அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும்.
‘அதிரை தாருத் தவ்ஹீத்’ தொடர்ந்து நடத்திவரும் ‘கோடைகால
இஸ்லாமிய நல்லொழுக்கப் பயிற்சி முகாம்’ பற்றிய அறிவிப்பைக் கண்ட நாள்
முதல், ஒவ்வோர் ஆண்டும் இப்பயிற்சி முகாமினால் பயன் பெற்றுவந்த மாணவ
மாணவியர்களிடமும் கல்வித் தேட்டம், பொறுப்புணர்வு, ஆர்வம் முதலான தன்மைகளில்
செயலூக்கம் காணப்பட்டது! பெயர்ப் பதிவும் இதர
முன்னேற்பாடுகளும் மாணவ மாணவியரிடத்தில் காணப்பட்டது, ‘அதிரை தாருத் தவ்ஹீத்’ (ADT) நிர்வாகிகளுக்கு ஆர்வத்தையும் ஊக்கத்தையும்
தந்தது.
களமிறங்கக் காத்திருந்த செயல் வீரர்கள், பயிற்சி
முகாமுக்கான முன்னேற்பாடுகளில் இறங்கத் தொடங்கினர். முதலில், பயிற்சிமுகாம் பற்றிய அறிவிப்பு
வெளியாயிற்று.
நமதூரைப் பொருத்தவரை, பயிற்சிமுகாமில் கலந்துகொண்டு பயன்பெறுவோர்
மாணவிகளே. ஆனால், இவ்வாண்டு மாணவர்களின் பங்கு
முன்னைய ஆண்டுகளின் பதிவைவிடக் கூடுதலாகவே இருந்தது. இந்த நிழற்படம், இதனை உறுதிப் படுத்தும்.
நமது ‘அர்ரவ்ழா பெண்கள் கல்லூரி’யின்
ஆசிரியைகளும் களத்தில் இறங்கிப் பயிற்சியளிக்க ஆயத்தமாயினர். அவர்கள் இத்தூய பணியில் ஆர்வத்துடன் கலந்து,
பொறுப்புகளைச் சிறப்புடன் நிறைவேற்றினார்கள். அவர்கள் அனைவருக்கும் ADT நிர்வாகம் தனது நன்றியைத் தெரிவிக்கின்றது.
இவ்வாண்டு நமக்குக் கிடைத்த இலங்கை
முத்து, அப்துல் ஹமீத் (ஷரஇ). இவர் ‘ஆலிம்’ பட்டம் பெற்றதுடன், மனோதத்துவ அறிஞரும்
கூட. இவர் பெரும்பாலும் மாணவர்களுக்கே
‘தர்பியா’ என்னும் ஒழுக்கவியல் பாடங்களைப் போதித்தார்.
எமது அமீரகச் சகோதரர்களின் அழைப்பை ஏற்று,
அதிரைக்கு வந்தவர். நமது ஊரைச் சூழவிருக்கும்
ஊர்த் தவ்ஹீத் சகோதரர்கள் தம் ஊர்களில் வகுப்பெடுக்க வேண்டும் என்று நம்மிடம்
விரும்பி வேண்டி அழைத்தனர். முத்துப்பேட்டை மதுக்கூர், நாகூர், அறந்தாங்கி,
மஞ்சக்கொல்லை ஆகிய ஊர்ச் சகோதரர்களின் ‘ஜுமுஆ’ மற்றும் மாலை நேர வகுப்புகளும்
எடுக்கச் செய்து பெரும்பலனைப் பெற்றனர்.
காலை முதல் முற்பகல்வரை பயிற்சி முகாமில் பாடங்கள் முடிந்தபின், மாணவ
மாணவிகள் தத்தமக்கு ஒதுக்கப்பட்ட ‘வேன்’களில் வீடுகளுக்குச் சென்றபின், மதிய
உணவுக்குப் பின்னர், குடும்பத் தலைவியருக்குப் பொருத்தமான பயனளிக்கும் மனோதத்துவப்
பாடங்களை எடுத்துணர்த்தி, அவர்களை அதிசயிக்க வைத்துப் பயிற்சியளித்தார்.
மவ்லவி அப்துல் ஹமீத் (ஷரஈ) அவர்களுக்கு ADT நிர்வாகம் தன் நன்றிக் கடப்பாட்டைத்
தெரிவிக்கின்றது.
இடையில் இன்னொரு அப்துல்
ஹமீது! அவர்தான், நமதூருடன்
நட்புறவு கொண்ட ‘அழைப்பாளர்’, சென்னைவாசி. இவரும் பிலால் நகர் ‘தர்பியா செண்ட’ரில் பயனுள்ள
வகுப்புகளைப் பையன்களுக்கு எடுத்து, பயிற்சி முகாமில் கிடைத்த நன்மைகளை நுகரச்
செய்தார். அவருக்கும் நாம் நன்றிக்கடன்
பட்டுள்ளோம்.
இடையில் ஒருநாள், ‘இஸ்லாமிய அழைப்பாளர்’ தருமபுரி சாதிக் அவர்கள் நமதூருக்கு வந்தவர்,
நமது அனுமதியைப் பெற்று, சிறுவர்களுக்குப் பயிற்சி அளித்தார். அவருக்கும் நாம் கடப்பாடுடையோம்.
நமது நன்றியுணர்வுக்கு, இன்னும்
முடிவில்லை! இன்னும் சிலருக்கும் நாம் நன்றி கூறக் கடமைப் பட்டுள்ளோம். மாணவ
மாணவிகளின் பயிற்சி முகாமிலும் இடம் பெறாத, அவர்களின் படிப்புக்குத் தொடர்புடைய,
பாட நூல்களில் இடம் பெறாத, 'இந்திய விடுதலைப் போரில் இஸ்லாமியர்களின்
வீர வரலாறு' எனும் தலைப்பில் இணையதள
எழுத்தாளர் இப்ராஹீம் அன்சாரி அவர்கள் பயனுள்ள உரையொன்றை நிகழ்த்தி, மாணவ மாணவியரை
மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினார். இதன்
கட்டுரை வடிவப் பதிப்பு, ‘அதிரை நிருபர்’ என்ற தளத்தில் இடம் பெற்றதாகும்.
சகோதரர் இபுராஹீம் அன்சாரி அவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும்
என்பதற்காக முத்துப்பேட்டையிலிருந்து வந்து, நமது வேண்டுதலுக்கு அவருடைய
சொற்பொழிவின் மூலம் தம் கடமையை நிறைவேற்றினார்.
அன்னாருக்கும் நமது நன்றி உரித்தாகும்.
நாம் திட்டமிட்டுத் தொகுப்பாக
அமைத்திருந்தபடி, இன்னொரு அருமையான நிகழ்ச்சியை ‘செக்கடி மேட்டில்’ வயது
வரம்பின்றி அனைவரும் பயன்பெறும் விதத்தில் நடத்தினோம். இது ஓர் அற்புதமான
அழைப்புச் சாதனமாகும். அது இதுதான்:
இந்த நிகழ்ச்சியை, மிகச் சிறப்பாகப் ‘பவர்
பாயின்ட்’ முறையில் நடத்தித் தந்தவர், ‘உளவியல் அறிஞர்’,
மவ்லவி அப்துல் ஹமீத் (ஷரஇ) அவர்கள்தாம்.
மிகச் சிறப்பாக அமைந்த இந்நிகழ்ச்சியைப் பற்றிப் பாராட்டாதவர் இல்லை! இதற்காகவும் மவ்லவி அவர்களுக்கு நம் உளம்
நிறைந்த நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறோம்.
இந்த எல்லா நிகழ்ச்சிகளுக்கும்
முத்தாய்ப்பாக அமைந்தது, ‘தக்வாப் பள்ளி’ முனையில் நாம் நடத்திய பரிசளிப்பும், அதைத் தொடர்ந்து, 'குடும்பப் பிரச்சினைகளும் அவற்றுக்கு
இஸ்லாம் கூறும் உளவியல் தீர்வுகளும்' என்ற தலைப்பில் அப்துல் ஹமீத் (ஷரஇ)
நிகழ்த்திய சிறப்புரையுமாகும்.
அபுதாபியிலிருந்து
துபாய்க்கு வந்து, நம் சகோதரர்களைக் கூட்டி, இந்தப் பயிற்சி முகாமின் வெற்றியை
நோக்கமாகக் கொண்டு, இறுதிச் சிறப்பு நிகழ்ச்சிவரை பக்கபலமாக நின்ற ஆர்வலர் அமீன் அவர்களின் பங்களிப்பு,
அனைவரையும்விட அதிகமாகும். பரிசுப் பொருள்களைக்கூட அமீரகத்தில் வாங்கி, அதிரைக்கு
அனுப்பித் தந்து, பரிசு பெற்ற மாணவ மாணவிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்திய பெருமைக்குச்
சொந்தக்காரரான சகோதரர் அமீனை எவ்வாறு புகழ்வதென்று புலப்படவில்லை! அத்துணைக்கு அமைந்து விட்டது, அவருடைய
பங்களிப்பு!
ADTயின் பொதுச் செயலாளர் தம்பி ஜமீல் ஆற்றிய களப்பணியின்போது, அவரின் உடை வியர்வையால்
சொட்டச் சொட்ட நனைந்து போயிருந்ததைக் கண்டவன் என்ற முறையில், நான் அவருடைய
பங்களிப்பை உயர்த்தியே கூறுவேன்.
இடையிடையில், சில படிவங்களுக்குப் பிரதியெடுக்கும் தேவை ஏற்படும்போது,
அதனையும் தானே முன்வந்து, கணினியில் பதிந்து, அதைப் பிரதியெடுத்து, அதைக் கொண்டு
ஆகவேண்டிய பணியைத் தான் ஒருவரே செய்து, எனக்கு மலைப்பூட்டியவர்! மட்டிட்டுக் கூற முடியாத அவருடைய dedication
காரணமாக எனது பங்களிப்பைக் குறைத்துக்கொண்டேன் என்பதுவே உண்மையாகும். ‘நன்றி’ எனும் ஒற்றைச் சொல்லில் கூறினால், அவர்
ஈடுபட்டுச் செய்த பணிகளுக்கு நம் நன்றி போதாது.
அவரின் திட்டமிடுதல், அதன்படி இயக்குதல், குறைபாடுகள் இருந்தால், அவற்றைச்
சரிப்படுத்துதல் போன்ற dedications அவருக்கே உரிய ஒன்றாகும்.
மழை வருகின்றதா என்று வானத்தை நோக்கியபோது,
அது நமது பயிற்சி முகாம் தடையின்றி நடைபெறச் சாதகமற்ற சூழலை உருவாக்கிவிடுமோ என்ற
கவலையில், அதே நேரம், இந்தக் கோடை
வெயிலின் தாக்கத்துக்கு இம்மழையின் தேவை நிலையில், மாணவ மாணவியர் தத்தம்
வீடுகளுக்குச் சென்று சேர்ந்த பின் மழை வந்தால் போதும் என்ற எண்ணத்தில், வானை
நோக்கிய எனது கவலைப் பார்வை!
தனது பள்ளி விடுமுறையின்போது எமது பயிற்சி
முகாமுக்காகத் தன்னால் இயன்ற எல்லா வசதிகளையும் செய்து தந்தமைக்காக, இப்பள்ளியின் தாளாளர் அப்துர்ரஸ்ஸாக் அவர்களுக்கு ADT நிர்வாகம் மிக்க
நன்றியைக் கூறுகின்றது.
பயிற்சி முகாம் நடக்கும்போது தாமும் ஊரில்
இருக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் தனது விடுப்பை முன்னோ பின்னோ அமைத்துக்கொண்டு ஊர்
வந்து சேர்ந்து, எங்களுடன் இணைந்து செயல்பட்ட அப்துல்
காதர் அவர்களுக்கு மிக்க நன்றி.
எம்மோடு இணைந்து செயல்பட்ட அப்துர்ரஹ்மான், அஹ்மது ஹாஜா, பிலால் நகர் கமாலுதீன் ஆகியோருக்கு
என் இதயம் நிறைந்த நன்றியை உரித்தாக்குகின்றேன்.
வஸ்ஸலாம்.
ADT/ அமீர்
அதிரை தாருத் தவ்ஹீத்
5 Responses So Far:
மாஷா அல்லாஹ்
மாணவ மாணவியர் பலரும் இந்த கோடைகால பயிற்ச்சிமுகாம் மூலம் பயன் பெற்றிரிப்பார்கள் என்பதனை இதில் இணைக்கப்பட்டுள்ள போட்டக்களே மூலம் சொல்கின்றது அல்ஹம்துலில்லாஹ் மிகவும் வரவேற்கதக்க நிகழ்ச்சி இந்த கோடைகாலப்பயிற்சி
இந்த நிகழ்ச்சியினை மிக அழகான முறையில் மிகவும் சிறப்பாக நடத்திய நிகழ்ச்சியாளர்ககளான ஜமீல் காக்கா அஹ்மது காக்கா இந்த இரு காக்கா மார்களுடன் இனைந்து செயல் பட்ட ADT சகோதரர்களுக்கும்
கோடைகால பயிற்சியளித்த வல்லுனர்களுக்கும் மற்றும் இதற்கு தனது பங்களிப்பை உடலாலும் பொருளாலும் கொடுத்து உதவிய சகோதரர்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் இறைவன் வெற்றியை வழங்குவானாக ஆமீன்
அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்…
அல்ஹம்துலில்லாஹ் !
அனைவரின் உழைப்பின் பலனை நிறைவு கட்டத்தில் காண நேர்ந்தது !
செயல்வீரர்கள், களப்பணி ஆற்றிய அனைத்துள்ளங்களுக்கும் அல்லாஹ் நல்லருள் புரிவானாக…
அவர்களின் தூய எண்ணங்களடங்கிய இச்செயலை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக..!
எங்கள் இ.அ.காக்கா அவர்களின் பங்களிப்பு இருக்க வேண்டும் என்று "மதச் சாயம் பூசி மறைக்கப்பட்ட இஸ்லாமிய வரலாறு" தொடர் ஆரம்பித்த சிலவராங்களிலியே வேண்டுகோள் வைக்கப்பட்டதை அப்படி அவர்களும் மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டு மிகச் சிறப்புடன் மாணவமணிகளின் வரலாறு கற்கும் ஆர்வத்திற்கு அடிக்கல் நாட்டினார்கள், அன்றைய பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட மாணவிகள் பலர் ஆர்வமுடன் குறிப்பெடுத்துக் கொண்டு தங்களின் ஈடுபாட்டை உறுதியுடன் காட்டியதை அறியும்போது மகிழ்வாக இருந்தது. - அல்ஹம்துலில்லாஹ் !
அனைவருக்கும் நீண்ட ஆயுளுடன் சரீரசுகத்தையும் வல்லமை நிறைந்த அல்லாஹ் வழங்கவேண்டி துஆச் செய்கிறோம் இன்ஷா அல்லாஹ் !
அஸ்ஸலாமு அலைக்கும்.
அன்புள்ள அஹமது காக்கா மற்றும் சகோதரர் ஜமீல் தம்பி அமீன் மற்றும் அதிரை தாருத் தவ்ஹீத் அமைப்பின் நிர்வாகிகள் அனைவருக்கும் நான்தான் கடமைப் பட்டுள்ளேன்.
அதிரை நிருபர் வலைதளத்தில் நான் எழுதி வருகிற வரலாற்றில் மறைக்கப்பட்ட முஸ்லிம்களின் வீர வரலாறு பற்றிய தொடருக்கு ஒரு அங்கீகாரம் அளித்தது போல் தாங்கள் நடத்திய இந்த கோடைகால பயிற்சி முகாமில் மாணவ மணிகளுக்கு மத்தியில் உரையாற்ற ஒரு சந்தர்ப்பம் கொடுத்தீர்கள்.
உரையாற்றுகின்ற நேரத்தில், மாணவ மணிகள் காட்டிய ஆர்வம் குறிப்பாக மாணவிகள் கைகளில் குறிப்பேடுகளுடன் அமர்ந்து குறிப்பெடுத்துக் கொண்ட பாங்கு பார்க்க மிகவும் மகிழ்வாக இருந்தது.
ஒரு வித்தியாசமான ஆனால் இன்றைய சமுதாயத்துக்கு அத்தியாவசியமான ஒரு தம்பியை அமீன் என்ற பெயருடன் சந்தித்ததும் மனம் நிறைவான நிகழ்ச்சி.
தங்களின் அனைத்து நிகழ்ச்சிகளும் இவ்வருடம் மிகவும் பயனுள்ளதாக அமைந்ததை அறிந்து மகிழ்வதுடன் இன்ஷா அல்லாஹ் அடுத்தடுத்த வருடங்களில் மேலும் மேலும் சிறப்புடன் நிகழ இறைவனை வேண்டுகிறேன்.
தங்களுக்கும் சகோதரர் ஜமீல் அவர்களுக்கும் ஏ டி ட்டி அமைப்பின் அனைத்து நிர்வாகிகளுக்கும் இறைவன் நல்ல உடல் நலத்தையும் இன்னும் சமுதாயப் பணியாற்றும் ஆற்றலையும் தர து ஆச் செய்யும் பலருடன் என்னையும் இணைத்துக் கொள்கிறேன்.
தங்களுக்கும் சகோதரர் ஜமீல் அவர்களுக்கும் ஏ டி ட்டி அமைப்பின் அனைத்து நிர்வாகிகளுக்கும் இறைவன் நல்ல உடல் நலத்தையும் இன்னும் சமுதாயப் பணியாற்றும் ஆற்றலையும் தர து ஆச் செய்யும் பலருடன் என்னையும் இணைத்துக் கொள்கிறேன்.
மாஷா அல்லாஹ்.
செயலர் காக்காவின் கலைந்த கேசம் களத்தில் உழைப்பையும் தலைவரின் உச்சம் நோக்கியப் பார்வை முன்னேற்றத்தையும் சிம்பாலிக்காகக் காட்டுகின்றன.
அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, காக்காமார்களே.
Post a Comment