன் உள்ளிட்ட சகோதரர்களையும் இணைத்துக்கொண்டு அதிரை எக்ஸ்ப்ரஸை தொடர்ந்து நடத்துங்கள். தேவையெனில் அதிரையின் முதல் இணையதளமான அதிரை.காமில்கூட இதைச் செயல்படுத்தலாம் என்று நான் வாய்திறந்தபோது, உங்கள் வாய் மெளனமாக இருந்ததன் மர்மம்தான் என்ன?

தற்போது ஒன்றும் குடிமுழுகிப் போய்விடவில்லை. www. adirai.com ஐ முன்னிலைப்படுத்தி நமதூரின் அனைத்து தளங்களையும் ஒரே குடையின்கீழ் கொண்டுவர நான் தயார்.அனைத்து அதிரை வலைத்தளங்களையும் இதனுள் கொண்டுவந்து ஒரே தளமாக இயங்குவதற்கு உங்கள் பிரிவினை தளங்களை விடத்தயாரா என்று தயவுசெய்து அனைத்து அதிரை வலைத்தள நடத்துனர்களும் வாய்திறப்பார்களா?

அதிரை-நிருபர்-குழு சொன்னது…

மின்னச்சல் வழி கருத்து
---------------------------

அதிரைக்கார'ர்' சொன்னது...

//சகோதரர் அதிரைகாரன், அதிரைநிருபர் குழுவில் பங்களிப்பாளராக யாருக்கும் எந்த தடையுமில்லை. யார் வேண்டுமாலும் இணையளாம்.//

அதிரை நிருபர் குழு அமீருக்குக் கட்டுப்பட்டு செயல்படுத்துவதாகச் சொன்னீர்கள் என்பதாலேயே நானும் அந்தக் 'குழு'வில் உறுப்பினராக (பங்களிப்பாளராக அல்ல) சேரமுடியுமா? என்று கேட்டேன். ஆனால் உங்கள் பதிலில் பங்களிப்பாளராகச் சேர்வதற்கான வழிமுறை சொல்லப்பட்டுள்ளது. பங்களிப்பாளர்கள் எல்லோருமே குழுவில் உள்ளவர்கள் எனில், என் பெயரையும் குழுவில் இணைக்கலாமே? இதில் ஏதும் தயக்கம் இருந்தால் சொல்லவும்.
--------------------------------------------

அதிரைநிருபர்-குழு தனி மின்னஞ்சலில் பதில் சொன்னது...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

அன்புச் சகோதரர் அதிரைக்கார'ர்' அவர்களுக்கு:

தங்களின் ஆர்வமும் நல்லெண்ணமும் நன்மையை நாடியே அல்ஹம்துல்லாஹ் !

அதிரைநிருபர் குழுவிலிருக்கும் உறுப்பினர்ளைப் பொறுத்த மட்டில் தற்போதைக்கு எவ்வித மாற்றமும் இல்லை இருப்பவர்களைக் கொண்டே செயல்பட்டு வருகிறது, அப்படியொரு சூழல் உறுப்பினர்களின் எண்ணிகையை அதிகரிக்கும் பட்சத்தில் தங்களின் வேண்டுகோலை நிச்சயம் பரிசீலிக்கப்படும் இன்ஷா அல்லாஹ்.

தங்களின் வழக்கமான பங்களிப்பை தந்திடுங்கள், உங்களின் ஆக்கபூர்வமான கருத்துக்களை தொடர்ந்து வரவேற்கிறோம்.

என்றும் அன்புடன்

நெறியாளர்
www.adirainirubar.in
editor@adirainirubar.in

meerashah சொன்னது…

//அதிரைக்கார'ர்' சொன்னது...

உடைப்பெடுத்துள்ள ஆற்றுக்கரையில் ஏன் மேலும் உடைக்கிறாய்? என்று கேட்டால் ஏற்கனவே உடைந்துள்ளதை ஏன் கேட்கவில்லை என்பது போலுள்ளது உங்கள் கேள்வி! //


சரியான கேள்வி.

//நானும் அந்தக் 'குழு'வில் உறுப்பினராக (பங்களிப்பாளராக அல்ல) சேரமுடியுமா? என்று கேட்டேன். ஆனால் உங்கள் பதிலில் பங்களிப்பாளராகச் சேர்வதற்கான வழிமுறை சொல்லப்பட்டுள்ளது.//

யாம் அறிந்து, உறுப்பினராக இல்லாமல் வெறும் பங்களிப்பாளராக இருந்தால்கூட நமதூர் அதிரை எக்ஸ்,நிருபர் போன்றவற்றின் வலை நிர்வாகிகள் நம் கருத்தை/புதிய எண்ணங்களை தனிப்பட்ட முறையில் மின்னஞ்சல் வழியோ,பின்னூட்டம் வழியோ அனுப்பினால் நிவர்த்தி செய்துகொண்டுதான் வருகிறார்கள்.. என்னைபோருத்துதவரை நாம் உறுப்பினராக இல்லாவிட்டாலும் நம் சிந்தனைகளுக்கு செவி சாய்தாலே போதும்.. அ(இ)துவரை எனக்கு தெரிந்து இதில் பிரச்சினை இல்லை.. மற்றபடி வழக்கம்போல் அதிரை சம்பத்தப்பட்ட நூறு செய்திகள்/பத்து நிமிடத்திற்கு ஒரு செய்தி யாரால் கொடுக்கமுடிந்தாலும் நமதூர் தளங்களுக்கு அனுப்பி வைத்தால் பதியத்தான் போகிறார்கள்..சர்சைக்குரியத்தை தவிர..

AX&AN am i rt?

அதிரை-நிருபர்-குழு சொன்னது…

மின்னஞ்சல் வழிக் கருத்து
--------------------------------

Mohamed Abubucker சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும்.

அன்பிற்குரிய சகோதரர்களே!

உங்களின்.கருத்து பரிமாற்றம் என்னும் துரு பிடித்த ஆயுதத்தைக் கொண்டு யுத்தம் நடத்தி மேலும் பிரிவினையை ஏற்படுத்துவது போல் இருக்கிறதே?

வேண்டாம் அனைத்து தளங்களையும் ஒரே குடையின் கீழ் செயல்பட நல்லக் கருத்துக்களை மட்டும் பரிமாற்றம் செய்யுங்கள் நீங்கள் வலைத்தளத்தில் பதிவு செய்வதை மலக்குமார்கள் உங்களுடைய அஃமால் நாமா என்ற பட்டோலையில் பதிவு செய்கிறார்கள்.

Mohamed Abubucker

அதிரை எக்ஸ்பிரஸ் சொன்னது…

//முகம்மது சொன்னது…

முதலில், இத்தனை நாட்களாக பல்வேறு தளங்கள் அதிரைக்கென்று இயங்குவதை நாம் அனைவரும் அறிவோம் அப்போதல்லாம் வாய் திறக்காத அதிரை எக்ஸ்பிரஸ் நிர்வாகிகள் இப்போது வந்து ஒற்றுமையை பற்றி போசும் மர்மம் என்ன?. //

சகோ. முஹம்மது,

அஸ்ஸலாமு அலைக்கும்.

இந்தப் பதிவில் ஒற்றுமைக்கான விதையைத் தூவியவர் தம்பி மீராஷா. மீராஷாவுக்குப் பதில் அளித்த சகோ. அபு இபுறாஹீம், ஒத்த கருத்துக்கு அதிரை வலைப்பதிவின் நிர்வாகிகள் வருவார்களா என்று ஒட்டுமொத்த வலைப்பதிவு நிர்வாகிகளின் மீதும் சந்தேகத்தை எழுப்பி இருந்தார்கள். இந்த சந்தேகத்தைப் போக்கும் வண்ணம் அதிரை எக்ஸ்பிரஸ் ஒத்த கருத்துக்குத் தயாராகவே உள்ளது. தேவை எனில், அதிரை எக்ஸ்பிரஸைக் கலைக்கவும் தயார் என்று கூறினோம்.

இங்கு ஒற்றுமை பற்றிய பேச்சை முதலில் அதிரை எக்ஸ்பிரஸ் தொடங்கவில்லை. ஆனாலும் எக்ஸ்பிரஸ் குழுமம் அதற்குத் தயார் என்பதுதான் எங்கள் நிலை.

இதற்கு முன் அதிரை எக்ஸ்பிரஸ் ஒற்றுமையைப் பற்றி ஏன் பேசவில்லை என்பதற்கு, அப்போது நிர்வாகிகளாக இருந்த நீங்கள் உள்ளிட்டவர்கள்தான் பதில் அளிக்க வேண்டும். பழைய நிலைமைக்குப் புதிய நிர்வாகம் பொறுப்பல்ல.

மர்மம் என்ன என்று கேட்கப்பட்டதால்தான் இந்த விளக்கம். வம்பு வளர்க்க அல்ல.

அதிரைக்காரன் சொன்னது…

//அதிரைநிருபர் குழுவிலிருக்கும் உறுப்பினர்ளைப் பொறுத்த மட்டில் தற்போதைக்கு எவ்வித மாற்றமும் இல்லை இருப்பவர்களைக் கொண்டே செயல்பட்டு வருகிறது, அப்படியொரு சூழல் உறுப்பினர்களின் எண்ணிகையை அதிகரிக்கும் பட்சத்தில் தங்களின் வேண்டுகோலை நிச்சயம் பரிசீலிக்கப்படும் அல்லாஹ்.//

'குழு' என்கிறீர்கள்,ஆனால் குறிப்பிட்ட சிலர் மட்டும்தான் என்று உங்கள் குழுவுக்கான வரம்பையும் வகுக்கிறீர்கள்.இதெல்லாம் 'குழு'வின் முடிவா? அமீரின் கட்டுப்பாட்டில் இயங்குவதாகச் சொன்னீர்கள். ஆனால் மடலிட்ட சிலநிமிடங்களிலேயே 'குழு'வின் பதிலாக வைக்கிறீர்கள்.உண்மையிலேயே இதுவும் குழுவின் முடிவுதானா? அல்லது 'குழு' என்ற பெயரில் பதில் அளித்தவரின் முடிவா? குழுவின் முடிவு எனில் ஒற்றுமைக்காக கரம் நீட்டும் ஒருவனிடம் தேவைப்பட்டால் பின்னர் பரிசீலிக்கலாம் என்று சொல்லிய உங்கள் குழுவின் அமீர் யாரென அறிந்து கொண்டால்,குழுவில் ஒரு சகோதரன் இணைவதால் என்ன நஷ்டம் என்று கேட்க வேண்டும்.

"அதிரை எக்ஸ்ப்ரஸும் 40+ வலைப்பூக்களும்" என்று தன்னிலை விளக்க மடல் அனுப்பினேன். 'குழு' பரிச்சிலித்து பதிவேற்ற ஒப்புதல் வழங்குமா?

அன்புடன்,

JAFAR சொன்னது…

அதிரை எக்ஸ்பிரஸின் தற்போதைய அறிவிப்புபோல்,அதிரை நிருபரின் அமீர் யார்? என்பதையம் தெரிவித்தால் நன்றாக இருக்கும் இதன் குழுவினர் தவிர சைலன்ட் வாசகர்கள் சிலருக்கு இது ஒரு அறிவிப்பாககூட இருக்கலாம்

மர்மயோகி சொன்னது…

விமர்சனங்களை தாங்கிக்கொள்ளும் மனோபாவம், அதையும் வெளியிட்டு தகுந்த பதில்தரும் தைரியம் உள்ளவர்கள் வழட்டித்தளம் அமைத்தால்தான் அது சிறந்ததாக அமையும்
அதிரை எக்ஸ்பிரஸ் பின்னூட்டம் போடுவதற்கே ஏகப்பட்ட கண்டிசன்கள்
அதிரை நிருபரோ..கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக்கொண்டு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்..யாராவது விமர்சனம் செய்தால் அதை நீக்கிவிடுவதர்க்கு...
ஜால்ரா சத்தம் மட்டுமே கேட்டுக்கொண்டிருந்தாள் நன்றாகவா இருக்கும்?

மர்மயோகி சொன்னது…

தற்புகழ்ச்சி, வீண்பெருமை, ஜால்ராவுக்கு ஜால்ரா...இதுதான் இவ்வளைதலங்களின் ஒரே நோக்கம்..ஊர் நன்மை என்று எதுவும் கிடையாது

அபூ சுஹைமா சொன்னது…

அன்புள்ள அதிரைச் சகோதரர்களே,

தயவு செய்து தங்கள் கருத்துகளை நிதானமாக எழுதுங்கள். ஒன்றுபடுதல் சாத்தியம் இல்லை என்றாலும் ஒருங்கிணைந்து செயல்படுதலேனும் சாத்தியப்படக் கூடும். இதைவிடுத்து காரசாரமாகப் பேசுவதால் இருக்கும் இடைவெளி அதிகரித்துவிடக் கூடும். ஷைத்தான் இடையில் புகுந்துவிட வாய்ப்பளிக்க வேண்டாம்.

அபுஇபுறாஹீம் சொன்னது…

அன்பின் சகோதரர்களே:

வலைத்தள அறிமுகம் பல (அறி)முகங்களை காண நேர்ந்ததில் நன்மையே !

வழக்கமாக பதிவு இடுவதும், அதனை விமர்சிப்பதும், அதனைத் தொடர்ந்து கருத்துக்கள் அங்குமிங்கும் வருவதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.

தம்பி அபு சுஹைமாவின் கருத்தினையே நானும் சொல்கிறேன்..

//தயவு செய்து தங்கள் கருத்துகளை நிதானமாக எழுதுங்கள். ஒன்றுபடுதல் சாத்தியம் இல்லை என்றாலும் ஒருங்கிணைந்து செயல்படுதலேனும் சாத்தியப்படக் கூடும். இதைவிடுத்து காரசாரமாகப் பேசுவதால் இருக்கும் இடைவெளி அதிகரித்துவிடக் கூடும். ஷைத்தான் இடையில் புகுந்துவிட வாய்ப்பளிக்க வேண்டாம். //

Aboobakkar, Can. சொன்னது…

Dear Adirai bbc Thanks for creating net page for our society we need your service for us without any expectations.

Aboobakkar, Can. சொன்னது…

Dear Brother Abushohaima,we need your service with Adirai bbc more and more..........to developing the media????????

VAPPU MARAIKAR சொன்னது…

மாஷா அல்லாஹ்.. ஒன்று சேர்வதில் அநேகருக்கு ஒற்ற கருத்து இருப்பது பெருமையாக இருக்கின்றது.

இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்...

பின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்
அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு

Google+

g+