Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

சுவாசத்தின் வாசல் ! 22

அதிரைநிருபர் பதிப்பகம் | November 21, 2011 | , , , , ,

PLEASE VISIT OUR NEW WEBSITE https://adirainirubar.in/ 




மூக்கு மிக முக்கியமான பாகம் என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்காது என்றே தோன்றுகிறது. ஜீரண மண்டலம் எப்படி வாயில் இருந்து தொடங்குகிறதோ, அதேபோல் சுவாச மண்டலமும் மூக்கில் இருந்துதான் தொடங்குகிறது.

வாய் மூலமாக சுவாசிக்க முடியும் என்றாலும் நம்மில் பெரும்பாலானோர் மூக்கின் மூலமாகத்தான் சுவாசிக்கிறோம். மூக்கு ஏதாவது ஒரு காரணத்தால் அடைபடும்போதுதான் அவசரத் தேவைக்காக வாய் உதவுகிறது. எனவே, நம் உயிர் ஆதாரமான ஆக்சிஜனை உடலுக்குள் அனுப்பி வைக்கின்ற நல்ல காரியத்தைச் செய்வது மூக்குதான்.

வாயால் தொடர்ந்து சுவாசிப்பதும் நல்லதல்ல. தேகப் பயிற்சியின்போதும் நீச்சல் அடித்த பிறகும் வாயால் சுவாசிக்கலாம். அப்போது மூக்கோடு, வாயின் துணையும் தேவைப்படும். மற்ற சமயங்களில் சுவாசிக்க மூக்கே சிறந்தது.

வாசனையை முகர்ந்து பார்த்து இன்றைக்கு வீட்டில் இறைச்சி ஆனமா ? கோழிக் குருமாவா ? இல்லே பொரிச்ச மீனா ? என்று முதலில் அறிவிப்பது மூக்குதான் என்பதை நீங்கள் அறிவீர்கள். இதில் ஆச்சர்யமான தகவல் என்னவெனில், நம் மூக்கில் உள்ள ஒரு சிறிய பகுதியால் கிட்டத்தட்ட பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட வாசனைகளைப் பிரித்து உணர முடியுமாம்.

மூக்கின் பயன் இதோடு முற்றுப் பெறுவதில்லை.நாம் நன்றாகப் பேசுவதற்கும் மூக்குக்கும் ஒரு நெருக்கமான தொடர்பு இருக்கிறது. பேச்சு என்றால் வாய்க்கும் தொண்டைக்கும் தானே வேலை? மூக்கோடு அதை எப்படி முடிச்சு போடுவது என்பவர்கள், ஜலதோஷத்தால் மூக்கு அடைபட்டவர்கள் பேசுவதைக் கவனியுங்கள். ஒலி ஒழுங்கு இல்லாமல் வரும்.

நம்மிடம் இருந்து வெளிப்படுகிற ஒலிக்கு ஓர் ஒழுங்கான வடிவத்தையும் இனிமையையும் தருவதில் தொண்டைக்கு மட்டுமல்ல, மூக்குக்கும் அதில் உள்ள சைனஸ் அறைகளுக்கும் கூட முக்கிய பங்கு இருக்கிறது.

மூக்கு நாம் சுவாசிக்கும் காற்றைத் தனது முன்பக்கத்தில் உள்ள மயிரிழைகளால் வடிகட்டி, சுத்தப்படுத்தி பின்னர் மூக்கிலே சுரக்கும் திரவத்தால் குளிரூட்டி உள்ளே அனுப்புகிறது. காற்றை ஏன் குளிரூட்டி அனுப்ப வேண்டுமா ? அப்படி இல்லையென்றால் நாம் சுவாசிக்கும் காற்றின் வெப்பம் நுரையீரலைப் பாதிக்கும். இது மட்டுமின்றி, மூக்கில் இருந்து சுரக்கும் இந்தத் திரவத்தில் 'லைசோசைம்' என்ற ஒரு கிருமி நாசினி உள்ளது. இது மூக்கின் வழியாக நமது உடலுக்குள் எந்தக் கிருமியும் நுழையாமல் பார்த்துக் கொள்கிறது.

சகஜமாக மூச்சுவிட வேண்டுமானால், உள்ளே இழுக்கப் பட்ட காற்று மூக்கின் வழியாகத் தடை எதுவும் இல்லாமல் உள்ளே செல்ல வேண்டியது அவசியம். மூக்கு வழியாகச் செல்லும் காற்றில் தூசிகள், மூக்கில் உள்ள சிறிய ரோமங்களால் வடிகட்டப்பட்டு, ரத்தம் எந்த வெப்ப நிலையில் உள்ளதோ அந்த அளவுக்கு சுடாக்கப்பட்ட நிலையில் உள்ளதோ அதே அளவுக்கு சூடாக்கப்பட்டு உள்ளே அனுப்பப்படுகிறது. அந்தக் காற்று உலர்ந்தால் அதை ஈரமாக்கும் வேலையையும் மூக்கு செய்கிறது.

மூக்கில் உண்டாகும் மிக முக்கியமான பிரச்சினைகளுள் ஒன்று சைனஸ், சைனஸ் என்ற பகுதி பாதிக்கப்பட்டால் உண்டாகும் தொந்தரவின் பெயர் சைனுசைடிஸ், இந்தப் பாதிப்பையே சைனஸ் தொந்தரவு என்று குறுப்பிடுவது நம் வழக்கமாக இருக்கிறது.

நம் முகத்தில் மூக்கைச் சுற்றி உள்ள காற்றுப்பைகள்தான் சைனஸ் எனப்படுகிறது. இவற்றில் சில, கண் இமைகளுக்கு அருகே இருக்கும். சில, கண் எலும்புகளுக்கு உள்புறம் அமைந்திருக்கும். வேறு சில, கண்களுக்கு நடுவே அமைந்திருக்கும்.

நம் உடல் அரோக்கியமாக இருக்கும்போது, இந்த சைனஸ் பகுதிகள் காற்றினால் நிரப்பப்பட்டிருக்கும். இதன் காரணமாக, நம் முகத்தில் உள்ள எலும்புகள் எடை குறைந்தவையாகவும் இருக்கும். சைனஸ் மட்டும் இல்லை என்றால் நம் மண்டை ஓடு மிகவும் அதிக எடை கொண்டதாக மாறிவிடும்.

சைனஸால் பாதிக்கப்படுவதற்கு பாக்டீரியா, வைரஸ் அல்லது இரண்டுமேகூட காரணமாக அமையக்கூடும், பொதுவாக, ஒருவரது சைனஸ் பகுதி பாதிக்கப்படும்போது அவருக்கும் கடும் ஜலதோஷம் ஏற்படுவது உண்டு. இப்படி ஏற்படுவதை Viral Sinusitis என்பார்கள்.

ஒவ்வாமை காரணமாகவும் சைனுசைடிஸ் உண்டாகலாம். ஜலதோஷம் மற்றும் ஒவ்வாமை காரணமாக மூக்கடைப்பு ஏற்படும்போது, சைனஸ் பகுதியில் பாக்டீரியா பரவியிருப்பதன் காரணமாக, இந்தச் சளியை வெளியேற்ற முடியாமல் போகலாம். இந்த நிலையை Bacterial Sinusitis என்று அழைப்பார்கள். வைரஸால் ஏற்படும் சைனஸில் அதிக வலி இருக்கும். வீக்கமும் அதிகமாக இருக்கும். காய்சலும் இருக்கக்கூடும்.

பாக்டீரியா காரணமாக சைனுசைடிஸ் உண்டாகியிருந்தால் மூக்கில் இருந்த அடர்த்தியான சளி வெளியாகும். தொடர்ந்து இரு வாரங்களுக்கு மூக்கு ஒழுகும். இருமலுக்கும் குறைவிருக்காது. கண்களைச் சுற்றி வீக்கமோ வலியோ இருக்கக் கூடும். கன்னது எலும்புகளைச் சுற்றி வலி தோன்றும்.

காலையில் படுக்கையில் இருந்து எழுந்தவுடன் முன்புறம் குனிந்தாலே தலைவலி உண்டாகும். என்னதான் பற்களைத் துலக்கினாலும் வாயில் துர்நாற்றம் உண்டாகும்ம். மேல் வரிசை பல்லில் வலி இருக்கும் 102 டிகிரியைத் தாண்டலாம்.

தொடர்ந்து மூன்று வாரங்களுக்கு எடுத்துக் கொள்ள வேண்டிய மருந்தை டாக்டர் எழுதிக்கொடுக்கக்கூடும். உடல்நிலை சரியாகிவிட்டதென்று எண்ணி பாதியிலேயே மருந்து சாப்பிடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டாம். அடங்க தொடங்கியிருக்கும் பாக்க்டீரியா மீண்டும் பலம் பெற்று எழ வாய்ப்பு உண்டு.

சைனஸ் பாதிப்பு, தொற்று நோய் அல்ல. ஆனால், இருமலும் இத்துடன் இணையும்போது அதைச் சுற்றி இருப்பவர்களுக்குப் பரவக்குகூடும். சைனஸ் பாதிப்பு ஏற்படும்போது ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள், நிறைய திரவ உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். உப்பு அடங்கிய, மூக்குல் விடக்கூடிய சொட்டு மருந்துகளைப் பயன்படுத்தலாம்.

மூக்கில் இருந்து இரத்தம் வெளியேறினால் ஏதோ உயிருக்கு ஆபத்து வந்துவிட்டதாக எண்ணி சிலர் பதறுவார்கள். மூக்கில் முன்பக்கத்தில் இருந்து இரத்தம் வெளியேறினால் அது ரொம்ப சாதரணமான விஷயம். இதில் கவலைப்ட எதுவும் இல்லை.

மூக்கில் அடிபட்டுக் கொண்டதாலோ, மிகவும் பலமாக மூக்கை சிந்திவிட்டுக் கொண்டதாலோ மூக்கின் முன்பகுதியில் உள்ள மிக மெல்லிய ரத்தக் குழாய்கள் வெடிப்பதன் காரணமாக இரத்தம் வெளியேறலாம்.

இப்படி இரத்தம் வெளியேறினால் தலையை முன்புறமாக சாய்த்துக் கொள்ளுங்கள். மூக்கின் முன்பகுதியை சுமார் 5 நிமிடத்திற்கு அழுத்திப் பிடித்துக் கொள்ளுங்கள் (வாய் வழியாக மூச்சு விட்டால் பரவாயில்லை). இரத்தம் வெளியேறுவது நின்றவுடன் முமூக்கை சிந்திவிட்டுக் கொள்ள வேண்டாம் சொல்லப்போனால் அடுத்த நாள் முழுவதும் மூக்கை சிந்தவிட்டுக்கொள்ளாமல் இருப்பது நல்லது.

சில சமயம், மூக்கின் பின்புறம் இரத்தம் வெளியேறி அது தொண்டைக்குள் போகலாம், பெரும்பாகும் இதனால் உபத்திரவம் இல்லை. தானாக நின்றுவிடும்.

ஆனால், அதிக நேரம் இது தொடர்ந்தால் இரத்த இழப்பு அதிகமாகும். இப்படி நேர்வதற்கு எது காரணமாக இருக்கக்கூடும்? அதிக ரத்த அழுத்தம், மஞ்சள் காமாலை போன்றவை காரணங்களாக இருக்கலாம். அதிக மதுப் பழக்கமும் காரணமாக அமையக்கூடும்.

மூக்கில் இருந்து இரத்தம் தொடர்ந்து வெளியேறிக் கொண்டு இருந்தால் மருத்தவ ஆலோசனை பெறுங்கள்.

'ஆகா என்ன ஒரு மணம்' என்று ரோஜாவையோ மல்லிகையையோ நாம் பாராட்டக் காராணம், நம் மூக்கு சரியாக வேலை செய்வதனால்தான். இதற்கு நம்மூக்கு மற்றும் நாக்கு நரம்புகள் தங்கள் கடமையை ஒழுங்காகச் செய்ய வேண்டும்.

உணவுப்பொருள் கெட்டுபோயிருந்தால் அது நமக்குத் தெரிய வேண்டாமா ? அதற்கு மூக்கு மற்றும் நாக்கு நரம்புகளின் ஒத்துழைப்பு அவசியம். இந்த நரம்புகள் சரிவர வேலை செய்யவில்லை என்றால் வாசனை மற்றும் சுவையை அறிந்து கொள்வதில் கோளாறுகள் ஏற்படும்.

மூக்கில், வாசனை அறிவதில் கோளாறு ஏற்பட்டால் பலவித சங்கடங்கள் உண்டாகும், விபரீதங்களும் ஏற்படலாம். சந்தேகமாக இருக்கிறதா? சமையல் அறையில் காஸ் கசியத் தொடங்கும்போது அதை உங்கள் மூக்கு உணரவில்லை என்றால் என்னவாகும் என்று யோசித்துப் பாருங்கள்.

மூக்கில் கோளாறுகள் உண்டானால் முன்பு ரசித்த வாசனைகளை கூட "நாத்தம்டிக்குதே" என்று ஒதுக்கத் தோன்றும்.

சுவை மர்றும் வாசனையை அறிவதில் ஏன் கோளாறுகள் உண்டாக வேண்டும் ? தலையில் அடிபட்டால் இப்படி நேரலாம். கடுமையான ஜலதோஷத்தின் காரணமாகவும் இந்தக் கோளாறுகள் உண்டாகலாம். சிலவகை மருந்துகள்கூட நம் வாசனை மற்றும் சுவை அரும்புகளைப் பாதிக்கக்கூடும். வயதுகூட இதில் பங்கு வகிக்கலாம். முதியவர்கள் சரியான வாசனையையும், சுவையயும் அறியாமல் தவிப்பதும் நாம் அடிக்கடி காணும் காட்சிதானே. இந்தக் கோளாறுகளை, உரிய மருந்துகளின் மூலம், டாக்டர் மெல்ல மெல்ல குணப்படுத்துவார்.

அடிக்கடி தும்மல் வருகிறது, மூக்கு ஒழுகிறது, இருமலுக்கும் குறைவில்லை. கண்கள், மூக்க்கு, தொண்டைப் பகுதிகளில் அரிப்பு உண்டாகிறது. கண்ணைச் சுற்றி சமீபகாலமாக கருவளையங்கள் தோன்றியுள்ளன.

மேலே உள்ள அத்தனை அறிகுறிகளும் இருக்க வேண்டும் என்பதில்லை. அவற்றில் சில இருந்தாலே கூட, அது ஹே காய்ச்சலின் (Hay Fever) அறிகுறியாக இருக்கக்கூடும்.

இது எதனால் ஏற்படுகிறது ? கீழே விழும் மரம், புல் அல்லது களை, போன்றவை மகரந்தப் பொடிகளை வெளிப்படுத்தலாம். அவற்றில் சில காற்றின் வழியாக உங்கள் மூக்கு அல்லது தொண்டையை அடையக்கூடும். இந்தப் புதிய பொருள் ஒவ்வாமை உண்டாக்கி, அது ஹே காய்ச்சலில் முடியலாம்.

அலர்ஜி எனப்படும் ஒவ்வாமைக்குரிய மருந்துகளின் மூலம் இதனைக் குணப்படுத்த முடியும்.

என்ன மூக்கைப் பொத்திட்டீங்க ? இனிமேல்தான் இருக்கு "உணவுக்கும் நானே, சுவாசத்திற்கு நானே" அடுத்த தொடரில் இன்ஷா அல்லாஹ்...

இப்படிக்கு,
கா.மூ.தொ. முற்போக்கு கூட்டனி.

நன்றியுடன் : காது-மூக்கு-தொண்டை (பிரச்சினைகள் - தீர்வுகள்) கையடக்க புத்தகத்திலிருந்து (காசு கொடுத்து) சுட்டதும், மனதைத் தொட்டதும்... அங்கே சுவாசித்ததும் உங்களின் மேலான பார்வைக்கு... - அபுஇபுறாஹிம்.


PLEASE VISIT OUR NEW WEBSITE https://adirainirubar.in/ 

22 Responses So Far:

ZAKIR HUSSAIN said...

//மூக்கில் இருந்து இரத்தம் வெளியேறினால் ஏதோ உயிருக்கு ஆபத்து வந்துவிட்டதாக எண்ணி சிலர் பதறுவார்கள்.//

இது எல்லாம் தமிழ்படங்களின் பாதிப்பு

sabeer.abushahruk said...

மிகவும் உபயோகமான தகவல்களை இத்தனை எளிதாக டாக்டரே சொல்வதில்லை (தொலைக்காட்சி நேர்காணல்களைத் தவிர), அபு இபுறாஹீம் சொல்லியிருக்கிறீர்கள்

வாழ்த்துகள். ENT தொடரட்டும் தொண்டு

sabeer.abushahruk said...

//இது எல்லாம் தமிழ்படங்களின் பாதிப்பு/

ஆமா ஜாயிரு,

அதுவும் சாதாரணமான விஷயத்துக்கே தோடி ராகத்திலே உச்ச ஸ்தாயில் கத்தி ரெத்தம் காட்டுவாய்ங்க. பின்னனியில் வயலின் வேற கதரும். நமக்கே மூக்கிலே ரத்தம் வர்ர மாதிரி பீலிங்கி வரும்னா பார்த்துக்கோயேன்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

எதற்கெடுத்தாலும் ஏன் மூக்கை நுழைக்கிறாய்ங்க(ன்னு) கேட்கிறாங்களே ?

அப்படின்னா !? என்னா எதுக்கு அப்படி சொல்றாங்க !!

நிச்சயமாக இங்கே எல்லோருக்கும் தெரிந்திருக்கும் எனக்கு கொஞ்சம் சொல்லுங்களேன்...

நுழையும் மூக்கே, மூச்சினை இழந்திடாதேன்னு சொல்லி வைக்கலாமே !

Anonymous said...

நல்ல ஒரு சுவாசவாசல்,ஆமா நுனிமுக்க பத்தி ஒனும்மே இல்லேய?

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//ஆமா நுனிமுக்க பத்தி ஒனும்மே இல்லேய? //

இதற்கென்று ஒரு பதிவு போடனும் அவ்வளவு இருக்கு... முயற்சிக்கலாம் இன்ஷா அல்லாஹ் !

sabeer.abushahruk said...

நைனா மூக்கில் சாரி... நுனி மூக்கில் அப்படி என்ன விஷேசம்?

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

ரொம்ப சிம்பிள் காக்கா,

"நுனி மூக்கு ஏனுங்க வேர்த்திருக்கு ?"

"பரவசமடைந்தேன் சொல்றாங்களே எப்படி கண்டு பிடிக்கிறது?"

"கோபம் வந்தா ஏன் நுனி மூக்கில் அரிக்கிறது !?"

பதிவாகவே போட்டுடலாமே ! :)

அதிரை என்.ஷஃபாத் said...

சுவாசத்தின் வாசல்- தலைப்பே அருமை

நுகர்தல்/சுவாசித்தல் என்றாலும்,சட்டமன்ற சண்டை என்றாலும் (மூக்கில் மோதிர குத்து), மகனுக்கு மருமகள் பார்ப்பதானாலும் (மூக்கும் முழியுமாக) இந்த மூக்கிற்கு என்று தனி பங்குண்டு.

மூக்கின் மேல் கோபம், உங்க சுதந்திரம் அடுத்தவங்க மூக்கு நுனி வரை, எல்லாத்துலயும் மூக்கை நுழைத்தல், மூக்கு பொடைப்பா இருந்தா இப்படி எல்லாம் பேச சொல்லும்-னு பல சொலவடைகளிலும் இந்த மூக்கு தன் மூக்கை நுழைத்து இருக்கின்றது..

அப்படிப்பட்ட மூக்கைப் பற்றிய இந்த தொடர்.. தொடரட்டும்

Shameed said...

மூக்கின் உள்ளே இத்தனை விசயங்களா ! மூக்கின் மீது விரல் வைத்து விட்டேன்

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

மூக்கின் முக்கிய பல தகவல்கள்.
என்னா தலைப்பு மாறிடுச்சே தேர்தல் முடிந்தாலும் இது உடையா கூட்டணியாச்சே!என்று பார்த்தால் தலைப்பு கீழே போச்சு.தேர்தல் வரை தான் கூட்டணி முக்கியத்துவமாக்கும்!

உணவை உட்செலுத்துவதும் நானே அவசர காலத்தில் மூச்சை வாங்கி அனுப்புவதும் நானே என்று எல்லாத்திலேயும் நான் நான் எங்களால் தானா.
சரி எப்படியோ மக்களுக்கு நல்லது கிடைத்தால் சரி. அதையும் சீக்கிரம் கொண்டுவாருங்கள்.

ஹே Fபீவரால் (பூக்கள் பூத்துக்குலுங்கும் ஆண்டு தோறும் மார்ச் முதல் ஜூலை)பாதிக்கப்படுகிறேன் காக்கா!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

MHJ : மு.போ.கூ. நிலையானது உறுதியானது நிலைகுழையாதது உடையாதது தனித்தே நிற்பது தளராதது...( எல்லாமே ஒன்றுதானே) அதலால்... லண்டன் வட்டச் செயலாளர் தலைமையில் ஆளும் கட்சியில் சேர்ந்திடாமல் அமைதி காத்திடுமாறு கேட்டுக் கொள்கிறோம் :) :)

//ஹே Fபீவரால் (பூக்கள் பூத்துக்குலுங்கும் ஆண்டு தோறும் மார்ச் முதல் ஜூலை)பாதிக்கப்படுகிறேன் காக்கா! //

அப்படின்னா பூக்களோடுதான் பொழுதுகள் எழுவதும் சாய்வதும் ? மகரந்தப் பொடி(கள்) பாடு படுத்துகிறதோ ! உடல்நிலையை கவனித்துக் கொள்ளுங்கள்.. அதற்காக பூக்களை கிள்ளாதீர்கள் !

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

தலைமை என்பது எது காக்கா? காங்கிரசா,அதிமுக-வா,திமுக-வா குழப்பமா ஈக்கிது!

//அப்படின்னா பூக்களோடுதான் பொழுதுகள் எழுவதும் சாய்வதும் ? மகரந்தப் பொடி(கள்) பாடு படுத்துகிறதோ ! அதற்காக பூக்களை கிள்ளாதீர்கள் !//

தேன்க்யூ காக்கா!
ஆமாம் பூக்களோடும் தான்!
மகரந்தப்பொடி தான் காரணம் என்று எனது 2 ஆண்டு அனுபவத்தில் தெரிந்தது. அதையடுத்து மருத்துவ விளம்பரமும் உறுதி செய்தது.

ZAKIR HUSSAIN said...

//அதுவும் சாதாரணமான விஷயத்துக்கே தோடி ராகத்திலே உச்ச ஸ்தாயில் கத்தி ரெத்தம் காட்டுவாய்ங்க. //

இது போன்ற மெடிக்கல் மித் நிறைய இருக்கிறது.இதை வைத்து அனேக ப்ரொட்யூசர்கள் மவுன்ட் ரோட்டிலும் , OMR ரோட்டிலும் பெரிய சொத்துக்களாக வாங்கி போட்டாச்சு.

ஒருவனின் அறியாமை மற்றவனுக்கு வருமானம்.

ZAKIR HUSSAIN said...

Medical Myth.....

அம்மை நோய்க்கு தாலாட்டு.

சிரங்கு நோய்க்கு கோல்கேட் டூத் பேஸ்ட்டை தடவுவது.

காது வலிக்கு காய்ச்சிய எண்ணெய் [ பட்டை மிளகாய் போட்டு] எடுத்து காதில் ஊற்றுவது ...[ எரிச்சலில் தேவலையாப்போய்டும்னு டயாக்னைஸ் ரிப்போர்ட் வேறெ..

கண்ணில் எண்ணெய் விட்டு குளித்தால் சூடு தனியும்...[ விட்டால் கண்ணெய் எடுத்து ஒரு டம்ளரில் ஆற்றி மறுபடியும் எடுத்து வைத்துக்கொள்ள சொன்னாலும் ஆச்சர்யமில்லை ]


இன்னும் பல சொந்த 'ஆப்பு' க்களை வரிசைப்படுத்த வாசகர்கள் வரவேற்கப்படுகிறார்கள்.

Yasir said...

கா.மூ.தொ..கூட்டணியின் தொண்டு அளப்பறியது....தெரியாத & தெரிந்து கொள்ள வேண்டிய விசயங்களை அறியதருவதில் ..கா.மூ.தொ.நிறுவனர் அண்ணன் அபு இபுராஹிம் அவர்களுக்கு நிகர் அவர்களே என்று வாழ்த்தி என் சிற்றுரையை முடிக்கின்றேன்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

டெட்டாலை சுடு தண்ணீரில் ஊற்றி குளிக்கிறவங்க சிலரை கண்டிருக்கேன் !? அது ஏன்னு கேட்டா (ரொம்பவே)சுத்தமா இருக்கவாம் ! மெய்யா !?

Shameed said...

ZAKIR HUSSAIN சொன்னது…

//இன்னும் பல சொந்த 'ஆப்பு' க்களை வரிசைப்படுத்த வாசகர்கள் வரவேற்கப்படுகிறார்கள்//

"தொப்புளில் புண் வந்தால் சுருட்டு சாம்பலை அள்ளி திணிப்பது"

"காயம்பட்ட இடத்தில் காப்பி பொடி அள்ளி அப்புவது"

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

அரியதரும் அற்புதமான சகோ;அபு இபுராஹிமின் முற்ப்போக்கு கூட்டணியின் கொள்கை விளக்கம்.

வேகமாக (அ.நி) ல் பொரியல்,வறுவல்,பெரட்டல்,தாளித்தல் .எல்லாவற்றையும் போடுங்க.திண்டு சாரி
நுகர்ந்து பார்க்கணும்.

அப்துல்மாலிக் said...

ENT கூட்டணியின் வெற்றிக்கு பாடுபடுவோம், மருத்துவர்கள் கூட சொல்லத்தயங்கும் விளக்கம் (அப்புறம் நமக்கென்ன வேலை என்பதால் இருக்குமோ)

தகவல் பகிர்வுக்கு நன்றி காக்கா

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு