Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

கண்கள் இரண்டும் - தொடர் - 15 6

அதிரைநிருபர் பதிப்பகம் | December 09, 2013 | , ,


கண்புரைக்கு மருத்துவம்

கண்ணில் புரை ஏற்பட்டால் அதனை மருந்துகளால் குணப்படுத்த முடியாது. ஆரம்ப காலத்தில் சில மருந்துகள் பயன்பட்டாலும் சொட்டு மருந்துகள் பயன்படுத்தினாலும் பயனளிப்பதில்லை. சத்து நிரம்பிய உணவும், பயிற்சிகளும் புரையை குணமாக்காது. தடிமனான லென்ஸ் பொருந்திய கண்ணாடிகள் பயன்படுத்தினாலும் ஆரம்பத்தில் பார்வை கிடைக்கும் சிறிது நாளில் படித்தல், எழுதுதல், தெளிவான பார்வை கிடைக்காது. கண் புரை முற்றி கண் சிவத்தல், கண்ணில் நீர் அழுத்தம் அதிகமாகி கண்வலி ஏற்பட்டு வாந்தியும் ஏற்படலாம். 

இவைகள் ஏற்பட்டால் உடன் கண் மருத்துவரை அணுகி முறையான பரிசோதனை செய்து நவீன அறுவை சிகிச்சை செய்து கொண்டு முழுப்பார்வயும் பெறலாம். படிப்பதற்கு எழுதுவதற்கு மட்டும் கண்ணாடி அணிந்து பலனடையலாம். கண்புரையினை அறுவை சிகிச்சை செய்வதற்கு முன் கண்பார்வை பாதிக்கப்பட்டவரின் உடலை முழுமையாக பரிசோதிக்க வேண்டும். குறிப்பாக இரத்தம், சிறுநீர், பற்கள், சைன்ஸ், இரத்த அழுத்தம் ஆகியவை சரிபார்த்திட வேண்டும் சர்ககரை அதிகமிருந்தாலும், இரத்த அழுத்தம் அதிகமிருந்தாலும் இவைகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும். 

பற்கள் சொத்தை இருந்தால் சொத்தைப் பற்களை நீக்கிவிட வேண்டும். பல் ஈறுகளில் புண் இருந்தால் குணப்படுத்த வேண்டும். இருமல், ஆஸ்துமா போன்ற பாதிப்புகள் இருந்தால் அதற்கும் சிகிச்சை செய்து கொள்ள வேண்டும். இதயம் நன்றாக வேலை செய்கிறதா என்பதனை EGC மூலமாகத் தெரிந்து கொள்ள வேண்டும். அறுவை சிகிச்சைக்கு முன் 5 நாட்கள் கண்களுக்கு சொட்டு மருந்து இடப்பட்டு கிருமிகள் கொல்லப்பட வேண்டும். முதல் நாளில் இருந்தே உணவை மருத்துவரின் ஆலோசனை அடிப்படையில் எடுத்துக்கொள்ள வேண்டும். பரவலாக மருத்துவ அறுவை சிகிச்சை முறையில் கருவிழியின் மீது சிறு கோடுஇட்டு கண்ணுக்குள் இருக்கும் கண்புரை அகற்றப்படும். கண் மறத்துப் போவதற்கும், மேலும் கீழும் அசையாமல் இருப்பதற்கும் ஊசி மூலம் மருந்தை செலுத்தி கண்புரை இரண்டு முறைகளில் அகற்றப்படுகிறது.

முறை 1: லென்சையும் அதனைச் சுற்றியுள்ள ஜவ்வுடன் அகற்றலாம். இதை இடுக்கி மூலமாகவும்,ஐஸ் கட்டிகளின் கூரிய முனையாலும்அகற்றலாம இந்த முறைக்கு ‘இன்ட்ரா கேப்கலர’ என்று பெயர்.

முறை 2: லென்சை மாத்திரம் சவ்வு நீங்கலாகி அகற்றுவதற்கு ‘எக்ஸ்ட்ரா கேப்கலர்’ என்று பெயர். இம்முறையில் கண்புரை அகற்றிய பிறகு பிளாஸ்டிக் லென்ஸ் பொருத்தப்ப்டும். லென்ஸ் பொருத்திய பிறகு கண் ந்ல்ல பார்வையை பெற்றுவிடும்.

இந்த இரண்டு முறையை தவிர மற்றொரு முறையும் தற்பொழுது மருத்துவதுறையில் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு ‘பேக்கோ மெஸ்ஸிபிகேஷன்’ இம்முறையில் அல்ட்ரா சவுண்ட் மூலம் கண்ணின் கருவிழியில் ஓரு சிறிய துவாரத்தின் வழியாக ஊசியை செலுத்தி கண்புரையை சேதப்படுத்தி அதை வெளியில் எடுத்து விடுவார்கள் , பின் ‘பேர்டபிள்’ IOI-யை ஊசி மூலமாக பொருத்துவார்கள். இதற்கு ‘ NO INJECTION, NO STITCH, NO PAD SURGERY’ இம்முறை மிகவும் பழமையானது.

கண்புரை ஆபரேஷன்  செய்வதற்க்கு மருத்துவமனைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெற வேண்டிய அவசியமில்லை. சங்கர நேத்ராலயா மருத்துவமனையில் ஏழை எளியவர்களுக்கு இலவசமாகவே சிகிச்சை அளிக்ப்படுகிறது. மாதம் ரூபாய் 8,500-க்கு குறைவான குடும்ப வருமானம் உள்ளவர்களுக்கு கட்டணச் சலுகைகளில் கேட்டராக்ட் ஆபரேஷன் செய்யப்படுகிறது. 

கண்புரை அறுவைசிகிச்சைக்குப் பின் கவனத்தில் கொள்ள வேண்டியவை

அறுவை சிகிச்சை செய்த கண்ணுக்கு ஒரு பாதுகாப்புத் திரை அணிவிக்கப்படும், இது கண்ணிற்கு எவ்வித பாதிப்பும்(அடிபடுதல்) போன்றவை ஏற்படாதிருக்க அணிவிக்கப்படும்  மருத்துவரின் அறிவுரைப்படி குறிப்பாக முதல் இரண்டு நாட்கள் திரவ உணவே எடுத்துக்கொள்ள வேண்டும்

மருத்துவர் ஆலோசனைப்படிமுறையாக மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும், தூய்மையான பஞ்சினால் கண்ணை லேசாக துடைத்து தினந்தோறும் ஆறு முறை மருந்திடுதல் வேண்டும். குனிந்து நிமிருதல், எளிதில் ஜீரனமாகாத உணவை உண்ணுதல், புகையுள்ள இடங்களில் இருப்பது போன்றவைகளை கண்டிப்பாகத் தவிர்த்தல் வேண்டும். எளிதில் உணர்ச்சி வயப்படுதல், கண்ணீர் வரவழைத்தல் போன்றவைகளை தவிர்ததல் வேண்டும்.

வாரம் ஒரு முறை கண்களை கண்மருத்துவரிடம் காண்பித்து தகுந்த ஆலோசனை பெற வேண்டும்.* கண் அறுவை சிகிச்சை செய்து கொண்ட 6 வாரங்கள் கழித்து கண் பரிசோதனை செய்து மருத்துவர் பரிந்துரைக்கும் பார்வைத்திறன் கொண்ட கண்ணாடி அணிவதன் மூலம் பூர்ண பார்வையையும் பெற முடியும். படிப்பதற்கும் எழுதுவதற்கும் வேண்டுமானால் தனி கண்ணாடி பயன்படுத்திகொள்ளலாம்.

கண் வலி ஏற்பட்டாலும், கண்ணில் நீர் வடிந்தாலும், கண் சிவப்பாக இருந்தாலும் உடனடியாக கண் மருத்துவரிடம் கண்ணை பரிசோதித்து தேவையான சிகிச்சை எடுத்துககொள்ளவேண்டும்.* கண் அறுவை சிகிச்சை செய்து சில ஆண்டுகள் கழித்து கூட கண் வலி ஏற்பட்டலும் , கண் சிவத்தல் தோற்றத்தில் மாற்றம் ஆகியவை ஏற்பட்டாலும் காலதாமதமின்றி கண் மருத்துவரிடம் கண்ணை பரிசோதித்து கொள்வதன் மூலம் கண் பிரச்சனையை சரிசெய்து கொள்ள முடியும், ஏனெனில் கண்களை கண்ணாக பார்ப்பது மிகவும் அவசியம்.

கண்புறை (Cataract) நோயிலிருந்து காக்கும் உடற்பயிற்ச்சி!

கடுமையான உடற்பயிற்ச்சி செய்தால் கண்புறை நோய் (Cataract) மற்றும் முதுமையில் ஏற்படும் பார்வைக் கோளாறுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறையும்  என்றும் கண்டறிந்துள்ளனர். கலிஃபோர்னியாவின் லாரன்ஸ் பெர்க்லி தேசிய ஆய்வுகூடத்தில், சுமார் 41,000 ஓட்டப் பந்தய வீரர்களில் (ஆண்களும் பெண்களும்), 7 வருடங்களாக நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் இதனை கண்டறிந்துள்ளதாக கூறுகிறார் ஆய்வாளர் பால் வில்லியம்ஸ் அவர்கள்!

இன்ஷா அல்லாஹ் அடுத்து வரும் அத்தியாயத்தில் பார்வை கோளாறை சரி செய்யும் கண் செல்கள் பற்றியும்  செயற்கை கண்கள் பற்றியும் அலசுவோம்.

தொடரும்
அதிரை மன்சூர்

6 Responses So Far:

sabeer.abushahruk said...

கண்கள் இரண்டே இரண்டு என்று துவங்கி எண்ணிக்கையில்லாக் கோணங்களில் கண்களையும் பார்வையையும் அலசும் மன்சூர் பாய், வாழ்த்துகள்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

ஜஸாக்கல்லாஹ் ஹைர் மன்சூராக்கா!

கண்ணுக்கு மை வைக்க யாரும் வரலையா?

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

மேலே கண்கள் இரண்டு மட்டும் தான் இருதுவரைக்கும் கருத்தாய்வில் !

Ebrahim Ansari said...

நேற்று படிக்க இயலாத சூழ் நிலைகள் .

இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு நண்பருக்கு கண்ணில் அழுத்தமான வலி என்றார். உடனே போய் மருத்துவரைப் பார்க்க அவசரப் படுத்தி அனுப்பினேன். அவருக்கு கண்ணில் EYE BALL PRESSURE என்று கண்டு பிடிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வந்து நன்றி சொன்னார்.

( BP - )இரத்தக் கொதிப்பு வருவது போல் கண்ணில் உள்ள விழி உருண்டையில் வரும் அழுத்தமும் ஆபத்தானது. இதைப் பற்றியும் எழுதுவீர்கள் என எதிர்பார்க்கிறேன் தம்பி மன்சூர்.

adiraimansoor said...

அஸ்ஸலாமு அலைக்கும்

நன்பர்களான சபீர் அஹ்மது,நெய்னாதம்பி, ஜாபர் சாதிக் மற்றும் இபுராஹீம் அன்சாரி காக்கா
எல்லோருடைய பின்னூட்டத்திற்கும் நன்றி ஜஸாக்கல்லாஹ் கைர்

இபுராஹீம் அன்சாரி காக்கா அவர்களின் சப்ஜெச்ட் மிக மோசாமான கண் நோய் இது கண்களையே குறுடாக்கும் நோய் இது நீங்கள் குறிப்பிட்டு இருப்பது போல் கண்களில் வரும் பிரஷர் மூலம் வரக்கூடிய நோய்
இந்த நோய்க்கு "குளுக்கோமா (Glucoma)" என்று பெயர்

கவியன்பனுக்காக எழுதப்பட்ட கண்புரை பற்றி கவியன்பனின் பின்னூட்டம காணப்படவில்லையே

sheikdawoodmohamedfarook said...

கண்கள்பற்றியகட்டுரை கண்ணுடையார் எல்லாம் கவனத்தில்கொள்ள வேண்டிய பயனுள்ளகட்டுரை.

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு