Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அணு அணுவான மின்சாரமே ! 16

அதிரைநிருபர் பதிப்பகம் | July 26, 2016 | , , ,


தட்டுப்பாடு, கட்டுப்பாடு, ஊரெல்லாம் ஒரே கூப்பாடு ! மின்சாரத்தை வெட்டாதே ! எங்கள் வாழ்வாதாரத்தில் விளையாடாதே ! உயிரைப் பனையம் வைக்காதே... தொடரும் போராட்டங்கள். இதெல்லாம் எதற்கென்று தெரியாததுபோல் ஒரு கூட்டம் தான் உண்டு தனது நிலைகண்டு நாட்களை கடத்துகிறது.

மின்சாரத்திற்கான தேவையுடைய மக்களின் கோரிக்கையைவிட அது கிடைக்கப்பெறும் உலைய மூட போராடும் மக்களின் கோரிக்கை வலுத்திருந்து இப்போது வழுவிழந்து நிற்கிறது ! மின்சாரத்தை தொட்டாலும் பேராபத்து அதனை கிடைக்காமல் விட்டாலும் ஆபத்து !

என்ன செய்யலாம் !? -  கூழுக்கும் ஆசை மிசைக்கும் ஆசை !

அணுவை வைத்து மின்சாரம் எப்படி உற்பத்தி செய்கின்றார்கள் என்பதைப் பார்ப்போம்  

அணுக்கரு பிளவுக்கு முக்கியமாக  பயன்படுத்தப்படுவது   யுரேனியம் அல்லது   புளுட்டோனியம் இதில் எது நம் நாட்டின் மண்ணில் அதிகம் கிடைக்கின்றதோ   அதை வைத்து . “இந்த அணு ஆற்றலை உருவாக்கத் தேவையான  மூலப் பொருள் தயார் செய்யப்படுகின்றது    ஒவ்வோர் அணுமின் உலையிலும் அணுக்கரு பிளப்புக்கு   தேவையான யுரேனியம் அல்லது புளுட்டோனியம் கம்பிகள். எதிர் எதிராக  இருக்கும் இந்தக் கம்பிகளைக் “கோர்’ என்று சொல்வார்கள்.(நாம் கார்களுக்கு பயன்படுத்தும் ரேடியேட்டரில் இருப்பதுபோல்)   அணு உலையில் நடுப் பகுதியில் அணுக்கலனில் உள்ள தண்ணீரில் இந்தக் கோர் வைக்கப்பட்டு இருக்கும். உலோகத்தால் செய்யப்பட்ட  இந்த அணுக்கலன் மிகவும் பாதுகாப்பானது.(அப்படித்தான் சொல்றங்க!) அணுக்கரு பிளப்பை  கட்டுக்குள் வைப்பதற்குப் “போரான்’ இல்லையென்றால்  காட்மியம் என்ற கட்டுப்பாட்டு கருவி வைக்கப்பட்டு இருக்கும். இதற்கு   கட்டுப்பாட்டு கம்பிகள் என்று சொல்வார்கள் இது செயல் இழந்தால் யாரும் செயல் பட முடியாது

அணுக்கருவைப் பிளக்கும் போது (அதாவது நியூட்ரான்கள்  என்னும் அணுத்துகள்களை  மோதி பிளக்க செய்வது)  மிக அதிக அளவில் வெப்பம் வெளிப்படும் . அந்த வெப்பத்தைக்கொண்டு     கலனுக்குள் உள்ள நீரை கொதிப்படைய செய்து நீரை ஆவியாக்குவார்கள் இங்கே வெளிப்படும் அணுக்கதிர்கள்  வெளியே வராத அளவுக்கு   அணுக்கலனின் சுவர் மிகவும் தடிப்பாகவும் அணு கதிர் வீச்சை தாங்க கூடிய தன்மையிலும் அமைக்கப்பட்டிருக்கும் .

மேலும் அணுவை  பிளக்கும் போது ஏற்படும் கடும் வெப்பத்தினால் கொள்கலனில் உள்ள நீர் கொதித்து  நீராவி உருவாகும் நிலக்கரி எஞ்சினில் நீராவி வருவதை விட பலமடங்கு அதிகமான அழுத்தம் மிகுந்த அந்த நீராவி குழாய் மூலம் கொண்டு வரப்பட்டு   அந்த அழுத்தத்தின் மூலம்  பெரிய அளவில் உள்ள டர்பன் என்று சொல்லப்படும் டைனமோ சுழற்றப்படும் அது சுற்றுவதன்  மூலம் மின்சாரம்  உற்பத்தி செய்யப்படும் 

இந்த  வகையில் பார்க்கும்போது அணுமின்சாரம் உருவாக்க அடிப்படையாக அணு உலையில் ஏற்படும் வெப்பமே காரணம் வெப்பத்தைத் தணிக்க (சூட்டை தணிக்க)தண்ணீர் பயன்படுத்தப்படுகின்றது.மறுபக்கம் உலையில் (தொட்டியில்) . அணுக்கலனின் வெப்பம் குறிப்பிட்ட அளவை  தாண்டாமல் பார்த்துக் கொள்வது மிக அவசியம் . இதனால் தண்ணீர் மூலம் அணுக்கலன் எப்போதும் சூட்டை தனித்துக்கொண்டே(COOLING SYSTEM)    இருக்க வேண்டும் இதற்கு அதிகமாக தண்ணீர்   தேவைப்படும்.அதனால் தான் அணு உலைகள் எப்போதும் கடற்கரை ஓரமாக அமைக்கின்றார்கள் 

கடல் நீரை பெரிய பம்புகள் வைத்து உரிந்து அணுகலன் உள்ளே செலுத்தி மறுபக்கம் அந்த நீர் சூடாக வெளியே வரும் இப்படி கடல் நீர் உறிஞ்சப்படும் போது மீன்களும் மீன் குஞ்சுகளும் உறிஞ்ச படாமல் பாதுகாப்பு  செய்யப்பட்டு இருக்கும் இது தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டு இருப்பதால் அணுகலன் அதிக அளவில் சூடாகி வெடித்து விடாமல் இருக்கும் இதில்  ஏதாவது தவறு ஏற்பட்டு, தண்ணீர் வராமல் நின்று போனால்   அணு உலை சூடு தாங்காமல் வெடித்து விடும். அப்படி வெடித்தால் என்ன ஆகும் என்று அதனைச் சுற்றியிருப்பவர்களுக்கு தெரியும் முன்பே உயிர்  அவர்களை விட்டு பிரிந்து போயிருக்கும்.

Sஹமீது

16 Responses So Far:

அதிரை சித்திக் said...

அணு மின் ..
அழிவுப்பதைக்கா..
முன்னேற்ற பாதைக்கா
போக போக தெரியும் ..
தமிழகத்தில் உருவாகும்
மின்சாரம் தமிழகத்திற்கே
கிடைத்தால் பரவாயில்லை
ரிஸ்க் நமக்கு ..பலன் பிறருக்கா

Yasir said...

அணு அணுவா புட்டு வச்சுருக்கீங்க...அணுவுலையப்பற்றி..ஆக்கமும் அதன் நோக்கமும் அருமை.....வாழ்த்துக்கள் காக்கா

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

கூடங்குளம் அங்கே மின்சாரம் என்று அறிந்த நமக்கு, அது கூடி மின்சாரமாவது எப்படின்னு அழகாய் சொல்லி விட்டீர்கள். நன்றி.

புகைப்படம் 1 தான் அனுப்புனியலா? இல்லெ அனுப்புன இடத்திலெ எதோ நடந்துருச்சா?

KALAM SHAICK ABDUL KADER said...

சங்க காலத் தமிழகம் கல்வெட்டில்
இந்தக் காலத் தமிழகம் மின்வெட்டில்

உயிர்களை அணு உலைக்கு விறகாக்கி
உருவாக்கும் திட்டம் என்பதும் பயம்தான்

சமீபத்திய தீர்ப்பின்படி, உயிர்கட்கு உத்திரவாதம் இருக்கும் என்ற உறுதியிருக்குமானால் என்று துவங்கியிருக்கும் வரிகளும் ஆழமாய்ச் சிந்திக்க வைக்கின்றது

மக்களின் தேவைகளும் நவீனக் காலக் கண்டுபிடிப்புகளால் அதிகரித்து உள்ள நிலையில்
அரசின் திட்டங்களும் அதற்கு ஈடு கொடுக்க முடியமற் போவதும் ஒத்துக்கொள்ள வேன்டிய உண்மை.

பன்னாட்டுத் தொழில் நிறுவனங்கட்கு மட்டும் கூடுதலாக மின்சாரம் வழங்குதல் என்பதும் அவர்களின் "புரிந்துணர்வு ஒப்பந்த" அடிப்படையில் நடக்கும் ஓர் ஏற்பாடு என்றும் சொல்லப்படுகின்ரது.

sabeer.abushahruk said...

இத மொதல்லயே எழுதியிருந்தா ஒரு பத்து மர்க் கேள்வியை ச்சாய்ஸில் விட்டிருக்க மாட்டோம்ல?

ஒரு டவுட் ஹமீது. (எந்த ஷாகுல் ஹமீது வேணும்னாலும் பதில் தரலாம்)

குளிர்விக்கும் தன்மை உப்பு நீருக்கு அதிகமா ஸ்வீட் வாட்டருக்கு அதிகமா?(ஸ்வீட் வாட்டருக்கு தமிழ் என்னாப்பா? இனிப்பு நீருன்னு யாரும் கலாய்க்காதீர்கள்)

உப்புத்தண்ணிக்குத்தான் ஹலச் வாங்கிக்கிறேன். ஸ்வீட் வாட்டருக்குத்தான் எனில் அணுமின் நிலையத்தை நமக்குத் தண்ணீர் தராத கேரளாவிலோ கர்நாடகாவிலோ ஆந்திராவிலோ அவிங்களோட ஆற்றங்கரையில்தானே அமைக்கனும்?

கடல்நீர் கொண்டு குளிர்விக்க மோட்டர் வைத்து ப்பம்ப் செய்து சுழற்றனும். ஆறுன்னா அதன் க்கரன்ட்லேயே சுழற்றலாமே?

(எக்குத்தப்பா கேள்வி கேட்டா இன்ட்டெர்னல்ல கையை வச்சிட்றாய்ங்கப்பா.)

sabeer.abushahruk said...

//உப்புத்தண்ணிக்குத்தான் ஹலச் வாங்கிக்கிறேன்//

இது இப்படி இருக்கனும் "உப்புத்தண்ணிக்குத்தான் என்றால் ஜகா வாங்கிக்கிறேன். (என் ஐ ஃபோனை யாராவது ரிப்பேர் பண்ணித்தாங்களேன்)


//சங்க காலத் தமிழகம் கல்வெட்டில்
இந்தக் காலத் தமிழகம் மின்வெட்டில்//

கவியன்பன்,
நீங்க
அபுல் கலாமா
அணு கலனா?
கற்க உங்களை
அனு கலாமா?

இந்த போடு போட்றீங்க?

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

ஹமீது காக்கா கூடாங் குளங் எதிர்ப்பை விட . அணு ஆய்வை பற்றி நல்ல தயாரிப்பு.

ஆமா போயஸ் தோட்டத்தில் மினு மினு மின்சரமாமே?

KALAM SHAICK ABDUL KADER said...

கவிவேந்தரே! அஸ்ஸலாமு அலைக்கும்!

கலாம் என்றால் "கலகம்" என்றும் கலைஞரே கூறிவிட்டதாலும்,ராக்கெட் விஞ்ஞானி அணு விஞ்ஞானம் பற்றிப் பேசக் கூடாது என்று மின்னஞ்சல்களில் பயங்காட்டுதல் வந்து கொண்டிருப்பதாலும், ஈண்டு அடியேனுக்கும் அப்பெயரிருப்பதால் அணு உலையில் "நடுநிலையாய்க்" கருத்திட்டேன்

கற்கும் அறிவைக் கசடறக் கற்பித்தால்
நிற்கும் அறிவு நிலைத்து

கற்பவனாகவும் கற்பிப்பவனாகவும் அடியேன் இருப்பது ஊரறிந்த உண்மை.


நல்ல தமிழ் எழுதவும், பழகு தமிழ்ப் பேசவும் கற்பிக்கும் ஈராசான்களை அதிரைப்பட்டினம் பெற்றிருப்பதில் அதிகம் மகிழ்ச்சி அடைவது நம்மைப் போன்ற தமிழ் ஆர்வலர்கற்றான் என்றறிக!

Shameed said...

sabeer.abushahruk சொன்னது…

//இத மொதல்லயே எழுதியிருந்தா ஒரு பத்து மர்க் கேள்வியை ச்சாய்ஸில் விட்டிருக்க மாட்டோம்ல?

ஒரு டவுட் ஹமீது. (எந்த ஷாகுல் ஹமீது வேணும்னாலும் பதில் தரலாம்)

குளிர்விக்கும் தன்மை உப்பு நீருக்கு அதிகமா ஸ்வீட் வாட்டருக்கு அதிகமா?(ஸ்வீட் வாட்டருக்கு தமிழ் என்னாப்பா? இனிப்பு நீருன்னு யாரும் கலாய்க்காதீர்கள்)

(எக்குத்தப்பா கேள்வி கேட்டா இன்ட்டெர்னல்ல கையை வச்சிட்றாய்ங்கப்பா.)//

இந்த அணு உலையைக் குளிர்விக்க கடலிலிருந்து நீர் பெறப்பட்டு, சுத்திகரித்து செய்து உப்பு அகற்றி, நன்னீராக மாற்றி இந்த உலையில் பயன்படுத்தப்படுகிறது. ஆகவே ஸ்வீட் வாட்டருக்கு தான் குளிர்விக்கும் தன்மை அதிகம் (உதாரணம் நாம் கார் ரேடியேட்டரில் உப்புத்தண்ணீர் ஊற்ற்வதில்லை)

இன்னும்மொரு கொசுறு தகவல் செய்து பார் என்று மரியாதை இல்லாமல் அறிவியல் புத்தகத்தில் வருமே அதுபோல் இதை செய்து பாருங்கள்

இரண்டு பாத்திரத்தில் ஒன்றில் உப்பு நீரும் ஒன்றில் குடி நீரும் ஊற்றி பிரிசரில் வைத்தால் குடி நீர் தான் முதலில் உறைந்து ஐஸ்சாககும் உப்பு நீரை உறைய வைக்க கூடுதல் குளிர்தன்மை தேவை

ZAKIR HUSSAIN said...

அணு மின் உற்பத்தியை இவ்வளவு எளிமையாக புரியவைத்ததற்கு நன்றி. இதுவரை எனக்கு கூடங்குளம் பிரச்சினையில் அணுமின்சாரம் எப்படி தயாரிக்கிறார்கள் என்று தெரியவில்லை.

எது எப்படியோ அரசியல் கட்சிகள் கூடங்குளத்தை வைத்து பெரும் அரசியல் செய்து விட்டார்கள்.

KALAM SHAICK ABDUL KADER said...

//எது எப்படியோ அரசியல் கட்சிகள் கூடங்குளத்தை வைத்து பெரும் அரசியல் செய்து விட்டார்கள்.//

அரசியல் வியாதிகட்கு ஏதேனும் ஒன்றை அவ்வப்போது வைத்து “விளையாடுதல்” என்பது பொழுது போக்கு;மக்களைப் பற்றி எல்லாம் கவலையில்லை! சகோதர வலைத்தளத்தில் இன்று வெளியாகியுள்ள “தடம் மாறும் கம்பன்” பற்றிய செய்தி மிகவும் அதிர்ச்சியாக உள்ளது.

KALAM SHAICK ABDUL KADER said...

03/10/2012 தேதியிட்ட “குமுதம்” வார இதழின் அட்டைப்படச் செய்தி:

”தி.மு.க - அ.தி.மு.க எந்தக் கட்சி வேட்பாளாராகிறார் கூடங்குளம் உதயகுமார்?”

புரிந்து கொள்வோம்: எல்லாம் மக்களை முட்டாள்களாக்கி வரும் அரசியல் வியாதிகளின் அட்டூழியம்.

விரைவில் எதிர்பாருங்கள் என் கவிதை: தலைப்பு: “ என்னாட்டின் இளைஞர்காள்! என்னாச்சு உன்னிலைகள்?!’’

Shameed said...

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) சொன்னது…

கூடங்குளம் அங்கே மின்சாரம் என்று அறிந்த நமக்கு, அது கூடி மின்சாரமாவது எப்படின்னு அழகாய் சொல்லி விட்டீர்கள். நன்றி.

//புகைப்படம் 1 தான் அனுப்புனியலா? இல்லெ அனுப்புன இடத்திலெ எதோ நடந்துருச்சா? //

புகைப்படம் ஒன்று கூட நான் அனுப்பவில்லை காரணம் புகைபடம் நான் எடுத்தது என்றால் அங்கே Q காரர்கள் Q வில் வந்து நிற்ப்பார்கள் உளவாளி!! என்று சொல்லி

மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) said...

கவிஞருக்கு தண்ணீரில் கன்டமா சாரி கன்ஃபியூசனா நண்ணீர் கொண்டு குலிர் வித்தால் பிரகு குடிக்குகூட தண்ணி தர மாட்டனுங்க
என்ன நடக்குதுன்னு வேடிக்கை பார்க்கத்தான் முடியும் நம்மால்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அணு அணுவாக மின்சாரம் கட் பன்றாங்களே என்ன செய்வது ?

Ebrahim Ansari said...

அணுமின்சாரம் பற்றிய தகவல்கள் எளிமை நடையில் - ஏற்றமுடன்.
மேலும் மேலும் உனது ஆக்கங்களில் மெருகும், தரமும் கூடிக்கொண்டே போகிறது.

தொடரட்டும் இந்த நற்பணி.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு