அதிரை மக்களுக்கு மட்டுமல்ல அனைத்து தமிழ் பேசும் முஸ்லீம்கள் அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது நான்கு நாட்கள் நடைபெற்ற "கொள்கையற்றவர்கள் யார்" என்ற தலைப்பிலான விவாதம்.
அதிரை தாருத் தவ்ஹீத் மற்றும் த த ஜ வினர் முறையாக எழுத்துபூர்வமான ஒப்புதலோடு அக்டோபர் 27, 28, 29 மற்றும் 30 தேதிகளில் பல்வேறு அமர்வுகளாக விவாதம் நடந்தேறியிருக்கிறது.
அல்ஹம்துலில்லாஹ் ! ஒவ்வொரு அமர்விலும் அதிரை தாருத் தவ்ஹீத் தங்களது பொறுமையாலும், தகுந்த சான்றுகளுடனும் கண்ணியம் காத்து விவாதத்தை சிறப்புடன் முன்னெடுத்துச் சென்றது அவர்களின் அனுபவம் மற்றும் பண்பட்ட பண்பாளர்களின் ஆளுமையையும் போற்றத்தக்கதாக அமைந்தது சிறப்பு அம்சம்.
மாறாக, பல்வேறு விவாதக் களம் கண்ட த த ஜ வினரும் இன்னும் பண்பட்டவர்களாக விவாத அமர்வை எடுத்துச் செல்வார்கள் என்று அவர்கள் மீது பற்றும் அபிமானமும் வைத்திருந்தவர்களின் எதிர்பார்ப்புக்கு ஏமாற்றமாக அமைந்தது. அவர்களின் பிற விவாதங்களில் ஈடுபடுவது போன்றே வழமையான சாடல் போக்கை கையாண்டது வந்திருந்தவர்களில் பெரும்பாலோருக்கு சலிப்பையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியிருக்கிறது.
ஓட்டம், தலை தெறிக்க ஓட்டம், பிடரியில் பின்னங்கால் அடிக்க ஓட்டம் இந்த பல்லவியே அவிழ்த்து விடப்படும் என்று விவாதம் துவங்கும் முன்னரே பலராலும் கருத்துக்கள் சொல்லப்பட்டது, அதற்கு மேலும் சொல்லத் துணிவார்கள் என்றும் எதிர்பார்க்கவும் செய்தார்கள். அதையும் தாண்டி விவாதம் நடந்து கொண்டிருக்கும்போதே சில வினாடிக் காட்சிகளை குறும்படமாக பரப்பி விட்டுக் கொண்டிருந்தது அவர்களின் தோல்வி பயம் பற்றிய குழப்பத்திலிருப்பதை உறுதி செய்தது.
ஒட்டுமொத்த த த ஜ அதிரை கிளைக்காக விவாதம் செய்ய வந்த அதன் மாநில நிர்வாகிகள் மற்றும் த த ஜ அதிரைக் கிளயின் வலைத்தளத்தின் சார்பாக பொறுப்பேற்றுக் கொண்டவரும் அந்த வலைத்தளத்தில் 'அதிரை தாருத் தவ்ஹீத்' கொள்கையற்றவர்கள் என்று அள்ளி வீசிய அவதூறான குற்றச்சாட்டுகள் பற்றி ஒரு வார்த்தைகூட த த ஜ தரப்பில் பேசப்படவில்லை என்பது தான் இந்த விவாதத்தின் மிகப்பெரிய ஹைலைட்.
விவாதம் தொடங்கி, அது முடியும் நான்காம் நாள் வரை சூனியம் மற்றும் தனிமனித வசைபாடல்களை வைத்து நான்கு நாட்களை த த ஜ காலம் கடத்தியுள்ளது, த த ஜ-வின் தரப்பில் 'அதிரை தாருத் தவ்ஹீத்' பற்றி குற்றம் சுமத்த ஒன்றுமில்லை என்பது 100% சதவீதம் இந்த விவாதத்தின் மூலம் நிரூபணமாகியுள்ளது.
நிமிர் நடை கொண்டு, தூற்றல் வாடை இன்றி, நேர் பேச்சுகளே துணிவு என்று படைத்த இறைவன் மீது மட்டுமே ஆழமான நம்பிக்கையை வைத்து களம் கண்ட அதிரை தாருத் தவ்ஹீதை தூற்றியவர்களின் அதிரை த த ஜ கிளைக் கூடாரம் கலகலத்து போனது என்னவோ ஊரரிந்த உண்மையாகிப் போனது மட்டும் நிதர்சனம் - அல்ஹம்துலில்லாஹ்.
ஏகத்துவ கொள்கைப் பற்றுடன் த த ஜ அதிரைக் கிளையில் இருக்கும் சகோதரர்கள் இந்த விவாதத்தை சீர்தூக்கிப் பார்த்து தங்களது இயக்க மயக்கத்திலிருந்து மீண்டு வெளியில் வந்து ஏகத்துவதுவ பற்று கொண்ட மற்ற சகோதரர்கள் அனைவரோடும் ஒருசேர மார்க்க மற்றும் சமுதாயப் பணிகளில் தொடர முன்வர வேண்டும் என்பதே எம் அவா ! - இன்ஷா அல்லாஹ் !
அதிரை வள்ளல்
காணொளி முன்னோட்டம்.... சொல்வதோ த.த.ஜ.(அ.கி.) ஓட்டமெடுக்கப் போவதை...
காணொளி முன்னோட்டம்.... சொல்வதோ த.த.ஜ.(அ.கி.) ஓட்டமெடுக்கப் போவதை...
9 Responses So Far:
அதிரை தாருத் தவ்ஹீதுக்கும் ததஜவுக்கும் இடையேயான கொள்கை வேறுபாடுதான் என்ன என்பதை இந்த விவாதம் வெளிச்சம் போட்டுக் காட்டினால் சரிதான்.
எனக்கென்னவே இரண்டுமே தவ்ஹீது கொள்கையைக் கொண்டதுதான் ஆனால் நடைமுறை மற்றும் புரிதலில் வித்தியாசம் இருக்கலாம் என்று தோன்றுகிறது.
விவாதம் விடை சொல்லுமா?
(ஆனால் கட்டுரை பெரும் ஏமாற்றத்தையே எதிர்பார்க்கத் தயார் செய்கிறது.)
அதிரை தாருத் தவ்ஹீதுக்கும் ததஜவுக்கும் இடையேயான கொள்கை வேறுபாடுதான் என்ன என்பதை இந்த விவாதம் வெளிச்சம் போட்டுக் காட்டினால் சரிதான்.
எனக்கென்னவே இரண்டுமே தவ்ஹீது கொள்கையைக் கொண்டதுதான் ஆனால் நடைமுறை மற்றும் புரிதலில் வித்தியாசம் இருக்கலாம் என்று தோன்றுகிறது.
விவாதம் விடை சொல்லுமா?
(ஆனால் கட்டுரை பெரும் ஏமாற்றத்தையே எதிர்பார்க்கத் தயார் செய்கிறது.)
நீங்கள் த த ஜ வாக இருங்கள்,அல்லது ADT யாக இருங்கள்.எந்த இயக்க முத்திரை வேண்டுமானாலும் குத்திக் கொண்டு வலம் வாருங்கள்.
ஆனால்,சாதாரண மக்களாகிய நாங்கள்,எங்களை "முஸ்லிம்கள்"என்ற பேனரில் மட்டுமே இன்ஷா அல்லாஹ் அழைத்துக் கொள்வோம்.மேலும்,முஸ்லிம்களாகவே இன்ஷா அல்லாஹ் மரணிப்போம்,எந்த இயக்க தொண்டன் என்று அல்ல.
யா அல்லாஹ்,எங்களை முஸ்லிம்களாக மரணிக்க செய்வாயாக - ஆமீன்
'கொள்கையற்றவர்கள் யார்? என்பதே விவாதத்தின் தலைப்பு" ஆனால் தலைப்பு அப்பாற்பட்டு விவாதம் போகும் என்பது எதிர் பார்த்தது. அதுதான் நடந்துள்ளது.
கொள்கையற்றவர்கள் யார் என்று உலகுக்கே தெரியும் அப்படியிருக்க இதை விவாதம் நடத்தித்தான் நிரூபிக்க வேண்டும் என்றில்லை.
இதனாலேயே இந்த விவாதத்திற்கு என் எதிர்ப்பை முகநூலி நண்பர் ஒருவரின் பதிவில் நான் சுட்டியிருந்தேன்.
கொள்கையற்றவர்கள் என்று தங்களது வலைத்தளத்தில் கூவிக் கொண்டிருந்தவர்கள், விவாதக் களத்தில் கூனிக்குறுகி அமர்ந்திருந்து கொண்டு ஏன் அதைப் பற்றி ஒரு வார்த்தை பேசவில்லை !?
Assalamu Alaikkum
Dear brothers and sisters,
It seems to be strange and shame on debating and willing to degrade each other under the named muslim associations. Sure there is ego playig here and no difference between individual and collective "angry and revenging", it may lead to more unharmony and separation than peace and unity.
There is a big question of Ikhlas in doing services to fellow muslims. I am waiting for final and ultimate event.
May Allah save us from shaitan
B. Ahamed Ameen from Dubai.
இன்ஷா அல்லாஹ் முழு வீடியோ வரும் விரைவில்.ததஜவினரின் அவர்களின் கண்ணியக்குறைவான ஏச்சுக்கள் அடங்கிய கிளிப்கள் வாட்ஸப்,யூடூப்களில் வந்துகொண்டு இருக்கிறது.பாருங்கள்.
http://youtu.be/8VaJu84pjsc
http://youtu.be/pS_7z1zi1WU
rabbanagfirlanaa val muminiina val muSlimaath, rabbanaa tha vaffanaa musliman va alhiqna bissaaliheen.
Post a Comment