Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

கருகும் காதல் – கிருஸ்தவ பூஜை தினம் [வரலாறு!! : காணொளி] 2

அதிரைநிருபர் பதிப்பகம் | February 14, 2016 | , , ,


பாட்டனும் பூட்டியும்
பண்புடன் பழகி
பாசத்தைப் பகிர்ந்து
பிழைத்தது பலநாட்கள்

தாத்தனும் பாட்டியும்
தமிழினில் திளைத்து
தூய்மையாய் இல்லறம்
சுகித்ததும் பலநாட்கள்

பிந்தைய நாட்களில்
எந்தையும் தாயும்
சந்ததி பெற்றுச்
சிறந்ததும் பலநாட்கள்

என்னிலே இவளும்
இவளிலே நானும்
இருந்து மகிழ்ந்திடும்
இல்வாழ்வு பலநாட்கள்

ஒவ்வொரு நாளிலும்
சொல்லிலும் செயலிலும்
அன்பினைச் சொன்னோம்
அழகுற பகிர்ந்தோம்

எம்நாட்டுப் பண்பாட்டில்
எத்தினமும் எமக்கு
அன்பினைச் சொல்லிடும்
காதலர் தினமே

மேநாட்டு மனிதருக்கோ
அன்பினைச் சொல்ல
அவகாசம் இல்லை
பண்போடு பழக
படிப்பினை இல்லை

ஒற்றை நாளெடுத்து
அன்பு சொல் என்றனர்
காத்திருந்த கயமையின்
கட்டவிழ் என்றனர்

பண்பாடு கலாச்சாரம்
புண்பட்டு புறையோடி
நாற்றமெடுக்கு முன்
நல் வழி காண்பீர்

நாகரீகப் போர்வையில்
நயவஞ்சகக் கூட்டம்
நங்கையரை நசுக்கி
நல்லொழுக்கம் புதைத்து

நஞ்சினை விதைக்கும்
நாளிதைப் புறக்கனிப்போம்!

சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்


காதலர் தின என்ற கிருஸ்தவ பூஜை தினம் பற்றிய வரலாற்று தகவல், அவசியம் கேளுங்கள்.

2 Responses So Far:

Ebrahim Ansari said...

//எம்நாட்டுப் பண்பாட்டில்
எத்தினமும் எமக்கு
அன்பினைச் சொல்லிடும்
காதலர் தினமே//

365 நாட்களில் ஒரே ஒருநாள்தான் காதலர் தினமா? ஒரு நாள் மட்டுமல்ல ஒரு நாளின் ஒவ்வொரு வினாடியும் காதலர் வினாடியே.

உண்மையான வரலாறு தெரியாமல் கும்மாளமடிக்கவும் கூத்தடிக்கவும் ஒரு நாளைத் தேர்வு செய்திருப்பது அறியாமையின் வெளிப்பாடு.

நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேசவேண்டும் - என்ற மனநிலையை வளர்த்துக் கொள்ளும் பண்பே காதல் . உடல் பேசும் மொழிகளைப் புரிவதா காதல்? இல்லை! உள்ளம் பேசுவதை வாயால் மொழியாமல் உணர்வதே காதல்.

இதற்கு

ஒரு நாள் போதுமா? இன்றொரு நாள் போதுமா?

இச்சைக்கு எதிரான "நச்" என்ற கவிதை.

அதிரை.மெய்சா said...

தேவையில்லாத ஒரு அனாச்சார தினம்.


நாற்றமெடுக்கும் முன் நல் வழி காண்பீர்
நல்ல. உபதேங்களுடன் உனன் கவிவரிகள் இத்தினத்திற்கு எதிப்பினை தெரிவித்திருக்கின் றாய் அருமை.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு