Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

'மதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு - என் பார்வை 34

அதிரைநிருபர் பதிப்பகம் | February 28, 2016 | , ,

முன்பெல்லாம் பரிசளிக்கும் சூழல் வரும்போதெல்லாம் ஆயிரத் தெட்டு குழப்பங்கள்  நிலவும். கடிகாரம் வாங்கி கொடுப்போமா, பூ ஜாடி வாங்கி கொடுப்போமா என்றெல்லாம் விழி பிதுங்கும்வரை   மனதோடு பட்டிமன்றம் நிகழ்த்தியதுண்டு. புத்தகங்களோடு நட்புறவு பலமான பின், எந்த விசேஷ தருணமென்றாலும் பரிசுக்கு முதலும் இறுதியுமான முடிவு 'புத்தகம் தான் டாட்' என்ற நிலைக்கு மாறியது. 

இதிலும் ஓர் குறை இருந்துவந்தது. இந்திய முஸ்லிம்கள் குறித்து திரிக்கப்பட்ட வரலாறுகளையே படித்து பதிந்து பழக்கப்பட்ட மனம் கொண்டோர்க்கு, அதை தகர்த்தெறியாவிடினும்,  ஓரளவுக்கேனும் உண்மையை புரிந்துகொள்ள ஏதுவான  வரலாற்று புத்தகங்களை பரிசளிக்கவோ பரிந்துரைக்கவோ நிறைவான புத்தகம் + நம்பகமான புத்தகம் பரிசளிப்பதற்காக, தேடுவதில் அதிகமே மெனக்கெட்டதுண்டு. "ஏன் இஸ்லாமியர்கள்  வரலாற்றுப் பகுதியில் கவனம் செலுத்துவதில்லை என்ற நெடுங்கால குறையை செ.திவான் தீர்த்து வைத்ததில் ஓரளவு திருப்தியிருந்தது. இதோ அதே வரிசையில்  அதிரைநிருபர் தளத்தில் தொடராக வெளிவந்து சென்னை சாஜித புக் செண்டர் பதிப்பகத்தாரின் வெளியீடாக என் கைக்கு வந்து சேர்ந்தது அந்த பொக்கிஷம் "மதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு"

ஏற்கனவே அங்கொன்றும் இங்கொன்றுமாக அதிரைநிரூபர் தளத்தில் வாசித்திருந்ததால் ஓரளவு பரிட்சயமிருந்தது. நூல் வடிவில் கொண்டு வரப்போவதாக ஒருவருடம் முன்பு தகவல் வந்த போதே அத்தளத்தின் நிர்வாகியிடம் ஓர் கோரிக்கை வைத்தேன் "தயவு செய்து கனமான அட்டை போட்டு புத்தகம் வெளியிடுங்கள். ஏனெனில் அவையெல்லாம் அடிக்கடி பார்க்கும் சூழலை உருவாக்கும் புத்தகம்" என்றேன். வெளியீட்டு விழா நிகழ்ச்சி  பற்றி சொன்ன போது நான் கேட்ட முதல் கேள்வியும் அதுவேதான். சின்ன ஏமாற்றம் எனினும் ஹைர்..! 

அழகான வடிவமைப்புடன் கூடிய புத்தகத்தில் இரு பிரதிகள் என் கைக்கு சேர்ந்ததுமே அதில் ஒரு பிரதியை  நான் எடுத்துக்கொண்டு இன்னொரு பிரதியை   தெரிந்த பிறமத நண்பர் ஒருவருக்கு பரிசளித்துவிட்டு தான் வாசிக்கத் தொடங்கினேன். நன்கு தெரியும், என்  எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் புத்தகம் என்றபடியால் வாசிக்காமலேயே, பரிசளித்தேன்! எனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்புக்கள் முடிந்த பின்னே  சாவகாசமாய் வாசிக்கத் தொடங்கினேன். அல்ஹம்துலில்லாஹ்,  என் எண்ணம் தவறல்ல என்பதை ஆசிரியரின் உரையே எடுத்துகாட்டியது. 

பெரும்பாலும் புத்தகத்தின் பதிப்புரையோ முன்னுரையோ எந்த உரையாகினும் அவையெல்லாம் எளிதாக கடந்த முதல் அத்தியாயத்துக்குள் நுழையும் என் வாசிப்பு  பழக்கத்தில் சற்று மாறுதலை கொண்டுவந்தது இந்த புத்தகம். ஆசிரியரின் உரையே, இப்புத்தகம் ஏன் காலத்தின் கட்டாயம் என்பதை எடுத்தியம்பியது. பாடபுத்தகங்களில் இஸ்லாமியர்கள் இந்தியாவுக்குள் வந்ததை இஸ்லாமிய படையெடுப்பு என்றும், ஆரியர்கள் வந்ததை ஆரியர் வருகை என்றும் குறிப்பிட்டுள்ளதை சுட்டிகாட்டிய இடத்தில் புத்தகத்தை மூடிவைத்து யோசிக்க ஆரம்பித்தேன். ஆம்! பள்ளிபாடங்களில் இப்படியாக தான் நஞ்சு விதைக்கப்பட்டவர்களாக  வளர்க்கப்பட்டிருக்கிறோம். அதை மெல்லிய உதாரணத்தில் சொல்லி    அதிகம் சிந்திக்க வைத்தார் ஆசிரியர். புத்தகம் முழுதும் இப்படியாக பல விஷயங்களில் நம்மை நாமே கேள்வி கேட்க வைத்திருக்கிறார். 

31 தலைப்புகளின்  கீழ் பலதரப்பட்ட வரலாற்றுக்களின் மறுபக்கத்தை நமக்கு எடுத்துகாட்டியுள்ளார் ஆசிரியர்.  ஒவ்வொரு தலைப்பிலும் நமக்கே நம் சமுதாயம் பற்றி தெரியாத தகவல்களை தந்து, இத்தனை நாளாக இதுபற்றி அறியாமல் என்ன செய்து கொண்டிருந்தோம் என கேள்வி கேட்க வைத்துள்ளார். ஒவ்வொரு தகவலும் கொடுக்கப்பட்ட விதம், இக்கட்டுரைகளை உருவாக்குவதில் அவருக்கு இருந்த ஆர்வமும், தேடலும் , உழைப்பும் பறைசாற்றுவதோடு உண்மை தன்மையை  எடுத்தியம்புகிறது. ஆம்,  தகவல்கள் ஆண்டுவாரியாக மட்டுமல்லாமல்  எந்தந்த நாட்களில் சம்பவம் நடந்துள்ளது என்பதையும் குறிப்பிட்டுள்ளார். 

சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்களின்  பங்கு என்ன என நம்மை நோக்கி கேள்வி கேட்போருக்கு பதிலை புத்தகமாக கொடுத்ததோடு அல்லாமல் " சுதந்திர போராட்டத்தின் போது சாவர்க்கரை போல் இந்திய மண்ணுக்கு துரோகம் செய்த ஒரு முஸ்லிமையாவது ஆதாரத்துடன் காட்ட முடியுமா " என எதிர்கேள்வியையும் கேட்க வைத்துள்ளார். 

இன்னும் இன்னும் ஏராளதகவல்கள் கொட்டி கிடக்கின்றன. 

* திப்புவின் வீரம் தெரியும் திப்பு இறந்த பின் அவர் அரண்மனைக்குள் கைப்பற்றப்பட்ட பொக்கிஷங்கள் புத்தகங்களும், ராக்கெட் ஆய்வு கட்டுரைகளும் தான் என்பது தெரியுமா?

* காந்தி நாட்டுக்காக பாடுபட்டது பாடபுத்தகங்களில் சொல்லப்பட்டுள்ளது. ஆங்கிலயர்களின் ஆட்சிமன்றத்தில் அங்கத்தினராக காங்கிரஸ் தலைவர்கள் இருப்பதற்கான காந்தி கொண்டு வந்த  'டொமினியன் அந்தஸ்து' தீர்மானத்தை முட்டாள்தனமானது என்றும் ஆங்கிலேயர்களை விரட்டி இந்தியாவை நமதாக்க வேண்டும் என்பதை   எடுத்துக்கூறிய மௌலானா ஹஜ்ரத் மொஹானியின் அறிவார்ந்த தீர்மானத்தை காந்தி புறந்தள்ளியதை படித்திருக்கிறோமா? 

* மருதுபாண்டியர் பற்றி தெரியும். அந்த  வம்சமே தூக்கிலிடப்பட்ட போது சின்ன வயது காரணமாக இளையமருதுவின் மகன் துரைச்சாமியை விட்டு வைத்ததும்,  அவருடன் சேர்ந்து நாடுகடத்தப்பட்ட  72 பேரில் துரைச்சாமிக்கும், படைத்தளபதி ஷேக் உசேன்க்கும் மட்டுமே இரும்பு சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்தனர் என்ற வரலாறெல்லாம் குறைந்தபட்சம் கேள்விபட்டிருக்கிறோமா?

* அலி சகோதரர்கள் பற்றி ஓரிரு வரியில் படித்திருப்போம்.  அவர்கள் வீட்டுப் பெண்கள் அக்காலத்திலேயே 30 லட்சம்  சுதந்திர போராட்ட நிதியாக கொடுத்தது அறிவோமா? இல்லை " என் மகன்கள் ஆங்கில அரசிடம் மன்னிப்பு கேட்டால் நானே அவர்களின் குரல்வளையை நெறித்துக்கொள்வேன்" என சொன்ன அவர்களின் வீரத்தாய் பீவிமா பற்றியேனும் தெரிந்துவைத்துள்ளோமா?

* ஒத்துழையாமை பற்றியும்,  சத்தியாகிரகம் பத்தியும் சொல்லிகொடுக்கப்பட்ட நமக்கு சப்பாத்தி திட்டம் பற்றி சொல்லப்பட்டுள்ளதா? சப்பாத்திக்குள் துண்டு பிரசூரம் வைத்து   புரட்சிக்காக மக்களை அழைத்ததும், இன்னும் பல வழிகளில் ஆங்கிலேயர்க்கு குடைச்சல் கொடுத்ததன் விளைவாக   ,  உயிருடன் பிடித்துகொண்டு வந்தால் 50 ஆயிரம் பரிசு கொடுக்கப்படும் என ஆங்கிலேயர்களால் அறிவிப்பு செய்யப்பட்ட மௌலவி அஹமது ஷா பற்றி அறிந்திருக்கிறோமா? 

இன்னும் பக்கத்திற்கு பக்கம் பல சுவாரசியங்களும் அதிர்ச்சிகளும் காணக்கிடைக்கின்றன. கண்ணீர் துளிகளும் குறைந்தபட்சம் உடல் சிலிர்க்காமலும் இப்புத்தகத்தை முடிக்க உங்களால் முடியாது.  ஓர் சமுதாயம் கேள்வி கணைகளால் தொடுக்கப்படும் பொழுதும், தனிமைபடுத்தப்பட  விஷம பிரச்சாரங்கள்  கட்டவிழ்க்கப்படும் பொழுதும் அதனை எதிர்க்க  பதிலை தெரிந்து வைத்திருப்பது அவசியம். எதிர்த்து பதில் சொல்வதற்கான சூழலை இப்புத்தகம் வாயிலாக தந்துள்ளார்கள். நிச்சயம் முஸ்லிம்கள் வாசிக்க வேண்டிய நூல். தம் நண்பர்களுக்கும், இஸ்லாமியர்கள் குறித்து தவறான புரிதலில் உள்ளோர்க்கும் பரிசளிக்க ஏதுவான நூல்.  

வரலாறுகளை திரித்து விட்டார்கள் என சொல்லிக் கொண்டே இருப்பதை விடுத்து உண்மைகளை அறிவதும், அறிந்ததை ஆதாரங்களுடன் மற்றவர்களுக்கு  எத்தி வைப்பதும்  மகத்தான பணி.  இப்பணியை சிறப்பாக செய்த  அதிரைநிருபர் தளத்திற்கும் இந்நூல் ஆசிரியருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள். 'மதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு' இன்னும் பல பாகங்களாக தொடரவும் பல பதிப்புகளாக வெளிவரவும் மனமார்ந்த வாழ்த்துகள். 

ஆமினா முஹம்மத்

34 Responses So Far:

Ebrahim Ansari said...

அன்புள்ள சகோதரி, அஸ்ஸலாமு அலைக்கும்.

ஜசாக்கல்லாஹ் ஹைர்.

Unknown said...

சர்ரியான மதிப்பீடு!

ஆமினா said...

வ அலைக்கும் சலாம் சகோ Ebrahim Ansari

அல்லாஹ் உங்களுக்கும் நற்கூலி வழங்குவானாக.

ஆமினா said...

ஜஸக்கல்லாஹ் ஹைர் சகோதரர் Adirai Ahmad

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி,

சரியான மதிப்புரை, இந்த புத்தகத்தை முழுமையாக இந்தியாவில் வாழும் முஸ்லீம்கள் ஒவ்வொருவரும் அவசியம் வாசிக்க வேண்டியதின் அவசியத்தை உணர்ச்சியுள்ளீர்கள். ஜஸக்கல்லாஹ் ஹைரா.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

இது போன்ற புத்தகம் வேறு மொழியில் இருக்கிறதா? என்று தெரியவில்லை. குறிப்பாக ஆங்கிலத்தில்மொழியாக்கம் செய்ய முயற்சிக்கலாம். இன்ஷா அல்லாஹ்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

இந்த தொடர் வெளிவந்து கொண்டிருக்கும்போதே சகோதரி ஆமீனா முஹம்மத் வைத்த வேண்டுகோள் விரைவில் நூல் வடிவம் பெறனும் அதோடு, பிற நூல்களை போல் அட்டைப்படம் மெலிதாக இல்லாமல் கனமான அட்டையுடன் இருத்தல் அவசியம் என்றும் சொல்லியிருந்தார்கள் காரணம் இதனை பாதுகாக்க வேண்டிய பொக்கிஷமாக வைத்திருக்க அதுவும் உதவும் சீக்கிரத்தில் நூல் சேதமடையாது, காரனம் இஸ்லாமியர்களின் இந்திய வரலாற்றை சிதைத்தவர்களின் கண்முன்னே நாமு வாழ்கிறோம் என்பதனாலே !

நூல் கிடைத்தது வாசித்தோம் என்றில்லாமல் அதற்கென அற்புதனமான திறணாய்வு ஒன்றை எழுதி பிறமக்களையும் வாசிக்கும் ஆர்வத்தை தூண்டியிருக்கும் எழுத்தாற்றல் பெற்ற சகோதரிக்கு ஜஸாக்கல்லாஹும் ஹைரன் !

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும்.நூல் கிடைத்தது வாசித்தோம் என்றில்லாமல் அதற்கென அற்புதனமான திறணாய்வு ஒன்றை எழுதி பிறமக்களையும் வாசிக்கும் ஆர்வத்தை தூண்டியிருக்கும் எழுத்தாற்றல் பெற்ற சகோதரிக்கு ஜஸாக்கல்லாஹும் ஹைரன் !

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

முஸ்லீம்கள் ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய அவசியத்தின் விளக்கம்.
இதை எழுதிய உங்களெண்ணமும், புத்தகத்தை எழுதிய இ.அ. காக்கா நல்லெண்ணமும் ஈடேரட்டுமாக!

sabeer.abushahruk said...

முஸ்லீம்கள் ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய அவசியத்தின் விளக்கம்.
இதை எழுதிய உங்களெண்ணமும், புத்தகத்தை எழுதிய இ.அ. காக்கா நல்லெண்ணமும் ஈடேரட்டுமாக!
Reply

இப்னு அப்துல் ரஜாக் said...

மதிப்புரை அருமை
Need to translate in all languages especially in our national language Hindi.

Shameed said...

//கனமான அட்டையுடன் இருத்தல் அவசியம்// கருத்துக்கள் கனமாகா இருப்பதால் அட்டையும் கணமாக இருத்தல் அவசியமே

Unknown said...

இப்புத்தகமானது இணையதளத்தில் கிடைக்கப்பெறுமா..??

sheikdawoodmohamedfarook said...

இரண்டு முறைவாசித்த பின்னும் மீண்டும் ஒரு முறை வாசிக்கத் தூண்டுகிறது உங்கள் மதிப்புரை.

sheikdawoodmohamedfarook said...

நூல்களில் மூன்று வகைஉண்டு.ஒன்று வாங்கியதும் படித்து முடிக்கத் தூண்டுவது.இரண்டாவது முதல்பக்கத்தை படித்து முடிக்குமுன்பே ''அப்புறம் படிப்போமே''என்று ஒரு மூலையில் தூக்கிபோட்டு விடுவது. மூன்றாவதுவகை புத்தகம்வாங்கிய காசை 'புத்திக்கொள்முதல்'கணக்கில்சேர்ப்பது.இந்தப்புத்தகம் முதல் வகைபுத்தகங்கள் வரிசையில்சேரும்.

Anonymous said...

எல்லா மொழிகளிலும் கட்டாயம் இந்த நூல் வெளிவர வேண்டும்.

குறைந்த பட்சம், இந்த நூலை தமிழகம் முழுவதும் பரப்பவேண்டும். அதற்கு எளிய வழி: தமிழ் நாடு அரசு நூலகங்கள் உள்ளன. அவற்றிற்கு தமிழ்நாடு அரசே விலை கொடுத்து வாங்கி அந்த நூலகங்களில் வைக்கும். இது எப்போது சாத்தியம் எனில், புத்தக வெளியீட்டளர்கள் சங்கத்தில் சாஜிதா நிறுவனம் இருந்து; அரசில் "புத்தக வெளியீட்டளர்" என பதிவு செய்யப்பட்டு இருந்தால் வெளியீட்டளர்களான சாஜிதா நிறுவனமே அரசின் அந்த துறையை அணுகி முயற்சிக்கலாம். வெற்றி கிடைக்கும் இன்ஷா அல்லாஹ்.

Fathhuddeen N.MUHAMMAD

Anonymous said...

////இப்புத்தகமானது இணையதளத்தில் கிடைக்கப்பெறுமா..??//

சகோ Dom Hidayath:

இணையத்தில் இணையத்தில் புத்தகமாக வெளியிடப்படவில்லை, இந்த நூல் தொடர் இதே தளத்தில் இருக்கிறது.

இந்த சுட்டியிலும் பார்க்கலாம்

மதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறுகள்

ஆமினா said...

தாஜுதீன் (THAJUDEEN ) சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி,

சரியான மதிப்புரை, இந்த புத்தகத்தை முழுமையாக இந்தியாவில் வாழும் முஸ்லீம்கள் ஒவ்வொருவரும் அவசியம் வாசிக்க வேண்டியதின் அவசியத்தை உணர்ச்சியுள்ளீர்கள். ஜஸக்கல்லாஹ் ஹைரா. //


வ அலைக்கும் சலாம் சகோ தாஜூதீன்.

அல்லாஹ் உங்களுக்கு நற்கூலி வழங்குவானாக ஆமீன்

ஆமினா said...

தாஜுதீன் (THAJUDEEN ) சொன்னது…

இது போன்ற புத்தகம் வேறு மொழியில் இருக்கிறதா? என்று தெரியவில்லை. குறிப்பாக ஆங்கிலத்தில்மொழியாக்கம் செய்ய முயற்சிக்கலாம். இன்ஷா அல்லாஹ். //

சகோதரர் ஞானையா கூட , விடுதலைப் போரில் முஸ்லிம்களின் பங்கு என்ற 1111 பக்கங்கள் கொண்ட புத்தகத்தை எழுதியுள்ளார். அவை கூட, கூடுதல் தகவல் சேகரித்து அதிக அளவில் பரப்பலாம்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

ஆமினா said...

அபுஇப்ராஹிம் அண்ணா சொன்னது

நூல் கிடைத்தது வாசித்தோம் என்றில்லாமல் அதற்கென அற்புதனமான திறணாய்வு ஒன்றை எழுதி பிறமக்களையும் வாசிக்கும் ஆர்வத்தை தூண்டியிருக்கும் எழுத்தாற்றல் பெற்ற சகோதரிக்கு ஜஸாக்கல்லாஹும் ஹைரன் ! //

நன்றிண்ணா...

அல்லாஹ் உங்களுக்கும் நற்கூலி வழங்குவானாக. ஆமீன்

ஆமினா said...

சகோ crown சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும்.நூல் கிடைத்தது வாசித்தோம் என்றில்லாமல் அதற்கென அற்புதனமான திறணாய்வு ஒன்றை எழுதி பிறமக்களையும் வாசிக்கும் ஆர்வத்தை தூண்டியிருக்கும் எழுத்தாற்றல் பெற்ற சகோதரிக்கு ஜஸாக்கல்லாஹும் ஹைரன் ! //

வ அலைக்கும் சலாம்.

நன்றி சகோ. அல்லாஹ் உங்களுக்கும் நற்கூலி வழங்குவானாக. ஆமீன்

ஆமினா said...

சகோ M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு)
சகோ sabeer.abushahruk
சகோ இப்னு அப்துல் ரஜாக் சொன்னது…

சகோ Shameed
சகோ abusumaiya

ஆகியோர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். ஜஸக்கல்லாஹ் ஹைர்

Ebrahim Ansari said...

அனைவரின் அன்புக்கும் கருத்திடலுக்கும் மிகவும் கடமைப்பட்டு இருக்கிறோம்.

தம்பி Fath huddeen உடைய கருத்தைப் பதிப்பாளருக்கு அறியத்தருகிறேன். இன்ஷா அல்லாஹ்.

ஆங்கிலம் , இந்தி ஆகிய மொழிகளில் மொழிமாற்றம் என்ற கருத்துக்களை வழங்கிய சகோதரர்கள் தாங்களே அவற்றை மேற்கொள்ள விரும்பினால் செய்யலாம். நீட்டிய இடத்தில் இது தொடர்பாக நான் கையெழுத்துப் போட்டுத் தருகிறேன். எனது பெயர் கூட போடவேண்டுமென்று அவசியமில்லை. வேண்டுமானால் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தும் தரலாம்.

ஹிந்தி மாலும் லேகின் இத்னா மாலும் நஹி. அதற்குமேல் போனால் ஹிந்தி மாளும்.

இந்த நூலை வெளிக்கொணர நான்பட்ட பாடுகள் எனக்குத்தான் தெரியும் . அதிரையின் அறிஞர் அஹமது காக்கா அவர்கள் அவ்வப்போது பதிப்பாளருடன் தொடர்பு கொண்டு விரைவு படுத்தினார்கள். இருந்தாலும் இரண்டு வருடங்களுக்கு மேலாகிவிட்டது.

இதைத் தொடர்ந்து இஸ்லாமியப் பொருளாதார சிந்தனைகள் வெளிவர இருக்கிறது. அனைவரும் துஆச் செய்யும்படிக் கேட்டுக் கொள்கிறேன்.

சகோதரர் கணினித் தமிழ் அறிஞர் ஜெமீல் எம். ஸாலிஹ் அவர்கள், அல்மஹா கல்வி அறக்கட்டளை நிறுவனர் சகோதரர் ஹைதர் அலி, ரஹ்மத் அறக்கட்டளை ஆகியோர் இந்த நூலை ஏராளமாக வாங்கினர். தாராளமாக வழங்கினர். அவர்களுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டு இருக்கிறேன்.

விரைவில் தோப்புத் துறையில் வெளியிட இருக்கிறார்கள். இன்ஷா அல்லாஹ்.

ஒரு அரசியல் இயக்கம் அவர்களின் சார்பாக வெளியிட வேண்டுமென்று கேட்டார்கள். அரசியலுக்குள் சிறைபடுத்திக் கொள்ள விரும்பாத காரணத்தால் மறுத்துவிட்டோம்.

மீண்டும் அனைவருக்கும் நன்றி.

இங்கு கருத்திட்டுள்ள- இன்னும் இந்நூலை வாங்காதவர்கள் விரைவில் வாங்கி ஆதரவு தரும்படிக் கோருகிறேன்.

Anonymous said...

சகோ Dom Hidayath: (online order)

http://rahmath.net/political/791--communalise-tinged-hidden-history.html

ZAKIR HUSSAIN said...

இந்தியாவின் அவலங்களில் ஒன்று முஸ்லீம்களின் தியாகத்தை மறைத்தது. அதற்கு எடுத்த ஆயுதம் மதம் என்ற காரணம்.

இதை வெளிஉலகத்துக்கு எடுத்துக்காட்டியதின் மூலம் இப்ராஹிம் அன்சாரி அண்ணன் அவர்கள் உண்மையான ஜர்னலிசத்து எடுத்துக்காட்டாக இருக்கிறார்கள்.

இந்த புத்தகம் வெளியாக உதவிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.




அதிரை.மெய்சா said...

அஸ்ஸலாமு அலைக்கும். நேரமின்மையின் காரணத்தினால் கருத்துப்பதிய காலதாமதமாகி விட்டது. சகோதரி ஆமினா அவர்கள் இக்கட்டுரைக்கு சரியான மதிப்புரை வழங்கியுள்ளீர்கர்கள்.

அனைத்து மொழியிலும் அவசியம் இக்கட்டுரையை வெளியிட வேண்டும். இக்கட்டுரையை எழுதிய இப்றாகிம் அன்சாரி காக்காவின் முயற்சிக்கு வாழ்த்த வார்த்தைகளில்லை. அருமை.

Ebrahim Ansari said...

தம்பி N. Fath huddeen அவர்கள் வழங்கியுள்ள ஆக்கபூர்வமான ஆலோசனையைப் பற்றி பதிப்பாளரிடம் விவாதித்தேன்.

தமிழக நூல் நிலையம் தொடர்பான அரசுத் துறையுடன் அவர்களது பதிவு இருக்கிறது. முயற்சிகளும் வழக்கம்போல முன்னெடுக்கப்பட்டு இருக்கிறது என்ற தகவலை பகிர்வதில் மகிழ்கிறேன்.

Unknown said...

சலாம் ,

இத்தொடரின் சில் பாகங்கள் மட்டுமே வாசித்துளேன் ,உங்களின் மதிப்புரை முழுமையாக படித்திட ஆவலை தூண்டுகிறது .

அதிரை தாருத் தவ்ஹீத் said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

ஒரு நூலுக்குத் திறனாய்வு எழுதுவதென்பது ப்ளாக்கில் மனம் போன போக்கில் கிறுக்கித் தள்ளுவது போல் எளிதானதன்று.

நம்மில் மிகச் சிலர், பொன்னொத்த நேரத்தைச் செலவழித்து ஆழ்கடலில் மூழ்கி முத்தெடுத்துக் கோத்துக் கொடுக்கின்ற இந்நூல் போன்ற விலை மதிப்பில்லாப் பொக்கிஷங்களைப் பொது வெளியில் அறிமுகப்படுத்துவதன் கட்டாயத்தை சகோ. ஆமினா அவர்களின் இந்தத் திறனாய்வுப் பதிவு நமக்கு உணர்த்துகிறது.

ஒரு நூலை வாங்கிப் படிப்பதற்கு அந்நூலைப் பற்றிய அறிமுகம் / மதிப்பீடு / திறனாய்வு மிகச் சரியான உந்து சக்தியாய் அமையும் என்பது இயல்பு. அந்த வகையில் இந்தத் திறனாய்வுப் பதிவு சமூக வலைத் தளங்களில் பரவலாக்கப்பட்டால் நூலின் பிரதிகளின் விற்பனையைக் கூட்டுவதற்கு உதவும் என்று நம்புகின்றேன்.

Unknown said...

Assalamu Alaikkum

Nice reviews and appreciations.
My heartfelt congratulations to Respected brother Mr. Ebrahim Ansari.

It feels great and inspiring to know about historical contribution and achievements of Muslims in India.

However, it will be greatest to do extraordinary achievements by contemporary world we live now. My hope of uncovering the truth is by doing great ourselves now.!!!

Jazakkallah khair

B. Ahamed Ameen from Dubai

Unknown said...

Assalamu Alaikkum

Nice reviews and appreciations.
My heartfelt congratulations to Respected brother Mr. Ebrahim Ansari.

It feels great and inspiring to know about historical contribution and achievements of Muslims in India.

However, it will be greatest to do extraordinary achievements by contemporary world we live now. My hope of uncovering the truth is by doing great ourselves now.!!!

Jazakkallah khair

B. Ahamed Ameen from Dubai

Yasir said...

கடுமையான உழைப்பில் சமுதாயத்தில் விழிப்புணர்வை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உருவான இப்புத்தகம் நிச்சயமாக இஸலாமிய சமுதாயத்தை பார்க்கும் விசயத்தில் மட்டுமல்ல நடுநிலையாளர்கள் மத்தியிலும் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை மறுக்கவியலாது
அல்லாஹ் உங்களுக்கு எல்லா வளங்களையும் தந்தருள்வானாக ...சரியான மதிப்பிட்டை தந்திருக்கும் ஆமினா முஹம்மத் வாழ்த்துக்கள்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு