அதிரை உமர் தம்பி - நன்றி மடல்

தமிழ்கணிமைக் கொடையாளர் அதிரை உமர்தம்பி அவர்களின் தன்னலமற்ற தமிழ்ச்சேவையை அங்கீகரிக்கும் வகையில் முதற்கட்டமாக கோவை உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுடன் இணைந்து நடைபெறும் தமிழ் இணைய மாநாட்டின் ஐந்து அரங்கங்களில் ஒன்றுக்கு உமர் தம்பி அரங்கு என்று பெயரிடப்பட்டுள்ளது உலகறிந்த செய்தியாகிவிட்ட போதிலும் இவ்விசையத்தில் இதற்காக உண்மையில் உழைத்த தன்னலமற்ற தனிப்பட்ட நபர்கள் முக்கியமாக கூறிப்பிட்டு பாராட்டப்பட வேண்டியவர்கள். உமர் தம்பி அவர்களுக்கு அங்கீகாரம் கிடைத்தது விசையத்தில் இறைவனுக்கு தெரியும் யார் உண்மையில் உழைத்து என்று

அதிரை உமர் தம்பி அவர்களுக்கு அங்கீகாரம் அளித்த தமிழக அரசுக்கும், தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கும், துணை முதல்வர் தளபதி மு. க. ஸ்டாலின் அவர்களுக்கும் எங்களுடைய மனமார்ந்த நன்றி.

இம்முயற்சியில் முழு முயற்சி எடுத்து முதல்வருக்கு கடிதம் எழுதி, துணை முதல்வர் அவர்களின் கவணத்துக்கு எடுத்துச் சென்ற அதிரையை சேர்ந்த அன்பு சகோதரி கவிஞர் மலிக்கா பாருக் அவர்களுக்கும், அவர்களின் முயற்சிக்கு உறுதுணையாக இருந்த சகோதரர். காஞ்சி முரளி அவர்களுக்கும் கோடான கோடி நன்றிகள். இவர்களின் முயற்சி தொடர்பான முழு விபரங்கள் சகோதரி மலிக்கா அவர்களின் நீரோடை வலைப்பூவில் விபரமாக பதிவாகி உள்ளது.

தற்போதைய செய்தி ‘துபாய் உமர்தம்பி அரங்கு’ என்ற பெயரை பார்த்ததும் எனக்கு சிறிய வருத்தம், உமர் தம்பி இந்திய குடிமகன், ஒரு தமிழர், இம்மண்ணில் பிறந்து இம்மண்ணில் மறைந்துள்ளார். ‘அதிரை உமர் தம்பி அரங்கு’ என்று போட்டிருக்கலாம், இல்லாவிட்டாலும் தேனீ எழுத்துரு தந்தவரை ‘தேனீ உமர் தம்பி அரங்கு’ என்றாவது போட்டிருக்கலாம். ‘சந்தோசத்திலும் துக்கம் இருக்கத்தான் செய்யும்’ என்ற நினைப்புடன் மனதை சமாதானம் செய்து தானே ஆக வேண்டியுள்ளது இக்காலத்தில்.

2 கருத்துகள்

Shameed சொன்னது…

கவலை வேண்டாம் சகோதரர் தாஜுதீன் அவர்களே , .இணையம் பயன்படுத்தும் அனைவருக்கும் தெறியும் அதிராம்பட்டினம் என்றால் உமர் தம்பி ,உமர் தம்பி என்றால் அதிராம்பட்டினம் என்பது

தாஜுதீன் (THAJUDEEN ) சொன்னது…

இத்தளத்திற்கு முதல் வருகை தந்த தங்களுக்கு மிக்க நன்றி,

நீங்கள் சொல்வது உண்மை தான் அதிராம்பட்டினம் என்றால் உமர்தம்பி, உமர்தம்பி என்றால் அதிராம்பட்டினம்.