மின்சாரம் - அப்படீன்னா என்னங்க !?

மின்சாரம் – ஆட்சியை மாற்றுகிறது, ஆளுபவர்களை மாற்றி பேச வைக்கிறது, இருட்டை அழைக்கிறது, கொசுவுக்கு வரவேற்பு வைக்கிறது, உரைந்த ஐஸ்-ஐ உருக வைக்கிறது… இப்படியாக சொல்லிக் கொண்டே போனாலும், இன்றைய சூழலில் நமதூரில் மட்டுமா தமிழகம் முழுவதும் மின்சார தட்டுப்பாடு தலை விரித்தாடுகின்றது இதற்கு காரணம்தான் என்ன?

இதற்காக கார் எடுத்துகிட்டு போய் அப்பர் மலையேறி தனிமையில் யோசிக்க வேண்டியதில்லை, முதலில் தேவைக்கு  அதிகமாக நாம் மின்சாரத்தை பயன்படுத்த ஆரம்பித்தோம். அதற்கு காரணம் பெரும்பாலான எலக்ட்ரானிக் (மின்னனு) சாதனங்கள் மின்சாரத்தை அடிப்படையாக கொண்டு இருப்பதால் மின்சாரத் தேவையும் அதிகரித்துக் கொண்டே போகின்றது.

அடுத்ததாக அரசும்  உற்பத்தியை அதிகரித்து இருக்க வேண்டும்  ஆனால் முந்தை, இன்றைய அரசுகள்  அதைச் செய்யவில்லை. அவ்வாறு அரசு  செய்யாததால் ஆறு அறிவு  படைத்த மனிதன் இரவு முழுவதும் ஐந்து அறிவு படைத்த கொசுவை விரட்டிக் கொண்டு இருக்கின்றான்.

மின்சாரம் மின்சாரம் என்ற கூக்குரல்! ஆனால், மின்சாரம் அப்படின்னா என்ன  ?

இந்த கேள்வியை அணு உலை எதிர்ப்பாளரிடம் கேட்டாலும் சரியான பதில் வராது அதையே அணு உலை  ஆதரவாளரிடம் கேட்டாலும் சரியான பதில் வராது. ஏன் அதிராம்பட்டினம் மின்சாரத்துறையிடம் கேட்டால் கூட சரியான பதில் கிடைக்குமா என்பது  சந்தேகமே.  இதை சொல்ல தலையை சுத்தி மூக்கை சொறியனுமா என்று 'யாசிர்' புலம்புவது காதில் விழுகின்றது விசயத்திற்கு வருவோம்.

மின்சாரம் என்றால் என்ன?  ஒளி என்பது ஒரு வகை ஆற்றல், ஒளியை புரோதான் (proton) துகள்கள்  என்று சொல்லலாம். அனைத்து பொருள்களிலும் எலக்ட்ரான்  என்ற மின்னணு ஒன்று (இறைவன்  படைப்பில் எத்தனை விதங்கள்)  உண்டு இந்த எலக்ட்ரானுக்கு கொஞ்சம் ஆற்றலைக் (அதாவது கொஞ்சம்  சூடு அல்லது உராய்வு) கொடுத்தால், அது இருக்கும் இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு செல்லும். இப்படி இந்த  எலக்ட்ரான் ஓட்டத்தைதான்  நாம் மின்சாரம் என்கிறோம். இந்த எலக்ட்ரான் ஓடுவதை தொட்டால் மரணம் தான் இது ஓடாமல் நின்றாலும் மரண வேதனைதான்.

மின்சாரம் என்பது  இரண்டு வகைப்படும் ஒன்று AC கரண்ட்  (இதிலும் இறைவன் ஜோடிகளை புகுத்தி உள்ளான்) இரண்டு ஜோடிகள் உள்ளன. இரண்டாவது DC கரண்ட்  இதில் இரண்டு ஜோடிகள் உள்ளன. அதாவது பாசிட்டிவ் மற்றும் நெகடிவ் இங்கே  ஒரு முக்கிய விஷயம் என்னவென்றால் இந்த மின்சாரம் ஜோடியாகவே இருக்க வேண்டும்  ஜோடியில் ஒன்று இல்லை என்றாலும் வேலைக்கு ஆகாது. இந்த ஜோடி ஒன்று சேர்ந்தால் தான் உருப்படியாக எதையும் செய்ய முடியும் பாசிட்டிவ் மற்றும் நெகடிவ் இரண்டும் இருந்தால் தான் இயக்கவோ அல்லது செலுத்தவோ முடியும்.


AC மற்றும் DC மின்சாரம் என்றால் என்ன ?

AC  - மின்சாரம்

AC (ALTERNATIVE CURRENT) மின்சாரம் என்பது ஆல்டர்னேட்டர் அல்லது ஜெனெரேட்டர் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரமாகும். குறைந்த இழப்பில் இதை நெடுந்தொலைவிற்கு கடத்த முடியும் (மத்திய அரசிடம் 'அம்மா' தனி வழித்தடம் கேட்பது இப்போது புரிகிறதா?). எனவேதான் நம் மத்திய அரசு நெய்வேலியில் மின்சாரம் உற்பத்தி செய்து கர்நாடகவிற்கு கடத்துகின்றது. இது  கடத்தலுக்கு எளிமையாய் இருப்பதால் தான் தொழிற்சாலை வீடுகள் அனைத்திற்கும் இந்த AC மின்சாரம் பயன்படுத்தப்படுகின்றது. இந்த AC யை கடத்துவதற்கு செலவும் மிக குறைவு. நம் வீடுகளில் 220-வோல்ட்டுக்கு சிறிய அளவிலான சில்க் (Silk) வயரை பயன்படுத்தி அதாவது விலை  மலிவான கடத்தி / (wire) ஒயர்களை பயன்படுத்தி AC மின்சாரத்தை எளிமையாக  கடத்தி விடலாம். ஆனால், இந்த வகை கரண்டை சேமித்து வைக்க முடியாது.

DC - மின்சாரம்

(DIRECT CURRENT) DC மின்சாரம் என்பது பேட்டரி (Battery) மற்றும் சோலார் (Solar) செல் ஆகியவற்றிலிருந்து கிடைக்கும் மின்சாரம் ஆகும். DC மின்சாரத்தை நெடுந்தொலைவுக்கு கொண்டு செல்ல முடியாது. காரணம் மின் சிதைவு அல்லது இழப்பு (power loss) என்று சொல்லப்படும்  மின்சார இழப்பு இந்த DC மின்சாரத்தில் ஏற்படும். ஆகவே, இந்த  DC மின்சாரத்தை கூடங்குளத்தில் இருந்து ஒரு 500 கிலோவாட் அனுப்பினால் அது அதிராம்பட்டினம் வரும் போது 100 கிலோ வாட் தான் கிடைக்கும். ஆகையால் இந்த DC கரண்டை எந்த கடத்தல் மன்னராலும் நீண்ட தூரம் கடத்த முடியாது. மேலும், இதை கொஞ்ச தூரம் கடத்துவதாக இருந்தாலும் தடிமனான கடத்தி (Wire) வேண்டும் உதரணமாக கார் பேட்டரி 12 வோல்ட் அல்லது 24 வோல்ட்  இருக்கும் அதற்கு தடித்த இணைப்பு கொடுக்கப்பட்டிருக்கும் கவணித்துப் பார்த்தால் தெரியும். இந்த DC  மின்சாரத்தில்  ஒரு மிகப் பெரிய வரப்பிரசாதம் இதை சேமித்து வைக்கலாம் (அலாவுதீன் காகா விற்கு பிடித்த கரண்ட் )

ஒரு முக்கிய விஷயம் என்னவென்றால் இந்த மின்சாரம் ஜோடியாகவே இருக்க வேண்டும் ஜோடியில் ஒன்று (நியூட்ரல் அல்லது பேஸ் - Phase) இல்லை என்றாலும் வேலைக்கு ஆகாது. இந்த ஜோடி ஒன்று சேர்ந்தால் தான் உருபடியாக எதையும் சுழல அல்லது எரிய விடமுடியும். பாசிட்டிவ் மற்றும் நெகடிவ் இந்த இரண்டும் இருந்தால்தான் எதையும் இயக்கவோ செலுத்தவோ முடியும். அதுபோல் மனிதர்களில் ஆண்-பெண்  ஜோடி, மரங்களில் ஆண்  மரம், பெண் மரம், இப்படி உலகில் ஏராளமான ஜோடிகள் இறைவனால் படைக்கப்பட்டுள்ளது. இந்த ஜோடிகளில் ஒன்றை பிரித்தாலும் உற்பத்தியோ அல்லது இனப்பெருக்கமோ உலகில் நடைபெற வாய்ப்புகள் கிடையாது. இந்த மின்சாரத்தை கண்டுபிடிப்பதற்கு முன்பே நம்மை படைத்த இறைவன்   அல்குர்ஆனில் இதைப் பற்றியெல்லாம் மிக விபரமாக கூறிவிட்டான்.அறிவுடையோருக்கு அல்குர்ஆன் ஒரு அறிய பொக்கிஷம்.

அல் குர்ஆன்

36:36. பூமி முளைப்பிக்கின்ற (புற்பூண்டுகள்) எல்லாவற்றையும், (மனிதர்களாகிய) இவர்களையும், இவர்கள் அறியாதவற்றையும் ஜோடி ஜோடியாகப் படைத்தானே அவன் மிகவும் தூய்மையானவன்.

51:49. நீங்கள் சிந்தித்து நல்லுணர்வு பெறுவதற்காக ஒவ்வொரு பொருளையும் ஜோடி ஜோடியாக நாம் படைத்தோம்.

26:7. அவர்கள் பூமியைப் பார்க்கவில்லையா? - அதில் மதிப்பு மிக்க எத்தனையோ வகை (மரம், செடி, கொடி) யாவற்றையும் ஜோடி ஜோடியாக நாம் முளைப்பித்திருக்கின்றோம்.

Sஹமீது

52 கருத்துகள்

இப்னு அப்துல் ரஜாக் சொன்னது…

மின்சாரம் பற்றி இப்போதுதான் தெரிந்து கொண்டேன்.அல்லா ஜோடிகளை படைத்த விதம் குறித்தும் அதை ஆராய்ந்தும் சொல்லியுள்ள உங்கள் கூற்று அருமை .இது மூலம் அல்லாஹ்வின் வல்லமை குறித்து இன்னும் அறிய முடிகிறது.அல்லாஹ் உங்களுக்கு நற் பேரு வழங்குவானாக

Unknown சொன்னது…

மிக எளிமையான விளக்கம் .........!

அதோடு குரான் வசனங்களை மேற்கோள்
காட்டி எழுதியது அருமை .... !!!

சிந்திப்போருக்கு " குரான்" இறை வேதம்
என உணர்த்த, பல அத்தாட்சிகளில், நீங்கள் குறிப்பிட்ட ஆயத்துகள்
மிகுந்த பொருள் கொண்டது ....!!!!

Iqbal M. Salih சொன்னது…

//இவர்கள் அறியாதவற்றையும் ஜோடி ஜோடியாகப் படைத்தானே அவன் மிகவும் தூய்மையானவன்.//

அருமையான விளக்கம்.

ஆமா! கொசுவுக்கு ஐந்தறிவா?

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

எப்போதுமே வித்தியாசமான சிந்தனை உதிச்சுகிட்டே இருக்கும் உங்களுக்கு !

மின்சாரம் வந்ததும்... யாரையுமே காணோமே !?

Shameed சொன்னது…

m.nainathambi.அபுஇபுறாஹிம் சொன்னது…

//மின்சாரம் வந்ததும்... யாரையுமே காணோமே !//


கரண்டை போட்டதும் எல்லாம் நிம்மதியா தூங்கிடாங்க !!

Shameed சொன்னது…

Iqbal M. Salih சொன்னது…
//ஆமா! கொசுவுக்கு ஐந்தறிவா? //

இது பற்றி கொசுவை பேட்டி எடுத்தவரும் கொசு(அடிக்க ) பேட்டை எடுத்தவரும் தான் பதில் சொல்லணும்

Yasir சொன்னது…

மின்சாரத்தைப்பற்றிய காரசாரமான புரியும்படியான தகவல்கள்....
அது சரி மின்சாரத்தை கடத்தினா போலீஸ் புடிக்கமாட்டாங்களா ?? :)...மின்சாரத்தையும் அதன் பண்புகளையும் புட்டுபுட்டு வைத்திருக்கும் நீங்க சம்சாரத்தை ஹேண்டில் செய்வதைப்பற்றி ஒரு சில தகவல்களை கொடுத்தால் வாசகர்களுக்கு புண்ணியமா போகும்

அப்துல்மாலிக் சொன்னது…

திரும்பவும் பள்ளிக்கு சென்று வகுப்பறையில் லியாகத் அலி சார் பாடம் நடத்தியாமாதிரி இருக்குது சகோ ஹமீத்...மாஷா அல்லாஹ்..

Shameed சொன்னது…

Yasir சொன்னது…

//சம்சாரத்தை ஹேண்டில் செய்வதைப்பற்றி ஒரு சில தகவல்களை கொடுத்தால் வாசகர்களுக்கு புண்ணியமா போகும்//

மின்சாரத்தை கையில் தொட சொன்னா எப்படிங்க தொடமுடியும்

Shameed சொன்னது…

அப்துல்மாலிக் சொன்னது…

//திரும்பவும் பள்ளிக்கு சென்று வகுப்பறையில் லியாகத் அலி சார் பாடம் நடத்தியாமாதிரி இருக்குது சகோ ஹமீத்...மாஷா அல்லாஹ்.. //

லியாகத் அலி சார் போன்ற நல்ல வாத்தியார்களிடம் கற்றது தானே இங்கே வெளிப்படுது

crown சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
crown சொன்னது…அஸ்ஸலாமுஅலைக்கும்.கரண்டு இல்லாமல் ஊர் இருண்டு போய் விட்டதோடல்லாமல்,கொசுகடியில் புரண்டு,புரண்டு படுத்து தூக்கம் தொலைத்தவர்கள் கூட விழித்திருந்து பார்க்கும் படி கரண்டு(சுர்ரென்ட்) மேட்டரை தந்த உங்கள் விஞ்ஞான அறிவு திரண்டு இருப்பது அந்த ஆழி ஆறுபோல் இருக்க காரணம் லியாகதலிசாரிடம் படித்தது எனும் போது அந்த சாரின் திறமை உங்களை போல் மாணவர்களிடம் பளிச்'என தெரிவதில் விளக்க(காய்)மாய் தெரிகிறது சாரின் 'பவர்''

Unknown சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
Unknown சொன்னது…

// ஆறு அறிவு படைத்த மனிதன் இரவு முழுவதும் ஐந்து அறிவு படைத்த கொசுவை விரட்டிக் கொண்டு இருக்கின்றான் //
மேல குறிப்பிட்ட இந்த வரிகள் என்னை மிகவும் கவர்ந்தது. மின்சாரவெட்டு வந்ததால்தான் நாம் விழிப்புணர்வு பெற்றோம். இல்லையனில் நாம் கொசுவை விரட்ட இரவு முழுவதும் விழித்திருப்போமா? எனவே மின்சாரவெட்டு தமிழகத்தில் நீடித்தால் தான் தமிழன் ‘விழிப்புணர்வு’ பெறுவான்

sabeer.abushahruk சொன்னது…

ஹமீது,

எங்கேயுமே ஷாக் அடிக்காத சுத்தமான சர்க்யூட் உங்கள் பதிவு.

வழக்கம்போல ஒரு அட்டு கேள்வி:

டிஸி கரென்ட்டை சேமித்து வைக்கப்பட்ட மின்கலன் (கார் பேட்டரி) ஏஸி கரென்ட்டால் ரீச்சார்ஜ்
செய்யப்படாவிட்டால் ச்செத்துப்போய்ட்றதே வேற ஏதும் வழியில்லையா டிஸி கரென்ட்டை வாழ வைக்க?

Thameem சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
sabeer.abushahruk சொன்னது…

தம்பி யாசிர்:

வாழ்க்கையெனும் மின்புலத்தில்
அன்பெனும் சர்க்யூட்டைச்
சரியாகப் போட்டால்
சம்சாரம் ஷாக்கடிக்காது

இதயம்
காதலைச் சேமிக்கும் கன்டென்சராகனும்

மின்காந்தப்புலத்தில்
அவள் தென்துருவமெனில்
நாம் வடதுர்வமாகனும்

அவள் கண்கள்
இன்டெக்ட்டென்ஸாகும்போதெல்லாம்
நம்மில்
தூண்டுமின்சாரம் சுரக்கனும்

அவளின் 
நியாயமான விருப்பங்களுக்கு
ரெஸிஸ்ட்டென்ஸ் குறைத்து
மின்னோட்டத்தைக் கூட்டி
அதிக வாட்ஸ் அனுபவிக்கனும்

சர்க்யூட்டை ஒருமுறை
மார்க்கம்கொண்டு
இன்ஸுலேட் செய்து
உடன்
ஸ்விட்ச்சைப் போட்டால்
ச்சின்னச்சின்ன அதிர்வுகளோடு
செல்ல மின்சாரமாகிப்போவாள்
சம்சாரம்!

Unknown சொன்னது…

‘கொசுக்கள் பட்டினிகிடகிறதே’ என்ற கருணை உள்ளதால்தான் அரசு மின்வெட்டை தொடர்கிறதோ ?

Yasir சொன்னது…

//வாழ்க்கையெனும் மின்புலத்தில்// என்னுடைய ஏஸி இன்புட்னால ஒரு அழகான இன்ப ஷாக் கொடுக்கும் டிசி கவிதை கவிக்காக்காவிடம் இருந்து கிடைத்திருக்கின்றது..வாழ்க்கையின் தத்துவத்தை LED லைட் போல பளிச்சென்று சொன்ன கவிக்காக்கா அவர்களுக்கு வாழ்த்துக்கள்

N.A.Shahul Hameed சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும் சாவன்னா!!!
ஆன்மீகத்தையும், லவ்ஹீஹத்தையும் கலந்து பவ்தீகத்தில் கொடுத்திருக்கிறாய்.
ஆனால் உயிரியலில் இக்பால் உன்னைக் கலாய்த்துவிட்டானே!!!
ஆமா,உனக்கு லியாக்கத் அலி சார் மட்டுமா இயற்பியல் கற்றுக் கொடுத்தார், தூங்கும் போதும் வாக்கிங் போகும்போதும் எத்தனை முறை என்னைப் படுத்தி இருப்பே. போடா ...
வஸ்ஸலாம்
N.A.Shahul Hameed

Ebrahim Ansari சொன்னது…

// ஆறு அறிவு படைத்த மனிதன் இரவு முழுவதும் ஐந்து அறிவு படைத்த கொசுவை விரட்டிக் கொண்டு இருக்கின்றான் //
மேல குறிப்பிட்ட இந்த வரிகள் என்னை மிகவும் கவர்ந்தது. மின்சாரவெட்டு வந்ததால்தான் நாம் விழிப்புணர்வு பெற்றோம். இல்லையனில் நாம் கொசுவை விரட்ட இரவு முழுவதும் விழித்திருப்போமா? எனவே மின்சாரவெட்டு தமிழகத்தில் நீடித்தால் தான் தமிழன் ‘விழிப்புணர்வு’ பெறுவான்

(மேலே கண்ட பின்னூட்டம் சாகுல் ஹமீது உடைய தகப்பனார். ஜனாப். எஸ். முகமது பாரூக் அவர்களின் கருத்து. )

நெறியாளர் - editor@adirainirubar.in சொன்னது…

Mohamed Farook சொன்னது…
// ஆறு அறிவு படைத்த மனிதன் இரவு முழுவதும் ஐந்து அறிவு படைத்த கொசுவை விரட்டிக் கொண்டு இருக்கின்றான் //

மேல குறிப்பிட்ட இந்த வரிகள் என்னை மிகவும் கவர்ந்தது. மின்சாரவெட்டு வந்ததால்தான் நாம் விழிப்புணர்வு பெற்றோம். இல்லையனில் நாம் கொசுவை விரட்ட இரவு முழுவதும் விழித்திருப்போமா? எனவே மின்சாரவெட்டு தமிழகத்தில் நீடித்தால் தான் தமிழன் ‘விழிப்புணர்வு’ பெறுவான்//

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

மூத்த சகோதரர் முஹம்மது பாஃரூக் காக்கா அவர்களின் வருகை எங்களுக்கு உவகை கொள்ளச் செய்கிறது... நலவரவு !

உங்களைப் பற்றி நிரம்ப கேள்வி பட்டிருக்கிறோம், எழுத்தாற்றல் மட்டுமல்ல நகைச்சுவைக்கும் நட்சத்திரமாக இருப்பவர்கள் என்றும் அறிந்தோம்...

கேட்டுத்தான் பெற வேண்டுமா? உங்களிடமிருந்து அற்புதமான ஆக்கங்களை... விரைவில் எதிர்பார்க்கிறோம் இன்ஷா அல்லாஹ்...

தொடர்ந்து எங்களை அவதானித்து வாருங்கள், உங்களின் பங்களிப்பையும் கருத்தாய்வுகளால் எங்களை பண்படுத்துங்கள்...

அன்புடன்,

நெறியாளர்
www.adirainirubar.in

Ebrahim Ansari சொன்னது…

அதிரை நிருபரில் அவை கூட்ட ஒருவர் தரும் கட்டுரைக்கு சுவை கூட்ட மற்றொருவர்.

இந்தக் கட்டுரையைப் பொருத்தவரை அவையைக் கூட்டியவர் சாகுல். அதற்குப் பின்னூட்டமிட்டு சுவையைக் கூட்டியவர் சபீர். நல்ல டீம்தாங்கோ நீங்க எல்லாம்.

கண்ணு படப்போகுதையா சின்னக் கவுண்டரே!( சின்னக்கவுண்டர்களே!)

sabeer.abushahruk சொன்னது…

ஹமீது,
ஸாரு கோவிச்சிக்கிட்டாறு.

ஒரு ட்டீ சொல்லுங்க

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

//அவள் கண்கள்
இன்டெக்ட்டென்ஸாகும்போதெல்லாம்
நம்மில்
தூண்டுமின்சாரம் சுரக்கனும்//

இப்போ என்னாங்கிறீங்க ?

மின்சாரம் வேனுமா வேனாம ? எனக்கு உண்மை தெரிஞ்சாகனும்!

ZAKIR HUSSAIN சொன்னது…

//டிஸி கரென்ட்டை சேமித்து வைக்கப்பட்ட மின்கலன் (கார் பேட்டரி) ஏஸி கரென்ட்டால் ரீச்சார்ஜ்
செய்யப்படாவிட்டால் ச்செத்துப்போய்ட்றதே வேற ஏதும் வழியில்லையா டிஸி கரென்ட்டை வாழ வைக்க? //

இருக்குது பாஸ்.....இன்னொரு பேட்டரி புதுசா வாங்கிடறதுதான் அது!!

sabeer.abushahruk சொன்னது…

ஜாயிரு,

நீ ஓன் கிளாஸுக்குப் போ.

போறதுக்கு முன்னாலே நீயோ உன்ட பினாமி யாரையோ நியமிச்சி இதுக்கு பதில் சொல்லிட்டுப் போ:

ஒரு ஃபுல் அடிச்சிட்டு ஹால்ஃப் போறதுக்குள்ள குவாட்டர் ஆயிட்றது...இடையிலே அவ்ளோவ் கட்டிங்.

டெல்ல் மி. நான் என்ன செய்கிறேன்?

Abu Easa சொன்னது…

Assalamu alaikum varah..

//ஒரு ஃபுல் அடிச்சிட்டு ஹால்ஃப் போறதுக்குள்ள குவாட்டர் ஆயிட்றது...இடையிலே அவ்ளோவ் கட்டிங்.

டெல்ல் மி. நான் என்ன செய்கிறேன்?//

U r Driving

Thameem சொன்னது…

அஸ்ஸலாமு அழைக்கும்
எனது தகபன்னார் முகம்மது பாருக் அவர்களை அறிமுக படுதியதற்கு அதிரை நிருபர் குழுவுக்கு நன்றியை தெரிவித்துகொல்கிறேன்

Shameed சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
Yasir சொன்னது…

//Thameem சொன்னது…// தமீம்,வாப்பாவுலாம் இங்கே வர்ரதுக்கு நாங்கதாப்பா நன்றி சொல்லனும்..நல்லாயிருக்கியா ??

Shameed சொன்னது…

sabeer.abushahruk சொன்னது…

//டிஸி கரென்ட்டை சேமித்து வைக்கப்பட்ட மின்கலன் (கார் பேட்டரி) ஏஸி கரென்ட்டால் ரீச்சார்ஜ்
செய்யப்படாவிட்டால் செத்துப்போய்ட்றதே வேற ஏதும் வழியில்லையா டிஸி கரென்ட்டை வாழ வைக்க?//

மாற்றுவதை தவிர வேறு மாற்றுவழி கிடையாது

ZAKIR HUSSAIN சொன்னது…

//டெல்ல் மி. நான் என்ன செய்கிறேன்? //

இந்த வாரம் எதையும் சிந்திக்க வேண்டாம்னு காலண்டரில் போட்டிருக்கான் பாஸ்...

[ எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்குது..]

Shameed சொன்னது…

sabeer.abushahruk சொன்னது…
ஹமீது,
ஸாரு கோவிச்சிக்கிட்டாறு.

//ஒரு ட்டீ சொல்லுங்க //

சாருக்கு டீ கிளாசுக்குள்ள விரல் விடமா ஒரு டீ (சொல்லியாச்சு )

Shameed சொன்னது…

N.A.Shahul Hameed சொன்னது…

//அஸ்ஸலாமு அலைக்கும் சாவன்னா!!!
ஆன்மீகத்தையும், லவ்ஹீஹத்தையும் கலந்து பவ்தீகத்தில் கொடுத்திருக்கிறாய்.
ஆனால் உயிரியலில் இக்பால் உன்னைக் கலாய்த்துவிட்டானே!!!
ஆமா,உனக்கு லியாக்கத் அலி சார் மட்டுமா இயற்பியல் கற்றுக் கொடுத்தார், தூங்கும் போதும் வாக்கிங் போகும்போதும் எத்தனை முறை என்னைப் படுத்தி இருப்பே. போடா ...
வஸ்ஸலாம்
N.A.Shahul Hameed //

வலைக்கும் முஸ்சலாம்

லியாக்கத் அலி சார் தூங்கி முழித்து வந்து பாடம் நடத்தினார் நாங்களோ உங்களை தூங்கவிடாமல் பாடாய் படுத்தி பாடம் படித்துக்கொண்டோம் உங்களிடம் இருந்து. (இன்னும் அந்த ஆப்பைகம்பு மேட்டர் மட்டும் நீங்கள் சொல்லித்தரவே இல்லையோ சார் )

sabeer.abushahruk சொன்னது…

வ அலைக்குமுஸ்ஸலாம் அபு ஈசா.

//u r driving//

perfect!


ஸ்கூல் போற வழிலே காருக்கு
பெட்ரோல் "ஃபுல்" அடிச்சிட்டு
தூரம் "ஹால்ஃப்" கிலோ மீட்டர் போறதுக்குள்ள
நேரம் "குவாட்டர்" அவர் ஆயிடுது
இடையில் லோக்கல் ஆக்ஸஸ்லேர்ந்து எங்க ரோட்டுக்கு அவ்ளோவ் "கட்டிங்"

Shameed சொன்னது…

கரண்டுக்கு கரண்டாய் வந்து பின்னுட்டம் இட்ட சகோ கிரௌன் இனி அனைத்திலும் கரண்டாய் இருக்க வேண்டுகின்றேன்

தாஜுதீன் (THAJUDEEN ) சொன்னது…


No current...
No comment...

Hameed kaka, very useful information. Thanks.

Thameem சொன்னது…

நன்றாக இருகிறேன் யாசீர் காக்க. நீங்கள் எப்படி இருகிறீர்கள்.கூடிய விரைவில் வப்பவுடைய கட்டுரைகள் அதிரை நிருபரில் வெளிவரும் இன்சாஹ் அல்லாஹ்.

Riyaz Ahamed சொன்னது…

சலாம்.
அய்யாவின் மீண்டும் ஒர் அறிய முத்து.

"ஒரு முக்கிய விஷயம் என்னவென்றால் இந்த மின்சாரம் ஜோடியாகவே இருக்க வேண்டும் ஜோடியில் ஒன்று (நியூட்ரல் அல்லது பேஸ் - Phase) இல்லை என்றாலும் வேலைக்கு ஆகாது. இந்த ஜோடி ஒன்று சேர்ந்தால் தான் உருபடியாக எதையும் சுழல அல்லது எரிய விடமுடியும். பாசிட்டிவ் மற்றும் நெகடிவ் இந்த இரண்டும் இருந்தால்தான் எதையும் இயக்கவோ செலுத்தவோ முடியும்"
AC யில் பாசிட்டிவ், நெகடிவ் ஒரே வயரில் மீண்டும் மீண்டும் தொடர்ந்து வரும், இதில் மூன்றாவது நியூட்ரல் சேர்ந்தாதான் எதையும் இயக்கவோ செலுத்தவோ முடியும் இது ஜோடியா?
DC யில் பாசிட்டிவ், நெகடிவ் போதும் இது தானே ஜோடி

Shameed சொன்னது…

Riyaz Ahamed சொன்னது…

//AC யில் பாசிட்டிவ், நெகடிவ் ஒரே வயரில் மீண்டும் மீண்டும் தொடர்ந்து வரும்,//

வாத்தியாரு யாரு ?

Shameed சொன்னது…

இங்கு வந்து கருத்து சொன்ன அனைவருக்கும் என் நன்றியும் துவாவும்

KALAM SHAICK ABDUL KADER சொன்னது…

மின்வெட்டால் நாம்படும் வேதனைகள் ஆட்சியர்க்
கண்பட்டால் தீருவதைக் காண்

அலாவுதீன்.S. சொன்னது…

சகோ. ஹமீது:
மின்சார ஆக்கமும், கருத்துக்களும்
நன்றாக இருந்தது.

Haja Shareef சொன்னது…

ஹமீது உடைய ஆக்கம் எப்போதுமே மிக சிறப்பாக இருக்கும். இந்த மின்சார பற்றிய ஆக்கமும் அப்படியே. மின்சாரம் பற்றி நிறைய விசயங்கள்.

//AC யில் பாசிட்டிவ், நெகடிவ் ஒரே வயரில் மீண்டும் மீண்டும் தொடர்ந்து வரும், இதில் மூன்றாவது நியூட்ரல் சேர்ந்தாதான் எதையும் இயக்கவோ செலுத்தவோ முடியும் இது ஜோடியா? DC யில் பாசிட்டிவ், நெகடிவ் போதும் இது தானே ஜோடி//

நான் அறிந்த வரையில் AC மின்கம்பியில் மின்சாரம் வினாடிக்கு 50முறை பாசிடிவாகவும் 50 முறை ஜீரோவாகவும் 50 முறை நெகடிவாகமும் மாறிக்கொண்டே இருக்கும்(50Hz). இது அமெரிக்கா மற்றும் அரபு நாடுகளில் 60முறை மாறும். மின் உற்பத்தி நிலையங்களில். மின்சாரம் பாசிடிவில் இருந்து நெகடிவ் மாறும்போது ஜீரோ வோல்ட் மின்சாரம் தொடும் நிலையில் உள்ள மின்கம்பியை பூமியில் ஆழத்தில் புதைத்து விடுவார்கள். பூமி ஒரு சிறந்த மின்கடத்தி (conductor)என்பதால்.

நீங்கள் உங்கள் வீட்டுக்கு ஒரு phaseஐ மின்கம்பத்தில் இருந்தும் நியுட்றலை உங்கள் வீட்டு தரைக்கு கீழே குழாய் பதித்து அதிலிருந்து எடுத்து கொள்ளலாம். நீங்கள் பாஸிடிவ் மற்றும் நெகடிவ் இரண்டையும் பயன்படுத்தாலம் (நியுட்ரலுக்கு பதிலாக). அப்படி செய்தால் 220v பதில் 440V மின்சாரம் வரும். இந்த பூமியில் கம்பி பதிக்கும்முறையால் ஒரு மின் கம்பி மிச்சப்படும். உங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள transformer-ல் உயர் மின் அழுத்த மின்கம்பியை பார்த்தல் அதில் 11000V என்று எழுதி இருக்கும். அதில்3 phaseக்கு மூன்று கம்பிகள் தான் வரும். நாலாவது கம்பி (Neutral) பூமியில் இருந்து எடுத்து கொள்வார்கள்

ஹாஜா ஷரிப்/ சிங்கப்பூர்

Shameed சொன்னது…

Haja Shareef சொன்னது…

//நீங்கள் உங்கள் வீட்டுக்கு ஒரு phaseஐ மின்கம்பத்தில் இருந்தும் நியுட்றலை உங்கள் வீட்டு தரைக்கு கீழே குழாய் பதித்து அதிலிருந்து எடுத்து கொள்ளலாம். நீங்கள் பாஸிடிவ் மற்றும் நெகடிவ் இரண்டையும் பயன்படுத்தாலம் (நியுட்ரலுக்கு பதிலாக). அப்படி செய்தால் 220v பதில் 440V மின்சாரம் வரும். இந்த பூமியில் கம்பி பதிக்கும்முறையால் ஒரு மின் கம்பி மிச்சப்படும். உங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள transformer-ல் உயர் மின் அழுத்த மின்கம்பியை பார்த்தல் அதில் 11000V என்று எழுதி இருக்கும். அதில்3 phaseக்கு மூன்று கம்பிகள் தான் வரும். நாலாவது கம்பி (Neutral) பூமியில் இருந்து எடுத்து கொள்வார்கள்//

அருமையான விளக்கம்.

நம்ம ரியாஸ் காகா AC மின்கம்பியில் மின்சாரம் வினாடிக்கு 50முறை பாசிடிவாகவும் 50 முறை ஜீரோவாகவும் 50 முறை நெகடிவாகமும் மாறிக்கொண்டே இருக்கும்(50Hz). (60Hz). இதை சைக்கிள் என்பார்கள் இதில் ரியாஸ் காகா விற்கு நிறைய சந்தேகங்கள் உள்ளது நீ கொஞ்சம் விளக்கம் கொடுத்துவிடு

Ahamed irshad சொன்னது…

மின்சாரம் பற்றி இவ்வளவு விரிவான கட்டுரை...பல தகவல்கள் தெரிந்து கொண்டேன்..அநிருபர் பல்வேறு வகையில் பயன் தரும் தளமாக மாறி வருவது சிறப்பு அண்ட் மகிழ்ச்சி.. ஷாகுல் காக்கா அருமையான ரைட்டப்.. தொடர்ந்து எழுதுங்கள் காக்கா... அருமை..

KALAM SHAICK ABDUL KADER சொன்னது…

லியாகத் அலி சாரிடம் படித்த பாடங்கள் இன்று ஷா,ஹமீத் சாரிடம் மீள் பார்வையாக்கப்படுவதும், அதிரை நிருபர் என்னும் இத்தளம் அதிரையின் பள்ளிக்கூடம் அல்லது பல்கலைக்கழகம் என்னும் பட்டத்திற்குரியத் தகுதியை உங்களின் ஆக்கத்தால் பெருமிதம் கொண்டு மிளிர்வதும், அத்தகைய அருந்தளத்தில் அடியேனும் பங்களிப்பானாய் இருக்கின்றேன் என்றெண்ணும் போதினில், இன்பத் தேன் வந்து பாயுது காதினில்!

அன்புடன் சீசன்ஸ் சொன்னது…

அருமையான கட்டுரை

அன்புடன் சீசன்ஸ் சொன்னது…

மனிதன் வாழ்வில் ஏற்றம் இறக்கம் கண்டேன்
இறக்கம் காண இரக்கம் கொண்டேன்

மின்சாரத்தில் ஏற்றம் இறக்கம் கண்டேன்
மின்சாரத்தின் மீது வெறுப்பைக் கொண்டேன்

எங்கே நிம்மதி நிலையற்ற மின்சாரத்தால்
நெட்டே கழண்டு போச்சு பிடியற்ற கரண்டால்

மின்சாரம் பாய்ச்சும் மின்சாரம் முறையற்றதாய் போகக் கண்டேன்
சம்சாரம் பாய்ச்சும் மின்சாரம் முறையாக இருக்கக் கண்டேன்

இனாம் தந்த மிக்சி வீணாகிப் போச்சு
பணம் கொடுத்து பெற்ற மின்சாரம் பிரச்சனைப் பண்ணுது
இனாமுக்கு போட்ட ஒட்டு ஓடாகி உடைந்துப் போகுமோ !

மின்சாராம் பல மணி நேரங்கள் இல்லாமல் இருந்தது பல் வகையான பாதிப்பை கொடுத்து பழகிப் போனது. இப்பொழுது மின்சாரம் ஓரளவு வருகிறது.அது வேகமாகவும் ,மிகவும் மெதுவாகவும் (high or low current )கொடுக்கப் படுகின்றது. அதனால் பல பொருள்களை வீணாக்கி பாதிக்கின்றது .இது தமிழ்நாட்டின் நிலையாகாக உள்ளது

சிவா. சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
சிவா. சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.