அல்லாஹ்வின் திருபெயரால்..
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
புனிதமிக்க ரமளான் மாதம் குதூகலத்துடன் தொடங்கிவிட்டது, அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும்.
கடந்த 14.07.2012 அன்று அதிரை சித்தீக் பள்ளியில் மிகச் சிறப்பாக நடந்து வரும் மக்தப் மதர்சாவின் ஆண்டு நிறைவு விழா மற்றும் மாணவர்களின் தனித் திறன் காட்டும் மார்க்க நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
வினாடிவினா, கிராஅத், பயான் போட்டிகள் மிகச் சிறப்பாக நடைபெற்றது. போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது, போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பெற இயலாத மாணவர்களுக்கு ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டது.
முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர்களில் முதல் மூன்று இடங்கள் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும், கேடையமும் வழங்கப்பட்டது.
முக்கிய விடையமாக தவறாமல் ஐவேளை தொழுகைக்கு வருகை தந்த மாணவன் இம்ரானுக்கு சிறப்பு பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது.
மாணவர்களுக்கு பரிசுகளை அப்துல் காதர் ஆலிம் அவர்கள் வழங்கி ஆண்டுவிழா நிகழ்ச்சியை சிறப்பித்தார்கள்.
பரிசளிப்பு நிகழ்வுக்கு முன்பு ஹைதர் அலி ஆலிம் அவர்கள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான சிறப்பு சொற்பொழிவு ஆற்றினார்கள்.
சிறப்பாக நடந்தேரிய நிகழ்வுகளின் ஒலிப்பேழையாக, மாணவச் செல்வங்களின் அழகிய குரலில் கிராஅத் மற்றும் மார்க்க சொற்பொழிவுகளின் ஒரு பகுதியை கேட்டு மகிழுங்கள் இன்ஷா அல்லாஹ்.
9 Responses So Far:
சிறுவயது மக்தப் பள்ளிக்கால நினைவுகளை உசுப்பி விடும் அருமையான நிகழ்வு இது !
மாஷா அல்லாஹ் சிறார்களின் தனித் திறன் காட்டும் நிகழ்வுகள் அனைத்தும் அருமை !
அதில் பங்கெடுத்த அனைத்து மாணவர்களுக்கும் அவர்களின் ஆசிரியர்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டும் வாழ்த்துக்களும்.
இன்னும் மென்மேலும் ஜொலிக்க வேண்டும், மக்தப் மதர்ஸாக்களின் சேவை சிறக்க வேண்டும் ஓவ்வொரு பள்ளிவாயில்களிலும் இதன் பனி தொடர வேண்டும் இன்ஷா அல்லாஹ்....
குறிப்பாக இதில் ஆவர்முடன் பங்கெடுக்க வைத்த மாணவர்களின் பெற்றோர்களுக்கும் வாழ்த்துகளும் பாராட்டும்... !
அஸ்ஸலாமு அலைக்கும்
அனைவருக்கும் இனிய ரமளான் வாழ்த்துக்கள்
அல்லாஹ் இந்த மாணவர்களைக் கொண்டு எதிர்காலத்தில் நம்மூரில் உள்ள கேடுகெட்ட அனைத்து அனாச்சாரங்களையும் ஒழிக்க உதவி செய்வானாக இவர்களுக்கு கற்ப்பித்த ஆசிரியர் அனைவருக்கும் அல்லாஹுடைய உதவி கிடைக்கெட்டுமாக ஆமீன்
வஸ்ஸலாம்
அஸ்ஸலாமு அலைக்கும்
அனைவருக்கும் இனிய ரமளான் வாழ்த்துக்கள்
அல்லாஹ் இந்த மாணவர்களைக் கொண்டு எதிர்காலத்தில் நம்மூரில் உள்ள கேடுகெட்ட அனைத்து அனாச்சாரங்களையும் ஒழிக்க உதவி செய்வானாக இவர்களுக்கு கற்ப்பித்த ஆசிரியர் அனைவருக்கும் அல்லாஹுடைய உதவி கிடைக்கெட்டுமாக ஆமீன்
ஆமீன்.
வஸ்ஸலாம்
அஸ்ஸலாமு அலைக்கும்
அனைவருக்கும் இனிய ரமளான் வாழ்த்துக்கள்
அல்லாஹ் இந்த மாணவர்களைக் கொண்டு எதிர்காலத்தில் நம்மூரில் உள்ள கேடுகெட்ட அனைத்து அனாச்சாரங்களையும் ஒழிக்க உதவி செய்வானாக இவர்களுக்கு கற்ப்பித்த ஆசிரியர் அனைவருக்கும் அல்லாஹுடைய உதவி கிடைக்கட்டுமாக ஆமீன்
ஆமீன்.
வஸ்ஸலாம்
பங்கெடுத்த அனைத்து மாணவர்களுக்கும் அவர்களின் ஆசிரியர்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டும் வாழ்த்துக்களும்.
இன்னும் மென்மேலும் ஜொலிக்க வேண்டும், மக்தப் மதர்ஸாக்களின் சேவை சிறக்க வேண்டும் ஓவ்வொரு பள்ளிவாயில்களிலும் இதன் பனி தொடர வேண்டும் இன்ஷா அல்லாஹ்...
ஏழு வயதுக்குள் நாம் குர்-ஆன் ஓத, தொஉழுகைப் பயிற்சி பெற, நோன்பு பிடிக்க இந்த பள்ளிவாசல் மக்தப்-மதரஸாக்கள் தான் நம்மைச் செம்மைப் படுத்தின; இம்மைக்கும் மறுமைக்கும் நன்மை பயக்கும் மார்க்கத்தை உணரவும்; வாழ்க்கையில் அவற்றை முழுமையாக ஈடுபடுத்தத் தாயை விட மிக்கக் கருணையுடன்; தந்தையை விட மிகக் கண்டிப்புடன் வழி நடத்திய நம் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய “உஸ்தாத்”மார்களை இந்நிகழ்ச்சியின் காணொளி/ஒலிப்பேழை எம் சிறு பிராயத்தின் நினைவு நாடாக்களைச் சுழற்றி விட்டன; பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றி; ஜஸாக்கல்லாஹ் கைரன்.
மீண்டும் நம் பேரன்கள் / பேத்திகள் காலத்தில் இம்மதரஸாவுக்குச் சென்று விட்டுத்தான் பள்ளிக்கூடம் போக வேண்டும் என்ற “அந்த காலம்”/ பொற்காலம் மலராதா> என்ற ஏக்கம் வந்து விட்டது!
சித்தீக் பள்ளி உஸ்தாத் மார்கள் மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்.
Post a Comment