Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

கண்கள் இரண்டும் - தொடர் - 14 7

அதிரைநிருபர் பதிப்பகம் | December 02, 2013 | , ,


கண்புரை

நம்மில் சிலருக்கு 50 to 60 வயதுக்குள் கண் பார்வையானது கண்ணை மூடிக் கொண்டு உலகைப் பார்த்தால் எப்படியிருக்குமோ அதுபோல ஏற்பட்டு விடுகிறது. இதற்கு காரணம் கண்ணில் புரை ஏற்படுவதாகும். இதைத்தான் ஆங்கிலத்தில் கேட்ராக்ட் (cataract) என்று கூறுவர். இத்தன்மை பெரும்பாலும் புரதத்தன்மை இழப்பால் ஏற்படுகிறது. மனிதர்களுக்கு வயதானால் கண்புரை ஏற்படும் என்ற கருத்து பொதுவாக நிலவுகிறது. ஆனால் 75 வயது வரை (இறக்கும் வரை கூட) கண்புரை இல்லாமல் வாழ்பவர்களும் இருக்கிறார்கள். 50 வயதிற்குள்ளாகவே கண்புரை அறுவை சிகிச்சை செய்து கொண்டு தடிமனான கண்ணாடியை அணிந்து கொண்டு வாழ்பவர்களும் இருக்கிறார்கள் இந்தியாவைப் பொறுத்த மட்டில் மிக அதிகமான பார்வையிழப்புக்குக் காரணம் கண்புரை.

கண்புரை என்பது வயோதிகம் காரணமாக நமது கண்ணில் உள்ள லென்ஸின் ஊடுருவும் தன்மை குறைவதேயாகும். கண்புரை விபத்துகளினாலும், நீரிழிவு காரணமாகவும் மேலும் சில காரணங்களாலும் வரலாம். கண் புரை என்பது முற்றிலும் குணப்படுத்தகூடிய குறைபாடே.

மேலும் கண்புரையை ஒரு சிறிய அறுவை சிகிச்சை மூலம் மட்டுமே குணப்படுத்த முடியும். அறுவை சிகிச்சை மட்டுமே கண் புரைக்கான தீர்வு. மேலும் கண் மருத்துவத் துறையில் தற்போது பயன்படுத்தப்படும் முன்னேறிய மிகச்சிறந்த தொழில் நுட்பம் கண் புரையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு மிகச்சிறந்த வரப்பிரசாதமாக உள்ளது.

நமது கண்களில் கருவிழியின் மீது விழும் பிம்பத்தின் ஒளிக்கதிர்கள் குவிந்து கண்ணில் அமைந்துள்ள கண் ஆடி(லென்ஸ்) வழியாகச் செல்லும் போது மேலும் குவிந்து உள்பகுதி சென்று விழித்திரையில் விழுகிறது. ஐரிஸ் என்ற படலம் சுருங்கி விரியும் தன்மை உடையது. இதனால் கண்ணின் நடுவில் உள்ள பாப்பா என்ற பகுதி சூழலுக்கேற்ப அதிக வெளிச்சத்திற்கேற்ப சுருங்கியும் குறைந்த வெளிச்சத்தில் பெரியதாகவும் தோன்றும். இது லென்ஸ் என்ற அமைப்பால் தொங்கவிடப்பட்டுள்ளது. வயது ஏற ஏற இந்த லென்ஸ் நமது பார்வைக்கு தகுந்தவாறு சுருங்கியும் விரிந்தும் காணப்படும். மேலும் மங்கலான தன்மை (தெளிவற்ற) ஏற்படுகிறது. இந்த நிலையே கண்ணில் புரை விழுதல் என்று அழைக்கப்படுகிறது.

கருவிழியில் வெண்படலம் ஏற்படுவதை கண்ணில் பூ விழுந்துள்ளது என கூறுவர்.

கண்புரை ஏற்படக் காரணங்கள்.

சிலருக்கு 50 வயதுக்கு மேல் ஏற்படலாம் சில சமயங்களில் சிறுவர்களுக்கும் பிறந்த குழந்தைக்கும் கூட கண்களில் கண்புரை வருகிறது. இது கர்பிணிப் பெண்களுக்கு 3,4 மாதங்களில் விஷக்காய்ச்சலால் ஏற்படுகிறது. கர்ப்பம் தரித்த 7-வது மாதத்தில் சிறுநீரில் GALACTOSE இருந்தாலும் வீரியமுள்ள மருந்து மாத்திரைகள் சாப்பிடுவதாலும் ஏற்படலாம். நீரழிவு நோய், பரம்பரை நோய் கிட்டப்பர்வை, மாலைக்கண், காலரா போன்ற வியாதியால் உடல் நீர் குறையும் பொழுதும் கண் புரை உண்டாகலாம். சூரிய ஒளிக்கதிர்கள் நேரிடையாக கண்களை தாக்குவதாலும், அதிக வெப்பம் தரக்கூடிய வேலையைச் செய்பவர்களுக்கும் (வெல்டிங் போன்ற வேலைகளைச் செய்தவர்கள்) கண்புரை வர வாய்ப்புள்ளது. கண்கள் அடிபடும் பொழுதும் உடனடியாக கண்புரை ஏற்பட வாய்ப்புள்ளது. கண்புரை இரு கண்களிலும் ஏற்படலம். ஒரு கண்ணில் புரை ஏற்பட்டால் மறு கண்ணும் பாதிக்கும் வாய்ப்புள்ளது. கண்புரை ஒரு தொற்று நோயல்ல. கண்ணில் கூர்மையான பொருள்களால் காயம் ஏற்படல் (உ.ம்) கில்லி விளையாட்டு, வில் அம்பு எய்தல், பந்து வீச்சு ஆகிய சூழ்நிலையில் கண்ணில் அடிப்பட்டால் ஒரே நாளுக்குள் (24 மணி நேரம்) கண்புரை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம்.

கண்புரை ஏற்படும் காலத்தில் கண்கள் பொருளைப் பார்க்கும் பொழுது மங்கலாகவோ (அ) இரண்டு மூன்று உருவங்களாகவோ தோன்றும். கண்ணாடி அணிந்து கொண்டால் நன்றாகத் தெரியும். சிறிது நாளில் கண்ணாடியும் பயன்தராது. இது போன்ற சூழலில் கண் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவதே சிறந்தது. கண்புரை வந்தால் தலைவலியோ கண் சிவப்பாக மாறுவதோ இருக்காது. சிலருக்கு அடிக்கடி கண்களில் நீர் வரலாம். பார்வையின் அளவு மிகவும் குறைந்து காணப்படும். கண்ணின் நீர் அழுத்தம் ஏற்பட்டாலும் ஏற்படலாம். இது மிகவும் ஆபத்தாகும் முறையான சிகிச்சை எடுத்துக்கொள்ளாவிட்டால் பார்வை நரம்பு செயலிழந்து பார்வை இழப்பு ஏற்பட்டுவிடும். ஆதலால் கண் மருத்துவரிடம் காட்டி கண் புரையோ (அ) கண் நீர் அழுத்தமா என்பதனை தெரிந்து கொண்டு அதற்கேற்ப சிகிச்சை செய்து கொள்ள வேண்டும்.

இன்ஷா அல்லாஹ் அடுத்து வரும் பதிவில் கண்புரைக்கான மருத்துவம் பற்றியும் அலசுவோம்.
தொடரும்
அதிரை மன்சூர்

கடந்த 2012-ம் வருடம் மே மாதம் முத்த சகோதரர் இபுராஹீம் அன்சாரி காக்கா அவர்கள் எழுதிய  "கண்ணுக்கு (நித்)திரை" பதிவையும் வாசியுங்கள்.

7 Responses So Far:

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

டாக்டர்!

பயனுள்ள அறிவுரைகள்

ஜஸாக்கல்லாஹ் ஹைர்,

sabeer.abushahruk said...

அருமையான மருத்துவக் குறிப்புகள் மன்சூர் பாய்.

வாழ்த்துகள்.

கண் புரை - காட்சிகளைக்
காணத் திரை?

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

தொடர்ந்து வாசித்து வருகிறோம்... கண்கள் இரண்டும் காட்டும் அனைத்தையும் !

sheikdawoodmohamedfarook said...

கண்புரைபற்றிய விளக்கம் ஒருமுன்எச்சரிக்கை.வருமுன் காப்பதே நலம்.நல்லபயனுள்ள தொடரைதரும் தம்பி மன்சூருக்குவாழ்த்தும்பாராட்டும்
from S.முஹம்மது பாரூக்.அதிராம்பட்டினம்

crown said...

அஸ்ஸலாமுஅலைக்கும். மச்சான். காண்போரை கவர்ந்திழுக்கும் விரிவான எழுத்து இந்த கண் புரையை பற்றி எழுதியது.அருமை.

adiraimansoor said...

அன்பு நெஞ்சங்களுக்கு நன்றி
ஜஸாக்கல்லாஹ் கைர்
இந்த வாரமும் இதை தொடர்ந்து வரும் அடுத்த வார தொடரும் குறிப்பாக கவியன்பனை மனதில் வைத்து எழுதப்பட்டவைகளாகும் மற்றவர்களுக்கும் இன்ஷா அல்லாஹ் பிறையோஜனமாக இருக்கும்

Ebrahim Ansari said...

பயனுள்ள செய்திகள் நிரம்பிய கட்டுரை.

எனக்கு காடராக் அறுவை செய்து முடித்துக் கொண்ட பிறகு அந்த அனுபவங்களை ஒரு பதிவின் மூலம் பகிர்ந்து கொண்டேன்.

நெறியாளர் அவர்கள் அந்த இணைப்பைத் தந்தால் படிப்பவர்களுக்கு இன்னும் உதவியாக இருக்கலாம்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு