Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

மின்சாரக் காற்றே ! 23

அதிரைநிருபர் பதிப்பகம் | June 10, 2011 | , , ,

அஸ்ஸலாமு அழைக்கும்...

என்னுரை

எனது இந்த பதிவுக்கு ஊக்கம் தந்தது என் முந்தைய கட்டுரையான ராக்கெட் விடலாம் வாங்க! என்ற கட்டுரைக்கு சகோ MSM நெய்னா முஹம்மது இட்ட இந்த பின்னுடமே!

// மின்சாரம் எங்கு "சல்லிசா" கிடைக்கும் என்று உங்கள் செயற்கைக்கோளிடம் கொஞ்சம் இயற்கையாக கேட்டு சொல்லுங்களேன் //


இந்த கருத்துதான் மண்டைக்குள் சிறுதுளி மின்சாரத்தை பாச்சியதன் விளைவே இந்த கட்டுரை!

மின்சாரக் காற்றே !
தமிழகத்தின் ஆட்சி மாற்றத்தின் முதல் காரணம் மின்சாரம் இதற்கு 1ஜி என்று பெயர் வைக்கலாம் அந்த அளவிற்கு அரசியலை புரட்டிப் போட்டது இந்த மின்சாரம்தான் அதற்கு அடுத்து இரண்டாவது இடத்தில் இருப்பதுதான் இந்த 2 ஜி தமிழகத்தை ஆண்ட தி.மு.. அரசு பொது மக்களுக்கு சரிவர மின்சாரம் கொடுக்காததால் தமிழக மக்கள் தி.மு.. விற்கு கரண்ட் ஷாக் கொடுத்து வீட்டுக்கு அனுப்பியதும் நினைவு இருக்கலாம்.

தமிழகத்தின் மின்சாரத் தேவை ஏறத்தாழ 12,700 மெகா வாட் நாம் தற்போது உற்பத்தி செய்வதோ 8,500 முதல் 9,500 மெகாவாட் மின்சாரம் மட்டுமே நம்மால் உற்பத்தி செய்யப்படுகிறது. 4,200 மெகா வாட் தற்போதைய தேவை. தற்போது உற்பத்தி செய்யும் மின்சாரத்தில் 50 % சதவீதத்திற்கு மேல் காற்றலை மூலமும் பாக்கி மின்சாரம் அனல்மின் மற்றும் நீர்மின் நிலைகள் மூலமும் உற்பத்தி செய்யப்படுகின்றன.
அனல் மின் நிலையம்
அனல் மின் நிலையங்களில் மின் உற்பத்தி செய்வதற்கு தேவையான நிலக்கரி பெருமளவில் ஆஸ்திரேலியா, இந்தோனேஷியா போன்ற நாடுகளில் இருந்து கப்பல் மூலம் இங்கு எடுத்து வரப்படுகின்றது இவ்வாறு இறக்குமதி செய்யப்படுகின்றன நிலக்கரி எரிக்கப்பட்டு அதன் மூலம் நீரை கொதிக்க வைத்து வரும் நீராவியின் அழுத்தத்தை கொண்டு டைனோமோ (டர்பன் என்றும் சொல்வார்கள்) சுழற்றப்பட்டு மின் உற்பத்தி செய்யப்படுகின்றது இப்படி செய்யும் போது எரிக்கப்படும் நிலக்கரி புகை காற்றில் கலந்து காற்றை மாசுபடுத்திவிடுகின்றன அனல் மின் நிலையம் அருகே வசிக்கும் பொது மக்கள் பலவித நோய் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர் .

நீர்மின் நிலையம்

நீர் மின் நிலையங்கள் பெரும்பாலும் மலை பிரேதசங்களில் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளன காரணம் மலையின் மேல் பகுதியில் மழை நீரை தேக்கி வைத்து அந்த அழுத்தத்தில் இருந்து நீரை பைப் லைன் மூலம் மலை அடிவாரம் வரை கொண்டுவந்து அந்த நீரின் அழுத்தத்தின் மூலம் டைனோமோ சுழற்றப்பட்டு மின் உற்ப்பத்தி செய்யப்படுகின்றது இதற்க்கு மழை காலங்கில் கிடைக்கும் நீரை வைத்து மின் உற்பத்தி நடைபெறுகின்றன கோடைகாலங்களில் நீர் வரத்து இருக்காது ஆகையால் மின் உற்பத்தியும் இருக்காது.

தமிழகத்தின் மின்சாரத் தேவையில் பாதியளவை பூர்த்தி செய்வது காற்றாலைகள் மூலம் கிடைக்கும் மின்சாரம்தான்.ஏறத்தாழ 5,690 மெகாவாட் வரை மின்உற்பத்தி செய்யும் திறன் கொண்ட காற்றாலைகளில் சில சமயம் 5,000 மெகாவாட் வரை மின்சாரம் கிடைக்கும். காற்று குறைந்தால் 1,500 மெகாவாட் வரைதான் மின்சாரம் கிடைக்கும். காற்றாலைகள் அனைத்தும் இப்போது தனியார் வசமே உள்ளன ஒரு காற்றாலை அமைக்க ரூ. 2 கோடி வரை செலவாகும் நாம் நம் அதிரை பட்டினத்தில் இருந்து குற்றாலம் செல்லும் வழியில் இந்த காற்றலைகளை நிறைய காணலாம்.

காற்றாலை மின் உற்பத்தி

நமதூர் செல்வந்தர்கள் இந்த காற்றலைகளை நமதுரிலும் நிறுவி அதன் மூலம் மின் உற்பத்தி செய்து உற்பத்தி செய்யும் மின்சாரத்தை அரசுக்கு விற்கலாம் முதலீடு அதிகம் என்றாலும் லாபமும் அதிகம் இதன் மூலம் கிடைக்கும். நமதுரின் பிரதான வருமானம் வரக்கூடிய தென்னம் தோப்புகுகளில் தென்னைக்கு நடுவே காற்றாலை நிறுவலாம் இதனால் மாதா மாதம் நல்லா வருமானம் கிடைக்கும் காற்றலை மூலம் செய்யப்படும் மின் உற்பத்தியால் காற்று கேடாவது கிடையாது அதனால் யாருக்கும் எந்த வித பாதிப்பும் வராது நமதூரில் ஒருவர் ரியல் எஸ்டேட் செய்து லாபம் பார்த்தால் அனைவரும் அதையோ செய்வார்கள் ஒருவர் நகை கடை வைத்து லாபம் பார்த்தால் மற்றவர்களும் நகை கடை வைப்பார்கள் இதுதான் அதிரையின் பிஸினஸ் லாஜிக்காக இருந்து வருகின்றது .அதிரையின் இந்த லாஜிக்படி பார்த்தால் யாரவது ஒருவர் ஒரு காற்றலை அமைத்து அதில் வருமாம் பார்த்தால் போதும் ஒன்றன்பின் ஒருவராக நமது ஊரில் காற்றாலை நிறுவ ஆரம்பித்து விடுவார்கள் நமதூர் மக்களும் நமது ஊரும் மேம்படுவதற்கான ஒரு சூழ்நிலை தென்படுகின்றது இதன் மூலம் நாட்டுக்கு தேவையான மின்சாரமும் கிடைத்துவிடும் நமது வீட்டுக்கும் மின்சாரம் கிடைத்துவிடும் முதலீட்டாளருக்கு வருமானமும் கிடைத்துவிடும்.அதிரை செல்வந்தர்கள் தமது சிந்தனைகளை காற்றாலை பக்கம் திருப்பலாமே!

காற்றாலை அமைக்க சாத்திய கூறுகள்

நமது ரயில்வே ஸ்டேஷன் கடல்கரையை பார்த்து அமைத்துள்ளது ரயில்வே ஸ்டேஷன் எப்போதுமே காற்று வீசிக்கொண்டே இருக்கும் நம் ஊரை பொறுத்தவரை காற்று என்றால் ரயில்வே ஸ்டேஷன் ரயில்வே ஸ்டேஷன் என்றால் அது காற்று என்றுதான் அர்த்தம் ,அதுபோல் நம் ஊர் தென்னை மரங்கள் எப்பொதும் காற்றினால் தாலாட்ட பட்டு கொண்டே இருக்கும். பெரும் பாலான ஐரோப்பிய நாடுகளில் அமைந்துள்ள காற்றலைகள் கடல்கரையை ஒட்டியோ அமைந்துள்ளன இதுபோன்ற சாதக பாதகங்களை ஆராய்ந்து நமது அதிரை பட்டினத்தில் காற்றாலை அமைக்க முயற்சிகள் செய்யலாம்

- Sஹமீது
தமாம்

மேலே பதியப்பட்டுள்ள ஆக்கம் கட்டுரையாளரின் தன்னார்வத்தாலும், அவரால் சேகரிக்கப்பட தகவல்களைக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. இதனைவிடவும் நன்கு அறிந்த துள்ளியமான அரிய தகவல்கள் இதனை வாசிக்கும் சான்றோர்களிடம் இருந்திடலாம்..

23 Responses So Far:

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

ஹமீத் காக்கா,

நல்ல பயனுல்ல தகவல் பதிவு.

காற்றாலை மின் உற்பத்தி கணவு இன்ஷா அல்லாஹ் நிறைவோரும். இதுவோ சரியான தீர்வாக இருக்கும் வருங்காலத்தில்.

MSM நெய்னா முகம்மது... எப்படி நம்ம காக்காவின் விளக்கம்?

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

காற்றாலை இயங்குவது நம்மூரு மாதிரி தெரியுது,கட்டுரையாளர் சொன்னபடி யார் முதலில் காற்றாலை அமைக்க களம் இறங்குறார்கள் என்று பார்த்து நாமும் பின் தொடர்வோம்.நெய்னா முதலில் களமிறங்க கரு துவக்க வாழ்த்துக்கள்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

என் சுவாசக் காற்றே !
எங்களூருக்கும் மின்சாரம் தருவாயா !?

வித்தியாசமாக சிந்திக்க ஆரம்பித்ததன் விளவை இந்த ஆக்கம் ஒரு ஆக்கபூர்வமான ஆலோசனனயையும் வழங்கியிருக்கிறது...

சுழி போட்டீங்க Sஹமீத் காக்கா ! இனிமேல் தரையிலேயே ராக்கெட் விசிறி(கள்) ஏராளம் தென்படலாம் - நம்புவோமாக !

Yasir said...

தமிழக அரசுக்கு ரெக்கமேண்ட் செய்யக்கூடிய வகையில் உள்ள ஆக்கம்...அதுவும் இந்த நேரத்தில் அம்மா அல்டர்னேட்டிவ் பவர் சொலுஷன் களை அதனை நிறுவும் இடங்களையும் ஆராய்ந்து கொண்டு இருக்கும் தருணத்தில்....வாழ்த்துக்கள் காக்கா...அ.நி யின் ”அறிவியல் எழுத்தாளர்” என்ற பட்டத்தை நீங்கள் விரைவில் பறித்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்...என்ன நெய்னா தம்பி காக்கா ஆடு வெட்டி இந்த பட்டத்தை காக்கவிற்க்கு கொடுப்போமா ?? இல்லை அவகளுக்கு பிடித்த அஞ்சு கறி சோறு விருந்து வைத்து கொடுப்போமா ??..சொல்லுங்க

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

தம்பி யாசிரே !

ஏற்கனவே பேர் வச்சதுக்கு ஒட்டகம் பாக்கியிருக்கு அதுக்குதான் ஊருக்கு வருவதாக சொல்லியிருக்காங்க Sஹமீத் காக்கா !

தம்பட்டமடிக்காத பட்டமொன்று கொடுத்திட்டா போச்சு !

அதனாலென்ன்ன ஐஞ்சு கறி சப்பாடுதான் ! :)

அது சரி இந்தக் கட்டுரையிக்கும் ஒட்டகமா / கிடாய்(யா) ?

sabeer.abushahruk said...

காற்றாலை பற்றிய கட்டுரையில் ஹமீது பளிச்சென்று மிளிர்கிறார், வாழ்த்துகள்!

ஹமீது,
உங்கூர் தமாமில் எப்படி டைனமோவைச் சுழலச் செய்து மின்சாரம் தயாரிக்கிறீர்களாம்?

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும்.
என்னா காற்று நம்ம ஊர் பக்கம் வீச ஆரம்பிச்சிருக்கு? காற்றுள்ள போதே தூற்றிக்கொள். இன்று காலையில் நடந்த சம்பவம். என் இல்லாளை மருத்துவமனை அழைத்துச்சென்றேன். அப்பொழுது அந்த மருத்துவமனை வேறு நிர்வாகத்தில் வந்திருப்பதை அறிவிப்பதாக வரவேற்பறையில் "காற்றாடி" யில் அந்த புது நிர்வாகத்தின் பெயர் போட்டு வைத்திருந்தார்கள் . மருத்துவமனை வந்தவர்கலெல்லாம் தமக்கு வேண்டியதை எடுத்துக்கொண்டிருந்தனர். என் கடைக்குட்டி சொன்னால் வாப்பா எனக்கு ஒன்னு ! நான் சொன்னேன் டாக்டரிடம் உம்மாவை காட்டிவிட்டு வீட்டுக்குப்போகும் போது எடுத்துக்கொள்ளலான்னு சரி யென்றால் . பிறகு திரும்பி வந்து பார்த்தால் எல்லாம் காலி. என் மக கேட்டா வாப்பா இப்ப என்ன செய்றது?. நான் என் மகள்களிடம் சொன்னேன். காற்றுள்ள போதே தூக்கிட்டாங்க.பிறகு அங்கிருந்த பஞ்சாபி நர்ஸ் என் மகளின் பரிதாப நிலைமையைப்பார்த்து எங்கிருந்தோ ஒன்று கொண்டுவந்து தன்ந்தாள். நன்றி சொல்லி புறப்பட்டோம். அறியப்படும் நீதி: காற்றுள்ள போதே (தூக்கி)தூற்றிகொள்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//அ.நி யின் ”அறிவியல் எழுத்தாளர்” //

நான் முன்மொழிகிறேன்....

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

Assalaamu alaikum.

Dear Shahul kaka,

Thanks for your appropriate production through this article motivated by my previous comments for your previous article. Still I yet to be read the above article fully. Insha-allah, once i read throughout it, then I will post my comments soon. you have proved through your several articles that hence we can provide the title of "விஞ்ஞானியாக்கா" like "கவிக்காக்கா" to you. Thanks a lot for your thoughts and research in our daily essential things.

Keep it up and all the best by the grace of Allah.

I will be back.

M.S.M. Naina Mohamed.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

"விஞ்ஞானியாக்கா"

அட ! நல்லாயிருக்கே !!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//ஹமீது,
உங்கூர் தமாமில் எப்படி டைனமோவைச் சுழலச் செய்து மின்சாரம் தயாரிக்கிறீர்களாம்?//

கவிக் காக்கா : விஞ்ஞானியக்காவுக்கு மற்றுமொரு அஸைன்மெண்டா !?

அதிரைநிருபர் பதிப்பகம் said...

Shahul சொன்னது...:

இன்றையில் இருந்து நான் ஒரு முடிவு செய்து விட்டேன் கட்டுரை எழுதுவது மட்டும் நம் வேலை பெயர் வைப்பது அபுஇபுறாஹீம் தான்...

Mohamed Meera said...

1995ஆம் வருடமே நமதூரில் அதற்கான முயற்சியில் ஒரு சகோதரர் ஈடுபட்டார் அவர் வீட்டு மாடியில் சிறிய காற்றாலை நிறுவி அதன் மூலம் குறைந்த அளவு மின்சாரம் பெற்றார்.
நாங்கள் த.மு.மு.க பணிகள் நிமித்தம் 1995 காலகட்டத்தில் இயக்க பணிகளில் ஆர்வம் உள்ள அவர் வீட்டுக்கு செல்லும் போது காண நேரிட்டது.

பொதுவாக காற்றாலை (Windmill)அமைப்பதில் உள்ள மிகப்பெறும் குறை
மிக அதிகமான முதலீடு.

நம்ம ஊரில் அந்த அளவு முதலீடு செய்யக்கூடிய அளவு வசதி படைத்தவர்கள் இருப்பார்களா என்பது சந்தேகம் தான் பல கோடிகள் முதலீடு தேவை படும்.
லாபம் நிச்சயமில்லை- காற்றின் வேகம் நாம் எதிர்பார்த அளவு இல்லை என்றால்- முதலீடு முழுவதும் வேஸ்ட்- மாற்று ஏற்பாடு செய்யமுடியாது.(முழு யுனிட்டையும் தடையில்ல காற்று வரும் ஊருக்கும் எடுத்து செல்லவேண்டும்)

காற்றாலை மூலமாக அதிக மின்சாரம் உற்பத்தி செய்யும் மாநிலங்களில் தமிழகம் முதல் நிலை மாநிலம்.

எத்தனையோ லட்சம் செலவு செய்து வீடுகட்டும் நாம், லட்சம் செலவு செய்து 'சூரிய சக்தி (Solar Energy) தகட்டை பொருத்துவதன் மூலம் அதிலிருந்து கிடைக்கும் மின்சாரத்தை, குறைந்த பட்ச தேவைகளுக்கு பயன்படுத்தலாம்
( வீட்டின் முழுமையான தேவைகளுக்கு பயன் படுத்த மிகமிக அதிக செலவும், சாதனத்தை (தகட்டை ) பொருத்த பெரிய இடவசதியும் தேவை ப்படும் )

-முஹம்மது மீரா

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

சூரிய சக்தி (solar energy) பற்றிதான் கொஞ்சம் எழுந்துங்களேன் மீரா !

Shameed said...

sabeer.abushahruk சொன்னது…
//உங்கூர் தமாமில் எப்படி டைனமோவைச் சுழலச் செய்து மின்சாரம் தயாரிக்கிறீர்களாம்//

இதுவும் மண்டைக்குள் சுழன்று கொண்டுள்ளது நேரம் கிடைக்கும் போது அதிரை நிருபரில் வலம் வரும்

Shameed said...

Yasir சொன்னது…

//அ.நி யின் ”அறிவியல் எழுத்தாளர்//

தாஜுதீன் சொன்னது…
//அ.நி யின் ”அறிவியல் எழுத்தாளர்” //

நான் முன்மொழிகிறேன்....

ரொம்ப உசுபெதாதீங்க வெருண்கையாலே கரண்டை பிடிச்சிட போறேன்

ZAKIR HUSSAIN said...

I wrote about this 'windmill Power' about some time ago..but not like Tuan Haji Shahul's writing..he is so deep in his knowledge. Alternate power solutions are big in energy market now.

In Australia there is a one area [ equivalent to Pattukkottai taluk] is powered by these kind of energy.

Before we establish these kind of power generative equipments we have to do a in depth study of climate , wind directions & time frame with seasons.

One thing is very sure...after reading this all our " alayathikaadu, and beach, customs road is going to be sold very soon i think."

அதிரைநிருபர் பதிப்பகம் said...

Shameed சொன்னது…

நண்பர் மீரா சொல்வதுபோல் வாட்டர் ஹீட்டர் போன்ற சிறு சிறு பயன் பாட்டிற்கு சோலார் பயன்படுத்தலாம்..

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//ரொம்ப உசுபெதாதீங்க வெருண்கையாலே கரண்டை பிடிச்சிட போறேன்//

என் முன்னே பாஸ் நிற்பதைக் கூட கவனிக்காமல் சத்தம் போட்டு சிரிச்சுட்டேன் !

அதிரை முஜீப் said...

மரபு சாரா ஆற்றல்கள் எனப் பின் வருவனவற்றைக் கூறலாம்
 சூரிய ஆற்றல் (solar energy)
 காற்றின் ஆற்றல் (Wind energy)
 கடல் அலை ஆற்றல் (Sea wave energy)
 கடல் மட்ட ஆற்றல் (Tidal energy)
 புவி வெப்ப ஆற்றல் (Geo thermal energy)
 உயிரியல் வாயு ஆற்றல் (Bio gas energy )
 உயிரியல் பொருண்மை ஆற்றல் (Bio mass energy)
 உயிரியல் எரிபொருள் ஆற்றல் (Bio fuel)
காற்றினால் இயக்கப்பட்டு ஆற்றலை வெளிப்படுத்தும் இயந்திரம் காற்றாலை என அழைக்கப்படுகிறது. உயரமான மரம் அல்லது இரும்புக் கோபுரம் போன்றதொரு அமைப்புடன் அவற்றுக்குச் செங்குத்தாக சுழலக் கூடிய வகையில் காற்றாலைகளில் ’இறக்கைகள்’ இணைக்கப் பட்டிருக்கும். இந்த இறக்கைகளின் நீளம் 13 மீட்டர் முதல் 40 மீட்டர் வரை தேவைக்கு ஏற்றப்படி வடிவமைக்கப் படுகின்றன. காற்று இந்த இறக்கைகளின் மீது மோதி அவற்றைச் சுழல வைக்கும்போது அவை டர்பைன்கள் எனப்படும் உருளைகளைச் சுழலச் செய்யும். டர்பைன்களுடன் இணைக்கப் பட்டிருக்கும் ஜனனி (ஜெனரேட்டர்) மின் உற்பத்தியினைச் செய்யும். காற்றாலைகளில் ஒவ்வொரு டர்பைனும் மின்சாரச் சேகரிப்பு அமைப்புடனும் இணைக்கப்பட்டிருக்கும். துணை மின் நிலயத்தில் இந்த மின்சாரத்தின் வோல்டேஜ் ஒரு மின் மாற்றி (ட்ரான்ஸ்ஃபார்மர்) மூலம் அதிகரிக்கப்பட்டு, அதிக அளவு வோல்டேஜ் கொண்ட மின்சாரம், மின் பகிர்மான அமைப்புக்கு அனுப்பப்பட்டுப் பின்னர் விநியோகிக்கப் படும். பெரிய அளவில் உள்ள காற்றாலைகளில் தயாரிக்கப் படும் மின்சாரம் மின்மாற்றிகள் மூலம் கம்பிகளுக்குச் செலுத்தப்பட்டு விநியோகிக்கப் படுகின்றன. சிறிய அளவுக் காற்றாலைகள் ஒதுக்குப் புறமாக உள்ள பகுதிகளின் குடியிருப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றன.

காற்றாலைகளின் இடத் தேர்வு மிக இன்றியமையாதது. டர்பைன்களைத் தொடர்ந்து இயக்கத் தேவையான சீரான காற்றுள்ள இடமாகவும். உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரத்தை விநியோகிக்கும் வசதிகள் நிரம்பியதாகவும் இருக்க வேண்டியது அவசியம்.

தற்போதைய காற்றாலைக் கட்டுமானங்களின் உயரமானது 70 முதல் 100 மீட்டர் அளவில் உள்ளது. உற்பத்திப் பெருக்கத்தைக் கருத்தில் கொண்டு இவ்வுயரத்தை இன்னும் அதிகரிப்பது தொடர்பாக ஆலோசனைகள் நடந்து வருகின்றன.

ஓர் ஆண்டில் ஆறு மாதங்கள் வரையுள்ள காற்றடிக்கும் சாதகமான பருவ நிலைகளில் தினமும் 2,000 மெகாவாட் என்ற அளவில் காற்றாலை மின் உற்பத்தி இருக்கும். நாளொன்றுக்குக் காற்றாலை ஒன்றில் இருந்து 1800 யூனிட் வரை மின்சாரம் தயாரிக்க இயலும். தற்போதைய நிலவரப்படி 225 கிலோவாட் திறனுள்ள காற்றாலை ஒன்றை நிறுவ 1,15,00,000-ரூபாய் செலவு ஆகும். ஒரு காற்றாலை அமைக்க 5 முதல் 10 சென்ட் வரையில் அமைந்துள்ள நிலப் பரப்பே போதுமானதாக இருக்கும். அனைத்து வகை ஆற்றல்களாலும் உலகத்துக்குக் கிடைக்கும் சராசரி மின் சக்தி 15 டெராவாட்டாகும். யூகத்தின் அடைப்படையில், உலகம் முழுவதும் காற்றின் ஆற்றல் முழுமையாகப் பயன்படுத்தப் பட்டு மின்சாரம் தயாரிக்கப்படுவதாக வைத்துக் கொண்டால் அதன் அளவு ஆண்டொன்றுக்கு 72 டெராவாட் எனக் கணக்கிட்டிருக்கிறார்கள். இது 54,000 மில்லியன் டன் படிம ஆற்றல் (fossil fuel) எரிபொருளுக்குச் சமமாகும்.

//நமதூர் செல்வந்தர்கள் இந்த காற்றலைகளை நமதுரிலும் நிறுவி அதன் மூலம் மின் உற்பத்தி செய்து உற்பத்தி செய்யும் மின்சாரத்தை அரசுக்கு விற்கலாம்//
//அதிரை பட்டினத்தில் காற்றாலை அமைக்க முயற்சிகள் செய்யலாம்//

தென்னை மரங்களுக்கு இடையில் காற்றாலையை நிறுவினால் முழு தென்னை மரங்களையும் வெட்டினால்தான் அது சாத்தியமாகும்.
மேலும் நம்மூரில் உள்ளவர்கள் ஒருவேளை காற்றாலை மூலம் மின்சாரம் தயாரித்தாலும் சம்சாரதிற்கு தேவையான மின்சாரத்தை அரசாங்கத்திடம் இருந்து தான் வாங்குவார்கள்!. இது தோப்பு உள்ளவர்கள் தேங்காயை வேட்டி வாடியில் போட்டுவிட்டு தங்களுக்கு தேவையான தேங்காயை விலை கொடுத்து வாங்குவது போல்தான்!

அதிரை முஜீப் said...

தேங்காயை வேட்டி வாடியில் போட்டுவிட்டு என்பதை வெட்டி என்று வாசிக்கவும். தவறுக்கு வருந்துகிறேன்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

சுழி சுற்ற ஆரம்பித்திருக்கிறது... ஆதலால் எங்களூரில் வீசும் காற்றே அங்கேயே இருந்திடு பங்கிட்டுக் கொள்ள பங்காளிகள் புடைசூழ வருவார்கள் !

Shameed said...

அதிரை முஜீப் சொன்னது… //காற்றாலை மூலம் மின்சாரம் தயாரித்தாலும் சம்சாரதிற்கு தேவையான மின்சாரத்தை அரசாங்கத்திடம் இருந்து தான் வாங்குவார்கள்!. இது தோப்பு உள்ளவர்கள் தேங்காயை வேட்டி வாடியில் போட்டுவிட்டு தங்களுக்கு தேவையான தேங்காயை விலை கொடுத்து வாங்குவது போல்தான்//

தேங்காயை வாடியில் குறைந்த விலைக்கு கொடுத்துவிட்டுநாம் நம் தேவைக்கு தேங்காய் வாங்கும்போது கூடுதல் விலை கொடுத்து வாங்குகின்றோம் ஆனால் மின்சாரம் காற்றாலை மூலம் நாம் உற்பதிசெய்தால் அரசு கூடுதல் விலை கொடுத்து வாங்கி அதை குறைந்த விலைக்கு நமக்கு தருகின்றது !

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு