ஆண்கள்
சம்பாதிக்காமல் வீணாக காலத்தை கழித்து அதை பார்த்த பெண்கள் குடும்ப பொறுப்பை
சுமந்து கடை வைத்து, துணிமணிகள்
விற்று தன் குடும்பத்தை ஒரு நல்ல நிலைக்கு நிறுத்தி இன்று அந்த குடும்பங்களை
சார்ந்தவர்கள் சமுதாயத்தில் நல்ல மதிப்புடன் வாழ தன் வாழ்க்கையை தியாகம் செய்த
பெண்களையும் நான் பார்த்திருக்கிறேன்.
அதே சமயம் தனக்கு
எல்லாம் தெரியும் என்று "அட்டு லாயர்" மாதிரி பேசி குடும்பத்தில்
பிரச்சினைகளை உருவாக்கி கடைசியில் எல்லோரும் வெறுப்படைகிற மாதிரி நடந்து கொள்வதும்,
வீட்டில் கணவன் எல்லா
வசதிகள் செய்து கொடுத்தும் அதை முறையாக பயன்படுத்தாமல் கேவலங்களை வீட்டுக்கு
கொண்டு வந்து சேர்த்து அந்த குடும்பத்தை சார்ந்தவர்கள் தலை குனிய வைத்த
பெண்களையும் நான் பார்த்திருக்கிறேன்.
பாராட்டும்படி
நடக்கும் பெண்கள் , மன சங்கடத்தை ஏற்படுத்தும் பெண்கள் எல்லா
குடும்பத்திலும் இருக்கத்தான் செய்வார்கள். நாம் எதை தேர்ந்தெடுக்கிறோம் என்பதை
வைத்தே நமது குடும்பத்தின் பயணம் இருக்கும் என்பது நிச்சயம்.
மற்றவர்கள்
பேசுவதை கேட்டுப் பேசாமல் தன் கருத்தும் , சொல்லும் முதலிடம் பெற வேண்டும் என்று
கத்திப்பேசும் பெண்களிடம் பேச
முயற்சிப்பது கிரிமினல் வேஸ்ட். இது ஆண்களுக்கும்
பொருந்தும்.
இந்த நேரத்தில்
சொல்ல வேண்டிய விசயம் டெலிவிசனின் ஆதிக்கம்.
அடிமைத்தனத்தில்
மிகவும் கொடுமையானது நாம் எதற்கு அடிமையாக இருக்கிறோம் என்பது தெரியாமலே அடிமையாக
இருப்பது அல்லது அடிமைத்தனம் பழகிப்போவது. ஒரு வருடத்தில் நீங்கள் டெலிவிசன்
முன்னால் உட்கார்ந்து போக்கும் பொழுதை நீங்கள் கணக்கிட்டால்.. உங்கள்
வாழ்க்கையின் மிகப்பெரிய காலப்பகுதி அனாவிசயமாக திருப்பி திருப்பி ஒளிபரப்ப பட்ட ஒரே
காட்சிகளை டி வி யில் பார்த்தே கரைந்து
போயிருக்கும். இப்படி 'மாத்தி மாத்தி' ஒளிபரப்பப்படும் விசயங்கள் உங்களை
அடிமைப்படுத்தி விட்டபிறகு நீங்கள் உண்மையான விழிப்புணர்வு பெரும் சூழலில் இந்த
சமுதாயம் உங்களை விட்டு கண்ணுக்கு எட்டாத தூரத்தை தாண்டி முன்னேறியிருக்கும்.
நேரமும்
உங்களுக்கு கிடைத்திருக்கும் செல்வம்தான் அதை முறையில்லாமல் செலவழித்தால் உங்கள்
குடும்பத்தை யார் வந்து வழிநடத்தமுடியும்.
30 வருடத்துக்கு முன் இருந்த
பெண்களுக்கும் இப்போது உள்ள பெண்களுக்கும் நடைமுறை என்று பார்த்தால் மிகப்பெரிய
சவால் இன்று உள்ள பெண்களுக்குத்தான். பிள்ளைகள் பிறந்தால் அதை படிக்க அனுப்ப
பள்ளிக்கூடம் , ஒதுவதற்கு பள்ளி / மதரசா என்று இருந்த காலம்
போய், காலையில் பள்ளிக்கூடம் அனுப்புவதிலிருந்து ஹோம்
வொர்க், பள்ளியில் ஒதுவதை வீட்டில் ஒத ப்ராக்டிஸ்
கொடுப்பதுவரை வீட்டில் உள்ள பெண்களுக்கே முழுப்பொறுப்பு. இதில் பிள்ளைகளுக்கு என்ன ஊட்டுகிறோம் என்பதில் கவனம்
தேவை. வெறும் பாடம்
சொல்லிக்கொடுப்பது மட்டுமில்லை வாழ்க்கை. அதன் எதிர்காலத்திட்டமும் சரியாக
ஊட்டப்பட வேண்டும். "எனக்கு என்ன தெரியும், நான் என்ன
வெளியில் போய் வரும் ஆண்பிள்ளையா.. அதை எல்லாம் தகப்பன் பார்த்துக்கொள்ளட்டும்' என இருந்தால் திசை தெரியாமல் பிள்ளைகளை வளர்க்கும் கொடுமைக்கு ஆளாகி விடுவோம்.
இன்றைய உலகம்
போட்டிகள் நிறைந்தது.இன்று உங்கள் பிள்ளை 10 வயதானால் இன்னும்
20 வருடத்தில் [30 வயதில்] எப்படி
தயாராக இருக்க வேண்டும் என்பதில் கவனம் தேவை. அந்த பிள்ளையை
தயார் படுத்துவது பெண்களுக்கு மிகப்பெரிய பொறுப்பு இருப்பதே உண்மை.
சின்ன வயதில்
பிள்ளைகளுக்கு 'லாட்ஜ் ரூம் பாய்' மாதிரி எல்லாம் செய்து கொடுத்து விட்டு பிள்ளை வளர்ந்த பிறகு "பொறுப்புதான்
வரமாட்டேங்குது" என புலம்பி புண்ணியமில்லை.
குடும்பத்துக்கும், எதிர்கால சந்ததியினருக்கும் மார்க்க அறிவும் உலக கல்வியும் சரியான விதத்தில்
கலந்து தரும் டாக்டர் நீங்கள்தான்.
நம் ஊர் போன்ற
இடங்களில் என்னதான் வாய்கிழிய பெண்ணுரிமை, மார்க்கம்
எல்லாம் பேசினாலும் பெண்கள் தனது கல்வி , பணத்தேவைகளுக்கு
இன்னும் ஆண்களையே சார்ந்து இருக்கிறார்கள். இன்றைக்கு நம் பெண்கள் பல்கலைக்கழகம்
வரை படித்து விட்டதால் மட்டும் பணத்தேவைகளுக்கு தன் சொந்த முயற்சியின் வேலை /
தொழில் என்று இதுவரை இறங்க முடிவதில்லை.
ஆண்களை
பொருத்தவரை தன் மனைவி தனது குடும்பத்தை குழந்தைகளை தான் இல்லாத போதும் சரியாக வழி
நடத்த முடியும் என்ற நம்பிக்கை வந்து விட்டாலே அவனால் வேறு எந்த தடங்களையும்
எண்ணாமல் நல்லபடியாக சம்பாதிக்க முடியும்.
பெண்கள் எப்படி
இருக்க வேண்டும் என்று சொல்லும் சமுதாயம் ஆண்கள் எப்படி இருக்க வேண்டும் என்று
பெண்கள் சொன்னால் மட்டும் ஏற்றுக்கொள்வதில்லை.
மெட்டீரியலிஸ்டிக் வாழ்க்கை என்று சொல்லப்படும்
"பொருள்களை வாங்கி குவிக்கும்" மனப்பாங்கு என்பது சின்ன
பிள்ளைகள் மிட்டாய் கேட்டும் அழும் மனப்பாங்கு மாதிரி. 5 வயது பிள்ளை
மிட்டாய்க்கு அழுவது இயற்கை. 25 வயது ஆள் மிட்டாய்க்கு அழுதால் அது மனநோய்.இதை நான் எழுத காரணம் நம் ஊர் பகுதியில் நான் பார்த்த சில பெண்கள் எப்போது பார்த்தாலும் ஏதாவது வாங்கிவர வெளியூர்பயணத்திலேயே இருக்கிறார்கள். [ இவர்களுக்கு அலுத்துபோகாதா என்று யாரும் கேட்ட மாதிரி தெரியவில்லை]
டி வி /
மேகசினில் வரும் விளம்பரங்களை பார்த்த பிறகு எடு ஆட்டோவை, எடு காரை உடனே நான் போய் கடையில் இறங்கி அந்த பொருளை வாங்கி வந்து வீட்டில்
வைத்தால்தான் மனம் லேசாகும் என அலையும் பெண்கள் வெகு சீக்கிரம் குடும்பத்தை ஒரு
வழிக்கு கொண்டு வந்துவிடுவார்கள்.
இன்றைய தேதியில்
அத்தியாவிசயமான பொருட்களை வாங்க ஆசைப்படுவதில் தவறில்லை. ஆசைப்படும்
எல்லாப்பொருள்களும் அத்தியாவிசயம்தான் என்று வாதிடுவதில்தான் தவறு. பொருள்கள் வாங்க
சரியான விதி '"தேவைப்படுவதை வாங்கு, ஆசைப்படுவதை வாங்க யோசி".
சில சமயங்களில்
வீட்டில் உள்ள கணவரிடம் சொல்லி வாங்க சொன்ன பொருள்கள் உடனே வீடு வந்து சேராததற்கு
அவரை எதிரி மாதிரி பார்க்காதீர்கள். இன்னும் வாழ்க்கையில் ஏற்படும்
விவாதங்களுக்கும் கருத்து வேறுபாடுகளும் உங்கள் சந்தோச வாழ்க்கைக்கு வேட்டு
வைக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். உங்கள்
கணவர் அடிப்படையில் நல்லவர்தானே என்ற எண்ணம் உங்களிடம்
இருந்தால் பிரச்சினைகள் நீண்டு கொண்டே போகாது.
மற்றவர்களின்
பொருளாதார முன்னேற்றத்தை ஒப்பிட்டு உங்கள் கணவரை குறை சொல்லாதீர்கள்.
"நீங்களும் முன்னேறமுடியும்" என்ற நம்பிக்கை வார்த்தைகளை அவரின்
மனதுக்குள் விதையுங்கள். "உங்களின் முன்னேற்ற பயணத்தில் எப்போதும் உங்களுடன்
துணையிருப்பேன்" என்ற உண்மையை உங்கள் கணவரை உணரச்செய்யுங்கள்.
50 வருடத்துக்கு முன் உங்கள்
பாட்டி சொன்ன "பால் கறி- இறால்
ஆனம்" மட்டும்தான் எனக்கு செய்யத் தெரியும் என்று சமைத்துப்போட்டு வதைக்காதீர்கள். டி வி, புத்தகம், இன்டெர்னெட்டில் வரும் சின்ன சின்ன ரெசிப்பிகள்
செய்வதன் மூலம் குடும்பத்தில் பெரிய மகிழ்ச்சிகள் காத்திருக்கிறது. [ஏதோ குடு
குடுப்பைக்காரன் சொன்ன மாதிரி இல்லே!!].
அலுவல்களை
முடித்து வரும் கணவரிடம் வந்து உட்காருமுன் பிரச்சினைகள கொட்டாதீர்கள்.
உங்கள் கணவர், கஷ்டப்படும் மனிதர்களுக்கு உதவி செய்யும்போது நீதமாக நடந்து கொள்ளுங்கள். உங்கள்
வீட்டு ஆட்களுக்கு உதவி செய்யும்போது ஹீரோயினாகவும், கணவர் வீட்டு
உறவுக்கு உதவி செய்யும்போது பொருளாதார நிபுணர் மாதிரி பேசுவதை தவிர்த்து விடுங்கள்
நோய் பற்றிய விழிப்புணர்வு நம் பெண்களிடம்
மிகவும் குறைவு.
அதற்கு காரணம்
நோய் - உடற்பயிற்சி இதுவெல்லாம் ஆண்கள் சமாச்சாரம் என்று பெண்கள்
நினைப்பதுதான். அது தவறு என்பது வேறு
விசயம்.
சரியான
உடற்பயிற்சிகள் இல்லாமல் ' நான் தான் வீட்டு வேலை பார்க்கிறேனே" என்ற
ஒரே பிடிவாதத்தில் இருப்பதால்
இப்போதைக்கு நான் எந்த காலத்திலும் பார்த்திறாத அளவு நியூரோ பேசன்ட்களை
பார்க்கிறேன். அந்த பெண்களும் நியுராலஜிஸ்ட்களை பார்த்து மருந்து சாப்பிடும்போது
அதில் வரும் சைட் எஃபெக்ட் ஆன “தூக்க மாத்திரையில்லாமல்
தூங்க முடியாத நிலை”க்கு
தள்ளப்படுகிறார்கள்.
கலோரி அளவு தெரிந்து
செய்யும் உடற்பயிற்சி உங்களை எப்போதும் இளமையாக வைத்திருக்கும் என்பதை பெண்கள்
மறந்து விடக்கூடாது.
நீங்கள் சரியாக
இருந்தால்தானே குடும்பம் சரியாக இருக்கும்.
ZAKIR HUSSAIN
11 Responses So Far:
மாஷா அல்லாஹ்
தாங்கள் கட்டிய வீட்டு வாசல் படி நேர்த்தியான முறையில் பக்குவமாக கட்டியிருக்கிறீர்கள்.
//ஆண்கள் சம்பாதிக்காமல் வீணாக காலத்தை கழித்து அதை பார்த்த பெண்கள் குடும்ப பொறுப்பை சுமந்து கடை வைத்து, துணிமணிகள் விற்று தன் குடும்பத்தை ஒரு நல்ல நிலைக்கு நிறுத்தி இன்று அந்த குடும்பங்களை சார்ந்தவர்கள் சமுதாயத்தில் நல்ல மதிப்புடன் வாழ தன் வாழ்க்கையை தியாகம் செய்த பெண்களையும் நான் பார்த்திருக்கிறேன்.//
இன்றும் என் கடைக்கு வயது முதிர்ந்த பெண்கள் வந்து வேட்டி மேல்துண்டு வாங்கிட்டு போய் வியாபாரம் செய்கிறார்கள்.
அவர்களின் புலப்பமெல்லாம் வீட்டில் ஆம்புல புல்ல இருந்தும் பிரோஜனமில்லை என்பதே.
/உங்கள்முனேற்றபாதையில்எப்போதும்துணைஇருப்பேன்// முன்னேறும்போதுதுணை இருக்க மூவாயிரம் பேர் வருவார்! பின்னேறும்போதுமுன்னாலும்ஆள்இல்லை!பின்னாலும்ஆள்இல்லை! இதுதான் இன்றைய உலகம். ''ஆலம்விழுதுகள்போல்உறவு ஆயிரம் இருந்தும் என்ன? வேர்யென நீ இருந்தாய் அதில் நான் வீழ்ந்துவீடாதிருந்தேன்'' .இது ஒரு திரைப்பட பாடல். அன்றைக்குஇதுசரி!இன்றைக்குவேர்களும் மரத்தோடு வேறுபாட்டு நின்றதப்பா!
//50வருடத்துக்குமுன்உங்கள்பாட்டிசொன்ன'பால்கறி-இறால் ஆணம்''' மட்டும் தான்எனக்குசமைக்கதெரியும்''! என்று சமைத்துப்போட்டு வதைக்கா தீர்கள்// அப்படி திரும்பத்திரும்ப அவள் பாட்டிக்கறியே சமைதுப்போட்டால் ''அப்படியானால் நீஉன் மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு உன் உம்மா ஊட்டுக்குபோ! நான்உன்பாட்டியைகல்யாணம் பண்ணிக்கிட்டு குடும்பம் குட்டியாவாழ்ந்துகொள்கிறேன்''என்று சொல்லிப்பாருங்கள். வழிக்கு வந்துவிடுவாள்!முள்ளைமுள்ளால்எடுப்பதுபோல்பாட்டிரெசிபியை பாட்டியை வைத்தேவெல்லவேண்டும்.
அன்புமிக்க ஃபாரூக் மாமா அவர்களுக்கு ,
நீங்கள் சொன்ன ஏமாற்றம் எல்லோர் வாழ்க்கையிலும் இருக்கிறது. சிலர் ஏற்றுக்கொள்ளாமல் ரத்தகொதிப்பை அதிகமாக்கிக்கொள்கிறார்கள். சிலர் இதெல்லாம் சகஜம்தான் என்று ஏற்றுக்கொள்கிறார்கள்.
என்னைப்பொருத்தவரை ஏமாற்றியவர்களைவிட ஏமாற்றப்படுவது தெரியாமல் "தூக்க" நிலையில் இருந்தவர்களே தவறு செய்தவர்கள்.
Dear Brother LMS Muhammad Abubacker,
நீங்கள் சொன்ன மாதிரி சில வயதானவர்களை பார்த்திருக்கிறேன்...எனக்கு உள்ள வருத்தம் எல்லாம் அவர்களில் சில பேர் நல்ல உணவுகூட உண்ண முடியாமல் வறுமையில் மரணித்து விட்டார்கள் என்று நினைக்கும் போது மனது மிகவும் கஷ்டப்படுகிறது.
//பொருள்கள் வாங்க சரியான விதி '"தேவைப்படுவதை வாங்கு, ஆசைப்படுவதை வாங்க யோசி".//
Well said, very well said!
தம்பி ஜாகிர் கட்டியுள்ள பாடப் படிக்கட்டுகள்
தம்பி ஜாகிர் கட்டியுள்ள பாடப் படிக்கட்டுகள்
ஒட்டு மொத்தமாக சொல்வது சரியாகத் தெரியவில்லை . 50- 50.
//சின்ன வயதில் பிள்ளைகளுக்கு 'லாட்ஜ் ரூம் பாய்' மாதிரி எல்லாம் செய்து கொடுத்து விட்டு பிள்ளை வளர்ந்த பிறகு "பொறுப்புதான் வரமாட்டேங்குது" என புலம்பி புண்ணியமில்லை.//
மிக சரியாக சொன்னீர்கள்
//[ இவர்களுக்கு அலுத்துபோகாதா என்று யாரும் கேட்ட மாதிரி தெரியவில்லை]//
இதை பெண்களிடத்தில் கேட்டு கேட்டு ஆண்கள் அலுத்துப்போய் விட்டார்கள்
ஆண்கள்
Post a Comment