ஓரிறைக் கொள்கையின்
அடிப்படை அறியத்தந்தேன்
உயிரெழுத்தின் எழுத்துருவைக்
கைபிடித்துக் கற்றுத்தந்தேன்
விரல்விட்டு எண்ணும் வகை
விளையாட்டாய்ச் சொல்லித்தந்தேன்
கடன்வாங்கிக் கழிக்கும் முறை
கணக்காய்க் காட்டித் தந்தேன்
வாய்பாடு மனனம் செய்ய
வழிவகைகள் வகுத்துத் தந்தேன்
சமன்பாடுகளின் இடம் வலம்
சமன் செய்து புரியவைத்தேன்
வயதுக்கேற்ற வாழ்வியலை
வழிநெடுக விளக்கி வந்தேன்
காட்ஸில்லாக்கள்
கார்ட்டூன் பலசாலிகள்
கற்பனையென புத்தியில் விதைத்தேன்
டைனோஸர்கள், அமானுஷ்யங்கள்
மாயையென விளங்க வைத்தேன்
சந்தேகங்கள் நீ கேட்க
சலிக்காமல் தெளிவித்தேன்
என்னில் எதுவோ
நின்னைக் கவர
என்னைப்போலாகவே
விரும்புவதாகச் சொல்கிறாயாமே!
இதை நிருவத்தான்
குட்டிக் குட்டியாய்
கவிதைகள் சொல்கிறாயா?
நானோ
கிரிக்கெட் போதையில்
கூட்டுத் தொழுகையைத்
தவறவிட்டவன்...
உனக்குப் பிடித்த விளையாட்டைக்கூட
பாதியில் விட்டுவிட்டு
கூட்டுத் தொழுகைக்காக
பள்ளிக்கு ஓடும் பயபக்தியை
உன்னிடம்தான் நான் கற்கிறேன்
வாசனையைவிட
கிருமிநாசினியே நல்லதென்ற
உன் அறிவுரைக்கேற்ப
நீண்டகாலம் உபயோகித்த
குளியல் சவர்க்காரத்தை மாற்றிவிட்டேன்
திரைப்படப் பாடல்களை -நான்
முணுமுணுக்கத் தடை செய்து
திரையிசையை விரும்பாமல்
மறைவசனத்தில் லயிக்கிறாய்
கலையெனும் போர்வையில்
கேலிக்கூத்துகள் வெறுத்து
திருமறை அத்தியாயங்கள்
கற்பதையே விரும்புகிறாய்
வீட்டுப்பாடம் செய்விக்க
பிடித்திழுத்து இருத்துவது
உன்னை நானல்ல
என்னை நீ
மின்சாரத் தன்மைகள்
உன்னறிவில்
செலுத்தியநாள் முதல்...
மின்னோட்டம் துண்டிக்காமல் -உன்
மின்னணுப் பொருட்களை
மின்னேற்ற இடுவதில்லை
மின்னேற்றி எடுப்பதுமில்லை
உன்னிடம் கற்க
உயர்வான பண்புகள்
ஏராளமுண்டு;
உன்னைப் போலாகவே
எனக்கும் ஆசை!
இனி
கற்றலும் கற்பித்தலும்
பரஸ்பரம்
என்றே தொடரட்டும்!
சபீர் அஹ்மது அபுஷாஹ்ரூக்
16 Responses So Far:
//உன்னிடம் கற்க
உயர்வான பண்புகள்
ஏராளமுண்டு;
உன்னைப் போலாகவே
எனக்கும் ஆசை!//
அடிக்கடி நினைத்ததுண்டு...!
மகன்களைப் பார்க்கும்போது... !
//வீட்டுப்பாடம் செய்விக்க
பிடித்திழுத்து இருத்துவது
உன்னை நானல்ல
என்னை நீ//
ஹா ஹா கண்டேனே... பலமுறை கைது செய்யப்பட்ட வி ஐ பி யை !
Assalamu Alaikkum
Dear brother Mr. Abushahruk,
Nice poem of teaching and learning father and son each other.
Yes. Its truly amazing experience that we observe and learn from our kids.
Jazakkallah khair,
B. Ahamed Ameen from Dubai
நல்ல கவிதை நண்பா. இதற்கு விரிவாக கருத்திட நேரமில்லை. அருமை வாழ்த்துக்கள்.
பெற்றவற்றில் எல்லாம் பெரும்பேறு இவனைப் பெற்ற பேறே என்று கருதுகிறேன். மாஷா அல்லாஹ்.
வாழ்த்துக்கள்.
அபு இபு, .தம்பி B.அஹமது அமீன் (வ அலைக்குமுஸ்ஸலாம்), மெய்சா, இப்றாஹீம் அன்சாரி காக்கா,
ஜஸாக்கல்லாஹ் க்ஹைர்!
ஓரிறைக் கொள்கையின்
அடிப்படை அறியத்தந்தேன்...........சந்தேகங்கள் நீ கேட்க
சலிக்காமல் தெளிவித்தேன்
----------------------------------------
அஸ்ஸலாமுஅலைக்கும்.மகனே! இவையாவும் என் கடமை எனக்கு ஒரு மகனாக இடப்பட்டதை நான் உனக்கு ஒரு மகனாக இட்டு வைத்தவை!
என்னில் எதுவோ
நின்னைக் கவர
என்னைப்போலாகவே
விரும்புவதாகச் சொல்கிறாயாமே!
இதை நிருவத்தான்
குட்டிக் குட்டியாய்
கவிதைகள் சொல்கிறாயா?
---------------------------
என் மூலம் என் வாப்பா பெற்ற "சன்"தோசம்,உன் மூலம் நான் பெறுகிறேன்!
நானோ
கிரிக்கெட் போதையில்
கூட்டுத் தொழுகையைத்
தவறவிட்டவன்...
உனக்குப் பிடித்த விளையாட்டைக்கூட
பாதியில் விட்டுவிட்டு
கூட்டுத் தொழுகைக்காக
பள்ளிக்கு ஓடும் பயபக்தியை
உன்னிடம்தான் நான் கற்கிறேன்
----------------------
உண்மை பாடம்! இது கவிதையென்றாலும் கூர்ந்து எழுதப்பட்ட அனுப(பா)வப் பாடம்! நம்மை நன்மையின் பக்கம் இழுக்கும் நம்மின், உயிர் விலாசம்!
அல்ஹம்துதுலில்லாஹ்!
வாசனையைவிட
கிருமிநாசினியே நல்லதென்ற
உன் அறிவுரைக்கேற்ப
நீண்டகாலம் உபயோகித்த
குளியல் சவர்க்காரத்தை மாற்றிவிட்டேன்
-----------------------------------
என்னுள் அறியாமையெனும் தூசு படிந்துஇருந்தது அதை நாசுக்கா உணர்த்தி ஆரோக்கியம் தான் அவசியம்!அலங்காரமில்லை என நான் உபயோகித்த சுவர்"காரத்தை மாற்றிய இனிய அறிவு உனது.மங்கிபோய்யிருந்த பழமையை வெளுத்த புதுமை நீ!
திரைப்படப் பாடல்களை -நான்
முணுமுணுக்கத் தடை செய்து
திரையிசையை விரும்பாமல்
மறைவசனத்தில் லயிக்கிறாய்
கலையெனும் போர்வையில்
கேலிக்கூத்துகள் வெறுத்து
திருமறை அத்தியாயங்கள்
கற்பதையே விரும்புகிறாய்
-------------------------------------
அல்ஹம்துலில்லாஹ்! நன்மையை தூண்டும் தூண்டுகோல்;இந்த வரிகள்,இதில் உள்ள கற்பனை பெரும் பாலும் கொஞ்சமாக ஆங்காங்கே நடப்பது.இதில் சொல்லப்பட்டது போல் எல்லார்வீட்டிலும் நடந்தால் மறுமை பிரகாசம் ஆகிவிடும்! ஆமீன்.
உன்னிடம் கற்க
உயர்வான பண்புகள்
ஏராளமுண்டு;
உன்னைப் போலாகவே
எனக்கும் ஆசை!
இனி
கற்றலும் கற்பித்தலும்
பரஸ்பரம்
என்றே தொடரட்டும்!
-------------------------------
ஈகோ தவிற்கும் இந்த வார்த்தை இனி எல்லாம் சுகமே என சொல்லாமல் சொல்லும்!
மாஷா அல்லாஹ்...மகனிடம் இருந்து கற்க்கப்படும் ஒவ்வொன்றும் ஆனந்தம்தான்....அல்லாஹ் சிறந்த/வலிமையான ஈமானுடன் கடைசிவரை வாழ் வைப்பானாக
க்ரவ்ன் (வ அலைக்குமுஸ்ஸலாம்)
யாசிர்
ஜஸாக்கல்லாஹ் க்ஹைர்
அருமையான கவிதை
அதைப்போல் தொடரவும் .
அருமையான கவிதை
அதைப்போல் தொடரவும் .
Post a Comment