Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

TNTJயின் முக்கிய தாயி சகோதரர் மௌலவி அப்பாஸ்அலி.... ::: விலகல்... ::: அதிரை விவாத எதிரொலி..! [காணொளி இணைப்பு] 12

அதிரைநிருபர் பதிப்பகம் | November 05, 2014 | , , ,

அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ் TNTJயின் முக்கிய தாயி சகோதரர் மௌலவி அப்பாஸ்அலி அவர்களின் உள்ளத்தில் நேர்வழியை செலுத்தி இந்த வழிகேடான முஃதஸிலாக்களின் பாதையில் இருந்து நீங்கச் செய்து முழு முஸ்லிம் உம்மத்துக்கும் ஒரு உதாரணமாக மாற்றிவிட்டான். இவரை இந்த வழிகெட்ட பீஜேயின் சுய சிந்தனை பாதையில் இருந்து பாதுகாத்த அல்லாஹ்வுக்கே புகழ்அனைத்தும் அல்ஹம்துலிலாஹ்....!!!! எமது விவாதமும் அல்லாஹ்வின் உதவியால் இதற்க்கு ஒரு காரணமாகும்!!!!!!!!!!!!!
-----------------------------------------------------------------------------------------------------------------

Abbas Ali Misc

அல்லாஹ்வை அஞ்சி எடுத்த முடிவு

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.....

அன்பான சகோதரர்களே! சில ஆதாரப்பூர்வமான நபிமொழிகளை குா்ஆனுக்கு முரண்படுகின்றது என்று சகோதரர் பீஜே முதலில் கூறினார். அவர் கூறியது உண்மை என உளப்பூர்வமாக நம்பி நானும் அந்த ஹதீஸ்களை மறுத்து வந்தேன். இது தொடர்பாக ஹதீஸ்கள் குா்ஆனுக்கு முரண்படுமா? என்ற நுாலையும் நான் எழுதினே். தவ்ஹீத் ஜமாத்தில் மற்றவர்களை விட இது பற்றி நான் அதிகமாக பேசியும் எழுதியும் இருக்கிறேன்.

இந்நிலையில் முன்பு முரண்பாடாக தெரிந்த பல ஹதீஸ்கள் தற்போது அவற்றுக்கும் குா்ஆனுக்கும் இடையே எந்த முரண்பாடும் இல்லை என்ற உண்மை எனக்கு தெரியவந்தது. குா்ஆனுக்கு முரண்படுகிறது என்ற வாதத்திற்கு பின்னால் தேவையற்ற சந்தேகங்களும் அறியாமையும் சம்பந்தமில்லாமல் வசனங்களை மோதவிடும் போக்கும் காஃபிர் இதை ஏற்றுக்கொள்வானா என்ற மனநிலை மட்டுமே மறைந்துள்ளது என்பதை உணர்ந்துகொண்டேன்.

குறிப்பாக நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதாக வரும் ஹதீஸ் குா்ஆனுடன் முரண்படவில்லை. அதை மறுப்பதற்கு எந்த நியாயமும் இல்லை. அது ஆதாரப்பூர்வமான நபிவழிதான். முஃதசிலாக்களையும் சகோதரர் பீஜேவையும் தவிர இஸ்லாமிய வரலாற்றில் யாரும் இந்த நபிமொழியை மறுக்கவில்லை. 2 102வது வசனத்தின் நேரடி பொருளை மாற்றி இஸ்லாமிய வரலாற்றில் இது வரை எவரும் கொடுக்காத சகோதரர் பீஜே கொடுத்த மாற்று விளக்கமும் குா்ஆனுக்கு மாற்றமாக உள்ளது.

இந்நிலையில் நான் சிஹ்ரை நம்பியவர்கள் முஷ்ரிக் என்று கூறினால் முதலில் நபி (ஸல்) அவர்களை நான் முஷ்ரிக் என்று கூறுவதாக அர்த்தம். (அவூதுமில்லாஹ்). அடுத்து சகோதரர் பீஜேவையும் இவ்விசயத்தில் அவருடைய கருத்தை ஏற்றுக்கொள்பவர்களைத் தவிர்த்து உலகில் உள்ள மற்ற முஸ்லிம்கள் அனைவரையும் முஷ்ரிக்குகள் என்று கூற வேண்டிய நிலை உள்ளது. முஃமின்களை முஷ்ரிக்குகள் என்று நான் கூறுவதை விட பெரிய வழிகேடு வேறு ஒன்றும் இருக்க முடியாது.

இந்நிலையில் இதுபற்றி நான் மக்களுக்கு தெளிவுபடுத்தாமல் மரணித்துவிட்டால் என்னுடைய மறுமைவாழ்வு கேள்விக்குறியாகிவிடும்? எனவே நான் வெட்கப்படாமல் எனக்கு சரி என்று படும் விசயத்தை பகிரங்கமாக அறிவிக்கிறேன்.

நான் சிஹ்ர் தொடர்பாக முன்பு தெரிவித்த கருத்துக்களுக்கும் ஹதீஸ்கள் குா்ஆனுக்கு முரண்படுமா? என்று எழுதிய நுாலுக்கும் இனி எனக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இது தொடர்பாக சில தினங்களுக்குப் பிறகு நான் எனது விளக்கத்தை இன்ஷா அல்லாஹ் வெளியிடுவேன்.

தவ்ஹீத் ஜமாத்தில் ஆதாரப்பூர்வமான நபிமொழிகள் நாளுக்கு நாள் நியாயமின்றி மறுக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றது. மறுப்பதற்கு முன்பு மற்ற அறிகர்கள் யாரிடமும் ஆலோசனை செய்வதில்லை. மறுத்தப் பிறகு மற்றவர்களும் மறுத்தாக வேண்டிய நிலை வருகின்றது. மறுப்பதற்கு முன்பு மற்ற அனைவரிடமும் ஆலோசனை செய்யுங்கள் என்று நான் கோரிக்கை வைத்தப் பிறகும் அதை ஏற்காமல் சமீபத்தில் அதிராம்பட்டிணத்தில் நடந்த விவாவதத்தில் சில ஆதாரப்பூர்வமான நபிமொழிகளை அநியாயமாக சகட்டுமேனிக்கு மறுக்கப்பட்டது.தவ்ஹீத் ஜமாத்தில் இருந்து கொண்டு இதை உரியவா்களிடத்தில் தெரிவிக்க என்னால் இயலவில்லை. எனவே வெளியில் இருந்து இதுபற்றி பேச முடிவு செய்துள்ளேன். இது திடீரென அவசர கோலத்தில் நான் எடுத்த முடிவில்லை. பல பிரச்சனைகளை சந்தித்து பலமாதங்கள் சென்ற பிறகு இதைத் தவிர வேறு வழியில்லை என்பதை அனுபவத்தில் உணர்ந்த அடிப்படையில் எடுத்த முடிவாகும். யாரையும் காயப்படுத்துவது என் நோக்கமல்ல. பொறுமையுடனும் சகோதர உணர்வோடும் இந்தப் பிரச்சனையை நோக்குமாறு அன்பாய் கேட்டுக்கொள்கிறேன்.
பகிர்வு : ADT
as received

12 Responses So Far:

N.A.Shahul Hameed said...

Assalamu Alaikkum!
Alhamdhulillah. I can observe taqwa from his statement. May Allah shower His blessings upon him
N.A.Shahul Hameed

Shameed said...

சரியான முடிவு. அதில் உள்ள மற்றவர்களுக்கும் இறைவன் நேர்வழி காட்டட்டும்

aa said...

அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ் அவரை நேர்வழியில் அதிகப்படுத்துவானாக! தனது முடிவை அல்லாஹ்விற்கு அஞ்சி துணிவாக பகிரங்கப்படுத்திய சகோதரருக்கு சுப ஷோபனம்.

hassaan said...

Read this comedy statement from TNTJ.. As expected same Financial criticize...Allah thaan Kapathanum...

http://www.tntj.net/284245.html

aa said...

கப்றுமுட்டிகளின் வழிகேட்டை விட, தனது ஆய்வை ஏற்காத முஸ்லிம்களை முஷ்ரிக்குகள், காஃபிர்கள் என்று முத்திரை குத்தும் ததஜவின் வழிகேடு பயங்கரமானது என்று நான் பலமுறை சொல்லியுள்ளேன்.

1400 ஆண்டுகளாக ஸஹாபாக்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த முஸ்லிம் உம்மத்திற்கும் தெரியாத ஷிர்குகள் (கண் திருஷ்டி, சூனியம்) சென்னை மன்னடியில் வைத்து கண்டுபிடிக்கபடுகிறது என்று சொல்பவர்கள் சிந்திக்க வேண்டிய தருணம் இது.

அல்லாஹ் எனக்கும், இயக்க மாயையில் சிக்கி நவீன காதியானிகளாக மாறிக்கொண்டிருப்போருக்கும் நேர்வழி காட்டுவானாக. யா அல்லாஹ், குரானையும் சுன்னாவையும் முன் சென்ற நல்லோர்களின் வழியில், கியாமத் நாள் வரை தொடர்ச்சியாக சத்தியத்தின் மீது எவ்வித நவீன சிந்தனை தாக்கமும் இல்லாமல் நிலைத்திருக்கும் அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஅ வின் அகீதா மீது நிலைத்திருக்கச் செய்வாயாக.

காலங்கள் தோறும் ஒவ்வொரு நாட்டிலும், பிராந்தியத்திலும் சமுதாயங்களுக்கிடையே தங்களுடைய கவர்சியான பேச்சுகளின் மூலம் மக்களை வழிகெடுத்த சைத்தானிய கூட்டங்களான காதியானிகள், முன்கர் ஹதீஸ், கவாரிஜ்கள், ஜஹ்மிய்யாக்கள், முஃதஜிலாக்கள், ஜபரிய்யாக்கள், அஷாயிராக்கள், மாத்ரூதிகள், இஹ்வானிகள் மற்றும் இன்ன பிற நவீன கூட்டங்களின் தீங்கை விட்டும் அல்லாஹ் பாதுகாப்பானாக.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//ஸ்ஸ்ஸ்ஸபா....!//

அதுக்குள்ளாட்டியுமா ?

Shameed said...

அதிராம் பட்டிணம் ஆட்டை கழுதை ஆக்கியது என்று சொல்வார்கள் ஆனால் இன்று வழிகேட்டில் இருந்தவரை (ஹதீஸ் நிராகரிப்பு)இறைவன் உதவியால் நேர்வழி படுத்தி உள்ளது

aa said...

​அப்பாஸ் அலி விலகல் சம்பந்தமாக இங்கு சில விஷயங்களை பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன். சமூக வலைதளங்களில் சில தம்பிகள் “ஹாமித் பகிரியை பார்க்கவில்லையா; தர்காவிலே போய் நிற்கிறார். அவரைப் போன்று கதிதான் அப்பாஸுக்கு ஏற்படும்” என்று சொல்லி திரிகின்றனர்.இவர்களின் இந்த கூற்று தம்பிகளின் கொள்கை தெளிவின்மையை தான் காட்டுகிறது.

ததஜவின் விளக்கப்படி, ஹாமித் பக்ரி சமாத்திலிருந்து விலக்கப்பட்டது நிதி/நிர்வாக காரணங்களுக்காக. சமாத்திலிருந்து விலகிய சில மாதங்களோ, வருடங்களோ கழிந்த பின்னர் தான் ஹாமித் பக்ரி அவ்வாறு செல்கிறார் என்பது இவர்களின் குற்றச்சாட்டு. ஆனால் அப்பாஸ் அலி விவகாரமோ தனி. அவர் சமாத்திலிருந்து வில்கும் தனது ராஜினாமா அறிவிப்பிலேயே ததஜ கூற்றுப்படி ஒரு பாரதூரமான பகிரங்கமான ஷிர்க்கை செய்கிறார். அதாவது அல்லாஹ்வின் தூதருக்கு ஸிஹ்ர் செய்யப்பட்டது உண்மை தான்; ஸிஹ்ருக்கு ஒரு தாக்கம் உண்டு என ஒப்புக்கொள்கிறார். இந்த ஒப்புதலே ததஜவின் நிலைப்பாட்டின் படி அவரை இஸ்லாத்தை விட்டு வெளியேற்றி ஒரு முர்ததாக, முஷ்ரிக்காக, காஃபிராக மாற்றி விட்டது. நன்கு கவனிக்கவும் ‘ஹாமிதி பக்ரி சமாத்திலிருந்து வெளியேறும் போது முஸ்லிமாக வெளியேறுகிறார்; ஆனால் அப்பாஸோ முர்ததாக வெளியேறுகிறார்’.

இந்த கொள்கை தெளிவில்லாத தம்பிகள் “அவர் ஜாலியாத்தில் சென்று சேரப்போகிறார்; அதிக சம்பளம் வாங்கப்போகிறார்; அன்பளிப்பு வாங்கினார்; இரண்டு தடவை பஸ் ஃபேர் வாங்கினார்; இரண்டு தடவை ஒரே கேள்விக்கு காசு வாங்கினார்” என்றெல்லாம் சொல்வது நகைமுரண்.

அட தம்பிகளே! அவர் ஏற்கனவே முர்ததாக ஆகிவிட்டார்; இனி அவர் எங்கு வேலைக்கு சென்றால் என்ன?!!அவர் இஸ்லாத்தை விட்டு வெளியேறி முர்ததாக செல்கிறார் என்ற கூற்றுக்கு முன்னால் இவர்கள் சொல்லும் மற்ற எல்லா குற்றச்சாட்டுகள் அனைத்தும் துரும்பு தான்.

என்ன ஒரு கைசேதம்! 1400 வருடங்களாக முழு முஸ்லிம் உம்மத்திற்கும் தெரியாத ஷிர்க்கை சென்னை மன்னடியில் வைத்து ஆய்வு செய்யும் ‘ஆய்வு குழுவை’ சேர்ந்த ஒருவர் அதிலிருந்து வெளியேறுவது ஆயுக்குழுவிற்கு ஏற்பட்ட கைசேதமே. கியாமத் நாள் வரை ஆய் தொடரும், புதிய ஷிர்க்குகள் கண்டுபிடிக்கப்படும் என அறிவித்த சமாத்து விழிபிதுங்கி ஷிர்க், குஃப்ரை விடுவிட்டு திருடினார், அன்பளிப்பு வாங்கினார் என முன்னிலப்படுத்துவது கேலிக்கூத்தே.உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு