அவனுக்கு வயது 22. மாநிறம். . அதிர்ந்து பேசமாட்டான். மிக அமைதியானவன். சொந்த ஊர் என்னவோ திருவண்ணாமலைதான். ஆனால் வசிப்பது வறுமைக்கோட்டுக்கு கீழே. இந்த கோட்டிலிருந்து விலகி தன் குடும்பத்தை ஒரு நல்ல நிலைமைக்குக் கொண்டுவந்துவிட வேண்டும் என்கிற வெறி. பெரும் முயற்சிக்குப் பின்னர், துபாயில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் அவனுக்கு வேலை கிடைத்தது. மாதச் சம்பளம் இந்திய ரூ.10000. பிறந்தது முதல், அதிகபட்சம் இரண்டு நாட்களுக்கு மேல் தன் பெற்றோரை பிரிந்ததில்லை அவன். பணியில் சேர்ந்த பின் 2 வருடத்துக்கு ஒரு முறைதான் வீட்டுக்குப் போக முடிந்தது. இந்த பிரிவு அவனை வருத்தமடையச் செய்தாலும், தன் குடும்பம் நல்ல பொருளாதார நிலைமைக்கு உயர இது அவசியம் என்று கருதி தன்னைத் தானே தேற்றிக்கொண்டான். பணம்..பணம்..பணம்..இது ஒன்றே முக்கியம். குடும்பத்தின் வறுமை ஒழிய தன் கவனம் முழுதும் பணம் சம்பாதிப்பதிலேயே இருக்க வேண்டும் என்பது அவனுடைய லட்சியம், வெறி, சித்தாந்தம், கொள்கை, கோட்பாடு எல்லாமே. . காலை 6:30 மணிக்கு அவனுடைய ஷிஃப்ட் துவங்கும். ஆறு மணிக்கு முன்னே அலுவலகத்துக்குச் சென்றுவிடுவான். அன்று திங்கள் கிழமை. பனி விலகாத காலை நேரம். ஆறாவது தளத்தில் உள்ளது அலுவலகம். தரைத் தளத்தில் லிஃப்ட்டினுள் நுழைந்து 6ஐ அழுத்தினான். ஆறாம் தளம் சென்றடைந்தவுடன் லிஃப்ட் கதவு திறந்தபோது கீழே விழுந்தது அவனுடைய உயிரற்ற உடல்! அங்கிருந்த செக்யூரிட்டிகள் அவனுடைய டீமுக்கு தகவல் அளித்து அவனை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல ஏற்பாடு செய்தனர். மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர் மறுநொடியே சொன்னார், "ஸாரி ஹி ஈஸ் நோ மோர்". 'டெட் ஆன் அரைவல்' என்று ரிப்போர்ட்டில் பதிவு செய்தார். பின்னர் அவனுக்கு நெருங்கிய நண்பர்களிடம் விசாரித்தபோது தெரியவந்தது. அவனுக்கு புகை, குடி என்று எந்த பழக்கமும் இல்லை. ஒவ்வொரு மாதமும் அவனுக்கென்று இந்திய ரூ.3500 எடுத்துக்கொண்டு மீதி பணத்தை தன் குடும்பத்துக்கு அனுப்பிவிடுவான். அந்த 3500ல் போக்குவரத்து, அலைபேசி, உணவு ஆகியவற்றிற்கான செலவுகள் அடங்கும். செலவைக் கட்டுப்படுத்த அவன் மேற்கொண்ட ஒரு முடிவு. தினமும் காலை உணவைத் தவிர்த்து ஒரு நாளைக்கு இரு வேளை மட்டுமே உண்ணுவது. இந்த பழக்கம் வெகு நாட்களாய்த் தொடர்ந்து உடலுக்குள் வாயு உருவாகி அது இதயத்திற்குச் செல்லும் குழாயை பாதித்து......22 வயதில் மாரடைப்பு! இது ஏதோ கற்பனையாக எழுதப்பட்ட வரி அல்ல. அவனுடைய உணவு பழக்கத்தை அவன் நண்பர்கள் கூறக்கேட்டு அறிந்த பின் மருத்துவர் சொன்னது. பணம் ஒன்றையே பிராதானமாகக் கருதி பரபரவென பறந்துகொண்டிருக்கும் இந்த யுகத்தில், நம்மில் பெரும்பாலானோர் காலை உணவைத் தவிர்த்துவிடுகிறோம்/குறைத்துவிடுகிறோம். பெரும்பாலும் நாம் சொல்லும் காரணம்.."டைம் இல்ல". சாப்பிடுவதற்குக் கூட நேரமில்லாமல் அப்படி என்ன கிழித்துவிடப் போகிறோம்? இதற்கு மேல் இதைப்பற்றி நீங்களே சொல்லுங்கள்! பி.கு: நானும் இந்த மடத்தனமான காரணத்தைக் காட்டி பல நாட்கள் காலை உணவைத் தவிர்த்திருக்கிறேன். அவன் மரணம்...எனக்கொரு பாடம். அன்றிலிருந்து என்னுடைய காலை உணவு நேரம் 8 அல்லது 8:30க்குள். காலையில் சாப்பிடும் உணவை எக்காரணம் கொண்டும் தவிர்க்கவே கூடாது; எட்டு அல்லது பத்து மணி நேரம் இடைவெளிக்கு பின், நம் வண்டியை ஓட்ட "பெட்ரோலாக" தேவைப்படும் உணவு அது. ---Azeezudheen சகோதரர் சாகுல் கேட்டதுக்காக...... |
Photos: Thanks to Sisiter Jaleela's Blog and Sister Malikka's Blog
24 Responses So Far:
காலையில உணவா ? சுடச் சுட ஈரல் இரத்தம் காயுறதுக்குள்ள / கறி பெறட்டல் / இடியப்பம் / ரொட்டி இதுதானே... ஓ ஊரில் கிடைக்குமே அதுதானே !
அதெல்லாம் பகல்ல கூட இங்கே கிடைக்காதே, அதெல்லாம் கணவுதானோ ? சரி சரி கிடைக்கிறதை கிடைக்கின்ற நேரத்தில் கொட்டிகிட்டு ஓடுகிறதே வாழ்க்கை.... இங்கே !!
நானும் பல நாட்கள் காலை (சிறிதளவுதான்) உணவை சாப்பிடாமலே இருந்திருக்கிறேன் (வேலைக்கு ஓடும் அவசரமும் / செய்து சாப்பிட சோம்பேரித்தனமும்).... பட்டதும் அட்லீஸ்ட் இப்போ சாப்பிடுகிறேன்.. நீங்களும் சாப்பிடுங்க. (யாரும் சாப்பிட வாங்கன்னு கூப்பிடலையேன்னு வருத்தப்பட கூடாது என்ன சரியா !)
நல்ல விழிப்புணர்வுக் கட்டுரை!
அஸ்ஸலாமு அலைக்கும் நானும் ,என் சகோதரர்களும் நைனா தம்பிகாக்காவும் சென்னையில் இருக்கும் போது இந்த மடத்தனமான காரணத்தைக் காட்டி பல நாட்கள் காலை உணவைத் தவிர்த்திருக்கிறோம்.
உ(எ)ண்ணவேண்டியது அவசியம்.
காலை உணவுப் பற்றிய விழிப்புணர்வு பகிர்வு., இளைஞர்களுக்கு நல்ல விருந்து
இத் தருனத்தில் ஒரு ஜெர்மானிய பழமொழியை நினைவுகூறவேண்டும்
காலையில் அரசனைப்போலும் (rich food), மாலையில் இளவரசியைப்போலும் (diet food), இரவில் ஓர் ஏழையைப்போலும் (something for nothing) உண்ணவேண்டும். என்பதே
ஆனால் என்னசெய்ய வெளிநாட்டில்/வெளியூரில் நம் மக்களின் வாழ்க்கையை நோக்கினால் இந்த பழமொழிக்கு மாற்றமாகத்தானே இருக்கும்.
நான் கல்லூரிவிடுதியில் தங்கி படித்த நேரத்தில் சரியான நேரத்தில் எழுந்து குறிப்பிட்ட நேரத்தில் உணவு உட்கொள்ளாததால் எனக்கு அல்சர் போன்ற நோய்கள் ஏற்பட்டது, இதுபோன்றகாரணங்களினால் ஒரேஇரவில்
அப்பன்டிஸ் அய்ட்ரிக்ஸ் என்ற அறுவை சிகிச்சை செய்யவேண்டியதாகிவிட்டது. சிலமணிநேரம் காலதாமதமகினால்
என்நிலைமையும் பரிதாபமாகத்தான் ஆகியிருக்கும். அப்பொழுது விடுதி நன்பர்கள் என்னை ஒவ்வொரு மருத்துவமைக்கும் அலைத்து சென்றனர் , எல்லாமருத்துவர்களும் உடனே அந்த குடல்வாழ்வை உடனே அகற்றவேண்டும் என்று அறிவுரித்தினர். அல்லாஹ்வின் உதவியாலும், மருத்துவர் மற்றும் நன்பர்கள் ஒத்துழைப்பாலும் குறித்தநேரத்தில் அந்த தேவையில்லாத வாழ்வு அகற்றப் பட்டு., என் வாழ்க்கை நீட்டிக்கப்பட்டது !
அஸ்ஸலாமு அலைகும்.குடல் வால்வினால் பயனேதும் இல்லை யென்று தான் இவ்வளவு காலமாய் நம்பபட்டு வந்தது.ஆனால் அது தவறு என்று சமீபத்தில் மருத்துவ ஆராய்சியாளர்கள் தெருவித்துள்ளதாவது, உடலுக்குத்தேவையான நோய் எதிர்ப்பு சக்தியான வெள்ளை அணுக்கள் உற்பத்திக்கு அந்த குடல்வால்வுகளே பெரிதும் உதவுவதாக. எல்லாம் அரிந்தவன் அல்லாஹ்வே(அல்லாஹுக்கே எல்லா புகழும்).
இறைவனின் படைப்பில் எதுவும் தேவை இல்லாதது இல்லை அனைத்தும் அவசியமானதுதான் அதான் தேவைகள் நம் அறிவிற்கு எட்டுவதற்கு தான் தாமதம் ஆகிறது
நல்ல பகிர்வு சாப்பாடு விஷயம் என்றால் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டிய விடயம் அல்லவா ,
என்ன போட்டோவில் இரண்டு இட்லி ஒரு வடையை மட்டும் வைத்தால் போதுமா வட்டுலபம் கடல்பாசி நுரையீரல் சுவரொட்டி போன்ற போட்டோகளை யல்லவா போடவேண்டும்
சகோதரர் சாஹுல் கேட்டதுக்காக புதிய சாப்பாட்டு புகைப்படம் சேர்க்கப்பட்டுள்ளது.
வட்லப்பம்,நுரையீரல், சுவரொட்டி புகைப்படம் கிடைகல முடிஞ்சா யாராச்சும் அதிரைநிருபருக்கு புகைப்படம் மட்டும் அனுப்பிவையுங்கள். பிலிஸ்...
// வட்லப்பம்,நுரையீரல், சுவரொட்டி புகைப்படம் கிடைகல முடிஞ்சா யாராச்சும் அதிரைநிருபருக்கு புகைப்படம் மட்டும் அனுப்பிவையுங்கள். //
யாருக்கும் வேலையில கவனம் ஓடாதே !
காலை உணவை தவிர்ப்பவர்கள் சாப்பிட வேண்டும் என நினைக்கும் போது சாப்பிட முடியாத பல உடல்நலக்குறைவுகளுக்கு சொந்தம் கொண்டாடும் சூழ்நிலை ஏற்படும்.
இதில் GULF ல் சிலர் 'எனக்கு காலை சாப்பாடெல்லாம் டூட்டியினாலே சாப்பிட முடியாது..ஸ்ட்ரைட்டா லன்ச்தான் என பெருமையடிக்கும் போது .... அப்படியே சீனெ கட் பன்றோம்...அடுத்த frame லெ டோக்கன் நம்பர் சொல்லி அழைக்கும் நர்ஸ்..... லொகேசன் தஞ்சாவூர் / சென்னை என பட்ஜெட்க்கு தகுந்தமாதிரி வைத்துக்கொள்ளவும்
ZAKIR HUSSAIN
ஊரில் மட்டும் என்னாவாம், காலையில சாப்பிடம வாங்க ஒரு டெஸ்ட், அப்புறம் சாப்பிட்டுவிட்டு வாங்க இன்னொரு டெஸ்ட்(டுன்னு) தானே செய்றாங்க ! அங்கே சாப்பிடதனாலா ? இல்லை இங்கே சாப்பிடாததினாலா ?
//காலை உணவை தவிர்ப்பவர்கள் சாப்பிட வேண்டும் என நினைக்கும் போது சாப்பிட முடியாத பல உடல்நலக்குறைவுகளுக்கு சொந்தம் கொண்டாடும் சூழ்நிலை ஏற்படும்.//
நல்ல சிந்தனையான கருத்து.
நோய் வருவதற்கு முன் நாம் உறுப்படியா சாப்பிடுவதில்லை...
நோய் வந்த பின் மருத்துவர் உறுப்படியா சாப்பிடவிடுவதில்லை....
Awarness article good...
பத்துக்கறி சாப்பாட்லெ கொத்து கறியெ காணோம்? மீன் சாப்பாடு அதாங்கெ கடல் உணவு சாப்பாடு எவ்ளோ வேண்டுமானாலும் சாப்பிடலாமுங்கெ...அதில் கொலஸ்ட்ரால் இல்லை. எல்லாம் புரோட்டீன்களும், புரதச்சத்தும் நெறயா அதுலெ ஈக்கிறதா சொல்றாங்கெ....அதுனாலெ தான் கடெத்தெருவுலெ கடப்பாசி மாதிரி ஒரு சின்ன துண்டு ரெண்டு வெட்டி போட்டுக்கிட்டு கொடுவா கூறு அம்பதுங்கிறானுவோ..
ஊருக்குப்போனா என்னான்டு தெரியலெ? சாப்பாட்டுலெ கண்ட்ரோல் பண்றது ரொம்ப கஸ்டமான விசயமா ஆகிப்போவது நம்ம எல்லாருக்கும்...ஆட்டின் ஒவ்வொரு ஸ்பேர் பார்ட்சிலும் (அதாங்கெ ஈரல், மாங்காய், செவரொட்டி, கிட்னி, நுரையீரல், கண்ணு, காது, மூக்கு, மூளை, நாக்கு, கொடலு) நெறய கொலஸ்ட்ரால் குடி கொண்டு இருக்கிறதா ரொம்ப பேரு சொல்றாங்கெ. நோய்கள் உருவாவதற்கு அதுவே மூலதனமாக அமைந்து கடைசியில் மருந்துகடைகளை ரேசன் கடைமாதிரி ஆக்கிபுடிச்சி.
எங்கெ கெடெக்கெனுமோ அங்கெ மேக்கொண்ட சாமானுவொ கெடெக்கிறது இல்லெ...அதாங்கெ நாமெல்லாம் கடினமாக ஒழெக்கிறோம்லெ (அரபு நாடுகள், மேற்கத்திய நாடுகள்) இங்கெ அதுமாதிரி கெடெச்சா ஒழெக்கிறெ மாட்டுக்கு நல்ல தீவனம் போட்ட மாதிரி ஒடம்பு சூட்டிக்கையா இருக்கும். நாசொல்றது சரியா? தப்பா?
என்ன தான் இருந்தாலும் வயது முப்பத்தஞ்செ தாண்டியாச்சிண்டா கொஞ்சம் வாயெக்கட்டணுமுங்கெ..இல்லேண்டா தெரு முச்சூடும் ஆஸ்பத்திரியெ கட்டணுமுங்கெ...
செயற்கை கலரில் (வண்ண,வண்ணமாக) உருவாக்கப்படும் திண்பண்டங்கள் திங்கிறதெ முற்றிலும் தவிர்க்கணுமுங்கெ.. காரணம் புற்று நோய் வர்ரதுக்கு அதுவும் ஒரு முக்கிய காரணமுண்டு கண்டுபுடிச்சி சொல்றாஹெ...
மொவனே...நீ என்னெத்தெ சொல்றது நா என்னெத்தே கேக்குறதுண்டு சொன்னியண்டு வச்சிக்குங்கெ....அப்புறம் ஆஸ்பத்திரியிலெ தான் அடிக்கடி பாக்குற மாதிரி ஈக்கும்...
பழைய எண்ணெய்ப்பலகாரங்கள் (அதாங்கெ பல தடவெ பொரிச்சி/வறுத்து அதே எண்ணெயெ திரும்ப, திரும்ப யூஸ் பண்ணி அது கலரு மாரி கண்ணங்கறேண்டு க்ருட் ஆயில் மாதிரி ஆகுற வரைக்கும் விலைவாசியை காரணம் காட்டி அதை விடுவதில்லை என்ற போக்கு தான் பரவலாக வீடுகளிலும், வணிக நிறுவனங்களிலும் கடைபிடிக்கப்படுகின்றன) அதிகம் பயன்படுத்துவதனாலும் கேன்சர் வருவதாக புதிய மருத்துவ ஆய்வு நமக்கெல்லாம் கொடலில் புளியைக்கரைக்கும் வண்ணம் கூறியுள்ளது.
இன்னும் நெரயா சமாச்சாரங்கள் இருக்குதுங்கெ.. சகோ. ஜாஹிர், சாகுல், ஹாலிது, தஸ்தகீர் போன்றவர்கள் தங்கள் கட்டுரை மூலமோ அல்லது பின்னூட்டம் மூலமோ தொடர்வார்கள் என்று எதிர்பார்க்கின்றேன்.
மஹ்ரிப்பு தொழுகைக்கு நேரமாச்சுங்கெ...து'ஆச்செய்ங்கெ...
வரட்டா....
மு.செ.மு. நெய்னா முஹம்மது
apdye oru parcel
//மஹ்ரிப்பு தொழுகைக்கு நேரமாச்சுங்கெ...து'ஆச்செய்ங்கெ..// கண்டிப்பாக !
அப்புறம் இஷாவுக்கு பின்னர் மேலே சொன்னதில் எதாவது சாப்பட்டில் இருக்கும்(தானே) MSM(n)
காலையில சாப்பிடுவீங்களா இல்லயான்னுதான் கேட்டாங்க, அதுக்கு அந்த ஆட்டின் ஸ்பேர் பார்ட்ஸ் படம் வரைந்து குறிப்பா !!! (சபாஷ்)
பள்ளிக்கூட நாட்களில் மறக்க முடியுமா அன்பிற்குறிய அலியார் வாத்தியார் அவர்கள் அதிகமாக வரலாறு பாடம் எடுக்குக்போது அடிக்கடி (திட்டலோடு)கேட்பது "ஏண்டா காலையில சாப்பாட்டை மறப்பியா அத மட்டும் டைமுக்கு கொட்டிக்குவே ஒன்னு குறைஞ்சா சும்மா விடுவியா? ஆனா மேப் புக்கை மட்டும் மறந்துட்டு வருவே, பெரியமனுசன் இங்க வந்து பெஞ்சுமேல ஏற தூக்கிவிடனும்"
அலியார் வாத்தியார் அவர்கள் பாடம் எடுக்குக்போது அடிக்கடி (திட்டலோடு)கேட்டது இரும்பின் பயன்களை கூறு ?
மாணவர் தெரியவில்லை சார் !!!! அலியார் சார் ஏண்டா ரயில் உன் முதுகுளையா ஓடுது உங்க வீட்டு தோச கல்லு தங்கதுலைய உள்ளது .
என்ன இப்படி அசத்தலான சாப்பட்டு போட்டோவை போட்டு போட்டோவை பார்க்கும் போதுஎல்லாம் கி போர்ட் நனைந்து விடுகிறது வாணி ஊத்தி
சாஹுல் காக்கா இன்னிக்கு வெள்ளிக்கிழமை அங்கே பிரியானிதானே?
போட்டேவுலத் தான் எப்போதும் நல்ல சாப்பட்லாம் கிடைக்கும்,,,
சப்ஜெப்ட் சாப்பாட்லேருந்து படிக்கிற பக்கம் போயிட்டுல இருக்கு, இரயிலடி, ஏரிக்கரை, இராஜாமடம் பாலம், இரயில்வே கேட், பூட்டிய பள்ளிக் கூடம் இவைகளை அசைபோடுங்க சாஹுல்...
நல்ல தகவல்.
Breakfast is the most important meal of the day. Thanks.
Post a Comment