Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

கண்கள் இரண்டும் - தொடர் - 17 16

அதிரைநிருபர் பதிப்பகம் | December 23, 2013 | ,

இந்தியா வம்சாவழி மருத்துவர் 'லிண்டன் டாக்ருஸ்' லண்டன் மூர்பீல்ட்ஸ் கண் மருத்துவமனையில் பல ஆண்டுகளாக ஆராய்ச்சி மேற்கொண்டு வந்தார். இவர்கோவாவின் சலிகோ நகரத்தை சேர்ந்தவராவார். இந்த ஆராய்ச்சிகளில் செயற்கை கண்களைக் கொண்டு பார்வையற்றவர்களுக்கு பார்வை வழங்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். கண்ணாடியில் சிறிய வகை வீடியோ கேமராவினை பொருத்தி, அதை கண்ணில் ரெட்டினா பகுதியில் சிறிய வகை மின்முனையுடன் கம்பியில்லாமல் இணைப்பதன் மூலம் பார்வை குறைபாடு சரி செய்யமுடியும் என இவரது ஆராய்ச்சியின் மூலம் நிரூபணமாக்கியுள்ளார். 
                    

இந்த தொழில்நுட்பம் அமெரிக்காவில் வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த செயற்கை கண்களைக் கொண்டு தனது நோயாளிகளில் 75 சதவீதத்தினருக்கு சாதாரண எழுத்துக்கள், எண்கள், வார்த்தைகளை படிக்கும் அளவுக்கு பார்வை அளித்துள்ளதாக லிண்டன் கூறியுள்ளார். இவர்கள் அனைவரும் பரம்பரை ரெட்டினா நோயினால் பாதிக்கப்பட்டு முழுமையாக பார்வை இழந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த கட்டமாக பார்வையற்றவர்களுக்கு 100 சதவீகித பார்வையை வழங்கும் முயற்சியிலும் அவர் ஈடுபட்டுள்ளார். இந்த ஆராய்ச்சி பற்றிய கட்டுரை பிரிட்டிஷ் ‘ஜெர்னல் அப் ஆப்தமொலஜி’ பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது. 

கண் பார்வை என்பது வாழ்க்கைக்கான ஒளி போன்றது. பார்வையின்மையால் பாதிக்கப்படுவோரின் எதிர்காலம் இருண்டு போகும் என்பது நிதர்சனம். விபத்துகளில் கை,கால் இழந்தவர்களுக்கு செயற்கை கை, கால்களை கொடுத்துள்ள நவீன மருத்துவ தொழில் நுட்பங்கள் இன்னும் கண் பார்வை இல்லாதவர்களுக்கு செயற்கை கண்களை கொடுக்க உலகில் பல பாகங்களிலும் ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன.

அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழகத்தின் வெய்ல் மருத்துவ கல்லூரியின் நரம்பியல் விஞ்ஞானியும் பேராசிரியருமான ஷீலா நீரென்பெர்க். ஒரு செயற்கை கண் கருவியை கண்டுபிடித்திருக்கிறார்

பிம்பங்களை கவர்ந்து கிரகிக்கும் `என்கோடர்' மற்றும் பிம்பத்தின் தகவல்களை மூளைக்கு எடுத்துச்செல்லும் `ட்ரான்ஸ்டிசர்' என இரு பகுதிகளை கொண்டது இந்த செயற்கை கண் கருவி. அடிப்படையில், சேதமடைந்த விழித்திரையின் செயல்பாட்டினை செய்யும் விதமாக தயாரிக்கப்பட்டுள்ள இந்த கருவிக்கு `விழித்திரை செயற்கை கருவி' என்று பெயர்.

பொதுவாக, கண்கள் பார்க்கும் பிம்பங்களின் தகவல்கள் விழித்திரையிலுள்ள `போட்டோ ரிசெப்டர்' என்னும் உயிரணுக்கள் மூலம் சேகரிக்கப்படும். பின்னர் அவை ரசாயன சமிக்ஞைகளாக மூளைக்கு எடுத்துச்செல்லப்பட்டு, மூளையிலுள்ள `காங்க்ளியான் உயிரணுக்கள்' மூலம் புரிந்துகொள்ளப்படும். இது கண் பார்வைக்கு தேவையான அடிப்படை உயிரியல் நிகழ்வுகள்.

இந்த இரு உயிரியல் நிகழ்வுகளையும் மேற்கொள்ளும் வண்ணம் ஷீலா நீரென்பெர்க்கின் செயற்கை கருவி உருவாக்கப்பட்டுள்ளது. விழித்திரையின் `போட்டோ ரிசெப்டர்' உயிரணுக்களின் வேலையை `என்கோடர்' கருவியும், சேகரிக்கப்பட்ட தகவல்களை மூளையின் காங்க்ளியான் உயிரணுக்களுக்கு எடுத்துச்செல்லும் வேலையை `ட்ரான்ஸ்டிசரும்' செய்கின்றன.

இந்த செயற்கை கண் கருவியை கொண்டு, முதற்கட்ட பரிசோதனை எலிகளின் மீது மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட எலிகளால் ஒரு குழந்தையின் முகத்தை தெளிவாக பார்க்க முடிந்தது குறிப்பிடத்தக்கது.

ஆனால், முந்தைய செயற்கை கண் கருவிகளால் பிரகாசமான வெளிச்சம் மற்றும் கோடுகளை மட்டுமே பார்க்க முடிந்தது. சுவாரசியமாக, நரம்பியல் ஆய்வாளர் ஷீலா நீரென்பெர்க்கின் செயற்கை கண் கருவியால் ஒரு குழந்தையின் முழு முகத்தையும் தெள்ளத் தெளிவாக பார்க்க முடிகிறது. ஒரு செயற்கை கண் கருவியால் முகம் பார்க்க முடிவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. 

முக்கியமாக, இந்த ஆய்வின் நோக்கம் மூளையுடன் தொடர்பு கொள்வதற்கான வழிகளை கண்டறிவதும், மூளையின் மொழியை புரிந்துகொள்வதும். இந்த நோக்கம் முழு வெற்றியடையும் பட்சத்தில் காது கேளாமை மற்றும் இன்னபிற நரம்பியல் குறைபாடுகளையும் சரிசெய்து விட முடியும் என்பது மகிழ்ச்சியான செய்தி.

எலிகளின் மீதான ஆய்வில் முழு வெற்றியடைந்துள்ள இந்த செயற்கை கண் கருவி, மனிதர்களுக்கும் பார்வை அளிக்கும் நாள் இன்னும் சில வருடங்களிலேயே வந்துவிடும் என்று நம்பிக்கை அளிக்கிறார் நரம்பியல் ஆய்வாளர் ஷீலா நீரென்பெர்க்.

செயற்கை கை, கால்கள் போல செயற்கை கண் கருவியின் வருகை, விபத்துகள் மற்றும் நோய்களால் பாதிக்கப்படும் மனிதர்களின் இயல்பு வாழ்க்கையை அவர்களுக்கு முழுமையாக மீட்டெடுத்து தந்துவிடும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை!

விழித்திரை சேதமடைவது உள்ளிட்ட காரணங்களால், கண் பார்வை இழப்பு அல்லது பாதிப்பு ஏற்படும். இதனால், பிம்பங்களின் தகவல் சேகரிப்பு, மூளைக்கு கடத்தும் இயக்கம் என்பன தடைபடும். பிரத்தியேக கருவிகளின் மூலம், இந்நிகழ்வுகளை செயற்கையாக மேற்கொள்ளும் முயற்சியே, செயற்கை கண் தொழில்நுட்பத்தின் அடிப்படையாக உள்ளது.

உலகின் முதன் முதலாக செயற்கை கண் பொருத்தப்பட்ட பெண்ணின் சுவாரஸ்ய தகவல்

தன்னால் ஒளிக்கற்றை மற்றும் கோடுகளை பார்க்க முடிவதாக உலகின் முதன் முதலாக மாதிரி செயற்கை கண் பொருத்தப்பட்ட அவுஸ்திரேலிய பெண் கூறியுள்ளார்.

அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் கிழக்கு மெல்போர்னில் உள்ள றொயல் விக்டோரியன் கண் மற்றும் காது மருத்துவமனையில் டேனி ஆஷ்வொர்த்(வயது 54) என்ற பார்வைத் திறனற்ற பெண்ணுக்கு முதல் முறையாக செயற்கைக் கண் கடந்த மே மாதம் பொருத்தப்பட்டது.

மெல்போர்ன் பையோனிக்ஸ் இன்ஸ்டிடியூட்டில் நடந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து, கடந்த மாதம் கருவி ஸ்விட்ச் ஆன் செய்யப்பட்டது.

இதன் பிறகு ஆஷ்வொர்த்துக்கு பிம்பங்களை முழுமையாக பார்க்கும் திறன் கிடைத்து விட்டதாக அவுஸ்திரேலியாவில் இருந்து வெளியாகும் சிட்னி மார்னிங் ஹெரால்டு பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

தனது அனுபவம் குறித்து ஆஷ்வொர்த் கூறுகையில், திடீரென ஒளிக்கற்றைகள் கண் முன் தோன்றின. பலப்பல வடிவங்கள் கண்ணுக்கு முன் தோன்றுகின்றன. ஒவ்வொரு முறையும் மூளையில் வித்தியாசமான தூண்டல்களை உணருகிறேன் என்றார்.

ஆஷ்வொர்த் கூறும் பல்வேறு அம்சங்களை ஆய்வாளர்கள் பதிவு செய்து வருகின்றனர். இத்தகவல்களின் அடிப்படையில், காட்சி பிம்பங்களை முழுமையாக கிரகிக்கும் வகையில் செயற்கை கண் கருவியை மேம்படுத்தும் பணியில் ஆய்வாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

பையோனிக்ஸ் இன்ஸ்டிடியூட் இயக்குனர் ராப் ஷெப்பர்டு கூறுகையில், ஆஷ்வொர்த் என்ன பார்க்கிறார் என்பதை துல்லியமாக தெரிந்து கொள்ள முயற்சிக்கிறோம். விழித்திரையில் காட்சிகள் படும் போது, என்ன விதமான தூண்டுதல் கிடைக்கிறது என்பதையும் நுணுக்கமாக பதிவு செய்து வருகிறோம்.

காட்சிகளில் தெரியும் வடிவம், ஒளியின் பொலிவு, அளவு போன்றவை விழித்திரையில் படும் போது மூளைக்கு கிடைக்கும் தகவல்கள் குறித்தும் ஆராயப்படுகிறது.

2013 அல்லது 2014ஆம் ஆண்டுக்குள் செயற்கைக் கண் தொழில்நுட்பம் முழுமை பெறும் என நம்புகிறோம் என்றார்.

இதை அடுத்து பார்வையை மீட்க முடியாதவர்களுக்கு செயலற்ற செயற்கை கண்களை பற்றி  அடுத்த தொடரில் பார்போம்.
தொடரும்
அதிரை மன்சூர்

16 Responses So Far:

sabeer.abushahruk said...

இயற்கையான கண்களையும் இயல்பான மற்றும் விபரீதமானப் பார்வைகளையும் விளக்கிவிட்டு அழகாக அடுத்தக்கட்டமான செயற்கைக் கண்களையும் அதனால் சாத்தியப் படும் பார்வை வரத்தையும் சொல்லி படிபடியாக நேர்த்தியாக நகர்த்திச் செல்கிறீர்கள் கட்டுரையை.

வாழ்த்துகள்

Ebrahim Ansari said...

தம்பி மன்சூர் ! அஸ்ஸலாமு அலைக்கும்.

உங்கள் கண்ணின் பார்வை பல பக்கமும் சுற்றி வருகிறது.

தொடரின் அழகிய நடையிலும் விறுவிறுப்பிலும் பலரின் கண்ணும் பட்டுவிடப் போகிறது.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கண்ணுக்கு கண்ணாக ! பார்வைக்கான வெளிச்சம் அருமை !

படிக்கத் தவறிய தகவல்கள் ! வாசிக்க வாய்ப்பளிக்கிறது இந்த தொடர் !

Shameed said...

முகநூளில் ஒரு கண்ணுடன் பிறந்த குழந்தையின் வீடியோ உலாவருதே
அது பற்றியும் கொஞ்சம் சொல்லுங்களேன் மன்சூர் பாய்

adiraimansoor said...

ஹமீது பாய்
நானும் நெட்டில் படித்தேன் இந்தியாவில் நெற்றிக் கண்ணுடன் ஒரு குழந்தை கடந்த வாரம் பிறந்து உள்ளது. இக்குழந்தைக்கு மூக்கு கிடையாது. பிறந்து 24 மணித்தியாலங்களில் இறந்து விட்டது. தாய்க்கு வயது 34. வைத்தியர்கள் சிசேரியன் அறுவைச் சிகிச்சை மேற்கொண்டு இருந்தனர். குழந்தையை பார்க்க தாய் அனுமதிக்கப்படவே இல்லை. இது தாய்க்கு மிகுந்த கவலையை கொடுத்து உள்ளது. இத்தாய்க்கு ஏற்கனவே எட்டு வயதில் ஒரு பெண் குழந்தை உண்டு என்பதுவரை எனக்குத்தெரியும்

இந்தியாவின் ஈரோடு மாவட்டத்தின் பெருந்துறை என்ற இடத்தில் அண்மையில் ஒரு கண்ணுடன் ஆட்டுக்குட்டி பிறந்த சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இச்சம்பவம் ஈரோட்டில் வசிக்கும் கந்தசாமி என்பவரது வீட்டியையே இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் பற்றி கருத்து தெரிவித்த கந்தசாமி தான் பத்து வருடங்களாக ஆடு வளர்பில் ஈடுபட்டு வருவதாகவும் இதுவரை இப்படி ஒரு விசித்திர சம்பவத்தினை நான் நேரில் பார்த்ததில்லை எனவும் குறிப்பிட்டார். இவர் வளர்த்த பெண் ஆடு ஈன்ற இரண்டு குட்டிகளில் ஒன்றுக்கே இவ்வாறு நெற்றிக்கு கீழே ஒரே ஒரு கண்ணுடன் பிறந்துள்ளது. அதாவது நெற்றிக்கண் என்றாலும் இது பொருந்தும் அல்லவா.? இச்சம்பவம் பற்றி கோயம்புத்தூரை சேர்ந்த மிருக வைத்தியத்துறையை சேர்ந்த டாக்கடர் அசோகன் குறிப்பிடுகையில் கிராமங்களில் இவ்வாறான சம்பவங்கள் ஏற்படுவது மிக மிக அரிதான ஒன்று. எனினும் இச்சம்பவம் மரபணு குறைபாட்டினால் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்... அதே போல் ஒற்றைக் கண்ணுடன் பிறந்த குழந்தக்கும் மரபணு குறைபாடாகத்தான் இருக்கும்

adiraimansoor said...

ஆனாலும் முகனூலில் வட்டமிடும் ஒற்றைக்கண் குழந்தையின் வீடியோ எனக்கு கிடைக்கவில்லை

adiraimansoor said...

//தம்பி மன்சூர் ! அஸ்ஸலாமு அலைக்கும்.

உங்கள் கண்ணின் பார்வை பல பக்கமும் சுற்றி வருகிறது.//


காக்கா
ஜஸாக்கல்லாஹ் கைர்

என் கண்கள் பலபக்கம் சுற்றக் காரணங்கள்
எல்லாமே உங்களை போன்றோரி தூண்டுதலே

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

நுணுக்கமான ஒளிப்பதிவுக்கு நன்றி மன்சூராக்கா!

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

நுணுக்கமான ஒளிப்பதிவுக்கு நன்றி மன்சூராக்கா!

adiraimansoor said...

ஜஸாககலாஹ் கைர்

ஜாபர் சாதிக்

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும், மன்சூர் காக்கா,

தங்களின் அனைத்து பதிவுகளையும் படித்து வருகிறேன். வேலை அதிகம் என்பதால் கருத்திட முடியவில்லை. முதலில் கண்கள் பற்றி பயனுல்ல அறிய பல தகவல்கள் தந்துவதற்கு மிக்க நன்றி... ஜஸக்கல்லாஹ் ஹைரா...

இந்த பதிவை வாசித்த பின்பு ஒரு தகவலை பதிவு செய்ய விரும்புகிறேன். எனக்கு தெரிந்த ஒரு சகோதரின் ஆண் குழந்தைக்கு பிறக்கும் போது கண்பார்வையில்லை.

இரண்டு வாரத்திற்கு முன்பு அந்த சகோதரரிடம் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. அவரும் நீங்கள் இங்கு குறிப்பிட்டிருக்கும் இந்த தொழில்நுட்பம் பற்றி கூறினார்.

அந்த சகோதரரின் குழந்தைக்கு கண்பார்வை தெரிய, இது போன்ற செயற்கை கருவி விரைவில் பொறுத்த உள்ளார்கள். இந்த பதிவை வாசிக்கும் அனைவரும் அந்த சகோதரரின் குழந்தைக்காக து ஆ செய்யவும்.
கண் பார்வை இழந்துள்ள அந்த ஆண் குழந்தை குர்ஆனின் சில சூராக்கள் மணப்பாடம் செய்துள்ளதாகவும், அழகான கணீர் குரலில் குர் ஆன் சூராவை ஓதுவாராம், வீட்டில் ஒவ்வொரு ஃபஜர் தொழுகைக்கும் பாங்கு செல்லுவாராம்.

இதை கேட்டவுடன் என் கண்கள் கசிந்தது. அந்த குழந்தைக்காக து ஆ செய்தேன்.

என்னுடைய வேண்டுகோள், இந்த செய்தியை வாசிக்கும் அனைவரும் அந்த குழந்தையின் உடல் ஆரோக்கியத்துக்காக து ஆ செய்யுங்கள்.

மேலும் அந்த குழந்தையை அன்போடும் பாசத்தோடும் வளர்த்து வரும் பெற்றோர்கள் மற்றும் அந்த குழந்தையின் உடன் பிறந்த சகோதரிகளுக்களுக்காகவும் நாம் அனைவரும் து ஆ செய்வோமாக.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

இந்த செய்தியை வாசிக்கும் அனைவரும் அந்த குழந்தையின் உடல் ஆரோக்கியத்துக்காக து ஆ செய்யுங்கள்.

மேலும் அந்த குழந்தையை அன்போடும் பாசத்தோடும் வளர்த்து வரும் பெற்றோர்கள் மற்றும் அந்த குழந்தையின் உடன் பிறந்த சகோதரிகளுக்களுக்காகவும் நாம் அனைவரும் து ஆ செய்வோமாக.


இன்ஷா அல்லாஹ்... நம்முடைய பங்கையும் குழந்தைக்காக அல்லாஹ்விடம் உதவியை நாடுவோம் !

பெற்றோருக்காகவும் அவர்களின் அர்பணிப்புக்காகவும் துஆச் செய்கிறேன் !

sabeer.abushahruk said...

//என்னுடைய வேண்டுகோள், இந்த செய்தியை வாசிக்கும் அனைவரும் அந்த குழந்தையின் உடல் ஆரோக்கியத்துக்காக து ஆ செய்யுங்கள்.
//

இன்ஷா அல்லாஹ்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அந்த குழந்தைக்கு முழு கண்பார்வையோடு ஆரோக்கியத்தையும் அன்போடும் பாசத்தோடும் வளர்த்து வரும் பெற்றோர்கள் மற்றும் உடன் பிறந்த சகோதரிகளுக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக ஆமீன்.

adiraimansoor said...

///இந்த பதிவை வாசித்த பின்பு ஒரு தகவலை பதிவு செய்ய விரும்புகிறேன். எனக்கு தெரிந்த ஒரு சகோதரின் ஆண் குழந்தைக்கு பிறக்கும் போது கண்பார்வையில்லை.

இரண்டு வாரத்திற்கு முன்பு அந்த சகோதரரிடம் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. அவரும் நீங்கள் இங்கு குறிப்பிட்டிருக்கும் இந்த தொழில்நுட்பம் பற்றி கூறினார்.

அந்த சகோதரரின் குழந்தைக்கு கண்பார்வை தெரிய, இது போன்ற செயற்கை கருவி விரைவில் பொறுத்த உள்ளார்கள். இந்த பதிவை வாசிக்கும் அனைவரும் அந்த சகோதரரின் குழந்தைக்காக து ஆ செய்யவும்.
கண் பார்வை இழந்துள்ள அந்த ஆண் குழந்தை குர்ஆனின் சில சூராக்கள் மணப்பாடம் செய்துள்ளதாகவும், அழகான கணீர் குரலில் குர் ஆன் சூராவை ஓதுவாராம், வீட்டில் ஒவ்வொரு ஃபஜர் தொழுகைக்கும் பாங்கு செல்லுவாராம்.

இதை கேட்டவுடன் என் கண்கள் கசிந்தது. அந்த குழந்தைக்காக து ஆ செய்தேன்.///

தாஜுதீன் ஜஸாக்கல்லாஹ் கைர்

பின்னுட்டம் என்பது நேர்மிருந்தால் மட்டுமே சாத்தியப்படும் அதுவும் எல்லோருக்கும்
கருத்திடிம் வாய்ப்புகள் அமைவதில்லை
பலரின் பின்னுட்டமும், கருத்துட்டமும் ஆக்கதிற்கு உரம் போன்றது படிப்பாவர்கள் அத்த்னைபேரும் கருத்திடவேண்டும் என்று அவசியமில்லை.

ஒரு பதிவின் பின்னுட்டம்தான் அதன் தரத்தை நிர்ணயிக்கின்றன என்று சொல்வதற்கில்லை இருந்தாலும் அந்த பின்னுட்டங்களால் ஆக்கமிட்டவருக்கு கஷ்ட்டப்பட்டவருக்கு ஒரு பலன் மன ஆறுதல் அளிக்கும்

கண் உடம்பிலேயே மிகவும் முக்கியமான உறுப்பு என்பதால் நான் மிகவும் அதில் கவணம் செலுத்தி
எழுதிவருகின்றேன். கண்ணை பற்றி யாரும் அவ்வளவு டீப்பாக சிந்திப்பதேயில்லை ஏதாவது கண்ணில் ஒரு வருத்தம் வரும்போது மட்டுமே அதில் கவ்ணம் செலுத்துகின்றனர் அப்படிப்பட்டவர்களுக்கு விழிப்புனர்வு ஏற்படுத்தவே இந்த ஆக்கம்.

அல்லாஹ் உங்கள் நண்பரின் தாய்தந்தையரின் எதிர்பார்ப்பை நிறைவெற்றி அந்த குழந்தைக்கு இந்த சிகிச்சையின் மூலம் பார்வை தெரியவந்து அந்த குடும்பமே மகிழ்ச்சியில் திளைக்க வல்ல ரஹ்மான் அருள் புரிவானாக ஆமீன்

Yasir said...

மாஷா அல்லாஹ் தெரியாத பல தகவல்கள்...மன்சூர் காக்காவின் கடின உழைப்பிற்க்கு இரு சல்யூட்

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு