Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

ஒன்றுபட்டால்… உண்டு! 52

அதிரைநிருபர் பதிப்பகம் | June 28, 2011 | , ,

ஒற்றுமை யென்றொரு கயிறு
ஒற்றையாய்ப் பிடிப்பது தவறு
கற்றவர் கல்லாதோர் முயன்று
மற்றவர் இணைந்தால் உயர்வு

பள்ளியில் படித்தது பிஞ்சில்
பசுமையாய்ப் பதிந்தது நெஞ்சில்
ஒண்ணா யிருக்கக் கற்க வேண்டும்
உண்மையைச் சொன்னால் ஏற்க வேண்டும்

பசுக்களின் சாந்தத் தன்மைகூட
மந்தையில் கலந்தால் புலியையே விரட்டும்
தனிப்பட்டுப் போன பசுவை மட்டும்
துணிந்து தாக்கும் குட்டிப் புலியும்

இலகுவாய் உடைபடும் குச்சிகூட
இறுக்கிய கட்டுக்குள் கடினம் கூடும்
ஒடிக்க முயலும் கைகள் தோற்கும்
ஒற்றுமைப் பாடம் வியந்து கற்கும்

ஒரு இறை வணங்கும் ஒரே கொள்கை
பலமுறை சிதைந்து பரிகசிக்குது
இயக்க போதையின் மயக்க நிலையில்
இறந்து போகுமோ சகோதரத்துவம்

தந்தையும் தனையனும் தமக்குள் பகை
தமையனுக்கு தமக்கை திடீர் எதிரி
நண்பனை வெறுத்தல் நவீன நியாயம்
என மாற்றிய போதனை ஒழிக

வாழ்க்கையில் ஒற்றுமை வணக்கத்தில் ஒற்றுமை
வயிற்றுப் பசிக்கும் சேர்ந்துண்ணும் ஒற்றுமை
வாய்த்த செல்வத்தை பகிரும் ஒற்றுமை
வழிகேட்டில் சிக்கி வதைபடுது ஒற்றுமை

வேலியே பயிரை மேய்கிறதிங்கு
வேல்கம்பு வெளி நின்று ரசிக்குதின்று
மதிகெட்ட மாந்தரின் மடைமை கண்டு
விதிகூட கைகொட்டிச் சிரிக்குதந்தோ

ஓரணியில் ஒருகுரலில் ஓங்கியபோதெல்லாம்
ஒன்றுமே உலகம் அறியத் தரவில்லை
சின்னச் சண்டையும் சிற்சில வேற்றுமையும்
சின்னத் திரைகளில் சிரிப்பாய் சிரிக்குதின்று

தலைவர்கள் நம்மை நினைக்க வேண்டும்
தலைக்கணம் தனை துறக்க வேண்டும்
தற்பெருமை என்பதொரு வியாதி யென
தன்னலம் மறந்து சிறக்க வேண்டும்

இம்மையில் மட்டுமல்ல இழிவு
மருமையிலும் தொடரும் துன்பம்
தொன்று தொட்டு கண்ட கனவை
ஒன்று பட்டு வெல்வோம் வாழ்வில்

- சபீர்

PLEASE VISIT OUR NEW WEBSITE https://adirainirubar.in/ 

52 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

தருனமும் தடமும் அறிந்து தளம் கண்டு சித்தரிக்கிறது !

ஒன்றுபட்டால்... உண்டு !

கவிக்காவின் உணர்வுகளை உசுப்பும் உயிருட்டிய வரிகள்...

//பசுக்களின் சாந்தத் தன்மைகூட
மந்தையில் கலந்தால் புலியையே விரட்டும்
தனிப்பட்டுப் போன பசுவை மட்டும்
துணிந்து தாக்கும் குட்டிப் புலியும்//

எத்தனை வரிகள் எழுதினாலும் எத்திடும் நேசங்களுக்குக்குத்தான் ஒற்றுமையின் வலிமையும் தெரியும் அதில்லையேல் அதன் வலியும் தெரியும்....

//தலைக்கணம் தனை துறக்க வேண்டும்
தற்பெருமை என்பதொரு வியாதி யென
தன்னலம் மறந்து சிறக்க வேண்டும்//

நச்சென்று தலை(கணம்)மேல் குட்டியது போன்ற உணர்வு !

அதிரை முஜீப் said...

சகோதரர் சபீர் அவர்களின் பல கவிதைகளை நான் வாசித்துள்ளேன். அந்த கவிதைகளில் சில எனக்கு, என்னுள் தாக்கத்தை ஏற்படுத்தியதுண்டு!. ஆனால் இந்த கவிதை மட்டும் என் சிந்தையில் ஊக்கத்தை ஏற்படுத்தியது.

இந்த கவிதையில் ஓரு சில வரிகளை மட்டும் இங்கே உதாரணத்திற்கு எடுத்து சுட்டிக்காட்டலாம் என்று பல முறை முயன்று அதில் நான் தோல்வியே கண்டேன். அவ்வாறு சுட்டிக்காட்டலாம் என்றால் முழு கவிதையையும் காப்பி பேஸ்ட்தான் செய்ய வேண்டும். அத்தனையும் முத்தான வரிகள்.

ஆனால் புரிந்து கொள்பவர்கள் தான் புரிந்து கொள்ள வேண்டும். வீணாய் பிடிவாதம் பிடிக்கும் இந்த பிரிவினை கூட்டம், பிடிவாதத்தை தளர்த்தி விட்டால், பின் எதை வைத்து இயக்கம் நடத்த முடியும் என்ற காரணமாய் கூட இருக்கலாம்.

Meerashah Rafia said...

நச்

இலகுவாய் உடைபடும் குச்சிகூட
இறுக்கிய கட்டுக்குள் கடினம் கூடும்
ஒடிக்க முயலும் கைகள் தோற்கும்
ஒற்றுமைப் பாடம் வியந்து கற்கும்

sabeer.abushahruk said...

ஆனந்த விகடன், குமுதம், குங்குமம், கல்கண்டு, கல்கி, ராணி, மாலைமதி, தினத்தந்தி, தினமலர், தினமணி, மாலை முரசு, தினகரண், இன்டியன் எக்ஸ்ப்ரஸ், தி ஹின்டு, இன்டியா டுடே, பேசும்படம், போன்ற ஊடகங்கள் தனித்து செயல் படுவதால் தமிழ்நாட்டின் ஒற்றுமை குழைந்துவிட்டதா அல்லது போட்டி போட்டுக்கொண்டு தகவல் தருவதிலும், ஒரு சார்பாக செயல்படுவதை மக்களுக்கு காட்டிக்கொடுப்பதிலும் பிரயோஜனமாகப் பணி செய்கின்றனவா?

இயக்கங்கள்தானே பிரிவினை எனும் தொற்றுநோய்க் கிருமி, ஊடகங்களல்லவே?

சொல்லுங்கள் சகோதரர்களே, 'வலைப்பூக்கள் இயக்கங்களா ஊடகங்களா? யோசியுங்கள்.

எனக்குத் தெரிந்து யாரும் எதையும் மூடவேண்டியதில்லை. ஆனால், எல்லா அதிரைக்காரர்களும் அதிரையின் எல்லா வலைப்பூக்களிலும் பங்களிக்க வேண்டும். 

காட்டாக, அதிரைக்காரன் எங்கிற எனக்குப் பிடித்த நல்ல எழுத்தாளர் அதிரை நிருபரிலும் பதியனும். அபு இபுறாஹின் எனும் ஊக்க சக்தி அதிரை எக்ஸ்ப்ரஸ்ஸிலும் கருத்துப் பதியனும். இ

இதற்குப்பெயர்தான் ஊடக ஒற்றுமை. 

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//அபு இபுறாஹின் எனும் ஊக்க சக்தி அதிரை எக்ஸ்ப்ரஸ்ஸிலும் கருத்துப் பதியனும்//

இதென்னா நான் என்னமோ மேடைபோட்டு மைக்செட்டு கட்டி வேஷ்டியை தலையில கட்டிகிட்டு பிரியா விடை கொடுத்தனுப்பிய தலைவர் ரேஞ்சுக்கு பில்டப்ப்ப்பூவை வைக்கிறீங்க காதுல !

கவிக் காக்கா நேற்றுதான் SUNடே, உங்களின் கவிதைக்கு ரசிகன், வாசகன் ஒற்றுமையின் மேல் பற்றுமை கொண்டவன் அவ்வ்வ்வ்வ்வ்ளவே....

ஒன்றுபட்டால்... உண்டு (என்றுமே N.நேசம்)

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

கவியில் ஒற்றுமை...... முதல் வாழ்வில் வரை அத்தனை வரியும் வீரியம்

பின்னூட்டத்தில் ஆனந்த...முதல் ஒற்றுமை வரை முழுக்க உடன்படுகிறேன்

ஆக அதுவும் இதுவும் அருமை

Meerashah Rafia said...

சபீர் காக்கா..

உங்கள் கூற்றும் சரியே..
ஆனால் நீங்கள் கூறிய
1) "ஆனந்த விகடன், குமுதம், குங்குமம், கல்கண்டு,.." அனைத்தும் சமூக அக்கறை, சமூக சீர்திருத்தம், கல்வி விழிப்புணர்வு, நாலு பேர் அதை பார்த்து படித்து உருப்பட வேண்டும் போன்ற நாட்டத்தை காட்டிலும் கமர்சியல் கழியாட்டம்தான் அதிகம்.. ஆனால் நம் தளங்கள் அப்படியில்லையே.உலகில் எந்தமூலையில் இருந்தாலும் பணத்தை எதிர்பாராது நல்ல மனங்களை எதிர்பார்த்துதானே செயல்படுகிறது!!..

2)மொத்தம் ஆறு கோடி மக்களுக்கு தமிழ்நாட்டில் நீங்கள் 16 பத்திரிக்கைகளை குறிப்பிட்டிருக்கின்றீர்கள். மேலும் ஒரு 16 சேர்த்து 32 ஆக வைத்துக்கொள்ளுங்கள்.ஆனால் லட்சத்தை தொடாத நமதூர் மக்களுக்கு மட்டும் நாற்பத்தி மூன்று வலை பத்திரிகைகள்.

3)பல புத்தகங்கள் இருந்தும் ஒற்றுமை சீற்குழையவில்லைதான்.. நமதூர் தளங்களிலும் வேற்றுமை என்னவென்று எமக்கு தெரியாது..ஆனால் வெவ்வேறு செய்திகள் வெவ்வேறு தளங்களில் இருப்பதால் நாற்பத்தி மூன்று தளங்களையும் தேடிப்பார்துதான் படிக்கனுமா என்று நினைத்து எம்மைப்போன்ற வாசகர்களுக்கு தலைசுற்றுதான்.

4) அருமையான மினி மீல்ஸ் இலவசமாக கிடைகின்றது..ஆனால் சாம்பார் சாதம் வியாசர்பாடியிலும், தயிர் சாதம் மைலாபூரிலும், புளிச்சோறு அண்ணா நகரிலும், ஊறுகாய் புரசைவாக்கத்திலும் கிடைகின்றது.. உங்கள் பா(ய)சம் (ஒன்றுபட்டால்... உண்டு )கூட மீதி இருக்கும் நாற்பத்தி இரண்டு வகையரின் மனதில் ஊற்றப்படவும் இல்லை, காட்டப்படவும் இல்லையே.. ஒரு தளத்தை ஐந்து பேர் பார்கிறார்கள் என்றால் 40x5=200 மக்களுக்கு உங்கள் நல்லெண்ண கவி ஆக்கம் தாக்கவில்லையே என்ற கவலை எனக்கிருக்கின்றது காக்கா..!!

5)"தென்னிந்தியருடனான இலங்கை முஸ்லிம்களின் உறவு!" என்ற தலைப்பில் வந்த கட்டுரை எந்த தளத்தில் பதியப்பட்டது கண்டுபிடித்து கொடுப்போருக்கு பரிசு காத்திருக்கின்றது என்று கூறுமளவு நல்ல விசயங்கள் சிதரிக்கிடப்பதால் தேடவேண்டி உள்ளது ..

6)ஒவ்வொரு ஊரிற்கும் ஒரு பிரசத்திபெற்ற தளம் உண்டு..
உதாரணம் :
http://lalpet.com/
http://nidur.info/
http://niduronline.com/
http://rajaghiri-online.blogspot.com/
http://muthupet.org/
http://ilayangudikural.blogspot.com/

அதில் அந்தந்த ஊர் நடப்புகள்,விபரங்கள் தெரிந்துகொள்ளலாம்.. அப்படியொரு தளம் நமதூருக்கு எத்தளம் என்று நாங்கள் சொல்வது?அழகிய தொகுப்புகள் உடைய ஒருசில தளங்கள் இணைந்தால் நமதூரை யாரும் மிஞ்சமுடியாது என்று மார்தட்டிகொள்ளலாமே என்ற ஒரு நப்பாசை..

6)ஒருசில நேரம் எனக்குள் ஒரு சங்கடமான சூழ்நிலை ஏற்படுகிறது, எந்தமாதிரி என்றால் "என்னிடம் ஒரு ரூபாய் நாணயம் இருக்கின்றது, நாலு பேருக்கு கொடுக்க நினைகின்றோம், ஆனால் ஒரு பேருக்குதான் போய் கொடுத்தாகவேண்டும் என்ற சூழ்நிலை..அப்படியானால் மீதமிருக்கும் மூன்றுபேர் எங்களை பகையோடு நினைகமாடார்கள் என்று என்ன நிச்சயம் என்று யோசிக்க வைக்கின்றது ...


எது எப்புடியோ எங்கள் ஏக்கங்களை சொல்லிவிட்டோம் அவ்வளவுதான். ஒரு சேர இயலாத உண்மை நிலை அல்லாஹ்விற்கும் அந்த சங்கட்ட சூழ்நிலையை அனுபவித்தவர்களுக்கும்,அவரவர் கஷ்டம் அவரவருக்கு மட்டுமே வெளிச்சம்..ஆதலால் இவற்ற்றை ஒரு குறையாகவோ, புரம்மாகவோ எடுத்துக்கொள்ள வேண்டாம். முடிந்தால் முயற்சிப்போம், இல்லாவிடில் என்றும்போல் நம் வாழ்கையை நட்புடன் தொடர்வோம்..ஜஜாகல்லாஹ் ஹைர்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

மகன் மீராசா சொன்னதில்,
//லட்சத்தை தொடாத நமதூர் மக்களுக்கு மட்டும் நாற்பத்தி மூன்று வலை பத்திரிகைகள்.//
கணினி அறிஞர் "உமர்தம்பி" அவர்கள் தமிழ் உலகுக்கே தந்த புண்னியம் தான் இந்த அதிரையின் வலை வளர்ச்சிக்கு வித்தாக எடுத்துக்கொள்லலாமே!

ZAKIR HUSSAIN said...

ஒற்றுமை என்பது மத / இனங்களுக்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டும், அப்போதுதான் ஊர் உறுப்படும்.

ZAKIR HUSSAIN said...

To Sabeer,

எப்படி இவ்வளவு பிசியிலும் இப்படி எழுதுறே?

கவிதையை பிரிச்சு மேய நான் கிரவுன் இல்லாததால் உனக்கு பாராட்டுக்கள். காரணம் நமது ஊரின் ஒற்றுமை இப்போது I.C.U வில் இருக்கிறது. எனக்கு தெரிந்து காப்பாற்ற தகுதியானவர்கள் வலைப்பூ வைத்திருக்கும் நமது இளைய சமுதாயம்தான்.

வலைப்பூ வைத்திருப்பவர்கள் இதுவரை உலக அளவில் அரசாங்கத்தையே மாற்றி அமைத்திருக்கிறார்கள்.


DO NOT UNDER ESTIMATE THE ABILITY OF BLOGGERS.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//மகன் மீராசா சொன்னதில்,
//லட்சத்தை தொடாத நமதூர் மக்களுக்கு மட்டும் நாற்பத்தி மூன்று வலை பத்திரிகைகள்.//
கணினி அறிஞர் "உமர்தம்பி" அவர்கள் தமிழ் உலகுக்கே தந்த புண்னியம் தான் இந்த அதிரையின் வலை வளர்ச்சிக்கு வித்தாக எடுத்துக்கொள்லலாமே!///

தம்பி MHJ: அதன் தாக்கமும் ஒரு முழுக் காரணம் அதிரை வலைப்பூக்களின் வளர்ச்சிக்கும் எண்ணிக்கைக்கும் பங்களிப்பாளார்களின் தன்னார்வமும் அதிகம் இருப்பதே.

எல்லாத்தையும் ஒரே இடத்தில் பார்க்கத்தான் http://adiraimanam.blogspot.com என்ற தளமும் இருக்கத்தானே செய்கிறது !

aa said...

@Meerasah நீங்கள் தேடும் ஆக்கம் இங்கு ஊள்ளது. http://adiraihistory.blogspot.com/2011/05/blog-post.html பரிசு என்ன? எப்போது? :)

அதிரைநிருபர் பதிப்பகம் said...

மின்னஞ்சலில் வந்த கருத்து
----------------------------

அஸ்ஸலாமு அலைக்கும்.

சகோ. சபீர் அவர்களின் நச்சென்று நாளு வரிகள் அற்புதம்......

/=
ஒரு இறை வணங்கும் ஒரே கொள்கை
பலமுறை சிதைந்து பரிகசிக்குது
இயக்க போதையின் மயக்க நிலையில்
இறந்து போகுமோ சகோதரத்துவம் /=@@@@

சிந்திக்கட்டும் இயக்க வாதிகள் ,உணரட்டும் உண்மையிலே! ஓன்று படட்டும் இவ்வுலகிலே, ஒற்றுமை என்பது நிச்சயமே..........

Mohamed Abubucker

அப்துல்மாலிக் said...

சகோ சபீர், ஒற்றுமையை வழியுறுத்து அருமையான வரிகள்.. கூர்ந்து கவனித்தால் நிறைய கருத்துக்கள் இருக்கு, எவ்வளவோ எழுதியாச்சு, படிச்சாசு இந்த ஒற்றுமை பற்ரி ஆனால் இதெல்லாம் படிக்கமட்டுமே நல்லாயிருக்கு என்பது நினைத்து வருத்தமே.

சகோ. மீராசா கூறுவது போல் பல தளங்களை தேடிப்பிடித்து படிக்கவேண்டும் என்பதே ஒரு போர் அடிக்க கூடிய விடயமாக இருக்கு. தாங்கள் குறிப்பிட்ட அந்த 43 வலைதளங்களையும் ஒரேயிடத்தில் சேர ஒரு தளமைத்து அதமூலம் விரிவான செய்தி படிக்க அந்த குறிப்பிட்ட தளம் செல்ல ஏதுவாக இருந்தால் நலம்.

ஒரே வலைப்பூவில் எல்லா தளத்தோட தினமும் அப்டேட் செய்யப்பட்ட செய்திகள், இது படிக்கவும் இலகுவாக இருக்கும்.

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) வேலைப்பளுவுக்கு இடையில் ஒற்றுமையை வலியுறுத்தி உணர்வுபூர்வமாக அழகாக சொல்லியிருக்கிறாய்! ((( ஆனால் )))

ஒற்றுமை ஒற்றுமை ஒற்றுமையை தேடுகிறேன்!
தாய் தந்தை பிள்ளைக்கு இடையில் காணவில்லை!
அண்ணன் தம்பிக்கு இடையில் காணவில்லை!
அக்கா தங்கைக்கு இடையில் காணவில்லை!
சொந்தக்களுக்கு இடையில் காணவில்லை!
ஒரே தெருவில் பக்கத்து வீட்டிற்கு இடையில் காணவில்லை!
ஒரே ஊரில் தெருவுக்கு தெரு எல்லையில் காணவில்லை!
இயக்கங்களுக்கு இடையில் காணவில்லை!
ஒரே ரூமில் பல ஊரைச் சேர்ந்தவர்கள் இடையில் காணவில்லை!
எல்லைக்கோட்டிற்கு அருகாமையில் இருக்கும் நாட்டிற்கும் இடையிலும் காணவில்லை!

குடும்பம், தெரு, ஊர், சமுதாயம் என்று எல்லாவற்றிலும் ஒற்றுமையை காணும் எந்நாளோ அந்நாளே சிறந்த நாள்!

************************************************************************
அல்லாஹ்வின் கயிற்றை அனைவரும் சேர்ந்து பிடித்துக்கொள்ளுங்கள்! பிரிந்து விடாதீர்கள்! நீங்கள் பகைவர்களாக இருந்த நிலையில் அல்லாஹ் உங்களுக்குச் செய்த அருளை எண்ணிப்பாருங்கள்! அவன் உங்கள் உள்ளங்களுக்கிடையே இணைப்பை ஏற்படுத்தினான். எனவே அவனது அருளால் சகோதரர்களாகி விட்டீர்கள்! நரகத்தின் விளிம்பில் இருந்தீர்கள். அதிலிருந்து உங்களைக் காப்பாற்றினான். நீங்கள் நேர் வழி பெறுவதற்காக தனது சான்றுகளை அல்லாஹ் தெளிவு படுத்துகிறான். (அல்குர்ஆன் : 3:103)
************************************************************************

சபீர் வாழ்த்துக்கள்!

அதிரைநிருபர் பதிப்பகம் said...

sabeer.abushahruk சொன்னது…

மதிப்பிற்குரிய தம்பி மீராஷா,

நல்லெண்ணம், அதைச் சாதிக்கத் துடிக்கும் ஆர்வம், மூத்தவனுடன் விவதிக்கிறோமே என்கிற உணர்வோடான சொல்லாடல்களென கவர்கிறீர்கள். பெருமையாக இருக்கிறது எங்களூரின் எதிர்காலம் நினைந்து, உங்களைப் பார்த்த பிறகு!

வாழ்க...வளர்க!

சரி, நம் விவாதத்துக்கு வருவோம்.


உங்களின் உதாரணங்களெல்லம் மிக சுவாரஸ்யமானவை தம்பி. ஆயினும், உங்கள் வாதத்தில் தொழில் நுட்ப ரீதியான திட்டமிடலும் இளமைத் துடிப்புடனான தீர்வுகளும் விஞ்சி நிற்கின்றன. என்னைப் போன்றோர் சற்றே யதார்த்தமாகவும் அனுபவரீதியிலும் நோக்குவர்.

நமதூருக்கென்று ஒரு தளம் பிரத்தியேகமாக வேண்டும்தான். இதில் மாற்றுக் கருத்து இல்லை. (எற்கனவே இருந்ததே என்னாயிற்று?) ஆனால் அதற்காக தற்போதைய வலைத்தளங்களை மூடுவோமென்பது, ஊருக்குப் பொதுவாக ஒரு மன்றம் வேண்டும் என்பதால் ஊர்வாசிகள் அனைவரும் தத்தமது வீட்டின் வரவேர்பரைகளை உடைத்து விட்டு வாருங்கள் என்பது போல இருக்கின்றது.

நான் என்ன சொல்கிறேன் என்றால், நமதூர் வலைக் கலைஞர்கள் தத்தமது ரசனைக்கேற்ப நிறுவி வைத்திருக்கும் வலைத் தளங்களை அவ்வாறே இருத்திக் கொள்ளட்டும். அதுபோக, ஊருக்குப் பொதுவாக ஒரு தளம் கண்டு அதில் எல்லோரும் இணைந்து சிறப்பிக்க வேண்டும் என்பதே என் எதிர்பார்ப்பு.

உங்களைப் போலவே நானும் ஒரு திட்டம் சொல்கிறேனே: அதிரைக்கென்றொரு பொதுத்தளம் அமைக்க என்று ஒரு மின் குழுமம் உருவாக்க வேண்டும் அதில் நமதூர் வலைப்பதிவர் அத்துனை பேரையும் உறுப்பினராக்கி அதிலிருந்து சகோதரர் அபு சுஹைமாவின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றினால் கனவு பெய்ப்படும்.

ஜனரஞ்சக பத்திரிகைகளில் வெகு சிலவற்றை மட்டுமே நான் குறிப்பிட்டேன் தம்பி. கணக்குகாகவெனில், ஊருக்கு 100 பத்திரிகை, இனத்துக்கு பத்திரிகை, மதத்துக்கு பத்திரிகை, இயக்கங்களுக்கு பத்திரிகை, தொழிலுக்கு, ஆரூடத்திற்கு, குழைந்தைகளுக்கு, பெண்களுக்கு இப்படி ஆயிரக் கணக்கில் இருக்கு தம்பி.

பல ஊடகங்களின் ஒரே நோக்கம்: போட்டி, தரம் போன்றவையே. பிரிவினைவாதம் இத்துனூன்டுதான் இருக்கும் புறக்கணிக்கத்தகுமளவுக்கு.

அவ்வாறன்றி, ஜாவியா நார்ஷாவின் வாசனை, நூர்லாட்ஜ் பீட்ரூட்டின் சுவை, அய்யர் கடை காபி, கலரி வீட்டில் உறைந்த பிரினி, உடுப்பி இட்லி, உட்லான்ட்ஸ் மீல்ஸ், பிலால் கடை பாயா பரோட்ட, ஹமீதியா பிரியானி, யாத்கார் லஸ்ஸி, பிஸ்மி ஹோட்டல் மீன் சோறு போன்றவையெல்லம் அங்கங்கு கிடைத்தால்தான் சுவை மறாது. எல்லாம் ஒரு இடத்தில் என்பது சாத்தியமே என்றாலும் சாதிப்பதில் ஒரு கஷ்டம் என்னவெனில் “too many cooks will spoil the soup”

மற்றொன்று.: நீங்கள் பட்டியலிட்டிருக்கும் ஊர்தளங்கள் கொண்டவரகள் தனித்தனியாகவும் வலைதளங்கள் வைத்துக் கொள்ளவில்லை என்கிறீர்களா?

Sabeer Ahmed

அபூ கதீஜா said...

நான் சபீர் அவர்களின் கருத்தை வரவேற்கிறேன், நான் சொல்ல வந்த விஷயமும் அதேத்தான்.

என்னை எடுத்துக் கொள்ளுங்கள், அதிரைக்காக ஒரு பிரத்யோகமாக ஒரு தளம் உருவாக்க வேண்டும் என்ற முனைப்போடு, athirampattinam.com, athiraipattinam.com என்றெல்லாம் உருவாக்கி ஒரே குடையின் கீழ் கொண்டு வர என்னினேன், பின்னர் மக்கள் எல்லாம் அடித்து கொள்ளுவதை பார்த்து அந்த முயற்சியை விட்டு விட்டேன், வரும் ஆண்டில் இந்த டொமைன் எக்ஷ்பிரி ஆகுகிறது. ஒரே குடையின் கீழ் கொண்டு வர என்னுவோர், எனக்கு மின்னஞ்சல் அனுப்பினால் மறுபடியும் அதை ரினிவல் செய்ய தயாராக இருக்கிறேன்

Ahamed irshad said...

:))

ஸ்மைலிய‌ போட்டு வைப்போம்..

Meerashah Rafia said...

//M.H. ஜஹபர் சாதிக் சொன்னது…
கணினி அறிஞர் "உமர்தம்பி" அவர்கள் தமிழ் உலகுக்கே தந்த புண்னியம் தான் இந்த அதிரையின் வலை வளர்ச்சிக்கு வித்தாக எடுத்துக்கொள்லலாமே!//

ஆணித்தனமான் உண்மை.


//அஹ்மத் ஃபிர்தௌஸ் ஸலஃபி சொன்னது…
ஃபிர்தௌஸ் ஸலஃபி சொன்னது…
பரிசு என்ன? எப்போது? :)

உங்களுக்கு சகோ.கிரௌன் மகுடம் சூடுவார் என்று எதிர்பார்கிறேன் .. (அப்பாடா.. நான் தப்பிச்சேன்)

//sabeer.abushahruk சொன்னது…

அதற்காக தற்போதைய வலைத்தளங்களை மூடுவோமென்பது"//
தளத்தை மூடாமல் இருத்தலமும் ஒருதளத்தில் நோக்கி இயங்கலாம் என்ற தொழில்நுட்பத்தை முந்தைய ஆக்கத்தில் பின்னூட்டமிடப்பட்டுள்ளது.

//அதுபோக, ஊருக்குப் பொதுவாக ஒரு தளம் கண்டு அதில் எல்லோரும் இணைந்து சிறப்பிக்க வேண்டும் என்பதே என் எதிர்பார்ப்பு.//
சரி. நடைமுறை வாழ்க்கைக்கு இதுதான் சாத்தியம் என்றால் இதுவரை அனைத்து தள பதிவுகளையும் இணைத்து காண்பிக்கும் ADIRAIMANAM.BLOGSPOT.COM ஐ கொஞ்சம் மெருகேற்றி நமதூருக்கு பொதுதளமாக செயல்படுத்திபார்கலாமா?இப்பெயரில் யாருக்கேனும் வெறுப்பு இருந்தால் வேறு பெயரில் கூட தொடங்கலாம். அதிரைஎக்ஸ்பிரஸ், அதிரை நிரூபர் இவை இரண்டும் எப்பொழுதும் போல் இயங்கட்டும்..ஆனால் ஆதரவு மட்டும் அனைவரரிடமும் கிடைக்கவேண்டும்.. யார் அமீர்?அமீர் தேவைப்படுமா? யார் நடத்தபோகின்றார் என்பதெல்லாம் பிறகு முடிவு செய்யலாம்.
காக்கா என்ன சொல்றீங்க?

அன்பார்ந்த அதிரை அதிரைஎக்ஸ்பிரஸ், அதிரை நிரூபர்,அதிரை bbc மற்றும் இன்னபிற நிர்வாகிகளே.. உங்கள் கருத்து என்ன என்று கூறினால் எம்மைப்போன்ற பல வாசகர்களுக்கு ஒரு தெளிவான முடிவு கிடைக்கும் என்று எண்ணுகின்றேன்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//ADIRAIMANAM.BLOGSPOT.COM // அதிரை வலைத்தளங்களின் திரட்டி நன்றாகத்தானே இருக்கிறது அதுவும் கடந்த ஒரு வருட காலமாக சிறப்பாகத்தான் செயல்பட்டு வருகிறது பலரும் அறிந்தததே !

இதனையே தொடர்ந்து ஒரு போர்ட்டலாக யாவரும் பயன்படுத்தலாம், பதிவுகளின் எண்ணிகையைப் பொறுத்து அதன் தலைப்புகளை காண்பிப்பதின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம்.

Meerashah Rafia said...

//a சொன்னது…
ஒரே குடையின் கீழ் கொண்டு வர என்னுவோர், எனக்கு மின்னஞ்சல் அனுப்பினால் மறுபடியும் அதை ரினிவல் செய்ய தயாராக இருக்கிறேன்//
மாஷா அல்லாஹ்..உங்கள் மின்னஞ்சலை இந்த பின்னூட்டத்தில் பதிந்தால் நன்று..இல்லாவிடில்என் மின்னஞ்சலுக்கு (visualmeera@gmail.com) உங்கள் மின்னஞ்சலிலிருந்து ஒரு அஞ்சல் எனக்கு அனுப்புங்களேன். கலந்துரையாடுவோம்..

அபூ கதீஜா said...

மன்னிக்கவும் என்னுடைய மின்னஞ்சலை போட மறந்து விட்டேன், mansooramk@gmail.com.

வாருங்கள் கலந்துரையாடலாம், நீங்கள் ஏழாவது மாடியில் இருக்கிறீர் நான் இரண்டாவது மாடியில் தான் இருக்கிறேன் :)

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//sabeer.abushahruk சொன்னது…
அதிரைக்கென்றொரு பொதுத்தளம் அமைக்க என்று ஒரு மின் குழுமம் உருவாக்க வேண்டும் அதில் நமதூர் வலைப்பதிவர் அத்துனை பேரையும் உறுப்பினராக்கி அதிலிருந்து சகோதரர் அபு சுஹைமாவின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றினால் கனவு பெய்ப்படும்.///

கவிக் காக்காவின் கருத்தினையே நானும் சரியான ஆலோசனை என்று சொல்கிறேன்..

அதிரைநிருபர் பதிப்பகம் said...

மின்னஞ்சல் வழி கருத்து
------------------------------

Mohamed Meera சொன்னது…

சபிர் காக்கா கவிதை வரிகள்,

எப்பொழுதும் தாக்கத்தை ஏற்படுத்த கூடியதாகவே இருக்கும்.

ஒற்றுமை பற்றி கவலைபட்டு எதுவும் ஆகப்போவதில்லை. உலக முடிவு நாள் வரை நம் சமுதாயம் இப்படித்தான் இருக்கும்.

(படிக்கவும் பல படிப்பினைகள் உள்ள முகமது நபி (ஸல்) அவர்களின் இறுதி உரை)

இந்த சமுதாய அமைப்புகளின் பிரிவுகள் ஊடே சாதிக்கவேண்டும்.
நம் தமிழ்நாட்டில் இடஒதுக்கீடு கிடைத்தது - பல இயக்கங்கள் இருந்தாலும் இடஒதுக்கீடு என்ற ஒரே கோரிக்கையே முன்னிலை படுத்தியதால் தான்.
வேற்றுமையில் ஒற்றுமை காண்போம்

(இணைய சேவைகளில், சபிர் காக்கா சொன்னது போல் பரஸ்பரம் தகவல்களை பரிமாறி கொள்ளுங்கள் )

Mohamed Meera

Unknown said...

meerashah சொன்னது…

//சரி. நடைமுறை வாழ்க்கைக்கு இதுதான் சாத்தியம் என்றால் இதுவரை அனைத்து தள பதிவுகளையும் இணைத்து காண்பிக்கும் ADIRAIMANAM.BLOGSPOT.COM ஐ கொஞ்சம் மெருகேற்றி நமதூருக்கு பொதுதளமாக செயல்படுத்திபார்கலாமா?இப்பெயரில் யாருக்கேனும் வெறுப்பு இருந்தால் வேறு பெயரில் கூட தொடங்கலாம். அதிரைஎக்ஸ்பிரஸ், அதிரை நிரூபர் இவை இரண்டும் எப்பொழுதும் போல் இயங்கட்டும்..ஆனால் ஆதரவு மட்டும் அனைவரரிடமும் கிடைக்கவேண்டும்.. யார் அமீர்?அமீர் தேவைப்படுமா? யார் நடத்தபோகின்றார் என்பதெல்லாம் பிறகு முடிவு செய்யலாம்.
காக்கா என்ன சொல்றீங்க?

அன்பார்ந்த அதிரை அதிரைஎக்ஸ்பிரஸ், அதிரை நிரூபர்,அதிரை bbc மற்றும் இன்னபிற நிர்வாகிகளே.. உங்கள் கருத்து என்ன என்று கூறினால் எம்மைப்போன்ற பல வாசகர்களுக்கு ஒரு தெளிவான முடிவு கிடைக்கும் என்று எண்ணுகின்றேன்.//

ஓர் அமீரின் கீழ் அதிரை வலைப்பதிவர்களை இணைப்பதற்கு அதிரை எக்ஸ்பிரஸ் குழுமம் தன்னுடைய சம்மதத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

எப்படி இயங்குவது? எந்தப் பெயரில் இயங்குவது? என்பதை புதிய அமீர் பொறுப்பேற்றுக் கொண்டதும் முடிவு செய்து கொள்ளலாம்.

நமதூரின் முதல் இணையதளமான அதிரை.காம் அப்படியே இருக்கிறது. இதன் நிர்வாகி சகோ. தமீம், அதிரை.காமைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதி தர தன்னுடைய சம்மதத்தைத் தெரிவித்திருந்ததாக அதிரைக்காரன் கூறியுள்ளார். இதனையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

அபூ சுஹைமா,
மட்டுறுத்துனர், அதிரை எக்ஸ்பிரஸ்

sabeer.abushahruk said...

//காக்கா என்ன சொல்றீங்க//இந்த காக்காவைத்தான் கேட்கிறீர்கள் என்றால் எனக்குப் பிடித்திருக்கிறது தம்பி.

நல்லது. எல்லாம் கைகூடி வருகிறார்ப்போல தெரிகிறது. முதலில்,

-மின்குழுமம் ஆரம்பிக்கவும். யார்?
-முறையாக வலைப்பூ வலைக்கலைஞர்களுக்கு அழைப்பு விடுக்கவும்.
- இணைந்துகொண்ட உறுப்பினர்கள் கூடி ஒருமித்து அமீரைத் தெரிவு செய்யவும்.
-அவரவர்களின் திறமை மற்றும் ஆர்வமுள்ள பொறுப்புகளுக்கு சம்மந்தப்பட்டவர்களை நியமிக்கவும்.

மேற்கொண்டு அபு இபுறாஹிம் அபு சுஹைமா தாஜுதீன் அதிரைக்காரர் மீராஷ தொடருங்கள். (தயை செய்து பழங்கதை வேண்டாம்.

(எனக்கு டெக்னிக்கல் அறிவு பூஜ்யம்)

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

// -மின்குழுமம் ஆரம்பிக்கவும். யார்?
-முறையாக வலைப்பூ வலைக்கலைஞர்களுக்கு அழைப்பு விடுக்கவும்.
- இணைந்துகொண்ட உறுப்பினர்கள் கூடி ஒருமித்து அமீரைத் தெரிவு செய்யவும்.
-அவரவர்களின் திறமை மற்றும் ஆர்வமுள்ள பொறுப்புகளுக்கு சம்மந்தப்பட்டவர்களை நியமிக்கவும்.///

கவிக் காக்கா : அதெப்படி அப்போ நீங்க ?

எதனையும் கலைப்பதில் இருக்கும் ரண வலிகள் அனுபவிப்பது கஷ்டமே.. தளங்களை கலைப்பு என்பதை தவிர்த்திட்டு, வலைத்தளங்களை நிர்வகிப்பவர்கள் தங்களது நேரத்தையும் பொருளையும் நிறையவே செலவு செய்து உருவாக்கியதை கலைப்பது என்பது சிரமமே. நல்ல வலுவான பொதுத் தளமொன்று தலையெடுத்தால் மற்றவைகள் தானாக கரைந்திடும்.. அதற்காக சிரத்தை எடுக்க வேண்டியது இருக்காது.

AWC என்ற குழுமம் 1994 / 95ல் (சரியாக ஞாபகமில்லை.. சகோதரர் மீராஷா அவர்கள் உருவக்கும்போது பெரும்பாலனவர்களிடம் மின் அஞ்சல்கள் இருந்ததில்லை அப்போதுதான் தலையெடுக்க ஆரம்பித்தது எல்லா இடத்திலும், அந்தக் குழுமம் இன்றும் இருக்கத்தான் செய்கிறது ! அதனை பயண்படுத்த முயற்சிக்கலாம் அல்லது... புதிதாக துவங்கும் எண்ணமிருந்தால் அதனையும் செய்யலாம்.

மேற்சொன்ன கருத்துக்கு நான் வந்த காரணம் இங்கு நடந்த இரண்டு பதிவுகளின் கருத்துக்களை வைத்தே இது என்னுடைய தனிப்பட்ட கருத்தே..

பூணைக்கு மணி யார் கட்டுவது !?

அதிரைக்காரன் said...

ஏற்கனவே அமீரின் தலைமையில் இயங்குவதாகச் சொல்லும் நிருபர் குழுவில் மற்றவர்களையும் சேர்ப்பதில் என்ன பிரச்சினை என்று அபூஇப்றாஹிம் காக்கா தெளிவு படுத்தலாமே!

சபீர் காக்கா,என்மீதான உங்கள் நல்லெண்ணத்தை நன்கு அறிவேன். இன்ஷா அல்லாஹ் ஒற்றுமைக்கான அனைத்து முயற்சிகளையும் செய்வதில் நானும் உங்களோடு வருவேன். நானும் ஒரு கவிதை எழுதட்டுமா? :)

sabeer.abushahruk said...

அதிரை நிருபரின் அமீர்: தம்பி தாஜுதீனுக்கும் மட்டுறுத்துனர் அபு இபுறாஹிமுக்கும் மின் குழுமத்திலிருந்து அழைப்பு விடுத்தால் அவர்கள் அங்கு வந்து கலந்தோசிப்பார்கள். 

தேன் துளியின் சார்பாக நானும் ஜாகிரும் கலந்தாலோசிப்பில் இணையச் சம்மதம்.

மேற்கொண்டு வலைபதிவர்களுக்கு அதிரை மணத்தை ரெஃபர் செய்யுங்கள். 

அதுவரை, அதிரைக்காரரின் கவிதையோடு அதிரைநிருபர் தொடரட்டும் தம் பணியை, அபு சுஹைமாவின் தலைமையில் தொடரட்டும் அதிரை எக்ஸ்பிரஸ், முஹம்மது கலக்கட்டும் பி பி சியில்.

கலந்தாலோசிப்பிற்கு ஏ டபிள்யுசியின் ஓனரிடம் பேசியாச்சா? அதிரை டாட்காம் உருவாகப்போகிறதா? சந்தோஷமாக இருக்கிறது!

அபூ சுஹைமா said...

அபுஇபுறாஹீம் சொன்னது…

//AWC என்ற குழுமம் 1994 / 95ல் (சரியாக ஞாபகமில்லை.. சகோதரர் மீராஷா அவர்கள் உருவக்கும்போது பெரும்பாலனவர்களிடம் மின் அஞ்சல்கள் இருந்ததில்லை அப்போதுதான் தலையெடுக்க ஆரம்பித்தது எல்லா இடத்திலும், அந்தக் குழுமம் இன்றும் இருக்கத்தான் செய்கிறது ! அதனை பயண்படுத்த முயற்சிக்கலாம் அல்லது... புதிதாக துவங்கும் எண்ணமிருந்தால் அதனையும் செய்யலாம்.//

அபுஇபுறாஹீம் காக்கா,

AWC யிலும் நானும் முன்னர் இருந்தேன். நல்ல பல விவாதங்களும் நடைபெற்றது. பின்னர் பெரும்பாலும் ஃபார்வார்டட் மெயில்களே வந்தன என்பதால் நான் விலகிவிட்டேன். AWC என்றதும் எனக்கு மற்றொன்றும் நினைவுக்கு வந்தது. அதிரைக்காரனுக்கும் உமர் தம்பி காக்காவுக்குமான உரையாடல் ஒன்று. சகோதரர்கள் பார்வைக்கு:-

Re: AWC My Tamil Blog

Dear Umar Kaka, Assalamu Alaikkum...

Thanks for your appraisal!

I was surpised in learing about your professionalism
for Tamil Unicode tool development. As you alone
developed unicode tools and fonts that are widely used
by 90% Tamil bloggers.

I personally feel if it is named as ADIRAI or UMAR
instead of Theeni family will represent the Tamil
Muslim's contribution in the field of internet. If
possible, you can reserve the copy right with
additional features or as it is.

You may aware that during the lauch of Tamil Open
sources software by Dayanithi Maran recently, many
Tamil open source software professionals expressed
their unhappy while their open sources used for
someone's publicity without their knowledge.

Being a regular visitor of www.thamizmanam.com I found
most of the bloggers using your tools. Also I
discussed with your son Moinuddeen to having a unicode
browser. I hope it is possible to you and definitely
usefull to the surfers.

On behalf adirai.com development team, we need your
interview that will help to novice as well as to
publish your undreamt achievement of contibution to
Unicode users!

Moreover, I was informed that the first tamil font was
introduced by our Jameel Kaka. Is it?


--- Umar wrote:

> Who said we don;'t have writing resources?
>
> Jamal, you could turn this "vettippechu" into
> "veRRipechchu" for adirai.com.
>
> -Umar
>
> --- "Jamaludeen N." wrote:
>
> > Hi,
> >
> > Please visit my Tamil Blog for some funny articles
> >
> > http://vettippechu.blogspot.com/
> >
> > Regards,
> > Jamaludeen

அதிரைக்காரனின் வேண்டுகோளை ஏற்று உமர் தம்பி காக்கா தான் செய்த டூல் ஒன்றுக்கு AWC Convertor என்று பெயரிட்டார்கள்.

அதிரைக்காரன் said...

விரல்நுனி நீட்டி
விடியலாய் சிரிக்கும்
கதிரொளிகளின் ஒற்றுமையால்
காலடியில் நிழல்!

உதிரும் மயிர்களும்
எதிரும் புதிருமாய்
இல்லாதவரையே கூந்தல்!

மரக்கிளையுடன்
முரண்டுபிடிக்காமல்
ஒட்டி உறவாடும்வரை- இலை,
வெட்டிக்கொண்டு வீழ்ந்தால் குப்பை!

ஒரு கை ஓசை இல்லை
சிறு துளி பெருவெள்ளம்
தனிமரம் தோப்பாகாது - என
தனியறையில் புலம்பி பயனென்?

மகா(மோசமான)கவி அதிரைக்காரன் :)

crown said...

விரல்நுனி நீட்டி
விடியலாய் சிரிக்கும்
கதிரொளிகளின் ஒற்றுமையால்
காலடியில் நிழல்!
-----------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். நிஜம்!!!! (மாப்ளே! நீயும் ஜம்முன்னு) இதய நாற்காலியில் அமர்ந்து இருக்க. நம் ஒற்றுமையால்.

crown said...

உதிரும் மயிர்களும்
எதிரும் புதிருமாய்
இல்லாதவரையே கூந்தல்!
----------------------------
எதிரும் .புதிருமாய் இருந்தால் கந்தல். காசாபுக்கடைதான் ,வெட்டு ஒன்னு,துண்டு ரெண்டுன்னு சொல்லாமல் சொல்லியவைதம் அருமை.

crown said...

மரக்கிளையுடன்
முரண்டுபிடிக்காமல்
ஒட்டி உறவாடும்வரை- இலை,
வெட்டிக்கொண்டு வீழ்ந்தால் குப்பை!
-------------------------------------------
வீட்டுக்குள்ளும் எடுக்காத பொருளேலெல்லாம் குப்பை யாவதுபோல், தூக்கி எடுத்து அணைக்காத சமூதாயக்குழந்தையும் கேட்பாற்று அழுவது போல். இன்று பிரிந்த நிலையில் நாம் அந்த இலை போல்.

crown said...

ஒரு கை ஓசை இல்லை
சிறு துளி பெருவெள்ளம்
தனிமரம் தோப்பாகாது - என
தனியறையில் புலம்பி பயனென்?
---------------------------------------
அதானே?

crown said...

ஒற்றுமை யென்றொரு கயிறு
ஒற்றையாய்ப் பிடிப்பது தவறு
கற்றவர் கல்லாதோர் முயன்று
மற்றவர் இணைந்தால் உயர்வு

பள்ளியில் படித்தது பிஞ்சில்
பசுமையாய்ப் பதிந்தது நெஞ்சில்
ஒண்ணா யிருக்கக் கற்க வேண்டும்
உண்மையைச் சொன்னால் ஏற்க வேண்டும்
-----------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்.
திருகுரானில் சொல்ல பட்ட கருத்து அதைவிட இதற்கு விடையாய் என்ன சொல்ல முடியும்?
இருந்தாலும் ஒற்றுமையை குழைக்கும் வண்ணம் சிலரின் எண்ணம் கயிரு திருப்பதும் சிண்டு முடியவதும் இருக்கும் வரை ஒற்றுமைக்கு முடிவு?

பாலப்பாடம் கலப்படமில்லாமல் , மனதில் கலக்கனும் .எல்லாரும் ஓன்றாய் கலக்கனும்.

crown said...

பள்ளியில் படித்தது பிஞ்சில்
பசுமையாய்ப் பதிந்தது நெஞ்சில்
ஒண்ணா யிருக்கக் கற்க வேண்டும்
உண்மையைச் சொன்னால் ஏற்க வேண்டும்

பசுக்களின் சாந்தத் தன்மைகூட
மந்தையில் கலந்தால் புலியையே விரட்டும்
தனிப்பட்டுப் போன பசுவை மட்டும்
துணிந்து தாக்கும் குட்டிப் புலியும்

இலகுவாய் உடைபடும் குச்சிகூட
இறுக்கிய கட்டுக்குள் கடினம் கூடும்
ஒடிக்க முயலும் கைகள் தோற்கும்
ஒற்றுமைப் பாடம் வியந்து கற்கும்.
------------------------------------------------------
அஃறினைகளையும், ஐந்தறிவு ஜீவன் களையும் உதாரணம் காட்டும் நிலையில் ஆறறிவு மனிதனின் நிலைக்கு காரணம் எல்லா தவறுகளையும் நம் கைகளே தேடிக்கொண்டன என்கிற இறைவசனம் இதை சொல்லி காட்டுவது இன்னும் நம்மிடையே விளங்காதிருப்பதற்கு நாம் தான் காரணம்.

crown said...

ஒரு இறை வணங்கும் ஒரே கொள்கை
பலமுறை சிதைந்து பரிகசிக்குது
இயக்க போதையின் மயக்க நிலையில்
இறந்து போகுமோ சகோதரத்துவம்.
--------------------------------------
இயக்கத்தால் கொண்ட மயக்கம் சகோரத்துவத்தின் கழுத்தில் அழுத்தினால் ,சமூகம் இயக்கமின்றி தினறித்தானே போகும் ?பின் சாகும்?

Unknown said...

'சென்ற நாட்கள் போய்விடட்டும்
செய்தவை போகட்டும்
இன்று புதிதாய் பிறந்ததாக
இளைஞர் நாம் விழிப்போம்

நன்று என்று நான்குபேரும்
நம்மைப் போற்றவே
இன்று தொடக்கம் அணிவகுத்து
இளைஞர் நாம் வெல்வோம்'

crown said...

தந்தையும் தனையனும் தமக்குள் பகை
தமையனுக்கு தமக்கை திடீர் எதிரி
நண்பனை வெறுத்தல் நவீன நியாயம்
என மாற்றிய போதனை ஒழிக.
-----------------------------------------
தந்தையையே மாற்றான் தாய் மனப்போக்கில் பார்கும் அவலம். தன்கையே (தங்கையே) நம் கண்ணை குத்தும் வீனோதம்.
நட்பே தோள்கொடுக்காமல் வாள் எடுக்கும் வீரோதம் எல்லாம் சைத்தான் போதனை/அது தீராத வேதனை.பிரிவினைக்குள் என்ன சாதனை?????

sabeer.abushahruk said...

ஒன்றாய் இருக்கக் கத்துக்கனும் இந்த உண்மையைச் சொன்னால் ஒத்துக்கனும் என்று சொன்னதை உணர்வுபூர்வமாக ஒத்துக்கொண்ட அனைவருக்கும் நன்றி!

மீண்டும் சந்திப்போம்!
-துபை டெர்மினல் 2 விலிருந்து ஊருக்குப் போக காத்திருக்கும் சபீர்!

crown said...

வாழ்க்கையில் ஒற்றுமை வணக்கத்தில் ஒற்றுமை
வயிற்றுப் பசிக்கும் சேர்ந்துண்ணும் ஒற்றுமை
வாய்த்த செல்வத்தை பகிரும் ஒற்றுமை
வழிகேட்டில் சிக்கி வதைபடுது ஒற்றுமை
--------------------------------------------
ஒற்றை மெய்(உண்மை) புரிந்து கொள்ளாமல் ஒற்றைமையை குழப்பி நம் முகத்துக்கு நாமே பூசிக்கொள்ளும் நிலையில் நாம்.பகுத்துண்டு வாழ்தல் என்பது சகனில் மட்டுமல்ல நல்ல பல சகலத்திலும்தான்.கொடுத்து வாழ். தானாம் இவையாவும் சமுதாயத்தின் ஈனம்போக்கும். நம் சமுதாயத்தின் தலையை செய்த தருமம் காக்கும் அல்லாஹ் வல்லமையால்.

Unknown said...

கவியால் குவிந்த ஒற்றுமை தொடரட்டும்

crown said...

வேலியே பயிரை மேய்கிறதிங்கு
வேல்கம்பு வெளி நின்று ரசிக்குதின்று
மதிகெட்ட மாந்தரின் மடைமை கண்டு
விதிகூட கைகொட்டிச் சிரிக்குதந்தோ
----------------------------------------
நம் மதிகெட்ட பிரிவினையால், சதிசெய்யும் வேல் கம்பு காவி கூட்டம் நம்மை வேட்டை யாடி விளையாட காத்திருபதும் நம் கழுத்தருப்பதும் விதியல்ல!. நம் வினை நம்மை சுடும் நிஜம்.

crown said...

ஓரணியில் ஒருகுரலில் ஓங்கியபோதெல்லாம்
ஒன்றுமே உலகம் அறியத் தரவில்லை
சின்னச் சண்டையும் சிற்சில வேற்றுமையும்
சின்னத் திரைகளில் சிரிப்பாய் சிரிக்குதின்று
------------------------------------------------
முஸ்லிம் என்ன செய்கிறான்னு தன் கையில் ஊடகம் வைத்திருக்கும் வேட்டுவைக்கும் கூட்டம் கண்ணில் விளெக்கெண்ணெய் விட்டு பார்குது!மெய் சிலிர்க்க வேண்டாமா? உண்மை விளங்கிடு, தீமையை விலக்கிடு, தீயவனை விலங்கிடு. நல்லதை நமக்குள் பகிர்ந்திடு.சுவர்கம் புகுந்திடு.

crown said...

தலைவர்கள் நம்மை நினைக்க வேண்டும்
தலைக்கணம் தனை துறக்க வேண்டும்
தற்பெருமை என்பதொரு வியாதி யென
தன்னலம் மறந்து சிறக்க வேண்டும்

இம்மையில் மட்டுமல்ல இழிவு
மருமையிலும் தொடரும் துன்பம்
தொன்று தொட்டு கண்ட கனவை
ஒன்று பட்டு வெல்வோம் வாழ்வில்.
-----------------------------------------------
சம்பந்த பட்டவங்க படிச்சு பார்த்து திருந்தட்டும்.. அல்லாஹ் துணை நிற்பான்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//ஏற்கனவே அமீரின் தலைமையில் இயங்குவதாகச் சொல்லும் நிருபர் குழுவில் மற்றவர்களையும் சேர்ப்பதில் என்ன பிரச்சினை என்று அபூஇப்றாஹிம் காக்கா தெளிவு படுத்தலாமே!//

தம்பி அதிரைக்காரன்: குழு உறுப்பினர்களாக இருப்பவர்களில் மாற்றம் இல்லை அப்படி செய்யும் உத்தேசமும் இச்சூழலில் இல்லை என்பதைத்தான் சொல்லப்பட்டு விட்டதே ! ஆதலால் வேறு எந்த காரணமும் இல்லை.

உங்களின் பங்களிப்பை தொடரலாமே... தம்பி அபு சுமைஹா பழைய நினைவுகளையும் கிளரி விட்டாச்சு ! :)

எதுவானாலும் நன்மையை நாடியே இருந்திடவும், வாதங்கள் தொடர்கதையாக இல்லாமல் வாதிட்டோம் கருத்திட்டோம் கவனத்தில் கொண்டோம் சந்தர்பங்கள் சாத்தியப்படும்போது சாதிக்கும் களம் காண்போம் இன்ஷா அல்லாஹ் !

நம்மிடமிருக்கும் அற்புதமான திறமைகளை அங்கீகரிக்கும் தளம் கண்டு வெற்றி காண்போமே !

Smile Please !

Yasir said...

கவிக்காக்காவின் கலக்கலான ஒற்றுமை கவிதைக்கு பிறகும் அதற்க்கு முன்னரும் தொடர்ந்த இடியும்,மின்னலும் அதனால் பெய்த பெரும் மழையும் சரியான விளை நிலத்திற்க்கு சென்றடைந்து “ஒற்றுமை” என்ற பயிர் செழிக்க உதவட்டும்...ஒருமித்த கருத்து கொண்டவர்களையும் விதவிதமான திறமை கொண்டவர்களையும் ஒருங்கிணைக்கட்டும்..இப்படிக்கு முகமதுயாசிர்,கடற்க்கரை தெரு ,தற்போது வசிப்பது துபாய் 0505498710

அபூ சுஹைமா said...

அதிரை நிருபர் குழுவினருக்கு.....

இந்தப் பதிவில் நான் இட்ட ஒரு பின்னூட்டம் முழுமையாக நீக்கப்பட்டுள்ளதை அறிந்து வருத்தப்படுகிறேன். AWC பற்றி என் பாசத்திற்குரிய அபுஇபுறாஹீம் காக்கா எழுதியதும் எனக்கு நினைவுகள் பின்னோக்கிச் சென்றன. AWC குழுமத்தில் உமர் தம்பி காக்காவுக்கும் அதிரைக்காரனுக்கும் இடையில் நடைபெற்ற ஒரு மடல் பரிமாற்றத்தை பின்னூட்டத்தில் கூறியிருந்தேன்.

ஒற்றுமையைக் குலைக்கும் விதமாகவோ அல்லது யாரையும் தாக்கும் விதமாகவோ அந்தப் பின்னூட்டத்தில் நான் குறிப்பிடவில்லை. இதில் என்ன தவறைக் கண்டு என் பின்னூட்டத்தை நீக்கினீர்கள் என்று அறியத் தந்தால் மகிழ்வேன். நான் பின்னூட்டமே இடவில்லை என்று வாதிட மாட்டீர்கள் எனவும் நம்புகிறேன்.

அதிரைநிருபர் பதிப்பகம் said...

அன்பின் சகோதரர் அபு-சுஹைமா:

தங்களின் பின்னுட்டம் பதிவுக்குள் வரவில்லை என்று தாங்களின் கருத்தை கண்ட பின்னர்தான் பார்த்தோம் அது தானாக ஸ்பேம் பகுதிக்கு சென்றிருக்கிறது என்ன காரணமென்று தெரியவில்லை !

அந்தப் பின்னூட்டம் ஸ்பேமிலிருந்து பதிவுக்குள் அனுப்பப்பட்டுள்ளது.

தாங்களின் நல்லண்ணத்தையும் எங்களின் உள்ளங்களில் உள்ளதையும் அல்லாஹ் அறிவான்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு