கண்கள் இரண்டும் - தொடர்-18


செயற்கை ‘கண்’

பார்வையற்றவர்கள் மற்றும் விபத்தினால் கண் இழந்தவர்களின் முகத்தோற்றத்தை அழகாக மாற்றவும், அவர்களுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் வகையிலும் தொண்டு நிறுவனம் சார்பில், சலுகை விலையில் செயற்கை கண்கள் பொருத்தப்பட்டு வருகின்றன.

பிறவியிலேயே பார்வை திறன் இல்லாதவர்கள், விபத்தில் கண் பார்வை இழந்தவர்கள், கண் சுருக்கம் மற்றும் கண்புரை உள்ளிட்ட குறைபாடுகள் உடையவர்களின் முகத்தோற்றம் பார்பதற்கு சற்று பொலிவற்று காணப்படும். இதனால், இக்குறைபாடுகளை உடையோர், தாழ்வு மனப்பான்மை காரணமாக தங்களை சமூகத்தில் இருந்து தனிமைபடுத்திக் கொண்டு வாழ்கின்றனர். இதனால், பார்வையற்றவர்களில் திறமை மிக்க பல சாதனையாளர்களும், சத்தம் இல்லாமல் முடங்கிக் கிடக்கின்றனர்.

பார்வையற்றோரின் இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையிலும், அவர்களின் தன்னம்பிக்கையை வளர்க்கும் நோக்கிலும் செயற்கை கண்கள் வடிவமைத்து, அவற்றை பொருத்தும் பணியில், திருவான்மியூர், 'பிரீடம் டிரஸ்ட்' என்ற அறக்கட்டளை ஈடுபட்டுள்ளது.மாற்றுத் திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள், மருத்துவம் மற்றும் சிறப்பு பயிற்சிகள் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை மேற்கொண்டு வரும், இந்த அறக்கட்டளை சார்பில் தற்போது, செயற்கை கண் நிபுணர்களைக் கொண்டு கண் பார்வையற்றவர்களுக்கு செயற்கை கண் பொருத்தப்பட்டு வருகிறது.

இதுகுறித்து செயற்கை கண் நிபுணர் திவாகர் கூறியதாவது : கண் பார்வையற்றவர்கள் மற்றும் கண் இல்லாதவர்களுக்கு செயற்கை கண் பொருத்துவதன் மூலம் பார்வை திரும்ப பெறமுடியாது. ஆனால், இழந்த அவர்களது கண் இருப்பது போன்ற தோற்றம் கிடைக்கும். இதனால், பார்வையற்றவர்களுக்கு தங்களுக்கு கண் இல்லை என்ற தாழ்வு மனப்பான்மை நீங்கி, தன்னம்பிக்கை கிடைக்கிறது. மாற்றுத் திறனாளிகளின் கண் மற்றும் மருத்துவச் சான்றுகளை தீவிரமாக ஆய்வு செய்த பின்னர், மாதிரி அளவெடுத்து செயற்கை கண் வடிவமைக்கப்படுகிறது.

'பாலி மீத்தைல் மெத்தாக்கிரை லேட்' என்ற மருத்துவ வகை, பிளாஸ்டிக்கைக் கொண்டு உருவாக்கப்படும் இந்த செயற்கை கண்கள் முற்றிலும் பாதுகாப்பானது. இதை,பொருத்திக்கொள்ள வயது வரம்பு கிடையாது.இந்திய அளவில், செயற்கை கண் வடிவமைப்பவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு ஆகும். தமிழகத்தில் தற்போது, இரண்டு தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே செயற்கை கண் வடிவமைக்கப்படுகிறது. இந்த மருத்துவமனைகளில் செயற்கை கண் பொருத்துவதற்கு, நான்கு முதல் ஐந்தாயிரம் வரை செலவு செய்ய வேண்டியுள்ளதால், அடித்தட்டு மக்கள் இதை பயன்படுத்த முடியாத நிலையுள்ளது.

எனவே, ஏழை எளிய மக்களும் பயனடையும் வகையில், எங்களின் அறக்கட்டளையின் சார்பில் தற்போது, குறைந்த விலைக்கு செயற்கை கண் பொருத்தப்பட்டு வருகிறது. அனைவருக்கும் இலவசமாக வழங்க வேண்டும் என்பதே எங்களது நோக்கம். ஆனால், நிதி பற்றாக்குறை காரணமாக குறைந்த கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது. பார்வையற்றவர்களுக்கு இலவசமாக செயற்கை கண் பொருத்த அரசு முன்வந்தால், அவர்களின் தன்னம்பிக்கை மேம்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

செயற்கை செயலற்ற கண்களின் தயாரிப்புகளின் காணொளிகளை காண கீழ் காணும் லிங்கை கிளிக் செய்யவும்.

இதை அடுத்து பார்வையை லேசர் சிகிச்சை பற்றி  அடுத்த தொடரில் பார்ப்போம்.
தொடரும்
அதிரை மன்சூர்

10 கருத்துகள்

adiraimansoor சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும்

என்னுடைய இந்த தொடருக்கு வலு சேர்க்கும் விதமாகவும் மக்கள் இளகுவாக காண்பதற்கு தோதாகவும் நான் கொடுத்த காணொளியின் லிங்கிலிருந்து பதிவிறக்கம் செய்து அந்த காணொளிகளை இந்த பதிவில் அப்படியே பதிந்ததற்காக

அதிரை நிருபர் நெறியாளருக்கு நன்றி
ஜஸாக்கல்லாஹ் கைரன்

Ebrahim Ansari சொன்னது…

அன்புத்தம்பி மன்சூரின் உழைப்பில் அருமையான விஷயங்களையும் - அபூர்வமான செய்திகளையும் தாங்கிவரும் அற்புதத் தொடர்.

sabeer.abushahruk சொன்னது…

கண்கள்தான் இரண்டு. இந்தக் கட்டுரையின் வாயிலாக மன்சூர் காட்டும் பார்வைகளோ ஆயிரம்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) சொன்னது…

காணொளி பதிவு என ரெண்டு கண்களாய் தந்தமைக்கு ஜஸாக்கல்லாஹ் ஹைர் காக்கா

Shameed சொன்னது…

கண்களுக்குள் இத்தனை விசயங்களா படிக்க ஆச்சரியமாக இருக்கு

adiraimansoor சொன்னது…

சபீர்
கண்களை பற்றி இந்த கட்டுரையை எழுத நீ சொல்வது போல் என் இரண்டு கண்களைக் கொண்டும் ஆயிரம் ஆயிரம் விஷயங்களை மக்களுக்கு அதுவும் அதிரை நிருபரில் தருவது கண்டு உள்ளம் மகிழ்கின்றேன்

இந்த கண்கள் இரண்டின் முக்கியத்துவம் அறிந்தே இத்தனை விஷயங்களை உள்ளே புகுத்துகின்றேன்
அதில் வரும் விஷயங்களை அறிந்தவர்களும் இருப்பார்கள் அறியாதவர்களும் இருப்பார்கள்
படித்து மறந்தவர்களும் இருபார்கள்
தேவையுடையோருக்கு இந்த தொடரையும் இதுபோன்ற பயனுள்ள தொடரையும் படிக்க அதைக்கொண்டு அவர்கள் பயண்பெற அல்லாஹ் அவர்களுக்கு இந்த அதிரை நிருபரின் பக்கம் அவர்களின் பார்வையை (கண்கள் இரண்டையும்) திருப்ப உதவி செய்வானாக

adiraimansoor சொன்னது…

// கண்களுக்குள் இத்தனை விசயங்களா படிக்க ஆச்சரியமாக இருக்கு///

ஹமீது பாய் இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கு இணைந்திருங்கள் அல்லது காத்திருங்கள்

adiraimansoor சொன்னது…

இ.அ காக்கா
ஜஸாக்கல்லாஹ் கைர்
உங்கள் தொடர் வரும்போது அதை படிக்கமுடியாமல் போய்விடுகின்றது இர்றுதியாக படிக்க வாய்ப்பு கிடைத்தாலும் அதற்கு பின்னுட்டமிட நேரம் கிடைப்பதில்லை

Ebrahim Ansari சொன்னது…

தம்பி மன்சூர்!

நீங்கள் படித்தாலே போதும். நேரம் இருந்து பின்னூட்டம் இட்டால் மகிழ்வோம். இல்லாவிட்டால் பரவா இல்லை.

Yasir சொன்னது…

கண்களுக்குள் இத்தனை விசயங்களா படிக்க ஆச்சரியமாக இருக்கு