Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

யார் செய்கிற கொடுமை ? 15

அதிரைநிருபர் பதிப்பகம் | November 16, 2011 | , ,

அன்பிற்குரிய சகோதர சகோதரிகளே!

தலைப்பைப் படித்ததும் மனசுக்கு படபடண்டு அடிக்குதா? வெடவெடண்டு உதறுதா ?

வேற ஒன்னுமில்லைங்க அது ஊருக்குள்ள "மின்சாரவலிப்பு"ன்னு ஒரு வியாதி பரவி கெடக்குதுன்னு வைத்தியர் சொன்னதாக எங்கேயாவது காணொளி பார்த்தீருப்பீங்க.

முதலில் மனசை கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணுங்க. ஃபிரிட்ஜிலிருந்து சூடா ஸாரி ஆறிப்போன ஒரு டம்ளர் தண்ணீர் குடித்து விட்டு ஆசுவாசம் செய்து கொள்ளுங்க. விசயத்திற்கு வருகிறேன் கவனமா கண் வைத்து காது கொடுத்து கேளுங்க ஆனா இதெல்லாம் கரண்ட் நியூஸ்ங்க.

நம்ம ஆளுங்ககிட்ட வெறுமனே “என்ன ஆச்சு"ண்டு? கேட்டா…

உடனே "அம்மா ஆட்சி"ண்டு சொல்லுறாங்க !

அடுத்து வெவரமா “கரண்டு என்னாச்சு"ண்டு கேட்டா…

அதுவா போச்சு"ண்டு நக்கலா சொல்லுறாங்க !

அதுவா எங்கே போச்சுன்னு யாருக்கும் சொல்லத் தெரியலை மின்சாரம் இருந்தாதான் ஷாக் அடிக்கும் என்பதெல்லாம் அந்தக்காலம் ஆனா நம்ம ஊருல மின்சாரமின்றியும் நிறைய விசயங்களிலும் ஷாக்காக இருக்குது போங்க…

காலையில் குளிப்பதற்கு மின்சார மோட்டார் பொத்தனை அழுத்தினால், வீர்ர்ர்ர்ர் கொண்டு எழுந்து ஆரவாரத்துடன் ஓட ஆரம்பிக்கும் மோட்டாரை. சில நிமிடங்களில் சீத்த ‘வெடி’ போல் வீரியத்தை இழக்க செய்கிறது இந்த மின்சா(ஜு)ரம்.

மீண்டும் மீண்டும் மின்சா(ஜு)ரம் வர (குணமடைவது எப்போதோ?) அந்த திட்டுமுட்டுகிடையில…

சமையல் அறையில் இருந்து ராத்தா, தங்கைமார்களின் சப்தமான குரல் ஓங்குகிறது 'கல்ச்சல்ல போவான் கரண்ட அமத்திட்டானுவோ' என்ற சப்தம் காதுலே வேகமாக ஊடுருவுது. இந்த ஊடுருவல் மட்டும் மின்சாரத் துறையின் காதுகளுக்கு போவதில்லை!

மீண்டும் மின்சா(ஜு)ரம் வர  (குணமடைய)

சரி சட்டையை அயர்ன் பன்னுவோம்ண்டு இஸ்திரி பெட்டிக்கு மின் இணைப்பு கொடுத்து டெம்ப்ரச்சர் ஏத்தி வச்சு அயர்ன் செய்யலாம்ண்டு இஸ்திரி பெட்டியை கையில் எடுத்தால். பெட்டியில் டெம்ப்ரச்சர் குறைய நம்ம மூளைக்குள் சூடு அதிகமாகிறது (டென்ஷன் டென்ஷன் ஒரே டென்ஷன்).

மீண்டும் மின்சா(ஜு)ரம் வர (குணமடைய)

'சரி'ண்டு சொல்லி கடைக்கு போய் கம்பூட்டருக்கு முன்னாடி அமர்ந்து (அ.நி) அமைதின் ஆளுமைக்கு வந்து அமைதி காப்போம்ண்டு வந்தால். சிறிது நேரத்தில் UPSஐ யாரோ கிள்ளிவுட்டுகிட்டு இருப்பது போல் விடாமல் தொடர்ந்து வீல் வீல்ண்டு கத்த விடுகிறது மின்சா(ஜு)ரம்.

இத்துடன் முடிந்ததுண்டு வெறுப்புடன் மனதை ஆறுதல் படுத்திக் கொள்கிறீர்களா?

மீண்டும் மின்சா(ஜு)ரம் வர (குணமடைய)

பாவம் பிஞ்சு குழந்தைகள் யாருக்கு என்ன துரோகம் செய்தது? ஆனா இந்த மின்சாரம் ராத்திரியிலே நமக்கு போட்டியா தூங்கச் செல்கிறது நம்மள காவ காக்கா வச்சுட்டு. அதுல பாருங்க டெண்டர் போட்டு காண்ட்ராக் எடுத்த மாதிரி இந்த ஈவு இறக்கம் இல்லாத கொசு நர்சுகளோ குழந்தைகள் கதற கதற ஊசிகள் போடுதுங்க!.

சிறுசுகள் கதறுவதால் பெருசுகளின் தூக்கமும் பறந்து விடுகிறது குழைந்தங்களை கடித்த கொசுக்களோடு!

இது யார் செய்கிற கொடுமைங்க ?

ஐயா செய்கிறாரா ? அல்லது அம்மா செய்கிறாங்களா ?

கேட்டாக்கா இது அதிரைக்கு மட்டுமல்ல அனைத்து தமிழகத்திலேயும் இருக்கும் மின்சார (மருந்து) தட்டுப்பாடு என்று சாக்கு சொல்லி அங்கும் ஷாக்கு அடிக்கின்றது (சொன்னாலும் ஆனாலும்!)

அதிரை பேரூராட்சிக்கு ஜெயித்த தலைவருக்கு போட்டியாக நின்று தோற்றதும் பின்னர் துணைக்கு நின்று ஜெயித்ததும் பதவிக்கு வந்ததும். ஆளுங்கட்சியான எங்களால்தான் எதையும் செய்ய முடியும்ண்டு, பரபரப்பாக பேட்டியோடு செயல் படுவதையும் காட்டிடும் மாநில ஆளுங்கட்சி சகோதரர்கள் அதிரையில் மலேரியாபோல் பரவிக்கிடக்கும் இந்த மின்சாரத்த ஊருக்குள்ளேயே கட்டிப் போடுங்களேன் அடிக்கடி வந்துட்டு வந்துட்டு ஓடி ஒளிஞ்சுபோயிடுது.. இப்படி வருவதும் வராததுமாக இருக்கும் மின்சார ஜுரத்தை ஆளுங்கட்சி மருத்துவர்களைக் கொண்டு முழுவதும் சரிசெய்ய முடியாவிட்டாலும் பாதிக்கு மேலயாவது முடியுமான்னு யோசிச்சு 'ஷாக்  அடிக்கிற மாதிரி ஒரு "action please !"

- லெ.மு.செ.அபுபக்கர்

15 Responses So Far:

Abdurrahman said...

ஸலாம் ஆளுங்கட்சி அரைகூவல் இவருக்கு எரிச்சல் குடும்பத்து பாசம் பாவம்...

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

மின்சாரத்தை ஜாக்கிரதையாகத்தான் கையாள வேண்டும்...

ஆளும் கட்சியானாலும் எதிர்க் கட்சியானாலும் !

ஷாக் அடிப்பதில் வேகம் மட்டும் இருக்கிறது...

பவர் கட்டுன்னு சொல்றாங்களே அது "எங்கே பொருந்தும்?"

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

கரண்டு ஜுரம்- அது காலமெல்லாம் அதிரைக்கு கிடைத்த வரம். சூப்பரு பக்கரு!

//மின்சார ஜுரத்தை ஆளுங்கட்சி மருத்துவர்களைக் கொண்டு முழுவதும் சரிசெய்ய முடியாவிட்டாலும் பாதிக்கு மேலயாவது//
அம்மாவால் தான் எதுவும் முடியும் என்கிறார்களே அப்பரம் ஏன் பாதி என்று சலுகை வேற காட்டனும்.

'//கல்ச்சல்ல போவான் கரண்ட அமத்திட்டானுவோ' என்ற சப்தம் காதுலே வேகமாக ஊடுருவுது. இந்த ஊடுருவல் மட்டும் மின்சாரத் துறையின் காதுகளுக்கு போவதில்லை!//
பெருநாளிரவுகளில் கெரெண்டை திட்டமிட்டு அமத்திடும் போது நம்ம திட்டுகளை எல்லாம் ஏற்பதில்லை.அந்த இருட்டில் அவங்களுக்கு இன்பமாம்.

Anonymous said...

அந்த அம்மா இன்னும் கிரைய்ன்டெர்,மிக்சி, எல்லாம் கொடுக்குறாங்க அப்போ இன்னும் நல்லா ஷாக் அடிக்குமோ?

அப்துல்மாலிக் said...

மின்சாரம் சாக்கிரதையா ஹேண்டில் பண்ணனும்...

வாழ்க்கைக்கு சம்சாரம்
அதிரைக்கு மின்சாரம்

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

// ஸலாம் ஆளுங்கட்சி அரைகூவல் இவருக்கு எரிச்சல் குடும்பத்து பாசம் பாவம்...//

சகோ அப்துர்ரஹ்மான் போன்றோர்களுக்கு எரிச்சல் இல்லாது நாளேதான்.அதிரையில் மின்சார வாரியம் பரிச்சியமே நடத்துது.

குடும்ப பாசம் இல்லை என்றாலும் பரவா இல்லை.வேஷம் மட்டும் கூடாது அப்பதான் நமக்கு லாபம் .

==============================================================================


// மின்சாரத்தை ஜாக்கிரதையாகத்தான் கையாள வேண்டும்...

ஆளும் கட்சியானாலும் எதிர்க் கட்சியானாலும் !

ஷாக் அடிப்பதில் வேகம் மட்டும் இருக்கிறது...

பவர் கட்டுன்னு சொல்றாங்களே அது "எங்கே பொருந்தும்?"//

கரண்டு பில் கட்ட வில்லை என்றால் தான் இரு கட்சிக்கும் சாக் அடிப்பது வேகமாக இருக்கிறது.

உடனே ஃபீஸ் கேரியலை பிடிங்கிட்டு போறாங்களே அப்பதான் பவர் கட் பொருந்தும்.

=================================================================================

// அம்மாவால் தான் எதுவும் முடியும் என்கிறார்களே அப்பரம் ஏன் பாதி என்று சலுகை வேற காட்டனும்.//


மிக்சி, குக்கர்,கிரைண்டர்,லேப்டாப்,மாடு, போன்றவைகளை இலவசம் என்று மனபாடம் பன்ன முடியாத அளவுக்கு அறிவித்திட்டாங்களே! அதா கொஞ்சோ சலுகை காட்டலாம்ண்டு .


// பெருநாளிரவுகளில் கெரெண்டை திட்டமிட்டு அமத்திடும் போது நம்ம திட்டுகளை எல்லாம் ஏற்பதில்லை.அந்த இருட்டில் அவங்களுக்கு இன்பமாம்.

ஓஹோ அப்படி பெயர் வாங்கு வதற்குத்தான் பெருநாள் என்று பெயர் வந்ததோ?

=====================================================================================

// அந்த அம்மா இன்னும் கிரைய்ன்டெர்,மிக்சி, எல்லாம் கொடுக்குறாங்க அப்போ இன்னும் நல்லா ஷாக் அடிக்குமோ?//


முதலில் அது போன்ற சாதனங்களுக்கு பவர் சப்ளை கொடுத்து விட்டு எர்த்தை சரியாக அடிக்க சொல்லுங்க.அப்பறம்
ஷாக் அடிக்குதா இல்லையாண்டு பார்க்கலாம்.


கருத்திட்ட சகோதரர்களுக்கு மன மார்ந்த வாழ்த்துக்கள் .

sabeer.abushahruk said...

எல் எம் எஸ்,

எப்படி இவ்வளவு டார்ச்சரையும் சகிச்சிக்கிட்டு இருக்க நாம் பழகிவிட்டோம் பார்த்தீர்களா? மின்சாரம் கட்டு, சம்சாரத்திடம் திட்டு, வாப்பாவின் சம்சாரத்திடம் குட்டு என்று என்னவெல்லாம் பாடு பட்டு, நம்மூர் மக்களின் பொழப்பு கெட்டு...

அவசரப் பட்டு நாம்தான் ஏதாவது செய்யனும். அதுவரை, கொசுவலையைக் கட்டுங்கள்.

Yasir said...

பல சமயம் சம்சாரத்தைவிட மின்சாரம் மிக முக்கிய தேவைப்படும்...அதனால அணுவுலையை வேலை செய்ய வுடுங்கப்பா

அபூபக்கர்-அமேஜான் said...

சம்சாரத்தைவிட மின்சாரம் முக்கியம் சம்சாரம் இல்லாமல் இருந்து விடலாம் ஆனால் மின்சாரம் இல்லாமல் இருக்க முடியாது.சம்சாரம் தேவைபட்டால் தான் ஆனால் மின்சாரம் எப்பொழுதும் தேவை.

மு.செ.மு.அபூபக்கர்

sabeer.abushahruk said...

என்ன எல்லோரும் சம்சாரம் மின்சாரம் என்று கார சாரமான விவாதத்தில் இறங்கிவிட்டீர்கள்.

//சம்சாரம் இல்லாமல் இருந்து// அப்ஜக்ஷன் யுவர் ஆனர்,

மின்சாரம் இல்லாமல் முட்டை விளக்கு மெழுகுவர்த்தி என்று சமாளித்துவிடலாம். சம்சாரம் இல்லாமல் பிள்ளைகளுக்கு கழுவி விடுறது யாரு, சோறு தர்ரது யாரு? மின்சாரம் தேவையென்று பேசுவதோடு நிறுத்திவிடுங்கள். சம்சாரத்தை சல்லிசா நெனைக்க வேனாம் ஆமா. இல்லையேல், நாளைக்கு பூவாவுக்கு கஷடப்படுறமாதிரி போட்டுக்கொடுக்க வேண்டியிருக்கும்.

தட்ஸால் யுவர் ஆனர்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கவிக் காக்கா: இது ஞாபகம் இருக்கா ?

மீண்டும் ஊரில் மழையாமே ! அதனால் மின்சாரத்திற்கு கொண்டாட்டமாமே ஓடி ஒளிந்து கொள்ள !?

------------------------------------
மின்னல் வெட்டுக்குப் போன
மின்சாரமும்
ஜன்னல் சாத்தி வந்த
சம்சாரமும்
இன்வெர்ட்டரின் இயலாமையால்
வேகம் குறைந்த மின் விசிறியும்
என மழை வகுத்தது...
கோட்பாடுகள்!
-------------------------------------

Yasir said...

///பூவாவுக்கு கஷடப்படுறமாதிரி போட்டுக்கொடுக்க வேண்டியிருக்கும்// குழந்தைகளுக்கு செகண்ட் டேர்ம் எக்ஜாம்க்காக பிசியாக,பாடம் சொல்லி கொடுப்பதால் அ.நி பக்கம் இன்னும் ஒரு வாரத்திற்க்கு வல்லரசு வரமாட்டார்கள் என்ற தைரியத்தில் சொல்லிவிட்டேன்..கொஞ்ஞ்ஞ்சம் அடக்கிகீகீ வாசிங்க கவிக்காக்கா

அப்துல்மாலிக் said...

தமிழ் நாடு கவர்மென்ட்க்கு ஒரு சின்ன கேள்வி,

டாக்ஸ், கரண்ட் பில் ஒழுங்கா கட்டாவிட்டால்
எங்க மேல பைன் போட்டு காசு வசூல் பண்ணிகிரிங்க.....
அதே மாதிரி
உங்கனால ஒழுங்கா கரண்ட் குடுக்க முடியலினா
நாங்க கட்டுற பில்லுல காசு கம்மி பண்ண முடியுமா ???
இல்ல.......EB மேல பைன் போட்டு அடுத்த பில்லுல அஜெஸ்ட் பண்ணிக்க முடியுமா ???

KALAM SHAICK ABDUL KADER said...

”ஷாக்”அடிக்கும் மின்சாரம்
“ஜோக்”அடிக்க வைத்தாலும்
“பவர் கட்” ஆனதால் சூரியன் ஆட்சி
“பவர் கட்” ஆனதை இலையுதிர் காட்சி
வருமுன் காத்திடுங்கள் ஆள்வோரே

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

// எல் எம் எஸ்,
எப்படி இவ்வளவு டார்ச்சரையும் சகிச்சிக்கிட்டு இருக்க நாம் பழகிவிட்டோம் பார்த்தீர்களா? மின்சாரம் கட்டு, சம்சாரத்திடம் திட்டு, வாப்பாவின் சம்சாரத்திடம் குட்டு என்று என்னவெல்லாம் பாடு பட்டு, நம்மூர் மக்களின் பொழப்பு கெட்டு...//

அந்த வெருப்புலத்தான் கொசுக்களுக்கு நம்மவர்களின் திட்டு.

//அவசரப் பட்டு நாம்தான் ஏதாவது செய்யனும். அதுவரை, கொசுவலையைக் கட்டுங்கள். //

அவசரப்பட்டு கொசு வலை கட்ட .படை எடுத்து வலையை சுற்றி வருகிறது நம்மை தீர்த்து கட்ட .



மின்சாரத்திற்கு மின்னலாய் கருத்திட்ட சபீர் காக்க,சகோ;யாசிர்,அபூபக்கர்,அப்துல் மாலிக்,கலாம் காதிர் காக்கா,ஆகியோருக்கு.இடிபோல் வாழ்த்துக்கள்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு