Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு - காணொளி உரை…! 4

அதிரைநிருபர் பதிப்பகம் | June 13, 2014 | , , ,

அன்பிற்கினியவர்களுக்கு !

அதிரையில் ஸ்திரமான தாஃவாக் களம் அமைத்து மிகச் சிறப்புடன் செயல்பட்டு வரும் அதிரை தாருத் தவ்ஹீத் கடந்த மே-2014 பள்ளி விடுமுறையில் இருந்த மாணவ மணிகளுக்கென்று நடத்திய 'கோடகால பயிற்சி முகாம்' அனைவருக்கும் நினைவில் இருக்கலாம்.

அதிரைநிருபரில் அனைவரின் பேராதரவைப் பெற்று தொடராக பதிக்கப்பட்ட "மதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறுகள்" தொடர் வெளிவந்து கொண்டிருக்கும்போதே, அதிரை தாருத் தவ்ஹீத் சகோதரர்கள் வேண்டிக் கொண்டதன் படி கடந்த மே மாதம் 3ம் தேதி ஆரம்பித்த பயிற்சி முகாமில் ஒரு பகுதியாக எங்களது மூத்த பங்களிப்பாளர் சகோதரர் இப்ராஹீம் அன்சாரி அவர்கள் மே மாதம் 10 தேதி அன்று மாணவ மணிகளுக்கு (கூட்டாக) ‘சுதந்திரப் போராட்டத்தில் முஸ்லிம் வீரர்களின் தியாக வரலாறு’ என்ற தலைப்பில் சிறப்பானதொரு உரை நிகழ்த்தினார்கள்.

அதில் பங்கெடுத்த மாணவமணிகள் அனைவரின் ஆர்வமும், அவர்கள் அந்த உரையில் மோற்கோளிட்ட நிகழ்வுகளை குறிப்பெடுப்பதில் காட்டிய துடிப்பும் மகிழ்வை அளித்தது. 

அதிரை இளைய சமுதாயம் விழி கொண்டும் மொழி கொண்டும் தீர்க்கமான, தூய்மையான இறைகோட்பாட்டிற்குட்பட்டு நபிவழியில் வெற்றியடைய மனதார வாழ்துகிறோம்... இன்ஷா அல்லாஹ் !


அதிரைநிருபர் பதிப்பகம்
காணொளி பகிர்வு (நன்றி) : ADT

4 Responses So Far:

sabeer.abushahruk said...

மாஷா அல்லாஹ்!
அற்புதமான உர
அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா، காக்காஸ்

Unknown said...

மாஷா அல்லாஹ்! மறக்கப்பட்ட இந்திய முஸ்லிம்களின் தியாக வரலாற்களை நெகிழ்ச்சியூட்டும் வகையில் விவரித்து, கண்கலங்க வைத்துவிட்டார் இப்ராஹிம் அன்சாரி காக்கா அவர்கள்.

எல்லாம் வல்ல அல்லாஹ் காக்காவுக்கு ஆரோக்கியதையும் நீண்ட ஆயுளையும் கொடுத்து,மாணவ,மாணவிகளுக்கு மேலும் பல உண்மை வரலாறுகளை விவரிக்க அருள் புரிய வேண்டும்.

நிகழ்ச்சியில் அதிகமான மாணவிகள் கலந்து கொண்டு ஆர்வத்துடன் குறிப்பெடுப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.

Ebrahim Ansari said...

இந்தக் காணொளியைக் கண்டு கருத்திட்ட / கருத்திடாத சகோதரர்கள் அனைவருக்கும் ஜசாக் அல்லாஹ் ஹைரன்.

பல வகைகளில் மன நிறைவைத் தந்த இந்த நிகழ்வில் குறிப்பிடத்தக்க அம்சம் சகோதரர் எம் கெ அவர்கள் குறிப்பிட்டு இருப்பது போல் மாணவிகள் காட்டிய ஆர்வம். இன்னும் சிறப்பாகப் பேச வேண்டுமென்ற ஆர்வத்தைத் தூண்டியது.

நேரமின்மையால் இன்னும் நிறைய சொல்ல வேண்டியவைகள் சொல்ல முடியாமல் போனது.

மாணவ மணிகளின் அடுத்த நிலைக்கு இந்த செய்திகளைக் கொண்டு சேர்க்க வேண்டுமென்பது விருப்பமாக இருக்கிறது. அதாவது பத்து பனிரெண்டு மற்றும் கல்லூரி மாணவர்கள் அளவில் இந்த விபரங்கள் என் மூலம் அல்லாவிட்டாலும் வேறு யார் மூலமாவது இவைகள் சொல்லபப்ட வேண்டும். இன்ஷா அல்லாஹ். .

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு