நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

ராக்கெட் விடலாம் வாங்க! 46

Unknown | ஞாயிறு, மே 01, 2011 | , ,

இந்தியாவின் பிஎஸ்எல்வி-சி16 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் உள்ள ஏவுதளத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. ரிசோர்ஸ்சாட்-2, யூத்சாட். எக்ஸ்-சாட் ஆகிய 3 செயற்கைக்கோள்களுடன் இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. விண்ணில் ஏவப்பட்ட 18 நிமிடங்களில் 3 செயற்கைக்கோள்களையும் பிஎஸ்எல்வி ராக்கெட் சுற்றுவட்டப்பாதையில் செலுத்தியது.


சுற்று வட்ட பாதை என்றால் என்ன?

அங்கு யாருப்பா ரோடு போட போறதுன்னு நினைக்க வேண்டாம் இங்கு கணினியில் போடும் கோடு தான் அங்கு ராக்கெட் போகும் ரோடு. நாம் இங்கு இந்தியாவில் இருந்து செலுத்தப்படும் ராக்கெட் புவி ஈர்ப்பு விசையை தாண்டி (பூமியில் இருந்து கிட்டத்தட்ட 15 km வரை புவி ஈர்ப்பு விசை இருக்கும் ) 350 kmல் இருந்து 450 km மேலே பூமி சுற்றும் வேகத்திற்கு இணையாக இந்த செயற்கைக்கோள் இந்தியாவின் மேல் சுற்றிக்கொண்டு வரவேண்டும் அப்படி சுற்றிக்கொண்டு வந்தால் தான் நாம் நமது நாட்டின் போக்குவரத்து கனிம வளங்களை படம் எடுக்க முடியும்!.


எரிபொருள்

1206 கிலோ எடைகொண்ட ரிசோர்ஸ்சாட்-2 தற்போது விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. இதன் ஆயுள்காலம் 5 ஆண்டுகள். 5 ஆண்டுகள் பூமியை சுற்றிவரும் என்றால் இதற்க்கான எரிபொருளுக்கு என்ன செய்வார்கள் என்ற கேள்வியை நம்ம கவிக்காகா கவிதையாய் கே(கு)ட்டுவைப்பார் அதற்கான பதில் தான் கிழே.

நாம் புவி ஈர்ப்பு விசையை தாண்டி என்ன வேகத்தில் செயற்கைக்கோளை(அல்லது வெறு எந்த பொருளையும்) செலுத்தினோமோ(வீசுதல்) அதே வேகத்தில் அது பூமியை சுற்றிக்கொண்டே வரும் காரணம் அங்கு பூமியைப்போல் இழு விசை கிடையாது என்பதால் செலுப்தப்பட்ட .செயற்கைக்கோள் கொஞ்சம் கூட வேகம் குறையாமல் செலுத்திய வேகத்திலையோ பூமியை சுற்றி வலம் வந்துகொண்டே இருக்கும்.ஆகையால் 5 வருடமோ அல்லது 10 வருடமோ பூமியை செயற்கைக்கோள் சுற்றி வருவதற்கு எந்தவித் எரிபொருளும் அங்கு தேவைப்படாது

மின்சாரம்

செயற்கைக்கோள்  செயல்பட தேவையான மின்சாரம் சூரிய ஒளியில் இருந்து  சோலார் பேணல் மூலம் மின் உற்பத்தி செய்யப்பட்டு இந்த மின்சாரத்தை கொண்டுதான்     செயற்கைக் கோளில் உள்ள கேமரா மற்றும் அதில் உள்ள மின்னணு சாதனங்கள் அனைத்தும்  இயங்கும்.


கேமரா

செயற்கை கோளில் பொருத்தப்பட்டிருக்கும் கேமராக்கள் மிக துல்லியமாக புகைப்படங்களை எடுத்து கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பும் எந்த அளவுக்கு என்றால் ஜாகிர் வீட்டு மாடியில் ரூபவாகினி டிவி க்கு அன்று நாங்களாக செய்து கட்டிய ஆண்டனா இன்று எந்த நிலையில் உள்ளது என்பதனை மிக துல்லியமாக பார்த்துவிடலாம். அதுபோல் நொங்கு விற்கும் மாட்டு வண்டி கடற்கரை தெருவில் நிற்கின்றதா? தக்குவா பள்ளி வாசல் அருகில் உள்ளதா அல்லது மொத்த நொங்கையும் நம்ம MSM மொத்தமாக வாங்கி வீட்டுக்கு கொண்டுபோய்விட்டார ? என்பதனை கூட பார்த்தது விடலாம்.மேலும் பூமியில் நிகழும் பெரும் மாற்றங்களையும் இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.கடலில் மீன்கள் எங்கு அதிக அளவில் காணப்படுகிறன என்பதனை அறிந்து மீனவர்களுக்கு தகவல் கொடுக்கலாம்.

விண்ணில் இருந்து பூமியை பார்க்கும் போது மற்ற இடங்களை விட புனித மக்கா மிக தெளிவாக தெரிகின்றதாம்!

-- Shameed
   Dammam

46 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

அட நம்ம ஊரு மேட்டரு ராக்கெட் விட்டு பறக்குதா !

விஞ்ஞானத்தையும் கலகலப்போடு (அதுக்காகா ராக்கெட் பார்ட்ஸெல்லாம் ஆடுதான்னு கேட்க்கக் கூடாது) சொல்வதில் உங்களின் வாகே தனிதான் !

இந்த ராக்கெட்தான் பரபரபில்லாமல் சென்றது காரனம் பத்திரிக்கைகளின் மேய்ச்சல் வேறுபக்கம் அதிகமிருந்ததால்.

அதிரை முஜீப் சொன்னது…

ஒரு நல்ல தமிழ் அறிவியல் கட்டுரை!. தொலைக்காட்சியில் ராக்கெட் ஏவுவதை மட்டுமே கன்று வந்த நமக்கு அதன் செயல் பாடுகள் விண்ணில் எப்படி நடைபெறுகின்றது என்று விளக்கிய விதம் அருமை!. படிக்க படிக்க இன்பம் தரும் என்று படித்துகொண்டே சென்றால், இறுதியில் அறிவியலுடன் அதிரையின் சேட்டையும் கலந்துவிட்டதே!.

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

எங்கே சகோ முஜீப் ஆளையேக் காணோம் !?

sabeer.abushahruk சொன்னது…

ஹமீது, விளக்குவதற்குக்  கஷ்டமான விஷயத்தை எடுத்துக்கொண்டு கட்டுரை எழுதுவது ஒரு த்ரில்தான். உங்களுக்கு த்ரில்லெல்லாம் க்ரில் கோழிமாதிரின்னு எனக்குத் தெரியும்.

நல்லாருக்கு. இன்னும் கொஞ்சம் தூரம் ராக்கெட் விட்டிருக்கலாம். ஐ மீன், கட்டுரைச் சின்னதா இருக்கு. பின்னூட்டத்தை பெரிசாக்கிடுவோம். 

Yasir சொன்னது…

சவுதி அரபியாவில் எரிபொருள் விலை கம்மி என்பதற்க்காக இத்தனை ராக்கெட்டைவிட்டு எங்கள் மனங்களையெல்லாம் கொள்ளை கொண்டு போகிறீர்கள்...அதப்படி இவ்வளவு பெரிய மேட்டரை...வஹாப்பாக்கா கடை ரொட்டியை பிச்சிபோட்டு சால்னாவில் ஊறவைத்து சாப்பிடுவது போல் எளிமையாக தருகிறீர்கள் (அங்கே சாப்பிட்டால் ஹைஜினிக் பிராப்பளம் உங்கள் ஆக்கத்தை படித்தால் ஹை எனர்ஜி கொண்டாட்டம் )....கலக்கீட்டீங்க காக்கா

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) சொன்னது…

செயற்கைக் கோள் செயல்படும் விதமும், அதில் நொங்கு வரை சம்பந்தப்படுத்தி விளக்கிய விதமும் மிக அருமை

தாஜுதீன் (THAJUDEEN ) சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும்,

நலமா ஹமீது காக்கா,

ராக்கெட் விட்டு எங்கள் மனதை கொள்ளையடித்துவிட்டீர்கள். தங்களின் தெளிவான விளக்கம் எல்லோருக்கும் புரியும்படி உள்ளது.நீங்கள் சொன்னவைகள் என்னைப் போன்றவர்களுக்கு புதிய தகவல்.

வாழ்த்துக்கள் காக்கா.

நேரமின்மையால் பிறகு மேலும் கருத்திடுகிறேன்.

அதிரை முஜீப் சொன்னது…

அபுஇபுறாஹீம் சொன்னது…

எங்கே சகோ முஜீப் ஆளையேக் காணோம் !?

அதான் உள்ளேன் ஐயா என்று வந்துட்டேனே!.

பணிசுமை!. குறிப்பாக கம்பெனியின் வருட இறுதிக்கனக்கை இறுதி செய்யும் வேலை!. அத்துடன் கண்சாலிடேசன் ஆப் குரூப் பேலன்ஷீட்!. இன்னும் ஒரு சில தினங்களில் முடிந்துவிடும்.

sabeer.abushahruk சொன்னது…

//5 ஆண்டுகள் பூமியை சுற்றிவரும் என்றால் இதற்க்கான எரிபொருளுக்கு என்ன செய்வார்கள் என்ற கேள்வியை நம்ம கவிக்காகா கவிதையாய் கே(கு)ட்டுவைப்பார்//

சார், நான் அப்பிடிலாம் கேட்கமாட்டேன் சார். புவி ஈர்ப்பு விசையை எதிர்த்து வாணில் ஏவுவதற்குத்தான் எரிபொருள் கம்பஷ்ஷன் எக்ஸாஸ்ட் எல்லாம் தேவைப்படும். not for floating.

பூமி தன்னைத்தானேச் சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றி வருகையில் நீக்க அனுப்பிய செயற்கைக் கோல் எந்த அச்சில் சுற்றும்? தவிர, சுற்றும்போது, அதாவது பூமியைச் சுற்றும்போது சுற்றிச் சுற்றி பூமியோடு அந்தப் பக்கம் போயிட்டா ஈந்தியாவை எப்படி படம் பிடிக்கும் போன்ற கேள்விகளுக்கு தலை சுற்றுது என்று சொல்லாமல்  ஒழுங்கு மருவாதியா நீங்களோ உங்க என் ஏ எஸ்ஸோ பதில் தராட்டா அப்புறம் உங்கள "அட்டு விஞ்ஞானி" என்று அழைக்கும் கட்டாயத்திற்கு நான் தள்ளப்படுவேன் என்பதை அன்புடன்...சோடா ப்ளீஸ்!

Yasir சொன்னது…

கவிகாக்கா இப்பவே தலை சுத்துதே....கவிக்காக்காவின் கேள்விகணைகளை ஏவுகணை தாக்கி அழிக்க எங்கள் சாவன்னா காக்காவை கூப்பிட்டு அமர்கிறேன்....தம்பி காக்கா சாப்பிட்ட சோடா எதுவிவும் மிச்சம் இருந்த குடுப்பா

Yasir சொன்னது…

கவிகாக்கா பேச்சு பேச்சாதான் இருக்கணும் அது என்ன பட்டபெயர் எல்லாம் இப்பவே செலக்ட் பண்ணுறது...இதை நான் மென்மையாக கண்டிக்கிறேன்

Shameed சொன்னது…

sabeer.abushahruk சொன்னது…
//அந்தப் பக்கம் போயிட்டா ஈந்தியாவை எப்படி படம் பிடிக்கும் போன்ற கேள்விகளுக்கு தலை சுற்றுது என்று சொல்லாமல் ஒழுங்கு மருவாதியா நீங்களோ உங்க என் ஏ எஸ்ஸோ பதில் தராட்டா அப்புறம் உங்கள "அட்டு விஞ்ஞானி" என்று அழைக்கும் கட்டாயத்திற்கு நான் தள்ளப்படுவேன் என்பதை அன்புடன்...சோடா ப்ளீஸ்!//

என்ன இப்படி சுத்தி விட்டுடீங்க!
எங்க ஆசான் NAS வருவார் தக்க பதில் தருவார்.

அவர்தரும் பதிலில் நீங்கள் ஏழுUP குடித்ததுபோல் இருக்கும்

Shameed சொன்னது…

Yasir சொன்னது…

கவிகாக்கா பேச்சு பேச்சாதான் இருக்கணும் அது என்ன பட்டபெயர் எல்லாம் இப்பவே செலக்ட் பண்ணுறது...இதை நான் மென்மையாக கண்டிக்கிறேன்


என்ன இருவரும் ஒரே சுற்று பாதையில் வளம் வருவது போல் உள்ளது

யாருபோட்ட கோடு!

எங்கே துணை கோள்களை காணோம்!

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

அதுக்குத்தான் ரொம்ப மேலே போகக்க் கூடாதுன்னு சொல்றது... அதான் தானாக மெதப்பு வந்திடுதுல !

(விஞ்)ஞானிகள் நிறைந்த சபையிது ஆதலால் ! :)

24 மணிநேரமும் படம் தகவல்களையும் புகைப்படங்களையும் எடுத்து அனுப்பும் என்று சொல்கிறார்களே !? மிதந்து செல்லும் வழித்தடங்கள் யாவுமா ? அல்லது இந்திய வரைபடத்திற்கு மேல் மிதக்கும் போது மட்டுமா ?

ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு உந்தச் செய்து அங்கே மையம் கொள்ள வைத்து வேவும் பார்க்கலாம் தானே ? அப்படின்னா !? தமிழகத்தில் காணாமல் போன மின்சாரத்தை கண்டு பிடித்து தருவாய்ங்களா ?

ZAKIR HUSSAIN சொன்னது…

To Bro Shahul,

your extra ordinary talent in explaining science related matters makes me surprise. I wonder how you miss the university degree in science like others.[ you cannot blame your parents for that...am i right?]

sabeer.abushahruk சொன்னது…

//எங்கே சகோ முஜீப் ஆளையேக் காணோம் !? //

ஓட்டு சேகரிச்சிட்டுப் போன ஆளு ஓட்டு எண்ணிக்கை நெருங்கும்போது தலையைக் காட்டுது.

இந்த தலைவர்கள்ன்னாலே இப்படித்தான். ஆ ஊனா ஓய்வெடுக்கப் போய்டர்றாங்க!

Shameed சொன்னது…

ZAKIR HUSSAIN சொன்னது…
To Bro Shahul,

your extra ordinary talent in explaining science related matters makes me surprise. I wonder how you miss the university degree in science like others.[ you cannot blame your parents for that...am i right?]

Yes i cannot blame my parents. your always right

Mohamed Meera சொன்னது…

(NAS)சாகுல் சாரிடம் நல்ல பழக்கம் உள்ளதால்-அவர் சார்ந்த -இயற்பியல் துறையில் பூந்து விளையாடுகின்றாய்-வாழ்த்துக்கள்

உன் கட்டுரையே படிக்கும் போது பள்ளி பருவத்தில் உங்க வீட்டு மாடியில் (ஹாஜா வுடன் சேர்ந்து) FM ரேடியோ ஒலி பரப்பு செய்தது எல்லாம் ? ம்ம்ம் திரும்பி வராத பசுமையான நினைவுகள்.
அப்போதே அறிவியல் சிந்தனை உன்னிடம் உண்டு என்பது தெரியும்- ஆனால் ராக்கெட், செயற்கை கோள் பற்றி எல்லாம் -கட்டுரை எழுதும் அளவு ஆற்றல் உண்டு-என்பது இப்ப தாம்ப தெரியுது.
கட்டுரை குறைவாக இருந்தாலும் நிறைவாக இருந்தது
வாழ்த்துகள்

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

// இந்த தலைவர்கள்ன்னாலே இப்படித்தான். ஆ ஊனா ஓய்வெடுக்கப் போய்டர்றாங்க! //

ஆமாம் காக்கா ! இரண்டு நாட்களுக்கு முன்னர் ஒரு ஜோக் படித்தேன் "என்ன ஆச்சு தலைவருக்கு எலெக்ஷன் தான் முடிந்து விட்டதே இன்னும் வீடு வீடா போயிகிட்டு இருக்காறேன்னு" ஒருத்தர் கேட்க..

அதற்கு மற்றவர் "வேற ஒன்னுமில்லை வீடு வீடா சென்று யாருக்கு ஓட்டுப் போட்டிங்கன்னு கேட்டுகிட்டு இருக்கார் இவய்ங்க ரிஸல்ட் அறிவிக்கும்போது தோல்வியடைஞ்சா மனசை தேத்திக்கலாம்னுதான்"

Shameed சொன்னது…

அபுஇபுறாஹீம் சொன்னது…
//ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு உந்தச் செய்து அங்கே மையம் கொள்ள வைத்து வேவும் பார்க்கலாம் தானே ? அப்படின்னா //

சோடா குடித்தவர்கள் கேட்ட கேள்விக்கு நம்ம ஆசான் ஷாகுல் சார் இதுவரை பதில் சொல்லவில்லை அவர் எங்கு உள்ளார் என உந்து சக்தியை பயன் படுத்தி ராக்கெட்டை உந்தச் செய்து சிங்கப்பூருக்கு மேலே நிறுத்தி அங்கே மையம் கொள்ள வைத்து வேவு பார்க்கலாம் NAS அவர்கள் எங்கே என்று.

Shameed சொன்னது…

Mohamed Meera சொன்னது…
//உன் கட்டுரையே படிக்கும் போது பள்ளி பருவத்தில் உங்க வீட்டு மாடியில் (ஹாஜா வுடன் சேர்ந்து) FM ரேடியோ ஒலி பரப்பு செய்தது எல்லாம் ? ம்ம்ம் திரும்பி வராத பசுமையான நினைவுகள்//


இப்போது சீரழிந்துவரும் மொபைல் போன் பற்றி அப்போதே (1984) நானும் ஹாஜவும் மொபைல் போன் செய்வதற்கு முயற்சித்தோம் (சிந்தித்தோம்) செலவு அதிகம் வரும் என்றதும் மொபைல் போன் மேட்டரை கைவிட்டோம்

அலாவுதீன்.S. சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

இந்தியாவின் பிஎஸ்எல்வி-சி16 ராக்கெட்டை அனுப்பி வைத்து விட்டு:

/// நொங்கு விற்கும் மாட்டு வண்டி கடற்கரை தெருவில் நிற்கின்றதா? தக்குவா பள்ளி வாசல் அருகில் உள்ளதா அல்லது மொத்த நொங்கையும் நம்ம MSM மொத்தமாக வாங்கி வீட்டுக்கு கொண்டுபோய்விட்டார ? என்பதனை கூட பார்த்தது விடலாம்.///

நொங்கு வண்டியை கண்டுபிடித்துவிடலாம் என்று முடித்த சகோதரர் (((கலக்கல்))) ஹமீதிற்கு வாழ்த்துக்கள்.

தாஜுதீன் (THAJUDEEN ) சொன்னது…

// Shameed சொன்னது… இப்போது சீரழிந்துவரும் மொபைல் போன் பற்றி அப்போதே (1984) நானும் ஹாஜவும் மொபைல் போன் செய்வதற்கு முயற்சித்தோம் (சிந்தித்தோம்) செலவு அதிகம் வரும் என்றதும் மொபைல் போன் மேட்டரை கைவிட்டோம் //

இது என்ன ஹமீது காக்கா புது மேட்டரா இருக்கு, இனி "மொபைல் போன் தயாரிக்கலாம் வாங்க !" என்ற தலைப்புடன் பதிவு விரைவில் உங்களிடமிருந்து மிக ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறோம். சீரியஸா தான் சொல்லுகிறேன் காக்கா

Unknown சொன்னது…

Super Science Knowledge in Simple Language......We learn lot from you Kaka...........

Shameed சொன்னது…

harmys சொன்னது…
//
Super Science Knowledge in Simple Language......We learn lot from you Kaka...........//

I am Just Printer only Computer in Singapore , I mean we learn from mr NAS

sabeer.abushahruk சொன்னது…

சரிப்பா, 

இலகுவாகவே கேட்கிறேன்.

இது ஒன்னும் மச்சான் சுற்றிவரும் மச்சி அல்ல இஷ்டம்போல் சுற்றிவர. செயற்கை துணைக்கோல் சுற்றும் அச்சு. 

உதாரணத்திற்கு, மீசை அரும்பிய காலத்தில் ஒரு கேளை சாரி கோளை நீங்கள் சுற்றி வருகிறீர்களே அந்த சுற்றுக்கும் அந்த கேள் சாரி கோள் சுற்றும் இடத்திற்கெல்லாம் சேர்ந்து சுற்றுகிறீர்களே அந்த் சுற்றிற்கும் உள்ள தொடர்புபோல...(சார், ரிலேட்டிவிட்டி தடுமாறுது. ஐன்ஸ்டீன் வேற மர்கயா இப்ப யார்ட்ட கேட்பது)

சரி, வேற மாதிரி ட்ரைப் பண்ணுவோம். இந்தியா அனுப்பிய சாட்டிலைட் இந்தியாவின் ஒரு குறிப்பிட்ட பகுதியின் அல்லது மொத்த இந்தியாவின் குறிப்பிட்ட தகவலுக்கென வடிவமைக்கப்பட்டு மிதக்கவிடப்படுகிறது எனில் அது பூமியோடு செர்ந்து சுற்றுவது சரியா அல்லது பூமியைச் சுற்றுவது சரியா? 

பூமியச் சுற்றுவது சரியெனில் என் மேற்கண்ட பின்னூட்டத்திற்கு இன்னும் பதில் வரல. பூமியோடுச் சுற்றுவது சரியெனில்... 

வட போச்சே...

அதிரைநிருபர் - வாசகர் கருத்து [மின்னஞ்சல் வழி]. சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும்.

சாஹுலாக்கா,

ராக்கெட் உட்ரத்துலேயே ஈக்கிறியெளெ எப்பொ கம்பி மத்தாப்பு, கொம்பு மத்தாப்பு, சங்குசக்கரம், சாட்டை உட்ரது?

உண்மையில் விண்வெளி என்பது பல லட்ச அதிசயங்களும், ஆச்சரியங்களும் புதைந்தல்ல, மிதந்து கிடக்கும் இறைவனின் அற்புதமான படைப்பு. அதை நாம் ஆராய்ச்சி செய்ய முற்பட்டால் நம் வயது பட்டாணிக்கடலை சாப்பிடும் நேரம் போல் கரைந்து விடும்.

மனிதர்கள் இதில் ஆர்வமும், அக்கறையும் எடுத்து பல சிரமங்களை மேற்கொண்டதனால் தான் இன்று நாம் டெலிபோன், அலைபேசி, தொலைக்காட்சி, வானொலி, இன்டர்நெட் போன்ற எண்ணற்ற தொலைத்தொடர்பு சாதனங்களை சிரமமின்றி சுலபமாக எங்கிருந்தாலும் பயன்படுத்த முடிகிறது. (அதில் பணப்பேராசை கொண்டு மனிதன் அலைக்கற்றை பங்கீட்டில் அல்லல்பட்டு நிற்கிறான்)

அரசியல் கட்சிகளின் வானலாவ இலவச அறிவுப்புகளும் அது அப்படியே தேர்தல் முடிவுக்குப்பின் மக்களுக்கு குறையின்றி கிடைத்து விட்டாலும் நாம் சந்தோசப்படுவதற்கில்லை.

காரணம் மனிதனுக்கு குறிப்பாக நம் இந்தியக்குடிமகனுக்கு மின்சாரத்தேவை என்பது மிக,மிக இன்றியமையாத ஒன்றாகி விட்டது. பெட்ரோல், டீசல் போன்ற இயற்கை எரிபொருள்கள் கச்சாப்பொருட்களாக மண்ணில் புதைந்திருந்தால் தான் அதை நவீன கருவிகள் கொண்டு வெளிக்கொண்டு வர முடியும். அதை மக்களின் பயன்பாட்டிற்கு பயன்படுத்த முடியும். ஆனால் மின்சாரம் தயாரிக்க அணுமின்நிலையங்கள் மூலமோ அல்லது நிலக்கரி மூலமோ அல்லது தண்ணீர் மூலமோ (கடல் தண்ணீராகவோ அல்லது அணையின் தண்ணீர் தேக்கம் மூலமாகவோ) அல்லது காற்றின் மூலமாக காற்றாலைகள் வைத்து அல்லது சூரிய ஒளியின் மூலம் அதற்கேற்ற பிரத்யேக தகடுகள் வைத்து தயாரிக்கலாமே? மின்சாரம் ஒரு வழியில் இருந்து மட்டும் தான் பெற முடியும் என்ற சூழ்நிலை இல்லையே? இதில் ஏன் மத்திய, மாநில அரசுகள் துரித நடவடிக்கை எடுத்து அதற்கான (ஐந்தாண்டு அல்லது பத்தாண்டு) திட்டங்கள் பல ஏற்படுத்தி நம் நாட்டின் மின்சாரத்தேவையை நிறைவேற்ற முடியாமல் மெத்தனம் காட்டுகின்றன அல்லது தடுமாறுகின்றன என்பது விளங்கவில்லை.

சிறிதும் மக்கள் நலன் கருதாமல் மத்திய மாநில அரசின் அரசியல்வாதிகள், அரசின் உயர் அதிகாரிகள் அவர்களின் முற்போக்கு சிந்தனையின்றி பணம் புரட்டுவதிலேயே காலங்களைக்கடத்துவார்களானால் இந்தியா நிச்சம் இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் பத்தாயிரம் மகாத்மாக்களும், அன்னா ஹசாரேக்கள் வந்தாலும் ஒரு போதும் மிளிரப்போவதில்லை. மாறாக இருளில் (இருட்டுகசமாகத்தான்) மூழ்கித்தான் கிடக்கும்.

சுய தொழில் போல் பல லட்சம் செலவு செய்து காற்றாலை அமைத்து அதன் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்து தரும் தனியார் நிறுவனங்களை அரசு ஊக்கப்படுத்துவது இல்லையாமே? மாறாக அவர்களுக்கு அரசின் பண பாக்கி, வரி போன்ற சுமைகள் சுமத்தப்படுவதாக பத்திரிக்கைகளில் நாம் படித்து வருகிறோம். 'ஒன்னு நீ போதிய மின்சாரம் உற்பத்தி செஞ்சி கொடு; இல்லாட்டி அதை உற்பத்தி செஞ்சி தரும் தனியார் நிறுவனங்களை ஊக்கப்படுத்து' இவ்விரண்டில் எதையுமே செய்யமாட்டேன் என்று அரசு அடம்பிடித்தால் எப்படி? பல கோடிகள் இதில் கிடைக்க வாய்ப்பில்லையோ? என்னவோ தெரியவில்லை நாம் அறியோம்.


ஏழையாக இருந்தாலும் பணக்காரனாக இருந்தாலும் அவன் அன்றாட தேவைக்கு மின்சாரம் தடையின்றி தொடர்ந்து கிடைக்க வேண்டும் என நினைக்கிறான். அதற்கான கட்டணம் செலுத்தவும் தயாராக இருக்கிறான்.அதை அவன் அரசிடமிருந்து இலவசமாகவோ அல்லது மானியத்திலோ கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதில்லையே? பிறகு ஏன் மத்திய, மாநில அரசுகள் இதில் கவனம் செலுத்துவதில்லை?

நம் அறிவுக்கு எட்டியதை இங்கு பகிர்கிறோம். அதற்கு ஆயிரம் காரண,காரியங்கள் சொல்ல அவர்கள் தயாராகத்தான் இருப்பார்கள் என்றும்.

எனவே சாஹூலாக்கா, நமக்கு நொங்கு வண்டி எங்கு நிற்கிறது என்பது முக்கியமல்ல மின்சாரம் எங்கு "சல்லிசா" கிடைக்கும் என்று உங்கள் செயற்கைக்கோளிடம் கொஞ்சம் இயற்கையாக கேட்டு சொல்லுங்களேன். (கெரண்டு இருந்தா தானே நொங்கு ஜூஸ் மிக்ஸியிலெ போட்டு அரைக்க முடியும். ஐஸ் பொட்டிக்குள்ளே வச்சி குளிரூட்ட முடியும். இண்வெண்டர் மூலம் மிக்ஸியில் அடித்துக் கொடுக்கப்படும் ஜூஸ் இங்கு செல்லாது).

எனவே சம்சாரம் இல்லாமல் கூட இருந்து விடலாம். மின்சாரம் இல்லாமல் இன்று இருக்கவே முடியாது என்று யாரோ முணங்குகிறார்கள்.......

மு.செ.மு. நெய்னா முஹம்மது.

அதிரை முஜீப் சொன்னது…

sabeer.abushahruk சொன்னது…

//எங்கே சகோ முஜீப் ஆளையேக் காணோம் !? //

ஓட்டு சேகரிச்சிட்டுப் போன ஆளு ஓட்டு எண்ணிக்கை நெருங்கும்போது தலையைக் காட்டுது.

இந்த தலைவர்கள்ன்னாலே இப்படித்தான். ஆ ஊனா ஓய்வெடுக்கப் போய்டர்றாங்க!

@@@@@@@

பின்ன என்ன பண்றது?. கொடநாடு(umbrellah nation)
எஸ்டேட் வாங்கியதிலிருந்து சும்மா கெடக்குதே!. அதனால அடிக்கடி ரெஸ்ட் எடுக்க வேண்டியதாயிற்று!. நான் சும்மா இருந்தாலும், அதை விற்றவர் அடிக்கடி தொல்லை கொடுத்து வரும் சட்டசபையின் மந்திரி நியமனம் பற்றி ஆலோசனை செய்ய வேண்டியதால் அழைத்திருந்தார். என் சார்பாக கலைஞருக்கு வைரமுத்து போல் புரட்சி தலைவிக்கு கவிக்காக்காவை சிபாரிசு செய்துள்ளேன்.

Shameed சொன்னது…

sabeer.abushahruk சொன்னது…
//சரி, வேற மாதிரி ட்ரைப் பண்ணுவோம். இந்தியா அனுப்பிய சாட்டிலைட் இந்தியாவின் ஒரு குறிப்பிட்ட பகுதியின் அல்லது மொத்த இந்தியாவின் குறிப்பிட்ட தகவலுக்கென வடிவமைக்கப்பட்டு மிதக்கவிடப்படுகிறது எனில் அது பூமியோடு செர்ந்து சுற்றுவது சரியா அல்லது பூமியைச் சுற்றுவது சரியா?//

சுத்தல் கேள்வி தலை சுத்தலகவே உள்ளது!

உங்கள் ஆசைபடி அட்டு "விஞ்ஞானி" என்றே பெயர் வைத்துக்கொள்ளுங்கள் இதுக்கு தானே ஆசைபட்டிய (எப்படியோ விஞ்ஞானி குருப்பில் சேர்த்த வரை சந்தோசம்)

Shameed சொன்னது…

MSM
//ராக்கெட் உட்ரத்துலேயே ஈக்கிறியெளெ எப்பொ கம்பி மத்தாப்பு, கொம்பு மத்தாப்பு, சங்குசக்கரம், சாட்டை உட்ரது?
//

அதெல்லாம் சின்ன வயசுலே விட்டு இப்போ ராக்கெட் விட்டா நம்ம கவிக்காகா சுத்தோ சுத்துன்னு சுத்தி விட்டுப்புடக இத யாரும் வன்மையா கண்டிக்களோ மென்மையா கட்டிகிறாங்க!

அப்துல்மாலிக் சொன்னது…

தகவல் பகிர்வுக்கு நன்றி, தெளிவான படைப்பு

N.A.Shahul Hameed சொன்னது…

Assalamu Alaikkum brothers,
I juz now arrived from my short visit to India. I took a long time to read all the postings of our beloved friends, what all I missed during this period of two weeks.
It is quite interesting to see the interviews taken by bro zakhir with my dearest friend and mentor SKMH and my most respected Wavanna Sir. These two gems and my most respectful Aliar sir, have contributed a lot for the cause of quality education and dicipline to the students of KMHS. Really their services are ever remembered and cherished by those of his fortunate students. I pray Allah to shower his blessings and let them live longer and healthier for many more years.
Coming to my bro Savanna's article on the satellites and rocket technology, I was wondering which Hameed wrote this article. I reconfirmed that it is my and my own bro Savanna. I know very well Savanna has an inborn nature to explore anything that matters to him to the complete extent. At times he had made me wondering how he is able to think so differently on various fields that are not at all relevant to him. His innovative ideas are really the subject matter of research.
Shabeer knows very well that when a satellite rotates around, it has two options namely geostationary orbit and oblique orbit. A geostationary satellite rotates at a speed (velocity) exactly equal to the speed of the earth. It has to be deployed above the equatorial line at an altitude of about 22.237 miles. This one appears to remain static with a point on earth. If it is fixed at a point right above Delhi it will appear to remain at the same location. Therefore we don't require a tracing antenna. If it is deployed at an oblique angle it requires a tracing device to receive its signals.
Your questions is which is better, a geostationary or an oblique satellite? The answer depends on various factors. The type of application, the life time of the satellite, the budget are some of the factors influencing the satellite.
I hope Shabeer has made all of us to go around the satellite and view the world.
I am happy to see my first student Noor Mohamed, the Navalar of KMC has also joined this forum. My hearty welcome to you.
Wassalam
N.A.Shahul Hameed

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

இதுக்கு மட்டுமா தேடினோம் நிறைய இருக்கே... இன்னும் படிக்காமல் விட்டுப் போன பதிவுகளையும் படித்து விட்டு பதில் தாங்க NAS-சார்...

N.A.Shahul Hameed சொன்னது…

Assalamu Alaikkum Bro Abu Ibrahim,
Inshya Allah I will share all my views and opinions hereafter regularly.
And I want to recollect my sweet memories with my beloved bro Umar Thambi. Can you accept it as a separate article and how can I send it to you?
Wassalam
N.A.Shahul Hameed

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

Dear NAS Sir:

Alaikkumussalaam...

Please send your article to editor@adirainirubar.in / adirainirubar@gmail.com.

Offcourse ! we all waiting for it !

Your comments about Navalar (of KMC) Noor Mohammed already forwarded to his personal email.

sabeer.abushahruk சொன்னது…

சார், வெல்கம் பேக்.

டெல்லிக்கு மேல் நிலையாக மிதக்கவிடப்பட்ட சாட்டிலைட் ஏன் சுற்றனும்? பூமி தன்னைத்தானே ஒரு ஆக்ஸிஸில் சுற்றும்போது சாட்டிலைட் எக்ஸ்டெர்னல் ஃபோர்ஸ் இல்லாததாலும் கிராவிட்டேஷனும் அற்றுப்போனதாலும் சும்மாத்தானே நிற்கனும். சுற்றுவதற்கானா முடுக்கு விசை எப்படி கிடைத்தது?

சுற்றலில் பூமிக்கும் சாட்டிலைட்டுக்குமான தொடுப்பு என்ன? கியோஸ்டேஷனரி சுற்றலைப்பற்றி மட்டும்தான் என் வினவு.

தொடுப்பு என்னன்னு கேட்கிறானேன்னு இட் ஈஸ் "நன்" ஆஃப் யுவர் பிஸினஸ்னு சொல்லிடாதிய.

வீட்ல (வியட்நாமில இல்ல) எல்லாரும் சவுக்கியமா?

sabeer.abushahruk சொன்னது…

ஹமீது,
நல்லவேளை கேவலப்பயலே வுக்கு பீட்டர்ல என்னனு சாருக்கு தெரியல.

sabeer.abushahruk சொன்னது…

எல்லாரும் கைகட்டி வேடிக்கை பாருங்க. சாரு வந்துட்டாருல. ஐ ரெஃப்ரெஷ் மை கொஸ்ஸின்.

புவிக்கு கோள்மீதான ஈர்ப்பு விசை அற்றுப்போன பின் வேறு எவன்கூடயாவது சாரி எதுகூடாயாவது ஓடாமல் சாட்டிலைட் பூமியயே சுற்றி வருவதற்கு நிச்சயமாக பாசமோ பற்றோ காரணமாக இருக்க முடியாது. ஜொள்ளு விட்டு சுற்றிவர பூமி பூவெல்லாம் வச்சில்ல எனில் சுற்றிவர காரணமான தொடுப்பு என்ன?

(சார் இந்த டைப்புலதான் மெர்குரியைப்பற்றி லிக்விட் லென்ஸ் பாடம் எடுத்தார்)

Shameed சொன்னது…

sabeer.abushahruk சொன்னது…
//சுற்றுவதற்கானா முடுக்கு விசை எப்படி கிடைத்தது//


இங்கு இருந்து செயற்கை கோளை எடுத்து செல்லும் ராக்கெட் பூமியின் இழுவிசை தாண்டி பூமியின் வேகத்திற்கு இணையாக பூமியை ஒரு சுற்று சுற்றி வந்து (செயற்கை கோளுக்கு முடுக்கு விசை கொடுக்க வேண்டி )செயற்கை கோளை திறந்து விடும் அப்போது அதற்க்கு பூமி சுற்றும் வேகத்திக்கு சுற்றுவதற்கானா முடுக்கு விசை வந்து விடும் . (பல சோடா குடிக்கவேண்டும் போல் உள்ளது)

Shameed சொன்னது…

sabeer.abushahruk சொன்னது…
//ஹமீது,
நல்லவேளை கேவலப்பயலே வுக்கு பீட்டர்ல என்னனு சாருக்கு தெரியல//


இந்த மாதிரி எங்களை திட்டி திட்டியோ எங்களுக்கு நிறைய விசயங்களை சொல்லித்தந்துள்ளார்.

அதில் முக்கியமான ஒன்று மான் கராத்தே!

crown சொன்னது…

sabeer.abushahruk சொன்னது…
வீட்ல (வியட்நாமில இல்ல) எல்லாரும் சவுக்கியமா?
------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். என்ன வியட்னாம் வீடா?

N.A.Shahul Hameed சொன்னது…

அஸ்ஸலாஅமு அலைக்கும் ஷபீர் ம்ற்றும் சாவன்னா!
பால்வெளி பற்றி உனக்குத் தெரியும். இந்த பால்வெளி அப்படியே நகர்ந்து கொன்டு தான் இருக்கிரது வல்ல அல்லாஹ்வின் கிருபையால். அப்படி நகரும்போது அதில் உள்ள எல்லாமே ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டுதான் இருக்கின்றன. நீங்கள் கேட்கும் பூமிக்கும் சாட்டிலைட்டுக்கும் ஈர்ப்பு விசை இல்லாவிட்டலும் பூமியும் ந்மது சாட்டிலைட்டும் பால் வெளியின் அங்கம் தான். ஆக பூமி சுற்றும் போது அதனுடைய துணைக்கோள்களும் எப்படி சுற்றுகின்றனவோ அப்படித்தான் நமது சாட்டிலைட்டும் சுற்றும்.
All objects attached to the milky way are considered to be the part of the this galaxy. They all form a system and it moves as such. Although there is no effect of gravitation of the earth on our satellite the satellite has to move along the axis of the earth. The orbit at an altitude of 22,234 miles (If I remember correctly) is called a magic orbit because at this height only any object placed can remain stationary with the earth.
By the way my Singapore family (my wife and kids), my Viet Nam family (My students and my colleagues) and my India family (our Mother sister and relatives) are all well by the grace of Allah.
Wassalam
N.A.Shahul Hameed

crown சொன்னது…

கடுகு சிருத்தாலும். காரம் பெரிது. இன்னும் நீட்டியிருக்கலாம். ஆனாலும் நல்ல சிந்தனையை கிளரிய ஆக்கம். வாழ்துக்கள்.

அதிரைநிருபர் - வாசகர் கருத்து [மின்னஞ்சல் வழி]. சொன்னது…

// N.A.Shahul Hameed சொன்னது…
I am happy to see my first student Noor Mohamed, the Navalar of KMC has also joined this forum. My hearty welcome to you. //

மின் அஞ்சல் வழி கருத்து
==========================

Many thanks to Prof. NAS. Though I am your student, our friendship is since 1976. You are always very cool, but you lectured me the subject of heat in physics.

Wassalaam
Noor Mohamed

Riyaz Ahamed சொன்னது…

சலாம்
ஐயா, பெரியன்னனோட கேள்விகளை விட்டுவிட்டால், அருமையான கட்டுரை.ஐயா எழுதியது தானா என ஆச்சரியபட்டாலும், நம்மூர் ராக்கெட் ராஜா ஐயா தான்

Shameed சொன்னது…

பெரிய அண்ணனின் கேள்விக்குதான் நம்ம பெரிய பெரியஅண்ணன் NAS அவர்கள் வந்து பதில் சொல்லிவிட்டார்களே.

உங்கள் பின்னுட்டம் அனைத்தும் கடைசியாகவே உள்ளதே ஏன் நீங்கள் ஏதாவது ஒரு ஆக்கத்திற்கு முதல் பின்னுட்டம் இட்டால் அதுவே எனக்கு பல ராக்கட் விட்ட திருப்தியாக இருக்கும் செய்வீர்களா !

இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்...

பின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்
அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு