Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

உருகுதே அதிரை ! 15

அதிரைநிருபர் பதிப்பகம் | May 11, 2012 | , ,


வியாழன் இரவு கையில் கிடைத்த ஒரு டிஜிடல் விடியோ கேமாரவை எடுத்த பொடியன், தான் கற்றதை கைவிரல் அளவோடு விளையாட எத்தனிக்கும்போது அதிரையின் அசாத்திய துணிச்சலுக்கு பெயர்போன மின்சாரம் இருட்டை பிரசவித்தது எவ்வித முன்னறிவிப்பும் இன்றி. ஆனால், வந்ததோ கோபம் பொடியனுக்கு கையிலிருந்த கேமராவை தூக்கியடித்தான் அது எங்கு விழுந்தது என்று தேடிடத்தான் இந்த மெழுகுவர்த்தியை ஏற்றியும் வைத்தான். கேமரா கையில் கிடைத்ததும் அந்த பொடியன் தானாக அதனை ஆன் செய்து தனக்கே உரிய ஸ்டைலில் காணொளியும் பதிவு செய்து தனது கோபத்தை தீர்த்துக் கொண்டான்.

ஏனுங்க உங்கள் பங்கிற்கு ஏதேனும் உண்டா ?

-அபுஇபுறாஹிம்

15 Responses So Far:

Ebrahim Ansari said...

ஊருக்குப் போனவர்கள் எல்லாம் மின்வெட்டைப் பற்றி கண்டித்து எழுதும் வாரமா? ஊர் வர பயமாக இருக்கிறது.

இந்த ஆக்கம் ஒரு காவியம்.

ZAKIR HUSSAIN said...

சிறுவன் = ஹீரோ...

Noor Mohamed said...

//சுடச்சுட அதிரை!// என்கிறார் கவிவேந்தர்.

//உருகுதே அதிரை !// என்கிறார் நெறியாளர்.

இந்நிலையில் விடுப்பில் வீடு செல்ல திட்டம் தீட்டியவர்களுக்கு, அதிரை நிருபர் அச்சத்தையல்லவா கொடுக்கின்றன?

சேக்கனா M. நிஜாம் said...

நாட்டில் அறிவிக்கப்படாத மின்வெட்டு காரணமாக தயாரிக்கப்பட்ட “மெழுகுவர்த்தி”களை பேக் செய்ய மெழுகுவர்த்தியை “பற்ற” வைத்துதான் வேலையை ஆரம்பிக்கிறார்கள் !

நாட்டில் மெழுகுக்கே......மெழுகா !!! (ப்) போய்விட்டது நிலைமை !

sabeer.abushahruk said...

பளிச்செனத் தெரிகிறது
பையனின் அறிவொளி
படீரெனத் தெறிக்கிறது
குரல்தனில் அதிரடி

மாஷா அல்லாஹ்.

அபு இபுறாஹீம், BEN 10 என்னாச்சு? ஏதும் கேட்கிறானா? வாங்கியாரவா?

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கவிக் காக்கா:

அதனை மறந்து 4 நாட்கள் ஆகிவிட்டது, அந்த சத்தம் கணினியில் இல்லாமல் வைதிருக்கிறேன்...

இனி ஐ-பேட் அதோடு டிராவிங் கவனம் திரும்பி இருக்கிறது.

ஒருவர் ஊரில் கேட்டார் கவிதைக்கு காக்கா இருக்கிறாரா என்று நானும் ஆமாம் கவிதைக்கு தம்பிகளும் இருக்கிறார்கள் என்றேன் 

அவரோ உன்னிடமா கேட்டேன் என்று புலம்பியவராக நகர்ந்தார்.

Shameed said...

பெரிய மனுசர்வோ பவர் கட் பேசி பேசி அலுத்து போய்டக அதான் சின்ன புல்லையளுவோ படம் புடுச்சி காட்டுதுவோ (மிளகுதரியை சுற்றி சுற்றி வரும் நிழல் எதையோ நினைவு காட்டுகின்றன )

KALAM SHAICK ABDUL KADER said...

மெழுகுவர்த்தியுடன் வாழும் அக்கரையா?
மெழுகுவர்த்தியாக உழைக்கும் இக்கரையா?
அக்கரைக்கு இக்கரைப் பச்சை
விரும்பிப் போனால் விலகிப் போகும்
விலகிப் போனால் விரும்பி வரும்
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இதையும் தாங்கும்

பட்டால் கடிக்கும் கொசுவை நினைத்து தானுங்க
தொட்டால் தொடரும் சுகமான சுமைதாங்க
மீண்டும் மீண்டும் உலக உருண்டை
தாண்டும் எண்ணம் தானே வரும் தானுங்க

திருட்டை ஒழிக்க முடியாத
இருட்டை விலக்க முடியாத
தாய்நாட்டை விடவும்
திருட்டுக்குக் கையை வெட்டித்
திருந்தவைக்கும் நாட்டின் மீது
நாட்டம் வரும் தானாகவே
ஓட்டம் விடும் விரக்தியும் தானே
இங்கே தியாகங்கள் சம்பளமாகவும்
அங்கே தியாகங்கள் வியாதியாகவும்
மாற்றிக் கொள்கின்ற
அன்னியச் செலவாணி மாற்றம்
இதிலென்னத் தடுமாற்றம்?

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

சூப்பர் கம்ப்லைன்ட்!

ரெயிலு வரும் வரும் என காத்திருந்து சளைத்தது போல மின்சார விசயத்தில் ஒருதலை பட்சம் பார்க்கும் இந்த அரசுக்கு இந்த அழகான மழலையின் அழகுக் குரல் வேண்டுகோளும், பொறுமையிழந்து சொட்டும் கண்ணீர் கட்டளையாவது இது மாதிரி அவலங்களை போக்க வேண்டும்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

ஒரு நேரத்தில் உச்சியில் இருந்த மின் அத்துடன் சாரம் சேர்ந்து விட்டதால் இன்று அதளபாதாளத்தில் சருக்கி விழுந்து சின்னா, பின்னமாகிக்கிடக்கின்றது. அதை மேலே எடுத்து வந்து சிகிச்சையளிக்க இயந்திரத்திற்கும் தேவைப்படுகிறது மின்'சாரம்'....

க‌ட‌ல் மீன்க‌ள் போல் விண்ணில் விண்க‌ல‌ங்க‌ள் நீந்தும் இக்காலத்தில் இன்னுமா என்னை ப‌ய‌ன்ப‌டுத்துகிறாய்? என்று சப்தமாய் சிரித்துக்கொண்டே கேட்டதாம் காதுகேளாத உம்மாவின் கையில் சுழ‌லும் விசிறி.

நெறியாள‌ரின் ம‌க‌ன் ந‌ல்ல‌ பொறியாள‌ராக‌ வ‌ருங்கால‌த்தில் வ‌ர‌ மெளுகுவ‌ர்த்திக்குப்பின்னே நல்ல குர‌ல்வ‌ட்ட‌ம் தெரிகிற‌து இன்ஷா அல்லாஹ்.....

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

'ந‌ம்ம‌ காத‌ராக்காவை ந‌ம்ம‌ ப‌ய‌லுவொ சில‌ பேர் ப‌க்க‌த்து ஊரில் முன்பு ஒரு நாள் ந‌ட‌ந்த‌ இஸ்த்திமாவுக்கு கூட்டிக்கொண்டு வ‌ந்திருந்தார்க‌ள். அந்த‌ ஊரில் அப்பொழுது அடிக்க‌டி மின்த‌டை ஏற்ப‌ட்டு ஊரே இருளில் மூழ்கியது. அந்த‌ நேர‌ம் காத‌ராக்கா (சொல்ல‌வா வேனும்??) "என்ன‌டா இது ஊரே வெறுந்தேத்த‌ண்ணி மாதிரி க‌ருப்பா இருக்குது. க‌ர‌ண்ட் இருந்தா தான் பால் டீ குடிச்ச‌ மாதிரி இருக்கும்" என்று சொன்ன‌து சிரிப்பொலியில் ஒளியும் சேர்ந்து கொண்ட‌து அங்கு......

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

தன்னை உருக்கி கொண்டிருக்கும் மெழுகு திரிமூலம் தன் சிந்தனையை வெளிச்சமாக்கி கொள்ளும் இப்ராஹிம்மின் செயல் சூப்பர்.

Anonymous said...

மெழுகுவர்த்தி உருகுவது போல் அதிரை மக்கள் மின்சாரம் இல்லாமல் உருகி வருகிறார்கள். இதற்கு எப்பொழுது வலி பிறக்குமோ தெரிய வில்லை.

மின்சாரம் அடிக்கடி கட் ஆகுவதால் தமிழ் நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் உருகி வருகிறார்கள். இதற்கு தமிழக அரசு முடிவு கட்ட வேண்டும்.

அதிரை சித்திக் said...

நாள்தோம் ஊதிய உயர்வு கேட்டு ஊழியரின் ஊர்வலம்

ஒட்டு கேட்டு ஐந்து வருடத்திற்கு ஒரு முறை அரசியல்வாதிகளின்

ஊர்வலம் ..இனி மின்வெட்டை கண்டித்து மழலைகளின் ஊர்வலம் வருமோ

இந்த சிறு மழலையின் தலைமையில் ..,

Unknown said...

மு.செ.மு. நெய்னா முஹம்மது சொன்னது…
'ந‌ம்ம‌ காத‌ராக்காவை ந‌ம்ம‌ ப‌ய‌லுவொ சில‌ பேர் ப‌க்க‌த்து ஊரில் முன்பு ஒரு நாள் ந‌ட‌ந்த‌ இஸ்த்திமாவுக்கு கூட்டிக்கொண்டு வ‌ந்திருந்தார்க‌ள். அந்த‌ ஊரில் அப்பொழுது அடிக்க‌டி மின்த‌டை ஏற்ப‌ட்டு ஊரே இருளில் மூழ்கியது. அந்த‌ நேர‌ம் காத‌ராக்கா (சொல்ல‌வா வேனும்??) "என்ன‌டா இது ஊரே வெறுந்தேத்த‌ண்ணி மாதிரி க‌ருப்பா இருக்குது. க‌ர‌ண்ட் இருந்தா தான் பால் டீ குடிச்ச‌ மாதிரி இருக்கும்" என்று சொன்ன‌து சிரிப்பொலியில் ஒளியும் சேர்ந்து கொண்ட‌து அங்கு......
-------------------------------------------------
நெய்னா இன்று நினைத்தாலும் சிரிப்புதான் ..முஹமத் பந்தர் என்ற ஊர் என்று நினைக்கிறேன்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு