Youth !
I am
at the phase of life
where
I'll be asked, "How did I spend my youth?”
To live in the phase
where
we travel to seek knowledge!
To live in the phase
where
we wanted to reap and sow ideas
just to create changes
to benefit people around us
so that
it will please Allah !
To never give up
against injustice!
To go for 'jihad'
to protect our 'Ummah'!
To never feel ashamed
to admit or
to apologize!
To live humbly
To comfort fellow soul!
To be united!
To speak the truth!
To strive hard
to work hard and
to please our parents!
Verily
especially for our mothers
as
heaven goes unreachable
for those
who ignore mother!
As for us women
never to be drawn
into false perception or
to exploited.
Truly
islam honours us!.
To follow
our prophet's way of life!
To lower our gaze
and increase our modesty!
To never fall
into ugly characteristics
like anger
backbite
conspire or to
hypocrisies!
Yes
we strive hard as we live
in that part of phase of life
where
we will be asked
"How did you spend your youth?"
on
the Day of Judgment!!!
Shahnaz Sabeer Ahmed
MBBS III year
|
இளமை!
வாழ்க்கையின் இத்தளத்தை
எட்டியிருக்கும் நான்
‘என் இளமை கழிந்தது எங்ஙனம்’
என வினவப்படுவேன்!
இத்தளத்தில்தான்
வாழ்க்கை
அறிவின் தேடலில் பயணிக்கிறது!
மானுட நன்மைக்கான
மாற்றங்கள் உருவாக்கிட
வாழ்க்கையின் இந்நிலையில்
உதிக்கும் எண்ணங்களை
இறைப் பொருத்தம் நாடியே
மக்களிடம்
விதைப்பதை விரும்பினோம்!
அநீதிக்கு எதிராக
போராடுவதிலும்
நம்பிக்கையாளர்களைப் பாதுகாக்கப்
போரிடுவதிலும் என்றுமே
சமரசம் கொள்ளாதிருக்க
தவறுகள் செய்திருப்பின்
உணர்ந்து
மன்னிப்புக் கேட்பதற்கு
வெட்கப்படாதிருக்க
கண்ணியமாக வாழ
சக மனித சுபிட்சத்திற்காக
ஒருமித்திருக்க
உண்மையை மட்டும் உரைக்க
பெற்றோர் திருப்தியுற
கடினமாகப் போராட
கஷ்டப்பட்டு உழைக்க
அன்னையைப் புறக்கணிப்போருக்கு
சொர்க்கம்
எட்டா கனியாகுமாதலால்
அம்மாவிடம் அபரித
அன்பு கொள்ள
தவறான கண்ணோட்டத்தில்
மூழ்கியோ - நம் பெண்கள்
முடிந்தோ போய்விடாதிருக்க
சத்தியமாக
இஸ்லாம்
நம்மை கெளரவப்படுத்துகிறது!
நம் கண்மணி ரசூலின்(ஸல்)
வழியைப் பின்பற்றி
நம் பார்வைகளைத் தாழ்த்தி
பணிவை உயர்த்தி
கோபம்
புறம்
சதி
நயவஞ்சகம்
என
சுயம் கெட்டுப் போகாமலிருக்க
ஆம்
வாழ்க்கையின் இத்தருணங்களில்
நாம்
கடினமாகப் போராட வேண்டியுள்ளது
தீர்ப்பு நாளில்
கண்டிப்பாகக் கேட்கப்படுவோம்:
‘இளமை கழிந்தது எங்ஙனம்’
என்று!
தமிழில்: சபீர் அஹ்மத் அபுஷாஹ்ருக்
(Thanks: M.Thajudeen)
|
5 Responses So Far:
அஸ்ஸலாமு அலைக்கும். சற்றே கடந்து விட்ட இளமை கடந்த பாதையை உற்று பார்க்கிறேன்.சரியாகத்தான் கடந்து இருக்கு ஆனால் சில தடங்கள் நிகழ் காலத்தில் தான்.
இளமை காலம் சிந்தித்துப்பார்த்தால் அது ஒரு ஊ(த்து)ற்று, நாம் உத்து(உற்று) பார்த்த யூத் பீரிடும் மகிழ்சி ஊற்றாகவும் ,அதீத வேகம் கூடிய செயல்பாட்டின் அடித்தளமாகவுமே இருந்திருக்கு! அந்த பருவத்தில் கடக்கும் போது செய்த சிறு விளையாட்டு தவறுகளைத்தவிர நன்மையின் பக்கமே இருந்திருப்பதில் சந்தோசமே! என் கவலையெல்லாம் இளமையை கடந்த நாம் கடைசிவரை நல்வழிக்கடந்து அல்லாஹ்வை அடையனும் .ஆமின்.
மாஷா அல்லாஹ், மகளுக்கு இந்த வயதில் இந்த உன்னதமான சிந்தனையை வழங்கிய எல்லாம் வல்ல அல்லாஹ்விற்கே அனைத்துப் புகழும்.
எல்லோரும் சிந்திக்க வேண்டிய பதிவு.
மருமகளுக்கு வாழ்த்துக்கள். தமிழில் எழுதிய அவரது தந்தையை பாராட்டி பாராட்டி ஒரு அயர்வு ஏற்பட்டு இருந்த நிலையில் மகளின் கவிதை புத்துணர்வை ஊட்டி இருக்கிறது.
நானும் கணக்குப் போட்டுப் பார்க்க ஆரம்பித்து விட்டேன். எனது பிராயத்தில் இருப்பவர்கள் இந்தக் கணக்கை எழுதிப் பார்க்கத் தொடங்க வேண்டும்; தயாராக வைத்துக் கொள்ளவேண்டும். கவிதை அதைத் தூண்டி விடுகிறது.
வாழ்த்துகிறேன். வரவேற்கிறேன்.
//To never feel ashamed
to admit or
to apologize!//
இந்த வரிகளில்
பச்சை விளக்கு எரிகிறது.
ஒளிமயமான எதிர்காலம் என் கண்ணில் தெரிகிறது
இந்த உலகம் பாடப்போகும் பாடல் என் காதில் விழுகிறது.
People who have gone through the "Inner self Journey " only can write these kind of poems.
// just to create changes
to benefit people around us
so that
it will please Allah ! //
இந்த வரிகள் "வாழும் காலத்தில் மற்றவர்களுக்கு பிரயோஜனமாக வாழ்வதே சிறந்தது " எனும் கொள்கை உயர்வாக தெரிகிறது.
Dr Shahnaz has amazing wisdom...All the best
Post a Comment