Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

ஒரு புத்தகம் பிறக்கிறது - தொடர் - 7 26

அதிரைநிருபர் பதிப்பகம் | September 22, 2013 | , , ,


H.G.wells ஆங்கில எழுத்துலகில் விஞ்ஞானக் கற்பனைக் கதைககள் எழுதியவர்களில் இவரும் ஒருவர். இவரின் Time Machine, wars of the World, Food of the Gods, Invisible Man ஆகியவை ஆங்கில இலக்கிய பீடத்தை அலங்கரித்த ஆபரணங்களில் அடங்கும். Outline of History என்னும் வரலாற்று நூல் ஒன்றும் இவருடைய கை வண்ணம் பட்டு பிறந்தது. இவர்எழுதிய பலபுத்தகங்கள் பள்ளி பாடநூல் வரிசையில் இடம் பிடித்தன.H.G.wellsஎழுதிய Outline of History யில் பலநூறு ஆண்டுகளுக்கு முன் அதிராம்பட்டினத்து இஸ்லாமீயர்கள் பாய்மரக் கப்பலில் எகிப்து நாட்டுக்கு சென்று அங்கு பல ஆண்டுகள் வாழ்ந்த வந்ததாகவும் பின் அந்நாட்டை ஆண்ட மன்னனின் கொடிய ஆட்சிக்கு பயந்து மீண்டும் பாய்மரக் கப்பலிலேயே அதிராம்பட்டினம் திரும்பிய வரலாறு குறிப்பு இருப்பதாக http://adiraihistory.blogspot.ae/2010/09/blog-post_29.html என்ற வலைப்பூவில் சகோதரர் ஏ.ஆர்.ஹிதாயத்துல்லாஹ் எழுதிய 'ஒரு பட்டினத்தின் கதை' புத்தகத்திலிருந்து பதிந்திருந்தார்கள்.

Allex Halley என்பவர் எழுதிய The Roots என்ற ஆங்கில மொழி புத்தகத்தை "வேர்கள்" என்ற பெயரில் இவர் மொழியாக்கம் செய்து வெளியிட்டு இருப்பதாகவும் படித்த நினைவு. அந்த வலைத்தளமும் அதிராம்பட்டினம் சார்ந்ததாகவே இருந்தது. 

Carl Jung [1875-1911] சுவீடன் நாட்டுக்காரர். இவர் ஒரு மனோவியல் ஆய்வாளர் Sigmand Freud “குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான்” என்று சொன்ன ஆசாமி இவர்தான். இவரோடு கூட்டாக கொஞ்ச நாள் ஆய்வு நடத்திய பின் Freud-டின் கருத்துக்களில் உடண்பாடு கொள்ளாமல் விலகி தனியாக மனோவியல் ஆய்வை தொடங்கினார். அதன் விளைவு Psychology of Unconscious‘’ சுய உணர்வு இழந்த மனோநிலை’’ என்ற ஒரு புத்தகம் எழுதினார். அதில் தன் ஆய்வு முடிவுகளை வெளியிட்டார். இது மனோவியல் துறையில் ஒரு வேத நூலாக கருதப்படுகிறது.

George Bernard Shaw [1856-1950] இவர் ஒரு பழுத்த சோஷலிச வாதி. Fabian Party ஆதரவாளர். 'அறிஞர் பெர்னாட்ஷா’ என்றே எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படும் பிரிட்டனில் பிறந்த இவர் ஒரு சித்தாந்தவாதி, எழுத்தாளர். 'Arms and the Man', 'The Devil’s Disciple', 'Candida, Caesar and Cleopatra', 'The Apple cart' நாடகங்களை எழுதி புகழ் பெற்றவர். இலக்கியத்துக்கான நோபல் பரிசு 1925லும் ஆஸ்கார் விருது 1938லும் பெற்றார். இந்த இரண்டு விருதுகளையும் பெற்ற ஒரே ஒரு நபர் அறிஞர் பெர்னாட்ஷா மட்டுமே! இவருடைய நாடகங்கள் கதைகள், கட்டுரைகளில் சமுதாய சீர்திருத்த கருத்துகள் மேலோங்கி நிற்கும், இவர் சமூக சீர்திருத்த  சிந்தனை கொண்டவர்.

1950-ஆம் ஆண்டு இவர் உலக வாழ்விலிருந்து விடை பெற்றுச் சென்றார். "அவர் கைபட்டு மை தொட்டு எழுதிய "பேனா" என்னை கைவிட்டு  போனானே என் காதலன்!’’ என்று கண்ணீர் விட்டு கதறி அழுதது. உலகில்  மனிதன் பிறந்த நாள் முதல் மறைந்த நாள் வரையிலான நாட்களை விரல் விட்டு எண்ணி சரித்திரம் அவனுக்கு இடம் கொடுப்பதில்லை. உலகில்அவன் ’செய்த சாதனை என்ன?’’ என்ற கேள்விக்கு கிடைக்கும் விடையை ஆரஅமர எடை போட்டு பார்த்த பின்தான், சரித்திரக் கோட்டை கதவுகள் திறக்கும். சாதனையாளர்களை தவிர வேறு யாரையும் அது அனுமதிப்பதில்லை. அந்தக் கோட்டையின் கதவுகள் பெர்னாட்ஷாவுக்கு திறந்தே இருந்தது.

பிரபல திரைப்பட நடிகை எலிசபெத் டைலர் பெர்னாட்ஷாவை ஒரு பார்ட்டியில் சந்தித்தபோது. 

"மிஸ்டர் பெர்னாட்ஷா! நீங்கள் ஒரு அறிவாளி! நான் ஒரு பேரழகி. நீங்களும் நானும் கல்யாணம் செய்து கொண்டால் நமக்கு பிறக்கும் பிள்ளை உங்களைப் போல் அறிவும் என்னைப் போல் அழகும் உடையதாய்இருக்கும்அல்லவா? ஆதலால் நாம் ஏன் திருமணம்செய்து கொள்ளகூடாது ?"  என்றாள்.

"ஆமாம்! நீ சொல்வதும் சரிதான். ஆனால், என்னைப் போல அழகும் உன்னை போல அறிவும் கொண்ட பிள்ளை பிறந்து விட்டால் என்ன செய்வது?" என்றார்.

அங்கிருந்த எல்லோரும் "கொள்" என்று சிரித்தார்கள். இப்படி  நகைச்சுவைபட பேசுவதில் பெர்னாட்ஷா வல்லவர்.

Dr. Zhivago இது ஒரு எழுத்தாளர் பெயர் என்று நினைத்து விடாதீர்கள். 1957களில் உலகம் முழுதும் பரபரப்பு காட்டிய நோபல் பரிசு பெற்ற புத்தகம். போரிஸ் பாஸ்டர்னாக் Boris Pasternak ரஷ்ய எழுத்தாளர். இவர் எழுதிய ‘டாக்டர் சிவாகோ’ என்ற புத்தகத்திற்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. ஆனால் 'பரிசை' வாங்க கூடாது’ என்று ரஷ்யா கம்யூனிச அரசு ஆசிரியருக்கு தடைபோட்டது.

1905-லிருந்து இரண்டாம் உலகப் போர் வரையிலான ரஷ்யாவின் பின்புலத்தை கதை மையமாக கொண்டு உருவான  ‘டாக்டர் சிவாக்கோவை’ வெளியிட ரஷ்யஅரசு தடை போட்டது. 

பின்னர் கதையின் கையெழுத்துப் பிரதிஒன்று இத்தாலி மிலான் நகருக்கு கடத்தப்பட்டு 1957ஆண்டு "டாக்டர் சிவாகோ" வெளி  உலகம் வந்தார்.இந்த புத்தகம் வாசகர் வட்டத்தில்பெரும் வரவேற்ப்பை பெற்று விற்பனையில் சக்கை போடு போட்டது.

ரஷ்ய அரசு புத்தக ஆசிரியருக்கு தொல்லை கொடுக்க ஆரம்பித்தது. ‘இம்சை’ தாங்க முடியாத ஆசிரியர் போரிஸ் பாஸ்ட்டர் நாக்கை 1960–ம் ஆண்டில் சுவாசப்பை புற்று நோய் மண்ணகம் விட்டு வின்னகம் கொண்டு  சென்றது.

19-ம் நூற்றாண்டின் ரஷ்யாவின் சிறந்த இலக்கிய படைப்பாளர்களில்  Foydor Dostoevisky என்பவரும் ஒருவர். Crime and Punishment  -‘குற்றமும்-தண்டனயும்’ என்ற நாவல் அவர் படைப்புகளில் மிகச் சிறந்த ஒன்றாகும்.

19-ம் நூற்றாண்டின் ரஷ்ய இலக்கியங்களில் "குற்றமும் தண்டனையும்" தவிர வேறு சிறந்த படைப்புகள் ஏதும் இல்லை. 1846-ல் டெஸ்ட்டோ விஸ்கியின் முதல் படைப்பான Poor Folk, வெளியானது. அவர் அரசுக்கு எதிராக செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டில் 1848-ஆண்டு கைதாகி, கடும் தண்டனை பெற்று சைபீரிய சிறையில் அடைக்கப்பட்டார். 1858ஆம் ஆண்டு விடுதலை பெற்று ரஷ்யா திரும்பினார். Crime and Punishment, குற்றமும் தண்டனையும் சைபீரியா சிறை விடுதலைக்குப் பின் அவர் எழுதிய முதல் நாவல். இதைத் தொடர்ந்து The Gambler, The Idiot, The Brothers of Karamazov ஆகிய நாவல்களையும் எழுதினார். 

19ம் நூற்றாண்டில் அவர் படைப்புகளுக்கு தகுந்த பரிசு கிடைக்கவில்லை. ஆனால், இருபதாம் நூற்றாண்டு அவரை கை விடவில்லை. புகழும் பாராட்டும் அவரை தேடித் தேடி அலைந்தது. எங்கெங்கு தேடினும் புகழின் கையிலும் பாராட்டின் கையிலும் அவர் அகப்படவே இல்லை! ‘இன்று வரும் நாளை வரும்’என்று வருகின்ற வழி மீது கண்வைத்து கதவோரம் காத்திருந்தபோது வராத புகழும் பாராட்டும், அவரை தேடித் தேடி அலைந்த போது அவர் எங்கே போனார்!? தேடிய போதும் வயிற்றுப் பசியால் வாடிய போதும் வராத செல்வமும் புகழும் தேடாத போது வருவதெல்லாம் கலைஞனிடமும் தேசத் தொண்டனிடமும் காலம் விளையாடும் வாடிக்கையான கண்ணா மூச்சி விளையாட்டுகளே!

புகழும் பாராட்டும் தேடி  வரும் வரை காலம் காத்திருப்பதில்லை. காலம் தன் கடமையில் கண்ணும் கருத்துமாய் இருக்கும். டேஸ்டோ விஸ்கி தன் மண்ணுலக பயணத்தை முடித்து வின்னுலகம் போய் ரெம்ப நாளாச்சுங்க! பரிசு பிந்தியதா? அல்லது டெஸ்ட்டோ விஸ்கி முந்தினாரா? விடை கிடைக்காத கேள்வி. Inbox சில் இதை போட்டு வைப்போம். ஒரு நாள் பதில் கிடைக்கலாம்!

டெஸ்ட்டோ விஸ்கியின் படைப்புகளில்  பல உலக மொழிகளில் வெளிவந்த போது இலக்கியக் காதலர்கள் ஆச்சரியத்துடன் கேட்ட கேள்வி "யார் இவர்?". இலை மறை காயாக இருந்த ஒரு இலக்கியச் சிற்பி குன்றின் மேல் தீபமாக உலகெங்கும் ஒளிவீசி புகழ் பெற்றார். அதுமட்டுமே அவர் ஆன்மாவின் சாந்திக்கு உலகம் கொடுத்த சன்மானம்.
தொடரும்...
S.முஹம்மது ஃபரூக்

26 Responses So Far:

M.B.A.அஹமது said...

அணைத்து ஆங்கில நாவல்களையும் படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறன் .. பத்திரிகை காரர்கள் .. .அரசியல்வாதிகள் வக்கீல்கள் .. படிக்கும் ஆர்வம் உடையவர்கள் கன்னிமாரா லைப்ரரி .ஹிக்கின் போதம்ஸ் புத்தக கடையிலும் குமிந்து கிடப்பார்கள் .ஆனால் அவர்களை எல்லாம் மிஞ்சி அணைத்து புத்தகங்களையும் படித்தது மட்டும் அல்லாமல்அதை நினைவுடன் அ நி இல் புத்தகமாக பிறக்க செய் ததற்கு நன்றி .ஹெச் .ஜி. வெல்ஸின் அவுட் லைன் ஆப் ஹிஸ்டரி எந்த ஆண்டு என்று குறிப்பிடவில்லையே

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

எங்களைப் போன்ற புத்தகப் பிரியர்களுக்கு உங்களின் ஆழமான ஆய்வுக்கு நிகரான நினைவுத் தொகுப்பு உண்மையிலேயே பிரமிக்க வைக்கிறது !

உங்கள் நினைவுச் சேமிப்பில் புத்தகங்களின் அழியாத பக்கங்களை ஒவ்வொரு பதிவாக எழுத இயன்றால் அதனையும் நான் ஒரு பாக்கியமாக கருதுவோம் இன்ஷா அல்லாஹ் !

நகைச்சுவையுணர்வு, இளமையான இரத்த ஓட்டம், பசுமையான எண்ணங்கள், பகைமையையும் பரஸ்பரமாக்கும் பக்குவம், சிண்டலில் கிடைக்கும் கிண்டல், உயரம் நோக்க வைக்கும் தூர நோக்கு இவையனைத்து ஒருங்கே கொட்டிக் கிடக்கும் உங்களிடமிருந்து வாரம் ஒரு வரமாக பதிவு வேண்டும் வித்தியாசமாக !

இது வேண்டுதல் தான் ! (இதனையும் இறைவன் நாடினால் என்று சேர்த்து கொள்வோம், இல்லையேல் தனிமனிதனிடம் வேண்டுதால் எப்படி சாத்தியமென்ற கேள்விக் கொக்கி விழும்).

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

நகைச்சுவையுணர்வு, இளமையான இரத்த ஓட்டம், பசுமையான எண்ணங்கள், பகைமையையும் பரஸ்பரமாக்கும் பக்குவம், சிண்டலில் கிடைக்கும் கிண்டல், உயரம் நோக்க வைக்கும் தூர நோக்கு இவையனைத்தும் ஒருங்கே கொட்டிக் கிடக்கும் உங்களிடமிருந்து வாரம் ஒரு வரமாக பிறக்க வேண்டும் பதிவுகளாக!

ஜஸாக்கல்லாஹ் ஹைர் காக்கா!

نتائج الاعداية بسوريا said...

பாரூக் காக்கா !

சின்ன ஒரு புத்தக பல்கலைக்கழகமே அதிரை நிருபர் வலைதளத்தில் நடமாடுகின்றதோ என்று நினைக்கும் அளவுக்கு வெகு ஜோராக ஒவ்வொரு காலகட்டத்தின் முக்கியத்துவம் பெற்ற நூல்களையும் அதன் கால கட்டங்களையும் விளக்கத்துடன் அளிப்பது என்பது இதற்கெனவே சிரமமெடுத்து செய்தாலேஒழிய வேறு வாய்ப்பே இல்லை.

அல்லாஹ் உங்கள் முயற்ச்சிக்கு ஏதோ ஒரு வகையில் பலனளிக்க போதுமானவன்.

அபு ஆசிப்.

Ebrahim Ansari said...

உலகப் பல்கலைக் கழகங்கள் ஞாயிறு அன்று விடுமுறை விட்டுக் கொள்கின்றன. ஆனால் அதிரை நிருபரின் உங்களின் இந்த புத்தகப் பல் கலைக் கழகம் அன்று மட்டுமே திறந்து இருக்கிறது.

பிரம்மிப்பாக இருக்கிறது. அல்லாஹ் உங்களுக்கு நல்ல சுகமும் நீண்ட ஆயுளும் தருவானாக.

sabeer.abushahruk said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…
அன்பிற்குரிய ஃபாரூக் மாமா,
அறிவமுதம் ஊட்டும் தங்களின் பதிவிற்கு மிக்க நன்றி. நாங்கள் பிறப்பதற்கு முன்பதாக வாழ்ந்த மாபெரும் எழுத்தாளர்களைப்பற்றியும் அவர்கள் எழுதி பிரசித்திப்பெற்ற விருதுகளை வென்ற படைப்புகளையும் அறிய ஆச்சரியமாக இருக்கிறது.

எங்கள் காலத்தில் முதலில் நான் அம்புலிமாமா, அணில், முயல் ஆகியவை வாங்குவேன். அஞ்சாம்ப்பு படிக்கும்போதெல்லாம் கமெர்கட்டுக்குப் பதில் காமிக்ஸ். அதற்கப்புறம் தமிழ்வாணன். இந்த மாதிரி இருந்த நான் சடாரென்று சாண்டில்யன், கல்கி, மு.வ, கலைஞர், அண்ணாதுரை என்று எது கிடைத்தாலும் வாசிக்க ஆரம்பித்தேன். சமயத்தில் ராணியைக்கூட விட்டு வைப்பதில்லை.
+2 வயதில் எல்லோரையும் போல சுஜாதா, மேற்கொண்டு பிரயாணங்களின்போது பி.டி.சாமி., ராஜேஷ்குமார், ராஜேந்திர குமார் புஷ்பா தங்கதுரை, லஷ்மி, சிவசங்கரி… இப்டி. படிக்காமல் இருந்த பொழுதுகளே குறைவு எனலாம்.
கல்லூரி ஆரம்பித்ததும் ஜெயகாந்தன், மு.மேத்தாவில் துவங்கி, கவிக்கோ, வைரமுத்து, இந்திரா பார்த்தசாரதி, பாலகுமாரன், அப்துர்ரஹீமின் (அப்துல் கரீம்?), உதயமூர்த்தி என்று தொடர்ந்தது. இடைக்கிடையே James Hadley Chase, Herold Robins போன்ற ஆல்ட்டைம் காலேஜ் பசங்க புக்ஸோடு, Jack Higgens, Ian Flamings, Readers Digest, Illustrated weekly of India. என்று ஆங்கில நாவல்களையும் படிப்பதுண்டு.

இப்ப J.K.Rowling காலத்திலதான் புத்தகம் படிக்கும் ஆர்வம் சற்றே குறைந்து இணையம் ஆள்கிறது.

தொடருங்கள் தங்களின் எழுத்துத் தொண்டை.

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா!

sabeer.abushahruk said...

readers digest and illustrated weekly ரெண்டும் நாவல் லிஸ்டில் கலந்துவிட்டது.

பிரித்து அறிந்துகொள்வதோடு ஆனந்த விகடனையும் சேர்த்துக்கொள்ளவும்.

sabeer.abushahruk said...

இந்த வாரம் நகைச்சுவையினூடே தத்துவார்த்தமான நியதியான மரணம் பற்றிய குறிப்புகளை நீங்கள் மேலோட்டமாகச் சொல்லிச் சென்றாலும் அவை என்னுள் ஸ்திரமான ஒரு சிலிர்ப்பை ஏற்படுத்தியதியோடு, ஏனோ கீழ்கண்ட பழைய பதிவை அசைபோட வைத்தது.

உள்ளே வெளியே:

இழுப்பிலும் உமிழ்விலும்
உள்ளே வெளியே
உலாச்சென்ற சுவாசம்
வெளியே சென்றதோடு
மூப்பிலும் பிணியிலும்
உள்ளே வராமல்
நின்றுவிட
அகவை முதிர்ந்த
அப்பா ஒருவர் மவுத்தானார்கள்!


(அவனிடமிருந்தே வந்தோம்
அவனிடமே மீளுவோம்)

அவர்களின்
அத்தனை அபிமானிகளையும்
வெளியே இறுத்தி
உடலை
உட்கூடத்தின்
உள்ளே கிடத்தி
அவர்தம்
அனுமதியின்றி
துணிமனி அகற்றி
உள்ளுடல் பிதுக்கி
வெளியுடல் குளிப்பாட்டி
நறுமண மூட்டி
நல்லுடை அணுவித்து
உள்ளேயோ வெளியோவோ அன்றி
நடுவீட்டில் கிடத்தி...

பின்னர்

அன்னாரைச் சுமந்து
அவருக்காகத் தொழுது
தெருவிற்கு வெளியே உள்ள
மையவாடியின்
உள்ளே சென்றபோது...

மண்ணுக்கு மேலேயும்
மட்டப்பாவிலும்
மகிழ்ந்திருந்த மனிதருக்கு
மண்ணுக்குக் கீழே
சதுர அடிக் கணக்கிட்டு
அறை ஒன்று
தயார் நிலையில் இருக்க...

பச்சைப் பாம்புகளென
காய்கள் தொங்கும்
முருங்கை மரத்திலிருந்து
மூன்றல்லது நான்கடிக்கு உள்ளே
அடை மழைக்கு முன்னே
அடக்கம் செய்த
வாப்பாவின் கபுரைத்
தேடிப் பிடித்துக்
கண்கள் வருடின!

கபுரின் தலைமாட்டிலும்
கால்மாட்டிலும்
குத்தி யிருந்த
கட்டைகள்
கோணங்கள் பிசகி
சாய்ந்திருக்க
பிரண்டைக் கொடிகள்
சறுகுக ளாகியிருக்க
அவற்றிற்கிடையே
வெளியே மேடிட்டிருந்த
வாப்பாவின் கபுருஸ்தான்
உள்ளே சற்றே அமிழ்ந்தும்...

வசிப்பின் உள்ளே
இருந்தபோது
வசீகரித்த வாப்பா
கபுருக்கு வெளியே
என்னை நிறுத்த...
பனித்தன விழிகள்!

என் காற்றும்
வெளியே நிற்கும் நாளில்
என்னுடலை
உள்ளே கொணரும்போது
வாய்க்கப்போகும் கபுர்
இங்கேயா
அல்லது அங்கேயா வென
கேள்விகளோடு
மையவாடி விட்டு
வெளியே வந்து
இம்மைக்கு உள்ளே புக...

உள்ளே இழுத்தது
ஸ்தம்பித்து
உயிரையும் உணர்வையும் பிசைந்து
பெரிதாக
வெளியே வந்தது!

Anonymous said...

அன்புள்ள தம்பி M.B.A.அஹமத்! அஸ்ஸலாமுஅலைக்கும்.

Outline of History. H.G. Wells.1963-1966 களில் மலேசியாவில் பள்ளிப் பாடபுத்தகமாக அங்கீகரிக்கப்படிருந்தது. அது வெளியான தேதி தெரியவில்லை. இது சில வரலாற்று புத்தகங்களில் மேற்கோள் காட்டப்பட்டிருந்தது. முன்னாள் இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள் சிறையில் இருந்தபோது தன் மகள் இந்திராவுக்கு எழுதிய Glimpses of World History என்ற புத்தகத்திலும் எடுத்து கட்டப்பட்டிருக்கிறது. {நேருஜி தன் மகளுக்கு எழுதிய கடிதத்தில் உலக சரித்திரத்தை எழுதினார்}.
[நாம் என்ன எழுதுவோம்?
பிரியமுள்ள மவ பாத்து முத்துக்கு,
வாப்பா எலுதியது, இவடஞ் சொகம் அவ்டஞ் சொகதுக்கு தாக்கல் போடவும்'. அப்பாக்கு ரூவா நூறு குடுக்கச் சொன்னேன். நீ முப்பது தான் குடுத்தியாம்.
அப்பா எளுதி இருந்தாக. இப்புடியெல்லாம் செஞ்சா அடுத்த மாசம் செலவுக்கு அனுப்ப மாட்டேன்]

உலக வரலாற்று நூல்களில் H.G.Well sவரலாற்று நூல் சிறந்த ஒன்றாகவே இருக்கும். எனவே இது நேருஜி படித்துக் கொண்டிருந்த காலத்தில் வெளியானதாககூட இருக்கலாம்.

இன்னொரு சிறந்த சரித்திர நூல் Fall and decline of Roman Empire. by. Gibbon'. [ரோமாபுரியின் வீழ்ச்சியும் சிதைவும்'.] 1967 சென்னை விருகம் பாக்கத்தில் நடந்த தி.மு.க.கூட்டணி மாநாட்டில் அண்ணா அவர்கள் இந்த புத்தகம் பற்றி சொல்லும்போது. ரோமா சரித்திரத்தை ஒரு காவியம் போல் எழுதிஇருக்கிறார்என்றார்.

கிப்பொன் எழுத்துக்கு அப்பன்

S.முஹம்மதுபாரூக்,அதிராம்பட்டினம்.

KALAM SHAICK ABDUL KADER said...

கன்னிமாரா நூலகத்தில் காலங்கழித்த பேரறிஞர் அண்ணா அவர்கள் சொல்லுவார்கள், “கண்டது கற்கின் பண்டிதரவாய்” என்று. அப்படிக் கணித்தவர்க்கு அப்படிப்பட்ட வாசிப்பும் அதன் மேல் நேசிப்பும் இருந்ததை , அவர் “பேரறிஞர்” என்று இன்றும் நினைவு கூறப்படுகின்றார். இன்று எங்கள் கண் முன்னால் நிற்கும் தாங்கள்
“நடமாடும் நூலகம்” ஆகி விட்டீர்கள். நினைவாற்றலை அல்லாஹ் உங்கட்கு வாரி வழங்கியிருப்பதாற்றான், ஆண்டுகள், பெயர்கள் உட்படத் தங்களால் இவ்வாக்கத்தை மிகச் சிறந்த ஒரு பொக்கிஷமாகப் படைத்திருக்கின்றீர்கள்; மாஷா அல்லாஹ்!

எனக்குள்ள ஓர் ஆசை: இன்ஷா அல்லாஹ் விடுமுறையில் தங்களைச் சந்தித்து உரையாட வேண்டும்; உரையாடலில் எத்தனை எத்தனை அறிவு முத்துகள் கொட்டுமோ அத்தனை முத்துகளையும் அள்ளி வர வேண்டும் என்பதாகும்.

எங்கள் எல்லாருடைய துஆவினால், தங்கட்கு நீண்ட ஆயுளும், நலமும், வளமும் அல்லாஹ் வழங்குவானாக (ஆமீன்)

அதிரை நிருபர் என்னும் இந்த வலைத்தளம் ஒரு பல்கலைக் கழகம் என்றால், இதன் மூத்த பேராசிரியாக விளங்கும் தங்களிடம் பாடம் பயிலும் பேற்றினை எங்கட்கு வழங்கிய அல்லாஹ்வுக்கு என்றென்றும் நன்றி கூறுவோம்.

Anonymous said...

//இது வேண்டுதல் தான் இல்லை கேள்வி விழும்//

உண்மைதான் அடங்கி ஒடுங்கி பவ்யமா நடக்கனும்!. அப்பத்தான் நம்ம பொழப்பு ஓடும். இல்லேனா வவுத்து பாடு திண்டாட்டம் தான்.

ஒ...! மூக்கே! நீ எத்தனை தடவை நுகர்ந்தாலும் எங்களின் வாசனையில் மாற்றமிருக்காது...!

S.முஹம்மதுபாரூக்அதிராம்பட்டினம்

Anonymous said...

மருமகன் சபீர் அபுசாருக்!

மனிதனின் மரணம் பற்றிய சிந்தனைக் கடலில் மூழ்கி எடுத்த சிப்பிக்குள் முத்து! பிறந்ததும் இழந்தது தொப்புள் கொடி; கபுரில் வளர்ந்தது பிரண்டை கொடி; தலையிலும் காலிலும் வெள்ளை கொடி. இனி யார் ஏறிப் போவார் அவன் வீட்டுப்படி?

S.முஹம்மதுபாரூக்,அதிராம்பட்டினம்

Anonymous said...

//மனிதனின் மரணம்//; பிறந்த போது ஆடை இல்லாமல் பிறந்தான்; போகும் போது ஆடையோடு போகிறான்!. .இருக்கும் போது யார் யாரையோ சுமந்தான்; இறக்கும் போது யார்யாரோ அவனை சுமக்கிறார்கள்!

S.முஹம்மதுபாரூக்.அதிராம்பட்டினம்

ZAKIR HUSSAIN said...

அன்புமிக்க ஃபாரூக் மாமா அவர்களுக்கு....உங்கள் ஆக்கத்தை நீங்கள் எழுதிய மரணம் பற்றிய கமென்ட் புத்தகங்களில் வரும் அளவுக்கு வீரியம் மிக்க வார்த்தைகள்.

Ebrahim Ansari said...

//[நாம் என்ன எழுதுவோம்?
பிரியமுள்ள மவ பாத்து முத்துக்கு,
வாப்பா எலுதியது, இவடஞ் சொகம் அவ்டஞ் சொகதுக்கு தாக்கல் போடவும்'. அப்பாக்கு ரூவா நூறு குடுக்கச் சொன்னேன். நீ முப்பது தான் குடுத்தியாம்.
அப்பா எளுதி இருந்தாக. இப்புடியெல்லாம் செஞ்சா அடுத்த மாசம் செலவுக்கு அனுப்ப மாட்டேன்]//

எங்கேயோ கேட்ட குரல். வருமானவரி செலுத்துவதற்காக DEDUCTION AT SOURCE என்று ஒரு முறை உண்டு. இந்த முறை நமது ஊரில் பல வீடுகளில் நமது தாய் தகப்பன் அல்லது உறவினர்களுக்கு நமது மனைவிகள் மூலம் அனுப்பும் பணத்தில் செய்யப்படுகிறது. பெரிய பாவம் என்னவென்றால் ஜகாத் பணத்தில் கூட கட் செய்துவிடுகிறார்கள். இது பற்றியெல்லாம் பல கதைகள் உள்ளன. எழுதப் போகிறேன். இன்ஷா அல்லாஹ்.

Ebrahim Ansari said...

//இது பற்றியெல்லாம் பல கதைகள் உள்ளன. எழுதப் போகிறேன். //

கதைகள் அல்ல உண்மைக கதைகள்.

Ebrahim Ansari said...

//இது பற்றியெல்லாம் பல கதைகள் உள்ளன. எழுதப் போகிறேன். //

கதைகள் அல்ல உண்மைக கதைகள்.

Ebrahim Ansari said...

அண்ணா எழுதிய நூல்களில் புகழ்பெற்றவை ஆரிய மாயை, கம்ப ரசம் மற்றும் ரோமாபுரி ராணிகள் .

படித்து இருக்கிறீர்களா? படிக்காவிட்டால் தேடிப் படியுங்கள். நாங்கள் ஏழாம் வகுப்பில் புத்தகங்களுக்குள் மறைத்து வைத்துப் படிப்போம். காரணம் அன்று இவை தடை செய்யப் பட்டவை.

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும்.பிரமிக்கவைக்கும் தகவல்கள்.அகவல் அதிகமும்,அனுபவம் அதிகமும் ஆங்காங்கே பளிச்சிடுகிறது!வரிக்கு வரி நம்மை வாரி எடுத்துக்கொள்கிறது!இது ஒரு பொ(பு)க்கிஷம்.வாழ்த்தவயதில்லை என்றாலும் மனதார வாழ்த்துகிறேன்.

Anonymous said...

பாசமுள்ள தம்பி நெய்னாதம்பி-அபுஇப்ராஹிம் அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்.

மலையாசியவில் புத்தகக் கடையில் வேலை பார்த்த போது புத்தகங்களின் முன்னுரைகளையும் பின்பக்க அட்டைகளின் எழுதியதை குறிப்பெடுத்தும் வைத்திருந்ததை கொஞ்சம் மெருகூட்டி எழுதியதே இந்தக் கட்டுரை. நோக்கம் புத்தகங்கள் படிக்கும் முஸ்லிம்கள் மிக குறைவு [மலேசியாவில் புத்தகக் கடை வைத்திருக்கும் பெரும்பாலான முதலாளிகளில் சிலரைத் தவிர மற்றவர்களுக்கு புத்தகத்தின் பெயரே படிக்க தெரியாது. எல்லோரும் தமிழ் முஸ்லிம்களே].

நம்மக்களுக்கு படிக்கும் ஆர்வத்தை தூண்டுவதே இதன் நோக்கம் அ.நி.யில். போதிய ஆதரவு கிடைக்குமா என்ற சந்தேகம் எனக்கு இருந்தது. மாறாக எதிர்பார்த்ததற்கு மேலாக இன்றைய தலைமுறையின் ஆதரவு திகைக்க செய்தது'. ஹயர், அல்லாஹ்வின் அருள் !

எல்லாப் புகழும் அவனுக்கே!.

தற்பொழுது ''வரலாற்று சுவடுகள்'' என்ற உலக வரலாற்றின் முக்கிய நிகழ்வுகளை தொகுத்து வருகிறேன். முடிவு பெற ஒரு மாதம் பிடிக்கலாம். “ஒரு புத்தகம் பிறக்கிறதில் வரும் புத்தகங்கள் பெரும்பாலும் கைவசம் இல்லாததால் கைவசம் உள்ள புத்தகங்களும் நல்ல புத்தகங்களே அதை பற்றியும் எழுதலாம்.., மேலும் 'வரலாற்று மாந்தர்கள்!' என்ற ஒரு தொடரும் எழுத எண்ணம்.

S.முஹம்மதுபாரூக்.அதிராம்பட்டினம்

crown said...

தற்பொழுது ''வரலாற்று சுவடுகள்'' என்ற உலக வரலாற்றின் முக்கிய நிகழ்வுகளை தொகுத்து வருகிறேன். முடிவு பெற ஒரு மாதம் பிடிக்கலாம். “ஒரு புத்தகம் பிறக்கிறதில் வரும் புத்தகங்கள் பெரும்பாலும் கைவசம் இல்லாததால் கைவசம் உள்ள புத்தகங்களும் நல்ல புத்தகங்களே அதை பற்றியும் எழுதலாம்.., மேலும் 'வரலாற்று மாந்தர்கள்!' என்ற ஒரு தொடரும் எழுத எண்ணம்.

S.முஹம்மதுபாரூக்.அதிராம்பட்டினம்
---------------------------------------------------------------------------------
அஸ்ஸலாமுஅலைக்கும்.
அட்சய பாத்திரம் (அந்த பாத்திரம் ஏந்திய பாத்திரமே=மணிமேகலை கற்பனைபாத்திரம்) நம்பிக்கையில்லையென்றாலும், காமதேனு(கற்பனையின் உச்சம்)இதுமேலும் நம்பிக்கை இல்லையென்றாலும் நல்ல மார்க்கம் தெரிந்த உலமாக்கள் தேர்ந்தெடுத்துத்தரும் நல்ல வார்தை கிடைக்கும் வரை இவைகளை தமிழனாய் பிறந்ததால் உப"யோகம்(?????)=(துரதிஸ்டம்)செய்யவேண்டிய நிலையில் சொல்லவிளைவது '' அமுத சுரபி(அமுதம்????)தன் வேளையை மெல்ல , மெல்ல ஆரம்பித்துவிட்டது! பாரூக் காக்காவின் உலக(பாரின்)வரலாறாறின் நிகழ்வுகளை படிக்க ஆவலாயிவிட்டோம்.
குறிப்பு: பாருக்காக்கா, அஹமது சாட்சா,அப்துல்காதர் வாத்தியார்,ஜெமில்காக்கா,இபுறாகிம் அன்சாரி காக்கா, அதிரை அன்வர் காக்கா,கவிதீபம் கலாம் காக்கா, அய்டா ரபியா காக்கா,கவியரசு சபீர்காக்கா, என்றும் இளங்கவி தம்பி ஷபாத் ஆகியோர் குழுவாய் நல்ல தமிழ் வார்தைகள் நாம் இசுலாமியர்கள் பயன் படுத்தும் வகையில் கண்டெடுத்தால் வரும் தலைமுறைக்கு சிர்க்,கற்பனை இல்லா வார்தைகள் கிடைக்குமல்லவா? நான் குறிப்பிட்ட அனைவரும் இதை ஏற்படுத்த தகுதியானவர்களே!(ஆர்வமுள்ள மேலும் பலர் சேர்ந்தால் நன்மையே!


crown said...

அபு.இபுகாக்கா மற்றும் சபீர் காக்காவிற்கு கீழ் காணும் இந்த கோரிக்கையை பெரும் அளவில் எடுத்துப்போவது நம் கடமையாக இருக்கிறது. அதிராம் பட்டினம் என முஸ்லிம்கள் அதிகம் வாழும் ஊருக்கு பேர் இந்த அவப்பெயர் ஏன்?முஸ்லிம்கள் தெருக்களுக்கு நேதாஜி, ராஜாஜி ,காந்திஜி இப்படி ஏதாவது தெரு ஹாஜி என இருக்கிறதா? சிந்திக்கவேண்டிய நிலையில் நாம்.....(யாரும் ஹாஜி என அழைத்துகொள்வதில் உடன் பாடில்லாதவன் நான் ,ஒரு உதாரணத்துக்கே கையாண்டுள்ளேன்).
-----------------------------------------

குறிப்பு: பாருக்காக்கா, அஹமது சாட்சா,அப்துல்காதர் வாத்தியார்,ஜெமில்காக்கா,இபுறாகிம் அன்சாரி காக்கா, அதிரை அன்வர் காக்கா,கவிதீபம் கலாம் காக்கா, அய்டா ரபியா காக்கா,கவியரசு சபீர்காக்கா, என்றும் இளங்கவி தம்பி ஷபாத் ஆகியோர் குழுவாய் நல்ல தமிழ் வார்தைகள் நாம் இசுலாமியர்கள் பயன் படுத்தும் வகையில் கண்டெடுத்தால் வரும் தலைமுறைக்கு சிர்க்,கற்பனை இல்லா வார்தைகள் கிடைக்குமல்லவா? நான் குறிப்பிட்ட அனைவரும் இதை ஏற்படுத்த தகுதியானவர்களே!(ஆர்வமுள்ள மேலும் பலர் சேர்ந்தால் நன்மையே!

Anonymous said...

Dear Brother M.B.A.Ahamed:

Assalaamuallikkum.

Please note /The Outline of History/.by .H.G.Wells.First published on1920 and several editions were printed between Two or Three years of gap and. Also with different covers.

ThankYou,

S.Mohamed Farook .Adirampattinam.

Yasir said...

பாரூக் மாமா அறியாத விசயங்கள் அருமையாக அள்ளிக்கொடுக்கின்றீர்கள்

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும்!

//ஒருபுத்தகம் பிறக்கிறது-7 நன்றியுரைக்கிறேன்//

பேரன்பு மிக்க அதிரை நிரூபர் வாசக நெஞ்சங்களே!

நீங்களெல்லாம் ஒருபுத்தகம் பிறக்கிறது தொடருக்கு ஆர்வத்துடனும், அன்புடனும், சகோதர பாசத்துடனும் எழுதிய பின்னூட்டங்கள் என் நெஞ்சை நெகிழ வைக்கிறது!.

மனம் பூரிக்கிறது, இதயம் குளிரோடையில் குதித்து விளையாடுகிறது!

உங்களின் அன்புக்கும் பாராட்டுக்கும் என்னை உரியவனாக்கிய எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்!.

யாஅல்லாஹ்! சகோதரத்துவமும் பாசமும் கொண்ட இந்த அன்பு நெஞ்சங்களின் மீது சாந்தியும் சமாதானத்தையும் பொழிவாயாக!

என்னையும் நன்றி உடையவனாக ஆக்கி வைப்பாயாக! ஆமீன்!

S.முஹம்மதுபாரூக்,அதிராம்பட்டினம்

Anonymous said...

THANKS

மூன்று நாட்கள் தம்பியை அழைத்து கொண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் போய் வந்ததால் தங்களின் வலை தளத்திற்குள் போகவில்லை தங்களின் தகவல் கண்டேன் மிக்க மகிழ்ச்சி 1920 களிலேயே நம் அதிரையை பற்றி ஹெச் .ஜி . வெல்ஸ் ஆங்கில நாவலில் நம் அதிரையை பற்றி குறிபிட்டுள்ளார் என்றால் எவளவு பாராட்டப்பட வேண்டிய விஷயம் நம் அதிரையர்கள் திரை கடல் ஓடியும் திரவியம் தேடு என்பதற்கு இலக்கணமாக திரிபவர்கள் .மரக்கலம் செலுத்தி வியாபாரம் செய்ததால் மரகல ஆயர்கள். மறைக்காயார்

பாரூக் காக்கவிற்கு தயவு செய்து அண்ணாவின் ரோமபுரி ராணி கதையை உதாரனத் திற்கு கூட கூராதிர்கள் ரோமபுரி ராணி தன கணவன் இறந்தவுடன் தன ராணி பதவி போய் விட கூடாது என்பதற்காக தன மகனுடன் ....... வேண்டாம்...!!!

அதே போல் அண்ணா வழி வந்த கருணாநிதி போலீஸ்காரன் மகள் கதை எழுதினார் தன மகளுக்கு கல்யாணம் பண்ணி கொடுக்க முடியவில்லையே என்ற வருத்தத்தில் தந்தையான போலிஸ்காரன் தன் மகளுடுன்...... வேண்டாம் இப்படிதான் கதை எழுதி தமிழ்நாட்டை குட்டிச் சுவர் ஆக்கினார்கள்.

M.B.A.அஹமது

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு